இன்னைக்கு ஆடி 18ங்க!
நம்ம ஊரு பக்கம் ஆடி 18ன்னா ரொம்ப விஷேசமுங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசம் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.
சின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.
படம்: பவானி கூடுதுறை- 2006ம் வருசம் ஆத்துல நல்லா தண்ணி வந்துச்சுங்க. அப்போ எடுத்த படம்.
நீச்சல் குளம் அப்படிங்கிற படத்துல வந்த ஆடி பத்தின பாடல்
நம்ம ஊரு பக்கம் ஆடி 18ன்னா ரொம்ப விஷேசமுங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசம் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.
- பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.
- காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
- பள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
- புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.
- எந்தத் தொழிலும் இந்த மாசத்துல ஆரம்பிக்க மாட்டாங்க. காரணம் பீடை மாசமாம். இன்னும் அதுக்கு என்ன வெவரம்னு தெரியலீங்க.
- சின்ன வயசுல ஆடி 18ன்னாவே திருச்சி வானொலியில 7:30 மணிக்கு சினிமாப் பாட்டு போடும்போது நீச்சல் குளம் படத்துல இருந்து "ஆடி-18.. ஆடி வரும் பொங்கிட்டு" அப்படின்னு கண்டிப்பா பாட்டு வரும். இப்பவும் வருதுங்களா??
சின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.
படம்: பவானி கூடுதுறை- 2006ம் வருசம் ஆத்துல நல்லா தண்ணி வந்துச்சுங்க. அப்போ எடுத்த படம்.
நீச்சல் குளம் அப்படிங்கிற படத்துல வந்த ஆடி பத்தின பாடல்
ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று குடுபத்தோடு ஆற்றங்கரை சென்று வித விதவிமான உணவுகளை சாப்பிடும் பழக்கம் நெல்லை மாவட்டத்தில் இப்போதும் உண்டு.
ReplyDeleteஆற்றில் கரை புரண்டு ஒடிய தண்ணீர், இன்று இல்லாச் சூழலுக்கு மனிதனின் மரம் வெட்டி காசாக்கும்
ஆசைதானே காரனம்.
மரம் வளர்ப்போம்
மனிதம் காப்போம்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
மலரும் நினைவுகள்? அதுக்குள்ள வயசாயிருச்சா?:)
ReplyDeleteஆடி 18க்கு கோவைப்பக்கம் பொதுவிடுமுறை. தொழிலகங்கள் கூட இயங்காது. இந்த வருடம் மழை பொய்த்துவிட்டது.:(
நாங்கள் பதினெட்டு வகையான dish களுடன் நல்லா சாப்பிடுவோம் !
ReplyDeleteஎங்களுக்கு அதுதான் அடி பதினெட்டு !
ஆமா இளா, நாங்க கூட பாட்டி வீட்டுக்கு போவோம் அங்க எல்லாரும் சேர்ந்து சாப்பாடு கட்டிக்கிட்டு ஆத்துக்கு போயி நிலா சோறு சாப்புடுவோம்.. அதெல்லாம் ஒரு காலம்..
ReplyDeleteஆத்துல தண்ணி இல்லைன்னா என்ன மாமு? ஸ்பெஷல் தண்ணியோட கொண்டாடிவேண்டியதானே?
ReplyDelete// சின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும்.//
ReplyDeleteஅமராவதி ஆத்துல இந்த காசு பொறுக்குன ஞாபகம் வருது.நீங்க போட்ட காசுதானா அது:)
அதே நினைவுகளுடன், ஆடி 18 வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாங்களும், காசு போட்டு முங்கியிருக்கோம். தண்ணி வத்துனவுடனே, காசு பொறுக்குவோம்! கண்ணு சிவக்க சிவக்க 'தண்ணியில' ஆட்டம்தான் :)
ஆடி 18 அன்னிக்குதான் தஞ்சை பக்கத்துல, 'தாலி பெருக்கி போடுதல்' ன்னு ஒண்ணு நடக்கும். அது வரைக்கும் வெறும் மாங்கல்யத்தோட இருக்குற புதுப்பொண்ணுங்க, காசு, மாங்கா, தேங்கால்லாம் சேத்து 'பெருக்கி' கட்டிக்குவாங்க!
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க்க விவா!!
பொன்னியின் செல்வன் புதினத்தின் முதல் அத்தியாயம் ஆடி பெருக்கு அன்று வீர நாரயணபுரம் (வீராணம்) ஏரிக்கரையில் வரும் வந்தியத் தேவனை குறிப்பிட்டுத்தான் ஆரம்பிக்கும்.
ReplyDeleteபொங்கல் எப்படி உழவர்கள் நன்றி சொல்லும் பெருநாளோ அதேப்போல் ஆடிப் பெருக்கும் நதியை வணங்கி உழவை ஆரம்பிக்கும் பெருநாள் தான்.
நல்ல பதிவு. பழையதாய் இருந்தாலும் பொருந்த்தமான ஒன்று.
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
ReplyDeleteவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//மரம் வளர்ப்போம்
ReplyDeleteமனிதம் காப்போம்//
இனிமேலாவது கொஞ்சம் புத்தி வந்தா போதாதுங்களா?
//இந்தப் பதிவுகூட 2006 வருசம் போட்டதுதாங்க. இப்போ பட்டி பார்த்து, லைட்டா டிங்கரிங் பண்ணிப் போட்டிருக்கேங்க.//
ReplyDelete:))
http://vijaybalajithecitizen.blogspot.com/2008/08/microsoft-sharepoint-administrator.html
ReplyDeletesharepoint administrator point of view
ஆடி பதினெட்டுக்கு ஏதோ ஒரு கவர்ச்சி.
ReplyDeleteதண்ணீரில்லாத காவிரியோ, குளமோ எதுவாக இருந்தாலும் மனிதர்கள் கூடி மகிழ்ச்சியாக இருந்தாலே அது தனி உற்சாகம்.
ஆடிப் பதிவுக்கு ஆவணியில் பின்னூட்டம் போடுகிறேன் இளா.