Monday, June 12, 2006

இம்சை அரசன் Vs கைப்பு


2003ல சென்னையில பிரம்மச்சாரியா சாலிகிராமத்துல இருந்த காலம். எங்க வீட்டுக்கு கீழேதான் வின்னர் பட அலுவலகம் இருந்துச்சு. அப்பப்போ மதிய சாப்பாடெல்லாம் யூனிட்லதான் இருக்கும்.

தயாரிப்பாளரோட பையன் நமக்கு கொஞ்சம் நெருக்கம். காரணம் வேற ஒண்ணும் இல்லீங்க. அப்போ அவருக்கு சென்னை புதுசு. நம்ம வீட்ல தங்கி இருந்த பசங்க எல்லாம் கோவில்பட்டிக்காரங்க, அதனால திருநெல்வேலி பாஷை நல்லா பேசுவோம். அந்த பாஷையினால எங்க ரூமுக்கு அடிக்கடி வருவாரு. படம் ரெண்டு முறை நின்னுருச்சு. தயாரிப்பாளருக்கு அது முதல் படம், சினிமாவும் புதுசு அதனால எவன் எவனோ ஏமாத்தினாங்க. ஆயிரம் தான் இருந்தாலும் பணக்கஷ்டம் இருக்கத்தானே செய்யும். கடைசியில அவுங்க வீட்டையெல்லம் அடமானம் வெச்சு, பையனோட பைக் வித்து படம் ரிலீஸ் பண்ணினாங்க. அந்த கஷ்டம் கூட இருந்த எங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். இவ்ளோ கஷ்டப்பட்டவங்களை அதுக்கு அப்புறமா சாலிகிராமத்துல பார்க்கவே முடியல.

இப்படி ரத்தக்கண்ணீருல உருவானதுதான் அந்த காமெடி படம். இப்போ இந்த படம் போட்டாலே சிரிப்பா சிரிக்குது ஜனம்.

இம்சை அரசன் கதையோ வேற மாதிரி. சச்சின் படத்துல வடிவேலு "நமக்கு இந்த ஹீரோ வேஷமெல்லாம் வேணாம், இப்படியே இருந்துட்டு போயிருவோம்"ன்னு சொல்லுவார். அப்புறம் ஏன் இம்சை அரசன் 23ம் புலிகேசி? ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா? செஸ் விளையாட்டுல குதிரைய வெச்சு செக் வெக்கிறதுதன் கில்லியே. ரொம்ப சுலபமா குறுக்க நெடுக்க போயி வெட்டிபுடும். இம்சை அரசன்லயும் இதே கதை தான். இதுவரைக்கு மனுஷப்பயலுகதான் வடிவேலுவுக்கு ஆப்பு வெச்சானுக. இப்போ குதிரையும் செக் வெச்சு இருக்கு.

பாவம் முறுக்கிவிட்ட மீசையும், கம்பீரமா(?!) இருக்கிற வடிவேலு குதிரையினால மனசொடிஞ்சு போய்ட்டாரு. ஹ்ம் என்ன பண்ண பட்ட இடமே படும் கெட்ட குடியே கெடுங்கிற மாதிரி ஆப்பு வாங்கினவங்களேதான் ஆப்பு வாங்குறாங்க. இப்படி குதிரை கூட ஆப்பு வெச்சா இப்படித்தான் வாயில வெரல வெச்சுகிட்டு படம் ரிலீஸ் ஆகுர வரைக்கும் காத்திருக்கனும். இம்சைய நானும் எதிர் பார்க்கிறேன் சாமிகளா..

4 comments:

 1. இம்சைய நானும் எதிர் பார்க்கிறேன்

  ReplyDelete
 2. எல்லோரும் எதிர் பார்க்கிற மாதிரிதான் நானும், தணிக்கைகுழுதான் படம் எப்போன்னு சொல்லனும்

  ReplyDelete
 3. //இவ்ளோ கஷ்டப்பட்டவங்களை அதுக்கு அப்புறமா சாலிகிராமத்துல பார்க்கவே முடியல//
  கோயம்பேட்டில் இருந்த அவங்க ப்ளாட்டையும் வித்துட்டு போய்ட்டாங்கன்னு கேள்வி.. எங்க போய்ட்டாங்க என்ன ஏதுன்னு எங்க வீட்ல கேட்டா தெரியும்.. எங்க பிளாட் "லோகல் டைம்ஸ்" ஆன்ட்டி அம்மாவுக்கு ரொம்ப க்ளோஸ் :)

  ReplyDelete
 4. இம்சை அரசன் சீக்கிரம் வராம இப்போ இருந்தே இம்சைய ஆரம்பிச்சுட்டான்

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)