Wednesday, November 15, 2006

ஆரியமா உவ்வே

நம்ம ஊரப்பொருத்த வரைக்கும் 3 வேளையும் நெல்லுச்சோறு திங்க ஆரம்பிச்சது 1960களில்தான். இதுல சாதி பார்க்கிறதுக்கு ஒன்னுமே இல்லீங்க, வேலை செஞ்சா சோறு அப்படின்னு இருந்த காலம்தான் அதிகம். நான் பொறந்த காலத்துல நெல்லுச்சோறுக்குப் பஞ்சமில்லைன்னாலும் கூழோ, கம்பஞ்சோறோ வாரம் ஒரு முறையாவது செஞ்சுருவாங்க. நெல்லுச்சோறு சக்கை, கூழோ கம்பஞ்சோறோ தின்னாதான் சத்து அப்படின்னு இன்னும் கூட சொல்லுவாரு எங்க அப்பச்சி. அப்பச்சியும், அம்மாயியும் வாரம் ஒரு முறையாவது களி சாப்பிட்டிருவாங்க.

அதனால நமக்கு ஆரியம், கம்பு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆரியத்துல பண்ற களி, கூழு, கம்பஞ்சோறு ருசி எதுலயும் வரது இல்லே. இப்போ என்னமோ ஒரு தட்டுல 4 பன்னீர் பக்கோடா வெச்சுக்கிட்டு 3 மணி நேரம் கொறிச்சுக்கிட்டு இருக்கோம். அது எல்லாம் தோட்டத்துல முடியுமா? வேலைய பார்க்க வேணாம்?

போன மாசம் மருத்துவர்கிட்டே வாரிச கூட்டிகிட்டு போன போது, அவர் சொன்னாரு ஆரியத்துல பண்ணினது குடுங்க பையன் கொஞ்சம் சத்து பிடிப்போட இருப்பானு சொன்னார். சரின்னு, நம்ம வீட்டுல ஆரியத்தை அரைச்சு கொஞ்சம் பனை வெல்லம் போட்டு தண்ணி கலந்து குடுத்தா பையனுக்கு மூஞ்சி போற போக்கை பார்க்கனுமே.

ஈரோட்டு பேருந்து நிலையத்துல ரொம்ப அதிகமா நடக்கிற வியாபாரமே கம்பஞ்சோறுதான். தலைமுறை இடைவெளி வரலாம், சாப்பாட்டு முறை மாறலாம், ஆனா அது எல்லாம் வளர்ப்பு முறைன்னுதான் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். 10 மாச குழந்தைக்கு தெரியுமா என்ன? அப்போ களி கம்பஞ்சோறு எல்லாம் இந்தத்தலை முறையோடு போயிருமா? பன்னீரு, ரொட்டியும்தான் திம்பாங்களா இந்தத் தலைமுறையில?

(பின் குறிப்பு: எங்க ஊர் வழக்கத்துல ஆரியம்=கேழ்வரகு=ராகி. Vaa.மணிகண்டன் இதையும் குறிச்சு வெச்சுக்கோங்க)

24 comments:

 1. எங்க வூட்டு கதையும் அதே தானுங்க.. டாக்டருங்க சொல்லுறது என்னமோ வூட்டுல்லயே தயாரிச்ச சத்தான ஐட்டம் தான் உடம்புக்கு நல்லதுன்னு.. ஆனா பாருங்க நாக்கு ருசிக்கு பாக்கெட் ஐட்டம் தான் பக்கெட் கணக்குல்ல வாங்கிப் போட வேண்டியிருக்கு..

  ReplyDelete
 2. ஏதோ காண்ட்ரவர்ஸின்னு நினைச்சுத்தான் வந்தேன்...:)))

  கம்மங்கூழு பெங்களூரிலும் கிடைக்குது தலை..

  இண்டர்மீடியட் ரிங் ரோட்ல நாலஞ்சு இடத்தில் விக்குறாங்க.

  விலை 4 ரூவா...

  அதுக்கு சைட் டிஷ்ஷா சுட்ட மிளகாய் + மிளகாய்தூள் தடவின மாங்காய்...

  உடனே ஆக்ஷன்...!!!

  ReplyDelete
 3. ஆகா... கிளம்பிட்டாங்கய்யாஆஆஆஆ.... கிளம்பிட்டாங்கய்யா.

  இப்படி தான் ஆரிய கஞ்சிய பெத்தவங்க எடுத்துட்டு வந்தா பயங்க சொல்லுவாங்க.... :-)

  நான் ஆரிய (கேழ்வரகு) கஞ்சிய பத்தி மட்டும் தான் பேசரேனுங்க.

  ReplyDelete
 4. விவசாயி,
  நீங்க ஈரோடு-ஆ? நானும் தானுங்க. இப்ப ஈரோட்டுல விவசாயம் ரொம்ப நொடிஞ்சு போச்சுனு கேள்விபட்டேன். அது பத்தி தெரிஞ்சா பதிவு போடுங்களேன்.

  ReplyDelete
 5. //ஆனா பாருங்க நாக்கு ருசிக்கு பாக்கெட் ஐட்டம் தான்//
  நம்ம தலை முறைக்கே வந்துருச்சா? அப்போ அடுத்த தலைமுறை பத்தி பேசுவானேன்

  ReplyDelete
 6. //ஏதோ காண்ட்ரவர்ஸின்னு நினைச்சுத்தான் வந்தேன்...:)))//
  நம்ம பதிவுல அதெல்லாம் எதிர்பார்க்காலாங்களா ரவி?
  //இண்டர்மீடியட் ரிங் ரோட்ல நாலஞ்சு இடத்தில் விக்குறாங்க.//
  பார்க்கலாங்க, தகவலுக்கு நன்றிங்க ரவி.

  ReplyDelete
 7. கம்பு மாவுலே ஒரு பொருள் விளங்காய், அட பொரிவிளங்கா உருண்டை
  செய்வாங்க பாருங்க......................அடடாடா..... எச்சி ஊறுது.
  இப்பக் கடிக்க தைரியம் இல்லை. பல்லுக்கு எதாச்சும் ஆனா வீட்டை
  விக்கும்படி ஆயிரும்:-))))

  ReplyDelete
 8. //எங்க ஊர் வழக்கத்துல ஆரியம்=கேழ்வரகு=ராகி//

  அது சரி :-)))))))

  ReplyDelete
 9. //. இப்ப ஈரோட்டுல விவசாயம் ரொம்ப நொடிஞ்சு போச்சுனு கேள்விபட்டேன். //
  அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்களே ஹரி. நல்லாதானே இருக்கு, நல்ல தலைப்பு கிடைச்சு இருக்கு. எழுதிட்டாப்போச்சுங்க.

  ReplyDelete
 10. ஆரியக் கூத்துங்குறது இப்ப நீங்க செய்றதுதானா?

  கேழ்வரக எங்கூருல கேப்பைம்போம். கரூரு பக்கத்துல கேவுரு கேவுரும்பாங்க. பெரிய ஊர்கள்ள ஸ்டைலா ராகீம்பாங்க.

  கேழ்வரகு ஒடம்புக்கு ரொம்ப நல்லது. இப்பவும் கருநாடகாவுல ராகி மொத்தே திங்குறாங்களே. நாமதான் விட்டுட்டோம்.

  எங்க தாத்தா பாட்டிகள் அப்பா அம்மா எல்லாம் கேழ்வரகு கம்பு சாப்பிட்டிருக்காங்க. அரிசிக்கு மாறுனது நீங்க சொல்ற 1960கள்ள தான்.

  கேப்பைய ருசியாச் சாப்பிடனும்னா தோசை சுட்டுக்கலாம். உளுந்த மட்டும் தனியா ஊற வெச்சி அரச்சிக்கனும். அதுல கேப்பை மாவைக் கலந்து வெச்சிரனும். அடுத்த நாள் காலைல சூப்பரா அதுல கேப்பை தோசை சுடலாம்.

  சின்னப்பிள்ளைங்களுக்கு எப்படிக் குடுக்கனும்னா...கேப்பைய ஊறவெச்சுக்கனும். அத ஒரல்ல போட்டு ஆட்டிப் பாலெடுக்கனும். அந்தக் கேப்பைப் பாலச் சட்டியில ஊத்தி இளஞ்சூட்டுல காச்சனும். அதுல பாலும் சேத்துக்கனும். நல்லா நீர்க்கஞ்சியா இருக்கும். அதுல ஜீனியோ வெல்லமோ போட்டுக் குடுத்தா நல்லது. ரொம்ப நல்லது.

  எல்லாஞ் சரி...இந்த ஆரியப் பதிவுக்கு நானும் ஓமப்பொடியுந்தான் காரணம்னு சொல்லாம விட்டுட்டீங்களே.

  ReplyDelete
 11. களியும் கருவாட்டுக் குழம்பும் சூப்பர் காம்பினேசன் இளா!

  ReplyDelete
 12. 'ஆரிய கஞ்சி பழங்கஞ்சி' என்பது கேல்வரகு கஞ்சி தானா ?
  :)

  ReplyDelete
 13. //அது சரி //
  தப்புன்னு சொல்லிருந்தா இன்னொருதடவை அண்ணாச்சிகடைக்கு போக வேண்டி இருக்கும்

  ReplyDelete
 14. //பல்லுக்கு எதாச்சும் ஆனா வீட்டை
  விக்கும்படி ஆயிரும்//
  அதெல்லாம் அந்த காலம் துளசியக்கா. அதெல்லாம் இப்போ எங்கே கிடைக்குதுன்னே தெரியலை

  ReplyDelete
 15. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்களே ஹரி. நல்லாதானே இருக்கு

  சமீபத்தில குமுதம் ரிப்போர்டர்ல படிச்சேன். அதாங்க உங்க கிட்ட கேட்டேன்.

  ReplyDelete
 16. அட சின்னப்பிள்ளையா இருக்கும்போது வேறு வழியில்லாமல் சாப்பிட்டதாச்சே. இப்போது ஊருக்கு போனபோது விரும்பி சாப்பிட கேழ்வரகு தேடினால்....
  'இதெல்லாம் ஆசைப்பட்ட பண்டம். பணக்காரங்கதான் சாப்பிட முடியும். நம்முர்ப் பக்கமெல்லாம் பயங்கர விலை. காசு கொடுத்தாலும் கிடைப்பதில்லை' என்று அம்மா கடைசிவரை தரவேயில்லை.

  ReplyDelete
 17. //நம்முர்ப் பக்கமெல்லாம் பயங்கர விலை//
  ஆமாங்க, இப்போ ஆரியத்துல அவ்வளவா மகசூல் சரியில்லை. நிறைய வேலை வேற. அதனால கூட இருக்கும்.

  ReplyDelete
 18. அட ஏதோ வில்லங்கமா போடுவீங்கன்னு பார்த்தா இப்படி சாப்பாட்ட மேட்டர சொல்லிட்டீங்களே

  ReplyDelete
 19. விவ்,

  எங்க ஊருப்பக்கமா போனா நம்ம பெரிசு ஒரு சட்டி நிறைய கொடுக்கும்.... மொதல்லே சாப்பிட கஷ்டமா இருந்துச்சு,ஆனா பழகிடவுடனே சூப்பரா மாறிப்போயிருச்சு!!!

  ReplyDelete
 20. வெவசாயி,
  உங்க பையனுக்கு வாங்கற ஆரியத்துல ஒரு தொண்ணை நம்ம பாளையத்துக்கும் அனுப்பி வையுங்க. நானும் அதை சாப்பிட்டதில்ல.

  ReplyDelete
 21. எங்க ஊருல ராயி னு சொல்வாங்க...

  கம்பஞ்சோறும் கடலை சட்னியும் இப்போ நினைச்சாலும் எச்சி ஊருது...நா சொன்னது நிலக்கடலைங்கோவ்... :-)

  ReplyDelete
 22. கே'வரவு'ன்னு சொல்லுவாங்க.

  'ரா'கின்னு சொல்லுவாங்க.

  முதலில் இருப்பது தமிழ்ச் சொல். அடுத்தது தெலுங்கில் இருந்து வந்தது.

  கேழ்வரகு - கேவரவு - ராகி என தெலுங்கில் மொழி பெயர்ப்பு ஆனாது. ஆகையால் இவை எல்லாமே தமிழ்ச் சொற்கள்தான்.

  (இராமகி ஐயா, சும்மா தமாஷ், கோவப்படாதீங்க! மொழிபெயர்ப்பு சரியா இல்லையேன்னு சொல்லி வம்பு பண்ண வரவங்க இலவசத்தில் கைப்பு பத்திய பதிவை படியுங்க.)

  ReplyDelete
 23. //கடலை சட்னியும் இப்போ நினைச்சாலும் எச்சி ஊருது...நா சொன்னது நிலக்கடலைங்கோவ்... :-) //

  எல்லாரும் நம்புங்கோவ்...

  ReplyDelete

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)