Tuesday, October 2, 2007

தமிழ்மணத்துக்குமா போலி?

நண்பர்: மச்சான், இன்னுமாடா கவிதை எல்லாம் எழுதிட்டு இருக்கே? அதெல்லாம் விட்டு இருப்பேன்னு நினைச்சேன்.

நான்: ஏண்டா? எனக்கு அரைகுறையா வரதே அது ஒன்னுதான். அதையும் நிறுத்திட்டா?
(ஆமா, கவிதை எழுதித்தான் சாய்ஞ்சுட்டு இருக்கிற இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்தப்போறேன். நான் ஒளர்றதை கவிதைன்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கும் போல)

நண்பர்: இளா! நானும் ஏதாவது எழுதனும்னு நினைக்கிறேன். எப்படிடா?

நான்: அதான் Blogன்னு ஒன்னு இருக்கே. எனது எல்லாம் படிச்சியா? இருடா லின்க் தரேன்
(நீயுமாடா? நல்லாதாண்டா இருக்கே. அப்புறம் ஏண்டா சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிறீங்க?)

நண்பர்: வேணாம்டா. அப்புறம் அதுக்கு அர்த்தம் சொல்றேன்னு என்னை அறுக்க ஆரம்பிச்சுருவே. வேணாம். சரி நான் பிலாக் எழுதறேன். அப்புறம் அதை எப்படி மத்தவங்க படிப்பாங்க? (அப்பாடா! எங்கே கவிதை சொல்லி காலங்காத்தால மூட் அவுட் பண்ணிருவானோன்னு பயம்தான்)

நான்: நண்பா! இதுக்காகவே பாடுபட்டு சில நல்ல மனுஷங்க ஒரு இடத்தை நமக்காகவே வெச்சு இருக்காங்க.
(நாங்கயெல்லாம் இங்கேதான் 'குடி' இருக்கோம். வாடகை வாங்கினா செம வசூல் ஆவும்)

நண்பர்: அப்படியா? அப்போ தமிழுக்காக எழுதற மக்கள் எல்லாம் இங்கே எழுதறாங்களா?

நான்: இல்லே. நீ எங்கே வேணுமின்னாலும் எழுது. ஆனா இங்கே ஒரு தொடுப்பு குடுத்துட்டா போதும்.
(என்னாது தமிழுக்காக மக்கள் எழுதறாங்களா? அதுதான் ஊர்ல மழை இன்னும் பின்னி பெடலெடுக்குதா?)

நண்பர்: அப்படியா? சரி. நல்ல விஷயம்தான். அப்போ பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் ப்லாகல எழுதறாங்கன்னு சொல்லு.
(நானும் அங்கே எழுதி பெரிய ஆள்ன்னு காட்டிக்கலாம்தானே)

நான்: இல்லேடா எழுதனும்னு நினைக்கிற மக்கள் இங்கே எழுதறாங்க. பெரிசு சிறுசு எல்லாம் இங்கே இல்லே. எல்லாரும் ஒன்னுதான். (யார் வேணுமின்னாலும் வயசு, தகுதி இல்லாம திட்டலாம். இல்லைன்னா தைரியமா அனானியா வந்து திட்டலாம்)

நண்பர்: ஆஹா,. கருத்து சுதந்திரம் ஜாஸ்தியா?


நான்: ஆமா. அதுவே உண்மைதான்.
(அந்தக் கருமத்தை நினைச்சாத்தான் எரிச்சலா இருக்கு.)

நண்பர்: சரி அந்த இடங்களை சொல்லுங்க. யார் யார் எழுதறாங்கன்னு பார்க்கிறேன்.

நான்: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி.
(பாரிஸ் கார்னர், சுண்ணாம்பு கால்வா. அங்கேதான் தமிலு துல்லி வெலையாடுது. இல்லாட்டி டிவி பாரு அங்கே பேஷுவாங்க)

நண்பர்: தமிழ்மணம், திறந்தாச்சு. ஆனா நீ சொல்ற மாதிரி ஒன்னுமே இல்லியே.

நான்: பாரு நண்பா. இருக்கும், ஏதாவது தொடுப்பு தட்டி பாரு.

நண்பர்: என்னாது பிலாகா? நீ சொல்ற மாதிரி ஒரு இடமே இல்லியே.

நான்: மச்சான். லின்க் குடு
(அடங்கொய்யால, அதையும் தாக்கிப்புட்டாங்களா?)

நண்பர்: http://tamilmanam.com/

நான்: (மனதுள்:இது என்னாது புதுக்கதை? ஒரு வேளை போலியா இருக்குமோ? 'அவரே' வெளி உலகத்துக்கு நல்லவரா வந்துட்டாரே)

அந்த வலைப்பக்கத்தை திறந்து பார்த்தபின்,

சே சே அப்படியெல்லாம் இல்லே. இதைத்தான் ஒரே மாதிரி சிந்திக்கிறதுன்னு சொல்றாங்களா?

இந்தப் பதிவு தமிழ் மணம் பரப்பிய அண்ணன் காசிக்குச் சமர்ப்பனம்.

16 comments:

  1. ஹலோ,

    அது தமி'ல்' மணம். இங்கே தமி'ழ்'மணம்
    :)

    ReplyDelete
  2. கோவி, அதுலேயும் ஒரு சின்ன திருத்தம். அது தமி'ல்'மணம் இல்லீங்க. டேமில் மணம்(நடிகைங்க பேசுறா மாதிரி நினைச்சுக்குங்க)

    ReplyDelete
  3. அது 2004 க்குப் பிறகு மேம்படுத்தப் படாத வலைத்தளம். அதற்கும் ஒரு தொகுப்பா?

    ReplyDelete
  4. நீதான் 'ஊ ஊ'ன்னு அழுதிட்டே பதிவுலகத்தை விட்டு போவலையே, பொண்ணுங்க சொன்னாத்தான் பதிவெழுத வருவியான்னு கேட்ட 'அந்த' பெண்களூர் வாசிக்காக வந்தீஈஈஈங்களா?

    ReplyDelete
  5. அனானி மக்களே, சும்மா பொத்துனாப்ல இருக்குறீங்ளா? நானே மாசத்துக்கு ஒரு பதிவு போடுறேன். அதுல மொளகு போட்டு போட்டு பொங்கல் வெச்சுறாதீங்க.

    ReplyDelete
  6. //அதுல மொளகு போட்டு போட்டு பொங்கல் வெச்சுறாதீங்க//

    ஏப்பா மொளகு போட்டு வெண்பொங்கல் வைக்க வேண்டாமுன்னா மண்டவெல்லம் போட்டு சக்கரை பொங்க வச்சுடலாமா?.

    ReplyDelete
  7. //
    பாரிஸ் கார்னர், சுண்ணாம்பு கால்வா. அங்கேதான் தமிலு துல்லி வெலையாடுது. இல்லாட்டி டிவி பாரு அங்கே பேஷுவாங்க
    //

    :-))

    ReplyDelete
  8. :-)

    இளா, இது பலநாளா இப்படியேதான் இருக்குது.

    ReplyDelete
  9. ஏற்கெனவே தமிழ்மணம் தொடுப்பை தவறாக தட்டச்சிட்டு அந்த தளத்திற்கு சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
  10. கேன் ஐ கம் ஹியர் ஃபார் கும்மி!!

    ReplyDelete
  11. //இலவசக்கொத்தனார் said...
    ஓல்ட் நியூஸ் மாமே
    //

    ஓல்ட் நீயூஸ் மட்டுமில்ல!
    ஓல்ட் தளமும் கூட!
    ஓல்ட் இஸ் நாட் கோல்ட் மச்சீஸ்! :-))

    சரி
    அந்தத் தூங்கும் தளத்தை இப்ப என்னாத்துக்கு தட்டி எழுப்பறீங்க விவ்ஸ்? (அட, விவசாயின்னு சொன்னேன்ப்பா...)

    ReplyDelete
  12. //அந்தத் தூங்கும் தளத்தை இப்ப என்னாத்துக்கு தட்டி எழுப்பறீங்க விவ்ஸ்?//
    நீதான் 'ஊ ஊ'ன்னு அழுதிட்டே பதிவுலகத்தை விட்டு போவலையே, பொண்ணுங்க சொன்னாத்தான் பதிவெழுத வருவியான்னு கேட்ட 'அந்த' பெண்களூர் வாசிக்காக வந்தீஈஈஈங்களா?

    எல்லாம் இதுக்காகதான். ஒரு ரீ எண்ட்ரி குடுத்த ச்ச்சும்மா அதிருனுமாம்லே. அதான் இப்படி

    ReplyDelete
  13. //ஓல்ட் நியூஸ் மாமே//
    வேர் இஸ் த ஓல்ட் நியூஸ் மாமே? என் லின்க் ப்ளீஸ்..

    ReplyDelete
  14. //கேன் ஐ கம் ஹியர் ஃபார் கும்மி!!//
    வெல்கம். ஆனா ஓவர் கும்மி விவசாயிக்கு ஆவாதாம். டாக்டர் சொல்லி இருக்காரு

    ReplyDelete
  15. நீங்கள் மதிக்கு காசியே ஏன் இந்த தளத்தை உறுவாக்கி வைத்து இருக்கக்கூடாது? எப்படியும் tamil என்று தட்டும் நபர்களுக்கு இந்த வலைத்தளம் வரலாம் இல்லியா? யாஹூ.org, யாஹூ.net போல?

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)