Monday, December 17, 2007

வெலை போவுது எங்கூரு

எங்க ஊர் பேரு கொழிஞ்சிக்காட்டூருங்க. அந்த ஊர்ல ஒரு 500 ஏக்கராவுக்கு மேட்டாங்காடும், கொஞ்சம் வயலும் இருக்கு. வானம் பார்த்த ஊரு எங்களுது. ஒரு 500 குடும்பங்க இருக்காங்க. இது பாதி, இந்த தலைமுறை யாருமே உள்ளூருல இல்லை(என்னையும் இதுல சேர்த்துக்கிடுங்களேன்). எல்லாரும் படிச்சு வேலைக்கு போயிட்டாங்க. கூலி வேலை செஞ்சவங்களும் ஏதோ ஒரு தொழிலோ, இல்லே குத்தகைக்கோ, இல்லீன்னா மில்லுக்கோ வேலைக்கு போயிட்டு இருக்காங்க. எங்க தாத்தா 20 வருஷத்துக்கு முன்னாடி மாஞ்செடி வாங்கி எங்க தோட்டத்துல நட்டு வெச்சாரு. அவருக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு, எங்கயைனோ நானோ வெவாசாயம் பார்க்க போறதில்லைன்னு.

ஞாயித்துக்கிழமை நானோ, எங்கையனோ கோழி திங்கவாவது ஊருக்கு போயிட்டு இருந்தோம். அதனால எங்களுக்கு தேவையான நெல்லு வெளைய வெச்சுக்குவோம். எந்த தாத்தா ஆணடவன் கிட்டே போனப்புறம் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு நெல்லு வாங்கிகிட்டோம். அதாவது எப்படியோ வெவசாயம் நடந்துச்சு.

ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு 4 சுமோவுல ஆளுங்க வந்தாங்களாம். எல்லாரும் கரை வேட்டி வேற கட்டி இருந்தாங்களாம். நேரா ஊர்கவுண்டர் வூட்டுக்கு போன காரு கொஞ்சம் நேரம் கழிச்சு போயிருச்சு. அப்புறம்தான் எங்க ஊர்ல ஒரு திருப்பமே உண்டாகியிருக்கு. எங்கய்யனும் வாரம் ஒரு முறைதான் ஊருக்கு போறதால விஷயம் எங்க காதுக்கு ரொம்ப தாமசமாத்தான் எட்டியிருக்கு. அதாவது எங்க ஊரை யாரோ(?!) வெலை பேசிட்டு இருக்காங்களாம். அப்படி ஓ.பி அடிச்சு பன்னீரா குடிச்சு செல்வத்த சேர்த்தவருக்கு எங்க ஊர்மேல என்ன மோகமோ தெரியல? கருப்ப வெள்ளயாக்கிறதுன்னு பேசிக்கிறாங்க. பக்கத்து ஊருல இருந்த 600 ஏக்கராவையும் அவுங்க(?) வாங்கிட்டாங்களாம். எங்க ஊரையும் வாங்கிடலாம்னு வெலை பேச ஆரம்பிச்சுட்டாங்க.

தடமில்லாத 3 ஏக்கரை நாங்களும் விக்க வேண்டியதா போயிருச்சு. பங்காளிங்களுக்குள்ள தடம் எல்லாம் தேவை இல்லாம இருந்துச்சு. அந்த 3 ஏக்கராவ போவ மீதிய விக்க முடியாது கண்டீசனா சொல்லீட்டாரு எங்கய்யன். இன்னும் கொஞ்ச நாள்ல எங்க வீட்ட சுத்தி இருக்கிற பங்காளிங்க எல்லாம் சங்ககிரிக்கு போயிருவாங்க. அவுங்க எல்லாருக்கு ஒன்னு ரெண்டு லாரி இருக்கு. வாடகை வீடு பார்த்துகிறதா சொல்லிட்டாங்க. எங்க தாத்தா ஆசை ஆசையா எங்க ஊரு முழுக்க வண்டிகட்டியே மாஞ்செடி வாங்கி வந்து குடுத்தாரு. வாங்கியார போயி வர ஒரு வாரம் ஆவும். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த மாஞ்செடிங்க எல்லாம் என்ன ஆவுமோ தெரியல. ஊர காப்பாத்துற முனியப்பனும், கருப்பனும் எல்லையில சும்மா உக்காத்து இருக்க காசுக்கு ஆசைப்பட்டு சனம் எல்லாம் ஊரை வீட்டு அடுத்த மாசம் போவப்போவுது. என்னத்த சொல்ல?

11 comments:

 1. முருகா... என்ன சொல்றதுன்னு தெரியலை.

  ஒங்கூர்ல தண்ணியிருக்கு பன்னீரும் வருது.

  எங்கூர்ல? வறண்டு போச்சேய்யா....கம்மாய்ல வெள்ளம் வருதேன்னு ஊரு பயந்துச்சாம் எங்கப்பா சின்னப்புள்ளைல. இப்ப கம்மாய்ல ஊரு சனம் வெளிக்குப் போனாக்கூடக் கழுவத் தண்ணியில்ல. அதுனால வாங்கவும் ஆளில்லை.

  அப்புறம் வெவசாயத்த என்ன பாக்க. வெளக்கமாத்துக்கே வழியக் காணம்...வெள்ளாமைக்கு நெல்லு பிடிக்கவா முடியும்?

  சின்னப்புள்ளைல ஊருக்குப் போனா அவ்வளோ சந்தோசமா இருக்கும். தோட்டத்துல வாய்க்கால்ல ஓடுற தண்ணிக்கே கல்வாழையும் அந்திமந்தாரையும் டிசம்பர் பூவும்...அதாய்யா என்னவோ நீலோத்பலமாமே...அதெல்லாம் இருக்கும். கோவைக்கொடிய பழம் பறிச்சித் திம்பாங்க உள்ளூர்ப் பட்டிக்காட்டுப் பிள்ளைக. நாங்க தூத்துக்குடிப் பட்டணக்கரையாச்சே. அதெல்லாம் திம்பமா...கருகருன்னு மஞ்சனத்திப் பழம்னா நமக்கு வீச்சம். அவுகளுக்கு அதுல அப்படியொரு ஆசை.

  அந்த மஞ்சனத்தி மரம் இன்னுமிருக்கு. விழுறதுக்குப் பழமுமில்லை. விழுந்தாப் பொறுக்கப் பிள்ளைகளும் இல்லை.

  இதையெல்லாம் படிக்கைல மனசுக்குச் சங்கட்டமா இருக்கு. என்ன செய்ய...விதி வலியது. முந்தி ஒரு பதிவுல சொன்னேன். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வார். எதோ ஒரு நாடு உழப்போகுது. நம்ம பின்னாடியே தொழுதுகிட்டுப் போய் வாங்கித் திங்கப் போறோம். ம்ம்ம்ம்..வயித்தெரிச்சல்.

  ReplyDelete
 2. என்னத்த சொல்லங்க ஜி.ரா. படிச்சவன் வெவசாயம் பண்ணனும் நெனைப்பான் பண்ண மாட்டான். வெவசாயம் பண்றவன் வேற தொழில் பண்ணனும் நெனைக்கிறான். இதுதான் வெவசாயம் நாசமா போவ காரணம்.(நானும் அதுல ஒரு காரணகர்த்தா தானே. இந்தியால இருக்கிற வரைக்கு நானும் வெவசாயம் பார்த்தேன். இப்போ முடியல. எப்படி பார்த்தாலும் நானும் வெவசாய பண்றதை விட்டுட்டுதான் வந்து இருக்கேன் :(

  ReplyDelete
 3. வீடு வாங்கறது நெலம் வாங்கறது எல்லாம் போயி இப்ப ஊரு ஊரா வாங்கறாங்களா?

  ஆன்னு வாயைப் பொளக்கறதை தவிர வேற என்ன செய்ய.

  ஆத்தா எல்லாரையும் நல்லா வெச்சுக்கோம்மா....

  ReplyDelete
 4. இப்படி ஊர்களை வாங்கி என்ன செய்வாக?

  பெரிய பண்ணையா வச்சு விவசாயம் செய்யப்போறாகளா?

  ReplyDelete
 5. என்னத்தச் சொல்ல? இப்பிடியே, ஒவ்வொரு ஊரா வெல போகும். மில்லு கட்டுவாக..பேக்டரி கட்டுவாக..உழுது திண்ண சனம், தொழுது திங்கும். உம்மையான சொவ தெரியாம, நம்ம பய புள்ளைங்களுக்கு, 'பேக்' பண்ணுன சோறு வாங்கி குடுப்போம். அதுக்கு காசு தேடி நாயா, பேயா அலைவோம். கண்ண வித்து சித்துரம் வாங்குறது நமக்கு புதுசா என்ன?

  ReplyDelete
 6. அடப்பாவி மக்கா…

  ஊரையே வெலைக்கு வாங்கிடுவாருனு பெருமைக்கு தான் சொல்லுவாங்கனு நெனச்சா, நெசமாலுமேவா???

  ReplyDelete
 7. இளா,

  பார்த்து, அந்த பக்கம் "it park," சிறப்பு பொருளாதார மண்டலம் வரப்போகுதாம் அதை முன்னிட்டு தான் பெரிய புள்ளிங்க எல்லாம் இடம் வாங்கி போடுறாங்கலாம்.இனிமேல் ஒரு ஏக்கர் பல கோடிகள் தான் கோவையில்.

  உங்க ஊர்க்கார "பொங்கல் கிண்டும் ஊராரும்" அப்படித்தான் 1000 ஏக்கர் அளவுக்கு சல்லீசாக மடக்கிட்டாராம், அதான் அவர் பதவிக்கு ஆப்பு வைத்தார்களாம்.

  ReplyDelete
 8. வேற என்ன இஞ்சினீயரிங் காலேசு வரும் :-(

  ReplyDelete
 9. வவ்வாலு, எங்க ஊரைச் சுத்தி 8 இஞ்சினியரிங் காலேஜ், 6 ITI, 19 Pharmacy, 1 Medical, 20+ arts college இருக்குங்க. இதுக்கு மேலையுமா? அதுவுமில்லாம எங்க தோட்டம் எல்லா ரோட்டுல இருந்து 4 கிமீ தள்ளி உள்ளே இருக்கு. ரோடு வசதியே போன வருஷம் தான் வந்துச்சு. எல்லாம் கருப்பனை வெள்ளையப்பனா மாத்தற வேலையாம். 30 ஆயிரத்துக்கு கூட தேறாத எங்க காட்ட 3.30 ல வாங்குறாங்கன்னா... ஏதாவது புதையல் இருக்குன்னு சொல்லி இருந்து இவுங்க கேட்டு தேடத்தான் வாங்குறாங்களோ?

  ReplyDelete
 10. ஆமாம் இளா,

  மென்பொருள் பூங்கா, மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வர இருக்கிறது, எனவே தான் தற்போது , நிலம் தராதவர்களைக்கூட மிரட்டி வாங்குகிறார்கள் , என ஜீவி , ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது.உமா சங்கர் .இ.ஆ.ப, தலைமையில் ஒரு முதல் கட்ட அறிக்கை தயார் ஆகி இருக்காம். இன்னும் முறைப்படியான அறிவிப்பு வரலை, வந்துட்டா விலை ஏறிடும்ல அதான் இப்பவே இடத்தை வளைக்கிறாங்க.

  ஆயிரக்கணக்கான ஹெக்டேர்ல வரப்போகுது, உங்க ஊருக்கு ரோட் இல்லைனா , என்ன இனிமே போட்ருவாங்க.

  ReplyDelete
 11. ஆமாம் இளா ... இது எல்லா ஊரிலும் நடக்கிறது. என்ன உங்க ஊருக்கு பணம் பன்னீரா வருது ...எங்க ஊருக்கு திருப்பூர் சாயத் தண்ணியா வருது.

  வருசம் நாலாயிரம் கொடுத்து நாங்க ஆடு மேச்சுட்டு இருந்த பத்து ஏக்கரா காடு இப்ப 15 லட்சத்துக்கு வித்துடுச்சு. உடனே நமக்கு ஆடு மேய்க்க காடு வேனும் .. புடிக்கலாம்னாரு எங்க அப்பா. ஏக்கரா ஒன்னரை , ரெண்டு லட்சம் போட்டு வாங்கி நம்மகிட்ட இருக்குற 30 ஆடு மேய்ச்சு எப்ப சம்பதிச்சு கடன கட்டறது .. வேனாம்னேன். அதுக்கு முன்னால இன்னொரு காடும் வெலை போய்டுச்சு. சரி என்ன தான் வெலை மேல போனாலும் வாங்கினவங்க வந்து கடை விரிக்கற வரைக்கும் ஆடு மேய்ச்சுக்க வேண்டியது தான். :(

  இன்னொரு தோட்டம் . 20 ஏக்கர் தென்னம்பிள்ளை. எல்லம் அழிச்சு ஒரு பேப்பர் மில் ஆரம்பிச்சுட்டாங்க.

  நகரத்துல இருக்கிற நில விலையேற்றத்திற்கு மென்பொருள் காரணம்னு ஊரே சொல்லுது.

  இந்த காடு விலையேற்றத்திற்கு கருப்பு வெள்ளை தான் காரணம்னு யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க. மாற்றத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிற வேறு வழியே இல்லை.

  நாம் டாலரில் சம்பதித்தாலும் , ஊருல இருக்கிற தோட்டத்தயும் வித்துட்டு சம்பதிச்ச காசையும் சேத்து ந(ர)கரத்துல கோவன அளவு ஒரு அபார்ட்மென்ட் வாங்க வேண்டியதுதான்.

  நல்ல கெணத்து தண்ணிய தாரை வாத்துட்டு , நகர ஜெயில் வாழ்க்கையில , பாக்கட் தண்ணியையும் , புகைக் காற்றையும் குடிச்சு வீனா போக வேண்டியது தான்.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)