Friday, December 21, 2012
தமிழ் இனி - குறும்படம்
நான் பாஸ்டனுக்கு வந்த புதிது. நண்பர்கள் யாருமில்லாத நிலையில், வேறு என்ன செய்வதென்று தெரியாமல், குறும்படங்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதில 10-15 தேறியது, பிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய போது. மொத்தம் 9 கதைகள் கிடைத்தது. வசனம், திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.
இப்படியாக போய்க்கொண்டிருந்த போதுதான், சம்பந்தமேயில்லாமல் குறும்படம் “அப்பாடக்கர்”ஐ எடுத்துத் தொலைத்தேன். அது நான் எழுதிய கதைகளில் இல்லாத ஒன்று. பரீட்ச்சார்த்த முயற்சி.
எழுதும் கதைகளை எல்லாம், நண்பர்களிடத்தில் சொல்லி “எப்படியிருக்கு” எனக் கேட்பது வழக்கம். இன்னொருவர் கோணத்தில் நிறைய மாறுதல்கள் கிடைக்கும் என்பது என் அனுபவம். இப்படி ஒரு நாள் மொத்தக் கதைகளையும் ஒரு பள்ளிக்கால நண்பனிடம் சொல்லிக்கொண்ண்ண்ண்டிருந்தேன். இருக்காதுங்களா 3 மணி நேரம், தொடர்ச்சியா கதையே சொல்லிட்டிருந்தா, அதுவும் மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா? மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே! இதுல 4 கதைகளைச் சேர்த்தா ஒரு பெரிய படம் வந்துருமே” அப்படின்னான்.
அப்பத்தான் தோணுச்சி, பயபுள்ள வெவரமாத்தான் கேட்டிருக்கான் அப்படின்னு. அப்புறம், அவன் சொன்ன கோணத்துல இருந்து ஆரம்பிச்சி திரைக்கதையை எழுதி முடிச்சிட்டேன். போன வாரம் அதே நண்பன் கூப்பிட்டான் “என்னடி மாப்ளே, பெரிய படமா பண்றேன்னு சொன்னே? குறும்படமா வந்திருக்கு”
படம் பார்த்தவுடனே ஆச்சர்யம், என்னுடைய கதையில் ஆரம்பக்காட்சி அப்படியே இந்தக் குறும்படத்தில் வந்திருந்ததுதான். அதுவும் என் படத்தின் தலைப்பும் இதுல வந்திருந்ததுதான். (உடனே காப்பி அப்படின்னு சொல்லிடாதீங்க மக்கா. வெளிநாட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தோணுற விசயம்தான் படமா வந்திருக்கு. ஒத்த அலைவரிசை.. அஷ்டே)
அடடே! என்னை மாதிரியே ஒருத்தர் சிந்திச்சிருக்காரு அப்படின்னு மூச்சடைச்சுப் போயிட்டேன். டுமீலன்ஸ் அப்படின்னு ஒரு குறும்படம் எடுக்கலாம்னு ஆரம்பிச்சு Casting பிரச்சினையினால அப்படியே நின்னுப் போச்சு. அந்தக் கதையின் சாரமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ஆனால் திரைக்கதை அப்படியே வேற.. இன்னொரு நண்பர் சொன்னார், ”ஆமாய்யா அதேதான்,,, என்ன நாம பேசி ரெண்டு வருசம் இருக்குமா? என்று சொன்ன போதுதான் உரைச்சது :) நாம லேட்தானுங்களே”
அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும், தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம். முக்கியமா, தமிழ் வாழ வேண்டிய தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் பாலம் என்பதை தெளிவாச்சொல்லியிருக்கு.
இயக்குநர் மணிராம் - நாளைய இயக்குனர் வாழ்த்துகள்! மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள்! இந்தப்பதிவை படிக்க நேர்ந்தால் இந்த வாழ்த்தை நான் நேராச் சொன்னது போலவே எடுத்துக்குங்க.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteWell taken.
ReplyDeleteமிக அருமையான பதிவு. இதை குரோம் பிரவுசரில் பார்த்தேன். தமிழில் எழுதவே மோசில்லா வந்து எழுதுகிறேன். மிக மிக அருமையான குறும்படம். தமிழக மக்களும் பார்த்து மனதில் இருத்த வேண்டிய கருத்து. நன்றி.
ReplyDeleteமிக அருமையான பதிவு. இதை குரோம் பிரவுசரில் பார்த்தேன். தமிழில் எழுதவே மோசில்லா வந்து எழுதுகிறேன். மிக மிக அருமையான குறும்படம். தமிழக மக்களும் பார்த்து மனதில் இருத்த வேண்டிய கருத்து. நன்றி.
ReplyDeleteஇந்த குறும்படத்தை பகிர்தமைக்கு நன்றி
ReplyDelete//அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும், தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம்.//
ReplyDeleteபுலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கும் இதே பயம் இருக்கு :(
Saw that movie and liked it! Well done!
ReplyDeleteVery nice. Same blood. Worried about the next generation.
ReplyDeleteI live in US too. Where do u live?
ReplyDeleteI live in USA too, for more details email me at raja.vivaji@gmail.com
ReplyDeletenot bad
ReplyDelete