Tuesday, July 6, 2010

சிபஎபா- Jul-05-2010

- அம்மாஞ்சி அம்பியின் வழக்கமான பதிவுதான், ஒன்னும் சிறப்பாவோ புதுசாவோ ஒன்னுமில்லை. வழக்கம் போல நல்லப் பதிவு. பூரிக்கட்டை, அம்மணிகிட்ட பயம்னு ஷங்கர் மாதிரி அதே டெம்ப்ளேட். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ரசிக்கிறோமே ...:))

 • LP Records சுழற்றும் நினைவுகள் - கானா பிரபா ..எல்லாரும் டார்டாய்ஸ் சுத்துவாங்கன்னா இவரு ரெக்கார்ட சுத்த விட்டிருக்காரு. நானும் இந்த மாதிரி நிறைய தேடினதாலோ என்னமோ இந்தப் பதிவு எனக்கு சட்னு பிடிச்சுப்போயிருச்சு. தவற விடாதீஙக. • 68வது பிரிவு (மீள்பதிவு) -Perundevi ன் இந்தப் பதிவு, சட்னு விமர்சிக்கவோ, கருத்துச் சொல்லவோ வராது. ரொம்ப யோசிக்க வைக்குது, புரியுது ஆனா புரியல, ஆனா புரிஞ்சதுதான் உண்மை. • துப்பறியும் காந்த் ! சிநேகிதன் இப்பவெல்லாம் நகைச்சுவைப் பதிவுகளே வர்றது இல்லீங்க. எல்லாம் திட்டறதும், ஷங்கர் படத்துல வர்ற கதாநாயகன் மாதிரியே எழுதறாங்க(இதைத்தானே 2005லும் சொன்னீங்கன்னு
  கேட்கப்படாது, அப்போ வவாச இருந்துச்சு).இந்தப் பதிவு படிச்சதுக்கப்புறம், கொஞ்சமாச்சும் சிரிக்க முடிஞ்சது :) • மாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் - //இப்போ படிச்சு, ஊரு விட்டு ஊரு வந்து, எங்கெல்லாமோ சுற்றும் வாய்ப்பு உண்டு, ஆனால் எப்போதுமே அந்த ஸ்வீட் சாப்பிடும் பொழுது அம்மாவின் நினைப்பு என்னை அறியாமல் வந்து விடும், அம்மா ஏதாவது கல்யாணத்துக்கு / விசேஷத்திற்கு போனால் கூட, இலையில் விழும், மைசூர் பாகு / லட்டு போன்றவைகளை புடவையில் முடிந்து வீட்டிற்கு வந்து எனக்கு கொடுப்பார்// கடைசி பாரா படிக்கும்போது கனமாச்சுங்க மனசு • காசு மேலே காசு வந்து by சந்தனமுல்லை//வீட்டிலிருந்து பணம் வாங்குவது மெதுவாக குறைந்திருந்தது. மேலும் எனக்கான தேவைகளையும் நானே சந்திக்க துவங்கியிருந்தேன்//படிக்கவே சந்தோசம் தரும் வசியம், நடுத்தர குடும்பத்தினருக்குத்தான் தெரியும் இந்த சந்தோசம் எவ்வளவு பெருசுன்னு. ஆனா அடுத்த வரிதான் உண்மையாவே நடுத்தரக் குடும்பம் பண்ற வேலை //ஃபான்ஸி பொருட்கள்தான். அப்புறம் நண்பர்களுக்கு ட்ரீட். கல்லூரி காலத்தின் ட்ரீட்கள்// கலக்கலான் அனுபவங்களின் தொகுப்புன்னே சொல்லலாம். • பதிவுலகில் பெற்றது (பாகம் /3) ஜாக்கிசேகரின் இந்தப் பதிவு, வரலாற்றில் பொறித்துக்கொள்ள வேண்டிய இடுகை. பதிவுலக நண்பர்களே, காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள், இந்த இடுகையை உங்கள் பதிவில்
  வைங்கள். யாராவது எழுதி என்னத்த **ங்குன அப்படின்னு கேட்டா இதைப் படிக்கச் சொல்லுங்க.Hats Off Jackie! • வாட் ஹேப்பன் ஆதவன்? by ☀நான் ஆதவன்☀ -- ஒத்த கேள்விய வெச்சுகிட்டு இந்தியப் பயணத்தையே முடிச்சுட்டாரு. :) நல்ல கலக்கலான நடை. • தமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை by Badri - பத்ரியின் இந்தப் பதிவுக்கு விளக்கமெல்லாம் தேவை இல்லை. சிலாகிச்சும் நான் படிக்கலை, ஏன்னா இது அப்படியாப்பட்ட பதிவு இல்லை. ஆனா படிங்க. இதோ இன்னொன்னும் http://thoughtsintamil.blogspot.com/2010/07/blog-post.html • சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 12 by சீதாம்மா.. சே!.. என்ன ஒரு தொகுப்பு. எப்படி தவறவிட்டேன்னு தெரியல. மீதி 11 பகுதியையும் படிச்சுட்டுதான் ஓய்ஞ்சேன். தவறவிடாதீங்க. • வெளிச்சுவர் லவ் by பத்மா
  //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... -->காதலிலும் , கவிதையிலும் எதார்த்தங்கல்தான் எப்பொழுதும் தலைமை தாங்குகின்றன . அதுபோல் உங்களின் கவிதையும்
  அருமை //
  சின்ன கவிதைதான், ஆனா என்னென்னமோ யோசனை பண்ண வெக்குது. • எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா? by யுவகிருஷ்ணா. லக்கி வர வர பத்திரிக்கை எழுத்துக்களை பதிவுலகத்துக்கு போட்டுறார். இங்கே என்ன காசா குடுக்கிறாங்கன்னு கேட்க கூடாது. தொழில் வேற ஆர்வம் வேற. :) • இது நமது தேசம் அல்ல by வினையூக்கி
  பல விசயங்களை உள்ளடக்கிய கதை. நான் வெளிநாட்டில் இருப்பதனால் என்னென்னமோ தோன்றியது. அருமையான சிறுகதை, தவற விடாதீர்கள். • மயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும்.by அபி அப்பா
  அபிஅப்பா.. என்ன சொல்றதுன்னு தெரியல. கண்ணீர் மல்கதான் இதை தட்டச்சுறேன். யாரோ ஒருத்தர்தான், ஆசிப் அண்ணாச்சிக்கு நடந்தபோது இதே உணர்வு வந்தது, மறுபடியும் இப்போ.
 • 14 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.

   ReplyDelete
  2. Bloggerல கோளாறு, தமிழ்மணம் கோளாறு.. எகொஇச!

   ReplyDelete
  3. நன்றி இளா! அனுபவங்களின் பகிர்வில் பிறரது பிரதிபலிப்புகளையும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.

   இந்த தொகுப்பு நல்ல ஐடியா...மிஸ் பண்ணதை இங்கே பிடிச்சுடலாம் போல! :)

   ReplyDelete
  4. //இந்த தொகுப்பு நல்ல ஐடியா//
   நன்றிங்க முல்லை! பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு இது தொடருமுன்னு, வரவேற்ப்பை பொறுத்துதானே எழுதறோம்.

   ReplyDelete
  5. மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான் இப்படி பல சிறந்த பதிவுகள் தொடரா நீங்க கொடுக்குறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்.

   ReplyDelete
  6. மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான் இப்படி பல சிறந்த பதிவுகள் தொடரா நீங்க கொடுக்குறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்.

   ReplyDelete
  7. கானா--> :)
   நான் ஆதவந்->/இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்/ வாங்க வாங்க!

   ReplyDelete
  8. தாமதமான நன்றி !! இதில் இடம்பெறவே இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல. இந்தப் பணி பழைய தமிழ்மணம் பூங்காவை நினைவூட்டுகிறது. இனிமேல் அடிக்கடி இடம்பிடிக்க துண்டு போட்டு வைக்கின்றேன்

   ReplyDelete
  9. //இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல./
   ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் போடாதீங்க. நேரம் கிடைக்கிற போது பண்ண முடியுது, ஒரு குழுவா அமைஞ்சா சந்தோசம்தானுங்களே. பார்ப்போம் எவ்வளவு நாளைக்குன்னு :)

   ReplyDelete
  10. மிக்க நன்றி இளா. இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன். மிக்க நன்றி. நான் இரண்டாவது முறையாக இதில் இடம் பெறுகின்றேன். முன்பெல்லாம் வலைச்சரத்தில் இடம் பெறுகின்றேனா, விகடன் குட் பிளாக்கில் இடம் கிடைச்சுதா என எட்டி பார்ப்பேன். கொஞ்ச நாளா எதிலுமே பிடிப்பில்லாமல் இருந்தேன். இப்போ இந்த சிபஎபா விலே இடம் பெற வேண்டியாவது நன்றாக எழுத ஆசை வந்திருக்கின்றது.

   மேலும் அந்த பதிவை நான் பதிவாக எழுதாமல் என்ன பார்த்தனோ எது எல்லாம் மனதில் பதிந்ததோ அதை எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் அப்படியே எழுதினேன். பதிவின் அளவை பற்றி கூட கவலைப்படாமல். அபியை விட்டு ஸ்பெல் மிஸ்டேக் மட்டும் பார்க்க சொல்லிஅப்படியே பப்ளிஷ் செய்தேன். பலரும் போன் கூட செஞ்சாங்க. சிபஎபாவிலும் வந்துடுச்சு. மிக்க நன்றி இளா!!!

   ReplyDelete
  11. இந்த வாட்டி வடை போச்சே.! :-))

   ReplyDelete
  12. மிக்க நன்றி இளா. எனது பதிவையும் தேர்ந்தெடுத்ததில் மிக்க சந்தோசம்.

   இது போல இன்னும் பலரின் அறிமுகத்தை தொடருங்கள்.

   உங்க பின்னூட்டத்தை கவனிக்கவில்லை மன்னிக்கவும்.

   ReplyDelete

  இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

  சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

  Labels

  18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)