- அவியல்னு நெறைய பேர் எழுதறதால மகசூல்ன்னு மாத்த வேண்டியதாய் போயிருச்சு.
- பதிவுகள் பார்க்கலைன்னா மண்டை வெடிச்சுரும், ரத்த வாந்தி எடுத்துருவேன்னு எல்லாம் நெனப்பு இருந்துச்சு. அது எல்லாம் சுத்தப் பேத்தல்ன்னு தெரிஞ்சுப் போயிருச்சு.
- ஊர்ல இருந்து என்ன வாங்கி வந்திருக்கே மாப்பிள்ளைன்னு ஆள் ஆளுக்கு கேட்க "நெறைய கடன் வாங்கிட்டு வந்திருக்கேண்டா, கொஞ்சம் கட்டுறியா"ன்னு கேட்டா ஏன் எல்லாரும் மொறைக்கிறாங்க?
- ஜெட் லாக் எல்லாம் இல்லாம் இருக்கிற அளவுக்கு செம பிஸியா இருந்துட்டேன். 4 மணி நேரம் தூங்குறதே பெருசா இருந்துச்சுன்னா பார்த்துக்குங்க.
- என் தங்கையின் திருமணத்திற்கு வருகை தந்த அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், மாறுவோம் மாற்றுவோம் மக்களுக்கு நன்றி.
- தனி மடல் மூலமும், அலை பேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த விசு, டி ஆர் & குடும்பத்தினர், உரத்த சிந்தனை குழுமம், halwa guys மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
- தன் குடும்பத்தோடு வந்து குறைகளை சொல்லாமல் புன்முறுவலோடு வாழ்த்தியருளிய தஞ்சாவூரான் குடும்பத்திற்கு நன்றி.
- சந்தைக்கு போவனும், ஆத்தா வையும் காசு குடு ரேஞ்சுல எப்பவுமே வந்து போற கவிதாயினிக்கு நன்றி.
- நிலா குடும்பத்துக்கு நம்ம குடும்பத்துக்கு செம பொருத்தம் போல.குடும்ப சகிதம் "பச்சக்"குன்னு ஒட்டிக்கிட்டாங்க. கண்ணாலத்துக்கு வரலைன்னாலும் நன்றி!
- பெங்களூரில எல்லாப் பதிவர்களும் பிஸி போல யாரையும் சந்திக்க முடியல.
- சென்னையில தமிழ்மணம் சார்புல ஏற்பாடு செஞ்சிருந்த சந்திப்புக்கு போக முடிஞ்சது. பதிவர்களில் ஆழியூரான் கவர்ந்தார். ரொம்பவும் formala இருந்ததால பிடிப்பில்லாம இருந்துச்சு.
- சென்னையும், பெங்களூரும் ரொம்ப வசதியானவங்க மட்டுமே வாழ முடியும் போல. என்னால் ஒரு ஜட்டி கூட வாங்க முடியல. ஈரோட்டுலதான் எல்லா துணியையும் வாங்கினேன்.
- ஊருல எல்லாரும் செம வசதியா வாழறாங்க. போக்கத்துப்போயி நாந்தான் ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன். பேசாம பால் பண்ணை வெச்சு இருந்தாவே பெரியாளா ஆகிருப்பேன் போல.
- கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ணாடிய எங்கே போனாலும் தூக்கிட்டு போறது கடுப்போ கடுப்பு.
(தொடரும்)
//கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ணாடிய எங்கே போனாலும் தூக்கிட்டு போறது கடுப்போ கடுப்பு.//
ReplyDeleteWelcome to the club... :)
வாங்க இளா ரொம்ப நாளுக்கு பிறகு வந்து இருக்கீங்க :-)
ReplyDelete/
ReplyDeleteசந்தைக்கு போவனும், ஆத்தா வையும் காசு குடு ரேஞ்சுல எப்பவுமே வந்து போற கவிதாயினிக்கு நன்றி.
/
ஹா ஹா
/
நிலா குடும்பத்துக்கு நம்ம குடும்பத்துக்கு செம பொருத்தம் போல.குடும்ப சகிதம் "பச்சக்"குன்னு ஒட்டிக்கிட்டாங்க.
/
ஓ சந்திச்சீங்களா????
welcome backu :))
ReplyDeletekalyana palagaaram parcel inum varalaye :))
// கண் டாக்டரு கண்ணாடி போடச் சொல்லிப்புட்டாரு. கண்ணாடிய எங்கே போனாலும் தூக்கிட்டு போறது கடுப்போ கடுப்பு//
athuku thaan enna maathiri contact lens vaangi....... pottila vechu poottidanum :))
//ஊருல எல்லாரும் செம வசதியா வாழறாங்க. போக்கத்துப்போயி நாந்தான் ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன். பேசாம பால் பண்ணை வெச்சு இருந்தாவே பெரியாளா ஆகிருப்பேன் போல.
ReplyDelete///
நிதர்சனம்! :(
Welcome Back...
ReplyDeleteபலகாரம் எல்லாம் பத்திரமா வைங்க...
//அவியல்னு நெறைய பேர் எழுதறதால சாகுபடின்னு மாத்த வேண்டியதாய் போயிருச்சு.//
ReplyDeleteஐயையோ.. இப்போ தமிழ்மணத்துல இந்த முதல் வரிகளைப் பாத்தப்புறம்தான் தெரிஞ்சுது.. நாந்தான் கொஞ்சநாளா அவியல் சமைச்சது.. என்ன் இருந்தாலும் நீங்க சீனியர்.. சாரிங்க.. மாத்திடட்டுமா? (வேற யார் யாரெல்லாம் அவியல்-ன்னு எழுதறாங்க?)
வாங்கய்யா வாங்க...
ReplyDeleteஒன்னு சொல்றேன் குறிச்சி வெச்சிக்கோங்க. உள்ளூர்ல இருந்து பணம் சம்பாதிக்கிறது முடியுந்தான். ஆனா உலக அனுபவம் சம்பாதிச்சிருக்கீங்களே நீங்க. அதை யோசிங்க. குக்கர்குள்ளயே வோண்டா சிட்டி ஓட்டாம எத்தனையெடங்க பாத்திருக்கீங்க. பழகீருக்கீங்க. அதைப் பாத்து அவங்களும் பொறாமைப் படுவாங்க. இக்கரைக்கு அக்கரைப் பச்சேய்... கண்டுக்காம மனசுக்குப் பிடிச்ச மாதிரி இருங்க.
சகோதரி திருமணம் நல்லபடி நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. முருகன் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.
எல்லாம் நல்லபடியாப் போச்சுங்களாண்ணா? வாழ்த்துகள். இப்போ என்ன நோ தங்கமணியா இல்லை வித் தங்கமணியா?:))
ReplyDeleteவெவசாயி. சாகுபடி நல்லா இருக்குதுங்கோ.
ReplyDeleteசாகுபடிக்கும் மகசூலுக்கும் என்ன வேறுபாடுங்கோ? ஒரு வெவசாய கைநாட்டு கேக்கறேன். கோவிச்சுக்காம சொல்லுங்க.
ராம்- அங்கேயுமா? சொல்லவே இல்லே..
ReplyDeleteகிரி, ம.சிவா,ஆயில்யன் - நன்றி
இந்த சாகுபடி நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கு போல ;)
ReplyDelete//வோண்டா சிட்டி //
ReplyDelete@ஜிரா - எங்க ஊர் ரொம்ப சின்ன கிராமம் தாங்க. ஆனா எல்லா காருமே இருக்கு. ஊருக்குப் புது வரவு டிசையராம்.
//சாகுபடிக்கும் மகசூலுக்கும் என்ன வேறுபாடுங்கோ?//
ReplyDeleteசாகுபடி - செய்தால் மகசூல் கிடைக்கும். சரியான்னு யாராவாது சொல்லுங்க
>>சென்னையும், பெங்களூரும் ரொம்ப வசதியானவங்க மட்டுமே வாழ முடியும் போல. >>
ReplyDeleteரெண்டு வருசம் முன்னாலேயே எனக்கு இப்படித் தான் தோணுச்சு. துணிமணியெல்லாம் இப்போ இங்கயே வாங்கிறலாம்னு தோணிருச்சு. இந்தியாவில எல்லாம் வெலை அதிகம்ங்க.
\\கானா பிரபா said...
ReplyDeleteஇந்த சாகுபடி நல்ல விளைச்சலைக் கொடுத்திருக்கு போல ;)
\\
கானா தல விளைச்சல் இல்லை வயித்தெரிச்சல் கொடுத்திருக்கும் அண்ணானுக்கு ;))
//வயித்தெரிச்சல் கொடுத்திருக்கும் அண்ணானுக்கு //
ReplyDeleteவயித்தெரிச்சல் இல்லீங்க, பொறாமையதான் குடுத்து இருக்கு. எப்படித்தான் இவ்வளவு செலவு பண்றாங்கன்னு கவலையாவும் இருக்கு. எல்லாத்தையும் கடனிலேயே வாங்கிட்டா எப்போ கட்டுறது? வாழ்க்கை முழுசும் கடனாளியாவேதானே இருப்பாங்க?
சாகுபடி என்பது எவ்வளவு பயிரிடுறீங்க என்பது, மகசூல் என்பது விளைச்சல்
ReplyDeleteஉங்களின் பயணம் இனிதானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் .
ReplyDeleteWelcome Back to Normalcy :)