
சோகங்களிம் கண்ணீரும்
மகிழ்வின் ஆணவமும்
காதலியின் சிணுங்கல்களும்
காதலனின் ஆளுமையும்
தனிமையாய் தனிமையும்
கூட்டத்தின் ஆரவாரமும்
மணல் வீடுகளாய் கற்பனைகளும்
கற்பனைகளாய் மணல்வீடுகளும்
பேனாக்களின் கனவுகளும்
கனவுகளோடு காகித பட்ட படிப்புகளும்
அதி காலை ஆழ்தியானமும்
மாலையோர படகு மறைவிகளும்
இவை யெல்லாம் என்று ஓயும்
நானும் ஓய்ந்து தலை சாய!
அப்பு..ஏன்?
ReplyDeleteஒன்னுஞ்சொல்றதுகில்ல..
ஐயா! நீங்களும் கவிஞரா? நம்ம சங்க உறுப்பினர் தேவுக்கு அடுத்த படியா நாமக்கல் சிபியும் கவிஞருன்னு இன்னிக்கு தான் தெரிஞ்சுது.
ReplyDeleteஅடேங்கப்பா! சங்க ஆளுங்கள்ல நாலுல மூணு பேரு கவிஞரா? கைப்புள்ள தாங்குமாடா ஒடம்பு? இருங்க கார்த்திக் ஜெயந்தும் கவிஞரானு கன்ஃபர்ம் பண்ணிக்குறேன். அப்புறம் வருத்தப்படாத வாலிபர் கவிக்குழுன்னு ஒன்னை ஆரம்பிச்சிடலாம்.
அப்போ...தல கைப்புள்ள மாத்திரம் தான் வெத்துவேட்டு
:(-