Thursday, December 20, 2007

சங்கமம்-ஏன் இத்தனை சச்சரவு?

நான் ஆங்கில பதிவுதாங்க மொதல்ல எழுதினேன். அப்போ இருந்த ஒரு கூட்டம் (CAT prep) பண்ணிட்டு இருந்தோம். IIMல சேரனும்னு வெறி. அப்போ தான் பதிவுகள் எங்களுக்கு பழக்கம் ஆச்சு(2003 கடைசியில). எங்களுக்கு நாங்களே படிச்சுக்குவோம். பின்னூட்டம் எல்லாம் அப்போ கிடையாது. HaloScan வந்தப்புறம் பின்னூட்டம் போட வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும் எங்களுக்கு சரியான பதிவர் வட்டம் இல்லே. CATக்கு படிச்சுட்டு இருந்த ஒரு 100 பேரு படிப்போம். அப்புறம் தமிழ்மணம் பார்த்து தமிழ் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் எவனும் படிக்கிறது இல்லே அப்புறம் எதுக்குன்னு ஆங்கிலத்துல எழுதறத விட்டுட்டேன்.


இந்த வருசம் வரைக்கு ஆங்கில பதிவை சீண்டல. இந்த வருசம் ஆகஸ்டு மாசம், சும்மாத்தானே ஆன்சைட்ல இருக்கோம், blogdesam த்தை வாங்கலாமே வாங்கி, தமிழ்மணம் மாதிரியே ஆங்கில பதிவுகளுக்கும் ஒரு இடம் குடுப்போம்னு, காசி அண்ணாக்கு ஒரு மடல் தட்டினேன். அண்ணன் சொன்னாரு "இல்லே இளா, TMIக்கு தமிழ்மணத்தை குடுக்கும் போதே குடுத்துட்டேன், வாக்கு தவற கூடாதுல்ல" அப்படின்னாரு. அண்ணனையும் அவுங்ககிட்ட கேட்டுச் சொல்லுங்கன்னு கேட்டு வற்புறுத்தவும் மனசு இடம் குடுக்கலை. சரி, தமிழ்மணத்தை கேட்கலாம்னா யாருன்னே தெரியல. சரி நாமே ஒன்னு பண்ணிரலாம்னு முடிவு செஞ்சு, ஒத்த ஆளா போராடினேன். இதுல இன்னொரு காமெடி என்னான்னா? System Adminஆ இருக்கிற நான எப்படி ஒரு website பண்ணப்போறேன்னு ஆரம்பிச்சது. சரி படிப்போம்னு, அங்கங்கே இருக்கிற உதவி பக்கத்தையெல்லாம் தேடிப்பிடிச்சு படிச்சு, அங்கங்கே இருக்கிற தானியங்கி இற்றைப்படுத்திற கருவியெல்லாம் ஒன்னு சேத்தி, ஒரு முழு வடிவமா கொண்டு வர 2 மாசம் ஆகிருச்சு. அப்படியே ஓட்ட ஆரம்பிச்சேன்.(Mid of October). அதுபாட்டுக்கு ஓடிட்டு இருந்துச்சு. நவம்பர் கடைசி வரைக்கும் யாருக்கிட்டேயுமே ஒன்னும் சொல்லலை. மக்களா வந்தாங்க, சேர்ந்தாங்க, படிச்சாங்க. அவ்ளோதான். பெரிய எதிர்ப்பார்ப்பும் அதுல எனக்கே அங்கே இல்லே. எங்க மக்களுக்காக ஆரம்பிச்சத்துதானே, விட்டுட்டேன். அப்புறம் தமிழில் இருக்கும் கதை கவிதைகளை ஒரு இடத்துல கொண்டு வரனும் உருவாக்கினதுதான் இப்போ இருக்கிற சங்கமம் பதிவு.

உமர் தம்பி போன்றவங்களுக்கு தமிழ்ப் பதிவுலகத்துல ஒரு இடம் இருக்கு, அதை அங்கீகாரம் பண்ணித் தரணும் அப்படிங்கிறதுதான் என் அடிமனசுல இருந்த எண்ணம். உமர் தம்பி உட்பட 3 பேருக்கு பதிவர்கள் சார்பா பட்டமும், பதிவர்களுக்கு விருதும் தராலாமேனு யோசிச்சேன். ஒரு பதிவரா இதைச் செய்யுறதுல ஏதும் தப்பில்லைன்னு நான் நினனச்சேன். இதையே மையமா வெச்சு NRIக்கள் எல்லாம் சேர்த்து ஒரு துறையில நலிந்த கலைஞருக்கு பொருளுதவி பண்ணலாம்னும் ஒரு யோசனை. அப்போதான் தஞ்சாவூரான் இந்த விஷயத்துக்காக என்னை ஊக்குவிச்சாரு. பதிவர் விருதுக்காக முதல்ல கட்டமா நடுவர் குழுவை சேர்க்க ஆரம்பிச்சேன். இது என்னளவிலும், பிறகு நடுவர் குழுக்களாலேயே மொத்த குழுவாவும் உருவாச்சு. இது நவம்பர் மாசம் கடைசியில நடந்தது. இதுவரைக்கும் தனியாளா இருந்த நான் நடுவர் குழு வந்ததுக்கப்புறம் ஒரு குழுவா ஆகிட்டேன். சரி விருது நடத்த இடம்?

இருக்கவே இருக்கு Blogkut, விருதுக்காக ஒரு இடம் போடுவோம்னு ஒரு தனி Sub-D0main தயார் பண்ணினேன். சில சட்டம் திட்டம் எல்லாம் நடுவர் குழுவுல இருந்து பேசி முடிவுக்கு வந்தோம். ஒத்த வரியில விருதுக்கான முதல்ல அறிவிப்பும் செஞ்சேன். இந்த விருது சச்சரவு வர வரைக்கும் பேரெல்லாம் வெக்கலை. அடுத்த 12 மணிநேரத்துல தமிழ்மணத்துல இருந்து தமிழ்மணம் விருதுகள்னு அறிவிப்பு. சரி, ஆட்டத்தை கலைச்சரலாம்னா நடுவர்குழுவுக்கு என்ன பதில் சொல்றது. சரி நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தச் சமயத்துல ஒரு லோகோவோ, ஒரு பேரோ கூட சங்கமத்துக்கு இல்லே.

பேரில்லாத அந்த So called திரட்டி அப்போ ரெண்டே ரெண்டு பதிவைத்தான் திரட்டிக்கிட்டு இருந்துச்சு. இன்னும் பின்னூட்டம் திரட்டல்ல அந்த ரெண்டு பதிவுதான் இருக்கு. அடுத்த நாள் மக்களே அந்தப் பதிவை வெச்சே திரட்டிக்கு பின்னூட்டமாவும், பதிவாவும் பேர் வெக்க வேற வழியில்லாம சங்கமம்னே Logo போட்டுவிட்டு விதிமுறைகளை வெளியிட்டேன். அங்கே ஆரம்பிச்சதுய்யா ஆட்டம். இருவருமே விருதுகள் அறிவித்து ஏன் பதிவர்களை குழப்பனும்னு தமிழ்மணத்துக்கு ஒரு மடலையும் போட்டுட்டு சூடாகிற பதிவை எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டேன். தமிழ்ல அசைக்க முடியாத இடத்துல இருக்கிற தமிழ்மணத்து மேலையும், காசி அண்ணா மேலையும் எனக்கு மதிப்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு.

அவ்ளோதாங்க நடந்த விஷயம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதிட்டேன். மீதி எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே.

Tuesday, December 18, 2007

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று...

'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...'

& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை வெளியிட்டது 'அஃக்' இதழ். எட்டு ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.

அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச் சேர்த்து மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில் ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.

''இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான் இந்தப் பரந்த்தாமன். இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள் தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,


சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச் சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப் படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர் ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தேன்.

அப்போ சேலத்தில் 'இம்பீரியல்'னு ஒரு தியேட்டர் இருந்தது. மரக்கடை கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின், ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர் பத்திரிகையில் 'ரே'யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க. நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும், கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்'' என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து பேசுகிறார் பரந்த்தாமன்.

''நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால் ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும் பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்; கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன். அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ, பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத் துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம் நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!'' என்கிறார் பரந்த்தாமன்.

''ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?'னு கேட்டார். 'ஒண்ணுகூடப் படிச்சதில்லை'னு சொன்னேன். சிரிச்சுட்டு, 'நீ இப்படித் தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு வர்றியா?'னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை, சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, 'என் கூட வா! உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்' என்றார். பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.

அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி 'அஃக்' பத்திரிகை துவங்கினேன். எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன் எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள் எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான் முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள். எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.

காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று அம்மா கஷ்டப்பட்டு ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து 'பிருந்தாவனம்' பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன். அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள் அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள் மடிந்துவிட்டது.

வண்ணதாசனின் 'கலைக்க-முடியாத ஒப்பனைகள்' என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும் பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும் என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில் எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.

அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு சொத்துக்கள். ஒன்று, வீடு; மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத் தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள் மட்டும்-தான்'' என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.

பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் சரியான வேலை இல்லை, குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.

அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர் பத்திரிகை அட்டைப் பட சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள் இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.

நன்றி-விகடன்

Monday, December 17, 2007

வெலை போவுது எங்கூரு

எங்க ஊர் பேரு கொழிஞ்சிக்காட்டூருங்க. அந்த ஊர்ல ஒரு 500 ஏக்கராவுக்கு மேட்டாங்காடும், கொஞ்சம் வயலும் இருக்கு. வானம் பார்த்த ஊரு எங்களுது. ஒரு 500 குடும்பங்க இருக்காங்க. இது பாதி, இந்த தலைமுறை யாருமே உள்ளூருல இல்லை(என்னையும் இதுல சேர்த்துக்கிடுங்களேன்). எல்லாரும் படிச்சு வேலைக்கு போயிட்டாங்க. கூலி வேலை செஞ்சவங்களும் ஏதோ ஒரு தொழிலோ, இல்லே குத்தகைக்கோ, இல்லீன்னா மில்லுக்கோ வேலைக்கு போயிட்டு இருக்காங்க. எங்க தாத்தா 20 வருஷத்துக்கு முன்னாடி மாஞ்செடி வாங்கி எங்க தோட்டத்துல நட்டு வெச்சாரு. அவருக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு, எங்கயைனோ நானோ வெவாசாயம் பார்க்க போறதில்லைன்னு.

ஞாயித்துக்கிழமை நானோ, எங்கையனோ கோழி திங்கவாவது ஊருக்கு போயிட்டு இருந்தோம். அதனால எங்களுக்கு தேவையான நெல்லு வெளைய வெச்சுக்குவோம். எந்த தாத்தா ஆணடவன் கிட்டே போனப்புறம் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு நெல்லு வாங்கிகிட்டோம். அதாவது எப்படியோ வெவசாயம் நடந்துச்சு.

ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு 4 சுமோவுல ஆளுங்க வந்தாங்களாம். எல்லாரும் கரை வேட்டி வேற கட்டி இருந்தாங்களாம். நேரா ஊர்கவுண்டர் வூட்டுக்கு போன காரு கொஞ்சம் நேரம் கழிச்சு போயிருச்சு. அப்புறம்தான் எங்க ஊர்ல ஒரு திருப்பமே உண்டாகியிருக்கு. எங்கய்யனும் வாரம் ஒரு முறைதான் ஊருக்கு போறதால விஷயம் எங்க காதுக்கு ரொம்ப தாமசமாத்தான் எட்டியிருக்கு. அதாவது எங்க ஊரை யாரோ(?!) வெலை பேசிட்டு இருக்காங்களாம். அப்படி ஓ.பி அடிச்சு பன்னீரா குடிச்சு செல்வத்த சேர்த்தவருக்கு எங்க ஊர்மேல என்ன மோகமோ தெரியல? கருப்ப வெள்ளயாக்கிறதுன்னு பேசிக்கிறாங்க. பக்கத்து ஊருல இருந்த 600 ஏக்கராவையும் அவுங்க(?) வாங்கிட்டாங்களாம். எங்க ஊரையும் வாங்கிடலாம்னு வெலை பேச ஆரம்பிச்சுட்டாங்க.

தடமில்லாத 3 ஏக்கரை நாங்களும் விக்க வேண்டியதா போயிருச்சு. பங்காளிங்களுக்குள்ள தடம் எல்லாம் தேவை இல்லாம இருந்துச்சு. அந்த 3 ஏக்கராவ போவ மீதிய விக்க முடியாது கண்டீசனா சொல்லீட்டாரு எங்கய்யன். இன்னும் கொஞ்ச நாள்ல எங்க வீட்ட சுத்தி இருக்கிற பங்காளிங்க எல்லாம் சங்ககிரிக்கு போயிருவாங்க. அவுங்க எல்லாருக்கு ஒன்னு ரெண்டு லாரி இருக்கு. வாடகை வீடு பார்த்துகிறதா சொல்லிட்டாங்க. எங்க தாத்தா ஆசை ஆசையா எங்க ஊரு முழுக்க வண்டிகட்டியே மாஞ்செடி வாங்கி வந்து குடுத்தாரு. வாங்கியார போயி வர ஒரு வாரம் ஆவும். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த மாஞ்செடிங்க எல்லாம் என்ன ஆவுமோ தெரியல. ஊர காப்பாத்துற முனியப்பனும், கருப்பனும் எல்லையில சும்மா உக்காத்து இருக்க காசுக்கு ஆசைப்பட்டு சனம் எல்லாம் ஊரை வீட்டு அடுத்த மாசம் போவப்போவுது. என்னத்த சொல்ல?

Thursday, November 29, 2007

Gmail Launched - Group Chat

Gmail ன் இல்லாத ஒரு வசதி குழு அரட்டை. யாஹூவில் இருந்த இந்த வசதி இல்லாததால் Gmailக்கு மாற விரும்பாதவர்கள் ஏராளம். குழு அரட்டையயும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது Google. இந்த வசதி Webchat அதாவது Gmail பார்க்கும் வசதியுடன் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் Gtalkல் வரவில்லை. வேறு தில்லாலங்கடி முறையில் குரூப் சேட் நடத்தி இருக்கலாம். இப்போ நேரடியாவே குடுத்துட்டாங்க.







எப்படி குரூப்பா சேட்டுறது?
1. முதல்ல Gmail Login பண்ணுங்க.
2. Chat login ஆகலைன்னா login பண்ணுங்க. For more info
3. Chat login பண்ணி இருக்கிறவங்க யாராவது click பண்ணுங்க.
4. அப்புறம் மேலே படத்துல இருக்கிறா மாதிரி Options Click பண்ணுங்க.
5. இப்போ சோத்தாங்கை படத்துல இருக்கிற மாதிரி mail ID தட்டுங்க. Yahoo மாதிரி Drag and Drop /Click வசதி இன்னும் வரலை.
6. அட்ரஸ் பொஸ்தகத்துல இருக்கிற ID எல்லாம் வரும், தேவையானவங்களை கூப்பிடுங்க. அவ்ளோதான்.
7. You have invited ****to this chat. This is now a group chat. Add another person. அப்படின்னு வரும். Add a person to Chatன்னு இன்னொரு link வரும். அதையும் click பண்ணி ஆளை சேர்த்துகிட்டே போங்க.

Yahoo வின் குரூப் சேட், வீடியோ சேட் எல்லாம் வந்துட்டா Googleம் நிலைநாட்டிடலாம். மேலும் விவரத்திற்கு

அதனால வாங்க மக்களே குரூப்பா சேர்ந்து கும்மியடிக்கலாம்.

Wednesday, November 14, 2007

Grand Canyon

Grand Canyon போயிருந்த சமயம் எடுத்த படங்கள்





Tuesday, October 16, 2007

கற்றது கணக்கு- Bsc(Maths)

"அப்பா, எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்தான்பா படிக்கனும். அதுதான்பா என்னோட விருப்பமே. வாசவியோ, ஈரோடு ஆர்ட்ஸோ சேர்த்து விட்டுருங்கப்பா."

"ராஜா. கணக்கு படிச்சா உடனடியா அரசு வேலை கிடைக்கும். UPSC, TNPSC எல்லாம் எழுத வசதியா இருக்கும். நான் சொல்றேன் நீ, கோயமுத்தூர்ல தான் படிக்கிறே, அதுவும் ஹாஸ்டல்லதான் BSC Maths படிக்கப்போறே. சொல்லிட்டேன். வேற எதுவும் பேச வேண்டாம்"

அப்பா பேச்சு தட்ட முடியாமல் கோவையில் உள்ள பிரபல கலைக் கல்லூரியில் கணக்கு படிக்க ஆரம்பிச்சான் ராஜா. படிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அவனுக்கு விருப்பமான விஷயங்களில் கவனத்தைத் திருப்பினான். வேலையத்த வேளையில செய்யுற ஓவியமும், ஷட்டில் பேட்மிண்டனும் அவனுக்கு விருப்பமா இருந்து இருக்கு. அந்தக் கல்லூரியில் இரண்டுக்கும் சொற்பமான மக்களே இருந்தார்கள், இதையெல்லாம் பண்ணினா சோத்துக்கு என்ன பண்றதுன்னு எவனும் சீண்டாத ஏரியா இது. அப்படியே ஓவிய கமிட்டி சேர்மன், பேட்மிண்டனுல பல்கலைகழக்த்துல ஒரு நல்ல இடமுன்னு வாங்கி காலேஜுக்கு போவாம ஓபி அடிச்சுகிட்டே இருந்துட்டான்.

இப்படியே 2 வருஷத்தையும் ஓட்டிட்டான். அதே சமயம் ஏனோ தானோன்னு 40% வாங்கி எல்லா பாடத்திலேயும் பாஸும் ஆகிட்டானுங்க ராஜா. ஆனா இந்தச் சனி இருக்கு பாருங்க, அது மனுசன் கழுத்துல கட்டி நுனிக்கயித்த கையில வெச்சுக்கும், "மவனே ஓடுடா. கடேசியா உனக்கு வெக்கிறேன்"னு வெக்கும் ஆப்பு.

அப்படித்தான் இவனுக்கு கடேசி வருஷம் 5th Sem, 6th Sem எல்லாத்துலேயும் கப்பு. வேற வழியே இல்லே. ஊருக்கு டிகிரி வாங்காம வந்தா மானம் போயிருமேன்னு "என்ன கருமத்தையோ படி, ஊரு பக்கம் மட்டும் டிகிரி வாங்காம வந்துராத"ன்னு இருக்கிற நகையெல்லாத்தையும் அடமானம் வெச்சு 20ஆயிரத்தை ராஜா கையில குடுத்துட்டாங்க.

என்ன பண்ணுவாங்க அவுங்க மட்டும். இவனும் ஏதாவது டிகிரி வாங்கி குரூப் பரீட்சை எழுதி முன்னேறிடுவான்னு கற்பனை அவுங்களுக்கு. "ஆசை இருக்காம் தாசில்தார் ஆவ, யோகம் இருக்காம் கழுதை மேய்க்க".

ராஜாவோட கூட்டாளி ஒன்னு சொன்னான் "மாப்ளே! ஒரு கோர்ஸ் இருக்காடா. இண்டெர்நெட்ல பரீட்சையாம். உடனே ரிசல்டாம். பாஸானா உடனே வேலையாம்டா. "

"என்னடா ஒளற்ர, எப்படிடா உடனே திருத்தி குடுப்பாங்க?"
"இல்லே மாப்ளே. வெட்டியாத்தானே இருக்கோம். வா, ஆப்டெக் வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்"னான்.

காந்திபுரம் பேர்ந்து நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கிற RRT(RajaRajeshwari Towers) ல 5 வது மாடியில இருக்கு ஆப்டெக். செமத்தியான ஃபிகருங்க,. ஜொள்ளிக்கிட்டே கவுன்சலரை பார்க்க போனான் ராஜா. கோர்ஸ் என்னான்னே தெரியாம "Internet Exam, result "ன்னு உளற ஆரம்பிச்சான். இவன் என்ன சொல்ல வரான்னு அவங்களுக்கு சுத்தமா புரியலே. அந்த கவுன்சலரு நல்ல ஃபிகரு. இவன் சொல்றதை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு ஒரு Broucherஐ எடுத்து முன்னாடி வெச்சு ஆரம்பிச்சது, அதனோட உளர்றலை. இப்போ இவனுக்கு ஒன்னும் புரியல. அப்படியே அவனை கூட்டிக்கிட்டு போயி லேப், கிளாஸ் ரூம் எல்லாம் காட்டுச்சு. அடடா, அடடா, எத்தனை பொண்ணுங்க, எப்படி பசங்களோட சோடி போட்டு படிக்குதுங்க., நேர்த்தியா டிரஸு, ரூமு, பிகரு, "ராஜா, கலக்குறே"ன்னு மனசுக்குள்ள 100 வயலினை வாசிச்சுகிட்டே சொல்லிட்டு போனாங்க தேவதைங்க.

ஆனாலும் "Internet Exam, result " அப்படியெல்லாம் இந்த ஃபிகரு சொல்லவே இல்லியே, மறுபடியும் இவன் உளரலை ஆரம்பிச்சான். அப்போதான் அந்த ஃபிகருக்கு புரியவே ஆரம்பிச்சது. "இவனுக்கு Softwareக்கும், Hardwareக்குமே வித்தியாசம் தெரியல. எவனோ சொன்னான்னு நம்ம தாலிய அறுக்கிறான்" அப்படின்னு மனசுக்குள்ள நினனச்சிக்கிட்டு. "ஓஹ், நீங்க எதிர்த்தா மாதிரி இருக்கிற கவுன்சிலர்கிட்டே பேசியிருக்கனும் ராஜா. வாங்க அந்த டிபார்ண்மெண்ட்க்கு கூட்டிட்டு போறேன்னு எதிர்த்தா மாதிரி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே "தூ, இதெல்லாம் ஒரு இடமா? எங்கே பார்த்தாலும் ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டருங்க. ஒரு பொட்டிக்கும் டப்பா இல்லே. எல்லாம் தொறந்தே கிடக்கு. அதுக்கு மேல ஒரு ஃபிகர் கூட இல்லே. அட ஃபிகர் இல்லாட்டி விடுங்கப்பா. ஒரு பொண்ணுங்க கூட இல்லே" என்ன தலை விதிடா. சரி, இங்கே படிக்க அங்கே சைட் அடிக்கன்னு ஆரம்பிச்சான் அந்த கோர்ஸை.

3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு. ஆனாலும் ஒரு சந்தோசம், ஒரு software மக்களுக்கு வேலை கிடைக்கிலே. இவனுக்கு சோத்துக்கு பஞ்சமில்லாம ஆச்சு. அடிச்சு புடிச்சு 8 வருஷத்துல டாக்டர் படிப்பை விட பெருசா டிகிரி முடிச்சான். அப்படியே படிப்படியா Network Engineer, System Admin அப்படின்னு graphல ஒரே ஏறுமுகம்தான். Bsc Maths படிச்சுட்டு Engineerன்னு விஸிட்டிங்க கார்டு வாங்கின ஒரே ஆள் இந்த ராஜா. அவுங்க அம்மாவுக்கு பெரிய சந்தோசம் வேற. பின்னே மவன் கணக்கு படிச்சாலும் ஒரு பெரிய இஞ்சினியர் ஆகிட்டான்ல.

Sep-11 கூட இவன் வேலைக்கு ஒரு தொந்தரவும் பண்ணல. பிறகாலத்தில் பெரிய புராஜக்ட் மேனஜரா ஆவனும்னு பிலாகுல பதிவு எல்லாம் போடுறான்னா பார்த்துக்குங்களேன். அதானால Bsc Maths படிச்சா இஞ்சினியர் ஆவலாம். அதுவும் கம்பியூட்டர் இஞ்சினியரு.

Wednesday, October 10, 2007

சினிமா குயிஜூ-2007-Oct

சினிமாத்துறையில இருக்கிறவங்க எல்லாம் படிக்காதவங்கன்னு நமக்கு எல்லாம் இளக்காரம் இருக்கத்தான் செய்யுது. அதை பொய்யாக்கவே இந்த குயிஜு. முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லாட்டின்னா இருந்தே இருக்கு கூகிலாண்டவர். சிலதுக்கு விடை கிடைக்கலாம். ரெடி ஸ்டார்ட் மீஸிக்.


1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?

2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?

3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.

4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?

5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?

6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.

7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.

8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?

9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?

10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?

11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?

12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?

Tuesday, October 9, 2007

நண்பனான சூனியன்


சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.

நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.

உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!

Tuesday, October 2, 2007

தமிழ்மணத்துக்குமா போலி?

நண்பர்: மச்சான், இன்னுமாடா கவிதை எல்லாம் எழுதிட்டு இருக்கே? அதெல்லாம் விட்டு இருப்பேன்னு நினைச்சேன்.

நான்: ஏண்டா? எனக்கு அரைகுறையா வரதே அது ஒன்னுதான். அதையும் நிறுத்திட்டா?
(ஆமா, கவிதை எழுதித்தான் சாய்ஞ்சுட்டு இருக்கிற இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தப்போறேன். நான் ஒளர்றதை கவிதைன்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கும் போல)

நண்பர்: இளா! நானும் ஏதாவது எழுதனும்னு நினைக்கிறேன். எப்படிடா?

நான்: அதான் Blogன்னு ஒன்னு இருக்கே. எனது எல்லாம் படிச்சியா? இருடா லின்க் தரேன்
(நீயுமாடா? நல்லாதாண்டா இருக்கே. அப்புறம் ஏண்டா சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிறீங்க?)

நண்பர்: வேணாம்டா. அப்புறம் அதுக்கு அர்த்தம் சொல்றேன்னு என்னை அறுக்க ஆரம்பிச்சுருவே. வேணாம். சரி நான் பிலாக் எழுதறேன். அப்புறம் அதை எப்படி மத்தவங்க படிப்பாங்க? (அப்பாடா! எங்கே கவிதை சொல்லி காலங்காத்தால மூட் அவுட் பண்ணிருவானோன்னு பயம்தான்)

நான்: நண்பா! இதுக்காகவே பாடுபட்டு சில நல்ல மனுஷங்க ஒரு இடத்தை நமக்காகவே வெச்சு இருக்காங்க.
(நாங்கயெல்லாம் இங்கேதான் 'குடி' இருக்கோம். வாடகை வாங்கினா செம வசூல் ஆவும்)

நண்பர்: அப்படியா? அப்போ தமிழுக்காக எழுதற மக்கள் எல்லாம் இங்கே எழுதறாங்களா?

நான்: இல்லே. நீ எங்கே வேணுமின்னாலும் எழுது. ஆனா இங்கே ஒரு தொடுப்பு குடுத்துட்டா போதும்.
(என்னாது தமிழுக்காக மக்கள் எழுதறாங்களா? அதுதான் ஊர்ல மழை இன்னும் பின்னி பெடலெடுக்குதா?)

நண்பர்: அப்படியா? சரி. நல்ல விஷயம்தான். அப்போ பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் ப்லாகல எழுதறாங்கன்னு சொல்லு.
(நானும் அங்கே எழுதி பெரிய ஆள்ன்னு காட்டிக்கலாம்தானே)

நான்: இல்லேடா எழுதனும்னு நினைக்கிற மக்கள் இங்கே எழுதறாங்க. பெரிசு சிறுசு எல்லாம் இங்கே இல்லே. எல்லாரும் ஒன்னுதான். (யார் வேணுமின்னாலும் வயசு, தகுதி இல்லாம திட்டலாம். இல்லைன்னா தைரியமா அனானியா வந்து திட்டலாம்)

நண்பர்: ஆஹா,. கருத்து சுதந்திரம் ஜாஸ்தியா?


நான்: ஆமா. அதுவே உண்மைதான்.
(அந்தக் கருமத்தை நினைச்சாத்தான் எரிச்சலா இருக்கு.)

நண்பர்: சரி அந்த இடங்களை சொல்லுங்க. யார் யார் எழுதறாங்கன்னு பார்க்கிறேன்.

நான்: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி.
(பாரிஸ் கார்னர், சுண்ணாம்பு கால்வா. அங்கேதான் தமிலு துல்லி வெலையாடுது. இல்லாட்டி டிவி பாரு அங்கே பேஷுவாங்க)

நண்பர்: தமிழ்மணம், திறந்தாச்சு. ஆனா நீ சொல்ற மாதிரி ஒன்னுமே இல்லியே.

நான்: பாரு நண்பா. இருக்கும், ஏதாவது தொடுப்பு தட்டி பாரு.

நண்பர்: என்னாது பிலாகா? நீ சொல்ற மாதிரி ஒரு இடமே இல்லியே.

நான்: மச்சான். லின்க் குடு
(அடங்கொய்யால, அதையும் தாக்கிப்புட்டாங்களா?)

நண்பர்: http://tamilmanam.com/

நான்: (மனதுள்:இது என்னாது புதுக்கதை? ஒரு வேளை போலியா இருக்குமோ? 'அவரே' வெளி உலகத்துக்கு நல்லவரா வந்துட்டாரே)

அந்த வலைப்பக்கத்தை திறந்து பார்த்தபின்,

சே சே அப்படியெல்லாம் இல்லே. இதைத்தான் ஒரே மாதிரி சிந்திக்கிறதுன்னு சொல்றாங்களா?

இந்தப் பதிவு தமிழ் மணம் பரப்பிய அண்ணன் காசிக்குச் சமர்ப்பனம்.

Tuesday, September 11, 2007

தமிழ்ப் பதிவுகளில் விவசாயம்




  1. தமிழ்ப் பதிவர்களின் விவசாய கூட்டுப் பதிவு

  2. ஆழியூரான் - வேலை இருக்கு ஆனா ஆள் இல்லை

  3. மா.சிவகுமார்- விவசாயி - ஒரு சிறு முயற்சி

  4. மா.சிவகுமார்- விவசாயி - என்னதான் தீர்வு? -Part- 1 & Part-2

  5. அசுரன் - இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
  6. சம்சாரியின் இயற்கை விவசாயம்

  7. அசுரன் - விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!
  8. சந்தோஷ் - விவசாயிகளின் தேவதை
  9. சதுக்க பூதம் -விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை
  10. சுடுவது சுகம்- விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
  11. வின்ஸென்ட்- "உலக வெட்டிவேர் வலைஅமைப்பில் The Vetiver network (international)முதல் பக்கத்தில் எனது "ஐடியா" ."
  12. http://dgtirupur.wordpress.com/2008/11/23/தள்ளாடும்-தமிழக-விவசாயம்/

Monday, August 27, 2007

Work from Home-1


Working From Home- இது ஏதோ மேனேஜர்களுக்கு மட்டும்தான்னு இருந்த காலம் போயி, இப்போ எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதென்ன Work From Home? அலுவலகத்துக்கு போகாம வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதுதான் இந்த முறைக்கு அர்த்தம். இது எந்த அளவுக்கு IT சாராத தொழிலுக்கு பொருந்துங்கிறதுதான் எனக்கு தெரியல. மக்களை சந்தித்தே ஆகனும்னு இருக்கிற தொழிலுக்கு இது பொருந்தாது(உதாரணம்- மருத்துவம்). அதிலும் சில இடத்துல செய்ய முடியும். ஆனா இதை என் அலுவலகத்துல ஒரு விளக்கமா குடுத்தப்போ நிறைய எதிர்ப்புகள் வந்தாலும், பிறகு எல்லா மட்டங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்துறதுதாங்க கொஞ்சம் கஷ்டம். இது அடுத்த தலைமுறைக்கான யோசனையா இருக்கலாம். இதனால கிடைக்கும் பலன்கள் அதிகம். உள் அரசியல் இருக்காது, வேலைக்கு போகும் நேரம் குறையும், தனிப்பட்ட வேலைக்கான நேரம் அதிகமாகும், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் கூடலாம். இதைப்பற்றி நிறைய அலசலாம் வாங்க.

Wiki வழக்கம் போல ஒரு விளக்கம் குடுத்து இருக்காங்க.

A Work-at-Home scheme is a Get-rich-quick scheme in which a victim is lured by an offer to be employed at home, very often doing some simple task in a minimal amount of time with a large amount of income that far exceeds the market rate for the type of work. The true purpose of such an offer is for the perpetrator to extort money from the victim.

Work-at-home schemes have been around for decades. Originally found as ads in newspapers or magazines, they have expanded to more high-tech media, such as television and radio ads, and on the Internet.

Legitimate work-at-home opportunities do exist, and millions of Americans do their jobs in the comfort of their own homes. But anyone seeking such an employment opportunity must be wary of accepting a home employment offer, as only about one in 42 such ads have been determined to be legitimate [1]. Most legitimate jobs at home require some form of post-high-school education, such as a college degree or certificate, or trade school, and some experience in the field in an office or other supervised setting.

(தொடரும்)

Thursday, August 23, 2007

வருகிறேன் நண்பர்களே

ஆங்கில பதிவை எழுதிட்டு ஒரு நாளைக்கு மூணு பேரோ, நாலு பேரோ படிச்சுட்டு இருக்க, பின்னூட்டமே இல்லாம 100 பதிவை முடிச்ச பின்னாடிதான் தமிழ்ல பதிவுகள் இருக்குன்னே தெரிஞ்சது. என்னத்தையோ தேடிட்டு இருக்கும் போது தட்டுப்பட்ட, நான் பார்த்த முதல் தமிழ்ப்பதிவு KVRன் "கொசப்பேட்டை". அப்புறம் கொங்கு ராசா, நாமக்கல் ராசான்னு தொடர்ந்து தமிழ்ப் பதிவுகளின் தொடர்பு கிடைச்சு, மதி தொகுத்த வலைப்பூ கண்ணுல பட்ட போது அப்படி ஒரு சந்தோசம் எனக்கு. அப்புறம் சுரதா அண்ணனின் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm உதவியோட தமிழ்ல வலைப் பதிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் இ.கலப்பை.



இப்போவெல்லாம் என்னோட மெயில் பாக்ஸ் திறக்கிறதுக்கு முன்னாடி நான் பார்க்கிற பேரு முகுந்த். எந்த ஊர்ல இருந்தாலும் ஒரு பதிவர் கூப்பிட்டு நல்லா இருக்கியாப்பான்னு கேக்குற அளவுக்கு நண்பர்கள் கூட்டம். வார கடைசியில மணிக்கணக்கா தொலைபேசி பேச்சு. தமிழ்ப்பதிவு மட்டும் உலகம்னு ஆகிப்போயிருச்சு. இப்படி தமிழ்ப் பதிவுகளின் கவர்ச்சியும், கம்பீரமும் பெருமையும் சொல்ல மாளாது. அப்படி ஒரு வசீகரம் இந்த பதிவுலகத்துக்கு இருக்கிற மாதிரி வேறெதுவுமே இல்லே. தமிழ்மணம் பரப்பிய காசி அண்ணனுக்கு ஒரு பெரிய வணக்கம் சொல்லி நன்றி சொல்லிக்கிறேன். அப்படியே தமிழ்மணத்தை வளர்க்க பாடுபட்ட அந்த 5 /6 மக்களுக்கும்.



தமிழ்மணத்துல இருக்கும் பரணை பார்க்கும்போது, அதுல வரும் சுட்டிகளில் ரொம்ப சொற்பமான மக்களின் பதிவுகளே இப்போ படிக்க முடியுது. பரண் ஏதோ வரலாற்று பகுதி மாதிரி பார்த்துட்டு இருப்பேன். அப்போவெல்லாம் "நாமளும் இப்படி ஒரு நாள் வரலாறு ஆகிடுவோம்"னு தோணும். சிதிலங்கள் சகஜம்தானே. அப்படி ஒரு நாள் நினைச்சுட்டு இருக்கும்போது எல்லாம் கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதை ஞாபகத்துக்கு வரும்


உருமாற்றம்



கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.


சந்தோஷம்: பல நண்பர்கள், பொழுதுபோக்கு, எழுத்து மேல் கொண்ட காதலின் வடிகால்.


சோகம்: அரசியல் மற்றும் நாகரிகமற்ற வார்த்தை ஜாலங்கள், எழுதுவதற்கு சுதந்திரமற்ற சூழல், தனிமனித தாக்குதல்.


போன வருஷம் இதே நாள்ல தேவ் ஒரு விஷயம் சொன்னாரு

//நண்பா வழக்கமாப் போடுற பின்னூட்டத்தை விட இந்த தடவை ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுறேன்.. ஆரம்பத்துல்ல உன் எழுத்துக்களில் இருந்த தீவிரம் இப்போது இல்லை எனபது எனக்கு எப்போதும் வருத்தமே.. உன் வரப்பு உன் எழுத்துக்களின் மறுபிறப்பு எனக் கூடச் சொல்லுவேன்.வரப்பினில் நெஞ்சை வருடும் உன் எழுத்துக்கள்.. விவசாயியாக ஒரு காலத்தில் ஆழ உழவும் செயதன.. ஏனோ இப்போது விவசாயியாக உன் எழுத்துக்களில் அந்த சீற்றம் சற்றே குறைந்து விட்டது போல் உன் வாசகனாய் எனக்கு ஒரு குறை...//

உணமைதான் நண்பா, கிராமத்தின் சீற்றம் கொஞ்சம் குறைஞ்சுதான் போயிருச்சு. அதன் முதல் படியாய்தான் பதிவர் வட்டம்/பதிவர்களைப் பற்றி எழுதுவதை குறைத்தேன், இனிமே கிராமம் பக்கம் போலாம்தான். ஆனால் நாடோடியாய் இருக்கும் எனக்கு என் கிராமமே மறந்துபோகும் அளவுக்கு தள்ளி வந்துட்டேன். பாழும் இந்த பொழைப்புக்காக என் கனவு எல்லாம் தொலைச்சுட்டேன் நிற்கிறேன் நண்பா. அப்புறம் எப்படிடா கிராமத்தை பத்தி எழுத. ஒரு வருஷமா உன் வார்த்தைகள் செவியில அறஞ்சுகிட்டே இருக்கு"

அட என்னாத்துக்கு இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்குறீங்களா?. ஆமாங்க நான் தமிழ்ல பதிவு எழுத வந்து ரெண்டு வருசம் ஆச்சு. அடுத்த வருஷம் இப்படி பதிவு எழுதுவேனோ தெரியல, இருந்தாலும் ஒரு நம்பிக்கைதான்.


அந்த நம்பிக்கையில மூணாம் வருஷத்துல அடியெடுத்து வெச்சு
எழுத
வருகிறேன் நண்பர்களே!

Wednesday, August 8, 2007

அமெரிக்காவும் கொல்டியும்

இந்த மக்களைப் பத்தி நிறைய சொல்லலாங்க. அதுவும் ITல இருக்கிற கொல்டிக்களைப் பத்தி. இவுங்க ITக்கு வந்துட்டா இவுங்க கனவு, வாழ்க்கை எல்லாமே அமெரிக்காதான். வேற எந்த நாட்டுக்கு போனாலும், அமெரிக்கா, பச்சை அட்டை கனவு மட்டும் அவுங்களுக்கு போகவே போகாது. எங்கம்பெனியில இருந்த நண்பன் 3 வருசமா ப்ராக்(Czech Republic) இருந்தாரு. ஆனாலும் அமெரிக்கா போயே ஆகனும்னு சொந்த காசைப் போட்டு அமெரிக்கா போய்ட்டாரு. அது என்னமோ இவுங்களுக்கு மட்டும் எப்படித் தான் விசா கிடைக்குதோ தெரியல. இவுங்களுக்கு இருக்கிற மொழிப்பற்று, சினிமாப் பற்று, மாநிலப்பற்று, கொல்டிங்க பற்று என்னை ரொம்பவே சிலிர்க்க வெச்ச விஷயம்.

இதுல ஒரு Spreadsheet மெயில வந்துச்சு. அமெரிக்க வாழ் கொல்டி மக்களின் வரதட்சணை பட்டியல் அது. கொல்டி மக்கள் அமெரிக்காவுல இருந்த காலத்தைப் பொறுத்தே வரதட்சணை நிர்ணயமாகுதாம். அந்த Spreadsheetல கடைசி வரிதான் அருமை. வயது: 27-32, இருப்பு:பச்சை அட்டை, படிப்பு: இஞ்சினியரிங், வரதட்சணை: Unlimited. அடங்கொக்க மக்கா இது என்ன சரவணபவன் மீல்ஸா?

Grand Canyon போயிருந்த சமயம், அந்த ஊர்ல சின்னதா இருக்கிற பேருந்துல தான் சுத்தி பார்க்க முடியும். அப்படி போய்ட்டு இருக்கும் போது ஓட்டுனர்கிட்டே பேசிட்டே வந்தேன். அப்போ அவர் கேட்ட கேள்வில எனக்கு சிரிப்பு தாங்கவே முடியல. "இந்தியாவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டாங்களா?"ன்னு கேட்டாரு. ஏன்னா? பேருந்துல இருந்த அத்தனை மக்களுமே இந்தியர்கள். ஆனா நமக்குதானே தெரியும், அங்கே இருந்தவங்க யாருன்னு. நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்ம கூட வந்த கூட்டாளி "என்னப்பா சிரிக்கிறே?"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர்கிட்டே"ஆந்திராவுல யாருமே இல்லியே, எல்லாரும் இங்கே வந்துட்டிங்களா?"ன்னு நான் கேட்டேன், ஏன்னா அவரும் ஒரு கொல்டிதான்.


இனி துணுக்குகள்:

1) "மாப்ளே இந்தியா போறே எங்களை எல்லாம் மறந்துடாதடா? ஹ்ம்ம் ஹ்ம்ம் கிளம்பு"

"Hello Excuse me, could you please....."

"மாப்ளே என்னடா? இப்படி சொன்னா முன்னாடி போவாங்களா? அவுங்களுக்கு புரியற மாதிரி சொல்லு. இப்போ பாரு, ஜருகண்டி, ஜருகண்டி, ஜருகண்டி ஜருகண்டி"

2) அமெரிக்கா போவாம நீ படிச்சு என்ன ஆவப்போவுது, கம்னு விவசாயம் பார்க்க வந்துரு.

3) "ஏழுமலைவாடா வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா" லாஸ் வேகாஸ் ஹோட்டலில் தங்கி இருந்த போது பக்கத்து அறையில் பூசை சத்தம் :). அட அநியாய ஆபிசர்களா, இங்கே வந்துமா?

4) "எத்தனை லட்சம் செலவு பண்ணியாவது அமெரிக்கா போயிடனும். அப்புறம் அதை ரிட்டர்னா கல்யாணத்துல வாங்கிக்கலாம்" ஒரு ரெட்டிகாரு "தம்" பிரேக்ல சொன்னது.

5) அமெரிக்காவுல் இருக்கிற எல்லா Consultantsம் அவுங்கதான்.

6)SAP-ன்னா என்ன அர்த்தம் தெரியுங்களா? Systemanalyse und Programmentwicklung அப்படின்னு சொன்னா அது தப்பாம். State of Andrapradeshதான் சரியாம் அவ்ளோ மக்கள் SAPல வேலை பார்க்கிறாங்க. காரணம்?

7) நம்ம ஊர்ல பெரிய Software, pirated கிடைக்காதுன்னு சொல்ற விசயம் அங்கே 30 ரூபாய்க்கு கிடைக்கும்னு சொல்லி நம்மள கதி கலங்க வெப்பாங்க? எப்படீய்யா?

8) ஆந்திரான்னாவே Consulateல ஒரு முடிவோடதான் இப்பவெல்லாம் application பார்ர்கிறாங்க.

9) அதுசரி, தெலுங்கு மக்களுக்கு கொலுட்டின்னு எப்படி பேர் வந்துச்சு? தெலுகுவை திருப்பிபோடு, கமுத்திப் போடுன்னு கதை விடாதீங்க. உண்மையான காரணம் தெரிஞ்சா சொல்லுங்க.

இது நமக்கு தெரிஞ்ச விசயம்தான், இன்னும் இருந்தா "செப்பண்டி"

Sunday, August 5, 2007

* சில சிதிலங்கள்!


வாழ்க்கையில சில விஷயங்களை நாம மறந்துட்டு போய்ட்டே இருக்கோம்.
மறப்பதுதான் மனிதன் இயல்பு. இன்று நான், நாளே நீ, நாளை மறுநாள் இன்னொரு முகம். ஞாபகம் வெச்சுக்க முடியுங்களா? கண்டிப்பா முடியாது. என்னை ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நானும் ஒரு நாள் சிதிலமடைஞ்சிதானே போறேன். அதுதாங்க வாழ்க்கை.


"என்ன ஆனாலும் பரவாயில்லை, உனக்கு மட்டும் என் பொண்ணைத் தர மாட்டேன். ஒரே ஜாதி, நல்ல வேலை, சரியான அந்தஸ்த்து இருந்துட்டா மட்டும் பொண்ணை குடுத்துரனமா என்னா? பார்ப்போம்".
"சரிங்க, நீங்க ரெண்டு பேரும், இப்படி அடம் புடிக்கிறீங்க. கல்யாணம் பண்ணி வெச்சுடறேன். ரெண்டு பேரும் நல்லா இருந்தாவே எனக்கு போதும். பொண்ண பெத்தவனுக்கு பொண்ணு நல்லா இருந்தா மட்டும் போதும். வேற என்ன வேணும்."
"உனக்கு என்னப்பா பொண்ணும், மாப்பிள்ளையும், பேரனும் உலகமெல்லாம் சுத்துறாங்க. பெரிய இடத்துல கட்டி குடுத்துட்டே, உன் கடமைய சரியா பண்ணிட்டே. யாருக்கு இப்படி வாய்க்கும் சொல்லு. இதுக்கு எல்லாம் குடுத்து வெச்சு இருக்கனும். ஹ்ம்ம்"
"அட, கண்ணு போடாதீங்கய்யா. என் பொண்ணு நல்லா இருக்கனும் இல்லே"


"டேய். பேராண்டி. இப்ப எல்லாம் என்ன பாட்டு. பாகவதர் பாடுவாரு பாரு. அது பாட்டு. இப்ப பாடுறது எல்லாம் பாட்டா?"
"யாரு தாத்தா பாகவதர்?"


"ஹேய், இளா என்னை ஞாபகம் இருக்கா? Botany டா. என்னை கூட நீ கிளின்னு சொல்லி கூப்பிடுவியே!"
"அட ஆமா. மறந்தே போச்சு. ஹிஹி"


"இந்த இடத்துலதான் நாங்க அப்போவெல்லாம் பேசி கூத்தடிப்போம். இப்போ அது இல்லே, வேற ஏதோ கட்டடம் இருக்கு. அப்போ பெரிய படிக்கட்டு இருந்துச்சு, எங்களுக்கு பேச வசதியா இருந்துச்சு""




மேலே இருக்கும் படம் நான் பிறந்த வளர்ந்த வீடு. மேலும் ஒரு சிதிலம்.

Friday, August 3, 2007

* 2:1

முனியப்பன் கோவில் பொங்கலுக்காக சென்னையில இருந்து வந்து சகாக்களை பார்க்க கிளம்பினான்.

"அடிச்சேன்னா பாரு, அதுக்கு அது அர்த்தம் இல்லே. அறிவு இல்லே உனக்கு? சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா? எவ்ளோ நாளா சுத்திட்டு இருக்கேன். என் காதல் தெய்வீகமானது இல்லே. ஆனா நிசம், நல்லா வெச்சு காப்பாத்துவேன்" நெற்றி நரம்பு புடைக்க பேசுவதை கை கட்டியபடி அமைதியாக பார்த்தாள்.

"டேய், வேணாம்டா சொன்னா கேளுங்கடா, இது எல்லாம் தப்புடா, அதுவும் நம்ம ஊர்ல நம்ம சாதி சனத்துக்கு தெரிஞ்சா என் மானம் போயிரும்டா"

"அப்போ என்னை என்ன பண்ண சொல்றே. ஒரு முடிவை சொல்லிட்டு போ. 5 வருஷ நினைப்பு இது. இப்படி பட்டும் படாம போனா எனக்கு கஷ்டமா இருக்காதா?"

"அட போடா, இதெல்லாம் நடக்காமயா இருக்கு. மக்களுக்கு தெரியட்டுமே, நாம என்ன சின்ன குழந்தைகளா சொல்லு? வயாசாகிட்டே போவுதில்லே?"

"சரி, இப்போ என்ன பண்ணனும்னு சொல்லு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. ஆமாவா இல்லியா?"

"இல்லேடா, வேணாம், நமக்கு இது சரிப்பட்டு வராது. விட்டுரு. நான் வீட்டுக்கு போறேன்"

"வீட்டுக்கு போவ விடமாட்டேன். எனக்கு பதில் சொல்லு. தினமும் உசுரு போற மாதிரி இருக்கு. ப்ளீஸ்" கெஞ்ச ஆரம்பித்தான்.

"நீ என்ன சொன்னாலும் விடப்போறதா இல்லே"

"நான் எப்பவாவது உன்னை காதலிக்கலைன்னு சொன்னேனா? நீயா முடிவு பண்ணாத. இது புரிஞ்சிக்கிற விஷயம். உனக்கு புரியுதா? சும்மா சீன் போடாத. உன்னையும் நான் காதலிக்க வேண்டியதா போச்சே கருமம்" அஞ்சு வருஷமாக பின்னாடியே அலைபவனை சந்தோசத்தில் ஆழ்த்திவிட்டு வீட்டுக்கு போனாள் ரதி.

"ஊரு விட்டு ஊர் போய் நல்ல பேர் எடுக்கலாம்னா இவுனுங்க உள் ஊர்லேயே பேரை கெடுத்துருவாங்க போல இருக்கே"ன்னு மனசுல நெனைச்சுகிட்டு சொல்ல சொல்ல தண்ணி அடிக்காமல், இவனுக்காவே காத்திருந்த நண்பர்களை பரிதவிக்கவிட்டு வீட்டுக்கு போனான் இளா.

Thursday, August 2, 2007

* குறுக்கெழுத்துப்போட்டி

குறுக்கெழுத்துப்போட்டி நடத்தனும்னு முடிவு பண்னின பிறகுதான் தெரிஞ்சது, அது கொஞ்சம் கோக்கு மாக்கான வேலைன்னு. போட்டிக்கு முக்கியமா தேவைப்படுறதே Tableதான். அப்புறம் பார்த்தா பிலாகரு Table support பண்ண மாட்டாராம். அப்படியே கோடிங் எழுதி போட்டாலும், திருச்சிக்கும் கோயமுத்தூருக்கும் போவது Table. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேடி ஒரு வழியா ஒரு Work around கண்டுபுடிச்சுப் போட்டாச்சு. கேள்விக்கு தகுந்தபடிதான் கட்டம் போட்டு இருக்கோம், அதிகமான எழுத்தை ஒரு கட்டத்துக்குள்ள அடிக்க முடியாது. முயற்சிப் பண்ணி பாருங்க.

சரி எல்லா விடையும் பின்னூட்டத்துல தெரிவிக்கனும்னு இல்லே. கட்டத்தை எல்லாம் நிரப்பின பிறகு 2 கேள்வி இருக்கு. அதைச் சொன்னாவே போதும். இது என்னோட முதல் முயற்சி பதில் எல்லாம் சுலபம்தான், கேள்விதான் கொஞ்சம் கஷ்டமா வெச்சு இருக்கோம்.


வலமிருந்து இடம்:
1. Time Magazine 1930ம் வருடம் இவரை Man of the Yearஆ அறிவிச்சாங்க. இவரைப் பற்றி ஸ்பெயினில் எடுக்கப்பட்ட விளம்பரம் இன்றும் அந்த நாட்டின் சிறந்த விளம்பரமா கொண்டு இருக்காங்க.
3. இவுங்க அம்மாவை கொன்றவர்களுக்கும், இவரைக் கொன்றவர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர் மகன் ஆரம்பித்தத் தொழில் கால் சென்டர்.
5.கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு ஊர். தண்ணீருக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
6. SS Music சேனலில் வீடியோ ஜாக்கியாக இருந்தவர், வில்லியாக நடித்த முதல் படம் இது.
7. பாக்யராஜ் நடித்த படத்தின் முதல் பாதி இது. அடுக்குதொடரின் பாதி மட்டும் இங்கே.
8. இது தமிழர்களின் பழமையான, ஆனால் அழிந்து வரும் ஒரு கலை/பொழுதுபோக்கு. திரும்பி உள்ளது.
9.ஜிஸ்ம் என்ற படத்தின் கதாநாயகி.
10. சுரேஸ் கிருஷ்ணா இயக்கிய பெரிய வெற்றிப் படம், நடு எழுத்து மிஸ்ஸிங்.

மேலிருந்து கீழ்:
1. பேபி கல்யாணி ஆட்டம் போட்டு இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸனையே அசற வைத்த அந்தப்பாடலின் முதல் வார்த்தை.
2.SKF 1138 என்ற வாசகம் வந்தத் திரைப்படம்
3.கோவையில் இருக்கும் ஒரு தியேட்டரின் பெயர். சங்கீதத்தோடு சம்பந்தப்பட்டப் பெயர்.
4.Sliding Doors என்ற திரைப்படத்தை தழுவி வந்த தமிழ்ப்படத்தின் இயக்குனர்
6. ஈராக்கின் கரன்ஸி
9. 1967ல் ஊட்டியில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு இது
10. ஒரு போதை வஸ்து
11. வேற நாட்டுக்கு போவனும்னா இது கண்டிப்பா தேவை.




































1





2


3



4















5














11



6






9



10






7













8







ஆச்சுங்களா?
இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்கனா நீங்க எல்லா கட்டத்தையும் ரொப்பீட்டங்கன்னு அர்த்தம்
பின்னூட்டம் போடுறதுக்கான கேள்விகள் இதோ
1. 1-காண பதிலின் முதல் எழுத்து, 3 மேலிருந்து கீழின் 2 வது எழுத்தும் மூணாவது எழுத்தும் சேர்ந்தால் என்ன வரும்?
2.11 மேலிருந்து கீழின் 2 வது எழுத்தும், 6 மேலிருந்து கீழின் 3 வது எழுத்தும், 9 மேலிருந்து கீழின் 2 வது எழுத்தும் சேர்ந்தால் என்ன வரும்?
இது என்னோட முதல் முயற்சிதான். எங்காவது தப்பு வந்தா சொல்லுங்க மாத்திக்குவோம்...

Wednesday, August 1, 2007

* கபி அல்வித நா கெஹனா

Chatting எதுக்கு பண்றோம்? நட்பு வட்டத்தை பெரிசு பண்ணவும், புதுசா நட்பை ஏற்படுத்திக்கவும், இருக்கிற நட்பு தொடர்கிறதுக்கும், அப்படியே நேரத்தைக் காலி பண்ணவும்தான். ஆனா, சில நேரத்துல சேட்டிங் நட்பு தொடர்வது இல்லேங்கிறது மட்டுமில்லாம நிறைய கஷ்டத்தையும் குடுத்துட்டு போயிருது. நான் சொல்லப்போற விஷயமும் அதுல ஒன்னுதான்.

எனக்கும் இப்படியாப்பட்ட நட்புகள் கிடைச்சு இருக்காங்க. அதுல Professionalஆ உதவி பண்றா மாதிரி நட்பும் உண்டு. ஒரு Techinical Forum வழியா நட்பாகி பிறகு ஊர் பேர் தெரிஞ்சுகிட்டு சந்திச்சுகிட்டு இருக்கோம், இன்னும் Professionala பிரச்சினை வந்தா உடனே chattingla உக்காந்து சந்தேகம் கேட்டுக்குவோம், என் தொழிலுக்கு ஒரு பெரிய கேங்கே இருக்கு. ஆனா அவுங்க தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி இதுவரைக்கும் கேட்டுகிட்டது இல்லீங்க .


Group Chatன்னு ஒன்னு நடக்கும், அதுதான் சூப்பரான மேட்டர். ஒரு குரூப் ரூம் ஆரம்பிச்சு 10 இல்லைன்னா 20 பேர் கும்மி அடிச்சுட்டு இருப்பாங்க. நாம எல்லாரும் சேர்ந்து, ஒன்னா ஒரு இடத்துல உக்காந்து பேசிக்கிற மாதிரியே இருக்கும், அது மாதிரிதான் ஒரு நாள் சென்னைகலக்கல்ஸ்'ங்கிற பேர்ல ஒரு Group Chat நடந்துகிட்டு இருந்துச்சு. அன்னிக்கு தலைப்பு பெண்ணீயம். இதைப்பத்தி மக்கள் கும்மி அடிச்சுட்டு இருக்கும் போது ஒரு PM(Personal Message) வந்துச்சு "இதைப் பத்தி பேசாதீங்க இளா, அவுங்க பேசிட்டு போகட்டும்"னு ஒரு அன்பு கட்டளை வந்துச்சு. அப்புறமா எங்கேயாவது குரூப் சேட்ல பார்த்த PM பண்ணி பேச ஆரம்பிச்சோம். அப்படியே சாப்பிடீங்களா, காபி குடிச்சீங்களான்னு பேச ஆரம்பிச்சு நட்பான அந்தப் பொண்ணு பேரு "ஜானகி" (அவுங்க பேர மாத்தி வெச்சு இருக்கேன்).



ப்படியே நாளடவில கொஞ்சம் கொஞ்சமா நட்பு
 நெருக்கம் ஆகி பொது விஷயங்களை விட்டு தனிப்பட்ட விஷயங்கள பேச ஆரம்பிச்சோம். அப்போ, ஜானகி yahoo, hotmail Chat Messengerல, Status மெஸேஜ் "Kabhi Alvida Naa Kehna" போட்டு வெச்சு இருப்பாங்க, அப்போ அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியல. நட்பு & ஆண், பெண் என்கிற வட்டத்த விட்டு வராத நட்புன்னு ஆகிப்போச்சு. Chatன்னு இருந்த நட்பு நாளடைவில போனுக்கு மாற ஆரம்பிச்சது.

அவுங்க கூட போன்ல பேச ஆரம்பிச்சது 2003 ல இருக்கலாம் ஞாபகம் இல்லே. வாரத்துல 10-20 நிமிசம் பேசிக்குவோம், அந்த வாரம் என்ன நடந்துச்சுன்னும், கஷ்டங்களையும் சோகத்தையும், ஃபோனேல பேச ஆரம்பிச்சோம். என் பொறந்த நாளுக்கு நடுராத்திரியில வாழ்த்து சொல்ல கூப்பிட்டு எங்கம்மாகிட்ட திட்டு வாங்கி பின்னாடி சமாதானமாகி எங்க வீட்டுக்கு நல்லா தெரிஞ்ச, ஒரு நல்ல ஸ்னேகிதியா ஆனாங்க.

அவுங்களுக்கு கல்யாணம் நிச்சயமானப்போ நான் நொய்டாவுல இருந்தேன். நண்பர்களுக்கு எல்லாம் விருந்து குடுத்து சந்தோசப் பட்டேன். அவுங்க கல்யாணத் தேதி சொன்ன போதுதான் எனக்கும் இன்னும் கலக்கமாகிருச்சு. என்னோட கல்யாணத்துக்கு அடுத்த வாரம் அவுங்க கல்யாணத் தேதி குறிச்சு இருந்தாங்க. சரி, ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு தெரிஞ்சு போயிருச்சு, கல்யாணத்துலயாவது நேர்ல பார்த்துக்கலாம்னு இருந்தோம். ஆமாங்க நாங்க சந்திச்சுகிட்டதே இல்லே. அப்புறமா சென்னைதானே வரப்போறாங்க அப்போ குடும்ப சகிதமா பார்த்துக்குவோம்னு ரெண்டு பேருமே பேசி முடிவெடுத்து விட்டுட்டோம். கல்யாண வேலையில் நானும் பிஸியா இருந்தேன். ஃபோனோ, மெயிலோ கூட இல்லாம் 3 மாசம் ஓடிப்போயிருச்சு.


ஜானகியோட அவுங்க சென்னை நம்பர் வாங்கலாம்னு அவுங்க வீட்டுக்கு கூப்பிட்ட போது எடுத்தது அவுங்க அண்ணன் "ஜானகி, அவளோட சென்னை நம்பரை உன்கிட்ட தரவேணாம்னு சொல்றாடா, உங்களுக்குள்ள என்னடா பிரச்சினைன்னு?"ன்னு அவுங்க அண்ணன் கேட்டபோதுதான் ஏதோ பிரச்சினைன்னு தோணிச்சு . அவுங்க அண்ணன்கிட்ட அதுக்கு மேல பேச ஒன்னுமில்லைன்னு முடிவு பண்ணிட்டு, எப்படியும் ஒரு நாள் கூப்பிடதான் போறா அன்னிக்கு கேட்டுக்கலாம்னு நினைச்சுகிட்டேன். ஆனா ஜானகி என்னைக் கூப்பிடவும் இல்லே, மெயிலும் போடலை. வயித்து பொழப்புக்காக வேற நாட்டுக்கு நானும் போயிட்டேன்.


கிட்டதட்ட ஜானகியோட நட்பு முடிஞ்சுருச்சு அப்படின்னு முடிவு பண்ணி, அவுங்களைப் பத்தி சுத்தமா மறக்குற நேரத்துல தான் ஜானகிக்கிட்ட இருந்து சின்னதா ஒரு மெயில் வந்துச்சு. "இளா, நான் இப்போ 3 மாசம் முழுகாம இருக்கேன், வீட்ல சொல்லிடு, நல்லா இருக்கேன்" அவ்ளோதான். எனக்கு ஒரு சந்தோசம் மெயில் பார்க்கற வசதி வந்துருச்சு போலன்னு நெனச்சுகிட்டு "நல்லா இரு, ஒடம்ப பத்திரமா பார்த்துக்கோ" ன்னு ஒரு ரிப்ளை போட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சு ஒரு பெரிய மெயில் வந்துச்சு. அதுல ஜானகியோட வீட்டுக்காரர் ரொம்ப "பொஸசிவ்", வேற ஆம்பிளைங்கிட்டே பேசினா ஒரு மாதிரியா பேசறாரு, அதுக்காகதான் உன் கூட chat/mail எல்லாம் பண்ணாம இருக்கேன்" னு காரணம் சொல்லி குறைப்பட்டாலும் அவுங்க வீட்டுக்காரரை விட்டுக்குடுக்காம எழுதி இருந்தாங்க. மெயில் படிச்சதும் முடிச்சதும், ஜானகி அவுங்க அம்மா வீடல இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு. உடனே அவுங்க அம்மா வீட்டுக்கு போனடிச்சேன் எடுத்தது ஜானகிதான். நான் "ஹலோ" ன்னு சொல்றதுக்கு முன்னாடி ஜானகி "டேய் இளா, நல்லா இருக்குயா?"ன்னு ஆரம்பிக்க எனக்கு வாயடைச்சு போயிருச்சு. எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. வழக்கம் போல பேசுறா மாதிரி நலம் விசாரிச்சுட்டு எனக்கு வேலை இருக்குனு சொல்லி disconnect பண்ணிட்டேன்.

அவுங்களுக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அப்பப்போ மெயில்லையோ போன்லையோ பேசிகிட்டு இருந்தோம். இதுல என்ன கொடுமைன்னா ஒரு நாள் போன்ல பேசிகிட்டு இருக்கும் போது பேச்சுக்கு நடுவுல "குழந்தை பொறந்ததுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் அவர் கிட்டே அறிமுகப்படுத்தி வெக்கிறேன். அப்புறமா நாம பேசிகிட்டா அவர் சந்தேகப்ப்ட மாட்டார் இல்லே, இளா" ன்னு ஜானகி கேட்கும்போதுதான் ஏதோ மண்டையில உறைச்சது. "நாம என்ன தப்பா பண்றோம்"னு கேட்கலாம்னு தோணிச்சு. ஆனா ஒன்னும் பேசாம இருந்துட்டேன்.

நம்மளால எதுக்கு அந்த பொண்ணுக்கு கஷ்டம்னு நான் அவுங்ககிட்டே பேசுறதை குறைச்சுட்டேன். கிட்டதட்ட அவுங்க போன் பண்ணினாலோ மெயில் வந்தாலோ சரியா பதில் சொல்லாம பட்டும் படாம பேச ஆரம்பிச்சேன். ஜானகி அமெரிக்கா போகும்போது ஒரு மெயில் போட்டுட்டுதான் போனாங்க, அதுக்கு கூட நான் பதில் அனுப்பல. இப்போ அமெரிக்காவுலதான் இருக்கேன்.


பின்னாடி ஒரு நாள், மனசு கேட்காம  நம்பர் கேட்டு ஒரு மெயில் போட்டேன், அதுக்கு ஒரு பதில் வந்துச்சு "இனிமே நாம பேசிக்க வேணாம், கூப்பிடவும் செய்யாதே" அப்படின்னு . அதுக்கு நான் பதில் எதுவும் போடவும் இல்லை.

 "கபி அல்வித னா கெஹனா" ங்கிறது கிஷோர்குமார் பாடின சல்தே சல்தேனக்ன்கிற பாட்டுல வர வரிதான். நேத்து ராத்திரி அந்த பாட்டும் கேட்கும் போதுதான் அதுக்கு அர்த்தம் புரிஞ்சது. இனிமே இந்தப்பாட்டை கேட்கவே கூடாதுன்னு நினைச்சுகிட்டு, பாட்டை நிப்பாடிட்டு தூங்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆனா தூங்கறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு .

Tuesday, July 31, 2007

* சக்தி டிரான்ஸ்போர்ட்-2

Click here to Read [Part-1]
"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து
"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.

ராஜியோ "இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.

அவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா
"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமா?அவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா? அறிவு இல்லே உனக்கு? அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க? போயி அவளை சமாதானப்படுத்து".

ஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.

அடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா "ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.

வெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.

அடுத்த வாரம் திங்கட் கிழமை

பவானி, 6:35Am, பேருந்து நிலையம்.
சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.


ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு

"டேய், என்னடா என் மேல கோவமா? ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.

இதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் "அப்போ ராஜி சொன்னது பொய்தானே?"

"ஆமாண்டா" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.

ரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.

"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி?"

"சொல்லுடா"

"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

அதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு

"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்"னு சொல்லிட்டு

"என்ன ரதி சொன்னே?"

"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே?"

"எவன் அப்படி சொன்னான்?"

"நீதான்"

"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.

ரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா

"இளா, இங்கே வரப்போறியா இல்லியா?"

--முற்றும்--

* சக்தி டிரான்ஸ்போர்ட்-1

பவானி, 6:38Am, பேருந்து நிலையம்.

சக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம்
(திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).

ஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.


ஆவலோட எட்டி பார்த்தா ரதி.



"என்ன இவனை இன்னும் காணோம்? எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்".

டென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.



சரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு


"உனக்கு என்னடி ராசாத்தி ? எம்புட்டு அழகா இருக்கே.." அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.

ரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.

"டேய் என்னடா சொல்றே? எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.

"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு "ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல "ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ? ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே".

ஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.


காலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் "மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா? எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும்.? நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு? அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா? ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா "

"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே?"

"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா ", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.

"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா? உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு "சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் " சொன்னான் ஜெய்.

ஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு "ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்?"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .

அடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் "டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா"

"என்னது போயிடாவா? நீ வரலையா?"

"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.

ஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.



"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண? அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல?. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா?"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .



தூரத்துல ராஜியும், ரதியும் வர, "மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா " ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.


பில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு "ஹாய் " சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.

(தொடரும்....) Part- 2 படிக்க

Monday, July 30, 2007

* குழப்பலாம் வாங்க

இது ஒரு சின்ன குழந்தைங்க விளையாட்டு. குயிஜூ வெச்சு இருக்காங்க, 3D வெச்சு இருக்காங்க. ஆனா இது மாதிரி ஏதாவது போட்டி வெச்சு இருக்காங்களான்னு தெரியல. கீழே இருக்கிற கட்டத்தை க்ளிக் பண்ணி படத்தை ஒழுங்கு பண்ணி யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?





* காதல்னா கெட்ட வார்த்தை

 "தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு
"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"


"அய்யோ அம்மா, இந்த மாதிரி கதை எல்லாம் எத்தனை நாள்தான் சொல்லுவே? கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சும்மா. வேற ஏதாவது சொல்லேன்மா"


"இல்ல கண்ணா, இது நவீன பாண்டவர்கள் கதைடா, கேக்குறியா?"

"ஓ, அப்படியா? வில்லு, அம்பு எல்லாம் வெச்சு இருக்க மாட்டாங்களா?"

"இல்லேடா, சொல்றேன் கேளு. புடிச்சதுன்னா சொலறேன்."

"ம்ம்ம்ம்"

"அந்த பாண்டவர்கள் அஞ்சு பேரும் கோயமுத்தூர் கங்கா, காவேரி காம்ப்ளக்ஸ்ல, செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வெளியே வராங்க. மேல சொல்லட்டுமா?"

"ம்ம் சரி, சொல்லுமா. என்ன படம்?"

"கோகுலத்தில் சீதைன்னு ஒரு படம். நிறைய படம் பார்த்து இருந்தாலும் இவுங்க அஞ்சு பேரையும் இந்த படம் பலமா பாதிச்சுருச்சு. நம்ம ஹீரோ, சரவணன், சுரேஷ், தினேஷ், ஜெகா அஞ்சு பேரும் காலேஜ் முடிச்சுட்டு அவுங்களுக்கு தகுந்த மாதிரி, வேலை கிடைக்காததால கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறாங்க. வீட்டுல இருக்கிற பெரியவங்களும் இவுங்களை நம்பி யாரையும் திட்டாம பணம் அனுப்பிட்டே இருக்காங்க, அதனால இவுங்களும் கவலை இல்லாம ஊரைச் சுத்திட்டு இருக்காங்க. என்ன சூர்யா கதை கேக்குறியா? மேல சொல்லட்டுமா?"

"கேக்குறேன்மா"

இனிமே கதை.

"தம் குட்றா, படம் என்னை ரொம்ப பேஜாராக்கிருச்சு" சரவணன்"இருடா சாப்பிட்டு அடிப்போம், செகண்ட் ஷோ வந்தா சோறு வேற கிடைக்காது. கடைய சாத்திட்டு போயிருவாங்க. ராஜா கடைய சாத்தியிருப்பானா"? சுரேஸ் கேட்டான்."ஒரு கட்டிங் குடுத்தா போதும்டா, கொத்து போட்டு குடுப்பான்.விடு, அதை நான் பார்த்துகிறேன், டேய் தினேஷா என்னடா மேட்டரு? இப்படி ஏண்டா இருக்கிற? ஏண்டா எல்லாரும் இப்படி இருக்கீங்க?, என்னை மாதிரியே உங்களுக்கு ஃபீலிங் ஆகிப்போச்சா? " இது நம்ம ஹீரோ."மாப்ளே, நாம அஞ்சு பேருமே நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு ஊர் சுத்திட்டு இருக்கோம்டா. லவ்டுடே பார்த்தோம் இல்லே. அந்த படத்தையும் இந்த படத்தையும் மிக்ஸ் பண்ணி பாருடா. புரியும். நாம ஏதோ தப்பு பண்றோம்னு தோணுது" சொன்னது ஜெகா.

"ஆமாண்டா, இனிமே சினிமா கிடையாது, லஷ்மி காம்ப்லெக்ஸ், சேரன் டவர்ஸ், கிராஸ் கட் ரோடு போயி சைட் அடிக்க கூடாது. அந்தமாதிரி வேஸ்ட் பண்ற நேரத்துல படிக்கனும். சீக்கிரமே முன்னேறனும்டா. நாம பாதி நேரம் ஊரையே சுத்திட்டு இருக்கோம்" இது தினேஷ்.
"இனிமே இந்த மாதிரி ஊர் சுத்துறது எல்லாம் வேணாம். கோர்ஸ் நான் டிஸ்கண்டினியூ பண்றேன். எனக்கு இது ஏறல. அவனவனுக்கு என்ன திறமை இருக்கோ அதை வெச்சு முன்னேறலாம். அஞ்சு வருஷம் தான், .. இதே கங்கா காம்ப்லெக்ஸ், இதே நேரம். இந்தா போறாங்களே, இதை விட பெரிய காருல வரனும். ..த்தா நாம் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டனும்" சுரேஸ் உச்சதாயில சொடக்கு
போட்டு சொல்ல,நம்ம ஹீரோ "கரெக்டுடா சுரேசு. ஜெகா, நீ கோடீஸ்வரன், இனிமே எங்க கூட தங்காதே. உங்கப்பா பார்க்குற தொழிலைப்பாரு. 190 ஏக்கர் காடு வேற இருக்கு, நீ இனிமே அதைப்பாரு. தினேஷா நீ எலக்ட்ரானிக்ஸ்ல பிஸ்து, அதுல வேலை தேடு. நானும் சரவணனும் ஆப்டெக் கோர்ஸ் முடிச்சுட்டு வேலை தேடப் போறோம். சுரேஸ், உங்கப்பா ஏற்கனவே அரசியல்ல பெரிய ஆளு அதை வெச்சு முன்னேற பாரு. நாம இனிமே நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம்"தம் பத்த வெச்சுகிட்டே சரவணன் "ஆமா, இனிமே நம்ம வாழ்க்கையில ஃபிகருங்களே கிடையாது. இந்த படத்துல சொல்றா மாதிரி லவ் இனிமே நமக்கு கெட்ட வார்த்தை. எந்தப் பொண்ணையும் இனிமே பார்க்கக்கூடாது. டோட்டல் வேஸ்ட்"

"வாழ்க்கையில பெரிய ஆளா வரனும்டா. பொண்ணுங்க, லவ் எல்லாம் மாயை. நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம். அதனால நம்ம வாழ்க்கையில இனிமே காதல் அப்படிங்கிறது கெட்ட வார்த்தை, இதை ஒத்துகிட்டவங்க சத்தியம் பண்ணுங்கடா"ன்னு கைய நீட்ட, உடம்புல புது ரத்தம் பாய்ஞ்சா மாதிரி எல்லாரும் ஹீரோ கையில சத்தியம் பண்ணினாங்க.


இப்படி சொல்லிட்டு, சூர்யா தூங்கிட்டானான்னு அம்மா பார்க்க, அவன் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருந்தான்.

"என்னம்மா அவ்ளோதானா கதை?"

"இல்லேடா, தூங்கிட்டியான்னு பார்த்தேன்.மீதிக்கதை சொல்றேன் கேளு. சரவணன் இப்போ சென்னையில இருக்காரு, பெரிய ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றாரு. மூனு பொட்டப்புள்ளைங்க. சுரேசும், ஜெகாவும் அவுங்க அவுங்க அப்பா செல்வாக்குல செட்டில் ஆகிட்டாங்க. தினேஸ் வெளிநாடு போய்ட்டு நல்லா சம்பாரிச்சுட்டு இந்தியா வந்தாச்சு. அடுத்த மாசம் அவுங்களுக்கு குட்டி பாப்பா பொறக்கப் போவுது"

"அப்போ நம்ம ஹீரோ என்ன ஆனாரு?"

"அதோ அங்கே உக்காந்து, நட்சத்திர வாரத்துக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்காரே, அவர்தான்"

"ஐய், நம்ம ஃபார்மர் அப்பாவா? சத்தியம் பண்ணினமாதிரியே பாண்டவர்கள் இருக்காங்களாம்மா?"

"இல்லேடா கண்ணா, அஞ்சு பேருமே பண்ணிகிட்டது லவ் மேரேஜ்"

"என்னது லவ் மேரேஜா? அப்போ அவுங்க பாஷையில சொன்னா, கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம்மா?"

"எகத்தாள ரத்தம்தானே உன் உடம்புலேயும் ஓடுது. இந்தக் கேள்விய உங்கப்பாக்கிட்டேயே போய் கேட்டுக்க"ன்னு சொல்லி, மடியில இருந்து இறக்கி விட

குதிச்சு அப்பாகிட்ட போயி "அப்பா நீ கெட்ட வார்த்தை கல்யாணம் பண்ணிகிட்டீங்களாமே? உண்மையாப்பா? அம்மா சொன்னாங்க என் உடம்புல ஓடுறது எகத்தாள ரத்தமாமே, உங்க ஒடம்புல என்னப்பா ஓடுது?"ன்னு கேட்க.

லேப்டாப்பை மூடி வெச்சுட்டு, சூர்வை தூக்கி முத்தம் குடுத்துட்டு சிரிச்சபடியே சொன்னேன் "சேம் பிளட்டுடா கண்ணா".

Tuesday, July 24, 2007

மடை திறந்து ....

படம்: நிழல்கள்
பாடியது: பாடும் நிலா பாலு
பாடல்: வாலி.

பாலு, மொட்டை, பாரதிராஜா மூனு பேருக்கும் தங்களோட லட்சியம் நிறைவேறுச்சுன்னு உளமாற உருவான பாடல் "மடை திறந்து பாடும் நதி அலை நான்". ஆனா ரீமிக்ஸ்ல கேட்டு பாருங்க. மனசுக்குள்ள அப்படி ஒரு உற்சாகம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப ரசிச்ச பாடல் இது.

சேவை செய்யுங்கள். பரிசை அள்ளுங்கள்!

Click here for Details..

கவிதைக்கு அர்த்தம் போட்டாச்சு.

இந்தக் கவிதை ஒரு பதினென் இளைஞனின் நிலைமையப் பத்தி எழுதினதுங்க. ஆனா மக்கள் கடாசீட்டாங்க போங்க.

//சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!//

மனுஷன் வாழ்ற வாழ்க்கை எல்லாம் நெளிந்து, வளைந்து; சமுதாயம் அப்படீங்கிற ஒரு நீள் கோட்டுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு வராங்க. ஆனா வாழ்க்கை முடியும் போது ஒரு முற்றுப்புள்ளியாத்தான் போகுது.

//இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!//
வாழ்க்கையில் விரக்தியடைஞ்சு மதுவுக்கு அடிமையாகும் போது ஏதோ அதிலிருந்து தப்பிச்சிட்டதாய் நினைச்சுக்கிறாங்க. மேலே உள்ள வரிகள், சரக்கும் & மிக்ஸிங்கும் சேர்ந்து உள்ளே போன வர மப்பும்தான்.


//நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்//

Survival! மயிர் கூச்செரியும், மனசுக்குள்ள நினைக்கிறது வேறொரு பிம்பமா நம் மூலமே வெளி வரும்.

//தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!


மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?//

காமத்துக்காக விரக்தியில் நடப்பவைதான் இது.காமத்தை மாயைன்னு சொல்லனும்னு நெனைச்சது.

Thursday, July 19, 2007

சுஜாதா செஞ்சது தப்பா?




"சிங்கம் சிங்கிலாதான் வரும், பன்னிங்கதான் கூட்டமா வரும்" விசில் பறக்குது, பேப்பரு மழை கொட்டுது.




இன்னும் சிலரோ, ரசிகர்கள்தான் கூட்டமா போறாங்க, அதனால ரசிகர்ங்க எல்லாருமே _____. விடுங்க, மேட்டருக்கு வருவோம். இதையே விகடன் மதன்கிட்டே ஒருத்தர் "சிங்கம் சிங்கிலாத்தான் போகுமா சார்?"ன்னு கேள்வி கேட்க மதன் சொன்ன பதில் கேட்டா நமக்குதான் அதிருது. "சிங்கங்க எப்பவுமே கூட்டமாதான் வேட்டையாட போகும், வரும். சிறுத்தைதான் தனியா போகும்"னு ஒரு போடு போட்டு இருக்காரு.



அப்போ சுஜாதா ஒரு ரைமிங்காகதான் இந்த பஞ்ச் டையலாக் வெச்சு இருக்காரு போலத் தெரியுது. அட, சுஜாதா சொன்னது சரின்னா மதன் சொன்னது தப்பா? யாரோ ஒருத்தர் நம்மளை மொக்கையாக்கியிருக்காங்க. அது யாரு? சுஜாதாவா? மதனா?

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)