Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்

எனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்


படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும்  'அவளைப்  பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.

படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி  குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)

சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.



காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..

போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.

இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)

VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.



ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.


பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.

நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது  எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :). 

படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது.  மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.

I love You Gautham Sir!

Friday, December 21, 2012

தமிழ் இனி - குறும்படம்


நான் பாஸ்டனுக்கு வந்த புதிது. நண்பர்கள் யாருமில்லாத நிலையில், வேறு என்ன செய்வதென்று தெரியாமல், குறும்படங்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதில 10-15 தேறியது, பிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய போது. மொத்தம் 9 கதைகள் கிடைத்தது. வசனம், திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.

இப்படியாக போய்க்கொண்டிருந்த போதுதான், சம்பந்தமேயில்லாமல் குறும்படம் “அப்பாடக்கர்”ஐ எடுத்துத் தொலைத்தேன். அது நான் எழுதிய கதைகளில் இல்லாத ஒன்று. பரீட்ச்சார்த்த முயற்சி. 

ழுதும் கதைகளை எல்லாம், நண்பர்களிடத்தில் சொல்லி “எப்படியிருக்கு” எனக் கேட்பது வழக்கம். இன்னொருவர் கோணத்தில் நிறைய மாறுதல்கள் கிடைக்கும் என்பது என் அனுபவம். இப்படி ஒரு நாள் மொத்தக் கதைகளையும் ஒரு பள்ளிக்கால நண்பனிடம் சொல்லிக்கொண்ண்ண்ண்டிருந்தேன். இருக்காதுங்களா 3 மணி நேரம், தொடர்ச்சியா கதையே சொல்லிட்டிருந்தா, அதுவும் மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா? மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே! இதுல 4 கதைகளைச் சேர்த்தா ஒரு பெரிய படம் வந்துருமே” அப்படின்னான்.

அப்பத்தான் தோணுச்சி, பயபுள்ள வெவரமாத்தான் கேட்டிருக்கான் அப்படின்னு. அப்புறம், அவன் சொன்ன கோணத்துல இருந்து ஆரம்பிச்சி திரைக்கதையை எழுதி முடிச்சிட்டேன். போன வாரம் அதே நண்பன் கூப்பிட்டான் “என்னடி மாப்ளே, பெரிய படமா பண்றேன்னு சொன்னே? குறும்படமா வந்திருக்கு”

படம் பார்த்தவுடனே ஆச்சர்யம், என்னுடைய கதையில் ஆரம்பக்காட்சி அப்படியே இந்தக் குறும்படத்தில் வந்திருந்ததுதான். அதுவும் என் படத்தின் தலைப்பும் இதுல வந்திருந்ததுதான். (உடனே காப்பி அப்படின்னு சொல்லிடாதீங்க மக்கா. வெளிநாட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தோணுற விசயம்தான் படமா வந்திருக்கு. ஒத்த அலைவரிசை.. அஷ்டே)



டடே! என்னை மாதிரியே ஒருத்தர் சிந்திச்சிருக்காரு அப்படின்னு மூச்சடைச்சுப் போயிட்டேன். டுமீலன்ஸ் அப்படின்னு ஒரு குறும்படம் எடுக்கலாம்னு ஆரம்பிச்சு Casting பிரச்சினையினால அப்படியே நின்னுப் போச்சு. அந்தக் கதையின் சாரமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ஆனால் திரைக்கதை அப்படியே வேற.. இன்னொரு நண்பர் சொன்னார், ”ஆமாய்யா அதேதான்,,, என்ன நாம பேசி ரெண்டு வருசம் இருக்குமா? என்று சொன்ன போதுதான் உரைச்சது :) நாம லேட்தானுங்களே”

மெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும்,  தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம். முக்கியமா, தமிழ் வாழ வேண்டிய தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் பாலம் என்பதை தெளிவாச்சொல்லியிருக்கு.

யக்குநர் மணிராம் - நாளைய இயக்குனர் வாழ்த்துகள்! மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள்! இந்தப்பதிவை படிக்க நேர்ந்தால் இந்த வாழ்த்தை நான் நேராச் சொன்னது போலவே எடுத்துக்குங்க.

Sunday, December 9, 2012

நவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க?

  • மது அருந்தத் தொடங்கினாள் அவள், போதையேறத் தொடங்கியது, மதுவுக்கு 
  • சனிக்கிழமை ஆனாவே பகீருங்குது. வீட்டைச் சுத்தப்படுத்தனும், கழுவனும், துடைக்கனும் #புருசலட்சணம்


  • அந்த பத்திரிக்கை எனக்கு சம்பளம் எல்லாம் தரலை. ஆனா வாழ்க்கையைவே தந்துச்சு. அதான்பா கல்யாணப்பத்திரிக்கை

  • ராத்திரி அடிச்ச ’ரம்’மிடம் தோற்றுவிடுகிறது, காலையில் அடிக்கும் அலா’ரம்’

  • எனக்கெல்லாம் சிம்பொனியாக இருந்தது, தெருமுக்கு ஆர்கெஸ்ட்ராக்கள்தான்

  • நம்மையெல்லாம் மகிழ்வித்திருந்த ஆர்கெஸ்ட்ரா என்னும் மிகப்பெரும் கலை, கம்ப்யூட்டர் இசை(?!) வந்தபிறகே அழியத்தொடங்கியது

  • கள் இரு நேரங்களில் மிகவும் அழகாகயிருக்கிறார்கள். 1. ஒன்று கட்டும்போது. 2. கேட்கும்போது #சாரி

  • பேங்கைத்தவிர மற்ற எல்லாயிடத்திலும் அக்கவுண்ட் வைத்திருப்பவனை இந்த உலகம் மதிப்பதேயில்லை

  • இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய சவால், தீவிரவாதமோ, ஊழலோ இல்லை. Its, Just Twitter and Facebook.

  • மாப்பிள்ளைக்கு Twitter & FB A/C இருக்காம். எதுக்கு பொண்ணைக் குடுத்து ரிஸ்க் எடுக்கனும். மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க

  • நவக்கிரகம் சுத்துறப்ப எல்லாம், சுத்துக் கணக்கைத்தான் எண்ணிட்டிருக்கேன். கும்புடுறதே மறந்துடுது. 1..2...3...4..

Saturday, December 8, 2012

யார் யாரெல்லாம் பரதேசி?




  • உலகத்துலியே பாதுகாப்பில்லாத ஒரே இடம் - இணையம்தான்
  • ”மாப்பிள்ளை, என் மகளோட சண்டை. கொஞ்சம் பேசி சமாதானப்படுத்துங்களேன். பேசனும் போலிருக்கு” எனும் மாமனார்- மருமகன் உறவு Blessed
  • இந்தியாவின் மிகப்பெரிய தூக்குத் தண்டனை கைதி IRCTC. தினமும் தொங்குகிறது.
  • நாம் விரும்பும் இரவுப்பொழுதையெல்லாம் உறங்கியே கழித்துவிடுகிறோம். அப்புறம், விரும்பி என்ன பிரயோஜனம்?
  • ஆமாம், அவள் வெட்டுக்கிளிதான். பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் வெட்டி வெட்டி செல்வதால்
  • பரதேசிகள் என்றால் கூட்டமாக இன்னொரு ஊருக்குப் போய் தேயிலை பறிப்பார்கள் என்றில்லை. அமெரிக்காவிலோ, துபாயிலோ கூட இருக்கலாம்
  • என்முன் அவள். வேகமாக வீசத்தொடங்கியது காற்று. விலகத்தொடங்கியது..... என் கண்ணியம்
  • குழந்தைகள் எல்லாம் “இப்ப” ராமசாமிகளாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. #இப்பவே வேணும், இப்பவே வேணும்
  • பரதேசி என்றால் ஊர் விட்டு பிழைப்பு தேடி பரதேசம் போகக்கூடியவர்கள் #அப்ப நானும் ஒரு வகையில பரதேசிதான்

Friday, December 7, 2012

அழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா?



  • இத்தனை இன்வெர்ட்டர் பேட்டரிகளையும் Re-Cycle செய்யும் வசதி இருக்கிறதாயென யோசனை செய்யாத நாம்தான் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கிறோமா?



  • வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பத்தி புதுசா கருத்துச் சொல்றதா நெனச்சுகிட்டு சொல்றது நேரங்களில் பழசாவே இருக்கு #அனுபவம்



  • குடும்பத்தலைவியாக உணர வைப்பது.. கணவன், குழந்தைகள், குடும்பம்னு நினைச்சா.. அது தப்பு ... அது பொம்மீஸ் நைட்டிகள்



  • ஆண்களே,பெண்கள் மாராப்பைச் சரி செய்யும்போது அவர்களது கண்களை கவனியுங்கள். அப்ப அவுங்க உங்க கண்களைத்தான் நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க



  • அழகாயிருக்கிற பொண்ணுங்களுக்கு மேக்கப் தேவையில்லை, அழகில்லாத பொண்ணுங்களுக்கு மேக்கப் போட்டாலும் தேறப்போறதில்லை - 1989ல் விவேக்



  • அட்ஜீஸ் பண்ணிக்கோ சார். - இது ஆட்டோக்காரர் சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனாலும் வாழ்க்கை முழுக்க அதைத்தான் பண்ணிட்டிருக்கோம்




  • இப்போதெல்லாம் ராமன்களை எந்தப் பெண்ணும் காதலிப்பது இல்லை #பழம்டீ அவன்


Thursday, December 6, 2012

லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன?


  • தொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.




  • வாழ்க்கையின் லட்சியமென்ன? கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல




  • ஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம்



  • அம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் "சகிப்புத்தன்மை"



  • அதட்டலாக சொல்லிவிட்டேன் "நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம்



  • அண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு.



  • லஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது

Wednesday, December 5, 2012

போவோமா ஊர்கோலம் Prelude -IR

சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்…? என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.



கதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்…!! ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்..!! பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…


 “இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude  மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்..!! நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..?” என்றார்.

டனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.





அப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.

- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.

’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.


Wednesday, October 17, 2012

33/365 "மின்"சாயம் வெளுத்துப்போச்சு

தமிழ்நாட்டுல மின்சாரம் இல்லையாம், அப்படியா?

சென்னை - இது தமிழ்நாட்டின் பால்கனி டிக்கெட். மீதியெல்லாம் தரை டிக்கெட் என்று வரையறுத்திருக்கிறது இந்த ஆட்சி. அதைவிடுங்க, ஈரோட்டு சூரம்பட்டிவலசு நால்ரோட்டுல நின்னு "ஏ! அமெரிக்க ஏகாதிபத்யமே" அப்படின்னு குரலுவுடற மாதிரி நானும் கொஞ்சம் ட்விட் போட்டேன். அதை அப்படியே இங்கே தொகுத்து தாரேன்




  • ஈரோட்டுக்காரனுக்கு கரண்ட்டே இல்லையாம், சென்னைக்காரனுக்கு ஏசி போடமுடியலைன்னு வருத்தமாம். ஜனநாயக நாடாயிது? 

  • சம்சாரம் அது மின்சாரம் - சம்சாரம் என்பது கடுப்படிக்கும் அப்படின்னு விசு சரியாத்தானே சொல்லிவெச்சாரு. 

  • பெட்ரோமேக்ஸ் லைட்டேத்தான் வேணுமான்னு கேட்கிறவங்களுக்கு "இருட்டுலயே எம்புட்டு நேரம்தான் இருக்கிறது?" #தநா #மின்சாரம் 

  • கேப்டன் அப்பவே பாட்டுப் பாடி வெச்சிட்டாரு "புன்னகையில் மின்சாரம்".. நாம சிரிச்சாலும் இந்தப் பெண்கள் சிரிக்கவே மாட்டேங்குறாங்கப்பா.. 

[இந்தப் பாட்டுக்கு நடனம் அமைச்சு சொன்ன போது என்ன நினைச்சிருப்பாரு நம்ம கேப்டன்னு நினைச்சிப்பாருங்க. இது நடனம் அமைச்சது யாராய் இருக்கும்?]

  • 2018 : மின்சாரம் - என்ற வார்த்தை கேட்டவுடன் ஷாக்கடித்துப்போனேன் நான். யாரது, பழையகாலத்தை நினைவூட்டுவது என..

  • வீட்டுல மின்சார தயாரிப்பது எப்படி? தெரியவேண்டுமா? எங்களிடம் வாங்க. ரூ. 19,999ல் ஒரு வார பயிற்சின்னு இன்னுமா ஆரம்பிக்கலை?

  • கருவறை இருட்டிலே உருவானோம், தமிழக இருட்டிலே வளர்ந்தோம், புதைகுழியின் இருட்டிலே அடங்குவோம். இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்?  

  • இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். தயாரிப்பாளர்: செம கதை சார், மேலே சொல்லுங்க 

  • சென்னையிலிருக்கிறவனுக்கு மட்டும் என்ன ரெண்டாயிருக்கு? - இப்படித்தான் என் கிராமத்து நண்பன் கேட்டான் #மின்சாரம் 

  • ராஜீவ்மேனன் ஒரு தீர்க்கதரிசி, 1997லேயே "மின்சார கனவு" அப்படின்னு படம் எடுத்திருக்காரே.. 

Thursday, October 11, 2012

32/365 ராஜாவுமா காப்பியடிச்சார்?

ஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து "இது ரொம்ப தப்பு" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அசிங்கம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.  உண்மைதான், புகைப்பழக்கம் என்பது தப்புதான். ஆனா அதைப்பத்தி அங்கே பேசலை.. பெண் சிகரெட் பிடிப்பதுதான் தப்பு அப்படிங்கிற மாதிரி பேச்சு இருந்துச்சு. பெண்கள் சூழ நிக்கும்போது ஆண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரி  போஸ்டர் வந்தப்ப இதையே சொல்லியிருக்கலாமே?  என்ன மாதிரியான ஆணாதிக்க சமூகம் இது.

ஒவ்வொரு தெரு முக்குலையும் பொட்டி கடை வெச்சி ஆண்கள் பீடி, சிகரெட் குடிக்கலாம், ஆனா பெண்கள் குடிக்கக்கூடாது. பெண்கள் மது குடிச்சாலும் தப்பு. மதுவோ, புகையோ - எந்தப் பழக்கமிருந்தாலும் அந்தப் பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை இருக்கே.. காமத்துலதான் முடியும். 

திருந்துங்க ஆண்களே.. கெட்ட பழக்கம், தப்புன்னு சொல்லுங்க. சரி. அது என்ன ஆண்களுக்கு மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறதுன்னு எழுதி வெச்சிருக்கா என்ன? தப்போ, சரியோ பெண்களை சரிசமமா நடத்துங்க..




டைம்பாஸ் விகடன்

விகடனின்  டைம்பாஸ் பற்றி சுரேஷ்கண்ணன் எழுதிய  பதிவு  பிடித்தது. அதுவும் இந்த வரிகள் நெத்தியடி


காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'


 ராஜாவுமா? 

ராஜாவுமா? அப்படின்னு கேள்வி கேட்க வெச்சது இந்த இசை. 20ம் நூற்றாண்டுல ஸ்பானியர்  Antonio Ruiz-Pipo - Danza No1. அப்படியே சுட்டிருக்காரு போல. இணையம் இல்லாததால, அந்தக் காலத்துல தெரியலை.. இன்னுமா தெரியாம இருக்கும்?




மின்சார கனவு
தமிழ்நாட்டுல(சென்னை தமிழ்நாடு இல்லையே, எப்பவுமே மத்த மாவட்டத்தை விட்டு தணிச்சுத்தானே இருக்கு) மின்சார நிறுத்தம் தொடர்பாக துணுக்குப் படம்








31/365 பண்ணையம் அக்-11

இந்தவாரம் வெளியான இன்னொரு டீசர்.. ஆமாங்க, போடா போடி, நீர்ப்பறவை, மற்றும் துப்பாக்கி.. 3 டீசர்கள் வெளிவந்துச்சு. அதுல செல்ஃப் எடுக்காம போன டீசர் இதுதான். மீது ரெண்டு அருமை. அதுவும் துப்பாக்கி டாப்-கிளாஸ் மாஸ் டீசர்


==00oo00==
போன வாரம் Ben & Jerry Icecream தயாரிக்கிற இடத்துக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு படம் சிரிக்க வெச்சது. நமக்கு சங்கி மங்கி தெரியும், இது என்னமோ புதுசா சங்க்கி மங்க்கின்னு ஒரு Icecreamமாம்



==00oo00==
நான் விரும்பிய என்னுடைய ட்விட்டுகளில் சில
  • கலைஞர் சட்டையை மாத்தினார். இணையம் முழுக்கா அதே பேச்சு. Now you know who the Trend Setter is


  • ''அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல; இருவரும் தி.மு.க-தான்!'' #இந்த வசனம், ஃபெவிக்கால் விளம்பரத்துக்கா தலைவா?

  • நானெல்லாம் எதுவும் கலக்காமலே, தண்ணியை ஒரு ஆஃப் அளவுக்கு அடிக்கிறவன் #குடிக்காதவர்களின் பஞ்ச்


  • அதிமுகவுல சேர்ந்துட்டா, ஒரு முறையாவது.. ஒரு வாரமாவது அமைச்சாராகிடலாம்


  • அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை. நல்லகண்ணு, வை.கோ மாதிரி இன்னும் நல்ல தலைவர்கள், சிலர் இருக்கிறார்கள்

  • கெளதம் ஒரு படத்தைத்தான் காப்பியடிச்சாரு. ALவிஜய் எல்லாப் படமுமே அப்படித்தான் பண்றாரு. ஆனா மதிக்கவே மாட்டேங்குறாங்க


  •  வெளியாகும் பாதி குறும்படங்களில் சரக்கடிப்பதே முக்கிய நிகழ்வாக காட்டப்படுகிறது. அப்படி மாறிப்போச்சு நம்மோட சமுதாயம்.


  • பனியன் போட்டு, சட்டையை அதுக்கு மேல போட்டு "டக் இன்" பண்ணிட்டுப் போறதுக்கு எதுக்கு 6 பேக்? #முடியாதவன்பேச்சு


  • குவாட்டருக்கும், ட்விட்டருக்கு ஒரு நெருங்கிய சம்பந்தமுண்டு. ரெண்டுலேயும் உள்ளே இறங்கிட்டா உளறல் அதிகமா இருக்கும்


  • சோகமான தருணங்களில் தேநீர் அருந்துவது, கொஞ்சம் கொஞ்சமாய் கவலைகளைப் விழுங்கிக்கொண்டிருப்பதாய் தோன்ற வைக்கிறது.


  • இப்போதெல்லாம், சன் / கே டிவிக்களில் ஒளிபரப்பாகும் படங்களை பார்க்கவைப்பதில் இளையராஜாவே முக்கிய பங்குவகிக்கிறார்.



==00oo00== 

இந்த வாரம் நான்கு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கு

  • ஆதிபகவன் - இயக்கம் - அமீர் / இசை - யுவன் / ஜெயம் ரவி, நீத்து சந்திரா
  • துப்பாக்கி - இயக்கம் - முருகதாஸ் / இசை - ஹாரிஸ்/  விஜய், காஜல் அகர்வால்
  • நீர்ப்பறவை -  இயக்கம் - சீனு ராமசாமி - /இசை- ரகுநந்தன் / விஷ்ணு, சுனைனா
  • போடா போடி - இயக்கம் - விக்னேஷ் சிவா/இசை - தரன்/ STR, வரலட்சுமி

==00oo00==  

ம்மணிதான் தினமும் என்னை வேலையிடத்துக்கு கொண்டு வந்து விடறதும், திரும்ப கூட்டிட்டுப் போறதும்.  வழக்கமா வர்ற கேள்விதான், இன்னிக்கும் வந்துச்சு " வேலை முடிஞ்சதா? வரலாமா?"

ஆனா, வழக்கமாயில்லாம நான் சொன்ன பதில்

தலையை லைட்டா ஆட்டி "I am waiting" அப்படின்னு சொன்னேன் #துப்பாக்கி

காரணம்???



==00oo00==

இந்த வாரம் மாற்றான் வெளியாகுது, பார்ப்போம். அது Stuck On youவா இல்லையான்னு.

Tuesday, October 9, 2012

30/365 ஜோக் மாதிரி

மின்சாரத் துறையில வேலை பார்க்கிறவரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்

ஏன்?

நாம் என்ன திட்டினாலும் கண்டுக்கவே மாட்டாங்க இல்லை?

==00o-o00==


தலைவர் ஏன் கோவமா இருக்கார்?

நாட்டுல இத்தனை ஊழல் நடக்குது, அதுல ஒன்னுல கூட அவரோட பங்களிப்பு இல்லையேன்னுதான்

==00o-o00==

தலைவரை விசாரிக்க வந்த CBIக்காரங்க ஏன் இவ்ளோ கடுப்பா இருக்காங்க?
தலைவர் அவுங்ககிட்ட"கல்லைத்தான் மண்ணைத்தான்.. காய்ச்சித்தான் குடிக்கத்தான்" அப்படின்னு வசனம் பேசினாராம்

==00o-o00==

தலைவருக்கு அவர் மனைவி மேல என்ன கோவம்?
கல்'லானாலும் கணவன் அப்படின்னு சொன்னாங்களாம்.
==00o-o00==

உங்க வீட்டுக்காரர்கிட்ட என்னடி பிரச்சினை?

உண்ணாவிரதத்துக்குப் போறேன், சமைக்க வேணாம்னார். 3 மணி நேரம் கழிச்சு வந்து சோறு போடுன்னு சொன்னா கோவம் வராதா?

==00o-o00==

முதலில் ஊறல் செய்தேன், கைது பண்ணினாங்க. இப்போ ஊழல் செய்தேன், அதற்கும் கைது செய்கிறார்கள். என்ன வாழ்க்கைடா இது.

==00o-o00==

சும்மா முயற்சி பண்ணின துணுக்குகள்.. 
Pic: Source Google Search

Monday, October 1, 2012

28/365 என்ன இங்க சண்டை

கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம். 


கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?


மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.

கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே

மனைவி :  இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?

கணவன்: கவனிக்கலைம்மா.

மனைவி :  அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?

கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை

மனைவி :  நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?

கணவன்: சரி, விடு நான் கேட்கலை.

மனைவி :  அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?

கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?

மனைவி :  அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.

கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?

மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?

கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.

மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?

கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம்  ....

[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]

Friday, September 28, 2012

27/365 உலகையே அசத்தும் சை

சை..

Psy- பேரைக் கேட்டவுடனே சைக்கோ படமோன்னு நினைச்சிடாதீங்க. இன்னிக்கு உலக மக்களை எல்லாம் கிறுக்குப் புடிக்க வெச்சிருக்கு இந்தக் காணொளி. அதுவும் இது எந்த மொழின்னே தெரியாமப் பார்த்துட்டு ஆடிட்டு இருக்காங்க மக்கள் எல்லாம். பெரும்பான்மையான எல்லா Talkshowலயும் வந்துட்டாரு சை. அதனோட காணொளி கீழே இணைச்சிருக்கேன். கொலைவெறியைவிட பெரிய வெறியா மாறியிருக்கு இந்த கக்னம் ஸ்டைல். அதிகமில்லைங்க 30 கோடி பேர் மட்டுமே(பதிவு எழுதும் போது) பார்த்திருக்காங்க.

ஒரு கிறுக்குத்தனமான ஆட்டம்தான். ஆனா ஒருத்தருக்கு புடிச்சிருச்சின்னா இன்னொருத்தருக்கும் சீக்கிரம் புடிச்சிரும்ல. அப்படித்தான் ஆகிப்போயிருச்சு..




===00oo00===


பார்த்தாச்சா, எப்படியும், நம்ம ஊர்ல Flash Mob  வந்துரும். அப்போ எப்படி ஆடுறதுன்னு யோசிக்காம, அவரே சொல்லிக்குடுக்கிறாரு, சீக்கிரம் கத்துக்கிடுங்க.




===00oo00===

ம்ம பயபுள்ளைங்க சும்மா இருப்பாங்களா? உடனே கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு. GangNam Style மாதிரியே Kingkong Styleனு ஒரு வீடியோ விட்டுட்டாங்க. அதையும் இணைச்சிருக்கேன்.

 

Tuesday, September 25, 2012

26/365 பிள்ளையாருக்கு தொப்பை ஏன்?

  • பிள்ளையார் தோப்புக்கரணம் போட்டிருந்தா வந்திருக்குமா தொப்பை?
 --00o00--
  •  ஆணித்தரமான வாதம் அப்படிங்கிறாங்களே, ஆணி தரமா இருக்கா இல்லையான்னு விவாதம் பண்றதா?
 --00o00--
  •  மம்தா பானர்ஜி மத்திய அரசிற்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டார் # Sonia: CBI எங்கே? இன்னுமா வேலையை ஆரம்பிக்காம இருக்கீங்க? 
 --00o00--
  •   தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்  
 --00o00--
  • உடல் குறைய அதிமுக’வுல சேர்ந்துடறது உத்தமம். வுழுந்து.. எந்திரிச்சு..வுழுந்து.. எந்திரிச்சு..
 --00o00--
  • பகுத்தறிவுவாதின்னா, சாமி இல்லைன்னு சொல்லனும், இந்துக்களைத்திட்டனும். மத்த மதத்தினரை பாராட்டனும்
 --00o00--
  • எனக்கென்னமோ கம்ப்யூட்டர்ல ப்ரோகிராம் எழுதி கரன்ட் கட் பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன் #சரியா போவுது
 --00o00--
  • அவனவனுக்கு ஆயிரம் கவலை, இதுல மட்டன் கடை பாய்'க்கு புரட்டாசி மாசம் வந்திருச்சேன்னு கவலை
 --00o00--
  • தெருவுல சாமி வந்தா கையெடுத்து கும்பிட்ட் காலம் போய், எல்லோரும் கைல செல்போன் எடுத்து படம் வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சிடறாங்க
 --00o00--

  • காசு வாங்கிட்டு ஓட்டுப் போடறவனுக்கு என்னத்தை மரியாதை வேண்டிக்கிடக்கு. என்னபேசினாலும் வாங்கிட்டுத்தான் ஆவனும் #பணம் #மரம்
 --00o00--
  • One important key in the Life is வீட்டுச்சாவிதான். இல்லாட்டி தெருவுலதான் நிக்கனும்
மேலேயுள்ளவை எல்லாம் நான் இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Sunday, September 23, 2012

25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -2

சி.பி.செந்தில்குமாரின் பேட்டி: பாகம் 1 
 
1) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.


===00oo00===

2) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்


===00oo00===



3) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது

===00oo00===

4) ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((

==00oo00===

5) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்

==00oo00===

6) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.

Wednesday, September 19, 2012

24/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -1

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, பத்திரிக்கை துணுக்குகளுக்காக  சி.பி. செந்தில்குமாரின் பெரிய ரசிகன் நான். அவரிடம் பேட்டி என்றதும், ஒற்றை வரியில் பதில் வந்தது.

அவரைப் பற்றி அறிமுகமெல்லாம் தேவையில்லையென்பதால் நேரடியாக கேள்வி - பதில்களுக்கு. 

உண்மையாகவே சி.பி.செந்தில்குமார் யார் என்று அறியாதவர்களுக்கு

இவர் சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்ற பெயரில் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருபவர். அவருடைய Bio பின்னொரு பகுதியில் வரும். 2000ம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் சிறந்த துணுக்கு எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.

பதிவின் முகவரி http://www.adrasaka.com




கே1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?



பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===


கே2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===


கே3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி



===00oo00===


கே4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை

நீங்களும் சி.பி.செந்தில்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம் என்றிருந்தால் மறுமொழியிடவும்

Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


  • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
     
  • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

  • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

  • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


  • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

  • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

  • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

  • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
  • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
  • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
  • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

Saturday, September 15, 2012

22/365 பண்ணையம் (14-செப்)


உலகம்: மீண்டும் லிபியா, எகிப்து மற்றும் புரட்சி நடந்த  நாடுகளில்  கலவரம். இதுவரை புரட்சியாளர்களுக்கு உதவியாய் இருந்த அமெரிக்காவை எதிர்த்து நடந்து வருகிறது கலவரம். காரணம், அமெரிக்காவில் முகமது நபி அவர்களை அசிங்கமாக சித்தரித்து வந்த ஒரு குறும்படம்தான் காரணம். அது வெளியிடப்பட்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். எனக்கு என்னமோ இது பழைய பகையை மனசுல வெச்சு வெம்பி வெம்பி இருந்த மக்களுக்கு, ஒரு காரணம் கிடைச்சதும் வெடிச்சிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். சிலரோ இல்லை,. ”இது அல்-கொய்தா ஆட்களும், புரட்சியில் தோற்ற மக்களின் ஆதரவாளர்களும்தான் காரணம்” அப்படின்னும் சொல்லிக்கிறாங்க. ஆக மொத்தம் அமெரிக்க தூதுவர்கள் எல்லாம் உசுர கையில புடிச்சிட்டு இருக்காங்க. இது ஆழமா யோசிக்க வேண்டிய விசயம். ஒரு குறும்படத்துக்கு எதிர்க்கிறாங்க, அப்படின்னா மக்களின் உணர்வை என்னவென்று சொல்வது. அதுக்கு அமெரிக்கா எப்படி காரணமாக முடியும்? தூதுவர்களயும், பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்னிருக்காங்க. ”தூண்டிவிட்டா எதையும் செய்யும் ஆட்டு மந்தை மக்களா புரட்சி பண்ணினாங்க?” அப்படின்னு நினைக்கிறா மாதிரி வெச்சிட்டாங்க :( ப்ச்ச்

குறும்படத்தைத் தேடாதீங்க. அப்படி ஒரு சுவடே இல்லாம பண்ணிடாங்க. இதை இயக்கியது யார், நடித்தவர்கள் அப்படிங்கிற சுவடுமே இல்லாம செஞ்சிட்டாங்க.

=============================================================

இந்தியா: மீண்டும் ஒரு டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு அறிவிச்சிருக்காங்க. டீசல் விலை ஏத்துறதுதான் நாட்டின் விலையேத்தத்துக்கு அடிப்படை அப்படின்னு தெரிஞ்சே ஏத்துறாங்கன்னா மத்திய அரசு இதைத்தான் எதிர்பார்க்குதா? இதுல சில்லறை வணிகத்துலயும் அந்நிய முதலீடாம்.சேதி கேட்ட மூணாவது நிமிசம் முக்கு கடை அண்ணாச்சி விலையேத்திட்டாரு, பழசாயிருந்தாலும், சம்பந்தமேயில்லைன்னா ஆட்டோக்காரங்களும் “பெட்ரோல் விலையேறிருச்சு சார்” அப்படின்னு இன்னும் ஒரு ரூ.10 சேர்த்தி கேட்பாங்க, அடுத்து பேருந்து கட்டணம் ஏறும்..

***தா, என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? 


=============================================================

தமிழகம்: கூடங்குளம், இந்த முறை, அல்லது கடைசி முறை அப்படின்னு சொல்லலாம். போராட்டம் வெடிச்சிருக்கு. இரண்டு பக்கத்துலையும் சீற்றம் அதிகமாவே இருக்கு. வழக்கம் போல இணையபுலிகள் ஒரு சாரார் அணுமின் நிலையம் வேணும்னும், வேணாம்னும் அங்கங்கே சண்டை போட்டுக்கிறாங்க. ஆனா, செயல்படுத்த ஆரம்பிச்ச பின்னாடி மத்திய அரசு போயிட்டே இருக்கும். நம்ம ஆட்கள் போராடினா மதிக்க மத்தியில இருக்கிறது என்ன இங்கிலீஷ்காரனா? இந்தியன்தானே. உசுருக்கு இந்தியா எப்ப மதிப்பு குடுத்திருக்கு?

=============================================================

iPhone5 - அறிவிச்சவுடனே, பலத்த எதிர்ப்பு வந்துச்சு. மாத்தாத வடிவமும், புதுசா தொழில்நுட்பம் எதுவுமே இல்லைங்கிறதாலும் எனக்கும் புடிக்கலை. இணைய மக்களிடம் பலத்த ஏமாற்றம். ஆனால், நடந்ததோ வேற..

Pre-orders for the iPhone 5 went live at midnight and, true to form, they went like hotcakes. You may remember that it took 22 hours for the iPhone 4S and about 20 hours for the iPhone 4 to sell out of its pre-order, launch-day stock. The iPhone 5 took just about 60 minutes. 

Yep. One hour after pre-orders went live, Apple.com adjusted shipping expectations from one to two weeks due to the overwhelming demand

 Thanks http://techcrunch.com


=============================================================

கேட்டதில் பிடித்தது: ஆஸ்திரேலிய தமிழ் வானொலியில்   நம்ம கானா பிரபா, ரகுமான் பற்றிய நிகழ்ச்சிக்காக எழுத்தாளர் திரு. சொக்கன் அவர்கள் ரகுமான் கடந்து வந்த 20 ஆண்டுகள் பற்றி அளித்த பேட்டி, கேளுங்க. 


=============================================================



பார்த்ததில் பிடித்தது: நெற்றிக்கண் படத்துல வந்த அதே காட்சிகளை Re-Mix பண்ணியிருக்காங்க. புதுசா எதுவுமில்லைன்னாலும், ஆரம்பிச்சது  பொண்ணுங்க பக்கம் என்பதால் கொஞ்சமே வித்தியாசம்...

Cafe-Coffee day - குறும்படம் 

Thursday, September 13, 2012

21/365 இத்தாலியர் தேடிய இளையராஜா

Wednesday, September 12, 2012

20/365 தெய்"Weak"கக் காதல்

  • மனோ நிலை அப்படிங்கிறாங்களே, ஏன் SPB நிலை, யேசுதாஸ் நிலைன்னு இல்லை..? 
 --00o00--
  •  Cat வாக் அப்படின்னு சொல்லிட்டு துணி போட்டுகிட்டு நடந்து வராங்க.. எந்த பூனை துணி போட்டுகிட்டு நடக்குது?
 --00o00--
  • கூடங்குளம், 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும். - மத்திய மந்திரி நாராயணசாமி #டீ தூள் பழசாவே இருக்கே, மாத்த மாட்டீங்களா?
 --00o00--
  •  இளையராஜா - ஐபோன். ஏ.ஆர்.ரகுமான் - அண்ட்ராய்ட் போன். நான் LandLine. எதுல இருந்து Call வந்தாலும் பேசுவேன்.
 --00o00--
  • புல்ஸ்கேப் நோட்டை மாரோட அணைச்சுட்டு வருகிற அதே பாணியைத்தா இப்பவும் பெண்கள் செய்கிறார்கள். ஆனா நோட்டுக்குப் பதில் iPad, Laptop
 --00o00--
  • பிரபாகரன் அறிமுகமாகும் படத்திற்கு பொருத்தமான தலைப்பு “கேப்டன் மகன்”
 --00o00--
  •  என்னுடைய முதல் படத்தில் இருந்தே ****டன் வொர்க் பண்ண ஆசை.- Default Template for Directors.

 --00o00--
  • நமக்கெல்லாம், பெண்கள் கதாநாயகிகளாகவும், ஆண்கள் எல்லாம் காமெடியன்களாகவும் தெரியும் மாநிலம், கேரளம் மட்டும்தான் #ஓணம்
 --00o00--
 

  •  பயத்திற்கும், பாசத்திற்கும் இடையில்தான் ஊசலாடுகிறது அப்பா-மகன் உறவு
 --00o00--
  •  பிரியும் வேலையில்தான் புரிகிறது "நாம இன்னும் கொஞ்சம் அன்பை காட்டியிருக்கலாமோ?" என்று
 --00o00--
  • ஆரம்பத்தில் தெய்வீகக் காதலாக இருப்பதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு தெய்”வீக்” காதலா மாறிடுவதுதானே வழக்கம்

 --00o00--
  •  "இன்னிக்கு சாயங்காலம் என்ன சமைக்கிறது?" - இந்தக் கேள்விக்கு முதல் நிமிசத்தில பதில் சொல்லிட்டான்னா அவன்தான் உண்மையான புருசன்
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் , ஆங்காங்கே நான்  இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Tuesday, September 11, 2012

19/365 செப்டம்பர் 11ல் இன்னொரு சம்பவம்

த்தட் த்தட் த்தட்..

வேகமாக கதவு தட்டப்பட்டது.

”இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? இப்பத்தானே வேலைக்குப் போனாரு, அதுக்குள்ளேவா வந்துட்டாரு?” என்றபடி கதவைத் திறந்த நவீனாவுக்கு ஆச்சர்யம். ஒருவர் நின்றிருந்தார், முன்னே பின்னே பார்த்திராத ஆசாமி. அஃப்சலை பார்க்க வந்திருப்பாரோ என நவீனா எண்ணியபோது...

 “குட்மார்னிங் மேடம். எப்படி இருக்கீங்க? அக்பர் இருக்காரா?”

“ஆமா, அவருடைய அறையில தூங்கிட்டு இருக்காரு, எதுக்காக கேட்குறீங்க?”

”நாங்க ****லிருந்து வந்திருக்கோம். தொந்தரவுக்கு மன்னிக்கவும், வழி விடறீங்களா?” என அடையாள அட்டையைக் காண்பித்தபோது தெருவிலிருந்து  நிறைய Cops, Bullet Proof Jacket அணிந்த படி திமு திமுவென வீட்டினுள் நுழைந்தார்கள்.

”எங்கே இருக்காரு?” என ஒருவர் கேட்க

“மேலே வலது பக்கம் மூன்றாவது அறை”

அனைவரும், கையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டார்கள், நவீனாவுக்கு ஏதோ விபரீதம் என்று அப்பொழுதுதான் புரிந்தது. அதே நேரத்தில் “அக்பர் நாங்க உங்களை கைது செய்ய வந்திருக்கோம். ஒத்துழையுங்கள். கதவைத் திறங்க”

....

சத்தமே இல்லாமல் ஒரு நிமிடம்.

”அக்பர்! மீண்டும் சொல்றோம், தேவையான அனைத்து ஆதாரங்களும் இப்ப எங்ககிட்ட இருக்கு. நீங்க ஒத்துழைங்க, ப்ளீஸ்”

.....

அடுத்த நிமிடம், அனைவரும்ம் துப்பாக்கியை தயாராக்க ஆரம்பித்தனர். unlock சத்தம் பட், பட் என வராந்தா முழுதும் எதிரொலித்தது”

டமார்.. கதவை உடைக்க ஆரம்பித்தனர்.. மூன்றாவது உதையில் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது.  
அக்பர் கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு வியப்பு. அமைதியாக கட்டிலில் கலக்கத்தோடும், குழப்பத்தோடும் உட்காந்திருந்தார்.  இரவு உடையிலிருந்து ஏற்கனவே வேறு உடைக்கு மாறியிருந்தார். இந்தக் கோலத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

கைது செய்ய ஏதுவாக அவரே முன்வர, அவரின் கைது படலம் எந்தவித அசம்பாவிதமுமில்லாமல் நடந்தேறியது.




வழக்கு பற்றிய விவரங்களுக்கு  


ரு காலத்துல மேயர் குடியிருந்த, அரசுக்குச் சொந்தமான வீடு, அரண்மனை மாதிரி. இப்படித்தான் அந்த வீட்டைப் பத்தி நான் முதலில் கேள்விப்பட்டது. 6 படுக்கையறைகள், 1000 சதுர அடிக்கும் குறையாத Dinning Hall, அதே  அளவில் Living Room, Kitchen. பிரமாண்டத்தை அங்கேதான் பார்த்தேன். 

நான் நியூஜெர்சிக்கு வந்தவுடன் நான் குடியிருக்க வீடு தேடியதில் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீடு அதுதான். இருங்க, தப்பா கணக்குப் போடாதீங்க. வீட்டுக்குச் சொந்தக்காரர்(அக்பர்) இந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடிய போது, நான் வீடு தேடியதும் ஒரே நேரத்தில் நடந்ததால் குறைந்த வாடகைக்கு ஒரு அறையில் தங்கிக்கொள்ள அனுமதியளித்தார். அத்தனை வசதிகளும் அந்த வீட்டில் உண்டு. Fully Furnished, Yes.

வர் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நாங்கள் 1st Floor(இந்தியவில் Ground Floor) தங்கிக்கொள்ளலாம். Fully Furnished Basement உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடைப்பந்து, தோட்டம் எல்லாம் அனுபவித்துக்கொள்ளலாம். அவர் எப்பவாவது வருவார், மாடியறையில் தங்கிக்கொள்வார். அவர் கேட்டுக்கொண்டது இந்த ஒன்றே ஒன்றைத்தான். நாங்களும் குடிவந்தோம், 13 கார்கள் நிறுத்த இடமிருந்து கார் இல்லாமல் இருந்தேன். காரணம், தேவைப்படவில்லை. தேவைப்பட்டால் தெய்வம் போல உதவ கே.ஆர். எஸ் இருந்தார்.

அரண்மனையில் குடியிருக்க ஆரம்பித்தவுடன், Basement மற்றும் மேலேயிருந்த படுக்கையறைகளை வாடகைக்கு விட ஆரம்பித்தார், அதுவும் நாங்கள் வந்து 6 மாதம் கழித்து. சமையலறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். பொறுத்துக்கொண்டோம், காரணம்? எங்களுக்கும் அவ்வளவு பெரிய வீட்டில தனியா இருக்க சற்றே பயம் இருந்ததும்தான் காரணம்.


செப்-11-2008: நான் அலுவலகம் வந்து வேலைகள், சந்திப்புகள் முடிந்து 11:30 மணி வாக்கில் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு. "வாங்களேன், காப்ஸ் வந்திருக்காங்க. சோஷியல் கேட்டிருக்காங்க, உங்க கிட்ட பேசனுமாம்" என்று பதட்டமான குரலுடன் அம்மணி அழைத்தவுடன் அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.


ஒரு பெரிய காவல்துறைப் பட்டாளமே அங்கே இருந்தது. தன்னை இந்தக் குழுவிற்கு முதன்மையானவர் என்று தன்னை தன் அடையாள அட்டையுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி, வழக்கின் காரணங்களை கூறிவிட்டு எனக்கு இதில் எந்தளவுக்கு பங்களிப்பு இருக்கலாம், அதற்கான கேள்விகளைக் கேட்கப்போவதாக கூறிவிட்டு  5/6 கேள்விகள் கேட்டார். பதில்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், "உங்களுக்கான விசாரணை அவ்வளவுதான், இனி இந்த வீட்டில தங்குவது உங்களிஷ்டம் என்றும், அதனால் காவல்துறையினரால் எந்தப் பிரச்சினையும் வராதென்றும் உறுதிசெய்துவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் அக்பரின் மகள் வந்தபோது, அழுகையினூடாக அவர் சொன்னது. ”எங்கப்பா எந்தத் தப்பும் பண்ணலை , அவர்னால உங்களுக்குத் தொல்லை ஏற்பட்டிருந்தா மன்னிக்கவும்” என்று முடிக்கும் போது மாலை மாலையாகக் கண்ணீர். பாவம், பள்ளிக்கூட பெண்ணுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும். அம்மாவும் சிறையில், அப்பாவும் சிறையில். 5 பெண்கள், ஒரு சின்னப் பையன். இதுதான் அவர்களது குடும்பம்.

பிறகு 20 நாட்கள் அந்த வீட்டில் குடியிருந்தோம், இல்லை,, இல்லை அடுத்த நாளே வீடு தேட ஆரம்பித்தோம். காரணம், அக்பருக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு உரிமை எடுத்துக்கொண்ட வந்த ஒரு அம்மாவின் அடாவடித்தனமே எங்களை காலி செய்ய வைத்தது.

பி.கு: அக்பரும், அவரது மனைவியும் இரு மாதங்களில் விடுவிக்கப்பட்டனர். இன்றும் செப்-11 என்றால் அக்பருக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது

Monday, September 10, 2012

18/365 கூ"DUNG"குளம்

இந்த ஒரு படமே போதும்,

மக்களின் வாழ்வாதாரத்தை கொன்றுவிட்டு, வேறு மக்களுக்கு வசதி வாய்ப்பளிக்கும் அரசுக்கு வந்தனங்கள்

Sunday, September 9, 2012

17/365 கிழிஞ்சது கிருஷ்ணகிரி

குவின்ஸி ஒரு வீட்டின் ஓரத்தில் கவனிப்பாரற்று கிடக்கும் டிராக்டர்




பாஸ்டன் -Commons படகு சவாரி



இச்சு இச்சு இச்சு கொடு..




கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு சொல்றோமே, கிழிஞ்ச கிருஷ்ணகிரி 
எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா?


[All Photos Shot in iPhone-4]

Saturday, September 8, 2012

16/365 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

இது இணையத்தில் கண்ட ஒரு படம், இந்த வார சினிமா கேள்வியில், ஒரு தமிழ் படத்தில் இதைப் போல தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளுமாறு தலைப்பில் படம் வந்திருக்கும்.

கேள்விகள்:
  1. அது என்ன படம்
  2. படத்தை இயக்கியவர் யார்?
  3. கதாநாயகி யார்? 

Friday, September 7, 2012

15/365 அமெரிக்காவின் ஹோலி

இப்போ http://thecolorrun.com அமெரிக்காவுல ரொம்ப பிரபலமாகிட்டு வர்ற ஓட்டம். மாராத்தானுக்கு எல்லாம் 3 மாசம் தவமிருக்கனும், இது அப்படியில்லை,  அதுவுமில்லாம.. இருங்க அதை கடைசியில சொல்றேன்.




துல என்ன பண்ணனும்.  மொத்தம் 5 கிமீ ஓடனும். (என்னடா இது அமெரிக்காவுல மைல் கணக்குத்தானே, கிமீ கிடையாதே) முதல் கிமீட்டருக்கு எல்லாரும் மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. அதாங்க. வண்ணத்தை பொடியிலும் Squirt Pipeலேயும், அவுங்களே குடுப்பாங்க. அதை வாங்கி நாம மத்தவங்க மேல அடிக்கனும். அதான் விளையாட்டே. (பொடி சாப்புடறளவுக்கும் இருக்காம்).  ரெண்டாவது கிமீ போனவுடனே பச்சை வண்ணம். மூனுல நீலம், நாலாவது ஊதாவும், கடைசி மற்றும் அஞ்சாவதுல இளஞ்சிவப்பும் குடுப்பாங்க. வண்ணத்தை எல்லாம் நம்ம ஊர்ல ஹோலி கொண்டாடும் போது என்ன பண்ணுவோமோ அதையேதான் செய்யனும்.




க மொத்தம் அஞ்சாவது கி.மீ முடிக்கையில வண்ணமயமா வரனும். இதான் இந்த விளையாட்டோட அடிப்படை. Fat Nation அப்படின்னு சொல்ற அமெரிக்காவுக்கு இது மாதிரி நிறைய ஓட்டங்கள் தேவைப்படுது. அதுவுமில்லாம இந்தியர்கள் அதிகம் பங்குபெறுகிற ஹோலியில இருந்து இதை உருட்டினதால வட-இந்தியர்களின் பங்கெடுப்பும் அதிகமா இருக்காம்.
இருக்காதா பின்னே?



ம்மூர்ல மஞ்சத்தண்ணி ஊத்துறது, அப்படின்னு ஒரு விளையாட்டு இருந்துச்சே தெரியுங்களா? நம்ம ஊர்ல இருந்த ஹோலியை, அமெரிக்காவுக்காக ஓட்டம்னு  மாத்தி கொண்ட்டாட்டமா மாத்தி ஓடறாங்க. நாம் தீவாளி, பொங்கல்னு இருக்கிற கொண்டாட்டத்தையே மறந்துட்டு , வெளியில கொண்டாடுவதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ள அடைய ஆரம்பிச்சிருக்கோம், அமெரிக்காவோ உள்ளேயிருந்து வெளியே வர முயற்சிக்கிறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது? உலகம் உருண்டைங்கிறதுதான்.



[படங்கள் and Info from : http://thecolorrun.com]

Thursday, September 6, 2012

14/365 நீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா?

ள்ளிக்கூடத்துல படிக்காத மாணவர்களைப் பார்த்து அதிகம் சொல்லப்படுவதுதான் இது "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு". எந்த ஆசிரியருக்காவது  தெரியுமா, மாடு மேய்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு?

ங்க ஐயன், மாடு மேய்ச்சிதான் ஆசிரியர் ஆனார். அந்தப் பரம்பரையில் வருவதாலும், நானும் மாடு மேய்ச்சிருக்கேன் என்பதாலுமே கேட்கிறேன் மாடு மேய்க்கிறது அவ்வளவு சுலபமா?

  1. உங்களுக்குத் தாளி வெக்கத் தெரியுமா? தவிடும் ,தண்ணியும் கலந்து  காலையில பால் கறக்கிறதுக்கு முன்னாடியே வெச்சிடனும், காளை மாடுன்னாலும். நான் சொல்றது 5 மணிக்கு முன்னாடி, எழுந்திருச்சிருவீங்களா?
  2. சாணி அள்ள முடியுமா?  அதுவும் காலையில ஒரு தரம், சாயங்காலம் ஒரு தரம்னு ரெண்டு தரம் சாணி அள்ளனும். அள்ளுவீங்களா?
  3. மூக்கனாங்கயிறு முடிச்சு போடத் தெரியுமா?
  4. கொம்பு சீவி விடத் தெரியுமா?
  5. கட்டுத்தாரையை கூட்டி அள்ள முடியுமா?
  6. மாட்டுக்கு கொசு கடிக்காம இருக்க, சும்மா ஏஸி ரூம்புல குட்-நைட் தட்டற மாதிரி இல்லீங்க. நாய்த்துளசியைத் தேடிப் புடிச்சாந்து, பொவப் போட்டு கொசுவை ஓட்டனும், முடியுமா?
  7. வாரத்துக்கு ஒரு தபா தண்ணியூத்தி வுட முடியுமா?
  8. காளை மாடுன்னா 6 மாசத்துக்கு ஒரு தடவை லாடம் கட்டனும், (பசு மாடுன்னா வருசத்துக்கு ஒரு தபா "ஜிங் சாக்" பண்றதை வேடிக்கைப் பார்க்கலாம்.)
  9. பருத்திக்கொட்டையும், புண்ணாக்கும் சரியான நேரத்துல வெக்க முடியுமா?
  10. தீனி வெச்சாலும் மாடு மேய்க்க ஓட்டிப்போவனும், ரெண்டு மாட்டை ஒன்னா மேய்க்க வெக்கவே முடியாது, இதுல பத்து, பதினைஞ்சு இருந்தா டவுசர் அவுந்துரும்.
  11. மாட்டுக்கு ஏதாவது ஆச்சுன்னா உடனே மருத்துவரைக் கூட்டியார முடியுமா?
  12. இதை எல்லாத்தையும் விடுமுறை இல்லாம 7 நாளும், வருசம் முழுக்கவும் செய்ய முடியுமா?


[எங்க மாடு]

னிமே மாடு மேய்க்கத்தான் லாயக்கு அப்படிங்கிறவங்ககிட்ட இதைக் கேட்டுடுங்க....இதெல்லாம் முடியும்னா நீங்க மாடு மேய்க்கவே போலாம், அப்படின்னும் சொல்லிடுங்க.

மாடு மேய்க்கிறதுன்னா சும்மா இல்லீங்க, ரெம்ப கஷ்டம்

13/365 பிரியும் பிஞ்சு மனசுகள்

நண்பனின் மகனுக்கு 6 வயது. இன்னொரு நண்பனின் மகனுக்கு 5 வயது. இருவரும் உற்ற தோழர்கள். அமெரிக்காவில் ஒரு குடும்பமே நட்பாய் இருப்பது என்பது அபூர்வம். அதாவது அப்பா- அப்பா, அம்மா-அம்மா, மகன் - மகன்.

மகன்கள் இருவருமே விட்டுக்குடுக்க மாட்டார்கள், அப்பா என்ன சொன்னாலும் “இல்லேப்பா, அவன் சொன்னான் சரியாத்தான் இருக்கும்” என்று சின்ன வயசே ஆனாலும் இருவருக்குமான நட்பு அப்படியாகத்தான் இருந்தது. போன வாரம் வரையில். ஆமாம், ஒரு குடும்பம் For Good இந்தியா கிளம்ப, பசங்களுக்கும் ஒரு குடும்பம் இந்தியா போவதாகச் சொன்னாங்க. பசங்க ரெண்டு பேருக்குமே அதனோட விபரீதம் புரியல, ஊருக்கு போயிட்டு வந்துடற மாதிரி நினைச்சிகிட்டே இருக்காங்க.

போனவாரம், பிரிஞ்சுப் போற குடும்பத்துக்காக, ஒரு Get toghether நடந்துச்சு. எல்லார் முகத்துலையும் கவலை தாண்டவமாடுது. பல வருடங்கள் பழகிய நட்பு, பிரியப் போவுதேங்கிற கவலை. பரிசுப் பொருட்கள் கை மாறுது. ஆனாலும் பசங்க எப்பவும் போல விளையாடுறாங்க, அடிச்சுக்கிறாங்க.

கிளம்புற நேரத்துல, எல்லாருக்கும் கண்ணுல தண்ணீர் வராத குறை, பசங்களுக்கு அது புரியவே இல்லை. “எப்போப்பா அவன் வீட்டுத் திரும்ப வருவோம்?” அப்படின்னு ஒரு பையன் கேட்க பதில் சொல்ல முடியாம அப்பா முழிக்கிறாரு. ரெண்டு பசங்களும், வழக்கம் போல, ”அப்புறம் வரேன், உன்னோட இந்த பொம்மை எடுத்துட்டுப் போறேன், அப்புறம் தந்துடறேன்” இப்படியே பேசிட்டு கிளம்பிட்டாங்க. அவுங்களுக்குத் தெரியலை, பசங்க சந்திக்கப்போறது இதுதான் கடைசின்னு.

நான், இந்தப் பசங்களைப் பார்த்துதான் ரொம்ப சோகமானேன். விவரம் தெரியாத வயசுல, ஒருத்தன் பிரிஞ்சு போறான்னு தெரியாம, விளையாண்டு, பை பை சொல்லிட்டுப் போறாங்க. வாழ்வுக்காக எத்தனையோ பேரை பிரியறோம். ஆனா பிரிச்சும் வைக்கிறோம்ங்கிறது எத்தனைப் பேருக்குத் தெரியுது?

நம்மோட வாழ்க்கைக்காக பிரியும் இந்த பிஞ்சு மனசுகளோட பாவத்துக்கு யார் பொறுப்பு?

Tuesday, September 4, 2012

12/365 கலவி, கல்வி, ஒரே புள்ளி

இது ஒரு நாகரிகமான பதிவு அல்ல. 18 வயசுக்கு மேலேயே இருந்தாலும் இதை மனசுல வெச்சிக்குங்க. மன்னிச்சுடுங்க. இதுக்குமேலேயும் படிக்கனும்னா படிங்க.

  • என்னதான் அப்பா-அம்மா விளையாட்டுல பெரிய வீரனாய் இருந்தாலும், Sports Quota வுல வேலை எதுவும் கிடைக்காது

  • காமத்துக்கு அ'னா, ஆ'வன்னாவைத் தவிர வேற எழுத்துக்களும் தெரியாது, மொழியும் தெரியாது

  • கலவி, கல்வி - இரண்டுக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். ஆனால், இரண்டுமே பள்ளியிலேயே சொல்லித்தரப்பட வேண்டும்

  • கிரிக்கெட்டுக்கும் ‘அது’க்கும் என்ன சம்பந்தம் ? இரண்டிலும் பேட்ஸ்மேன், “நின்னு” விளையாடனும், சீக்கிரமே அவுட்டாகக் கூடாது

  • ஸ்கிரீன்ப்ளேவுக்கு ஃபோர்ப்ளேவுக்கு சம்பந்தமிருக்கு. இரண்டையும் ஒழுங்கா பண்ணிட்டா படம் ஒழுங்கா வர 75% வாய்ப்பிருக்கு.

  • எல்லாச் சாவிகளுக்கும் பூட்டுக்கள் திறந்துவிடுவதில்லை. ஆனால் சில சாவிகளுக்கோ பிரதி இருப்பதில் ஆச்சர்யமில்லை

  • செஸ் விளையாட்டில் யாரும் "டிரா" என்னும் முடிவை விரும்புவதில்லை #எழுத்துப்பிழை

மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது.A+ என்ற கணக்கில் சேர்த்துவெச்சதுதான் இவையெல்லாம்.


சொந்த சரக்கை பார்த்துட்டீங்க, இனிமே அடுத்தவங்க சரக்கு.

இந்தப் பசங்க இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் அப்படிங்கிற பேருல யூட்யூப்ல பிரபலமானாங்க, முடிந்தவரையில் கெட்ட வார்த்தை போட்டு படம் போட ஆரம்பிச்சாங்க. அவுங்களோட காணொளியில இதுவும் ஒன்னு.


 

Monday, September 3, 2012

11/365 தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடமும், கெயிட்டி தியேட்டரும்

தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடம் காரைக் காலை அடுத்த தரங்கம்பாடியில், 1712ல் அமைக்கப் பட்டது. டச்சுக்காரர்கள் அமைத்த இந்த அச்சகத்தில் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்டது. இது, அச்சு எழுத்துக்கள் வார்க்கும் வார்ப்பட சாலையும் கூட. (இந்தியாவிற்கு இதற்கு முன்னரே அச்சகம் வந்து விட்டது. கோவாவில், 1556ம் ஆண்டு ஏசு சபையினர் ஓரு அச்சகத்தை நிறுவினர்!)



அச்சுத் தொழில், முற்றிலும் கிறிஸ்தவ பாதிரி களின் கைகளில் இருந்தமையால், எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ்நாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர், அவர்கள் வெளியிட்ட கிறிஸ்தவ சமய நூல்களை, "பரங்கிப் புத்தகங்கள்' என்று தூஷித்து, கையால் கூட தீண்டுவதில்லை. கிறிஸ்தவ சமயப் பரப்பிகள் தம்முடன் கொண்டு வந்த, காகிதம் செய்யும் கலையையும் நம் நாட்டு மக்கள் இழிவானதும், தீட்டுப்படக் கூடியதுமான தொழில் என்று ஒதுக்கி விட்டனர். உலகில் முதலில் மரப்பட்டைகள், பின்னர், கன்றுக் குட்டியின் தோல், அப்புறம் பட்டுத் துணி, பிறகு ஒருவித நாணலில் செய்த, "பரப்பிரஸ்' என்ற தாள் முதலியன எழுது பொருள்களாக இருந்து வந்தன. சீனர்கள் கி.பி., 105ம் ஆண்டில் காகிதம் செய்யக் கற்றுக் கொண்டனர். பட்டுத் துணியில் எழுதி வந்த சீனரிடையே, காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் எங்கும் பரவி விட்டது.
அராபியர்கள், சீனரிடமிருந்து அந்தத் தொழிலை, கி.பி., 751ம் ஆண்டில் அறிந்தனர். அதன்பின், காகித உற்பத்திக் கலை உலகெங்கும் சிறுக, சிறுகப் பரவியது. ஐரோப்பியர் அதை அராபியரிடமிருந்து, 12ம் நூற்றாண்டில் தான் கற்றனர். கன்றின் தோல் மறைந்து காகிதம் தயாரிக்கப்பட்டது.
இந்தியர்களாகிய நமக்கு, சீனருடன் கிறிஸ்தவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பிருந்தே உறவு இருந்தது. பல்லவரும், சோழரும், சீனர்களுடன் தூதுவர் உறவு கொண்டிருந்தனர். அதுபோலவே அரபிகளுடனும் நமக்கு நெடுங்கால உறவு உண்டு. ஆனால், நாம் இவ்விருவரிடமிருந்தும் காகிதம் செய்யும் தொழிலை ஏன் அறிந்து கொள்ளாமல் போனோம்? 19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் ஏன், ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்ந்திருந்தோம்?
கிறிஸ்தவ பாதிரியார்கள், பழைய கந்தல் துணிகளைக் கூழாக அரைத்து காகிதம் செய்தனர். நம் ஆச்சார மக்கள், இது, சமய ஆச்சாரங்களுக்குப் புறம்பான இழி தொழில் என்று கருதி, தள்ளி விட்டனர். (பழைய கந்தல் துணிகளில் கீழ் ஜாதியினர் பயன்படுத்திய துணிகளும் அடங்குமே என்பதால்!)

— ப.சிவனடி எழுதிய சரித்திர நூலிலிருந்து...

தென்னிந்திய சினிமா வரலாற்றில், முதல் இருபது ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை. இன்று விரிந்து, பரந்து வளர்ந்துவிட்ட இந்த சினிமாத் துறையை - தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால், காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல் இருபது ஆண்டுகளில் வளர்ந்தது எனலாம். மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
சென்னை மவுண்ட் ரோடில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவரை, வேகமாகப் பரவி வந்த சலனப் படத்துறை ஈர்த்தது. சென்னையில் இரண்டு நிரந்தரக் கொட்டகைகளும், பல டூரிங் சினிமாக்களும் வெற்றிகரமாக சலனப் படங்களைத் திரையிட்டுக் கொண்டிருந்தன. இவரும் ஒரு குரோனா மெகபோன் (கிராமபோன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட புரொஜக்டர்) ஒன்றை வாங்கி, விக்டோரியா பப்ளிக் ஹாலில் படங்களைத் திரையிட ஆரம்பித்தார். அவை, 500 அடி நீளமே கொண்ட அமெரிக்கத் துண்டுப் படங்களே. படம் திரையில் விழ ஆரம்பித்ததும் ரெகார்டு சுழல ஆரம்பித்து, ஒலி பிறக் கும், படங்கள் பேசுவது போன்ற பிரமை ஏற்படும்.

வசூல் நன்றாகவே ஆனது. பிறகு இவர் இலங்கைக்கும், பர்மாவிற்கும் சென்று, படங்களைத் திரையிட்டார். கணிசமான தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தரக் கொட்டகையைக் கட்டி சென்னையிலேயே தங்க முடிவு செய்தார்.

மவுண்ட் ரோடில், 1913ல், "கெயிட்டி' தியேட்டரைக் கட்டினார். முதன் முதலாக இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கு தான் கடைசி வரை தியேட்டர்களில் எல்லாம் மூத்தது. அது மட்டுமல்ல, முதலில் வைத்த பெயரே நிலைத்திருந்தது.
— தியோடர் பாஸ்கரனின், "தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து...

Source & Thanks : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7733&ncat=2

Sunday, September 2, 2012

10/365 கிறுக்கியது யாரு? சினிமா Quiz

இன்று தினமலரில் வந்த செய்தி.

ஈரோடு : விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.ஓ., விவசாயிகள் பிரச்னை என்னவென்று கேட்காமல் மெய்மறந்து அருகில் இருந்த தாளில் படம் வரைந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்த விவரம வருமாறு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஈமு கோழி பிரச்னை, கரும்புக்கு நிலுவை பணம் பாக்கி, பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு... என, விவசாயிகள் தங்கள் தரப்பு குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்தவர், டி.ஆர்.ஓ., கணேஷ். இவர் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார்; விவசாயிகள் பேசுவதைத்தான் டி.ஆர்.ஓ., குறிப்பு எடுக்கிறார் என நினைத்து, அருகில் போய்ப் பார்த்தால், பச்சை மை பேனாவால், அவர் மும்முரமாக படம் வரைந்து கொண்டிருந்தார் !

நன்றி: தினமலர் 

இருங்க, இது மாதிரி அடுத்தவங்க ஏதாவது பேசும் போது படம் பக்கத்துல இருக்கிற காகிதத்துல படம் வரையறதை ஏதோ தப்பு போல செய்தி வெளியிட்டுருக்கும் தினமலருக்கு எதிரான பதிவு இல்லை  இது..

திவு என்னான்னா, இதே மாதிரி ஒரு சினிமாவுல ஒரு வில்லன் இதைப் போலவே செய்வார். அது ஒரு துப்பா மாறி வில்லனைக் காட்டிக்குடுத்துடும். கேள்விகள்
1. அது என்ன படம்?
2. படத்துல வில்லனாய் கிறுக்கி மாட்டிக்கொள்வது யார்?
3. படத்தின் கதாநாயகன் யார்?

Saturday, September 1, 2012

9/365 வேகத்திற்கு உதவிய காவல்துறை

யோசனைப் பண்ணிப்பாருங்களேன், ஒரு காரை 30 மைல் வேகத்துல ஓட்டிட்டு இருக்கீங்க. அமைதியா, ஆர்ப்பாட்டமில்லாத சாலை, மனதிற்கேற்ற இசை, கையில காபி இப்படி அழகா போயிட்டு இருக்கிற ஒரு பயணத்துல, திடீர்னு காரே வில்லனாய் மாறி, உங்க பேச்சு கேட்காம அதுபாட்டுக்கு ஓடினா என்ன ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

போன வாரம் அப்படித்தான் ஒரு சம்பவம் ஆச்சு. அமெரிக்கா  ஐயோவா மாநிலத்துல ஒரு அம்மணி காரை 30 மைல் ஓட்டிட்டு இருக்கும் போது, வண்டி அதா வேகமெடுத்திருக்கு, அம்மணி பிரேக் போட்டு பார்த்திருக்கு , நிக்கலை. வண்டி அது பாட்டு வேகமெடுக்க 110-120 மைல்ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சு. அம்மணியும் இடிக்காம இருக்க போற வண்டி சந்துல எல்லாம் பூந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க, உசுரு பயமாச்சுங்களே.

ன்ன பண்றதுன்னு தெரியாம காவல்துறையை கூப்பிட்டிருக்க அம்மணி. அவுங்களையும் Neutralல போடு,.. அது இதுன்னு தெரிஞ்சதை சொல்ல, அம்மணியும் முயற்சி பண்ணிட்டே இருந்திருக்காங்க. ஆனாலும் வேகம் குறையாம சுமார் (59 மைல்) போயிருச்சு. அப்புறமா காவல் துறை சொன்னாப்ல Accelerator குடுத்து  brake புடிச்சவுடனே நின்னுடுச்சு.
றங்கும்போது அம்மணியின் நிலையை காணொளியில  பாருங்க. அப்புறம் அம்மணி சொன்னது கீழே

"I knew I was going to die ... I didn't have any doubt about. I really thought I was going to die ... and no matter what I did, I couldn't slow it down."

அம்மணி ஓட்டிட்டு போன வண்டி Kia Sorento SUV. Kia தொழில் நுட்பக்காரங்களோ "இது என்னான்னு எங்களால கண்டுபுடிக்க முடியலை"ன்னு சொல்லிட்டாங்க, எப்படியும் அம்மணிக்கு பெரிய நஷ்ட ஈட்டைத் தந்துடுவாங்கல்ல.

அடுத்த முறை வண்டியை எடுக்கும் போது பிரேக் புடிக்குதான்னு பார்த்துட்டு கிளம்புங்க. 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)