==00oo00==
போன வாரம் Ben & Jerry Icecream தயாரிக்கிற இடத்துக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு படம் சிரிக்க வெச்சது. நமக்கு சங்கி மங்கி தெரியும், இது என்னமோ புதுசா சங்க்கி மங்க்கின்னு ஒரு Icecreamமாம்
==00oo00==
நான் விரும்பிய என்னுடைய ட்விட்டுகளில் சில - கலைஞர் சட்டையை மாத்தினார். இணையம் முழுக்கா அதே பேச்சு. Now you know who the Trend Setter is
- ''அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல; இருவரும் தி.மு.க-தான்!'' #இந்த வசனம், ஃபெவிக்கால் விளம்பரத்துக்கா தலைவா?
- நானெல்லாம் எதுவும் கலக்காமலே, தண்ணியை ஒரு ஆஃப் அளவுக்கு அடிக்கிறவன் #குடிக்காதவர்களின் பஞ்ச்
- அதிமுகவுல சேர்ந்துட்டா, ஒரு முறையாவது.. ஒரு வாரமாவது அமைச்சாராகிடலாம்
- அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை. நல்லகண்ணு, வை.கோ மாதிரி இன்னும் நல்ல தலைவர்கள், சிலர் இருக்கிறார்கள்
- கெளதம் ஒரு படத்தைத்தான் காப்பியடிச்சாரு. ALவிஜய் எல்லாப் படமுமே அப்படித்தான் பண்றாரு. ஆனா மதிக்கவே மாட்டேங்குறாங்க
- வெளியாகும் பாதி குறும்படங்களில் சரக்கடிப்பதே முக்கிய நிகழ்வாக காட்டப்படுகிறது. அப்படி மாறிப்போச்சு நம்மோட சமுதாயம்.
- பனியன் போட்டு, சட்டையை அதுக்கு மேல போட்டு "டக் இன்" பண்ணிட்டுப் போறதுக்கு எதுக்கு 6 பேக்? #முடியாதவன்பேச்சு
- குவாட்டருக்கும், ட்விட்டருக்கு ஒரு நெருங்கிய சம்பந்தமுண்டு. ரெண்டுலேயும் உள்ளே இறங்கிட்டா உளறல் அதிகமா இருக்கும்
- சோகமான தருணங்களில் தேநீர் அருந்துவது, கொஞ்சம் கொஞ்சமாய் கவலைகளைப் விழுங்கிக்கொண்டிருப்பதாய் தோன்ற வைக்கிறது.
- இப்போதெல்லாம், சன் / கே டிவிக்களில் ஒளிபரப்பாகும் படங்களை பார்க்கவைப்பதில் இளையராஜாவே முக்கிய பங்குவகிக்கிறார்.
==00oo00==
இந்த வாரம் நான்கு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கு
- ஆதிபகவன் - இயக்கம் - அமீர் / இசை - யுவன் / ஜெயம் ரவி, நீத்து சந்திரா
- துப்பாக்கி - இயக்கம் - முருகதாஸ் / இசை - ஹாரிஸ்/ விஜய், காஜல் அகர்வால்
- நீர்ப்பறவை - இயக்கம் - சீனு ராமசாமி - /இசை- ரகுநந்தன் / விஷ்ணு, சுனைனா
- போடா போடி - இயக்கம் - விக்னேஷ் சிவா/இசை - தரன்/ STR, வரலட்சுமி
==00oo00==
ஆனா, வழக்கமாயில்லாம நான் சொன்ன பதில்
தலையை லைட்டா ஆட்டி "I am waiting" அப்படின்னு சொன்னேன் #துப்பாக்கி
காரணம்???
==00oo00==
இந்த வாரம் மாற்றான் வெளியாகுது, பார்ப்போம். அது Stuck On youவா இல்லையான்னு.
No comments:
Post a Comment