Thursday, August 10, 2006

பலி கெடா- சைவமா? அசைவமா?

இந்த பலி கெடா பலி கெடா அப்படிங்கிறதுன்னா என்னான்னு மல்லாக்க படுத்து யோசிச்சாலும் பதில் கிடைக்காதுங்க. அதெல்லாம் வாழ்க்கையில இருந்துதான் தெரிஞ்சிக்கனும். சரி பலி கெடாங்கிறது அசைவமான்னு கேட்டா சைவம்தாங்க அதிகம்ன்னு சொல்லுவேன். சச்சின் வந்த வந்தவுடனே ராபின் உத்தப்பாவை பலி கெடா ஆக்கினாங்க. இது சைவம்தான். இந்தியா- பாக் பிரச்சினைக்கு ஒரு மாநிலத்தை பலி கெடா ஆக்கினாங்க. தலைவர் பொண்டாட்டி சிலையில ஏதோ பிரச்சினை அதுக்கு பொது மக்கள் பலி கிடா ஆக்கினாங்க. இது இரண்டும் அசைவம். ஆஹா பிரச்சினையான பதிவா ஆகிரும் போல இருக்கே. வுடு ஜூட் விவசாயி.

இந்த நடிகை அம்மணிங்க முகத்தை மட்டும் மாத்திட்டு வேற ஒரு கலையம்சம் உள்ள அம்மணியோட உடம்போட இணைச்சு ரசிக்கிற சில ஜென்மங்களும் இருக்கு. அதுல யாரு பலி கெடா அந்த நடிகைதான். அவுங்க முகம் மட்டும் அழகா இருக்கும், உடம்பு கலையம்சத்தோட இருக்கும். மக்கள் ஆஹா நடிகைய நிர்வாணமா பார்த்துபுட்டேன்னு சொல்லி அத ஒரு 4 பேருக்கு ரகசியமா அனுப்பி வைப்பாங்க. இதுல குஷ்பூவ வெச்சு ஒரு பத்திரிக்கை பேர் வாங்கிருச்சு. (அப்புறம் என்னாப்பா ஆச்சு). மல்லிகா ஷெராவத், ஏஞ்சலினா, நம்ம 3ஷா எல்லாம் இதுல அடக்கம் இது சைவமா தெரிஞ்சாலும், அசைவ மேட்டரு.

இப்படி படம் அனுப்பினா என்ன ஆகும் தெரியுமா? ரசிச்சு பார்த்தோம்னு யாருப்பா சொல்றது? அது இல்லே , அப்படி இனிமே படம் அனுபிச்சா உங்க மெயில் சர்வர் நிறுத்தப்படும். யாஹூல அனுபிச்சா யாஹூ இந்தியாவுல வேலை செய்யாது, ஜி மெயில்ல அனுபிச்சா ஜிமெயில் இந்தியாவுல வேலை செய்யாது. பயந்துட்டீங்க தானே.

ஏற்கனேவே வலைப்பதிவுகளை கொஞ்ச காலமா தடுத்தாங்க இந்தியாவுல. இப்போ மின்னஞ்சல். ஏன்? கேள்வி கேட்கிறது ரொம்ப சுலபம் பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம். இப்படி சொன்னப்புறமும் பதில் வேணுமின்னு அடம் புடிச்சா இத சொடுக்கி பார்த்துக்குங்க.


சைவம், அசைவம் எதுவேணுமின்னாலும் வரலாம் அதுக்கு நான் பொறுப்பில்லை.
இந்த மாதிரி படம் யாராவது ஒருத்தர் அனுபிச்சா யாரு பலிகெடா? அது சைவமா? அசைவமா?

14 comments:

 1. /"பலி கெடா- சைவமா? அசைவமா?"

  அதுவா மேஞ்சிட்டு இருக்கவரை சைவம்.அதை அருவா போட்டு நாம மேஞ்சிட்டா அசைவம்.

  அம் ஐ ரைட் இளா ? :-))

  ReplyDelete
 2. //மேஞ்சிட்டு இருக்கவரை சைவம்.அதை அருவா போட்டு நாம மேஞ்சிட்டா அசைவம்//
  நம்மல மேய விட்டுருவாங்க அப்புறமா இல்லே கழுத்துல அருவா வெக்கிறாங்க.

  ReplyDelete
 3. உள்ளூரில் இருக்கும் உங்களுக்கு பலிகெடா அசைவம்
  அயலூரில் இருக்கும் மற்றவர்களுக்கு இந்த பலிகெடா சைவம்
  என்ன நான் சொல்லுறது

  அது சரி, இந்த மேட்டருல அம்மணி கண்டுக்காம இருந்து மேட்டர புஸ்னு ஆகிட்டாங்க போல

  ReplyDelete
 4. //மேட்டருல அம்மணி கண்டுக்காம இருந்து மேட்டர புஸ்னு ஆகிட்டாங்க போல //
  நமீதா 2 நாளைக்கு முன்னாடிதான் கமிஷ்னர் ஆபிஸ் போய்ட்டு வந்தாங்க. சோனியா,....
  செல்வ ராகவனுக்கே வெளிச்சம்.

  ReplyDelete
 5. Ada appuram Internet'ye block panida poranga

  ReplyDelete
 6. //மேஞ்சிட்டு இருக்கவரை சைவம்.அதை அருவா போட்டு நாம மேஞ்சிட்டா அசைவம்//

  //நம்மல மேய விட்டுருவாங்க அப்புறமா இல்லே கழுத்துல அருவா வெக்கிறாங்க.//

  அதான்வே விவசாயி,நம்ம நிலத்துல மட்டும் விவசாயம் பண்ணனும்.நீரு
  பாட்டுக்கு டிராக்டரை எடுத்துட்டு ஊர்க்காரன் நிலமெல்லாம் உழுதுட்டு அலைஞ்சா,கழுத்துல அருவா வைக்காம
  கையில அல்வாவா கொடுப்பாங்க.

  ReplyDelete
 7. //நீரு
  பாட்டுக்கு டிராக்டரை எடுத்துட்டு ஊர்க்காரன் நிலமெல்லாம் உழுதுட்டு அலைஞ்சா,கழுத்துல அருவா வைக்காம
  கையில அல்வாவா கொடுப்பாங்க. //

  சைவமா நான் எழுதி இருக்கிறதுக்கு அசைவமா ஒரு பின்னூட்டம் போடனுமா? நான் உண்டு என் விவசாயம் உண்டுன்னு என்னோட டிராக்டரை உருட்டிட்டு இருக்கேன், கெடுத்து புடாதா ராஜா.

  ReplyDelete
 8. //"கெடுத்து புடாதா ராஜா."

  யாரு,நாங்க, அதுவும் உங்களை.

  நல்லா கேட்டுக்கோங்க வலைமக்களே!! நம்ம விவசாயி இளா சைவமாங்கோ!!

  ReplyDelete
 9. ஏகப்பட்ட சிறு பூச்சிகளையும்,தவளையையும்,பாம்புகளையும் கொன்று எருவாக போட்டு அந்த நிலத்தில் விளைந்த நெல் சைவமா அசைவமா சொல்லுங்கள் விவசாயி

  ReplyDelete
 10. சைவ சாப்பாட்டை அசை போட்டு சாப்பிடற ஒருத்தன், அசைவத்தைப் பார்த்தா 'அட சை!'ன்னு சொல்லறான்.

  இப்போ சொல்லுங்க சைவம் தானே 'அசை'வம். அசைவம் தானே 'சை'வம்?

  ReplyDelete
 11. சைவமா அசைவமா என்பது கலாசாரம்,சூல்நிலை,மனநிலை,பொறுத்தது.

  சூரிய குளியலை நாமதான் வெறித்து பாக்குறோம்.

  ஆனால் அவர்கள்....

  ReplyDelete
 12. பலி கெடா சைவம் தான்.

  பலிகுடுக்குற வரைக்கும்.:)

  ReplyDelete
 13. /./
  இந்த மாதிரி படம் யாராவது ஒருத்தர் அனுபிச்சா யாரு பலிகெடா?
  /./

  வேணுமா??
  இங்கு நாதான் பலிகெடா.::)

  /./
  அது சைவமா? அசைவமா?
  /./

  ஒரிஜினல் அசைவம் மத்தது சைவம்.

  ReplyDelete
 14. //ஏகப்பட்ட சிறு பூச்சிகளையும்,தவளையையும்,பாம்புகளையும் கொன்று எருவாக போட்டு அந்த நிலத்தில் விளைந்த நெல் சைவமா அசைவமா சொல்லுங்கள் விவசாயி //
  தி.ரா.சா விவசாயிங்க எதையும் கொன்னு உரமா போடுறது இல்லீங்க. இந்த மாதிரி ஜந்துக்கள் செத்துப்போச்சுன்னா புதைச்சுருவோம், அப்போ அதுவே உரமாகிரும்.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)