Tuesday, July 31, 2007

* சக்தி டிரான்ஸ்போர்ட்-2

Click here to Read [Part-1]
"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து
"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.

ராஜியோ "இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.

அவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா
"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமா?அவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா? அறிவு இல்லே உனக்கு? அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க? போயி அவளை சமாதானப்படுத்து".

ஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.

அடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா "ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.

வெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.

அடுத்த வாரம் திங்கட் கிழமை

பவானி, 6:35Am, பேருந்து நிலையம்.
சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.


ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு

"டேய், என்னடா என் மேல கோவமா? ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.

இதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் "அப்போ ராஜி சொன்னது பொய்தானே?"

"ஆமாண்டா" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.

ரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.

"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி?"

"சொல்லுடா"

"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

அதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு

"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்"னு சொல்லிட்டு

"என்ன ரதி சொன்னே?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

"எவன் அப்படி சொன்னான்?"

"நீதான்"

"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.

ரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா

"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"

--முற்றும்--

* சக்தி டிரான்ஸ்போர்ட்-1

பவானி, 6:38Am, பேருந்து நிலையம்.

சக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம்
(திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).

ஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.


ஆவலோட எட்டி பார்த்தா ரதி.



"என்ன இவனை இன்னும் காணோம்? எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்".

டென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.



சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு


"உனக்கு என்னடி ராசாத்தி ? எம்புட்டு அழகா இருக்கே.." அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.

ரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.

"டேய் என்னடா சொல்றே? எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.

"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு "ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல "ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ? ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே".

ஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.


காலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் "மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா? எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும்.? நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு? அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா? ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா "

"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே?"

"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா ", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.

"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா? உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு "சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் " சொன்னான் ஜெய்.

ஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு "ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்?"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .

அடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் "டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா"

"என்னது போயிடாவா? நீ வரலையா?"

"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.

ஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.



"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண? அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல?. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா?"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .



தூரத்துல ராஜியும், ரதியும் வர, "மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா " ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.


பில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு "ஹாய் " சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.

(தொடரும்....) Part- 2 படிக்க

Monday, July 30, 2007

* குழப்பலாம் வாங்க

இது ஒரு சின்ன குழந்தைங்க விளையாட்டு. குயிஜூ வெச்சு இருக்காங்க, 3D வெச்சு இருக்காங்க. ஆனா இது மாதிரி ஏதாவது போட்டி வெச்சு இருக்காங்களான்னு தெரியல. கீழே இருக்கிற கட்டத்தை க்ளிக் பண்ணி படத்தை ஒழுங்கு பண்ணி யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?





* காதல்னா கெட்ட வார்த்தை

 "தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு
"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"


"அய்யோ அம்மா, இந்த மாதிரி கதை எல்லாம் எத்தனை நாள்தான் சொல்லுவே? கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சும்மா. வேற ஏதாவது சொல்லேன்மா"


"இல்ல கண்ணா, இது நவீன பாண்டவர்கள் கதைடா, கேக்குறியா?"

"ஓ, அப்படியா? வில்லு, அம்பு எல்லாம் வெச்சு இருக்க மாட்டாங்களா?"

"இல்லேடா, சொல்றேன் கேளு. புடிச்சதுன்னா சொலறேன்."

"ம்ம்ம்ம்"

"அந்த பாண்டவர்கள் அஞ்சு பேரும் கோயமுத்தூர் கங்கா, காவேரி காம்ப்ளக்ஸ்ல, செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வெளியே வராங்க. மேல சொல்லட்டுமா?"

"ம்ம் சரி, சொல்லுமா. என்ன படம்?"

"கோகுலத்தில் சீதைன்னு ஒரு படம். நிறைய படம் பார்த்து இருந்தாலும் இவுங்க அஞ்சு பேரையும் இந்த படம் பலமா பாதிச்சுருச்சு. நம்ம ஹீரோ, சரவணன், சுரேஷ், தினேஷ், ஜெகா அஞ்சு பேரும் காலேஜ் முடிச்சுட்டு அவுங்களுக்கு தகுந்த மாதிரி, வேலை கிடைக்காததால கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறாங்க. வீட்டுல இருக்கிற பெரியவங்களும் இவுங்களை நம்பி யாரையும் திட்டாம பணம் அனுப்பிட்டே இருக்காங்க, அதனால இவுங்களும் கவலை இல்லாம ஊரைச் சுத்திட்டு இருக்காங்க. என்ன சூர்யா கதை கேக்குறியா? மேல சொல்லட்டுமா?"

"கேக்குறேன்மா"

இனிமே கதை.

"தம் குட்றா, படம் என்னை ரொம்ப பேஜாராக்கிருச்சு" சரவணன்"இருடா சாப்பிட்டு அடிப்போம், செகண்ட் ஷோ வந்தா சோறு வேற கிடைக்காது. கடைய சாத்திட்டு போயிருவாங்க. ராஜா கடைய சாத்தியிருப்பானா"? சுரேஸ் கேட்டான்."ஒரு கட்டிங் குடுத்தா போதும்டா, கொத்து போட்டு குடுப்பான்.விடு, அதை நான் பார்த்துகிறேன், டேய் தினேஷா என்னடா மேட்டரு? இப்படி ஏண்டா இருக்கிற? ஏண்டா எல்லாரும் இப்படி இருக்கீங்க?, என்னை மாதிரியே உங்களுக்கு ஃபீலிங் ஆகிப்போச்சா? " இது நம்ம ஹீரோ."மாப்ளே, நாம அஞ்சு பேருமே நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு ஊர் சுத்திட்டு இருக்கோம்டா. லவ்டுடே பார்த்தோம் இல்லே. அந்த படத்தையும் இந்த படத்தையும் மிக்ஸ் பண்ணி பாருடா. புரியும். நாம ஏதோ தப்பு பண்றோம்னு தோணுது" சொன்னது ஜெகா.

"ஆமாண்டா, இனிமே சினிமா கிடையாது, லஷ்மி காம்ப்லெக்ஸ், சேரன் டவர்ஸ், கிராஸ் கட் ரோடு போயி சைட் அடிக்க கூடாது. அந்தமாதிரி வேஸ்ட் பண்ற நேரத்துல படிக்கனும். சீக்கிரமே முன்னேறனும்டா. நாம பாதி நேரம் ஊரையே சுத்திட்டு இருக்கோம்" இது தினேஷ்.
"இனிமே இந்த மாதிரி ஊர் சுத்துறது எல்லாம் வேணாம். கோர்ஸ் நான் டிஸ்கண்டினியூ பண்றேன். எனக்கு இது ஏறல. அவனவனுக்கு என்ன திறமை இருக்கோ அதை வெச்சு முன்னேறலாம். அஞ்சு வருஷம் தான், .. இதே கங்கா காம்ப்லெக்ஸ், இதே நேரம். இந்தா போறாங்களே, இதை விட பெரிய காருல வரனும். ..த்தா நாம் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டனும்" சுரேஸ் உச்சதாயில சொடக்கு
போட்டு சொல்ல,நம்ம ஹீரோ "கரெக்டுடா சுரேசு. ஜெகா, நீ கோடீஸ்வரன், இனிமே எங்க கூட தங்காதே. உங்கப்பா பார்க்குற தொழிலைப்பாரு. 190 ஏக்கர் காடு வேற இருக்கு, நீ இனிமே அதைப்பாரு. தினேஷா நீ எலக்ட்ரானிக்ஸ்ல பிஸ்து, அதுல வேலை தேடு. நானும் சரவணனும் ஆப்டெக் கோர்ஸ் முடிச்சுட்டு வேலை தேடப் போறோம். சுரேஸ், உங்கப்பா ஏற்கனவே அரசியல்ல பெரிய ஆளு அதை வெச்சு முன்னேற பாரு. நாம இனிமே நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம்"தம் பத்த வெச்சுகிட்டே சரவணன் "ஆமா, இனிமே நம்ம வாழ்க்கையில ஃபிகருங்களே கிடையாது. இந்த படத்துல சொல்றா மாதிரி லவ் இனிமே நமக்கு கெட்ட வார்த்தை. எந்தப் பொண்ணையும் இனிமே பார்க்கக்கூடாது. டோட்டல் வேஸ்ட்"

"வாழ்க்கையில பெரிய ஆளா வரனும்டா. பொண்ணுங்க, லவ் எல்லாம் மாயை. நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம். அதனால நம்ம வாழ்க்கையில இனிமே காதல் அப்படிங்கிறது கெட்ட வார்த்தை, இதை ஒத்துகிட்டவங்க சத்தியம் பண்ணுங்கடா"ன்னு கைய நீட்ட, உடம்புல புது ரத்தம் பாய்ஞ்சா மாதிரி எல்லாரும் ஹீரோ கையில சத்தியம் பண்ணினாங்க.


இப்படி சொல்லிட்டு, சூர்யா தூங்கிட்டானான்னு அம்மா பார்க்க, அவன் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருந்தான்.

"என்னம்மா அவ்ளோதானா கதை?"

"இல்லேடா, தூங்கிட்டியான்னு பார்த்தேன்.மீதிக்கதை சொல்றேன் கேளு. சரவணன் இப்போ சென்னையில இருக்காரு, பெரிய ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றாரு. மூனு பொட்டப்புள்ளைங்க. சுரேசும், ஜெகாவும் அவுங்க அவுங்க அப்பா செல்வாக்குல செட்டில் ஆகிட்டாங்க. தினேஸ் வெளிநாடு போய்ட்டு நல்லா சம்பாரிச்சுட்டு இந்தியா வந்தாச்சு. அடுத்த மாசம் அவுங்களுக்கு குட்டி பாப்பா பொறக்கப் போவுது"

"அப்போ நம்ம ஹீரோ என்ன ஆனாரு?"

"அதோ அங்கே உக்காந்து, நட்சத்திர வாரத்துக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்காரே, அவர்தான்"

"ஐய், நம்ம ஃபார்மர் அப்பாவா? சத்தியம் பண்ணினமாதிரியே பாண்டவர்கள் இருக்காங்களாம்மா?"

"இல்லேடா கண்ணா, அஞ்சு பேருமே பண்ணிகிட்டது லவ் மேரேஜ்"

"என்னது லவ் மேரேஜா? அப்போ அவுங்க பாஷையில சொன்னா, கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம்மா?"

"எகத்தாள ரத்தம்தானே உன் உடம்புலேயும் ஓடுது. இந்தக் கேள்விய உங்கப்பாக்கிட்டேயே போய் கேட்டுக்க"ன்னு சொல்லி, மடியில இருந்து இறக்கி விட

குதிச்சு அப்பாகிட்ட போயி "அப்பா நீ கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டீங்களாமே? உண்மையாப்பா? அம்மா சொன்னாங்க என் உடம்புல ஓடுறது எகத்தாள ரத்தமாமே, உங்க ஒடம்புல என்னப்பா ஓடுது?"ன்னு கேட்க.

லேப்டாப்பை மூடி வெச்சுட்டு, சூர்வை தூக்கி முத்தம் குடுத்துட்டு சிரிச்சபடியே சொன்னேன் "சேம் பிளட்டுடா கண்ணா".

Tuesday, July 24, 2007

மடை திறந்து ....

படம்: நிழல்கள்
பாடியது: பாடும் நிலா பாலு
பாடல்: வாலி.

பாலு, மொட்டை, பாரதிராஜா மூனு பேருக்கும் தங்களோட லட்சியம் நிறைவேறுச்சுன்னு உளமாற உருவான பாடல் "மடை திறந்து பாடும் நதி அலை நான்". ஆனா ரீமிக்ஸ்ல கேட்டு பாருங்க. மனசுக்குள்ள அப்படி ஒரு உற்சாகம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப ரசிச்ச பாடல் இது.

சேவை செய்யுங்கள். பரிசை அள்ளுங்கள்!

Click here for Details..

கவிதைக்கு அர்த்தம் போட்டாச்சு.

இந்தக் கவிதை ஒரு பதினென் இளைஞனின் நிலைமையப் பத்தி எழுதினதுங்க. ஆனா மக்கள் கடாசீட்டாங்க போங்க.

//சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!//

மனுஷன் வாழ்ற வாழ்க்கை எல்லாம் நெளிந்து, வளைந்து; சமுதாயம் அப்படீங்கிற ஒரு நீள் கோட்டுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு வராங்க. ஆனா வாழ்க்கை முடியும் போது ஒரு முற்றுப்புள்ளியாத்தான் போகுது.

//இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!//
வாழ்க்கையில் விரக்தியடைஞ்சு மதுவுக்கு அடிமையாகும் போது ஏதோ அதிலிருந்து தப்பிச்சிட்டதாய் நினைச்சுக்கிறாங்க. மேலே உள்ள வரிகள், சரக்கும் & மிக்ஸிங்கும் சேர்ந்து உள்ளே போன வர மப்பும்தான்.


//நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்//

Survival! மயிர் கூச்செரியும், மனசுக்குள்ள நினைக்கிறது வேறொரு பிம்பமா நம் மூலமே வெளி வரும்.

//தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!


மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?//

காமத்துக்காக விரக்தியில் நடப்பவைதான் இது.காமத்தை மாயைன்னு சொல்லனும்னு நெனைச்சது.

Thursday, July 19, 2007

சுஜாதா செஞ்சது தப்பா?




"சிங்கம் சிங்கிலாதான் வரும், பன்னிங்கதான் கூட்டமா வரும்" விசில் பறக்குது, பேப்பரு மழை கொட்டுது.




இன்னும் சிலரோ, ரசிகர்கள்தான் கூட்டமா போறாங்க, அதனால ரசிகர்ங்க எல்லாருமே _____. விடுங்க, மேட்டருக்கு வருவோம். இதையே விகடன் மதன்கிட்டே ஒருத்தர் "சிங்கம் சிங்கிலாத்தான் போகுமா சார்?"ன்னு கேள்வி கேட்க மதன் சொன்ன பதில் கேட்டா நமக்குதான் அதிருது. "சிங்கங்க எப்பவுமே கூட்டமாதான் வேட்டையாட போகும், வரும். சிறுத்தைதான் தனியா போகும்"னு ஒரு போடு போட்டு இருக்காரு.



அப்போ சுஜாதா ஒரு ரைமிங்காகதான் இந்த பஞ்ச் டையலாக் வெச்சு இருக்காரு போலத் தெரியுது. அட, சுஜாதா சொன்னது சரின்னா மதன் சொன்னது தப்பா? யாரோ ஒருத்தர் நம்மளை மொக்கையாக்கியிருக்காங்க. அது யாரு? சுஜாதாவா? மதனா?

Tuesday, July 17, 2007

இயற்கை! பொகைப்பட போட்டிக்கிங்கோவ்


1) இது கர்நாடகாவில் சிவசமுத்திரத்திலிருந்து சோம்நாத்பூர் போற வழியில எடுத்ததுங்க. அந்தச் சாலையில மாட்டு வண்டிதான் போவும், அப்படியாப்பட்ட சாலையில நம்ம ஆல்டோவும் ஊர்ந்துகிட்டே போச்சு. ஒரு 26 கிமீ தானுங்க. ஆனா கர்நாடக செழுமைய அங்கே பார்க்கலாம். மேலும் அதைப்பற்றி எழுதி இருக்கேன் பாருங்க.





2) லண்டன் கிங்கஸ்டனில் எடுத்தது. ராணி முதல்ல இருந்த அரண்மனையாம், அதைத்தான் பார்க்கப்போனோம். அப்புறமாத்தான் தெரிஞ்சது அங்கே ஒரு உல்லாச பூமியே இருக்குன்னு. ஆத்துக்குள்ளே சின்னச் சின்ன தீவு மாதிரி இயற்கை செஞ்சு வெச்சு இருக்க நம்ம மக்கள் வழக்கம் போல கொட்டாய போட்டு இருக்காங்க. சொத்த வித்து அங்கே தங்கலாம். பழைய இங்கிலாந்து பாரம்பரியம் கெடாம பாதுக்காக்குற ஊருங்க அது.


மேல இருக்கிற ரெண்டு படங்களுமே Nikon 3100 Coolpixல எடுத்ததுதானுங்க.

Monday, July 16, 2007

அப்பா!


நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!


தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி

ஜி டாக் அழிச்சாட்டியங்கள்

கிண்டல் அடிக்கப்படும் சில ஜி டாக் Status Messageகள்


//மழையில் நனைவது சுகம்,
அது போல் உன் நட்பு//-வரவனையன்


நனைந்த பின் வருவது ஜலதோசம்
அது போல் பின்வரும் உன் காதல்



//சென்னையில் பேய் மழை//-Mahir

அப்போ சென்னைக்கே நான் வரலை. பேய்ன்னா எனக்கு ரொம்ப பயம்.



//சம்பந்தி வீட்டு பிரியாணி சூப்பர்//- மஹி

ஓசி சோறு சாப்பிட்ட நன்றி கடனோ


//நானாக நானில்லை தாயே//- மோஹன் தாஸ்

நோ கமெண்ட்ஸ்.



//நாளை என் பேரை சரித்திரம் சொல்லும்//-ஜிரா
இன்னிக்கு எது புவியியல் சொல்லுமா?


இதுபோல இன்னும் நிறைய வரலாம்..

Wednesday, July 11, 2007

பிரிவும் பிரிவின் நிமித்தமும்...

என்னை விட்டு பல நாள் நீ
விலகியிருக்க, தற்காலிகமேயன
அழுதவாறு என்னைத்
தேற்றியது மனம்!
பலநாள் மனம்வென்றது,
இம்முறையும் அதையே சொல்லியது,

ஆனாலும் மெளனமாய்
உள்ளுக்குள் அழுதபடியே!



தினம் ஒரு வதம் செய்கிறேன்
நாட்காட்டியை,
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
அடுத்த வதத்திற்கு!



இருவரிலும் ஜீவனில்லை
எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
தோட்டத்துப் பூக்கள்!


இருமுறை முற்றத்திற்கு வந்து
விசாரித்து விட்டுப் போனது முழுநிலவு,
என் தாடி கண்டதும் சோகம் மறைத்தது,
மேகம் மூடி.


உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
நானும், நிலவும்
என் தோட்டத்து பூக்களும்!

Monday, July 9, 2007

துள்ளல்-XX


முன் குறிப்பு: ****** போட்ட இடத்துல எல்லாம் உங்களுக்கு புடிச்ச கெட்ட வார்த்தை போட்டு படிச்சுக்குங்க.

ப்ரவீன் காந்த் படங்கள் எப்படி இருக்குமோ? ஆனா பாட்டுங்க நல்லா இருக்கும். அந்த காரணத்தால பார்த்த படம் ரட்சகன். பாட்டைத் தவிர அதுல நாகார்ஜுனா, சுஷ்மிதா இருந்ததும் ஒரு காரணம். அப்புறம் என்ன காரணமோ ஸ்டார் பார்க்கவே இல்லே.
துள்ளல்- பேரே அமர்களமான பேரு. செம கலக்கல் காஸ்டியூம் அப்படின்னுதான் ஸ்டில் படங்களை பார்க்கும் போது தோணிச்சு. இது மீட்டரு. இனிதான் மேட்டரு.

இந்தப்படத்தை பத்தி விமர்சனம் பாகம் பாகமா பிரிச்சு பண்ணனும். அவ்ளோ இருக்குங்க.

பாட்டு: சூப்பர் பாட்டு, பெரிய செட்டுங்கன்னு பிரமாண்டமா அடுத்தவன் காசுல எடுத்த ஆளுக்கு லோ பட்ஜெட் படத்துல நடிக்கிறதுன்னா கசக்கதானே செய்யும். ஒரு கொடவுன்ல பெயிண்ட் மாத்தி மாத்தி அடிச்சு, தெர்மோகோல்ல படம் வரைஞ்சு பாவமா செட்டு. பிரபுதேவா, விஜய் மாதிரி டான்ஸ் பண்ணனுமாம், நாங்க கேட்டோமா. உங்களுக்கு அஜீரண கோளாறா? படம் பாருங்க, அதுவா கலங்கி தண்ணியா போயிரும். இதுல டபுள் மீனிங் பாட்டுங்க. அதைத்தவிர அதுல ஒன்னுமே இல்லே. இனிமே டான்ஸ் ஆடினே, மவனே இங்கே இருந்தே கல் உடுவோம்.

பைட்டு: போடாங்.***************

வசனம்: டபுல் மீனிங்க், இந்த லட்சணத்துல பஞ்ச் டயலாக் வேற, சிவாஜியில விவேக் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது. பொட்டலம் கட்டுறது, பிறவி எடுக்கிறது, இப்படி எல்லாம் வசனம். நீ எல்லாம் வசனம் எழுதலைன்னு யார் அழுதா? இதுல அவரு வசனம் பேசும் போது க்ளோசப் ஷாட்டு வெச்சு நம்மள க்ளோஸ் பண்றாங்கப்பா. ***************

கதை: காமம், செக்ஸ், சதை, Muscle, porno . உன்னை எல்லாம் மகளிர் சங்கத்துக்காரங்க வந்து மொத்துவாங்க,************

இசை: ஒவ்வொரு பாட்டுக்கும் தம் அடிக்க வெளியே போய்டலாம் *************.

கேமரா: ஒரே நல்ல விஷயம்

நகைச்சுவை: தாஸா லாடு லபக்கு தாஸா'ங்கிற மாதிரியே ஒரு 3,4 இருக்கும். விவேக்கூட நிறைய டபுல் மீனிங், சீ சீ ஒரே அர்த்த காமெடிங்க. 2 வருஷத்து முன்னாடி இறந்து போன மாத்ரு பூதம் நடிச்சு இருக்காரு. அவ்ளோ நாளாவா பொட்டியில தூங்குச்சு. மீதி *************. நாறப்பயலுகளா..*********

மொத்ததுல: மலையாள பிட், புளூ பிலிம் எடுக்கதான் இந்தாளு லாயக்குன்னு முடிவு பண்றா மாதிரி ஒரு படம். ஏண்டா இப்படி எங்களை சாவடிக்கிறீங்க? **************************. கொடுமை என்னான்னா கிளைமாக்ஸுல பிரவீன் அழுவாறே "நீங்க எல்லாம் ஏண்டா காசு குடுத்து படம் பார்க்கிறீங்க"ன்னு நம்மள பார்த்து அழுவற மாதிரியே இருக்கும். **********

இவுங்களை**************************

தற்கொலை பண்ணிக்கனும் தோணிச்சதுன்னா போய் பாருங்க.

Sunday, July 8, 2007

புதிய ஏழு அதிசயங்கள்

புது ஏழு அதிசயங்கள் முடிவு அறிவிச்சுட்டாங்க. தாஜ்மஹால் எப்படியோ 7க்குள்ளே திரும்பவும் வந்துருச்சு.

முடிவுகள் ஓட்டு வாரியாக இதோ:
மேலும் விவரத்துக்கு படத்துமேல க்ளிக்குங்க

1.Chichén Itzá, Mexico










2.Christ Redeemer, Brazil










3.The Great Wall, China










4.Machu Picchu, Peru










5.Petra, Jordan










6.The Roman Colloseum, Italy










7.The Taj Mahal, India










எட்டாவதா இன்னும் ஐஸ்வர்யா இருக்காங்களா?

Friday, July 6, 2007

நாய் கடிச்சிருப்பா...

ராத்திரி கும்மிருட்டு, சீட்டி அடிச்சுகிட்டு கைய வீசி நடந்து போன செந்தழல் ரவி காலை கடிச்சுட்டு ஓடிச்சிருச்சாம். ரத்தம் சொட்ட சொட்ட வூட்டுக்கு வந்து கடமை தவறாம ஜி.டாக்ல லாகின் பண்ணி சேட் பண்ணினவங்களை எல்லாம் கடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏன் இந்த கொலை வெறி ரவி?

அண்ணார் எங்கே இருந்தாலும் நாலு வேளை சோறு கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க, பாவம் பெங்களூரில குளிர் வேற ஜாஸ்தியாம். ரவிய கடிச்சவருக்கு தான் சோறு போட சொல்றேன்.

ரவிய கடிச்சதுக்கு பதிலா இவரை கடிச்சு வெச்சு இருக்கலாம், புண்ணியமாவது கிடைச்சு இருக்கும்.

Thursday, July 5, 2007

கமல் ரசிகர்களுக்காக-Making of வே.விளையாடு

சிவாஜி கதை கேட்டும், விமர்சனம் கேட்டும் கடுப்பாகிட்டீங்களா? அதுவும் கமல் ரசிகர்களுக்கு. அதுக்காகவே கமலின் வெற்றிப்படமானா வேட்டையாடு விளையாடு படத்தில் இடம் பெறாத சில காட்சிகள் உங்களுக்காக:
1.

2.

கிராஃபிக்ஸ் விந்தைகள்:


Wednesday, July 4, 2007

கூச்சமா இருக்காதா?





டிஸ்கி:இந்தப் பார்த்த உடனே தோணின கருத்து மத்த படி பெண்ணீயம், பித்தளையெல்லாம் இல்லே.

Sunday, July 1, 2007

சற்றுமுன்1000 போட்டிக்காக-பிரிவும் வெளிநாடும்

"வெளிநாட்டுக்கு போனாதான் நான் வசதியா இருப்பேன்" என்ற எண்ணத்துடன் விமானம் ஏறுகிறவர்கள் நெறைய பேர். வெளிநாட்டுக்கு வந்த பின்தான் அவர்களுக்கு நிறைய இழந்ததை எண்ணுவார்கள். வெளிநாட்டில் வாழும்பொழுது நாம் இழப்பது எதை வோட்டெடுப்பை பதிவுலகத்தில் வைத்ததில் கிடைத்த முடிவு இது. அதன் விவரம் இங்கே.


வெளிநாட்டில் வாழும்பொழுது நாம் இழப்பது எதை?

* கோலி, கபடி போன்ற விளையாட்டை டவுசர் போட்ட காலம் முதல் விளையாடி விமான நிலையத்தில் கண்ணீருடன் வழியனுப்பிய நட்பை
* பாசம் என்பதை அறிய வைத்த தாய், தந்தையரை.
* தலையணையில் அடிவாங்கி, அவள்(ன்) திருமணத்திற்காகவே வெளிநாடு வந்து அவளு(னு)டன் வாரம் இருமுறை தொலைபேசியில் பேசி, பேசி முடித்தபின் கண்ணீர் விட்டு அழும் உடன் பிறப்பை
* என்னை வளர்ந்த தெரு, ஊர் மற்றும் காலாச்சாரத்தை
* மேற்கூரிய எல்லாவற்றையும்
* எதையுமில்லை


இணையத்தில் இந்த ஓட்டெடுப்புக்கு கிடைத்த முடிவு சற்று அதிர்ச்சியாகவே கிடைத்தது.




வெளிநாட்டில் வாழும்பொழுது ஒன்றையும் இழப்பது இல்லையா? ஆமாம். இது மக்களின் தீர்ப்பு. இதில் புதைந்து கிடைக்கும் உண்மை என்ன? வெளிநாடு சென்றபின்னர் பெற்றோர்களை வெளிநாட்டுக்கே அழைத்துக்கொள்ளும் வசதி இருப்பதனாலும், திருமணம் ஆனவுடன் சகோதர சகோதரியை எப்படியும் பிரிய ஆகிய வேண்டி இருப்பதால் வெளிநாடு சற்று தூரம் என்ற எண்ணமும் இப்படியாக மக்கள் எண்ண வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு காரணம் இருக்கலாம் ஆனாலும் ஒரு பொதுவான உண்மைதான் இந்த முடிவுக்குக் காரணம்.

அதாவது மனிதன் வாழும் இடத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் அடிப்படை உண்மையே இதன் மூலம். பிரிவு என்ற ஏக்கம் இருந்தாலும் வாழ்க்கைப் பயணம் அதை ஒதுக்கிவிடுகிறது. Its all just matter of Survival/ survival does matters.

சற்றுமுன்1000 போட்டிக்காக-Acquisition & Merger

Acquisition- வியாபார உலகில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை. Acquisition என்றால் என்ன? கையகப்படுத்துதல். வியாபார உலகில் Acquisition ஏன் இவ்வளவு பிரபலம்? காரணம் சுலபமாக லாபம் அடையும் நோக்கம். அனுபவம் இல்லாத தொழிலை ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிப்பதை விட, ஏற்கனவே வெற்றி பெற்ற/வளர்ந்த நிறுவனத்தை வாங்கி விடுவது. வியாபாரத்தின் கடினமான கால கட்டம் தொழிலை விருத்தி அடையச் செய்வது. தொழில் ஆரம்பித்தாலும் அதனை லாபமாக்குவதுதான் கடினமான காரியம். வியாபாரத்தின் மூலமே லாபம் தானே.

பிரமலமாக இருந்த Bloggerஐ கூகில் வாங்கியது. தேடுதல், செய்தி சேவை செய்து வந்த கூகிலுக்கு வேறு நுட்பத்திலும் தனது சிறகுகளை விரிக்க எண்ணியது அதன் தொடர்ச்சியாக, பிலாகரை வாங்கியது(Acquire). பிலாகரில இருக்கும் பணியாளர்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் கூகிலின் payrollக்கு மாற்றிக்கொண்டது. இதுவரை பிலாகர்
பணியாளர்களாக இருந்தவர்கள் கூகில் பணியாளர்களாயினர். பெரிய முதலாளியிடம் வேலை செய்வது பணியாளர்களுக்கு பெருமைதானே. ஆனால் தலைமைப்பணியாளர்கள் பந்தாடப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால இவர்களுக்கு எந்த இடையூரும் வராது என்றுதான் கையகப்படுத்தும் நேரத்தில் சொல்லப்படுவதுண்டு. பிறகு சிறிது
சிறிதாக நிறுவனத்தின் கொள்கைகளை (Process and Policies) நடைமுறைப்படுத்தப்படும். இதில் எல்லாம் மட்டதிலும் பல பணியாளர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறத்தானே செய்யும், இது அரசியலுக்கு மட்டுமல்லாமல் வியாபார உலகத்துக்கும் பொருந்தும். மேற்சொன்ன கூகில்-பிலாகர் ஒரு உதாரணமே.

இதில் Merger -இணைதல் என்ற உத்தியும் உண்டு, ஆனால் இது கையகப்படுத்துதலின் முதல் கட்டம்தான். மேல் மட்டம்(High leve management) காலியாகும் வரைதான் merger என்ற வார்த்தை. மேல் மட்டப்
பணியாளர்களை என்றாவது துரத்திவிட வேண்டும் எப்போதும் mergerஆன இரு நிறுவங்களும் நினைக்கும். இதில் வரும் internal politics அதிகம் என்பதாலே merger நடைமுறைப்படுத்தும் போது சிரமாகிறது. சிறுமுதலீட்டில் தொடங்கப்படும் நிறுவனங்கள் வெற்றிகரமாக பணத்தட்டுப்பாடினால் தொடர முடியாத நிலை வரும்பொழுது இப்படி பெரிய நிறுவங்களிடம் சரணடைவது வேதனைக்குரிய விஷயம்.

இந்தியாவின் சபீர் பாட்டியா ஆரம்பித்த hotmailஐ, மென்பொருளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த Microsoft நிறுவனம் வாங்கி தனது தொழிலை விருத்தியாக்கியது.
சில உதாரணங்கள் இங்கே
CSC-Covansys.
EDS-Mphasis
Google-Youtube+Blogger-etc
Yahoo-Flickr- etc
Symantec-Veritas-Altiris
HP-Wise+Radia-Compaq-Digitall-etc
Novell-Suse
IBM-Dhaksh
Microsoft-Hotmail
BSNL-Dishnet
Hutch-Bpl Mobile
Oracle- People Soft-->JdEdwards.
இப்படி சிறு நிறுவனங்கள் எல்லாம் பெரிய நிறுவனத்திடம் அடி பணிவது ஒரு நல்ல வளர்ச்சி இல்லை என்பதே என் கருத்து. Enterpenuership வளர வளரவே தொழில் புரட்சி ஏற்படஆதிகா வாய்ப்பு இருக்கும். இது நல்ல ஒரு நடை முறை இல்லையென்றாலும் வேறு சாத்தியமும் இதில் இல்லை. இன்னும் சில வருடங்களில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வியாபாரம் நடத்தும். பணம் படைத்த பெரிய முதலைகள் மட்டுமே வியாபாரம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால்? தனது திறமையையும், தகுதியையும் பெரிய நிறுவனத்திடம் விற்கும் சிறிய நிறுவனங்களின் கதி?

சற்றுமுன் 1000-போட்டிக்காக
(Thnx US Tamilan-Update)

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)