Tuesday, July 29, 2008

இந்து மதத்திற்கு மட்டும் ஏன்?இவுங்க கேட்குற கேள்வில உண்மையா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும். எந்தப் பக்கத்திலேயும் ஒரு நியாயம் இருக்குமாம். ஒரு நிமிஷம் யோசிக்க வைச்சதுங்க. அப்போ இது? தனிமடல்ல வந்த இந்த presentation நியாமான கேள்விகளான்னு சொல்லுங்க??


டிஸ்கி: தலைப்பு ச்ச்ச்சும்மானாச்சுக்கும்..மாத்திருவோம்.கோச்சுக்காதீங்க மக்களே.

55 comments:

 1. Excellent presentation. Answer is not necessary, all questions have answer within it. Thanks for sharing the same.

  ReplyDelete
 2. ஏ...தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போடடு வாங்கு..

  ஃஃஃஃ

  எப்போ பதிவின் பின் அமைப்பு காவி நிறத்திற்கு மாற்றுகிறீர்கள்...?

  ஃஃஃஃ

  ReplyDelete
 3. இளா,
  நல்ல பதிவு. யோசிக்க வேண்டிய கேள்விகள்..

  அரசியல்வாதிகளைக் கேட்டால் "வாக்கு வங்கி" என்ற பதில் சாதாரணமாய்க் கிடைக்கலாம்.

  அது நம் ஜனநாயகத்தின் குறைபாடு..

  ReplyDelete
 4. //திருப்பிப் போடடு வாங்கு//
  பதிலே சொல்லாம அல்வா குடுக்குறீங்களே அப்புறம் எங்கே வாங்க?

  //எப்போ பதிவின் பின் அமைப்பு காவி நிறத்திற்கு மாற்றுகிறீர்கள்...?//
  இந்து மதம்னா காவின்னு யாரு சொன்னாங்க? நானும் இந்துதான், ஆனா காவி இல்லீங்க.

  அப்புறம் நம்ம பதிவு என்னிக்குமே பசுமைதாங்க.

  ReplyDelete
 5. சிந்திக்க வேண்டிய கேள்விகள்

  ReplyDelete
 6. இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தாலுமே இந்த கேள்விகளுக்கு நியாயம் இல்லை. ஆனால் இந்திய மத சார்பற்ற நாடு... முஸ்லிம் நாடுகளுடன் ஒப்பிடுவது சற்றும் பொருந்தாதது. 14 முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சிலைடில் வருகின்றது. அரசு பணிகளில் 14 சதம் என்ன, 2 சதம் கூட முஸ்லிம்கள் இல்லை..... அதையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 7. //இந்தியா ஒரு இந்து நாடாக /
  இதை நான் கடுமையாக கண்டிக்கிறேங்க. இது இந்து நாடு அல்ல. அனைத்து மதத்திற்கு பொதுவான நாடுதான் இந்தியா. இங்கே பெரும்பான்மையான மக்கள் இந்துவாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த பெரும்பான்மைக்காக கட்சி ஆரம்பிச்சு குளிர் காயும் மக்களும் இருக்க, அதுக்காக பல வெகுஜனத்தைக் கொல்லும் so called சிறு பான்மையினரும் வாழும் நாடுதான் இந்தியா.

  ReplyDelete
 8. ///இந்து மக்கள் ஆண்டா சிலருக்கு எரியுது, கம்முன்னு பாகிஸ்தானுக்கோ ஈரானுக்கோ இல்லாட்டி அமெரிக்காவுக்கோ இந்தியாவை தாரை வார்த்து குடுத்துரலாங்களா?///
  இளா அண்ணே! இதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரமா?... நல்ல மனசுண்ணே... நாங்களெல்லாம் காலம் காலமா இந்து என்ற கேட்டகிரியில் இருப்பவர்களுக்குத் தான் ஓட்டுப் போட்டு வர்றோம்......
  ///பல வெகுஜனத்தைக் கொல்லும்///
  அப்படி செய்பவர்களை வெறுத்து, அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்று சொல்பவர்கள் நாங்கள்...

  ReplyDelete
 9. அதென்ன பாஜக ஆள்ர மாநிலமா பார்த்து குண்டு வெக்கிறது? அங்கே மட்டும் என்ன ...... ஆடுது? அங்கேயும் எல்லா மாநிலத்துலேயும் இருக்கிற மாதிரிதானே?

  ReplyDelete
 10. இந்த "இந்து" என்பது சமீப காலமாகத்தானே இளா..

  ஒரு பெரும்பான்மை பலத்திற்காக அரசியல் கட்சிகள் கூட்டு சேருவதுப் போல் கூட்டனியாகத் தான் இன்னும் "இந்து"மதம் இருக்கிறது...

  ///
  இங்கே பெரும்பான்மையான மக்கள் இந்துவாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
  ///

  ஃஃஃஃ
  வேற்றூமையில் ஒற்றுமை என்று சொல்லிவிட்டு, மற்ற நாடுகள் போல் ஏன் இல்லை என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது..

  ஃஃஃஃ

  கடவுளர்கள் இருக்குமிடத்தை மீட்க கடவுளிடம் சென்று முறையிட்டு வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்..ஒரு வேளை ஞானம் பிறக்கலாம்..

  ஃஃஃஃ

  இதுக்கு பின்னட்டத்தில் பதில் சொல்ல முடியாது..ஆற அமர ஒரு பதிவு போடுறேன்..

  ///
  பதிலே சொல்லாம அல்வா குடுக்குறீங்களே அப்புறம் எங்கே வாங்க?
  ///

  ReplyDelete
 11. அநானி மக்களே நல்லா இருப்பீங்க. போய் உங்க புள்ள குட்டிகளை நல்லா பாஜக ஆளாத மாநிலமாப் பார்த்து படிக்க வையுங்க. Closed.

  ReplyDelete
 12. ஏனுங்கண்ணா...மற்றவர்கள் நல்லா இருப்பது பிடிக்கலையா..

  இப்படித் தான் குஜராத்தில் குண்டு வைக்கவே முடியாது என்றூ சொன்னார்கள்...வைச்சிட்டானுங்க..

  ஒழுங்கான கட்டமைப்பு இல்லாமல் சும்மா வாய் சவடால் விட்டால், தீவிரவாதம் தன் வாலை ஆட்டித் தான் பார்க்கும்..

  இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டியதை வளர விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்....


  ///
  ILA said...

  அதென்ன பாஜக ஆள்ர மாநிலமா பார்த்து குண்டு வெக்கிறது? அங்கே மட்டும் என்ன ...... ஆடுது? அங்கேயும் எல்லா மாநிலத்துலேயும் இருக்கிற மாதிரிதானே?
  ///

  ReplyDelete
 13. //இந்த "இந்து" என்பது சமீப காலமாகத்தானே இளா..//
  உண்மைதாங்க. .சமீப காலமா "அடுத்த"வர்களின் தாக்குதல், ஆளுமை அதிகமானா வரும் பயம்தான் "இந்து"க்களுக்கும் அப்படியே கன்னடர்களுக்கும். அப்பதான் தப்பை தைரியமா செய்யறாங்க.

  ReplyDelete
 14. //ஒரு பெரும்பான்மை பலத்திற்காக அரசியல் கட்சிகள் கூட்டு சேருவதுப் போல் கூட்டனியாகத் தான் இன்னும் "இந்து"மதம் இருக்கிறது..//
  ஒரு சிரு திருத்தம்ங்க. இந்து மதக்கட்சிகள்னு நான் நினைக்கிறேன்.

  ReplyDelete
 15. இனவாதம், அடிப்படைவாதம் உலகம் முழுவதுமே உள்ள பிரச்சனைகள் தான், இந்தியாவில் மட்டுமே இவை இருப்பதாக சொல்வதும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, ஒரிசா பாதிரியார் எரிப்பு இவைப்பற்றி எதுவுமே சொல்லாதா இந்த சிலைடு இந்துத்துவாக்களின் கொள்கை பரப்பு ஸ்லைடு, உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அதுக்கு வெளம்பரமாக இந்த பதிவு அமைந்துவிட்டது.

  புத்த நாடாக இருந்த நேபாளத்தை இந்து நாடாக்கியதெல்லாம் உலக நன்மைக்கானதா ?

  மதவாதம் பொல்லாதது தானே, நாமெல்லாம் மனிதன் என்பதை மறந்து நாமெல்லாம் இந்து என்று சிந்தனையைத் தூண்டச் செய்வதும் மதவாதம் தானே ?

  இஸ்லாமியர்கள் மத அடிப்படைவாதத்தைத் தாண்டியும் சிந்திக்க வேண்டும் என்பதே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்

  நேற்றுதான் எங்கேயோ படித்தேன். அல்லாவோ, முகமது நபியோ சொல்லாதவொன்றை யாரோ ஒரு இஸ்லாமியத் தலைவர் சொல்லிவிட்டார் என்று அவரை வறுத்து எடுக்கிறார்கள். அப்படி என்ன சொன்னார் ?

  "இந்து மத அவதாரங்களும் இறைத்தூதர்கள் தான் ஆனால் குரானில் வராதா இறைத் தூதர்கள்"

  அது எப்படி இல்லாதா ஒன்றை சொல்லலாம் என்று அங்கு போர் போலவே விவாதம் நடந்துவருகிறது.

  பிறமதத்தினரையும் தன்னைச் சார்ந்தவனாக நினைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கூட அதைச் சொல்லி இருப்பார். இவர்கள் என்னமோ சத்தியம் தவறாத உத்தமர் போலவே, குண்டு வைப்பவனைப் பிடித்துக் கொடுக்காமல் யாரோ மேடைப் பேச்சில் இந்துக்களின் கடவுள் அவதாரத்தை இஸ்லாமுடன் இணைத்துவிட்டார் என்று குதி குதிக்கிறார்கள்.

  http://kumarimuslim.blogspot.com/2008/07/blog-post_1900.html

  http://kumarimuslim.blogspot.com/2008/06/blog-post_16.html

  பறையன் தீண்டத்தகாதவன் என்று இந்து மனுதர்ம வேதத்தில் சொல்லி இருப்பது போலவே இஸ்லாமியர் அல்லாதோர் காஃபிர்கள் என்றே தூற்றப்படுகின்றனர்.

  இஸ்லாமிய நம்பிக்கைப் படி இஸ்லாமியர்கள் அல்லாவின் சொர்க்கத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளட்டம் ஆனால் இங்கு மண்ணுலகில் வாழும் பிற மதத்தினருக்கு இந்த புவி வாழ்வு தானே சொர்க்கம் என்று விட்டுவைக்கலாமே. :(

  ReplyDelete
 16. //நானும் இந்துதான், //

  ILA,
  You must define first who is Hindu.

  When you say Hindu, you automatically find a place in the parapanisam hierarchy ladder.

  When you place yourself in that ladder then you have few above and few below correct?

  How can you tolerate this. Can you practice Hinduism without the varnasiram ladders ( Discrimination based on the birth is called as parppanism)

  If you really know about Varnasiram then you will step back from Hindu and never join to any religion. All religions has its own flavor of poisons.

  If you look back the history you will know that ,all religions are root of politics. If you are with a religion then you are bound to speak for it. If can step away from all this mess you will see a new world just by practicing humanity , which is very important than any Religion/God based rituals.

  Common people in India changed their identity just to get rid of varnasiram. Who practiced and still practicing the varnasiram should be ashamed of all the mess in India.

  Nazism , Racism and Parpanisam are 3 big poisons in the world.

  I try not to speak more on this. Let the god and religons takes care of their followers.
  -Thanks

  ReplyDelete
 17. //இஸ்லாமிய நம்பிக்கைப் படி இஸ்லாமியர்கள் அல்லாவின் சொர்க்கத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளட்டம் ஆனால் இங்கு மண்ணுலகில் வாழும் பிற மதத்தினருக்கு இந்த புவி வாழ்வு தானே சொர்க்கம் என்று விட்டுவைக்கலாமே. :(//

  Not only Islamist.... let all the religion's followers share the promised heaven or find their own religion based heaven as told in their books. Please leave the earth alone for people like us.

  :-((

  ReplyDelete
 18. என்னய்யா உடம்பு சரி இல்லையா? முத்திரை வாங்க ரெடி ஆகிட்ட மாதிரி இருக்கு!! :))

  ReplyDelete
 19. //முத்திரை வாங்க ரெடி ஆகிட்ட மாதிரி இருக்கு!! :))//
  நமக்கு ஏதுங்க முத்திரை? நாமே போட்டுக்கிட்டாத்தான் உண்டு... நாம ஒரு திராவிட ++சுங்கிறது ஊர் அறிஞ்ச விஷயம். இப்படியும் ஒரு பதிவு போட்டுப்பார்க்கலாமே..

  ReplyDelete
 20. I would suggest the discussion be focused on the blog topic.

  Mr. Kalvettu could start a seperate thread to discuss his questions. My humble suggestion.

  ReplyDelete
 21. இதில் கேட்கப்பட்டிருக்கும் எல்லா கேள்விகளும் குப்பை என்று சொல்ல முடியாது....
  குறிப்பாக "பொது சிவில் சட்டம்". ஒரே நாடு ஒரே மக்கள் என்றான பின் எதற்கு தனி தனி சட்டம்?? ஏன் இதை முஸ்லீம் சகோதரர்கள் எதிர்க்கிறார்கள்???
  எனக்கு தெரிந்து சில கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில் சுதந்திர தினம் கூட கொண்டாடுவது கிடையாது...அங்கு படிக்கும் மாணவிகள் பூவைத்துகொள்ளகூடாது, பொட்டுவைத்துகொள்ளகூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு உண்டு....அரசாங்கம் அந்த பள்ளிகளின்மேல் ஒரு நடவடிக்கையும் எடுப்பது இல்லை...
  என்னத்த சொல்றது??

  ReplyDelete
 22. இங்கு 85% சதவீத இந்துக்கள் எனபது யார்?

  ReplyDelete
 23. அந்த 24 வது SLIDE ம் உங்க பதிவின் தலைப்பும்ம் இடிக்குதே!!!!

  ReplyDelete
 24. Most of the stats shown here are at "MACRO" level. At a macro level, even we can manipulate and say "India is really shining"

  The problem comes when you get to "Micro" ?????

  ReplyDelete
 25. அண்ணே,
  நீங்க எந்த விதத்துல இந்த பதிவை போட்டீங்கனு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சி இந்த ஹஜ் யாத்திரை சலுகையை கொடுத்தோம், ரெண்டு மூணு மாநிலத்துல முதலமைச்சரா வெச்சிருக்கோம், ஜனாதிபதி ஆக்கினோம்னு சொல்றது எல்லாம் சரியில்லை.

  நாம முதல்ல செய்ய வேண்டியது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது தான். நல்ல கல்வியும், சரியான சமூக அந்தஸ்தும் கிடைக்கும் போது தானாக நிலைமை மாறும்.

  இதை விட்டுட்டு வேற என்ன செய்தாலும் இந்த மாதிரி ஸ்லைட்ல மட்டும் போடவே உதவும். நடைமுறைக்கு சரிப்படாது :-(

  ReplyDelete
 26. புதசெவி

  /// நாம ஒரு திராவிட ++சுங்கிறது ///

  நாம என்று வேற சொல்லிட்டிங்க..

  அதுலெ யார் யார் எல்லாம் இருக்காங்க என்றும் விளக்கிடுங்க...

  ReplyDelete
 27. ////அண்ணே,
  நீங்க எந்த விதத்துல இந்த பதிவை போட்டீங்கனு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சி இந்த ஹஜ் யாத்திரை சலுகையை கொடுத்தோம், ரெண்டு மூணு மாநிலத்துல முதலமைச்சரா வெச்சிருக்கோம், ஜனாதிபதி ஆக்கினோம்னு சொல்றது எல்லாம் சரியில்லை.

  நாம முதல்ல செய்ய வேண்டியது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது தான். நல்ல கல்வியும், சரியான சமூக அந்தஸ்தும் கிடைக்கும் போது தானாக நிலைமை மாறும்.

  இதை விட்டுட்டு வேற என்ன செய்தாலும் இந்த மாதிரி ஸ்லைட்ல மட்டும் போடவே உதவும். நடைமுறைக்கு சரிப்படாது :-( ////

  சிறப்பான பின்னூட்டம்.

  இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம அளவில் மதிக்கப்படும்போது நிலைமை சரியாகும். எப்போதோ ஒரு பின்னூட்டத்தில் படித்தது:
  'விகிதாச்சாரக் கணக்கில் குமாஸ்தா பதவி கூட கிடைப்பதில்லையே என்று தான் முஸ்லிம்கள் அங்கலாய்க்கிறார்கள்.

  கோடியில் ஒருவருக்கு குடியரசுத்தலைவர் பதவி கொடுத்திருக்கிறோமல்லவா,அதை நினைத்து காலத்தை ஓட்டிக்கொள்' என்கிறது அதிகார வர்க்கம். நிதர்சனம் இதுதான்.

  பொது சிவில் சட்டம் என்பதெல்லாம் அரசியல் பம்மாத்து. அப்படிப் பார்த்தால் இந்துக்களுக்கும் தான் தனியார் சட்ட உரிமைகள் உள்ளன. (உதா..: இந்து கூட்டுக்குடும்பத்துக்கு வரிவிலக்குச் சலுகை முதலியவை).

  மேலும், நாலே நாலு அம்சங்களில் ஒவ்வொரு இனத்தையும் மற்றவரைப் பாதிக்காத அளவில் அவர்கள் சட்டநெறிகளின் படி வாழ அனுமதிப்பதில் மற்றவர்கள் வயிறு எரியவேண்டியதில்லை.

  இனரீதி என்று பார்க்காமல், மாநிலரீதியாகப் பார்த்தாலும், வடக்கை வாழவைத்து தெற்கைத் தேயவைத்தால் பொருமல்கள் கிளம்புமா இல்லையா.... அதே போலவே இனப் பாகுபாடுகளும்.

  இந்தியாவுக்குத் தேவை 'அரசியல்காரணிகளுக்கு' பலியாகிவிடாத, அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்துகிற சரியான நேர்மையான தலைமை.

  ReplyDelete
 28. //நாம முதல்ல செய்ய வேண்டியது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது தான். //

  நம்ம மாநிலத்தில அது ஏற்கனவே இருக்குதுங்க.

  ReplyDelete
 29. //Indian said...

  //நாம முதல்ல செய்ய வேண்டியது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது தான். //

  நம்ம மாநிலத்தில அது ஏற்கனவே இருக்குதுங்க.//

  எத்தனை சதவிகிதம்னு தெரிஞ்சிக்கலாமா?

  ReplyDelete
 30. இப்ப தாங்க பார்த்தேன், 2007 செப்டம்பர் மாசம் கொண்டு வந்திருக்காங்க. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 3.5%. அதுவும் பிற்படத்தப்பட்டோர் கோட்டால வந்திருக்கு. என்னை பொறுத்த வரை இது பத்தாது.

  மேலும் இட ஒதுக்கீட்டின் பயன் முழுதும் சென்றடைய குறைந்த பட்சம் 50 வருடங்களாவது (2 தலைமுறைகள்) ஆகும்.

  ReplyDelete
 31. இளா.

  பின்றீங்க..

  //அதென்ன பாஜக ஆள்ர மாநிலமா பார்த்து குண்டு வெக்கிறது? அங்கே மட்டும் என்ன ...... ஆடுது? அங்கேயும் எல்லா மாநிலத்துலேயும் இருக்கிற மாதிரிதானே?
  //


  குஜாராத் அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறும் மாநிலம்.

  குறிப்பாக விவசாயத்தில் முன்னோடி மாநிலம்.

  அங்கு இலவச மின்சாரம் இல்லை, ஆனால் நம்பூர் மாதிரி ராத்திரில மட்டுமில்லாம் 24/7 கரன்ட் இருக்காம்.

  ReplyDelete
 32. அய்யா வழிப்போக்கன்!

  //
  குஜாராத் அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறும் மாநிலம்.

  குறிப்பாக விவசாயத்தில் முன்னோடி மாநிலம்.

  அங்கு இலவச மின்சாரம் இல்லை, ஆனால் நம்பூர் மாதிரி ராத்திரில மட்டுமில்லாம் 24/7 கரன்ட் இருக்காம்.
  //

  இந்தியாவிலேயே கடந்த ஆண்டு அதிக விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்ட முன்னணி மாநிலம் குஜராத் :(

  இன்றைக்கு 13-19 வயது இளையர்கள் அதிகமாக தற்கொலை செய்துக்கொள்வதில் இரண்டாமிடத்திலிருக்கிறது தெரியுமா சேதி!

  24/7 மின் விநியோகம் எவ்வளவு கடைந்தெடுத்த புளுகு மூட்டை என்பதை அங்கே வசிக்கும் பதிவர் ராமசந்திர உஷா எழுதியிருந்தார்களே படிக்கலையா நீங்க?

  அய்யோ பாவம்!

  பா.ஜ.க அடித்துக்கொடுக்கிற கையேட்டை படித்துவிட்டு ஒப்புவித்தால் இப்படி தான் உளற வேண்டி வரும்!

  ReplyDelete
 33. இளா,

  //
  அதென்ன பாஜக ஆள்ர மாநிலமா பார்த்து குண்டு வெக்கிறது? அங்கே மட்டும் என்ன ...... ஆடுது? அங்கேயும் எல்லா மாநிலத்துலேயும் இருக்கிற மாதிரிதானே?
  //

  இன்னும் முழுமையாக யார் இந்த குண்டுவெடிப்புகளுக்கு மூலக்காரணம் என்று தெரியவில்லை!

  பா.ஜ.க மத வெறியை தூண்டி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள சொந்த மக்களையே குண்டு வைத்துக்கொல்ல தயங்காது என்பதை கடந்த காலக்கட்டங்களில் நாம் பார்த்த கதை தான்...

  1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குண்டு வைக்கப்பட்டு பிடிப்பட்டது.

  2. தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அவர்களே குண்டுவைத்துக்கொண்டு பிடிப்பட்டது!

  3. சென்னையில் 11 இடங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளப்பி பிடிப்பட்ட மைலாப்பூர் வழக்கிறஞர் ஓர் ஆர்.எஸ்.எஸ் அங்கத்தினர்

  இதையெல்லாம் விடவும் மதக்கலவரத்தை தூண்ட காந்தியை கொன்ற கோட்சே தனது கையில் இசுலாமிய பெயரை பச்சைக்குத்தியிருந்தது அனைவருக்கும் தெரியும்.

  ஆகையால்... இப்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் நடக்கும் கொடுமைக்கு பின்னால் பதவி வெறி பிடித்த அரசியல் மட்டுமே உள்ளது...

  இது தொடர்பாக தோழர் அசுரன் வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
  பதிவு எழுதியுள்ளார்...

  காலம் கடந்து பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் மக்களை கொலை செய்து அதிகாரத்தை கைபற்றும் பதவி வெறி அரசியல் வெளிவரும்!

  நன்றி!

  ReplyDelete
 34. //இப்ப தாங்க பார்த்தேன், 2007 செப்டம்பர் மாசம் கொண்டு வந்திருக்காங்க. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 3.5%. அதுவும் பிற்படத்தப்பட்டோர் கோட்டால வந்திருக்கு. என்னை பொறுத்த வரை இது பத்தாது.

  மேலும் இட ஒதுக்கீட்டின் பயன் முழுதும் சென்றடைய குறைந்த பட்சம் 50 வருடங்களாவது (2 தலைமுறைகள்) ஆகும்.//

  http://www.tn.gov.in/department/bclist.htm

  List of Backward Classes

  1. G.O.Ms.No. 28 BC & MBCW Department, dated 19.7.94

  2. G.O.Ms.No.100 BC & MBCW (BCC)Department ,Dated 24.11.97

  Please refer Items 19, 21, 69, 71, 82, 114, 119 and 142.

  ReplyDelete
 35. வெட்டிப்பயல் அவர்களின் கருத்துக்களையும், பாரி அரசு அவர்களின் கருத்துக்களையும் நான் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 36. This was posted in marudhanayagam's post.

  போலி தேசியவாதம்: இளா மற்றும் சிலருக்கு பதில்

  A nation state should have something in common across all it's regions to stay united. Like language, religion, culture, race.

  Only these binding forces will help to achieve a political nationalism. Otherwise, any political state (i.e, country)is destined to break-up. Good example is Yogoslavia.

  As you know, India is a federal union of states as defined in our constitution.

  Our country doesn't have a common language, religion, race, culture.

  The first attempt to bring in a pan-Indian nationalism was by north politicians in enforcing Hindi for forging a linguistic nation. That was foiled by the opposition from TN.

  The second attempt by BJP and Sang parivaar since 90's is a hindu religion based nationalism. No one knows whether they will succeed.

  Of course, there are spreading of cultures from one state to another state in the past 50 years within the country. Dosai and Idli travels to north India. Roti and Nan, Salwar Kameez, Churidhar reaches Tamilnadu. Bangra music is appreciated in South. Bengali sweets are popular in north and west. Hindi movies tries to create a pan Indian identity for the nation.

  Despite all these cultural exchanges, still there is a feeling among Indians that I'm first a Tamilian, Kannadiga, Kashmiri, Punjabi, Gujarathi, Bengali or a North eastern.

  The search to get a common uniting factor is not going to be smooth process. There will be lot clashes and bloodsheds.

  Given this background, there are some pertinent questions that everyone needs to think about.

  1. What is Indian nationalism? What defines my Indian identity?

  2. What if the nation couldn't identify a common factor for itself in future as well?

  3. Would the regional factors like language, culture and religion that determines sub-national identities prevent India from attaining a national identity?

  4. Would this country break-up in some years without a national identity?

  Well, I don't know the answers for these questions. I would like others to think about them.

  Lastly, the only thing that makes an Indian feel common with fellow Indian is the brown a*s.

  ReplyDelete
 37. ஐய்யா வெட்டிபயல்

  //ஆனா எனக்கு தெரிஞ்சி இந்த ஹஜ் யாத்திரை சலுகையை கொடுத்தோம்,
  ரெண்டு மூணு மாநிலத்துல முதலமைச்சரா வெச்சிருக்கோம், ஜனாதிபதி ஆக்கினோம்னு சொல்றது எல்லாம் சரியில்லை.//

  இது ஒத்துக்க வேண்டிய பாயின்ட்.

  But, இப்ப காஷ்மீர்ல அமர்நாத் கோவிலுக்கு நிலம் (அதுவும் வெறும் காலி நிலம்:(( ) தந்த பிரச்சனையில ஒரு அரசாங்கமே கவிழ்ந்து போச்சே. அது மனதில் நெருடுகிறதே.

  விட்டு கொடுத்தல் இருபுறமும் இருந்தால்தான் அது தொடரும். இல்லையேல் பிரச்சனைதான்.

  இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் வரை ஒற்றுமை எங்கிருந்து வரும்.??


  //நாம முதல்ல செய்ய வேண்டியது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது தான். நல்ல கல்வியும், சரியான சமூக அந்தஸ்தும் கிடைக்கும் போது தானாக நிலைமை மாறும்.
  //

  இட ஒதுக்கீடு ஜாதி/மத அடிப்படையில கொடுத்தா முன்னேற்றம் வந்துரும்னு நினைக்கறீங்களா ??.

  பொருளாதார அடிப்படையில் அளிப்பதே சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன்.

  தமிழ்நாட்டுல இடஒதுக்கீடு 30-40 வருசமா ஜாதி அடிப்படையில இருக்கு.

  இங்கே நீங்க நினைக்கிற முன்னேற்றம் வந்திருச்சா??

  ஜாதி எல்லாம் ஒழிஞ்சு போச்சா ??

  ஒரளவு வேணும்னா இருக்கலாம், முழுதாய் கிடையாது.

  ReplyDelete
 38. ஐய்யா பாரி.அரசு..

  //பா.ஜ.க அடித்துக்கொடுக்கிற கையேட்டை படித்துவிட்டு ஒப்புவித்தால் இப்படி தான் உளற வேண்டி வரும்!//

  நல்லா போடுறீங்கய்யா பிட்டு!!. அப்ப அணுசக்திக்கு ஆதரவா பேசினா காங்கிரஸ்காரன்னு சொல்லீருவீங்களா ?? சிரிப்புதாங்க வருது.


  //இந்தியாவிலேயே கடந்த ஆண்டு அதிக விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்ட முன்னணி மாநிலம் குஜராத் :(//

  என்னால் நம்ப முடியவில்லை.

  இங்கே பார்க்கவும்..

  One farmer’s suicide every 30 minutes
  http://www.hinduonnet.com/2007/11/15/stories/2007111554771300.htm


  அதிகமாக உள்ள மாநிலங்கள் - Maharashtra, Andhra Pradesh, Karnataka and Madhya Pradesh.

  இங்கேயும் பாருங்க

  http://www.hindu.com/2007/10/14/stories/2007101456521400.htm

  2003ல இருந்து மொத்தம் 489 விவசாய தற்கொலைகள் நடந்திருக்கு.

  இந்த எண்ணிக்கை மிக..மிக தவறாக இருந்தால் கூட மேல உள்ள 4 மாநிலங்கள் அருகில் கூட குஜராத் இருக்காது.

  நீங்க குஜாராத்தான் முன்னனினு எங்க படிச்சீங்கனு தெரியல,சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்.

  இல்லனா ஐ' ம் சாரிங்கோ..

  ReplyDelete
 39. ஐய்யா பாரி.அரசு..

  //24/7 மின் விநியோகம் எவ்வளவு கடைந்தெடுத்த புளுகு மூட்டை என்பதை அங்கே வசிக்கும் பதிவர் ராமசந்திர உஷா எழுதியிருந்தார்களே படிக்கலையா நீங்க?
  அய்யோ பாவம்! //

  அடடா!! தகவலுக்கு நன்றிங்க. அப்படியே லிங்க் கொஞ்சம் கொடுங்க ப்ளீஸ். எனக்கு அவங்க அட்ரஸ் தெரியாது.

  நான் சொன்னது நூறு சதவிகிதம் உண்மையில்லாமல் கூட இருக்கலாம், அதுக்காக மன்னிச்சுருங்க.

  கீழே உள்ள லிங்கை கொஞ்சம் டைம் இருந்தா படிங்க ப்ளீஸ்.

  http://news.oneindia.in/2006/11/11/kalam-dedicates-gujarats-jyotigram-yojana-to-nation-1163345577.html

  //Champaner, Nov 11,2006 (UNI) President A P J Abdul Kalam today dedicated Gujarat government's revolutionary 'Jyotigram Yojana' to the nation that supplies 24 hours continuous three phase quality power to all the 18,065 villages in the state.

  Addressing a huge gathering at the Champaner-Pavagadh World Heritage Site to mark the occasion, Dr Kalam praised the Gujarat government and the employees of the state-owned Gujarat Urja Vikash Nigam Limited (GUVNL) for having commissioned the unique scheme in a record time.
  With the successful implementation of the innovative scheme to provide power to each and every village, the President said there would be a marked improvement in the quality of life in rural Gujarat.

  Dr Kalam said the scheme which was aimed at providing better employment opportunity, health, computer education and a boost to the agriculture and food processing industries in village, would help uplift the socio-economic condition of 30 million rural citizens living in 18000 villages in Gujarat. It would also help check migration of people from villages to the cities, he hoped.
  //


  இது ஒரு செய்தியாக மட்டுமே இருக்கலாம். ஆனால் நம்மூரில் இலவச மின்சாரம் என்ற பெயரில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும்.

  அதற்கு பதிலாக இது ஒரு நல்ல முயற்சி இல்லையா ?

  இதை படியுங்கள் அந்த திட்டம் எவ்வளவு பிராக்டிகல் என்று புரியும்.

  //Gujarat's Jyotigram has separate electric feeder lines for each village, a heavy-duty one for tubewells and a light-duty one for domestic use and small-scale manufacturing and services. This dual-feeder system requires high upfront investment. But it enables SEBs to ration power intelligently. Villages get power 24/7 for non-agricultural purposes, enhancing domestic and commercial possibilities. But tubewell power is rationed for eight hours, providing enough water for crops but saving aquifers from over-pumping. Villagers are willing to pay, and the Gujarat SEB is one of the few profitable ones.
  //


  முதலில் நாம் நல்ல திட்டங்களை எந்த அரசு செய்தாலும் வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும்.

  திரும்பவும் சொல்கிறேன் குஜராத் விவசாயம் மற்றும் தொழில்துறையில் ஒரு முன்னோடி மாநிலம்தான். எனக்கு எள்ளவும் சந்தேகமும் இல்லை.

  ReplyDelete
 40. //காலம் கடந்து பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் மக்களை கொலை செய்து அதிகாரத்தை கைபற்றும் பதவி வெறி அரசியல் வெளிவரும்!
  //

  நல்ல கற்பனை...இது பொன்ற சந்தேகங்களை உடனடியாக உறுதி செய்ய முடியாது அதனால் மட்டும் அது உண்மையாகாது.

  அதற்காக அந்த அமைப்புகள் உத்தமர்கள் என்று நான் சொல்லவில்லை. இன்னும் இது போன்ற செயல்கள் செய்யுமளவிற்கு "முன்னேறவில்லை"என்று நினைக்கிறேன்.  இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ப்ளீஸ்..


  ஏன் அந்த அமைப்புக்கள் இன்னும் பா.ஜா.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தடை செய்யப்படவில்லை ?

  தமிழ்நாட்டில் 1998ல் நடந்தது யார் வைத்தது ?


  டெல்லியில், பெங்களூரில் போன முறை வைத்தது யார்?


  பாம்பேயில் 2006ல் வெடித்த குண்டுகள் யார் செய்தது ?

  பார்லிமென்டை தாக்கியது யார்?

  இன்னும் இதுபோல் பல..

  ReplyDelete
 41. //இட ஒதுக்கீடு ஜாதி/மத அடிப்படையில கொடுத்தா முன்னேற்றம் வந்துரும்னு நினைக்கறீங்களா ??.//

  கண்டிப்பா முன்னேற்றம் வரும்னு நான் நம்பறேன். கல்வி அறிவும், சமூக பங்களிப்பும் அதிகமாகும் போது நிச்சயம் மாற்றம் வரும்னு நான் நம்பறேன்.

  //பொருளாதார அடிப்படையில் அளிப்பதே சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். //
  இது கண்டிப்பா ஒத்து வராது. முதல் இரண்டு தலைமுறைக்காவது பொருளாதார அடிப்படையில் இல்லாமல் சாதி/மத அடிப்படையில் இருப்பது தான் சரியானது. பிறகு க்ரீமி லேயர் கொண்டு வரலாம்.

  செருப்பு கடை வைத்திருக்கும் பணக்கார பாய்கள் எங்கள் ஊரில் அதிகம். அவர்கள் பிள்ளைகளும் அங்கே வேலை செய்வதை பார்த்திருக்கிறேன். பொருளாதாரத்தை மட்டும் கணக்கில் கொண்டால் அவர்கள் அதே தொழிலை செய்ய வேண்டியது தான். இது ஒரு உதாரணமே. இதை போல ஆயிரம் தர முடியும்.

  //தமிழ்நாட்டுல இடஒதுக்கீடு 30-40 வருசமா ஜாதி அடிப்படையில இருக்கு.

  இங்கே நீங்க நினைக்கிற முன்னேற்றம் வந்திருச்சா??//

  நிச்சயமாக. மேலும் தெரிந்து கொள்ள See Here

  ReplyDelete
 42. // வெட்டிப்பயல் said...
  See Here //

  பாத்தனுங்க. மிக மிக அருமையான விவாதங்கள்.

  (Hinduவில் கூட முன்னர் இதைபோன்ற Statistics படித்தது ஞாபகம்)

  எனக்கு இன்னும் சில கேள்விகள் உள்ளது.

  1)அந்த பதிவு தமிழ்நாட்டை மட்டும் வைத்து எழுதப்பட்டது போல் தோன்றுகிறது. நாம் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தான் தெரியும். உண்மையிலேயே இட ஒதுக்கீட்டால்தான் இந்த மாற்றமா என்று ?

  2) இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ? (உயர் சாதியினர் என்ன 100%மா இருந்திருப்பார்கள் ??)


  3) அங்க ஒருவர் கேட்டதைப்போல பல சாதிகள் "பிற்படுத்தப்பட்டோர்" என பிரித்துள்ளது சரியா என்று ?

  குறிப்பாக
  "கொங்கு வெள்ளாள கவுண்டர்,நாடார், தேவர்"
  சமுதாயத்தில் ஆதிக்கவர்க்மாக இருக்கும் இது போன்ற சாதிகள் ஏன் "பிற்படுத்தப்பட்டோர்" பட்டியலில் உள்ளது ?


  4) நான் இடஒதுக்கீட்டில் படித்திருந்தாலும் என் அடுத்த தலைமுறைக்கு அது 'சாதி' அடிப்படையில் தேவையில்லை.

  ReplyDelete
 43. //செருப்பு கடை வைத்திருக்கும் பணக்கார பாய்கள் எங்கள் ஊரில் அதிகம். அவர்கள் பிள்ளைகளும் அங்கே வேலை செய்வதை பார்த்திருக்கிறேன். பொருளாதாரத்தை மட்டும் கணக்கில் கொண்டால் அவர்கள் அதே தொழிலை செய்ய வேண்டியது தான்.//

  இது போன்ற பிரச்னைகள் இருப்பது உண்மைதான்.

  ஆனால் அதற்கு அவர்களின் அறியாமையும், அலட்சியமும் தான் காரணம்னு நான் நினைக்கிறேன்.

  அவர்கள் வேறு தொழில் செய்வதற்கும் இடஓதுக்கீட்டிற்கும் என்ன சம்பந்தம். ??


  இன்று பணமிருந்து, படிக்க மனமிருந்தும் படிக்க முடியவில்லை என்ற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


  அவர்கள் முயற்சி செய்து படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை,ஆனால் அந்த இடம் 'எப்படி' இடஓதுக்கிடு இருந்தால் கிடைத்திருக்கும் என்று தெளிவாய் சொல்ல முடியுமா?

  ReplyDelete
 44. வழிப்போக்கன்,
  அந்த செருப்பு கடை பையனுக்கு படிக்க பணம் இருக்கு. ஆனா பொறுப்பா படினு சொல்றதுக்கு தான் விவரம் தெரிஞ்சவங்க இல்லை. அதனால அவனுக்கு படிப்பு வரதுக்கான வாய்ப்பு குறைவு தான்.

  இப்ப இவன் சரியா படிக்கலனு இவனுக்கு திறமை இல்லைனு சொல்றது சரியான வாதமில்லை.

  இந்த ஒரு ஜெனரேஷனுக்கு சுமரா படிச்சிருந்தாலும் நல்ல கல்வியையும் வேலையும் கொடுத்தா அவனுக்கு கல்வியோட அருமை தெரிய ஆரம்பிச்சிட்டும். அடுத்த தலைமுறைக்கு வழி காட்டியா அமையும்.

  இது தான் நாம செய்ய வேண்டிய கடமையும் கூட. இப்பவாவது இடஒதுக்கீடுக்கும் பொருளாதாரத்துக்கும் சம்பந்தம் இல்லைனு புரிஞ்சிக்குவீங்கனு நினைக்கிறேன்.

  அடுத்த கட்டத்துக்கு க்ரீமி லேயர் கொண்டு வந்தடனும். க்ரீமி லேயர்ல பசங்களோட அப்பா, அம்மா படிப்பும் ஒரு க்ரைட்டீரியா.

  ReplyDelete
 45. //வழிப்போக்கன் said...

  // வெட்டிப்பயல் said...
  See Here //

  பாத்தனுங்க. மிக மிக அருமையான விவாதங்கள்.

  (Hinduவில் கூட முன்னர் இதைபோன்ற Statistics படித்தது ஞாபகம்)

  எனக்கு இன்னும் சில கேள்விகள் உள்ளது.

  1)அந்த பதிவு தமிழ்நாட்டை மட்டும் வைத்து எழுதப்பட்டது போல் தோன்றுகிறது. நாம் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தான் தெரியும். உண்மையிலேயே இட ஒதுக்கீட்டால்தான் இந்த மாற்றமா என்று ?//

  கண்டிப்பா இது ஒரு முக்கிய காரணம் (மதிய உணவு திட்டமும் ஒரு காரணம்) நீங்க சாப்ட்வேர்ல இருந்தா உங்க கூட இருக்கற மத்த மாநிலத்து காரவங்களோட கேட்டகிரி கேட்டு பாருங்க. 70 - 90% OC யாகத்தான் இருப்பாங்க. நான் சொன்னதை நம்பாம என் ஃபிரெண்டு ஒருத்தவன் இதை பண்ணி பார்த்தான். அவன் கேட்ட 30 பேருமே OC தான் :-).

  அவன் BCனு சொன்னதை அவுங்க எல்லாம் ஆச்சரியமா பார்த்தாங்க :-))

  நீங்களும் விசாரிச்சி பார்த்து சொல்லலாம்.

  //
  2) இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ? (உயர் சாதியினர் என்ன 100%மா இருந்திருப்பார்கள் ??)
  //
  இல்லை 90% இருந்திருப்பாங்க :-)

  // 3) அங்க ஒருவர் கேட்டதைப்போல பல சாதிகள் "பிற்படுத்தப்பட்டோர்" என பிரித்துள்ளது சரியா என்று ?

  குறிப்பாக
  "கொங்கு வெள்ளாள கவுண்டர்,நாடார், தேவர்"
  சமுதாயத்தில் ஆதிக்கவர்க்மாக இருக்கும் இது போன்ற சாதிகள் ஏன் "பிற்படுத்தப்பட்டோர்" பட்டியலில் உள்ளது ?
  //
  நான் முந்தின பின்னூட்டத்துல சொன்னது தான். அங்கயும் கல்விக்கு முக்கியத்துவம் இல்லை :-)

  // 4) நான் இடஒதுக்கீட்டில் படித்திருந்தாலும் என் அடுத்த தலைமுறைக்கு அது 'சாதி' அடிப்படையில் தேவையில்லை.//

  இதை நான் ப்ளாகுக்கு வந்த புதுசலயே சொல்லிட்டேன். 2 வருஷத்துக்கு மேல ஆகுது :-)

  இங்க பார்க்கலாம் :-)

  ReplyDelete
 46. வழிப்போக்கன்,
  நிஜமா தெரிஞ்சிக்கனும்னு ஆசைப்பட்டா அந்த பதிவிலிருக்கும் பின்னூட்டங்களை மீண்டும் படிக்கவும். அருமையான வாதங்கள். ஒரு சாம்பிள்

  புருனோ Bruno said...

  ரவி சிரினிவாசு

  இந்தியாவில் ஒருவரின் பொருளாதாரத்தை எப்படி கணக்கிடுவீர்கள் ?

  பொருளாதாரம் என்பது மாறு பாடுகளுக்கு உட்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா ?

  அது தவிர

  அரசின் உதவித்தொகை வாங்குவதற்கு வேண்டுமென்றால் பணத்தை வைத்து பிரிக்கலாம்

  அதாவது

  பணம் தருகிறீர்கள் என்றால் பணம் இல்லாதவர்களுக்கு கொடுங்கள், பணம் உள்ளவர்களுக்கு தர வேண்டாம்

  கல்வி தருகிறீர்கள் என்றால் கல்வி இல்லாதவர்களுக்கு தரவேண்டும்

  ReplyDelete
 47. //70 - 90% OC யாகத்தான் இருப்பாங்க. நான் சொன்னதை நம்பாம என் ஃபிரெண்டு ஒருத்தவன் இதை பண்ணி பார்த்தான். அவன் கேட்ட 30 பேருமே OC தான் :-).
  //

  நிச்சயம் கேட்டுப்பார்க்கிறேன்..:)

  ReplyDelete
 48. //ஆனா பொறுப்பா படினு சொல்றதுக்கு தான் விவரம் தெரிஞ்சவங்க இல்லை. அதனால அவனுக்கு படிப்பு வரதுக்கான வாய்ப்பு குறைவு தான்.
  //

  சரியே..

  ReplyDelete
 49. //இப்பவாவது இடஒதுக்கீடுக்கும் பொருளாதாரத்துக்கும் சம்பந்தம் இல்லைனு புரிஞ்சிக்குவீங்கனு நினைக்கிறேன்.
  //

  //பொருளாதாரம் என்பது மாறு பாடுகளுக்கு உட்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா ?

  அது தவிர

  அரசின் உதவித்தொகை வாங்குவதற்கு வேண்டுமென்றால் பணத்தை வைத்து பிரிக்கலாம்

  அதாவது

  பணம் தருகிறீர்கள் என்றால் பணம் இல்லாதவர்களுக்கு கொடுங்கள், பணம் உள்ளவர்களுக்கு தர வேண்டாம்//


  வெட்டிப்பயல்,

  பொருளாதாரத்துக்கும் இடஒதுக்கீட்டுக்கும் சம்பந்தமில்லை என்று புரிகிறது.

  ஆனால் சாதி/மத அடிப்படை சரி என்பதை எற்றுக்கொள்ள முடியவில்லை.

  எனினும் பொறுமையாக பதில் அளித்தற்கு நன்றி. :))

  பலரிடம் பலமுறை விவாதங்கள் 2 வருடமாக செய்தும் சாதி/மத இடஒதுக்கீடு சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  இதுதான் சரியான வழியா ?

  ஏன் சாதி/மத பற்றி பேசாமல் முன்னேற்றம் வராதா ?

  இந்த முறை தொடர்ந்தால் என்று அழியும் இந்த சாதி/மதங்கள் ?

  ஏன் கீரீமி லேயர் இப்போது கிருமி லேயராக பார்க்க படுகிறது?
  அது சரியென்றால் இப்போதே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?


  இதற்கெல்லாம் பதில் நான் தேட வேண்டும்.

  உங்கள் பதிவையும், புருனோவின் பதிவையும் + பின்னூட்டத்தையும் முழுதாக படித்துவிட்டு பின்பு வருகிறேன்.

  சாரி..நான் இன்னும் அவைகளை முழுதாய் படிக்கவில்லை :))

  ReplyDelete
 50. நல்ல பதிவு இளா. கண்ணை திறக்கும் பதிவு.

  இதில் வழக்கமாக ஜல்லி அடிப்போரின் பின்னூட்டத்தை விட்டுவிட்டு வெட்டிபயலின் பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது. இட ஒதுக்கீடு மட்டும்தான் தீவிரவாததிற்கு காரணமா ? இல்லவே இல்லை. 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள்.

  தீவிரவாதம் என்பது இஸ்லாமிய மத போதகர்கள் செய்யும் மூளைச்சலவை. இதை நிறுத்தினால் போதும்.

  எவ்வளவுதான் படித்தவர்கள் ஆனாலும் மிக சுலபமாக இஸ்லாமிய மத போதகர்களால் மூளைசலவை செய்யபடுவார்கள்.

  இந்த தீவிரவாத செயலை எந்த ஒரு முகமதியரும் கண்டிக்க மாட்டார். மாறாக இதை அவர்கள் செய்திருக்காலம் என சந்தேக கேள்விகேட்டு குட்டையை குழப்புவார்கள். என்று எல்லா முகமதியர்களும் சக முகமதியர்கள் செய்யும் தீவிரவாத செயலை கண்டித்து அவர்களை தம் மதத்திலிருந்து விலக்கி வைக்கிறார்களோ அன்றுதான் நிற்கும். குறைந்தபட்சம் இந்தியாவில் மட்டுமாவது இது நடக்கவேண்டும்

  ReplyDelete
 51. வழிபோக்கன்!

  2003 லிருந்து தற்கொலையின் எண்ணிக்கை 489. இது குஜராத் அரசு கொடுத்த புள்ளி விவரம்.

  அதே அரசு இன்னொரு வழக்கில் 2006 ல் மட்டும் தற்கொலையின் எண்ணிக்கை 248 என்ற புள்ளி விவரம் தந்துள்ளது.

  மோடியின் அரசாங்கம் தருகிற புள்ளிவிவரங்களை வைத்து இதை விவாதிக்க முடியாது.

  அரசு தரும் புள்ளிவிவரங்கள். மாற்றுக்கருத்து புள்ளிவிவரங்கள். கள புள்ளிவிவரங்கள் எடுத்து அதிலிருந்து ஒரு மையப்புள்ளிக்கொண்டு இதை விவாதிக்க வேண்டும்.

  வெறும் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் வேறு ஏதாவது ஒரு மாநிலம் முன்னணியாக இருக்கும்! இதில் பார்க்க வேண்டிய கோணம் வேறு...

  ஒட்டுமொத்த விவசாயிகளின் எண்ணிக்கை அதில் தற்கொலை செய்துக்கொண்டவர்களின் விகிதம்!

  விரைவில் விவசாய தற்கொலையின் 2007ல் குஜராத் எப்படி முன்னணி அப்படின்னு முடிந்தால் விரிவான புள்ளிவிவர அறிக்கை தருகிறேன்!

  (குறிப்பு: 2007ல் எனக்கு குஜராத் முன்னணி என்கிற முடிவுக்கு வருவதற்கான அடிப்படை, நான் இப்பொழுது இந்தியாவில் ஐடி மரணங்கள் என்கிற தலைப்பில் ஆய்வில் ஈடுப்பட்டிருக்கிறேன்... இதுவே அடிப்படை!)

  2008ல் குஜராத் ல் விவசாய தற்கொலை குறைந்துள்ளது... அதற்கு மோடி அரசின் செயல்பாடு காரணமல்ல... பீர் உற்பத்திக்காக விவசாய நிலங்களை பெருமளவு விஜய் மல்லையா குத்தகைக்கு எடுத்துள்ளது தான் காரணம்!

  ஃஃ
  முதலில் நாம் நல்ல திட்டங்களை எந்த அரசு செய்தாலும் வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும்.

  திரும்பவும் சொல்கிறேன் குஜராத் விவசாயம் மற்றும் தொழில்துறையில் ஒரு முன்னோடி மாநிலம்தான். எனக்கு எள்ளவும் சந்தேகமும் இல்லை.
  ஃஃ

  ஒரே ஒரு சிறு கோரிக்கை... இந்தியாவில் புற்றுநோய் மருத்துவர்களின் நீண்டநாள் கோரி்க்கை...

  மாணிக்சந்த் மற்றும் அதே மாதிரியான குட்கா தயாரிக்கும் நிறுவனங்களை தடைச்செய்ய வேண்டும் என்பது!

  இந்த குட்கா நிறுவனங்களை மோடி-ஐ தடைச்செய்ய சொல்லுங்கள்... மோடி ஆட்சியில் இருக்கிறாரா? தெருவில் கிட்க்கிறாரா? பார்ப்போம் :)

  மோடியின் தொழிற் வளர்ச்சி பிம்பங்களை பற்றி பதிவர் அசுரன் மற்றும் உறையூர்காரன் போன்றோர் நிறைய எழுதியிருக்கிறார்கள்...
  நேரமிருந்தால் படியுங்கள்!

  குஜராத் முன்னேறுகிறது என்று சொல்கிற நண்பரே... desi girls என்று கூகுள் செய்து பாருங்கள் பா.ஜ.க ஆளும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் பெண்கள் தங்களுடைய உடலை உலகுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்!

  ReplyDelete
 52. //விரைவில் விவசாய தற்கொலையின் 2007ல் குஜராத் எப்படி முன்னணி அப்படின்னு முடிந்தால் விரிவான புள்ளிவிவர அறிக்கை தருகிறேன்!
  //

  Please please..I am waiting..


  // பீர் உற்பத்திக்காக விவசாய நிலங்களை பெருமளவு விஜய் மல்லையா குத்தகைக்கு எடுத்துள்ளது தான் காரணம்!
  //

  How much % of total land ?

  //இந்த குட்கா நிறுவனங்களை மோடி-ஐ தடைச்செய்ய சொல்லுங்கள்... மோடி ஆட்சியில் இருக்கிறாரா? தெருவில் கிட்க்கிறாரா? பார்ப்போம் :)
  //

  This is good point. But i am not saying Modi is Next Mahatma. He is doing ALL good things. Gujarat is the LEADING in agricultural and Industrial Reforms. We can follow Gujarat in THOSE areas.

  Even TN has good amount of TOBACCO cultivation. Is it possible to stop that immediately?

  //குஜராத் முன்னேறுகிறது என்று சொல்கிற நண்பரே... desi girls என்று கூகுள் செய்து பாருங்கள் //

  Ok.Definitely I will see.

  However,I was more specific about 2 areas Industrial Reforms and Agricultural Reforms.

  Please comment on Jyotigram project also.

  Is it most viable or not ?

  Can we follow that or not?

  States like TN, AP and Karnataka are heavily dependent on IT.

  Whereas Gujarat is not dependent on IT. They are showing where can we get Self Reliant & Sustainable growth?

  (Tamil Font problem.So, i typed in English.Sorry!!

  Also, I am out of station for next 4 days, I will reply after that)

  ReplyDelete
 53. நல்ல அறுவடை போல..
  நல்ல மகசூல் செஞ்சீங்களா இளா..
  கலக்குங்க..
  படிச்சிட்டு மட்டும் போலாம்னுதான் இருந்தேன்..
  பின்னூட்டம் போட வச்சிட்டீங்க..
  அருமையான, ஆரோக்கியமான விவாதம்..
  தொடரட்டும்..

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)