
மனுஷங்கள்ல கருப்பரினம், வெள்ளையரினம்ன்னு இருக்கிற மாதிரி ஆடுகள்லயும் இருக்குங்க. வெள்ளாடுன்னு பேர் வெச்சுகிட்ட கருப்பாடு, செம்மறி ஆடுன்னு இரண்டு வகை (ஆடா பேர் வெச்சுகிட்டதுனெல்லாம் கேட்கப்படாது).ஆடுக்கார அலமேலு படத்துல லவ் மேட்டருக்கு எவ்ளோ உதவி பண்ணுச்சு அந்த கொம்பு வெச்ச ஆடு? அது மட்டுமா இராமநாராயணன் படத்துல ஆடும்தானே ஒரு ஹீரோ. நம்ம தாணு கூட ஆட்ட பத்தி கொஞ்ச நாள் முன்னாடி ஆட்ட பத்தி சொல்லி இருந்தாங்க.
எனக்கு தெரிஞ்சு இங்கிலிஷ் பேசுற ஒரே விலங்கு ஆடு தாங்க, நம்ம கவுண்டர் கூட இத சொல்லி சம்பாரிப்பாரு. மே, மே .ன்னு கத்தறத்துனால ஆடு மே மாசத்துலையா பொறக்குது. ஆடு தாடி வெச்சதுனால பெரியார் ஆகிருமா? இப்பன்னு பார்த்து மறுபடியும் பறவைக்காய்ச்சல் அப்படிங்கிறாங்க, ஆட்டோட வெல கண்டிப்பா இன்னும் கொஞ்சம் நாளுல எகிரிருங்களா?
எப்படி இருந்தாலும் ஆடு கசாப்புக்குதானே போக போகுது அதுக்காக பிரியாணிக்கு வெட்ட போற ஆட்டுக்கு பிரியாணி ஆடுன்னும், கீமாக்குப் வெட்ட போற ஆட்டுக்கு கீமா ஆடுன்னா சொல்றோம்? இல்லையே. அது என்னங்க காசாப்பு கடைக்கு போற ஆட்டுக்கு ஒரு மரியாதையும், சாமிக்கு வெட்ட போற ஆட்டுக்கு ஒரு மரியாதையும் கொடுக்கிறது. எல்லாம் போக போற ஆடு தானே.
அம்மா கூட இதப்பத்தி ஒரு சட்டம் போட்டு....... வேணாம் இப்போ இதப்பத்தி பேசினால் அரசியல் ஆகிரும். சரி, என்ன விஷயம் அப்படின்னு நீங்க கேட்கறது புரியுது. வேற ஒன்னும் இல்லைங்க நேத்து சாயங்காலம் நானும் கூட்டாளியும் வண்டில வரும்போது ஒரு பெரிய ஆட்டு மந்த குறுக்கால வந்துருச்சு, ஒரு 3 நிமிசம் ஆச்சு எல்லாம் போக, அப்ப கூட்டாளி கேட்ட ஒரு கேள்வி தான் இத்தனை கேள்விக்கும் காரணம்.என்ன கேட்டுருபான்னு நெனைக்கிறீங்க?
வெள்ளிக்கிழமை நாள்.. அதுவும் சாயங்காலம் ஊருக்கு போகனும்னு இருக்கும் போது.. இப்படித்தான் எதாவது எழுத தோணும்.. உங்கள சொல்லி தப்பில்ல.. ;-)
ReplyDeleteஅது எல்லாம் ஒண்ணுமில்ல ராசா, சும்மாவாச்சும் ஏதாவது எழுதனுமில்ல, அதான். மனசுல பட்டத எழுதுறோம்.
ReplyDeleteஉங்க கூட்டாளி 'ஆடு திருடுன கள்ளன்' பத்தி எதாச்சும் கேட்டாரா? எல்லாம் ஒரு 'கெஸ்சு' தான்?
ReplyDelete:)-
ஐயோ! அப்படியெல்லாம் இல்ல தல
ReplyDeleteஇளா ஆட்டுக்கறி வெலை அதிகமாகிடுச்சேன்னு சாப்பிடாம இருக்க முடியுமா? தலைக்கறி குழம்போட மூளை வருவல் அப்புறம் குடல் வருவலோட சாப்பிடுற சொகம் இருக்கே !! ஆகா!!
ReplyDeleteநாக்கில ஜலம் ஊர்றதுங்கண்ணா!
வண்டி ஓட்றதுக்கு பதிலா மாடு மேய்க்கப் போயிருக்கலாமோன்னு கேட்டாரா?
ReplyDeleteகேள்வி இதுதாங்க "இதுல எந்த ஆடு பிரியாணி ஆக போகுதுன்னு சொல்லு, எந்த ஆடு நேர்ந்து விட்டதுன்னு சொல்லு". நீங்களே சொல்லுங்க எப்படி கண்டுபுடிகிறதுன்னு?
ReplyDelete