Tuesday, December 23, 2008
இஞ்சினியர் மாமா
அவுங்க வீட்டுல நாங்க ரெண்டு வருசம் வாடகைக்கு குடியிருந்தோம். அதாவது 9,10 படிக்கிற நேரத்துல. அந்த காலகட்டம் எல்லாருக்குமே வாழ்க்கையின் படிக்கட்டு. அந்தச் சமயத்துல அவுங்க வீட்டில இருந்ததுதான் என்னோட மொத படிக்கட்டா ஆனது. மாமாவும் அத்தையும் படின்னு சொல்றது ஒன்னும் புதிசா இல்லை. ஏன்னா எல்லாரும் சொல்றதுதானே. ஆனா, அந்த ரெண்டு வருசத்துல அவுங்க சொல்லிக்குடுத்தது வாழ்க்கையின் பாடத்தைப் பத்தி. மரியாதை, குடும்ப சூழல்க்கு தகுந்தபடி வாழ்றது, வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கிறது இதெல்லாம்தான். எங்க வீட்டுல இதை எல்லாம் சொல்லி இருந்தா கண்டுக்காம விட்டிருப்பேன். ஆனா அவுங்க ரெண்டு பேரும் சொன்ன விதம், பசுமரத்தாணியாட்டம் நின்னுருச்சு.
வாழ்கையின் சக்கரத்துல எல்லாரும் சிதறித்தான் போனோம். மாமா வீட்டுக்கும் எங்களுக்குமான தொடர்புக்கான தொலைவு அதிகமாச்சு. ஆனாலும் மாமா பையன் கூட கடைசி வரைக்கும் அதே பாசம் இருந்துச்சு, மூத்தவர்னாலும் ஒரே செட்டாகிட்டோம். மாமாவுக்கு செல்வாக்கு ரொம்ப அதிகம், பணமும் கைநிறைய, அதனால மாமா பையன் தொழில்ல இறங்கினது ஒன்னும் பெருசாத் தெரியல.
போன மாசம் ஒரு நாள் அம்மாகிட்ட ஒரு போன், "இஞ்சினியர் மாமா இறந்துட்டாருடா, மாரடைப்பாம்". அதுக்குமேல எனக்கு பேச ஒன்னுமேஇல்லை. சிலரோட இழப்புக்கு யார் தோள் மேலயாவது சாய்ஞ்சு அழுனும் தோணும், சிலரோடதுக்கு கதறி அழனும்னு தோணும். ஆனா, மாமாவோட இழப்புக்கு எனக்கும் எதுவுமே பேசத்தோணலை. ஒரு நாள் முழுக்க பிரமை பிடிச்ச மாதிரியே அலுவலகத்துல இருந்தேன். எந்த வேலையும் பார்க்கலை. ஏன், அத்தை வீட்டுக்கு பேசனும்னு கூடத் தோணலை. ஒரு வாரம் இப்படியே விரக்தியாவே கடந்தது.
ஐயோ, அத்தையின் அந்த கம்பீரம் தொலைச்ச முகத்தையும், தகப்பனை இழந்த மாமா பையனின் சோக முகத்தையும் எப்படி பார்ப்பேன்? அவுங்க வீட்டுக்கு போனா "மாப்ளே"ன்னு சொல்ற சிம்மாசனக் குரல், இதெல்லாம் இனிமே கிடைக்குமா?.. என்ன செய்ய முடியும்? மாமவோட கால புடிச்சி அழ வேண்டிய நேரத்துல எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.
மாமாவின் ஞாபகங்கள் நிறைய நினைச்சுப் பார்க்கிறேன், அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும். எங்களை எல்லாம் விட்டு போக வேண்டிய வயசா இது? இந்தப் பதிவு போடும் போது மட்டுமே ரெண்டு முறை அழுதிருக்கேன். சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது. அது மாதிரிதான் மாமாவின் பிரிவும். உங்க ஆத்மா சாந்தியடைட்டும் மாமா!
Sunday, December 14, 2008
அமெரிக்காவின் நிலைமை?
Wednesday, December 3, 2008
BlogOgraphy:கோவி.கண்ணன்
அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வழக்கம் போலதாங்க இருந்துச்சு. ஒரு சார்பில்லாம, மொக்கைகளும், கும்மியும் கொண்டாட்டமுமா. நட்சத்திர வாரத்துக்கு அவர் எழுதுன கதை, அவரோட பதிவுகள்ல சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். தன்னோட எழுத்துக்கள்ல பெரிசாவோ, சிறிசாவோ, ஏன் அழுத்தமோ இல்லாம இருந்தப் பதிவுகள் U டர்ன் அடிச்சது 2008 பிப்ரவரிலதான்.
அதாவது கருத்துக்களை 'காலங்கள்'ல அள்ளி வீசிட்டு இருந்தவருக்கு அது சோதனை காலம். கருத்து கந்தசாமின்னு பேர் வந்ததும் அப்போதான்.
போலியின் ஒரு அங்கமாவே எண்ணி, கோவிய
வாரணம் ஆயிரம்ல அப்பா சூர்யா சொல்லுவாரே, எட்ஜ் வாங்கினேன்னு சொல்லி கடுப்பாயி 6 விக்கெட் எடுத்த கதை. அந்தக் காட்சி பார்க்கும் போது கோவிதான் மனசுல வந்தாரு. இது எனக்கும் ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டேன். கருத்துக்களை வீச ஆரம்பிச்சப்போ நான் தனி மடல்ல பதிவுகளின் தாக்கம் குறையுதுன்னு சொன்னேன். அப்புறம் அவர் பதிவுகளை படிப்பதை நிறுத்திக்கிட்டேன். மே மாதத்துல இருந்துதான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பின்னூட்டினதே இல்லே. ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு. நடுநடுவே பதிவர் சந்திப்புகளும். கருத்து ஆரம்பிக்கும் வேகம் குறைஞ்சு கடேசியா உங்க இஷ்டம்னு முடிக்கிற அவர் தோரணை எனக்குப் பிடிக்கலை.
'என் வீட்டு பூசையறையில பெரியாரில்லை, பிள்ளையார்தான்'னு எதுக்கோ சொன்ன வார்த்தை இன்னும் மனசுல இருக்கு.
"வெளுத்ததெல்லாம் பால்னு நம்புறாரு, அதான் அவருக்கு ஒரு சோதனையை குடுத்துச்சு"
இப்போ அவர் பதிவுகள் சூடாகாம இருந்ததே இல்லே. தூள் கிளப்பிட்டு இருக்காரு, எந்த அளவுக்குத் தெரியுங்களா?? தமிழ்ப்பதிவுலகுல சிங்கைன்னா கோவிங்கிற அளவுக்கு.
Update: மக்களே மன்னிக்கவும், போலி மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அனைத்து பின்னூட்டங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம். போலி பத்தின உங்க கருத்துக்களை சொல்ல வேணாமே.
அடுத்த BlogOgraphy: LuckyLook
Tuesday, December 2, 2008
NJ Bloggers Meet-2008
டிஸ்கி: தமிழ்மணத்திற்காக வெச்ச தலைப்பு : லக்கியும் செந்தழலும்தான் காரணமா?
வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணினது இதுதானுங் மொதோ முறை. இதுக்கு முன்னாடி ஒரு போனைப் போட்டு இங்கே வந்துருங்க, சாப்பாடு ரெடி அப்படின்னு சொன்னாப் போதும். ஆனா இந்த முறை பல முகங்களை பார்த்ததே இல்லே. அதனாலயே கொஞ்சம் நெருடல்.
முதல்ல நன்றியுரை:
'தமிழோவியம்' கணேஷ் சந்திரா, சத்யராஜ் குமார், ஜெய். இந்த மூணு பேருக்குமே எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அப்புறம் சஹானாவும் அவுங்க அம்மாவுக்கும். என்ன பேசினாலும் கேட்டுகிட்டு பொறுமையா இருந்தாங்க. (ச்சின்னப்பையன், உங்க வீட்டுல புதுசா பூரிக்கட்டை வாங்கியிருக்கீங்களாமே. உண்மையா?)
ஏற்கனவே படம், பதிவெல்லாம் எல்லாம் போட்டுட்டாங்க. இனிமே நான் என்னத்த எழுதறது? .
- பாபாவின் அரசியல் அன்னிக்கும் அரங்கேறுச்சு, அவர் வரலை. கார் படிக்கட்டுல இடிச்சுக்கிட்டாரோ தெரியலை.
- சங்கத்து சிங்கம் கப்பி வழக்கம்போல பொய் பேசி ஏமாத்துனாரு, அவரும் வரலை.
- இனியா, அமரபாரதி ரெண்டு பேரும் வரலை, ஏன்னும் தெரிஞ்சிக்க முடியல. தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இப்பாலோ.... ஆனா தொடர்பே இல்லே :(
- மும்பை, ஈழம்-உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தலாம்னு மோகன் சொன்ன போது ஒரு மாதிரியா.(Uncomfortable) இருந்துச்சு. ஆனா அது எவ்வளவு பெரிய விசயம்னு இப்போதான் தோணுது. HatsOff Mohan.
- பொதுவா இருக்கிற பதிவர் சந்திப்பு மாதிரி இல்லீங்க இது. அதாவது ரொம்ப மொக்கை கம்மியா இருந்தது. பல விஷயங்களை ஆராய ஆட்களும் இருந்தாங்க. மூத்தப் பதிவர்கள்தான் ஆராய்வாங்களோ?. இதுல நான் மூத்தப் பதிவர் இல்லே முத்தப் பதிவர்தான் அடம்புடிச்சாரு கேஆர்எஸ். தொலஞ்சு போவட்டும்.
- குழுப்பதிவுகள் வெற்றியடையாம போனதுக்கான காரணம் (Stop - இங்கே செவுப்புச்சட்டை மக்கள் நல்லா கவனிங்க), முதலாளித்துவம் இல்லாதததுதான் சொல்லிட்டாங்க.அதாவது ownership,. அதாவது ஒரு காரணத்துக்காக ஆரம்பிச்சு வேகமா மக்கள் ஒன்னு சேர்ந்து, பிறகு அவுங்க அவுங்க பதிவுலயே எழுதிக்கலாம்னு போயிடறதாலயும், தன்னோட பதிவுக்கு lime light தேவைங்கிறதுக்கும், admins எல்லாம் சீக்கிரமே ஆர்வம் இழந்திடறதும் காரணம். உண்மைதாங்க 2006ல எத்தனை குழுப்பதிவுகள் ஆரம்பிச்சாங்க. அதுல எத்தனை இப்போ செயல்ல இருக்கு?
- சேவைகள் பதிவுகள் மூலமா செய்யலாமேன்னு மொக்கைச்சாமி கேட்க, ஒரு குழுவா இருந்து செய்ய பதிவுகள் தேவை இல்லை, குழுதான் தேவை. அதுக்கு மக்களே போதும்னு சொல்ல எல்லாரும் கப்சிப். அதுவுமில்லாம எதிர்வினைகள்தாங்க பதிவுகள்ல நல்ல விஷயம் செய்ய விடாம தடுக்குதுன்னும் காரணம் சொன்னாங்க. (பேரை மாத்துங்க மொக்கைச்சாமி ஐயா, பழைய போலி பேருதான் மொக்கைச்சாமி. உங்கப் பேரைக் கேட்டாவே ச்சும்மா உதறுதுல்ல)
- செந்தழல், லக்கி entry க்கு அப்புறம்தான் நேரடித்தாக்குதல் அதிகமாச்சுன்னு சொல்ல அறையில் ஒரே நிசப்தம். இன்னும் காண்டு கஜேந்திரன் வந்திட்டுதான் இருக்குன்னு மனசுல நெனச்சுக்கிட்டு நானும் மண்டையா ஆட்டிக்கிட்டேன். ஆனா லக்கியோட பார்வையும் Graphம் இதை கண்டிப்பா மாத்திப்போட்டுரும். ஆனா இன்னிக்கு ரவியும், லக்கியும் வேற பாதையில ஜரூர போய்ட்டு இருக்காங்க, மத்தவங்க? ரவி கிட்டேயாவது தாக்குறதுக்கு சமமமா ஹாஸ்யப்பதிவுகள் வந்துச்சு. ஆனா இப்போ அப்படியா இருக்கு? நேரடித்தாக்குதல் பதிவு போடுறவங்களுக்கு- மக்களை நேராப் பார்த்தா எப்படி பேசமுடியும்னு யோசனை பண்ணி பதிவு போடுங்க.
- மொக்கைக்கான காரணம், பலதும் அலசுனாங்க, காயப்போட்டாங்க. கடைசியில சுலுவா முடிச்சாரு கொத்ஸ். அதாவது செய்திய copy-paste பண்றதுதான் காரணம்னு சொன்னாரு. நானோ அதை விமர்சனம் பண்றதுதான் மொக்கைக்கு காரணம்னு சொன்னேன். செய்திய எல்லாரும் விமர்சனம் பண்ணப்போகவே மொக்கையாகிருதுங்களே. (பஞ்ச் பாலா செளக்கியங்களா கொத்ஸ்). போலியப் பத்தி பல புது மக்களுக்குத் தெரியவே இல்லே. எ.கொ.இ.ச. மொக்கைக்கு கொத்ஸ் சொன்ன உதாரணம், பதிவ படிச்சதும் பதிவு போட்டவனோட செவுனிய காட்டி அப்பலாம்னு தோணிச்சுதுன்னா அது மொக்கைப் பதிவு. அதுக்கு கணேசின் பெருத்த ஆதரவு வேற. மொக்க பதிவுக்கு மட்டுமா அப்பலாம்னு தோணுது?
- ’பதிவை எழுதினதுக்கு உடனே வெளியிட்டா அதனோட தரம் இல்லே, ரெண்டு மூணு நாள் கழிச்சு நீங்களே ஒரு முறை நிதானமா படிச்சு, திருத்தி வெளியிடுங்க, அப்போ அந்தப் பதிவு கண்டிப்பா நல்லா வரும்’னு சொன்னாரு ஜெய். இப்படி பண்ணினா, நானெல்லாம் பதிவே போடமுடியாது. ஆனாலும் நல்ல யோசனைதான். இந்தப் பதிவும் அந்த முறையிலே போட்டு இருக்கேன், வித்தியாசம் தெரியுது.இனிமேலும் பின்பற்ற போறேன்.
- மருதநாயகத்த காய்ச்ச பல வருசம் காத்திருந்தது, அன்னிக்குத்தான் நிறைவேறுச்சு. பல சமயம் அவரோட பதிவுகளை வாரினேன். நல்ல பதிவுகள் போட்டா படிக்க மாட்டேங்குறாங்க, அதனாலயே மொக்கை பதிவுகள் போடுறேன்'னு வாக்குமூலம் வேற குடுத்தாரு.
- ச்சின்னப்பையன் பேர்க்காரணமே கலாய்ச்ச மாதிரி ஆகிருச்சு. 'இச்'சின்னப்பையனா எல்லார் கண்ணுக்கும் தெரிஞ்சாரு. மனுசன் பதிவுலதான் அடிச்சு ஆடுறாரு, நேருல.. சத்தமே இல்லே. (இனிப்பு நல்லா இருந்துச்சுங்க Mrs. இச்சின்னப்பையன்)
- தன்னோட பதிவுகள விமர்சனம் பண்ணுங்கன்னு மோகன் அடம் பிடிக்க, பொதுவுல நிறை/குறை சொன்னா அவரோட எழுத்தோட வீரியத்தையும், வேகத்தையும் குறைக்கும்னு மனசுல நினைச்சுகிட்டு, அவரோட பதிவுகளைப் படிச்சதே இல்லைன்னு 'டகால்டியா' உண்மையச் சொன்னேன். இனிமே இப்படி பொதுவுல கேக்காதீங்க. தவறுகளை மட்டுமே பார்க்கும் சமூகம் இது. கசக்கும் உமிழ்நீர் சுரப்பதில் தவறில்லை, ஆனா அது மருந்தாகவும் இருக்கலாம்.
- நசரேயன், சத்தமே இல்லாம சிரிச்சுகிட்டே போனாரு, ஒன்னும் விசேசம் இல்லே.
- ஜெய்-யார்யா இது? ராயர் கிளப்ல இருந்து இன்னி வரைக்கும் இருக்கிற மேட்டரை உள்ளங்கையில் வெச்சுகிட்டு இருக்காரு. எழுதறது இல்லே, படிக்கிறதோட சரின்னாரு.. இவர்தான் அன்னிக்கு ஆட்ட நாயகன். ஏகப்பட்ட சிக்ஸர் அடிச்சாரு(இட்லி வடையா இருப்பாரோ?)
- ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார்-நன்றி நசரேயன். இவரோட உற்சாகத்துக்கு, பலே பேஷ் நன்றி (இப்படித்தான் பேசனும்னு கொத்ஸ் முன்னாடியே சொல்லி கூட்டிட்டு வந்திருப்பாருங்கிறது நுண்ணரசியல்)
- எல்லா இடத்துலேயும் சந்திப்பு முடிஞ்சு வெளியே வந்து ஒரு சந்திப்பு நடக்கும். அதாவது தம்மரே தம், இங்கே தம்தான் இல்லே. கூட்டமா இருந்ததைப் பார்த்து ஒரு மாமா காருல வந்துட்டு, நோட்டம் விட்டாரு பின்னாடி தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சும்மாவே திரும்பிப் போனாரு.
ஆக மொத்தம் ஒரு வித்தியாசமான படம் சொல்ற டைரக்டருங்க மாதிரி நானும் சொல்லிக்கிறேன், இதுவும் ஒரு வித்தியாசமான சந்திப்புதான்.
Wednesday, November 19, 2008
New Jersey-வலைப்பதிவர் சந்திப்பு-08
வணக்கமுங்க,
வட அமெரிக்க வலைப் பதிவாளர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இந்தக் குளிர்காலத்திலேயும் சந்திக்கனும் முடிவு செஞ்சுட்டாங்க. எழுத்துதான் உலகம்னு இருக்குற நமக்கு ஏதுங்க குளிர், வெயில். அதுக்கு பேர் எல்லாம் வெக்கனுமாம்ல. அதனால அதுக்கு Thanksgiving 08 வெச்சாச்சுங்க(ரோஜாவுக்கு பேரா முக்கியம்). தமிழ்ல நன்றி நவிலல்னு வெச்சுக்கலாம்.
இடம்:
Hoysala Restaurant
Highwood Plaza
2 John F Kennedy Blvd,
Somerset, NJ 08873
Ph: 732-247-4300
View Larger Map
நாள்:
நவம்பர்-29-2008- சனிக்கிழமை.
நேரம்:
5:30துல இருந்து 7:30 மணி வரக்கும்.(அதுக்கு மேல அங்கே இருந்தா செவுனியக் காட்டி அப்புவேன்னு சொல்லிப்புட்டாரு அந்த ஹோட்டல் டேமஜரு).அதனால 5:15க்கே வந்துரோனும்.
இன்னும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒரு தனி மடல் போடுங்க: ilamurugu அட்டு gmail டாட்டு com.
தேவை:
நீங்க வருவீங்கன்னா ஒரு பின்னூட்டம்.(இல்லாட்டினா வாழ்த்தோ, முட்ட கோசோ, தக்காளியோ, முட்டையோ.. அனுப்பிருங்க). எதுக்குன்னா ஒரு கணக்குக்குதான்.
எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா. அதாங்க டேமில்ல Agenda: பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.(சிரிக்காதீங்க ஆமா).
அப்புறம் இந்த சந்திப்புக்கு வெத போட்ட நசரேயன், பேரு வெச்ச கொத்ஸ், இடம் புடிச்சுக்கொடுத்த KRS, நேரத்தை நிர்ணயம் பண்ணின பாபா எல்லாருக்கும் ஒரு நன்றி!
Friday, November 14, 2008
மகசூல்- ஐப்பசி-29
- அட்ரா அவனை, கொல்றா ங்கோ.. இப்படித்தான் அடிச்சிக்கிட்டாங்க. இதுல அடிச்சவன் கெட்டவனாம். அடிபட்டவன் நல்லவனாம். அடிபட்டவன் மட்டும் சும்மாவா இருந்தான். அடிச்சவங்களை விட பெரிய ஆயுதமான கத்தி வெச்சிருந்தான். நிருபருங்களும், சட்டத்துறை வல்லுனர்கள் மட்டுமே பொது காரியத்துக்கு முன்னாடி நிப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ மாத்திக்க வேண்டிய கட்டாயம். தேவரா இருந்தாலும், ஆதி திராவிடனா இருந்தாலும் ஜாதி கல்லூரிக்குள்ள எப்படிப்போச்சு? தேர்தல் வழியாத்தானே? யாராவது சொன்னாத்தான் காவல்துறை உள்ளே போவுமாம். நிக்கிற காவல் அதிகாரிங்க ஒருத்தரோட மவனோ, தம்பியோ இப்படி அடிவாங்கினா சும்மா இருந்திருப்பாங்களா? உள்ளே வெச்சி கட்டிருக்க மாட்டாங்க லாடம்? இவுனுங்க படிச்சு என்ன லாபம்? கொசுறு சேதி- இந்தியாவின் கொடி நிலாவில் நட்டாச்சாம். ரெண்டும் இந்தியாதான் நடத்திக் காட்டிருக்கு.
- தமிழ் ஈழம் தப்புன்னு பாஜக மக்கள் சொல்றாங்க. ஆனா ஆந்திராவுல பாஜக ஆட்சி வந்தா தெலுங்கானா வருமாம். அத்வானி சொல்றாரு. என்ன வோட்டுப் பிச்சைடா சாமி இது. தமிழனுங்களை எல்லாம் தவிட்டுக்கா பெத்தாங்க?
- அம்பேத்கார் ஒரு இனத்துக்காக போராடினார். அதுக்காக அவரையே அந்த இனத்தின் தலைவரா காட்டிக்கிறது தப்பு இல்லே? அப்புறம் அவரு போராடினத்துக்கான அர்த்தம் என்ன?
- இங்கிலாந்தை நொறுக்கிய இந்தியா!-கிரிக்கெட், இதுமட்டுமா?பிரிட்டிஷ் டெலிகாமில் 10000 பேர் நீக்கம்!-'ரெட் அலர்ட்'டில் ஐரோப்பிய பொருளாதாரம்!! - என்ன எழவுடா இது அங்கே 7 1/2 ஆரம்பிச்சிருச்சா?
- Tamilish பயங்கரமான விளம்பரம் குடுத்து முன்னாடி போயிட்டாங்க. மக்களும் ஆர்வமா அங்கே போறதுக்கு நேரம் பார்த்துட்டு இருக்காங்க.
Caution: படம் பெரிசாக்கினா சில மேட்டர் மாதிரியான படங்கள் வரலாம். கவனம் தேவை
நெறைய புது மக்கள் அங்கே வலம் வர்றது தெரியுது. ஆனா என்ன கொஞ்சம் மாதிரியான இடம்னு முதல் பார்வையில தெரியுது. தெரியலைங்க, புது மக்கள் அதைத்தான் விரும்பராங்களோ என்னமோ. ஆனா அவுங்க திரட்டிக்கு விளம்பரம் குடுத்து மத்த திரட்டிக்கு இலவசமாவே விளம்பரம் குடுத்துட்டாங்க. எல்லாத் திரட்டிக்கும் நெறைய பதிவுகள் சேர விண்ணப்பம் வருது. மத்தபடி தமிழ்ப் பதிவுகள் திரட்டிகளுக்குள்ள அடங்க மறுக்கும் காலம் வந்தாச்சு. Tamil Blogs world requires MOST Powerful tool to aggregate the rapidly growing blogs than Pligg/ fof. - மாயூ- பட்டம் வாங்கிட்டாருன்னு நிலைத்தகவல்(டேமில்ல சொல்லனும்னா Status Message போட்டிருந்தாரு) நானும் ரொம்ப பவ்யமா திடமா இருக்க வேண்டிய கால கட்டம், சீக்கிரம் வேலை கிடைச்சுடும் அப்படின்னு பெரிய அறிவுரை குடுத்துட்டு இருக்கேன். அவருடைய கூட்டாளி வந்து நச்'னு சொன்னாரு. "பட்டம் வாங்கியாச்சுல்ல, பறக்க விடு".
Friday, November 7, 2008
ராமனைத் தேடும் தமிழர்கள்
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்
Wednesday, November 5, 2008
தேன்கூடு?
சாகரன் கல்யாண் கட்டிய தேன்கூட்டை நிர்வகிப்பவர்களே! வாசகர்களே! என்னாயிற்று தேன்கூடு? ஏன் கலைக்கப்பட்டது?
- பல மக்களின் கற்பனாற்றலின் உந்து விசையை அதிகரித்தது தேன்கூடுதான். அதன் போட்டிகளின் மூலம் குவிந்த கதை, கட்டுரை, கவிதைகள் எத்தனை?
- தமிழ்மணத்தின் இன்றைய சூடான இடுகையின் முப்பாட்டன் தேன்கூட்டின் அதிகம் பார்வையிடப்பட்டவைகள்.
- பெட்டகம், வார்த்தைகளுக்கான அர்த்தம் என பல சக்திகளை ஒன்றடக்கியதே தேன்கூடு.
- சாகரன் என்ற மனிதனின் உழைப்பை ஏன் பெட்டியில் வைத்து பூட்டியிருக்கிறீங்கள். காரணத்தைச் சொல்லலாமே.
- தேன்கூடு கலைக்கப்பட்டதா? இல்லை தொடருமா?
தற்போது இருக்கும் நிர்வாகத்தினருக்கு என் வேண்டுகோள். எனக்கும் கல்யாணைத் தெரியாதுங்க. ஆனா அவரோட உழைப்பு மட்டும் எனக்குத் தெரியுது. அதுக்காவது மதிப்பளித்து தேன்கூட்டை மறுபடியும் கொண்டுவாங்க.
சாகரன் மீண்டும் வலைப்பதிவுலகில் வலம் வரட்டும்.
Monday, November 3, 2008
நம்மவர்(1995)
- கரண் அறிமுகம்
- மகேஸ்சின் அற்புதமான இசை
- இயக்குனர் சேதுமாதவன்(2வது படமா இருந்தாலும்)
- நடன இயக்குனர் பிருந்தா. இவுங்களை எப்படி இந்தப் பாத்திரத்துக்கு ஒத்துக்க வெச்சாங்கன்னு தான் தெரியல, ஆனாலும் அற்புதமான தேர்வு.
- நாகேசின் அற்புதமான நடிப்பு. ரொம்ப நாளைக்கப்புறம் நகைச்சுவை நடிகரை அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு வில்லனாக் கொண்டு வந்தவர் கமல். பின்னாடி மகளிர் மட்டும்ல ஒரு பிணமா நடிக்க வச்சாரு. இப்படி நாகேசின் பல முகத்தைக் கொண்டு வந்த பெருமை கமலையேச் சாரும். National Award Winner for best Support Actor.
- படத்துல கவுதமி, கமல்.. காதல் காட்சிகள், சூடேத்துற விதம், ம்ம் கமலின் அக்மார்க். நல்லாத்தான் இருக்கு அம்மணியும்... ஹ்ம்ம்ம்ம்.நல்ல ஜோடி(வாழ்க்கையிலும் கூட)
- செலவு ரொம்ப கம்மி
- 'சொர்க்கம் என்பது நமக்கு', பாடல் உன்னால் முடியும் தம்பியின் அடுத்த பகுதியின்னாலும் காலத்துக்கேத்தது. இந்தப் பாட்டுக்கு ஏதோ விருது கூட கெடைச்சிதாமே. தெரிஞ்சா என்னான்னு சொல்லுங்க, Plz
படத்துல காட்சிகள், வசனம், அமைப்புகள், இசை, எல்லாம் அற்புதமா இருந்தாலும் இரத்த புத்துநோய் ஒரு சொதப்பல் முதுகெலும்பு. படத்த மட்டுமில்லாம நம்மளையும் நோகடிக்கிற ஒரே விசயம் இதுதாங்க. DVDல பார்க்க படம் அருமையா இருக்கு.
Wednesday, October 29, 2008
சொன்னதைச் செய்த பாஜக
பஞ்ச் பாலா: நியாயஸ்தனுங்கதான், மழை மட்டும் பேஞ்சுட்டா.
டெல்லி: சர்வதேச அளவிலான 'பொருளாதார சுனாமியால்' பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அடுத்த 10 நாட்களி்ல் 25 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக் கூடும் என இந்திய தொழில்-வர்த்தக சபையான அஸோசாம் தெரிவித்துள்ளது.
இரும்புத்துறை, சிமெண்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்துத்துறை, சாப்ட்வேர் துறை, நிதித்துறைகளில் இந்த வேலைகள் பறி போகலாம் என
அஸோசாம் (Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) தெரிவித்துள்ளது.
பஞ்ச் பாலா: பதிவர்கள் சாக்கிரதை இருந்துக்குங்கோ, நாமதான் waste land of India.
திண்டிவனம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரிகள் மீண்டும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சேரவேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
பஞ்ச் பாலா: அப்படியே தமிழ்நாட்டிலேயும்னு மனசுல வெச்சுக்கோங்க. வைகோ, கம்யூ, அப்படின்னு செட்டாவே மாறிடலாம்.
சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
பஞ்ச் பாலா: எல்லாத்தையுன் உருவுனவன் கோவணத்தை மட்டும் குடுத்துட்டு போனானாம்.
என்னை கைது செய்ய தயக்கம் வேண்டாம் : திருமாவளவன்
பஞ்ச் பாலா: அதெல்லாம் அம்மா ஏதாவது சொல்லனும். அப்போதான் உளவுத்துறைக்குத் தெரியும்.
கருணாநிதி பதவி விலக தந்தி அனுப்பவும்: ஜெ.
பஞ்ச் பாலா: நானும் ரெளடி நானும் ரெளடி- வடிவேலு.
அடியே!
என்னை அடிக்கடி பார்,
தமிழகத்தின் மின்சாரப்
பஞ்சம் தீரட்டும்!
இளா
Tuesday, October 28, 2008
நிறம் மாறும் தீபாவ'லி'
தீவாவளி கொண்டாட்டம் எல்லாம் நம்ம ஊர் மாதிரி இல்லேன்னு நினைக்கும் போது.. தூ என்ன Onsite வாழ்க்கை இதுன்னு தோணுது. எவ்ளோ நாள்தான் முகமூடிய மாட்டுகிட்டு அலையப்போறேம்னு இருக்கு
Sunday, October 26, 2008
Wednesday, October 22, 2008
ஏகன் - விமர்சனம்
Sunday, October 19, 2008
* Thanks
அப்போதான் அந்தத் தெருவுக்கு வந்தான் கிரிதரன்,ரொம்ப புத்திசாலி, நல்லா பாடுவான், உலக அறிவு அதிகம், நிறைய பேசுவான்.. என்ன ஒன்னுன்னா, எல்லாரும் அவனைப் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. ராத்திரியானா ராஜூ கடைக்கு முன்னால படுத்துக்குவான். பாதுக்காப்புதானேன்னு ராஜூம் ஒன்னும் சொல்லலை.
ஒரு நாள் சாயங்காலம், “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” ராஜூ கடைக்கு முன்னாடி இருந்த திண்டுல உக்காந்துகிட்டு பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பிச்சான் கிரி. ஆனா யாருமே அவனையோ, அவன் பாட்டையோ கண்டுக்கலை. எல்லோரும் ஒரு முறை வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தாங்க. அவ்ளோதான். எல்லாப் பைத்தியக்காரனுக்கு கிடைக்கிற மரியாதைதான் அவனுக்கும் கிடைச்சது. அடுத்த நாள் கதை சொல்ல ஆரம்பிச்சான் கிரி. அண்ணாச்சியின் 7 வயசுப்பையன் மட்டும் ஐஸ் சூப்பிக்கிட்டே கதை கேட்க ஆரம்பிச்சான்.
அடுத்த நாள் அண்ணாச்சிப் பையன் இன்னும் 3 பேர சேர்த்து கூட்டிட்டு வந்தான். ஆனா அன்னிக்கு பக்திச் சொல்ற்பொழிவு, ஆனா அந்தப் பசங்களுக்குத் தகுந்த மாதிரி கதைச் சொன்னான் கிரி.இப்படியே ஒரு வாரம் போச்சுது நல்ல குரல், நல்லசங்கீத ஞானம், மக்களுக்குத்தகுந்தப்படி பாடுறதனால சிலபேரு வீட்டுல இருந்தே கேட்க ஆரம்பிச்சாங்க. கடைக்கு வந்துப்போற மக்கள் நின்னு கேட்க ஆரம்பிச்சாங்க.அப்புறமா அவன் எப்ப பாடுவான்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க அந்தத்தெரு மக்கள். இதனால அவனுக்கு சரியான சாப்பாடு, துணி எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சது. தீவிரவாதியா இருப்பான்னு சில பேரு சொல்லிகிட்டாங்க. ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் அவன் கவலைப்படவே இல்லை. ஆனாலும் அவன் தனிப்பட்ட விசயத்தைப்பத்திமட்டும் யாருக்கும் தெரியலை. கேட்க துணிச்சலும் இல்லே. பாட்டோ, பேச்சோ அத்தோட சரி. அப்புறம் யார்கிட்டேவும் பேசமாட்டான். சோறு போட்டா நல்லா தின்பான். வாழ்க்கை நல்லா ஓட ஆரம்பிச்சது. காசு
குடுத்தா திருப்பி அவுங்க மேலேயே எறிஞ்சுருவான். இப்படியே ஒரு வருசம் ஓடிப்போயிருச்சு. சாயங்காலம் ஆஞ்சு மணிக்கு காவேரித்தெருவுல கூட்டம் சேர ஆரம்பிச்சுரும். ராஜூ பஜ்ஜி கடையும் சேர்த்து போட்டாரு
ஒரு நாள் திடீர்ன்னு காணாம போயிட்டான் கிரிதரன்.. ஒரு வாரத்துக்கு மக்களுக்கு என்னமோ மாதிரியிருந்துச்சு. வாரம், மாசத்துல மக்கள் மறந்துட்டாங்க. ஆனாலும் அஞ்சு மணியானா அந்தத் திண்டை கண்டிப்பா ஒரு முறையாவது ஒருத்தராவது ஏக்கத்தோட பார்க்காம போக மாட்டாங்க.வருசம் பல ஆச்சு, திண்டு மட்டும் காலியாவே இருந்துச்சு.
லக்கி மாதிரி நல்லா எழுதிட்டு ஒருவித வெறுப்புல பதிவுலகத்தை விட்டு போறவங்களுக்காக, வாசகன் பார்வையில் இந்தப்பதிவை சமர்பிக்கிறேன்.
Friday, October 17, 2008
* Junior விவசாயி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"
மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு
துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"
"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.
செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.
மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு
சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்
அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.
நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு
செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"
சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!
மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"
Thursday, October 16, 2008
* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி?
இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச் உணர்வு கிடைக்கும்.
சில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)
- பழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)
- ஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)
- இதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.
- அடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)
- Freelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்?
- இப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)
- கடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.
Wednesday, October 15, 2008
* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா
அதெல்லாம் ஞாபகத்துக்கு இல்லீங்க. ஊருல திரை கட்டி விசேசத்துக்கு படம் போடுவாங்க. அது சுதந்திரதினம், எம்ஜிஆரு பொறந்த நாளு, மாரியாயி நோன்பி, கருப்பண்ண பொங்கல்னு. மொத படம் பழசாவும், ரெண்டாவது படம் புதுசாவும் இருக்கும். ஆனா நான் பார்த்த மொதோ படம் "நினைத்ததை முடிப்பவன்"னு அம்மா சொன்னாங்க.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம், குரோம்பேட்டை ராகேஷ்ல கூட்டாளிங்களோட ஒரு தடவை, அம்மணியோட ஈரோட்டுல ஒரு தடவை.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பந்தயம்தான். அதெல்லாம் தெனம் ஒரு படம் பார்க்குறோம். Tube Tamil, Tamil Wire, TamilOன்னு வாரம் ரெண்டாவது பார்க்குறோம்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பார்க்குற ஆள் நானு. அண்ணாமலை, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், அப்படின்னு பெரிய பட்டியல் போடலாம்.உன்னால் முடியும் தம்பி என்னிக்குமே புடிச்ச படம், அது மாதிரி ஏதாவது செய்யனும் நினைச்ச படம். கஜேந்திரான்னு ஒரு படம், அது மாதிரி பாதிச்ச படம் எதுவுமே இல்லே. ங்கோ.......
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சண்டியர், என்ன கருமத்துக்கு தலைப்பை மாத்தச் சொன்னாங்களோ தெரியல.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அதே தொழிலா இருந்ததால ஒன்னும் சொல்ல முடியல. ஆனா தசாதவதாரம் ஆரம்பக் காட்சிகளின் சொதப்பல் மாதிரி நெறைய குறைய மட்டும் கண்டுபிடிக்க முடியுது. காரணம் அதேத் தொழிலுல 3 ஆண்டு அனுபவம்.
PC SreeRaam, மணி ரதனம், விட்டலாச்சாரியார், மாயாவி வெங்கி இவுங்க எல்லாம் என்னை பாதிச்சவங்க. ஏன் ஜீன்ஸ் படம்,, எப்பா எப்பா, சங்கர் மாதிரி தொழில்நுட்பத்துக்கு மெனக்கெடுற ஆட்கள் ரொம்ப கம்மி(காப்பி அடிக்கிறதை அவர் தவிர்க்கலாம்)
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நெறைய, எல்லாம் Onlineலதான்.வேற என்ன இருக்கு. சினிமா எக்ஸ்பிரஸ் மாதிரி சினிமாவுக்குன்னே வர பொஸ்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இல்லீங்க. எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில், சினிமாப் பொன்னையா, வாரமலர் துணுக்கு மூட்டை, ஜூவி மியாவ் மாதிரிதான்.
7.தமிழ்ச்சினிமா இசை?
உயிர்நாடி. பதில் 9 வது கேள்வில பாருங்க.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இரானி, ஸ்பெயின் மாதிரியான தரமான படங்கள் மட்டும்தான் பார்ப்பேன்னு புருடா விடத்தயாரா இல்லே. தமிழ், Subtitleவெச்சா ஆங்கிலம், ஹிந்தி பார்க்குறது உண்டு, Dil Chata Hai, முங்காரு மலே(கன்னடம்), மணி சித்திரதாழ், ..etc
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
4 வருசமா இசை அமைப்பாளர்கள் அலுவலக்த்துக்கு ஏறி இறங்கி நாசமாப் போனது பெரிசு. காசு குடுத்து கேஸட் வாங்கி அதுல நம்ம ட்யூனை போட்டு sampleஆ குடுத்தா, அடுத்த மாசம் ஏதோ ஒரு படத்துல பல்லவியாவோ, சரணமாவோ ஓடும்.. "அய்யோ நம்ம ட்யூனாச்சேன்""னு போயி கேட்டா 5 ஆயிரமோ பத்தாயிரனோ குடுத்து வாயடச்சுருவாங்க. (சங்கர்)கணேசுக்கு குண்டுப் பார்சல் அனுப்பிச்சது சரின்னு அப்போத் தோணும். அப்படி பின்னாடி நெறைய புண்ணு வாங்கின சம்பவங்களினால சினிமாவே வேணாம்டான்னு இப்போ இருக்கிற பொழப்ப பார்க்கிறேன். Junior Artists ரித்தீஸ், நெப்போலியன், ஆட்டம் போடுற ஸ்ரீதர், நோபல், ஜானி இவுங்களோட தெனமும் கூட வாழ்ந்த வாழ்க்கைன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் ஒரு சோகக்கதை. எங்கூரு ஆபாவாணன், எங்க ஊரே சேர்ந்து எடுத்து சிவாஜி நடிச்சு வெளிவராத ஒரே படம் ஆயிரம் கைகள், பவளக்கொடிக்கு இசை அமைச்ச என் மாமன் திலீப்...etc
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லாவே இருக்கும். ஆனா எந்த நடிகரும் அரசியலுக்கு போவ கூடாது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நல்லா இருப்பாங்க/இருப்பேன். வேற வேலை பார்க்கலாம், பதிவுகள் பாதியா கம்மியாயிரும். பால் மீதி ஆவும், சீரியல் அதிகமாகும், குத்தாட்டம் ஆட்டம் நெறைய நடக்கும்.
பொதுவா சங்கிலித் தொடருக்குன்னா வர மாட்டேன். கொத்தனாரே என்னமோ கேட்க நானும் ஆமாஞ்சாமின்னு சொல்ல.. இப்படி ஆகிப்போச்சு வாழ்க்கை. நானும் 5 பேரைக் கூப்பிடனுமாமே. அதான் சினிமாக்காரங்களையே கூப்பிடுவோம், வந்து எழுதலை....நடக்கிறதே வேற
1. மு.கருணாநிதி
2. ஜெ. ஜெயலலிதா
3. ரஜினி
4. கமல்
5. அமிதாப்(ஆசுபத்திரியிலிருந்த வந்தவுடன் எழுதினாப் போதும்)
6. சிரஞ்சீவி காரு.
Tuesday, October 14, 2008
* இதாருங்க?
போனதடவை கொஞ்சம் சுலபமா குடுத்துட்டேன். இந்த முறை கொஞ்சமாச்சும் கஷ்டப்படவேணாங்களா. அப்புறம் சொல்ல மறந்துட்டேன், ”தளபதி ரஜினி ரேஞ்சுல என்னை ஒரு போட்டோ புடி இளா”ன்னு இந்தப் பதிவர் ரப்சல் தாங்காம எடுத்த படம் இது.
எலிக்குட்டியை இந்த படத்து மேல உருட்டவும், அப்போதான் புதிர் வரும்..(Roll the mouse over puzzle)
Monday, October 13, 2008
* செந்தழல் ரவி - BlogOgraphy
மொதல்ல எழுதனும்னு நினைச்சது செந்தழல் ரவியப் பத்தி.
முன்குறிப்பு: Comments moderated.
நான் தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தக் காலத்துல ரொம்ப நாகரிகமா கருத்துக்களை மறுத்தாங்க(போலி மட்டும் கெட்ட வார்த்தையிலதான் திட்டுவாரு). ஏதோ ஒரு பதிவுல எங்கே பார்த்தாலும் "I beg a pardon to offfend your post" அப்படின்னு பார்த்திருக்கேன். இந்தமாதிரி நாகரிகமான ஒரு கட்டமைப்பை உடைச்சதுல செந்தழல் ரவிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கு. அந்தக் காலத்துல தான் செந்தழல் ரவி பதிவுலகத்து வந்தாரு. வந்தவுடனே டமால் டுமீல்னு பதிவுகள் வரும். செம கடுப்புல எல்லாரும் பார்த்துட்டு இருந்தோம். இதுல இரவுக்கழுக்குன்னு ஒரு கேங் வேற தரத்துக்கு கீழே போச்சு.(நம்பி ஏமாத்துனா தரத்துக்கு கீழேங்கிறது என்னோட வாதம்). பொன்ஸ் பத்தி எழுதின பதிவுதான் எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்கு ரவி மேல செம கோவம் வர வெச்ச பதிவு. ஆம்புளைகளோட பதிவுகளையே கிண்டல் அடிக்க யோசிக்கிற நேரத்துல ஒரு பொண்ணைப் பத்தி(Personalஆ) எழுதுனப் பதிவைப் பார்த்து கோவம் வராதுங்களா?
ரவிய நான் மாமா, மச்சான்னு கூப்பிட ஆரம்பிச்ச காலத்துலதான் ரவி போலி கேங்ல இருக்காருன்னு கேள்விப்பட்டேன். அந்தச் சமயத்துல தான் ரவி தேடுJobs ஆரம்பிச்சாரு. அதுவரைக்கு வில்லனா இருந்த ரவி கதாநாயகனா எல்லா பத்திரிக்கையிலும் வலம் வந்தாரு. அப்பதான் நானும் மோஹன்தாஸும் ரவிய நாய் கடிச்சதைப் பதிவப் போட போலி எங்களுக்கு நேரடியாவே நாய் பட்டம் குடுத்து பாராட்டினதும் இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத தம்பட்டம்.
ரவி ’U’ அடிச்சது, போலிகளோட நடந்த சண்டைதான். அதான் தமிழ்ப் பதிவுலகத்தோட வரலாறு பக்கமாச்சு. அப்புறம் கர்நாடகா பிரச்சினை வந்ததும், ரவிக்கு போலிகளால தொந்தரவு வந்ததும், செல்லாவும் ரவியும் போலிய பத்தி போலீஸ்ல புகார் தந்ததும் ரகசியமாவே இருந்ததுச்சு. பூனைக்கு மணிய கட்டிய பெருமை இவுங்களையேச் சாரும். இன்னிக்கும் பல பேரோட பின்னூட்டப் பொட்டி திறந்தாப்ல இருக்குன்னா அதுக்கு ரவியும் ஒரு காரணம்.
வீராச்சாமி படத்துக்கு படம் பார்க்காமையே அவர் எழுதுன விமர்சனம் என்னோட favourite. அதுக்கு முன்னாடி சில நல்ல பதிவுகள் வந்ததும் உண்டு. கோழி திருடன், தேங்காய் பொறுக்கி எல்லாம் டாப் டக்கர்.
இன்னும் செந்தழல் ரவி பதிவுலகத்தின் நாகரிகத்தை கண்டுக்கவே இல்லீங்கிறது வருத்தம்தான்(அப்படின்னு ஒன்னு இருக்கா?). இன்னும் அவர் பிராமிணர்களை வசை பாடுறதும், அவர் பதிவுகள்ல அடுத்தவங்க போட்ட பிடிக்காத பின்னூட்டத்துக்கு அனானியா அவரே பின்னூட்டமா திட்டுறதும் எனக்குப் பிடிக்காத செயல்.
(தொடரும்)
அடுத்தப் பதிவர் - கருத்து கந்தசாமி
* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்
"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"
”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”
“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”
“ம்ம் சரி”
1997- டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிட நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்குப் போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.
ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சக்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டுப் போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுத்திட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியிலே).
இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது
ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டாப் போதும், வர போற ஒருத்தரையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது. இதுல நம்ம ஹீரோவுக்கு சைட் அடிக்கவும் தெரியாது. அப்படியொரு வஸ்து.
சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.
இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா? லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.
1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.
அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்கா கவனிங்க” அப்ப்டின்னு சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.
தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.
காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.
இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.
வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழே வந்துதான் நிப்பாடினாங்க.
கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.
அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.
”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”
“அப்புறமாத்தான் படிச்சாரு, 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”
“யாருமா அது?”சூர்யா.
“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு நட்சத்திர பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”
“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”
Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்
* திரட்டியை COPY அடிப்பது எப்படி?
கவிதைய திருடினாங்க ஒத்துகிட்டோம்.
கதைய பதிவுலிருந்து திருடி, தனிமடலா தன் பேருல அனுப்பிச்சாங்க, சிரிச்சிகிட்டோம்.
திரட்டியையுமா? என்னமோ போங்க, தமிழை வாழ வெக்க இவ்வளவு சிரமப்படுறீங்கன்னு தெரியுது. வாழ்க தமிழ்!
நகல்:
அசல்:
Tamil BLOGKUT-சங்கமம்
Tuesday, September 30, 2008
வசீகராவும், கேம்ரியும்
உங்கப்பா கஷ்டப்பட்டு படிக்க வெச்சது ஊர்ல விவசாயம் பார்க்கத்தானா?
So, என்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சதுக்காக அமெரிக்கா போய் பணம் அனுப்பிச்சா, கணக்கு சரியாய்போயிருமா? இது என்ன பிஸினெஸ்ஸா? சொல்லுங்க. சரி அங்க போய் பணம் சம்பாரிச்சு ஒரு கார் வாங்கறேன்னு வைங்க. அந்த சந்தோசத்தை எங்கப்பாகிட்ட ஷேர் பண்ணிக்க முடியும்? என்ன கார் பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்து அனுப்பத்தான் முடியும். ஆனா இதுவே எங்க ஊர்ல வேலை பார்த்தேன்னு வைங்களேன், அம்சமா ஒரு பஜாஜ் ஸ்கூட்டரை வாங்கி, மஜாவா மணிய வெச்சு சுத்த முடியும். அதுல ஒரு சந்தோசம் இருக்கு.....
மேல இருக்கிற வசனம் வசீகரா படத்துல வர்றதுங்க. சில நேரங்கள்ல இந்த மாதிரி வசனங்கள், வாழ்க்கை பூரா மனசுல நின்னுக்கும். இனிமேதான் அப்பாவுக்கு படம் எடுத்து அனுப்பனும். என்னத்தைச் சொல்ல..
Wednesday, September 17, 2008
காதல் ஜூரம்-2
Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங், வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு. தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.
வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு.
- பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.
- விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.
- வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.
"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.
ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
“I am fine, whatzup"
"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.
"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."
"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil ப்லொக் எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”
”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.
“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”
“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”
“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”
“அடச்சொல்லுங்க”
“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”
“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”
“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”
இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”
”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.
“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”
“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”
மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.
”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.
9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, சத்யம், குசேலன், தசாதவதாரம் ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.
ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.
காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.
“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு பேசினாள். போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ஆயி போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.
ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.
”டொங்க்”
“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”
”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”
“அடச்சொல்லுன்னா”
“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”
”அப்போ என்னோடது எல்லாம் கவிதங்கிறியா?”
”பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.
“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?”
”சொல்றேன், சொல்றேன்”
”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.
“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.
“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”
“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”
ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”
“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.
மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.
“என்னடா சத்தத்தையே காணோம்”
“அதிர்ச்சியா இருக்கு”
“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”
“எழுதலாம். தப்பே இல்லே”
“அப்புறம்?”
“ “
“என்ன சத்தத்தையே காணோம்”
“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”
”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...
விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.
ஒரு முகம் தெரியா பெண்ணின் அனானி மறுமொழி கிடைச்சதும் சந்தோசம் தாங்கல. அப்புறம் ஒரு சந்தேகம் வந்துருச்சு ஒரு வேலை ராயலை சிங்கமெல்லாம் சேர்ந்து ரவுண்ட் கட்டின கதை மாதிரி ஆகிருமோன்னு ஒரு 'பல்பு'ம் எரிஞ்சது. எதுக்கும் இருக்கட்டும்னு அந்த ID ஜிடாக்ல சேர்த்துட்டு........
எல்லாரும் கண்டிப்பா மொத பகுதிய மறந்திருப்பீங்க, அதனால ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருங்க.(Click here)
Wednesday, September 10, 2008
Tuesday, September 2, 2008
Google Chrome Sucks for Tamil Unicode tools
Tuesday, August 26, 2008
தமிழ்-பதிவர்களின் வெறியாட்டம்
சாதாரணமாவே நம்ம மக்களுக்கு தமிழார்வம் அதிகமுங்க. அதுவும் அப்பால் தமிழ்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கிற தமிழனுக்கு தமிழ் மேல பற்று கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். blogs எனப்படும் பதிவுகள் நிறைய மக்களோட கருத்து பிரதி பலிப்பா இருக்காம்.
விசயகாந்த் கணக்கா ஒரு கணக்கு சொல்றேன் பாருங்க. அதாவது போன மாசத்துல (ஜூலை-2008) கணக்குப்படி இந்திய மொழிகளில் அதிகம் எந்த மொழிக்கு பதிவுகள் வருதுன்னு கணக்கெடுக்கலாம்னு நினைச்சேன். அதன் படி மொழி மற்றும் பதிவுகளின் எண்ணிக்கைய பாருங்க.
(Thanks BLOGKUT.COM)
Tamil-12384
Telugu-2396
Malayalam-5003
Kannada - 2416
Hindi-11649.
இதிலென்ன கொடுமைன்னா இந்தியாவுல அதிகம் பேர் பேசுற மொழியான ஹிந்தில தமிழைவிடக் குறைவான பதிவுகள் வருது. அதிகமா ஆங்கிலத்துலதான் எழுதுறாங்க போல. கணக்குப்படி நம்ம மக்களின் வெறிய பார்த்தீங்களா? இதுக்கு எல்லாம் யாரு காரணம்? பதிவர்களும், திரட்டிங்களும்தானுங்களே..
Disc: This is upto my knowledge and calculations are as per Google-Blog search-Language based-Rss.
தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்து 3 வருசம் ஆகிருச்சு அப்படிங்கிறதை சுருக்கமா சொல்லிக்கிறேனுங்க. 4 வது வருசத்துல அடியெடுத்து வைக்கிறேங்க.
Wednesday, August 20, 2008
கொழிஞ்சிக்காட்டூரும் ஆஸ்காரும்
அந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.
மணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ஊர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.
"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.
புரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க "ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா? கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.
சேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார்த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. "பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.
யாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு "செந்திலு போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.
The Award Goes to the Documentary Film "one and only by Senthil kumar" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் "எம்மவனா" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. "செந்தில் படத்துகு விருது கிடைச்சு"ன்னு சின்ன கண்ணு சொல்ல "செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. "ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சின்னகண்ணு சொல்ல,
"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா" "ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்" "பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. "காளியம்மா" தொட்டு எழுப்ப "உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.
Friday, August 1, 2008
ஆடி 18
நம்ம ஊரு பக்கம் ஆடி 18ன்னா ரொம்ப விஷேசமுங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசம் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.
- பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.
- காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
- பள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
- புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.
- எந்தத் தொழிலும் இந்த மாசத்துல ஆரம்பிக்க மாட்டாங்க. காரணம் பீடை மாசமாம். இன்னும் அதுக்கு என்ன வெவரம்னு தெரியலீங்க.
- சின்ன வயசுல ஆடி 18ன்னாவே திருச்சி வானொலியில 7:30 மணிக்கு சினிமாப் பாட்டு போடும்போது நீச்சல் குளம் படத்துல இருந்து "ஆடி-18.. ஆடி வரும் பொங்கிட்டு" அப்படின்னு கண்டிப்பா பாட்டு வரும். இப்பவும் வருதுங்களா??
சின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.
படம்: பவானி கூடுதுறை- 2006ம் வருசம் ஆத்துல நல்லா தண்ணி வந்துச்சுங்க. அப்போ எடுத்த படம்.
நீச்சல் குளம் அப்படிங்கிற படத்துல வந்த ஆடி பத்தின பாடல்
Thursday, July 31, 2008
குசேலன் - கதை
The story is set in a small village puthoor. A barber Balan (Pasupathi) is poor with his wife Sredevi (Meena) and three children. He is not able to cope with modernization with a new air condition beauty salon / parlour opened by Sarasan (Vadivel) set up opposite his shop. He does not get license or a loan for the salon. He is in debt and ridiculed by everyone in the village.
Life is tough for him – he does not have money to pay children's school fee, nor knows how he is going to have his next meal for his family. There enters a superstar Rajni (as Rajni), who is going to come to the village for a ten day shoot. The whole village is excited in preparing their superstar's arrival. Slowly a word spreads that Balan and Rajni are childhood friends. Balan, who was a laughing stock, becomes the center of attention. Everyone goes out of their way to help Balan in every way, so that they can get a favor when Rajni arrives to the village. Balan is under pressure from everyone to part a favor of Rajni. When Rajni arrives, Balan tries his best to approach Rajni – but his honesty and status of barber, does not allow him to go pass through the police security. When the village people know that Balan is not able to help them for a favor, they start taking their support to Balan back, abusing him of cheating them.
Balan depressed and sad is back to his old self. Rajni gives a ceremonial speech at a school function where he talks about today's life, modernization, the state of good people etc. opening eyes of everyone to the sad truth of peoples behavior. In the end, Rajni goes to meet Balan at his house, and Balan becomes an overnight hero in the eyes of his village people.
மேல இருக்கிறது "கத பறையும் போல்" படத்தின் கதை, IMDBல இருந்து எடுத்தது. அப்படியே பாத்திரங்களின் மட்டும் மாத்தி போட்டு இருக்கேன். இந்தக் கதைய தமிழ்ல எப்படி எடுத்து இருப்பாங்க?
Thanks: Pic: India glitz, Story: IMDB
Tuesday, July 29, 2008
இந்து மதத்திற்கு மட்டும் ஏன்?
இவுங்க கேட்குற கேள்வில உண்மையா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும். எந்தப் பக்கத்திலேயும் ஒரு நியாயம் இருக்குமாம். ஒரு நிமிஷம் யோசிக்க வைச்சதுங்க. அப்போ இது? தனிமடல்ல வந்த இந்த presentation நியாமான கேள்விகளான்னு சொல்லுங்க??
டிஸ்கி: தலைப்பு ச்ச்ச்சும்மானாச்சுக்கும்..மாத்திருவோம்.கோச்சுக்காதீங்க மக்களே.
Tuesday, July 22, 2008
மகசூல்-ஜூலை 22
- இவ்வளவு கேவலமான அரசியல்வாதிகள் இருக்கிற ஊருலதான் நாம் பொறந்து வளர்ந்தோமா? இதுக்கு சூதாட்டமே பரவாயில்லை. ஓட்டுப்போட காசு, வராம இருக்க காசு, ஏமாத்த காசு. சே.
- தமிழ்ப்பதிவுகள் எல்லாம் அரசியல் பேசாம காலம் தள்ள, டுவிட்டரில் Commentary அருமை. ஒரு பாராளுமன்றதுக்குள்ள உக்காந்து இருந்த திருப்தி.
- விலைவாசி இப்படி ஏறிக்கிடக்க இந்த ஆட்சி கவுந்திருந்தாவே பரவாயில்ல.
- Pan அட்டை தொலைஞ்சு போயிருச்சு. என்ன பண்ண? புதரகத்துல இருந்து வாங்கலாம்னா பழைய அட்டை எண்ணும் மறந்து போச்சு.
- சத்யம் பாட்டுக்கள மொத தடவை கேட்கும் போது நல்லாதான் இருந்துச்சு. ஆனாலும் சக்கர கட்டி திரும்ப கேட்கத்தோணுது. சத்யம் அடடா பாட்டுக்கும் சக்கரகட்டி டேக்ஸி பாட்டுக்கும் நெறைய சம்பந்தம் போல இருக்கே.
- குசேலன் பாட்டுங்க ஏன் இப்படி இருக்கு? படத்துல நல்லா எடுத்திருப்பாங்களோ?
- ஆயுதம் செய்வோம் பார்த்தேன். முன்னா பாய் மூணாவது பகுதியோ?
- வல்லமை தாராயோவுக்கும் மெளன ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?
- காவல் நிலையம் போக வேண்டிய கட்டாயம் வந்திருச்சு. தொலைச்சதை காவல் நிலையத்துல தேட வேண்டியதா இருக்குங்க.
- வெயில் இங்கே தாளிச்சு எடுக்குதுங்க. என்ன கொடுமைங்க இது. நான் புதரகத்துலதான் இருக்கேனா?
- கண்ணாடி போட்டு பழகியாச்சு. (வேற என்ன பண்ண?)
Wednesday, July 16, 2008
பெயரிலிக்கு ஒரு யோசனை
உங்களோட பேரு -/பெயரிலினு வெச்சு இருக்கீங்க. இதனால உங்க மறுமொழிகளை தமிழ்மணத்துல படிக்க முடியுங்களா?
மேலும் இந்தத் தொடுப்பைப் பாருங்க( ம திரட்டில வரும் ))
http://tamilmanam.net/comments/-/பெயரிலி. இது வேலை செய்யாதுங்களே... யோசனைய சொல்ற அளவுக்கோ சண்டை போடுற அளவுக்கு நாங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லீங்க அப்படின்னு இங்கே நாம் சொல்லிக்கிறோமுங்க.
அட இப்படி மொக்க போடவா பெரியவங்க பேர இழுக்கனும்.... இருங்க..
ஒரு யோசனை சொல்றேங்க. ஒரு பந்தை எடுத்துக்குங்க, ஒரு செவுத்த பார்த்து வீசுங்க. பந்து திரும்பி உங்களுக்கே வந்துரும். மறுபடியும் வீசுங்க. திரும்ப உங்களுக்கே வரும். வீசிட்டே இருங்க வந்துட்டே இருக்கும். இதனால செவுரு என்ன ஒடைஞ்சா போயிருங்க?
ஏதோ ஒன்னை முடிவு பண்ணியாச்சு, அதை செஞ்சாச்சு அப்புறம் எதுக்குங்க எல்லாரும் எல்லாத்துக்கும் வெளக்கஞ்சொல்றீங்க? இப்படி வெளக்கம் சொல்லிச் சொல்லியே தமிழ்மணம் முழும் வெளக்கமாவும், குத்தஞ்சொல்றதாவும் இருக்கு.
இந்தப் புண்நவீனத்துவியாதிங்க இருக்காங்களே அவுங்களுக்கு காமம், கருமாந்திரம், மூத்திரம் ...இப்படி வார்த்தைங்க போட்டுதான் எழுத வருமா?. நல்லதா எழுதினா நாறிப்போயிருவாங்களா? இல்லே புண்நவீனத்துவம் பழசாகிருமா?
ஆடி-1
அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. பிரிச்சு வெக்கிறது தான் வெக்கிறீங்க கல்யாணம் ஆகி கொழந்த குட்டிங்க இருக்கிறவங்களா பார்த்து பிரிச்சி வெக்கிறது. அப்படி பிரிச்சு வெச்சுட்டா இந்தக் கருமம் புடிச்ச தள்ளுபடி இருக்காதுல்ல. அது என்னய்யா புதுசா கண்ணாலம் ஆனவங்களை மட்டும் பிரிக்கிறது? அது பாவமில்லையா?
சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம்.
அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.
Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு இருக்கிற தேங்காயால அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க..
ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே போட்ட பதிவுதானுங்க... [நன்றி]
Monday, June 30, 2008
மகசூல் - ஜூன் 30
- அவியல்னு நெறைய பேர் எழுதறதால மகசூல்ன்னு மாத்த வேண்டியதாய் போயிருச்சு.
- பதிவுகள் பார்க்கலைன்னா மண்டை வெடிச்சுரும், ரத்த வாந்தி எடுத்துருவேன்னு எல்லாம் நெனப்பு இருந்துச்சு. அது எல்லாம் சுத்தப் பேத்தல்ன்னு தெரிஞ்சுப் போயிருச்சு.
- ஊர்ல இருந்து என்ன வாங்கி வந்திருக்கே மாப்பிள்ளைன்னு ஆள் ஆளுக்கு கேட்க "நெறைய கடன் வாங்கிட்டு வந்திருக்கேண்டா, கொஞ்சம் கட்டுறியா"ன்னு கேட்டா ஏன் எல்லாரும் மொறைக்கிறாங்க?
- ஜெட் லாக் எல்லாம் இல்லாம் இருக்கிற அளவுக்கு செம பிஸியா இருந்துட்டேன். 4 மணி நேரம் தூங்குறதே பெருசா இருந்துச்சுன்னா பார்த்துக்குங்க.
- என் தங்கையின் திருமணத்திற்கு வருகை தந்த அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், மாறுவோம் மாற்றுவோம் மக்களுக்கு நன்றி.
- தனி மடல் மூலமும், அலை பேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த விசு, டி ஆர் & குடும்பத்தினர், உரத்த சிந்தனை குழுமம், halwa guys மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
- தன் குடும்பத்தோடு வந்து குறைகளை சொல்லாமல் புன்முறுவலோடு வாழ்த்தியருளிய தஞ்சாவூரான் குடும்பத்திற்கு நன்றி.
- சந்தைக்கு போவனும், ஆத்தா வையும் காசு குடு ரேஞ்சுல எப்பவுமே வந்து போற கவிதாயினிக்கு நன்றி.
- நிலா குடும்பத்துக்கு நம்ம குடும்பத்துக்கு செம பொருத்தம் போல.குடும்ப சகிதம் "பச்சக்"குன்னு ஒட்டிக்கிட்டாங்க. கண்ணாலத்துக்கு வரலைன்னாலும் நன்றி!
- பெங்களூரில எல்லாப் பதிவர்களும் பிஸி போல யாரையும் சந்திக்க முடியல.
- சென்னையில தமிழ்மணம் சார்புல ஏற்பாடு செஞ்சிருந்த சந்திப்புக்கு போக முடிஞ்சது. பதிவர்களில் ஆழியூரான் கவர்ந்தார். ரொம்பவும் formala இருந்ததால பிடிப்பில்லாம இருந்துச்சு.
- சென்னையும், பெங்களூரும் ரொம்ப வசதியானவங்க மட்டுமே வாழ முடியும் போல. என்னால் ஒரு ஜட்டி கூட வாங்க முடியல. ஈரோட்டுலதான் எல்லா துணியையும் வாங்கினேன்.
- ஊருல எல்லாரும் செம வசதியா வாழறாங்க. போக்கத்துப்போயி நாந்தான் ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன். பேசாம பால் பண்ணை வெச்சு இருந்தாவே பெரியாளா ஆகிருப்பேன் போல.
- கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ணாடிய எங்கே போனாலும் தூக்கிட்டு போறது கடுப்போ கடுப்பு.
(தொடரும்)
Saturday, June 7, 2008
Tuesday, June 3, 2008
மகசூல்-ஜூன் 3
நீங்க எப்போ சிங்கய திருப்பி வெச்சீங்க?
பெனாத்தல் : என்னதான் நடக்குது என் ஜிடாக்குல?
ஜிடாகல எதுவுமே நடக்காது. ரோட்ல வேணுமின்னா நடக்கலாம்.
தேவ்: Vijay-Vijaykanth-VijayaTR Peravai Thuvakkam in ORKUT !!!!
இது அவுங்களுக்குத் தெரியுமா? அவுங்க என்ன துரோணாச்சாரியர்களா??
ராம் - Busy
வழக்கம் போல 10 பேர் கிட்டே அரட்டை, நிமிஷத்து ஒரு மடல்னு வருது, அப்போ ரெம்ப பிஸிதான் போல.
சேதுசமுத்திர திட்டம் நிறைவேறுவதே என் ஆசை : முதல்வர்
நீங்க ஆசைப்பட்டா மட்டும் போதுமாங்கண்ணா?
3 மாதங்களில் கட்சி நிர்வாக பொறுப்புகள்...மாற்றம் * பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி உறுதி.
ஏன், சு.சாமி இன்னும் நெறைய CD வெச்சு இருக்கிறார்னு உளவுத்துறை சொல்லிருச்சோ?
Invisible Mode: தலை துண்ட போட்டு ஒளிஞ்சுகிட்டு நிறைய பேர் வராங்க. அவிங்க வீட்டுக்கு போறதுக்குதான் அப்படி மக்கள் போவாங்க, இங்கேயுமா??
ஒகேனக்கல் விவகாரத்தில் ஆலோசனை : விடாப்பிடியாக பேசுகிறார் எடியூரப்பா
லக்கி: சரி சரி, அடுத்த தேர்தலுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சூரியன் உதிக்க தாமரை மலரும்.
Bloods of Bloods: மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து இந்தத் திட்டத்துக்கான வெற்றியை நிலை நாட்டுவோம்.
இலை. கணேசன்: நாம ஃப்ரியா இருக்கலாம். மேலிடம் எங்கேயாவது நம்மள கோர்த்து விட்டுரும். வேலை முடிஞ்சது.
விசயமுள்ள காந்த்: 2011ல் அதைப் பத்தி பேசுவோம்.
பாஜக மேலிடம்: அடங்கொய்யால.. நம்மளுக்கு இல்லேயா ஆப்பு அடிக்கிறார் இந்த ஆளு?
உப்புமா, அவியல், பொரியல், காப்பி-பேஸ்டு, ____ திட்டுறதுன்னு ஒரே மாதிரி பதிவுகள் வருது. இதை எல்லாம் உடைக்க தேன்கூடு போட்டிகள் மாதிரி ஏதாவது திரும்ப வருமா?
Sunday, June 1, 2008
மகசூல்-ஜூன் 2
- தனி நாடு கேட்டும், மாநில வெறிய்யேத்துற கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மக்கள் சுத்தி சுத்தி ஆப்பு அடிக்கிறாங்க. காட்டாளும், தெலுங்கானாவுமே இதுக்கு சாட்சி. தனிமாநிலம் கேட்கிறவங்க சாக்கிரதையா இருந்துக்குங்கப்பு, மக்கள் விவராமாயிட்டாங்க.
- Tubetamil.com கலக்கல்ஸ். உடனுக்குடன் மேட்டர் கிடைக்குது.
- மலேசியா பொன்னி அரிசுக்கு உரிமை கேட்டிருக்காங்க. நாம இப்படியே இருந்துருவோமா? அரசாங்கம் முன்னெச்சரிக்கையா ஏதும் செய்யாதா?
- ஓபாமா வந்தாச்சு, பார்ப்போம். மொக்கையனும், புஷ்ஷும் போட்டுத்தாக்குறாங்க. ஆனாலும் மாமி அடங்க மாட்டேங்குறாங்களே..
- சிம்பு பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறாராம். ஒன்னுக்கு போற மாதிரி படம் போட்டுறாதய்யா சாமி.
- ஜீன் 13ம் தசாவதாரம். புதரகத்துல படம் பார்த்துரலாம்னு இருந்தேன். முடியாது போல இருக்கு. இந்தியாவுல அடுத்த ஒரு மாசத்துக்கு சீட்டு வேற கிடைக்காதே :(
- அடுத்த ஞாயித்துக்கிழமை பெங்களூருல இருப்பேன், பொட்டி, பெட்டி, புட்டின்னு கட்டுறதுகு பல வேலை இருக்கு. பதிவுலகம் கொஞ்சம் நாள் நல்லா இருக்கும் போலத் தெரியுது.
- பதிவுலகத்துல பேர் எல்லாம் பயங்கர குழப்பமா இருக்கு. 2 குசும்பன், 2 பாபா(பாஸ்டன் பாலா, பால பாரதி), நெறைய சரவணன்.
- பாபா பண்ணினதே சென்னை கிங்ஸ் தோத்துப் போனதுக்கு காரணம். அட அடிக்க வராதீங்க. பா-அகலப் பந்து போட்ட பாலாச்சீயும், இன்னொரு பா-பார்த்தீவ் பட்டேல் விட்ட ஒரு ஓட்டமும், விட்ட ரன் அவுட்டும். ஆமா ஒரு ஓவருக்கு 8 ரன் அடிக்க முடியாதா? அப்படின்னு கேட்டா, டெண்டுல்கர் பண்ணலியா நான் கேட்பேன்.
- "கழிவறையில் பீச்சி அடிக்கப்படும் தாய் பால்", இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்ட போது நாம எங்கே போய்ட்டு இருக்கோம்னு கவலை வருது.
- செல்வராகவனும், யுவனும் மறுபடியும் சேர்ந்துட்டாங்களாம். ஷங்கரின் தயாரிப்பில் கார்த்திக்ராஜாவுக்கு இசை அமைக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, ராசி எப்படியோ?
Friday, May 30, 2008
நான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya
But நானும் ஒரு Human Being தானேன்னு வித்யா சொல்லும் போதும், 10 மணிநேரமாவது துக்கமாவே இருப்போம்னு தேவி சொல்லும்போதும்- கண்ணீர் விட வெச்ச சில தருணங்கள்.
பல வருஷம் ஆச்சு இப்படி ஒரு வெட்கத்தைப் பார்த்து- வாழ்த்துக்கள் வித்யா.
வித்யா என்கிற ஒரு பொண்ணுக்குள்ள இப்படி ஒரு தைரியமா? தெளிவா? இப்படியுமா ஒரு மனசு கல்லு மாதிரி... மன்னிக்கனும் ஒரு அற்புத சிலை மாதிரி இருக்கும். Hats Off வித்யா.
ஹேமா மாதிரி எல்லாருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிற கூடாதா ஆண்டவா..
Wednesday, May 28, 2008
எடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு
பெங்களூர் உள்ளூர் முன்னேற்றத்துல குமாரசாமி ஒரு வேகத்தை கொண்டுவந்தாரு. முடிஞ்ச வரைக்கும் அவர் கட்சியால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துட்டு இருந்தாரு. அப்பவும் வேதிகே, காட்டாளு, ரேணுகா எல்லாம் வந்துட்டு இருந்தாலும் கொஞ்சம் நாம மூச்சு விடற மாதிரி வெச்சு இருந்தாரு. இதை பாஜக காப்பாத்துமா?
இனி நம்ம மேட்டருக்கு வருவோம்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்திப்போட்டு தனது சாணக்கியத் தனத்தை மறுபடியும் நிலைநாட்டினார் தலைவர். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடியால் கூட இருக்கலாம். ஆனால் வாட்டாள், காட்டாள் மாதிரி ஆளுங்ககிட்டே எல்லாம் மோதி மக்களை காயப் படுத்த வேணாம்னு நினைச்சு இந்தத் திட்டத்தோட செயலாக்கத்தை ஒத்தி வெச்சாரு. ஆனா கர்நாடக மக்கள் வாட்டாளுக்கும்,, காங்கிரஸுக்கும் சேர்த்தே ஆப்படிச்சுட்டாங்க. இதுல மண்டை காயறது வழக்கம் போல தமிழனுங்கதான். குறிப்பா தர்மபுரி மாவட்ட மக்கள். இனி கலைஞர் என்ன செய்வாரு?? விகடனுக்கு எடியூரப்பா சொன்ன விஷயம் கலைஞர் வயித்துல புளிய கரைச்சு இருக்கலாம்.
விகடன் கேள்வி: 'நிலையானஅரசு கர்நாடகத்தில் வரட் டும் என்றுதான் திட் டத்தை ஒத்தி வைத்தார் எங்கள் முதல்வர்.தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?''
எடியூரப்பா: (கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே) 'இந்தக் கேள்வியைத்தான் முதல்ல
கேட்பீங்கனு நினைச்சேன். ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்..! தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.
தமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பிரச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''
ஆக மொத்தத்துல அம்மாவுக்கு அடுத்த தேர்தல்ல பேச அவல் கிடைச்சாச்சு, எப்படியும் கூட்டு வெச்சுக்குவாங்க. அப்புறம் என்ன? இந்த முறை நாடாள(!)மன்ற தேர்தலுக்கு ஒரு செம ட்ரம்ப் கார்ட் கிடைச்சாச்சே. அதுக்குள்ள இந்தப் பிரச்சினைய முடிக்க தலைவர் பார்ப்பாரு. பஸ் எரியாம, ரத்தம் பார்க்காம விடமாட்டாங்க போல இருக்கு. இந்த விளையாட்டுல வழக்கம் போல தோத்து போயி காய்ஞ்சு கருவாடா போறவங்க நாமதானுங்களே. ஒழுக்கமா வாழ விடுங்கப்பா..
Saturday, May 24, 2008
Google Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்
முதல்ல ஒன்னு சொல்றேங்க. மாங்கு மாங்குன்னு பொட்டியத் தட்டி, விடிய விடிய கண்ணு முழிச்சி உருவாக்கின திரட்டியில இருக்கிற வசதிகளை எல்லாம் சுலபமா ரெண்டு நிமிஷத்துல பண்ணிட முடியாதுங்க. அதுக்கான வசதி இன்னும் வரலை. பிற்காலத்துல வரலாம்.
எல்லாருடைய பின்னூட்டங்களையும் படிப்பீங்க அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குன்னு சில பதிவர்களை பிடிச்சு இருக்கும். அவுங்க பின்னூட்டங்களை தொடர்ந்து படிச்சுட்டு வருவீங்க. அவுங்க பதிவுகளின் ஓடைகளை எடுத்து திரட்டலாம். உதாரணத்துக்கு நீங்க தொடர்ந்து 10 பதிவர்களின் பதிவுகளை படிச்சுட்டு வர்றீங்கன்னு வெச்சுக்கலாம். அவுங்க பின்னூட்ட ஓடையை சேர்த்துக்குங்க.
உதாரணத்துக்கு http://vivasaayi.blogspot.com/feeds/comments/default. இது என்னோட பின்னூட்ட ஓடை. http://*********.blogspot.com/feeds/comments/default இப்படி எந்த blogspotக்கும் பின்னூட்ட ஓடை இருக்கும். இதுல என்ன ஒரு வசதின்னா பின்னூட்டம் முழுசாவே படிச்சுக்கலாம்.
wordpressக்கு http://*******.wordpress.com/comments/feed/. திரட்டிகளை அலுவலகத்துல தடுத்து இருந்தாலும் ரீடர் மூலமாவே படிச்சுக்கலாம்.
Saturday, May 17, 2008
அவியல் - 1
- அரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்?
- மிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே.
- தனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ? நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க.
- எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தாச்சு. techsatishல இருந்து இப்போ TubeTamilக்கு மாறியாச்சு. இடையில aarampamம்.
- புதரகத்துல வெயில் காலத்துல கூட குளிருது, இந்த லட்சணத்துல மழை வேற. நம்ம ஊர்ல மழை எப்படா வரும்னு இருக்கு, இங்கேயோ தலைகீழ்.
- யாராவது பதிவுகள்பத்தி பேசினா கடுப்பா இருக்கு. பதிவர்கள் என்கிட்ட வேற என்னத்தை பேசுவாங்க. ஏன்?
- ஆஹா FM கேட்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல அடிக்கடி நமீதா நர்ஸரி ஸ்கூல்னு ஒரு வெளம்பரம் வருதே, அது என்னங்க?
- குருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்.
- புதுசா வந்த எந்தப் பாட்டையுமே கேட்கத் தோணலை, தசாவதாரம் உட்பட. தாம் தூம் பரவாயில்லை. வாரணம் ஆயிரம் பாதி பாட்டுகளும்கூட கடுப்பாவே இருக்கு.
- சன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்.
- எப்படா இந்தியா போலாம்னு இருக்கு. ஏன்?
- IPL வெளங்குமா? DIGITALipl.comதான் பார்க்கிறேன்.
- ரொம்ப நாளாச்சு ஊர் சுத்தி, அதுதான் கடுப்பா இருக்கு.
- பதிவுகளை விட டுவிட்டு பைத்தியம் சீக்கிரம் புடிச்சிருச்சு. பதிவுகளேயே கட்டிட்டி மாறடிக்க முடியல இது டுவிட்டும். அங்கேயும் பதிவர்கள்தான் விதை போட்டு தமிழ் வளர்த்துட்டு இருக்காங்க. வாழ்க தமிழ்!
அவியல் தொடரும்...
Wednesday, May 14, 2008
மூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க?
ரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங்க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புரியா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.
ஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.
உதாரணம்:
சரவணன்=சூர்யா
சிவாஜி ராவ்= ரஜினி காந்த்
- மேரி=?
- ரேவதி
- சுகாசினி
- ரிஷி பாலா
- டயானா மரியம்
- பைரவி
- ரங்கராஜ்
- வெங்கட் பிரபு
- மூர்த்தி
- ஸ்வேதா கொன்னூர்
- உமா சங்கரி
- நக்மா கான்
- நக்கத்
- ஜோசப்
- கருணாநிதி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...