Monday, July 9, 2007

துள்ளல்-XX


முன் குறிப்பு: ****** போட்ட இடத்துல எல்லாம் உங்களுக்கு புடிச்ச கெட்ட வார்த்தை போட்டு படிச்சுக்குங்க.

ப்ரவீன் காந்த் படங்கள் எப்படி இருக்குமோ? ஆனா பாட்டுங்க நல்லா இருக்கும். அந்த காரணத்தால பார்த்த படம் ரட்சகன். பாட்டைத் தவிர அதுல நாகார்ஜுனா, சுஷ்மிதா இருந்ததும் ஒரு காரணம். அப்புறம் என்ன காரணமோ ஸ்டார் பார்க்கவே இல்லே.
துள்ளல்- பேரே அமர்களமான பேரு. செம கலக்கல் காஸ்டியூம் அப்படின்னுதான் ஸ்டில் படங்களை பார்க்கும் போது தோணிச்சு. இது மீட்டரு. இனிதான் மேட்டரு.

இந்தப்படத்தை பத்தி விமர்சனம் பாகம் பாகமா பிரிச்சு பண்ணனும். அவ்ளோ இருக்குங்க.

பாட்டு: சூப்பர் பாட்டு, பெரிய செட்டுங்கன்னு பிரமாண்டமா அடுத்தவன் காசுல எடுத்த ஆளுக்கு லோ பட்ஜெட் படத்துல நடிக்கிறதுன்னா கசக்கதானே செய்யும். ஒரு கொடவுன்ல பெயிண்ட் மாத்தி மாத்தி அடிச்சு, தெர்மோகோல்ல படம் வரைஞ்சு பாவமா செட்டு. பிரபுதேவா, விஜய் மாதிரி டான்ஸ் பண்ணனுமாம், நாங்க கேட்டோமா. உங்களுக்கு அஜீரண கோளாறா? படம் பாருங்க, அதுவா கலங்கி தண்ணியா போயிரும். இதுல டபுள் மீனிங் பாட்டுங்க. அதைத்தவிர அதுல ஒன்னுமே இல்லே. இனிமே டான்ஸ் ஆடினே, மவனே இங்கே இருந்தே கல் உடுவோம்.

பைட்டு: போடாங்.***************

வசனம்: டபுல் மீனிங்க், இந்த லட்சணத்துல பஞ்ச் டயலாக் வேற, சிவாஜியில விவேக் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது. பொட்டலம் கட்டுறது, பிறவி எடுக்கிறது, இப்படி எல்லாம் வசனம். நீ எல்லாம் வசனம் எழுதலைன்னு யார் அழுதா? இதுல அவரு வசனம் பேசும் போது க்ளோசப் ஷாட்டு வெச்சு நம்மள க்ளோஸ் பண்றாங்கப்பா. ***************

கதை: காமம், செக்ஸ், சதை, Muscle, porno . உன்னை எல்லாம் மகளிர் சங்கத்துக்காரங்க வந்து மொத்துவாங்க,************

இசை: ஒவ்வொரு பாட்டுக்கும் தம் அடிக்க வெளியே போய்டலாம் *************.

கேமரா: ஒரே நல்ல விஷயம்

நகைச்சுவை: தாஸா லாடு லபக்கு தாஸா'ங்கிற மாதிரியே ஒரு 3,4 இருக்கும். விவேக்கூட நிறைய டபுல் மீனிங், சீ சீ ஒரே அர்த்த காமெடிங்க. 2 வருஷத்து முன்னாடி இறந்து போன மாத்ரு பூதம் நடிச்சு இருக்காரு. அவ்ளோ நாளாவா பொட்டியில தூங்குச்சு. மீதி *************. நாறப்பயலுகளா..*********

மொத்ததுல: மலையாள பிட், புளூ பிலிம் எடுக்கதான் இந்தாளு லாயக்குன்னு முடிவு பண்றா மாதிரி ஒரு படம். ஏண்டா இப்படி எங்களை சாவடிக்கிறீங்க? **************************. கொடுமை என்னான்னா கிளைமாக்ஸுல பிரவீன் அழுவாறே "நீங்க எல்லாம் ஏண்டா காசு குடுத்து படம் பார்க்கிறீங்க"ன்னு நம்மள பார்த்து அழுவற மாதிரியே இருக்கும். **********

இவுங்களை**************************

தற்கொலை பண்ணிக்கனும் தோணிச்சதுன்னா போய் பாருங்க.

18 comments:

 1. //தற்கொலை பண்ணிக்கனும் தோணிச்சதுன்னா போய் படம் பாருங்க//

  நீங்க எதுக்காக பார்த்தீங்க :)

  ReplyDelete
 2. //நீங்க எதுக்காக பார்த்தீங்க :) //

  படம் எப்படி இருக்குன்னு தெரியாமதான். தெரிஞ்சு யாராவது போவாங்களா?

  ReplyDelete
 3. இந்தப் பிரவீன்காந்த் படத்தையும் இன்னன்ன காரணங்களுக்குப் பாப்பேன்னு நீங்க சொல்லும் போதே ஒங்க தற்கொலை எண்ணத்துக்கான காரணம் மனப்பிரழ்வின் மறுபக்கச் சிறுமையின் நிழல் என்பது புரிந்து விடுகிறது. சேச்சே! ஒளர்ரேன்ல. ஒங்க விமர்சனம் படிச்சதுக்கே இப்பிடீன்னா..படத்தப் பாத்தா! ஐயாடியோவ்....விடுங்க சாமி விடுங்க...

  ReplyDelete
 4. பிளட்...???

  சேம் பிளட்...

  சிங் இன் த ரெயின்...

  ReplyDelete
 5. நான் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை

  :)

  ReplyDelete
 6. //தற்கொலை எண்ணத்துக்கான காரணம் மனப்பிரழ்வின் மறுபக்கச் சிறுமையின் நிழல் என்பது புரிந்து விடுகிறது.//
  நரபலி கடவுளே, ஏற்கனவே ப்டம் பார்த்துட்டு உசுருக்கு போராடிட்டு இருக்கிற ஆளை இப்படியே பேசி மிச்சத்தையும் கொன்னுருவீங்க போல இருக்கே

  ReplyDelete
 7. //படம் எப்படி இருக்குன்னு தெரியாமதான். தெரிஞ்சு யாராவது போவாங்களா?
  //

  அதுவும் சரிதான். இருந்தாலும் வேற யாராவது விமர்சனம் போடற வரைக்கும் காத்திருந்து போயிருக்கலாம். விதி யாரை விட்டுது?

  ReplyDelete
 8. //ப்டம் பார்த்துட்டு உசுருக்கு போராடிட்டு இருக்கிற ஆளை //

  எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கீங்க? பொக்கே ரெடி பண்ணனுமா, இல்லை மலர் வளையமா?

  ;-)

  ReplyDelete
 9. ithuku ellam nanga asaruvoma.. kandipa padatha pathu vimarsanam pannuvomulla.. :))

  ReplyDelete
 10. விவ்ஸ்,

  தியேட்டருக்கு கூப்பிட்டா ஒரு பயலும் வரமாட்டேங்கறான்...இப்ப தான் நம்ம ஏஜெண்ட் கிட்ட சிடிக்கு சொல்லிவிட்டிருக்கேன்..ஆனா என் மனசையும் மாத்திடுவீங்க போல :))

  இந்த படத்துக்கு எல்லா சேனல்லயும் பில்டப்பு வேற..பணத்துக்காக எந்த மொக்கை படமா இருந்தாலும் ஆகா ஓகோன்றானுங்க :((

  ReplyDelete
 11. படத்தை அனுப்பிராதேப்பூன்னு இப்பத்தான் நம்ம டிஸ்ட்ட்ரிபூட்டருக்கு
  மயில் அனுப்புனேன்.

  ரொம்ப டேங்க்ஸ்ப்பா, சமயத்துலே கொடுத்த எச்சரிக்கைக்கு.

  ReplyDelete
 12. உமக்கு தகிரியம் ரொம்பவே அதிகம்யா..

  ReplyDelete
 13. // உன்னை எல்லாம் மகளிர் சங்கத்துக்காரங்க வந்து மொத்துவாங்க,************//

  இந்த அழகுல போஸ்டர்ல இப்படி போட்டிருக்கானுங்க! - "இந்த நூற்றாண்டில் பெண்மையைப் போற்றும் ஒரே கிளைமாக்ஸ்"

  படம் பாக்கறப்ப இன்னொன்னும் தோணிச்சு - S J சூர்யா எவ்வளவோ தேவலாம்!

  ReplyDelete
 14. //எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கீங்க? பொக்கே ரெடி பண்ணனுமா, இல்லை மலர் வளையமா?//
  ஐயா சாமி, முடிவே பண்ணிட்டீங்களா?. ஏதோ உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்.

  ReplyDelete
 15. //இந்த அழகுல போஸ்டர்ல இப்படி போட்டிருக்கானுங்க! - "இந்த நூற்றாண்டில் பெண்மையைப் போற்றும் ஒரே கிளைமாக்ஸ்"//
  அடப்பாவிகளா இது வேறையா? இவுங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லியா?

  //ithuku ellam nanga asaruvoma.. kandipa padatha pathu vimarsanam pannuvomulla.. //
  எப்படியோ போலேய்..

  ReplyDelete
 16. //தற்கொலை பண்ணிக்கனும் தோணிச்சதுன்னா போய் பாருங்க.//

  அதுசரி,

  உங்களுக்கு விழிப்புணர்வு இருக்கு, முடிவை கைவிட்டுவிட்டிங்க, எங்கள மாதிரி ஆளு ?

  ஏன் இரங்கல் பதிவு எழுதனுமோ ?

  ஆசை தோசை அப்பளம் வடை..அஸ்கு புஸ்கு
  :)

  ReplyDelete
 17. இனிமே டான்ஸ் ஆடினே, மவனே இங்கே இருந்தே கல் உடுவோம்.

  ஹா..ஹா.. இளா வாய்விட்டு சிரித்தேன்

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)