Monday, August 27, 2007

Work from Home-1


Working From Home- இது ஏதோ மேனேஜர்களுக்கு மட்டும்தான்னு இருந்த காலம் போயி, இப்போ எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதென்ன Work From Home? அலுவலகத்துக்கு போகாம வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதுதான் இந்த முறைக்கு அர்த்தம். இது எந்த அளவுக்கு IT சாராத தொழிலுக்கு பொருந்துங்கிறதுதான் எனக்கு தெரியல. மக்களை சந்தித்தே ஆகனும்னு இருக்கிற தொழிலுக்கு இது பொருந்தாது(உதாரணம்- மருத்துவம்). அதிலும் சில இடத்துல செய்ய முடியும். ஆனா இதை என் அலுவலகத்துல ஒரு விளக்கமா குடுத்தப்போ நிறைய எதிர்ப்புகள் வந்தாலும், பிறகு எல்லா மட்டங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்துறதுதாங்க கொஞ்சம் கஷ்டம். இது அடுத்த தலைமுறைக்கான யோசனையா இருக்கலாம். இதனால கிடைக்கும் பலன்கள் அதிகம். உள் அரசியல் இருக்காது, வேலைக்கு போகும் நேரம் குறையும், தனிப்பட்ட வேலைக்கான நேரம் அதிகமாகும், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் கூடலாம். இதைப்பற்றி நிறைய அலசலாம் வாங்க.

Wiki வழக்கம் போல ஒரு விளக்கம் குடுத்து இருக்காங்க.

A Work-at-Home scheme is a Get-rich-quick scheme in which a victim is lured by an offer to be employed at home, very often doing some simple task in a minimal amount of time with a large amount of income that far exceeds the market rate for the type of work. The true purpose of such an offer is for the perpetrator to extort money from the victim.

Work-at-home schemes have been around for decades. Originally found as ads in newspapers or magazines, they have expanded to more high-tech media, such as television and radio ads, and on the Internet.

Legitimate work-at-home opportunities do exist, and millions of Americans do their jobs in the comfort of their own homes. But anyone seeking such an employment opportunity must be wary of accepting a home employment offer, as only about one in 42 such ads have been determined to be legitimate [1]. Most legitimate jobs at home require some form of post-high-school education, such as a college degree or certificate, or trade school, and some experience in the field in an office or other supervised setting.

(தொடரும்)

9 comments:

 1. இளா,

  விக்கி சொல்ற வொர்க் அட் ஹோம் வந்து கண்டிப்பா மோசடி தான். வொர்கிங் ஃப்ரம் ஹோம் - கணிணி வல்லுனர்கள்தான் அதிகமா செய்வாங்க. நிறைய அலுவலகங்கள்லே இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. ஏன்னா, ப்ரொடக்டிவிடி அதிகமா இருக்காதுன்னு!

  முக்கால்வாசி, வீட்லருந்து வேலை செய்யறவங்க அலுவலக வேலையை விட சொந்த வேலையதான் அதிகமா செய்றாங்க அப்டினு ஒரு பொதுப் பார்வை இருக்கு.

  ஆச்சரியமா, சில அலுவலகங்கள்லே, வீட்லருட்ந்து வேல செய்ய ஊக்குவிக்கிறாங்க. ஏன்னா, அலுவலக இடப் பற்றாக்குறை, மத்த செலவுகள்!

  ReplyDelete
 2. நான் மேலாண்மை வேலை தான் அதிகம் செய்றேன். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவையாவது வீட்டுல இருந்து வேலை செய்றேன். மற்ற நாட்களில் எல்லாம் மற்றவர்களைச் சந்திப்பதிலேயே நேரம் எல்லாம் சென்றுவிடுவதால் பாக்கிவிழும் வேலைகளைச் செய்ய இந்த நாளைப் பயன்படுத்துகிறேன். நிறைய வேலை நடக்கிறது என்பதாலும் பாக்கி விழுந்தவை செய்து முடிக்கப்படுவதைப் பார்ப்பதாலும் என்னை இப்படி வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கிறார்கள். எங்கள் அலுவலகத்தில் பலரும் இப்படி செய்கிறார்கள். கணிணி வேலை தான்.

  ஆனால் தமிழ்மணம் பார்ப்பதும் பதிவுகள் பார்ப்பதும் அந்த நாளில் அதிகம் செய்கிறேன் என்பதும் உண்மை. தமிழ்மணம் பார்க்காவிட்டால் இன்னும் நிறைய வேலை நடக்கும். :-)

  இன்று கூட வீட்டிலிருந்து தான் வேலை பார்க்கிறேன். உங்கள் இடுகையின் தலைப்பு இழுத்து வந்துவிட்டது. :-)

  ReplyDelete
 3. இளா ,

  நல்லப்பதிவு, கால்சென்டர் வகையான வேலைகளுக்கு இது நல்லப்பொருத்தமாக இருக்கும். ஆன் லைனில் தேடினால் சில வேலைகள் தறாங்க வீட்டில் இருந்து வேலை செயுங்கள் என்று, சென்னையில் ஒரு இலவச விளம்பர பத்திரிக்கை வருது அதுல இப்போலம் இது போல வேலை தருவதாக விளம்பரம் வருது, அவை எல்லாம் , பெரும்பாலும் , மின்னஞ்சல் படித்து அதற்கு பதில் அனுப்பும் வேலை தருகிறார்கள்.

  சில அலுவலக வேலைகளுக்கும் இது சாத்தியம் தான். கொஞ்ச நாள் முன்னர் இப்படி ஆன் லைன் மூலம் ஒரு அலுவலக வரவேற்ப்பாளர் வேலை கூட செய்ததாக பார்த்தேன்!

  வீட்டில் இருந்தபடியே வெப் கேமிரா மூலம் வருபவர்களை பார்த்து வரவேற்பரையில் ஒரு பெரிய டீ.வி ல ஒரு பெண் தோன்றி வரவேற்பாங்க!

  ReplyDelete
 4. அது சரி...

  ஆபிஸ் போனாலே வேலை நடக்க மாட்டேங்குது.. எதையாவது ஒரு பதிவ பாக்க போய் அப்படி இழுத்து போயிடுது.

  இதுல வீட்டுல இருந்து பாத்தா ரொம்ப சுத்தம்.. தம்பி நீ கிளம்பு என்று அனுப்பி வச்சுடுவாங்க...

  அது போகட்டும் நீங்க எல்லாம் வீட்ல இருக்க ஆரம்பிச்சா... சீரியலே கதி என்று இருக்கும் உங்க துணைவியார்களுக்கு தொல்லையாக தானே இருக்கு. அதுக்கு என்ன வழி...

  ReplyDelete
 5. தஞ்சாவூராரே, விக்கில இருக்கிற இந்த பகுதி சொல்ற விஷயம் வேற, அதுல இன்னும் update பண்லைங்கிறது வேற விஷயம்.

  //சில அலுவலகங்கள்லே, வீட்லருட்ந்து வேல செய்ய ஊக்குவிக்கிறாங்க..//
  அதுதான் பதிவின் சாராம்சமே

  ReplyDelete
 6. வீட்டுல உக்காந்து வேலை பாக்குறது எப்பவும் வேலைக்காகாது. வாரத்துக்கு ரெண்டு நாளாவது அலுவலகம் போகனும். ஆனா ஒன்னு..ஆபீஸ்லன்னா நேரத்துக்குக் கெளம்பீருவோம். வீட்டுலன்னா...அது நடக்காது. ரொம்ப வேலையாயிரும்.

  ReplyDelete
 7. For Non-IT also working from Home is possible. For example Doctors. In countries like Denmark you are assigned with a Doctor. You have to call him and inform your health problem. If it is minor you need not visit him, he will advise over phone. In case you have to appear before him depending on the requirement he would provide an appoinment. In case of emergency medical service will come to your home. In this type of environment you can work at home. That is provide telephone consultancy. Also remember that every call is recorded, so if needed the communication between doctor and patient cab be reviewed by another doctor. Source:http://www.bmj.com/cgi/content/full/309/6969/1624

  You know in a recent visit by Danish PM to India, it has been decided that 2000 Indian doctors would be working for Denmark in 2008. This is because a pilot project with 200 doctros from India has been very successful. Source: http://borsen.dk/nyhed/107367/
  http://www.denmark.dk/en/servicemenu/News/InternationalNews/PMOpensFastTrackForIndianWorkers.htm  So, not only IT but also in other domains also it is possible.

  ReplyDelete
 8. Glad to materialize here. Good day or night everybody!

  Let me introduce myself,
  my name is Peter.
  Generally I’m a venturesome gambler. for a long time I’m keen on online-casino and poker.
  Not long time ago I started my own blog, where I describe my virtual adventures.
  Probably, it will be interesting for you to utilize special software facilitating winnings .
  Please visit my web page . http://allbestcasino.com I’ll be glad would you find time to leave your opinion.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)