Thursday, December 16, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

கமல் ஒரு dating Doctor for Male. ஆண்களின் காதலை கை கூட வெப்பவர்.
இதற்காக அவர் அந்த்ப் பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ள பல கஷ்டப்படனும், அந்தப் பெண்ணுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எப்படி காதலைச் சொன்னால் ஏத்துக்குவாள் அப்படின்னு விரல் நுனியில் தந்திரத்தை வெச்சிருப்பாரு. அதே சமயம், dating Doctorக்கும் “மாமா”வுக்கும் நூலிழைதான் வித்தியாசம். இப்படித்தான் ரமேஷ் கண்ணா தனக்குப் புடிச்ச ஒரு பெண்ணை “ஆசை”க்கு இணங்க வெக்க கமல்கிட்ட வந்து கேட்க, கமல் ரமேஷ் கண்ணாவோட கைய உடைச்சு அனுப்புவாரு. இதான் கமலின் பாத்திரம். கொஞ்சம் கஷ்டமா இருக்குல்ல, அதனாலதான் கமல் இந்தப் பாத்திரத்தை ஏத்திகிட்டு இருக்காரு.

மாதவன்(கோபால்), ஒரு பக்கா அம்மாஞ்சி. நள தமயந்தில ஏத்துகிட்ட அதே பாத்திரம், ஆனா இதுல நல்லா படிச்ச ஒரு குமாஸ்தா. திரிசா (அம்புஜம்) ஒரு பெரிய நடிகை/பணக்காரி, அவர் சம்பாதிச்ச கோடிக்கணக்கான சொத்துக்கு பாதுகாப்பா இருக்கிறவங்கள்ல மாதவனும் ஒருத்தர். திரிசாவைப் பத்தி தினமும் ஏதாவது ஒரு நாளிதழ் சேதி போட்டுகிட்டே இருக்கும். காரணம், திரிசாவோட கிசு கிசு படிக்கிறதுக்காகவே மக்கள் நாளிதழை வாங்குவாங்கனா பார்த்துக்குங்களேன். சங்கீதா ஒரு பத்திரிக்கை நிருபர், எப்பவாவது ஒரு நல்ல கிசுகிசு கிடைச்சா பதிவி உயர்வு வாங்கிடலாம்னு துடிப்பா துடிக்கிற நிருபர். இவ்வளவுதாங்க அறிமுகமப் படலம்.

மாதவனுக்கு திரிசா மேல காதல், உயிருக்குயிராகக் காதலிக்கிறாரு. இந்தக் காதலை எப்படியாவது திரிசாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கனும்னு துடிக்கிறாரு. அந்த நேரத்துலதான் கமலைப் பத்தி கேள்விபட்டு, அவர்கிட்ட உதவி கேட்க வர்றாரு. உதவின்னா உதவியேவா. காசு குடுத்துதானே ஐடியா கிடைக்கும், கமல்தான் ஐடியா மணியாச்சே. கமலும் மாதவனுக்கு சரின்னு சொல்ல, கமலோட பின் தொடருதல் ஆரம்பிக்குது. கொஞ்சம் கொஞ்சமா திரிசாவோட குணநலன்களை படிக்கிறாரு. அந்த நேரத்துலதான் திரிசாவுக்கு புதுப்படம் ஒன்னு ஒப்பந்தமாகுது, அதுவும் கப்பல்லேயே படப்பிடிப்பு முழுசும் இருக்கிறா மாதிரி. மாதவனும், இதுதான் சமயம், திரிசாகிட்ட காதலைச் சொல்லிரலாம்னு கமலையும் கூடவே கூட்டிகிட்டு கப்பலுக்கு வர, திரிசா கிசுகிசு கிடைக்குமான்னு சங்கீதாவும் கப்பலுக்கு வர்ற ஆரம்பிக்குது படம். இனிமே படம் முழுசும், தண்ணிலதான். அட கடலுக்கு மேலதாங்க.
Advertisement:



திரட்டி
தை-1 முதல்





முதல் நாள்லயே திரிசாவுக்கு மாதவன் மேலை ஆசை வர்ற மாதிரி சம்பவங்கள் நடக்க, திரிசாவும் மாதவனும் படப்பிடிப்பை இல்லாத நேரங்கள்ல கப்பலுக்குள்ளேயே ஒன்னா சுத்த ஆரம்பிக்கிறாங்க. டைட்டானிக் பட பாணியில எச்சி துப்புற போட்டியெல்லாம் ரெண்டு பேருக்கும் நடக்கிறது செம கலாட்டா. அந்த எச்சை எல்லாம் கமல் மூஞ்சியிலும், சங்கீதா மூஞ்சியிலும் விழ, ரெண்டு பேரு ஒரே நேரத்துல பாத்ரூம் தேடி ஓடும்போது சங்கீதாவும், கமலும் ஆண்கள் toiletக்குள்ள போயிர அங்கேயும் செம கலாட்டா. இங்கே கமலுக்கும் சங்கீதாவுக்கு காதல் பத்திக்க ஆரம்பிக்குது.

அடுத்த நாள் எல்லாரும் email பார்க்க, எல்லாருக்கும் செம அதிர்ச்சி. காரணம் திரிசாவும், மாதவனும் ஒன்னா இருக்கிற மாதிரி படங்கள் போட்டு தமிழ்நாட்டுல சூடான செய்தி வந்திருக்கு. யாரு, இதைச் செஞ்சிருப்பாங்கன்னு எல்லாரும் எல்லாரையுமே சந்தேகப் பட வேண்டியாதாயிருது. படப்புடிப்பும் ரெண்டு நாள் நடக்காமயே போவுது. இப்பத்தான் ரமேஷ் அர்விந்த், சீமான், உசா உதூப் எல்லாம் சேர்ந்து ஒரு விருந்து வெக்கிறாங்க. அதுல கமல் சரக்குல தான் ஒரு dating Doctorனு சங்கீதாகிட்ட உளறி வெக்க, அதுவும் அடுத்த நாள் சூடான செய்தியா படத்தோட வந்துருது. இதனால, கமலும், சங்கீதாவை வெறுக்க ஆரம்பிக்க, சங்கீதா கமல்கிட்ட மன்னிப்பு கேட்க, கமலும் மன்னிச்சு சங்கீதாவோட காதலை ஏற்க, கமல் எப்படி மாதவன், திரிசாவை எப்படி காதலிக்க வெக்கிறாங்கன்னு சொல்றதுதான் இறுதிக்காட்சி.

படத்துல இயக்குனராவே கேஎஸ் ரவிகுமார், நடிகராகவே சூர்யா, பாடகியாகவே உசா உதூப், வில்லனாவே சீமான்.. அதனால குழப்பமே இல்லை.

மக்களே: மன்மதன் அம்பு Hitch படத்தின் தழுவல்னு சொன்னாங்க. நேத்துதான் அந்த DVDபார்த்தேன், அதை அப்படியே மன்மதன் அம்பா விட்டுட்டேன். எல்லாமே கற்பனை, புனைவுதான்.

27 comments:

  1. நான் விமர்சனம் படிக்கல ! :)

    //மக்களே: மன்மதன் அம்பு Hitch படத்தின் தழுவல்னு சொன்னாங்க. நேத்துதான் அந்த DVDபார்த்தேன், அதை அப்படியே மன்மதன் அம்பா விட்டுட்டேன். எல்லாமே கற்பனை, புனைவுதான். //

    ஏன் நீங்க அம்புட்டு கஷ்டப்பட்டு முன்னாடியே பார்த்தீங்க அதைத்தானே ம.ம.அ படமா எடுத்தவங்களும் முன்னாடியே பார்த்து நமக்காக எடுத்திருக்காங்க அப்ப பார்த்துக்கலாம்தானே! இப்படியே செஞ்சுக்கிட்டிருந்தா நாளைக்கு எவன் தமிழ்ல படம் எடுப்பான் !

    நீங்களே நியாயத்தை சொல்லுங்க எசமான் :)))

    #சமகாலசினிமாபிரச்னைகள்

    ReplyDelete
  2. //நீங்களே நியாயத்தை சொல்லுங்க எசமான் //
    ”அதுல இருந்து ரெண்டே சீன்தான் இதுல வெச்சிருக்கோம்” இப்படி சொல்லுவாங்களே பரவாயில்லையா? #சமகாலசினிமாஇயக்குனர்கள்

    ReplyDelete
  3. :))

    //அதுல இருந்து ரெண்டே சீன்தான் இதுல வெச்சிருக்கோம்//

    கதை ஆரம்பிக்கிற இடம் & முடியற இடம் ரெண்டு மட்டும் காப்பி மத்தப்படி நடுவுல மானே தேனே பொன்மானே போட்டு நிரப்பிடவேண்டியதுதானே! :))

    ReplyDelete
  4. Hitch???? ஆஹா..... விளங்கிரும்!

    ReplyDelete
  5. நீங்க எழுதியிருக்குற ஸ்டைலை பார்த்துட்டு ஒருவேளை வெளிநாடுகளில் மட்டும் படம் வெளிவந்துவிட்டதோன்னு நெனச்சு பயந்துட்டேன்...

    நேரம் கிடைக்கும்போது நம்ம பக்கம் வரவும்...
    http://philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  6. அடப்பாவி,, நான் ரொம்ப சீரியஸா படிச்சுட்டு இதை வேற என் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணிட்டனே :(((((

    ReplyDelete
  7. ஸ்மைலிக்கு பதிலா சோகத்தை புழிஞ்சுட்டேன்..

    :))))))))))))))))))

    ReplyDelete
  8. நல்ல விமர்சனங்க நண்பரே..

    ReplyDelete
  9. சுப்புரத்தினம்Friday, December 17, 2010 at 7:36:00 AM EST

    இதெல்லாம் ஒரு போழப்பு,,,,,,

    ReplyDelete
  10. நன்றி சித்ரா
    நன்றி TVR ஐயா
    philosophyprabhakaran--> உங்க பக்கமெல்லாம் வந்துட்டுதாங்க இருக்கேன்.

    நன்றி தஞ்சாவூராரே
    நன்றி விஜி, அப்படியெல்லாம் சுலமா பதிவை படிக்காம பின்னூட்டம் போட முடியாது. நாந்தான் செய்யறேன்னா நீங்களுமா?

    நன்றி பாபு
    நன்றி ஐத்ருஸ்
    நன்றி சுப்புரத்தினம் என்கிற கமல் ரசிகரே. இதுவும்தான் நாங்க பொழப்பா வெச்சிருக்கோம், நீங்க பதிவை படிக்கிறதை பொழப்பா வெச்சிருக்கீங்க. அப்புறமென்ன தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்குறது? சின்னபுள்ளத்தனமா இல்லை இருக்கு

    ReplyDelete
  11. நான் கொஞ்ச நாளைக்கு முன்னே பண்ணினேன் இப்படி .. நானும் ஒரு விமர்சனம் போடுறேன்

    ReplyDelete
  12. கற்பனை விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  13. :)))))))))))

    இது போங்கு நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்

    ReplyDelete
  14. அட நானும் படத்தோட விமர்சனம்னு ஆவலா வந்தேன் இளா..
    ஏமாத்தீட்டீங்களே...
    ஆனா Hitch படத்தின் விமர்சனம் நல்லாயிருந்துது..

    ReplyDelete
  15. /////மன்மதன் அம்பு Hitch படத்தின் தழுவல்னு சொன்னாங்க. நேத்துதான் அந்த DVDபார்த்தேன், அதை அப்படியே மன்மதன் அம்பா விட்டுட்டேன். எல்லாமே கற்பனை, புனைவுதான்/////

    ஹ..ஹ...ஹ...

    அதுக்காக இப்படியா.. நல்லாயிருந்தது

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  16. எப்படிய்யா இப்படியெல்லாம்? படம்தான் வரட்டுமே.. அதுக்குள்ள என்ன அவசரம்.? :-)

    ReplyDelete
  17. அடப்பாவி... ஆனாலும் விமர்சனம் செம.. நிறைய டைரக்டர்ஸ் உங்களைத் தேடப்போறாங்க.. இப்படி கதையை மாத்திக் கொடுக்க.. பாருங்க இதே மாதிரி இருந்தாலும் இருக்கும் படம்...

    ReplyDelete
  18. 1946 ஆண்டு வெளிவந்த "Romance on the High Seas" எனும் படத்தின் கோப்பியே கமலின் - மன்மதன் அம்பு.

    ReplyDelete
  19. 1946 ஆண்டு வெளிவந்த "Romance on the High Seas" எனும் படத்தின் கோப்பியே கமலின் - மன்மதன் அம்பு.

    ReplyDelete
  20. 1946 ஆண்டு வெளிவந்த "Romance on the High Seas" எனும் படத்தின் கோப்பியே கமலின் - மன்மதன் அம்பு.

    ReplyDelete
  21. 1946 ஆண்டு வெளிவந்த "Romance on the High Seas" எனும் படத்தின் கோப்பியே கமலின் - மன்மதன் அம்பு.

    ReplyDelete
  22. 1946 ஆண்டு வெளிவந்த "Romance on the High Seas" எனும் படத்தின் கோப்பியே கமலின் - மன்மதன் அம்பு.
    __________________
    theepan

    ReplyDelete
  23. ஒரு திரைப்படத்தின் பாத்திரங்கள் பல்வேறு கோணமுடையது. பலவேறு பாத்திரங்கள் உள்ளது. பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் அல்லது கதைக்கு ஏற்றாற்போல் புதிய நடிகர்களையோ அல்லது பழைய நடிகர்களையோ கூட நடிக்கவைக்கப்படும். நகைச்சுவையாக விடயங்களைச் சொல்லலாம். சிலவேளை பாத்திரத்தின் பொருத்தம் கருதி, பாத்திரத்துடன் பொருந்திப்போகும் ஒருவரை நடிக்கவைக்கலாம். ஒரு திரைப்படத்தின் கதையுடன் தொடர்பில்லாமல், ஒரு சில காட்சிகளிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ கூட, ஒரு புகழ்பெற்ற நடிகரை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உள்ளன. நகைச்சுவை நடிகர்களை அல்லது நகைச்சுவையை விரும்புவோரை கவரும் விதமாக கதையுடன் தொடர்பில்லாத காட்சிகள் கூட சில திரைப்படங்களில் வந்துள்ளன.

    ஆனால், ஒரு திரைப்படத்தின் கதையுடனோ, கதாப்பாத்திரத்துடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாமல், "மன்மதன் அன்பு" எனும் திரைப்படத்தில் காட்டப்படும் "ஈழத்தமிழர்" பாத்திரமானது வேண்டுமென்றே ஒரு இனத்தை வழிய இழுத்து, இழிவு படுத்தும் வகையிலானது என்பது திரைப்படத்தை பார்த்த எந்த ஒரு சாதாரணனுக்கும் புரியும்.

    இச்செயலானது ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கமல் செய்த செயலானது, கமலஹாசன் எனும் நடிகன் எத்தனை கேவலமானவன் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய செயலாகும்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)