Saturday, August 26, 2006

வேட்டையாடு விளையாடு-My Take

தமிழில்,ஆங்கில படத்துக்கு இணையாய் ஒரு பிரமாண்டம். கதாநாயகன் பறப்பதில்லை, கார், பைக் எல்லாம் உருண்டோடுவதில்லை. அக்கா, தம்பி செண்டிமென்ட் இல்லை. நிறைகள் நிறைய இருக்க குறைகள் சொற்பமே.

பல மாத காலமாய் மனதில் உருண்டோடிய நான் எதிர்ப்பார்த்த "பார்த்த முதல் நாளே" பாடல் உருவாக்கிய விதம் அருமையிலும் அருமை(முதல் இரண்டு வரிகளுக்கு blue mat picturisation" தவிர்த்து இருக்கலாமே). பாடல்கள் அனைத்துமே பிரமாண்டமாய் இன்னும் கண்களில் . இன்னொரு நிறை, நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன இடங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே கண்களுக்கு புதிதாய், சுகந்தமாய், வசந்தமாய் (3 இடங்கள் மட்டுமே நமக்கு தெரிந்த இடங்கள்). இதில் கெளதம் வெற்றி பெற்று இருக்கிறார். கேமரா கையாடல் ரவி வர்மா ஒரு பெரிய பாராட்டு உண்டு. Frame by Frame செதுக்கி இருக்கிறார். படத்திற்கு இன்னொரு பலம் ஹாரிஸ். எப்பா Sax, keyboard இரண்டையும் இந்தப்படத்தில் கையாண்ட விதம் Simply Superb. Hats off to these Guys. இரண்டு பெரிய பலம் இவர்கள். இராஜீவனின் கலை, கண்டிப்பாய் பாராட்டலாம்.

அடுத்தது கமல் மற்றும் ஜோ. கமலுக்கு விமர்சனம் தேவையில்லை. ஒரு இடத்தில் கமலின் நடிப்பே அதற்கு ஒரு சான்று. 2 நிமிட பழி வாங்கலுக்குப் பிறகு அவர் காட்டும் அந்த முகபாவனை He deserves for awards.Top Angle view என்பதால் அந்த பாவனை அடிப்படுகிறதே. ஜோ, வழக்கமான கெக்கேபிக்கித்தனமான நடிப்பு இல்லை. ஆரம்பம் முதலே ஒரு சோகக்கீற்றை முகத்தில் படற விட்டிருக்கிறார், பரவாயில்லை, அம்மணி நடிப்பில் ரொம்ப முன்னேறிட்டாங்க. சூர்யாவுக்கு இணையாய் ஜோவும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி வேகம் அதிகம். தமிழில் அனைவருக்கும் சாந்தமாய் பெயர். ஹோமோ பிடிக்காத வில்லனை அதைச் சொல்லியே வெறி ஏற்றும் கமலின் தந்திரம் ஒரு நச். வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.

கடைசி ஸீனை மட்டும் சொல்லி விடுகிறேன், 95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது. ஒருவரை வாய் கட்டி மண்ணுக்குள் புதைத்தால், சில மணிவரை பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை திரையரங்கில் சொல்லி புரிய வைத்த பெருமை நமக்கும் இருக்கு.

"பார்த்த நாள் முதல்" பாடல் ஒரு அழகிய காதல் கவிதை, நியுயார்க் காட்சிகள் புதுக்கவிதை. வெண்ணிலவே பாடலுக்கு ஆங்கிலேயர்கள் வாயசைத்த விதம், ஹ்ம்ம் தமிழிக்கு புதுது.அட நம்ம கெளதம் வேற ஆட்டம் போட்டு இருக்கிறார். "நெருப்பே" பாடலில் ஆங்கில நெடிக்கு தகுந்தவாரு ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா சார்)தனியொரு ஆளாய் கதாநாயகன், வில்லன் ஒரு பெரிய கும்பல் என்ற வழக்கத்தை மாற்றிய படம். இந்த படத்தில் கதாநாயகனுக்கு ஒரு படைப்பட்டாளம் இருக்க, வில்லன் இருவர் என புதிதாய் ஒரு முயற்சி.

படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.

முதல் காட்சியிலேயே கமலின் சண்டைக்காட்சி, யூ டூ கமல்ன்னு கேட்க ஆரம்பிப்பதற்குள் கதைக்கு சென்றவிதமும், கமலின் அறிமுகமும் ஆர்ப்பாட்டமில்லாத ஆஹா. ஆனால் அந்த தலைப்பு பாடல் கமலை ஹீரோவாக்கி காட்டி இருக்கிறது.

ஹீரோயிசம் இல்லாத கெளதம், ரவி வர்மா, ஹாரிஸ், இராஜீவன், திகில் படம் இது.
திரையரங்கில் மட்டுமே பார்க்கவும்.

மக்கள் கருத்து (நன்றி-IndiaGlitz) - இந்த கருத்துல என்ன சொல்றாங்கன்னு நல்லா கவனிச்சுக்குங்க. என்னோட அடுத்தப் பதிவு இந்த கருத்துக் கணிப்புல இருந்துதான்

25 comments:

 1. இளா,

  சுடச் சுட பதிவைப் போட்டுடீங்க,,, நல்லது...

  கமல் எனும் மாபெரும் கலைஞனுக்காக நிச்சயம் படம் பார்க்க வேண்டும்..

  நன்றி.. விமர்சனத்திற்கு..

  ReplyDelete
 2. //படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.//

  இன்னோருத்தரா, அமுதன் யாரு இளா? உங்க முதுகுல பச்ச ஒண்ணும் குத்திக்கலயே...

  பின் பாதிதான் இழுத்தா மாதிரி இருந்தது... உங்களுக்கு வேறு மாதிரி இருந்துருக்கு போலருக்கு.... கமல் மிடுக்கு... ரொம்ப நாள் கழிச்சு

  boston பாலாவும் ஜெஸிலாவும் கூட இதப் பத்தி பதிவு போட்டுட்டாங்க

  வேட்டையாடு விளையாடுன்னு ஒரு குறிச்சொல்ல சேர்த்திருந்தா இன்னேரம் முதல் பக்கத்துல வந்துருக்கும்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 3. சார் நீங்க ஐந்தாவது ஆளாக விமர்சனம் எழதுகிறிர்கள்.மேல சொன்னது போல் சுடச் சுட அல்ல

  ReplyDelete
 4. ஐயா நீங்கள் பேசாமல் எதாவது பத்திரிகை/ சஞ்சிகை/ நாளிதல் என்று திரைவிமர்சனம் எழுதலாம். அவ்வளவுக்கு நன்றாக எல்லாத்தையும் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.

  படத்தை நாளை பார்க்கப் போகிறேன்.

  கமல்... அவர் சகலகலா வல்லவன். ;)

  ReplyDelete
 5. ராசுக்குட்டி, அது அமுதன் இல்லீங்க. கதாநாயகன் பேருல இருக்கிறவர். யோசிச்சு பாருங்க ரொம்ப பிரபலம் அவர்.
  சிவபாலன் -- பொடைக்குடியன்.
  நீங்களே முடிவு பண்ணிக்குங்க. நான் அதைப்பத்தி ஒன்னும் சொல்லவும் இல்லை, சொல்லப்போவதுமில்லை.

  ReplyDelete
 6. //வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.
  //

  எனக்குப் பின்னிருந்தவர்கள் சொல்லிக்கொண்டது:
  "கேப்டன் படம் மாதிரியில்ல?"

  படத்தில் எந்தப்பாட்டுமே இருந்திருக்கக் கூடாதென்பது என் கருத்து.

  ReplyDelete
 7. என்னங்க எங்கேயும் போய் Comment போடமுடியாது போல... எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லறாங்க.. அது சரி,,, ம்ம்ம்ம்ம்

  இந்தப் பதிவுலியுமா???

  ReplyDelete
 8. எந்த விமர்சனமும் படிக்காம படம் பாக்கணும் அப்படின்னு நினைச்சேன். ஆனா ஆர்வம் தாங்காம இது வரை வந்த விமர்சனம் எல்லாம் படிச்சாச்சு!

  நாளக்கு படம் பார்க்க டிக்கட் வாங்கியாச்சு. பாத்துட்டு வந்து சொல்லறேன்.

  ReplyDelete
 9. ----95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது----

  எனக்கும் எட்டவில்லை. சரி... திரைப்படங்களில் இது சகஜமே என்று நினைத்தேன்.


  ----ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா---

  வக்கிரமாக இல்லாமல் எல்லாரும் ரசிக்கும்படி படமெடுத்திருந்தார்களே. நான் சி/டி-யா என்று தெரியாது. ஆனா, நல்ல இருந்துச்சுங்க :-P


  ----திரையரங்கில் மட்டுமே பார்க்கவும். ----

  ஆம்!

  ReplyDelete
 10. படம் பாத்துட்டீங்களா? நான் இன்னும் பாக்கலை...அடுத்த வாரம் பெங்களூர்ல பாக்க வேண்டியதுதான். நல்லாயிருக்குன்னு வேற சொல்றீங்க.

  அதென்ன கிண்டலு சுண்டலு...என்னது அது?

  ReplyDelete
 11. உங்க கருத்துக்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றிங்க நெல்லை சிவா.

  ReplyDelete
 12. ஓ ஜிரா வா... ஆனா நா புதுசுன்றதால நமக்கு மேட்டர் புரியல அப்புறம் நீங்களே விளக்கமா சொல்லிடுங்க சரியா...

  ReplyDelete
 13. ஓ ஜிராவா அது!

  ஆனா என்ன கனெக்ஷன்னு புரியல நீங்கலே விளக்கி சொல்லி விடுங்கள் பிறகு!

  ReplyDelete
 14. வேட்டையாடு விளையாடு....

  கமல் --> கம்பீரம்

  கமலினி(பார்த்த முதல் நாளே) --> கவிதை

  ஜோ + வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே-->அழகு

  அமுதன், இளமாறன் --> ஆரவாரம்(அமைதியான ஆரவாரம்)

  பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி 15 கொலைகள், கொஞ்சம் மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்று தோன்றியது.

  மற்றபடி படம் பல்சுவையாகவே இருந்தது, உங்கள் பதிவும்தான் இளா.....

  ReplyDelete
 15. // ராசுக்குட்டி said...
  ஓ ஜிரா வா... ஆனா நா புதுசுன்றதால நமக்கு மேட்டர் புரியல அப்புறம் நீங்களே விளக்கமா சொல்லிடுங்க சரியா... //

  // ராசுக்குட்டி said...
  ஓ ஜிராவா அது!

  ஆனா என்ன கனெக்ஷன்னு புரியல நீங்கலே விளக்கி சொல்லி விடுங்கள் பிறகு! //

  என்னய்யா ராசுக்குட்டி...என்னைய இந்த வெளையாட்டுல இழுக்குறீங்க. நான் இன்னும் படமே பாக்கலை.

  ReplyDelete
 16. படம் இன்னும் பார்க்கலை. அதனால உங்க ரிவ்யூவும் இப்போதைக்கு படிக்கல. :))

  பார்த்துட்டு அப்புறமா வரேன்.

  ReplyDelete
 17. //திரையரங்கில் மட்டுமே பார்க்கவும் //

  இது எல்லாம் ரொம்ப ஒவரு. கெளதம் கமல் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று பல நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்கோம். இதுல புத்தி சொல்லுறாராம் நம்ம விவ்.

  எனக்கு கொஞ்சம் விதிவிலக்கு கூடுங்க சாமி!

  ReplyDelete
 18. ////வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.
  //// FBI எல்லாம் காண்பித்து அவ்வளவு புத்திசாலிதனமாக எடுத்தவர்கள் ஒரு இரு சக்கர வண்டியை அதே வேகத்தில் நான்கு சக்கர வண்டி துரத்தி பிடித்தது கொஞ்சம் ஓவர் என்று நானும் என் பதிவில் சேர்க்க மறந்து விட்ட விஷயம். விமர்சனம் நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 19. விவ்! தலைவரின் படத்தை இன்னும் பார்க்கவில்லை!கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே!
  விமர்சனம் அருமை! நன்றி

  அன்புடன்...
  சரவணன்.

  ReplyDelete
 20. MY Vote for Daniel Balaji as Amuthan alais Amutha....Alex-Paris

  ReplyDelete
 21. HI
  My vote is to Daniel Balaji as Amutha did a gud work.

  Tks for ur "Vimarisanam"

  ReplyDelete
 22. அட பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் போட வேண்டி இருக்கு. வருகிறேன் பிறகு!

  ReplyDelete
 23. //படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம்.//

  அப்படீங்கறீங்க? அதுக்கென்ன பண்ணிட்டாப் போச்சு?
  :)

  //பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி 15 கொலைகள், கொஞ்சம் மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்று தோன்றியது//
  ரெண்டு பேரும் சேந்து பண்ணறத எல்லாம் பண்ணிட்டு பின்னூட்டம் வேறயா?

  டிசிபி பேருல ஒரு வலைப்பதிவர் இருக்குறாப்புல, ஜோ பேருலயும் ஒரு வலைப்பதிவர் இருக்குறாங்க சாமி!

  ஒரு வேளை கௌதமும் தமிழ் ப்ளாக் எல்லாம் படிக்கிறாரோ?
  :)

  ReplyDelete
 24. //ஜோ பேருலயும் ஒரு வலைப்பதிவர் இருக்குறாங்க சாமி!//

  அட !அது உண்மையிலயே என் சொந்த பேருங்க .நீங்க ஜோதிகாவை செல்லமா 'ஜோ' -ன்னு சுருக்கிட்டு ..விட்டா கேஸ் போடுவீங்க போல..ஹி.ஹி..நானும் விமரிசனம் போட்டிருக்கேன்..படிங்க.

  ReplyDelete
 25. நாங்கள் எங்கள் மெகா குடும்பதுடன் !7 பேர்களுடன் சென்று பார்த்தோம்.கமலும் கௌதமும் ஏமாற்றவில்லை.லாஜிகல் அப்பிலிகேஷன் மிஸ்ஸிங். உங்கள் விமர்சனம் உள்ளது உள்ளபடியே.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)