Wednesday, March 15, 2006

மஞ்சள் நீராட்டு விழா


"மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு,
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு.
எஞ்சோட்டு பொன்னுகளே
இள மாந்தர் கன்றுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க"

மஞ்சள் நீராட்டு விழான்னு ஒண்ணு நம்ம ஊர்ல இருக்குதுங்க, எப்போ வரும் தெரியுங்களா? நம்ம ஊர்ல மாரியம்மன் திருவிழா அநேகமா மாசி மாசம் வரும். கம்பம் போட்ட 15வது நாள் திருவிழா வரும். மாரியம்மன் பொங்கலுக்கு கடை, தூரி எல்லாம் இன்னும் கூட உண்டு. பொங்கலுக்கு அப்புறமா சாயங்காலம் சாமிய பல்லக்குல வெச்சு ஒவ்வொரு வீட்டுக்கு எடுத்துட்டு போவோம். பெரும்பாலும் இளவட்டங்க தான் தூக்கிட்டு போவோம்(நாம இன்னும் இளவட்டம் தானுங்களே)

சாமிய பல்லக்குல வெச்ச உடனே ஊத்திருவாங்க மஞ்ச தண்ணிய, பூசாரி தாங்க. அப்புறமா ஒவ்வொரு வீட்டுக்கு போகும்போதும் எல்லா வீட்டுலையும் சாமிக்கு முன்னாடி வந்து தண்ணி கொண்டு வந்து ஊத்துவாங்க. அதுவும் நல்ல தண்ணியாத்தான் இருக்கும். சில குசும்பு புடிச்சவங்க மட்டும் மஞ்சல தண்ணியில கலந்து சாமிய தூக்கிட்டு வரவங்க மேல ஊத்துவாங்க. அதுவும் எண்ணைய் கலந்து ஊத்துவாங்க, மஞ்சல் கறையே போகாது, அதுவும் எண்ணை கலந்துட்டா சுத்தம், கழட்டி கடாசிர வேண்டியதுதான். சில பொண்ணுங்களும் ஊத்துவாங்க(அவங்க எல்லாம் வாயாடியாத்தான் இருப்பாங்க).

இருங்க, சாமி தூக்கரவங்க யாருன்னு சொல்லிடரேன். எல்லாம் ஊர்ல பெரிய தலைங்க பசங்களாதான் இருப்பாங்க. பின்னாடி ஒரு 20 பேராவது வருவாங்க. அவுங்க பண்ற அலும்புதான் ஜாஸ்த்தியா இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் பூந்து ஒரு ஆம்பிளபுள்ளை விட்டாம மஞ்ச தண்ணிய ஊத்திருவாங்க. பொண்ணுங்களுக்கெல்லாம் ஊத்துர அளவுக்கு இன்னும் எங்க ஊர் முன்னேறல. இதுக்கு பயந்துகிட்டே சில பேர் மோட்டார் ரூமுக்கெல்லாம் ஓடிருவாங்க, விட்டுருவாங்களா நம்ம பசங்க, தண்ணி ஊத்தாம அந்த இடத்த வீட்ட விட்டு நகர மாட்டோம். சினிமால காட்டுன மாதிரியெல்லாம் இருக்காது.

எதுக்கு இதெல்லாம் கேப்பீங்களே பின்னே காலையிலிருந்து NDTVla ஹோலி பத்தியே பேசறாங்க அதனால தான் நம்ம ஹோலி பத்தி சொன்னேன். ஹ்ம் கொடுத்து வெச்ச வடக்கத்திக்காரங்க.

5 comments:

  1. நம்மூர்ல போனவாரம் தான் மாரியம்மன் நோன்பி முடிஞ்சுதுங்க இளா. இங்கயும் மஞ்சநீர் அடிக்கிறது உண்டு.. ஆனாலும் ஈரோடு அளவுக்கு கிடையாது.. படிக்கும் போது நாலு வருஷமும் ஃப்ரப் ரோடு பூரா தண்ணிய தூக்கிட்டு ஓடியிருக்கோம்..

    //சில பொண்ணுங்களும் ஊத்துவாங்க(அவங்க எல்லாம் வாயாடியாத்தான் இருப்பாங்க).// தைரியமா சொல்லியிருக்கீங்க.. ;-) அடுத்த தட்வை ஊருக்கு போற அயிப்பராயம் இல்லையா உங்களுக்கு

    ReplyDelete
  2. நமக்குதான் கல்யாணம் ஆகிருச்சில்ல, அப்புறம் என்ன ராசா? எந்த பொண்ணு நம்ம மேல இனிமே தண்ணி ஊத்த போறாங்க, அப்படிங்கிற தைரியம் தான்.

    ReplyDelete
  3. இந்த ஹோலிய பத்தி எழுதனும்னு நேத்து தான் நினச்சிக்கிட்டு இருந்தேன், நீங்க மஞ்ச் நீராட்டு விழா எழுதிட்டீங்க, சாய்ந்திரம் எழுதி போஸ்ட் பண்றேன்!

    ReplyDelete
  4. இளா, ராசா எல்லாம் ஈரோடுக்கு வர நாள் குறிச்சுடலாம். பெரிய மாரியம்மன் கோவிலில் பந்தக்கால் நட்டாச்சு!

    ReplyDelete
  5. நல்லா எழுதி இருக்கீங்க இளா, ஒரு வருசத்துக்கு அப்புறம் படிச்சு இருக்கேன்

    வசந்த்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)