Tuesday, March 7, 2006

வருத்தப் படாத வாலிபர் சங்கக் கூட்டம்

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் மிகவும் முக்கியமான முதல் கூட்டம் இன்று முடிவடைந்தது. தேர்தல் கூட்டணிக்காக் எங்களுக்கு வரும் தொல்லைகளுக்கு முற்று புள்ளி வைக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. வ. படாத. வா. சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கை விட கடமைப்பட்டு இருக்கின்றேன்.

1. எங்களது சங்கம் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. அதனால் யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
2. இந்தமுறை நாங்கள் தேர்தலில் போட்டியிட போவதில்லை. எங்களது செயல் அனைத்தும் 2011 வருடத்து தேர்தலை குறிவைத்தே இருக்கும்.
3. பார்த்திபன், கட்டதுரை என்ற பெயர் உள்ளவர்களை வேட்பாளர் என்ன கட்சியின் கடைசித்தொண்டனாக கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4.மிகவும் முக்கியமானது, கட்சிகளின் நேரடி தொல்லைகளால் கைப்புள்ளை இமையமலை செல்ல யோசித்துவருகிறார். அதற்காக யாரும் தீக்குளிக்க வேண்டாமென கேட்டுகொள்கிறோம்.

10 comments:

  1. //kaipulla mudivu vera mathiriyaga alla irukku//

    ஆமாங்க மேடம்! இவரு ஒரு பிரசார பீரங்கி...அங்குட்டு தேவுன்னு ஒரு பிரசார பீரங்கி. ரெண்டு பீரங்கியும் முழங்குது...முழங்கிட்டுப் போட்டுமே! கடைசியிலே பிச்சு பஞ்சு பஞ்சாமிர்தமா ஆகப் போறது தல கைப்புள்ள தானே?

    கண்ணுங்களா நடத்துங்கய்யா! சிபி, கார்த்திக் நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சைலண்ட்? நீங்களும் உங்க பங்குக்கு மொழங்குங்க ராசா!

    ReplyDelete
  2. Ila kai kodunga....
    kaipullai enna mudivu eduthaallum koodavey irrupom

    ReplyDelete
  3. kaipullai kavalai vendam. puthiya nanbargal kapathuvarkal. uruthimozhi Dev koduthu vittar.Ila vidam

    ReplyDelete
  4. இன்னும் உங்க சங்கத்தில் யார் யார் உறுப்பினர்கள்னு சொல்லலியே? வாலிபர்களின் வயது லிமிட் ஏதாச்சும் இருக்குதா? தருமி மாதிரி அளுங்களும் உறுப்பினர் அட்டைக்குக் க்யூவில் நிர்கிறமாதிரி தெரியுது!!

    ReplyDelete
  5. கால அவகாசம் அதிகம் இல்லாத காரணத்தினால் ஆங்கிலத்தில் கருத்தைப் பதிய வேண்டியதாய் போயிற்று. தல தமிழ் காவலய்யா தன்மானச் சிங்கம் கைப்புள்ள் என் ஆங்கிலப் ப்ற்றைக் கண்டிப்பார் என்று கருதி இந்த மறுபின்னூட்டம்.
    தல கைப்புள்ளயார் எடுக்கும் எந்த முடிவும் வாலிப உலகின் நலனுக்கே என்று நம்பி என் ஆதரவைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  6. உளவு துறையின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி, சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கத் தலைவர் கைப்புள்ள மீது அதிருப்தி அடைந்துள்ளதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
    கைப்புள்ளயின் குடும்ப அரசியல் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் போல் உள்ளது.
    ஏற்கனவே கைப்பொண்ணு தல கைப்புவின் வாழ்க்கையில் நுழைந்ததற்கு சங்கத்தின் முக்கிய மீசைக்கார புள்ளி எந்த வித வாழ்த்தும் தெரிவிக்காமல் ஒதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தலயின் ஹாங்காங் விசிட் பற்றி வீடு கட்டும் சங்கத்து மற்றொரு முக்கிய புள்ளி கடும் கடுப்பில் இருப்பதாய் பேச்சு. தலயின் ஹாங்காங் லூட்டிகள் பற்றியும் சங்கத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    குடும்ப அரசியலின் அடுத்த கட்டமாய் தன்னுடைய தூரத்து தம்பி வீரபாகுவைச் சங்கத்தில் இணைத்தது பெரும் கலவரத்தைக் கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது...

    தல... இருக்கீயா... இப்படி உன்னப் பத்தி தப்பு தப்பாப் பத்திரிக்கையிலே எழுதி இருக்காங்க தல...
    நீ எதாவது பேசு தல.... நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)

    ReplyDelete
  7. என்னய்யா அறிக்கெ விடுறீங்க. சொந்தமா யோசிச்சு எழுதுங்கய்யா. எதிர்க்கச்சிக்காரண்ட்ட சுட்டுட்டு வந்த மாரில்ல இருக்கு. தல வருத்தப்பட்டு இமயமலைக்குப் போரதா சொல்றதும், தொண்டர்கள் தீக்குளிப்பாங்கன்னு நெனக்கிறதும் நம்ம அடிப்படைக்கே ஆப்புய்யா ஆப்பு.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி குலவுசனப்பிரியன், ஆப்பு வெச்சாலும் சொந்தமாத்தான் வைப்போம்ங்க.. 3 மாசம் கழிச்சு பின்னூட்டமிட்டதுக்கும் ஒரு கும்புடு

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)