Friday, August 31, 2012

8/365 பதிவுகளால் சம்பாதிக்க

பதிவுகளால் சம்பாரிக்க முடியாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு சவால்...

புதுசா ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அதில் சேர்ந்தால் 6-12 மாதங்களில் கண்டிப்பா லட்சாதிபதி ஆகிடலாம். எப்படின்னு கேட்குறீங்களா?


இதுக்கு அடிப்படைத் தேவை
1. கண்டிப்பாக ஒரு பதிவாவது வைத்திருக்க வேண்டும்.
2) குறைந்தது 3 இடுகைகள் (செய்திகளை ஒட்டி வெட்டியாவது).
3) குறைந்தது 3 திரட்டிகளில் இணைத்திருக்க வேண்டும்.
4) குறைந்தது 5 பின்னூட்டங்கள் (அடுத்தவர்களின் பதிவில்) இட்டிருக்க வேண்டும்.

வ்வளவுதான். இது உங்களால முடியாதா? இதைக் கூட செய்ய முடியாத சோம்பேறிப் பதிவர்கள் இந்தத் திட்டத்தில் சேர அருகதையற்றவர்கள்.  வாழ்வில் உழைக்கவேண்டும், நிறைய காசு பார்க்கவேண்டும் என வாழ்வில் உயர்ந்த லட்சியம் கொண்டவர்களால மட்டுமே முடியும், திட்டமிது. சும்மா பதிவு போட்டோமா கிளம்பினோமா என்றிருக்கும் ஏனோதானோ பதிவர்கள் மன்னிக்க.

திட்டத்தில் சேர,
1. ஆளுக்கு ரூ 5,000 கட்டி உங்களது பதிவில் எங்களது Badge/Widget இணைத்துக்கொள்ள வேண்டும். Badge/Widget இணைத்துவிட்டு எடுத்துவிடும் பதிவர்களுக்கு கண்டிப்பாக பணம் வாபஸ் தர இயலாது.

2. நீங்க ஆளுக்கு 3 பதிவர்களை இதில் உறுப்பினர்களாக சேர்த்துவிட வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.

உங்களின் மூலம் 10வது உறுப்பினர் சேரும் போது உங்களுக்கு அவரது தொகையிலிருந்து ரூ.1500 அளிக்கப்படும். அதன்பிறகு வரும் அனைத்துப் பதிவர்களுக்கும்/உறுப்பினர்களுக்கும் ரூ1,500 வந்துகொண்டே இருக்கும். தமிழில் சுமார் 9000 பதிவர்கள் இருக்கிறார்கள்.

உங்களின் மூலம் 10% மக்கள் இணைந்தாலும் அதனால் உங்களுக்கு ரூ.1,35,500 கிடைக்கும். இது 10 நாட்களுக்குள்ளும் நடக்கலாம். இதனால் குறைந்த நாட்களில் லட்சாதிபதி ஆகிவிடலாம்.

எல்லாம் உங்கள் கைகளில், நம்பிக்கையை மூலதனமாக வையுங்கள், உழைப்பை முன்னிறுத்துங்கள்,.

வாருங்கள் லட்சாதிபதி ஆகலாம்.

இவண்
பதிவர்கள் Pvt Ltd.

16 comments:

 1. என்னா லொள்ளு.. என்னா எகத்தாளம்..

  இங்க சிரிப்பு தாங்கல :))))
  //
  இவண்
  பதிவர்கள் Pvt Ltd.
  //

  எனக்கு 3வது தகுதி மட்டும் இல்லை.. இல்லேன்னா நானும் லட்சத்தைப் பாத்திருப்பேன் :))

  ReplyDelete
 2. இளா,

  தமிழ்நாட்டுக்கு நாந்தான் குத்தகைத்தாரர் :-))

  ஆனால் "பதிவர்கள் Pvt Ltd. "

  என போட்டு இருக்கிங்க,

  தமிழ் நாடா, தென்னிந்தியாவ, வட இந்தியாவா, ஆல் இந்தியா, ஆசியா, இல்லை வட அமெரிக்கா, அல்லது அகில உலக பதிவர்களா, இல்லை மில்கிவே பதிவர்களா? ஒன்றும் சொல்லக்காணோம் ,

  விளக்கம் தேவை, மெரினா பீச்சில் வைத்து சொன்னாலும் சரி ,மண்டபம் வைத்து சொன்னாலும் சரி.

  இப்படிக்கு

  வவ்வால்
  மே/பா,
  முகமூடி பதிவர்கள் Pvt Ltd. ,

  வண்டலூர் மிருகக்காட்சி சாலை,
  ஓட்டேரி,
  வண்டலூர்.

  ReplyDelete
 3. இப்படி அத்தின பேர் கிளம்பியிருக்கிறீங்க.......

  ReplyDelete
 4. இப்ப பார்த்தீங்னா, இந்த பதிவர்கள் Pvt Ltdல ரெண்டு 5000 போட்டு இதுவரை 1.76 லட்சம் கோடி சம்பாதிச்சிருக்கேன்..

  என்னால முடியும் போது ஏன் உங்களால முடியாது!

  இன்னைக்கே ஜாய்ன் பண்ணுங்க! :)

  ReplyDelete
 5. // சோம்பேறிப் பதிவர்கள் இந்தத் திட்டத்தில் சேர அருகதையற்றவர்கள் //

  பாஸ் எங்களுக்கும் லட்சாதிபதி கனவு இருக்கு,வண்டில ஏத்திக்குங்க பிளீஸ்...

  ReplyDelete
 6. //இதைக் கூட செய்ய முடியாத சோம்பேறிப் பதிவர்கள் இந்தத் திட்டத்தில் சேர அருகதையற்றவர்கள். //

  சார்... சார்... என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்க சார்...

  ReplyDelete
 7. பிரப்பல பதிவர்களுக்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஸ்கீம் இருக்குங்களா!

  ReplyDelete
 8. ஆனாலும் செம லொள்ளு

  ReplyDelete
 9. பாத்து! கம்பி எண்ண வச்சிட போறாங்க!

  இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

  ReplyDelete
 10. பயனுள்ள தகவலுக்கு நன்றி!!


  இதையும் கமெண்ட் கவுன்ட் ல சேத்துக்குவீங்கதான!!!

  ReplyDelete
 11. பெண் பதிவர்களுக்கு எதாவது ஸ்பெஷல்??

  ReplyDelete
 12. இந்த திட்டம் வளர்ச்சிக்காக எங்க சங்கத்தோட உங்க சங்கத்த மெர்ஜ் பன்னுங்க...( ஒன்லி சங்கம் மட்டும்) உங்க கொள்கைய நாங்க பட்டி.. தொட்டியெல்லாம் ரீச் ஆக உதவுறோம்..

  லவ்டேல் மேடி,
  தலைவர்,
  த.ஷ.கி.மு.பே ( தலைவி ஷகிலா கில்மா முன்னேற்றப் பேரவை )
  ஈரோடு.

  ReplyDelete
 13. பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)