Thursday, December 24, 2009
விஜய் - எனக்காக இத செய்யுங்களேன்
Stage Performaceல நம்ம இசையமைப்பாளர்கள் எல்லாம் சொதப்பும் போது தேவிஸ்ரீ பிரசாத் மட்டும் செமயா கலக்குவாரு. அநேகமா இந்த விசயத்துல DSPய ரொம்ப புடிக்கும். இதுல இளையராஜா ரொம்ப சுத்தம். நடுவால வர்ற வசனங்கள் எல்லாமே DSP. என்னா ஒரு Voice Modulation
Making of Ringa Ringa
Friday, December 11, 2009
முண்டாசுக் கவி
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?
பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.
உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.
உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?
அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.
உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.
பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!
வாழ்க தமிழனும், தமிழும்!
Pic : Thanks http://www.flickr.com/photos/balu/
Monday, November 30, 2009
மகசூல் - 30-11-09
விண்ணைத் தாண்டி வருவாயா, படம் நியூயார்க்/நியூ ஜெர்சின்னு வளைச்சு வளைச்சு எடுத்தாங்க. படம் புடிக்க வந்தவங்க எங்க ஊட்ல இருந்து 1 மைல் தொலைவுலதான் தங்கி இருந்தாங்க. நான் யாரையும் பார்க்கப் போவலை. அந்த சனத்துல ஒருத்தர் மட்டும் எங்கூட 4 நாள் ஊர் சுத்தினாரு.
இந்தப் படத்துக்குப் பேரு வெச்சது ஒளிப்பதிவாளராம். பாட்டெல்லாம் கேட்டேன், ரொம்ப நாள் கழிச்சு ரகுமான் கலக்கி இருக்காரு, கெளதம் மேனன் ஆச்சே. படத்தோட பாட்டு டிசம்பர் 18ம் தேதி, லண்டன்ல வெளியாவுதாம். என்ன காரணமா லண்டன்ல வெளியிடறாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.
சொந்தப் பேர்ல பதிவு/டிவிட்டர் எழுதறது எவ்வளவு தப்புன்னு இப்போதாங்க தெரியுது. ஒருத்தர வேலைய விட்டுத் தூக்க HR மக்கள் முடிவு பண்றாங்கன்னு வெச்சுக்குங்க, மொதல்ல performance சரியில்லீம்பாங்க, இப்போ? அவரு எங்கே எவ்ளோ ட்விட்டராரு, பதிவு போடறாருன்னு அவரு சொந்தப் பேரைப் போட்டு தேடிப்பார்த்துட்டு “ராசா, நீ வேலை பார்க்கிற லட்சணம் இதுதான், கெளம்பு’ன்னு சொல்றாங்களாம். நாமதான் பதிவு எழுதறது வேலையாவே வெச்சிருக்கோமே, அதுவும் பெரிய கெளரவம் சிவாஜி மாதிரி சொந்தப் பேர்ல வேற எழுதி வெச்சுறோம். மாட்டிக்கிறது சுலமாச்சே. இப்படியுமா HR மக்கள் வேலை பார்ப்பாங்க? இவுங்க எல்லாம் ரூம்ல ஏசி போட்டுத்தான் யோசிக்கிறாங்க..இனிமே சொந்தப் பேர்ல எழுதாதீங்கப்பூ.
வேட்டைக்காரன் - விளம்பரம் எல்லாம் பார்த்தேங்க. ரொம்ப சப்பையான விளம்பரங்கள். ரொம்பத் தெளிவா சன் டிவி செய்யுறாங்க. விஜய், பார்த்து சூதானமா இருந்துக்கோங்க. கவுக்க பெரிய கும்பலே இருக்கு. கோடிய குடுத்து இடம் புடிக்கத் தெரிஞ்சவங்களுக்கு, கோடிய குடுத்து உங்க இடத்தை காலி பண்ணிறப் போறாங்க. எதுக்கும் ஒரு மஞ்சத் துண்ட போர்த்தி பிரச்சினைய முடிச்சுக்குங்க.
Wednesday, November 25, 2009
26/11
மேலே ஒரு நிகழ்படம் இருக்குங்க. பார்க்க முடியாதவங்க இந்த இடுகையில பாருங்க.
கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத இந்த மாதிரியான குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறவங்க இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க. இந்துத் தீவிராவாதிங்க பண்றது சரியில்லைன்னு இந்த வன்முறை சரின்னு சொன்னவங்க நிறைய பார்த்திருக்கேன். இரண்டு பேரும் பண்றது தப்புதான். இதுல ’A’ கிரேடு ’பி’ கிரேடு எல்லாம் இல்லீங்க. சுஜாதா எழுதின மாதிரி “தப்பு என்ன பனியன் சைஸா.. தப்பு தப்புதான்”..
அகில இந்திய முஸ்லிம் கட்சிக்கு பாராட்டுக்கள். அப்சல் கசாப் செத்தா இந்தியாவுல புதைக்கவோ, எரிக்கவோ கூடாது சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி 4 பேர் செய்யுறதால எத்தனை எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படறாங்க??? இந்திய இனிமேலாவது முழிச்சுக்கலாம். அப்சல் கசாப் வெச்சு இந்தியா உலக அளவுல ஒரு மயித்தையும் புடுக்கப்போறதில்லை.. அது மட்டும் நிச்சயம்..
Thursday, November 5, 2009
காதலியைத் தானம் செய்த மணவறை
கீபோர்டில் என் கைகள், மானிட்டரில் அவள்.
கற்புநெறி மறந்தவிட்டிருந்தன
இணைய விடுதிகள்.
அரசியல்வாதிகளின் புரட்டு,
அதிகாரிகளின் அலட்சியம்,
எல்லாம் சேர்ந்த
சமூகத்தின் மீது கோவம்
அனானியாய் திட்டிவிட்டேன்
ஒரு பதிவில்
கோவம் தணிந்திருந்தது.
பார்த்த இடமெல்லாம் காமம்
பார்ப்பதெல்லாம் காமம்
வெந்துத் தணிந்தது காடு
வாழ்க்கை மீது பயம் வந்திருந்தது.
நண்பர்களைத் தொலைத்த தேசம்,
காதலியைத் தானம் செய்த மணவறை,
சத்தியம் செய்த தலைகள்,
மெய் மறுத்த விழிகள்,
எல்லாம் ஞாபகம் வருவதில்லை
மீண்டும் தவறிழைக்கும்போது.
Tuesday, October 27, 2009
சாராயம், சர்தார்
"சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... "அடுகள்'ங்கற பெயருல சங்க காலத்திலேயே சாராயம் புழக்கத்தில் இருந்து தாம். பல வகைப் பழங்கள ஊறலாக்கி, அதை வடிச்சு சாராயம் குடிக்கும் பழக்கம் 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்துதாம்... "விறலி விடு தூது'ன்ற புஸ்தகத்துல இத எழுதி இருக்கா... "சாரம்'ங்கறது தான் சாராயம் ஆச்சாம்...
"பிராந்தி, விஸ்கி இதெல்லாம் முதல்ல, நெதர்லாந்து நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சாளாம்... "நாட்டுச் சாராயம், கருப்பட்டி, வெல்லம், பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், பனை - தென்னையிலிருந்து வடிக்கப்படும் கள், அரிசி ஊறல், கரும்புச்சாறு இதெல் லாம் ஊற வெச்சு நம்மூர்ல சாராயம் காய்ச்சினாளாம்...
"பட்டைச் சாரயம்ங்கறது என்ன தெரியுமா? "பழவகை, இனிப்புகள போட்டு, அந்த ஊறல் நாத்தமெடுத்து, சுவை கெட்டுப் போகாம தடுக்க, ஊறலோட, கருவேலம்பட்டை, வேப்பம்பட்டை போன்ற மரப்பட்டைகள் சேர்த்துப் போடுவாளாம்...
"அதனால தான் இது பட்டை சாராயம் ஆனதாம்... தேங்கா சாராயமும், பட்டைச் சாராயமும் உயர்ந்த சரக்குகளாம்... இலுப்பப் பூவை ஊற வைச்சு இலுப்ப சாராயமும் செய்தாளாம்...' என்றார்!
"இத்தோட, இப்பெல்லாம், ஊருக்கு ஊர், சுடுகாட்டிலும், வயற்காட்டிலும் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்க... அப்பத் தான் சாராயப் பட்டியல் நிறைவு பெறும்...' என நான் கூற, வீரப்பா சிரிப்பு சிரித்தார் குப்பண்ணா!
சர்தார்:
இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.
சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!
Thursday, October 22, 2009
சிகப்பு விளக்கு
விளக்கின் கீழ் அமர்ந்திருந்தான் பாபு, பான்பராக் மென்று மென்று கடவாய் பற்களில் இரண்டை இழந்திருந்தான். கீழ் உதட்டில் புண் ஆகியிருந்தது. தூக்கம் வரவே ஒரு பான்பராக்கை பிரித்து அப்படியே கொட்டிக்கொண்டான். கீழ் உதட்டின் உட்புறம் நெருப்பாய் எரிவது அவனுக்கு ஒன்றும் புதிதில்லை.
வேகமாய் வந்தார்கள் சுரேசும், வேலுவும்.
“ஒருத்தர் மட்டும்தான்” பாபு.
சுரேஸ் தங்கவேலுவை பார்க்க, முதலில் போன சுரேசை தடுத்து ”மொதல்ல காசை வை, அப்பால உள்ளாற போ” என்றான் பாபு.
யோசிக்காமல் காசை பாபுவிடன் கொடுத்துவிட்டு உள்ளே போனான் சுரேஸ்.
பத்து நிமிடம் கழித்து, பேண்ட் ஜிப்பை போட்டவாறே வெளியே வந்தான். வியர்த்திருந்தான், களைத்துமிருந்தான். பெல்ட்டை இறுக்கிப்போட்டுக்கொண்டான். தலையை கையால் கோதிவிட்டான். வேலு பாதி அடித்துமுடித்திருந்த வில்ஸ் பில்டரை வாங்கி நன்றாக இழுத்த்த்து கண்மூடி மேல்நோக்கி புகைவிட்டான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடந்த மாதிரி அவன் முகத்தில் பேரானந்தம். வியர்வையை சட்டையால் துடைத்துக்கொண்டான்.
“என்னடா போலாமா?” சுரேசிடம் கேட்டான் வேலு.
”நீ போவல?” பாபு.
”இல்லே” வேலு.
இருவரும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வேறு கதை பேசி நடக்கலானார்கள்.
என்ன ஆகியதோ தெரியவில்லை. மஞ்சளாய் எரிந்த பல்பும் அணைந்தது. . கீழுதடு எரிய &%&^%&$^&^$%^& எனத் திட்டியபடி இன்னொரு பான்பராக்கை பிரித்து போட்டுக்கொண்டான் மாநகராட்சி கழிவறை குத்தகைக்காரன் பாபு.
Wednesday, September 30, 2009
முதுகு வலியோட நடிகர் போட்ட செம ஆட்டம்
ஆக தயாரிப்பாளருக்கு கையறுநிலை. தாயாரிப்பாளர் ரொம்ப நாசுக்கா, நாயகன்கிட்ட ”மீட்டர் வட்டி கிமீ ஆவுது, அதனால .. இந்தப் படம் வராட்டா தெருவுக்கு வந்துவேன்”னு சொல்லிட்டு போயிட்டாரு. மருத்துவரோ 3 மாசம் கதாநாயகனை நடமாட விடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. நாயகன், யோசிச்சாரு..ஒரு வாரம் கழிச்சு பாட்ட எடுக்கலாம்னு சொல்லியனுப்ப சொல்லிட்டாரு.
மருத்துவர், அம்மா, அப்பா யார் சொல்லியும் கேட்கல. பாட்டு எடுத்தாங்க. அது கதாநாயகனோட சிறந்த ஆட்டத்துல ஒன்னா அமைஞ்சது, படம் வெளியே வந்தும் சரியாப் போகலை. ஆனா மேலும் கடன் ஆகாம தப்பிச்சாரு தயாரிப்பாளர். படம் ரொம்பச்சுமாராத்தான் போச்சு. பெரிய லாபம் மட்டுமில்லே, கடனுமில்லாம தப்பிச்சுட்டாரு. கடுமையான முதுகுவலியோட ஆடுன, அந்தப்பாட்ட பார்த்து ரசிங்க.
Wednesday, September 23, 2009
Vettaikaran Songs Review
குத்துப்பாடல்களை மட்டும்
1) நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட
பாடியவர்: சங்கர் மகாதேவன்
ஏத்த இறக்கத்தோட பாடி இருக்காரு, பாவம். இது ஒரு குத்துப்பாடல்-தத்துவப்பாடல்
’ஆலமரத்து பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்’ ’வீண்பேச்சு பேசாதே’ கனவு ஜெயிக்க வேணுமின்னா கண்ண மூடி தூங்காதே’
ஒன்னும் விசேசமில்லே.- கடுப்பு எண்-1
2) கரிகாலன் காலப் போல
பாடியவர்கள்:சுசித்ரா, சங்கீத், ராஜேஸ்வரன்
குத்துப்பாடல்- ஒன்னும் விசேசமில்ல-கடுப்பு எண்-2.
3) ஒரு சின்ன தாமரை
பாடியவர்கள்: கிருஷ், சுசித்ரா.
மனசுக்கு இதம், பாடல் வரிகள் செம விளையாட்டு. இதமான ஒரு பாடல்னு சொல்ல முடியாது. ஆனா ஒரே நல்ல பாட்டு.
4) என் உச்சி மண்டை சுர்ருங்குது
பாடியவர்கள்: கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர்.
பாறை படத்துல கூட இப்படு ஒரு பாட்டு இருக்குன்னு ஞாபகம்-குத்துப்பாடல்-கடுப்பு எண்-3
5)புலி உறுமுது
பாடியவர்: அனந்து, மகேஷ் விநாயக்ராம்.
ஓப்பனிங் பாட்டு, திருப்பாச்சியில வர்ற மாதிரி ஒரு உறுமி சத்தம்-கடுப்பு எண்-4
4 பாட்டில கண்டிப்பா ஒரு ஆங்கில பிட்டு- ஹிப் ஹாப் உண்டு.. கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.
Monday, September 21, 2009
உ.போ.ஒருவன் கமல் முஸ்லிமா?
அப்புறம் கமலுக்கு இந்துத்துவான்னு பேரு வெச்சிருக்காங்க. பிராமிணனா பொறந்ததால தமிழ்நாட்டுல குத்து குத்துனு குத்துவாங்க. முஸ்லிமா மாறினதால அமெரிக்காவுல குத்துறாங்க. பாவம்யா.. அதுக்காக விட்டுரலாமா?
இதோ கமல் எத்தனை எத்தனை **துவாக்களுக்கு ஆதரவுன்னு சொல்ல இன்னும் பல புள்ளி விவரம்.
ஆரிய அடிவருடியாக கமல்:
நடாஷா என்ற ஆரிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடனை நடிக்க வைத்திருப்பதால்.
முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிரியாக:
ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வதும், முஸ்லிமான கமல், நோன்பு சமயத்தில் சாப்பிடுவதும், காப்பி குடிப்பதும்.
- கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசருக்கு இந்தப்படத்தில் வாய்ப்பளிக்காதது.
- முஸ்லிமான மம்மூட்டியை நடிக்க அழைக்காமல் சேட்டன் மோகன்லாலை நடிக்க வைத்திருப்பது.
- பெரியாரின் சீடரான கமல் கருப்பு வண்ணமில்லாம உடைய அணிந்து பெரியாரின் கொள்கைகளை கேள்விக்குறியாக்கிருக்கிறார்.
அன்னிய மோகம் கொண்ட கமல்:
தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? அதுவுமில்லாமல் அன்னிய மோகத்தால் சாண்ட்விட்ச் சாப்பிடுவது. ஜீன்ஸ் போட்டு மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆதரவாக இருப்பதும், இந்திய கலாச்சாரத்தினை காலால் போட்டு மிதித்திருப்பதும்.
BJPக்கு ஆதரவாளர்:
காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. பிளவு பட்டிருக்கும் கட்சிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
இந்துக்களின் அடக்குமுறைக்கு கொட்டை தாங்கி இருப்பது:
மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அதிகாரிகள் அனைவரும் அடங்கி இருப்பது. அதே போல் வெடிகுண்டு வைத்திருக்கும் பையில் மட்டும் வெங்கடா ஜலபதி படம் போட்டிருப்பது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக கமல்:
1. சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland'னு இருக்கு... அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா?
2. இந்தியாவில் தயாராகும் Nokiaவை உபயோகிக்காமல், Samsung கைபேசிகளை மட்டுமே உபயோகப் படுத்துவதால் கிழக்கு நாடுகளின் அடிவருடியாக தன்னை காட்டி இருக்கிறார்.
அசைவர்களுக்கு எதிரானவர் கமல்:
மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை... பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா?
அதே போல் அவர் ஏன் ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ வாங்கவில்லை.
- போஸ்டரில் சிகப்பு வண்ணத்தில் ஒரு வட்டம் போட்டு அதற்குள் தான் இருப்பதை காட்டி கம்யூனிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார் கமல்.
- எடுத்த துப்பாக்கியை சுடாமல் வைக்கும் கமல் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளகூட தைரியமில்லாமல். வருஙகால சந்ததியினருக்கு வீரத்தை அடியோடு கிள்ளிப்போட்டிருக்கிறார்.
- தக்காளி மட்டுமே வாங்குமாறு காட்டி, பூசணிக்காய் பயிரிடும் விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார்.
- பிளாஸ்கில் காப்பி குடித்து Canned foodகளுக்கு ஆதரவாய் இருப்பது, Reliance Fresh எதிராய் கொடி பிடித்திருப்பதும், அதே சமயம் reliance சிம் உபயோகப்படுத்தி airtel, hutchநிறுவனத்தை மான பங்கம் படுத்தியுள்ளார்
- படிக்கவே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இருக்க லேப்டாப்பை தீயிட்டு கொளுத்தி அடித்தள மக்களின் வயித்தெரிச்சலைக் கிளப்பி, கமல் மேல் தட்டு மக்களின் பிரதிநிதியாக வலுப்பெற்றிருக்கிறார்.
- கண்ணாடி அணிந்து வந்து கண்ணாடி அணியாதவர்கள் எல்லாம் பாம் வைக்காதவர்கள் என்று சொல்லி கண்ணாடி அணியாதவர்களை கோபமுறச்செய்துள்ளார்.
- பிளாஸ்டி பை கொண்டு வந்து Anti-plastic சங்கத்தினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.
- நடந்தே வந்து போய், மாருதி நிறுவனத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்.
- லட்சியங்களுக்கு உயிரை எடுக்கவும் கொடுக்கவும் முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் என முஸ்லிம் மதத்தினரை சொல்லும் கமல், காசுக்காக இந்துக்கள் எந்தவித கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என சந்தானபாரதி பாத்திரத்தில் காட்டியிருப்பது.
- தானும் பாடி, தன் ஒரு பெண்ணை இசையமைக்கச் சொல்லி, இன்னொரு பெண்ணையும் பாட வைத்து, கெளதம்யியை பேச/பாட வைத்து ஒரு குடும்பத்தில் அனைவரும் இந்தப்படத்தில் பங்கேற்க வைத்து, கலைஞருக்கு ஜால்ரா தட்டி தான் ஒரு தி.மு.க என காட்டியிருப்பது..
- போகா சேனல் காட்டாமல் வேறு ஏதோ ஒரு சேனலுக்கு போன் செய்து குழந்தைகளுக்கு எதிராக செய்திருப்பது..
இந்துத்துவா, பூஷ்வா, கோவா, ரவான்னு நிறைய கேள்வி கேட்டுட்டாங்க. என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம். படத்திலும் அவர் மனைவி முஸ்லிம் என்பது தெரிந்த விசயம். முதல் முறை அவர் மனைவியிடம் பேசுகையில் மனைவி சொல்வார் "இன்ஷாஹ் அல்லாஹ் சொன்னீங்களா” என்று. வேணுமின்னா இரா. முருகனை கேட்டுச் சொல்லலாமா?
நன்றி: Twitters
Updated: சின்ன அம்மணியின் பின்னூட்டத்திற்கு பின் ://காமன்மேன் முஸ்லிமா இருக்கக்கூடாதா,தீவிரவாதியாத்தான் இருக்கணுமா//
முதலில் ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக மட்டும் பார்க்கத்தெரிந்திருக்கும் உங்கள் தட்டையான எண்ணத்தை எண்ணிப்பாருங்கள். முஸ்லிமை தீவிரவாதியாக மட்டுமே எண்ணும் உங்கள் பின்நவீனத்துவத்தை என்ன சொல்வது. படத்தில் கமல் ஒரு இடத்தில் முஸ்லிமென காட்டி இருக்கிறார், ஆனால் எந்த இடத்திலும் அவர் இந்துவாக காட்டவே இல்லை. அப்புறம் எப்படிங்க நீங்க இந்துத்துவான்னு சொல்றீங்க. காரணம் உங்களுக்கு தனிமனிதனின் ஜாதிதான் தெரியும். இதுக்கு பேருதான் பகுத்தறிவா? திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால், உங்கள் குறுகிய மனதை/எழுத்தை எங்கே போய் வெச்சுப்பீங்க? உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது. கெளம்புங்க காத்து வரட்டும்.
கடைசியாக விவசாயி டச், பொண்டாட்டி கையால் புருசன்மார்கள் அடிவாங்குவது சகஜம். அதைப் புகாராய் கொடுத்தால் எந்தக் காவலரும் மதிப்பதில்லை. இப்படி கல்யாணமான ஆண் சமுதாயத்தின் மானத்தை பொதுவில் வைத்து கப்பலேத்தி, திருமணமான ஆண்களின் ரகசியத்தை உடைத்ததை நான் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன். இது ஆண்சமுதாயத்துக்கு கமல் செய்த துரோகம்.
Friday, September 18, 2009
Unnai Pol Oruvan Review
தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் முறியடிக்கப்படவேண்டும் என்பதைச் சொல்லும் படம். தீர்ப்புகளும் நொடிப்பொழுதில் கிடைக்க வேண்டுமென நினைக்கும் ஒரு சாதாரண பிரஜை ஆசையின் பிரதி.
கதை, Speed 1 கதைதான். காலை 9 மணி ஆரம்பித்து மாலை 6.10 முடியும் படம். நாட்டில் நடந்த பெரிய வன்முறைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட 4 தீவிரவாதிகளுக்காக, நகரத்தில் பல குண்டு வைத்து மிரட்டி நால்வரையும் மீட்கும் கதைதான். உச்சமே அந்த நாலவரின் கதி என்னவாகிறது என்பது. ஒரு வரி கதை. கமல், 5 நாட்களில் நடித்து முடித்ததாக சொல்லப்படுகிறது, இருக்கலாம். கமல், மோகன்லால், இரு அசத்தும் காவல்துறையினர், லஷ்மி, ஒரு நிருபர் பல கணினிகள்/கைபேசிகள்.படமே ஒரு தெரு, ஒரு அறை, ஒரு மொட்டை மாடி என முடிந்துவிடுகிறது.
கமலுக்கு ஏற்ற வேடம், நம்மவரில் பார்ததது போலவே. சண்டை இல்லை, குத்து வசனம், பாடல்கள் இல்லை. ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடித்துக்கொண்டு கைபேசியில் பேசும் வேடம். சின்ன கதாபாத்திரம். மோகன்லாலுக்கு கைபேசியில் பேசுவது மட்டுமே வேடம். மோகலால குடுத்த வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். உங்களுக்கு இராணுவ பதவி தப்பே இல்லை. இறுதிவரை அசத்துவது இரண்டு காவல்துறை அதிகாரிகள். கமலுக்கு மட்டும் எங்கே இருந்து இப்படி கிடைக்கிறார்களோ? தமிழுக்கு இரண்டு கதாநாயகர்கள் தயார்.
படத்தில் லஷ்மிக்கு அடுத்தப்படியாக ஒரு நிருபர், படத்தில் ஒருவர் மட்டுமே புகைப்பிடிக்கிறார். அதுவும் இந்தப் பெண் நிருபரே. Basis Instict ல் பார்த்த அதே ‘தம்’ சீன். சந்தான பாரதிக்கு அதே மை.ம.காம.ராஜன்’ல இருந்தே வேடம். ”மைக்கேலு, போலிஸுல சரண்டர் ஆகிரலாம்பா” .. அதே டெம்போ. ஒன்னும் வித்தியாசம் இல்லை.
மற்ற படங்களின் டைட்டில் போட்டு முடிக்கும் வேகத்தில் முடிந்துவிடுகிறது முதல் பாதி. என்ன வேகம்? என்ன வேகம். வெகுநாட்களுக்குப்பிறகு தமிழில் இப்படி ஒரு திரைக்கதை. அசத்தல் வேகம். ஆரிஃப் கானாக வரும் காவலரின் ஒரு விசாரணை, அடிக்காமல், வசனம் அதிகம் பேசாமல், தன் கம்பீரத்தைக் காட்டியே உண்மை வாங்கும் பாங்கு அருமையோ அருமை. வசனகர்த்தாவுக்கு இந்த இடத்தில் ஷொட்டு. வசனகர்த்தா பொட்டி தட்டுறவர், இரா.முருகன். தேவையான இடத்திற்கு தேவையான வசனம்.”எனக்கும் இடது, வலது இரு கையில் எழுதும் பழக்கம் உண்டு. இடதும் பிடிக்கும், வலதும் பிடிக்கும். இது எழுதுவதில் மட்டும்தான்” ”a stupid common man from republic" இப்படி பல இடங்களில் மிளிர்கிறார் இராமுருகன். பளிச். இயக்குனரும் பொட்டிதட்டுறவர் போல. அதென்னமோ மென்பொருள்ல இருக்கிறவங்கன்னா கண்ணாடி போட்டுத்தான் ஆவனுமா?
ஒரு தலைமை செயலர் எப்படி இருப்பார் என்பதற்கு லஷ்மி கதாப்பாத்திரம் ஒரு சான்று, முதல்வராக கலைஞர் குரல்(போல்). த. செயலர்னா இப்படித்தான் பொறுப்பு இருந்தும் எடுத்துக்கொள்ள முடியாத நிலைமை. எடுத்துக்காட்டிய விதம் அருமை. படித்த ஜாலராக்கள்.
இசை, ஆரம்பம் மும்பை படத்தில் ARR செய்த வேலை, கடைசிவரை இசை இருக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு நேர்த்தியான இசை. தந்தைக்கு தப்பாமல் பிறந்திருக்கு பெண். படத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவு, அசத்தல், அருமை, பலே, பேஷ். அட்டகாசம்.. இன்னபிற.. எடிட்டிங்- என்ன சொல்ல.. படத்தில் சொல்லாமல் சொல்லும் விசயங்கள பல, பாமரனுக்குப் புரியுமா எனபதுதான் கேள்வியே. உதாரணம் கமல் வைத்திருக்கும் துப்பாக்கி, எந்தவிதமான வசனமும் இல்லாமல்,தான் சாகத்தயார் என்பதைச் சொல்லுவது, கடைசியில் அதே துப்பாக்கி்யை உறையில் வைப்பதும்- இப்படி பல விசயங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் விறுவிறுப்பு இறுதி வரை குறையவில்லை. அதாவது இறுதியில் குறைந்திருக்கிறது. தெரிந்த அதே கோத்ரா, best backery, குஜராத் உள்விவகாரம், இப்படி தெரிந்த விசயங்களை நியாயப்படுத்துவது, கமலை காப்பாற்றும் “எங்கேயோ போயிட்டிங்க” சிவாஜியும், Ethical Hackreஆக வரும் ஆனந்த் (சதிலீலாவதியில் கமலுக்கு மகனாக நடித்த சிறுவன், இப்போ வாலிபர் )கதாபாத்திரம்அடிக்கும் பல்டியும் படத்தின் சறுக்கல். ஒரு சோப்ளாங்கி இளைஞன் பெரிய Hackerஆக காட்டுவது தமிழுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம். The Core, Fast And furious படங்களில் பார்தததுதானே. கதாபாத்திரத்தில் இந்த வேடம் மட்டுமே நெருடல். அவ்வளவுப் பெரிய கட்டிடத்திற்கு ஒரு காவலர் கூட இல்லாதததும், இரண்டு பேர் த. செயலர் முன்னாடியே அடிக்கும் பல்டி, இப்படி சில நெருடல்கள் இருந்தாலும், மற்ற காட்சிகளுக்காக மன்னிக்கலாம்.கடைசிவரை கமலின் பெயரையும்,மதத்தையும் சொல்லாமல் சொல்லியிருப்பதும் புதுமை.
ஒரு நல்ல படத்திற்கு தேவை நல்ல திரைக்கதை, அதற்கான பாத்திரங்கள். இரண்டுமே இந்தப்படத்தில் சரிவர அமைந்திருக்கிறது. நல்ல கதாப்பாத்திரங்களும், அதற்கான நடிகர்களின் தேர்வும், அசத்தலோ அசத்தல். எங்கு பார்த்தாலும் அழகு. எல்லை தாண்டாத நடிப்பு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, நறுக்வசனம், இரைச்சலில்லாத இசை இறுதி வரை ஆயிரம் குதிரை வேகத்தில் செல்லும் காட்சிகள் கொண்ட'A" Class படம் உன்னைப்போல் ஒருவன்.
Tuesday, September 15, 2009
பதிவுலகின் எமன்கள்
கல்யாணம்/காதல்:
பட்டைய கெளப்புன பதிவர்ங்க பல பேரு கல்யாணத்துக்கு பின்னாடி எஸ்ஸாகிருவாங்க. ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு வந்துருவாங்கன்னு நினைச்சா .. வரவே மாட்டாங்க. எப்பவாவது எங்கேயாவது ஒத்த வரியில் பின்னூட்டம் போடுவாங்க. அப்பப் படிச்சுகிட்டுதான் இருக்காங்க. அப்ப ஏன் எழுதறது இல்லே?
உதாரணம் - மங்களூர் சிவா, கவிதாயினி காயத்ரி
வேலை:
வேலை இல்லாமதான் பதிவெழுதறத ஆரம்பிப்போம், அப்புறம் அதே ஆணி அதிகாமயிருச்சுன்னா எழுத மாட்டோம். எழுத மேட்டர் இருக்கும், நேரம் கூட இருக்கும், ஆனா டச் விட்டுப்போயிருச்சுன்னு எழுத மாட்டாங்க.
உதாரணம்- ஜி.ரா.
வேற மோகம்.
கெளம்பிடாதீங்க. இது வேற மாதிரி. ட்விட்டரு, குழுமம் மாதிரிங்க. ட்விட்டருக்குள்ள போயிட்டா பதிவெல்லாம் படிப்பாங்க. ஆனா பின்னூட்டம் எல்லாம் ட்விட்டருல விழும். எதாவது எழுதனும்னு நினைச்சா கூட அங்கேயே எழுதிருவாங்க. இங்க வரவேண்டிய அவசியமே இருக்காது.
உதா: பெரிய கும்பலே இருக்கு.
இடம்மாற்றம்.
அதே வேலை, அதே கம்பனி. ஆனா இடம் மாறிட்டா எழுத மாட்டாங்க. காரணம் புது ஊர்ல செட் ஆவாத ஃபிகருங்க செட் ஆகியிருக்கலாம், அப்பா அம்மா குடும்பம்னு ஆகியிருக்கலாம், நண்பர்கள் குழு செட் ஆகியிருக்கலாம், இப்படி.
உதாரணம்: கப்பி, கைப்பு.
இடம்மாற்றம்-2
ஆகா, இதுல பார்ட்2 வான்னு கேட்டீங்க. ஆமாம் இன்னும் கூட வரலாம். வேலை மாறி போறீங்க. ஏற்கனவே இருந்த அலுவலகத்துல எல்லாத்தையும் தொறந்து விட்டுருப்பாங்க(Internet Connectionஐ சொன்னேங்க, வீண் கற்பனை வேணாம்). புது அலுவலகத்துல புதுசா சமைஞ்ச பொண்ணு மாதிரி Internetஐபொத்தி வெச்சிருப்பாங்க. நாமளும் பொத்திகிட்டு இருக்க வேண்டியதா இருக்கும்.
உதாரணம்: இளவஞ்சி
புது உறவு
கல்யாணம் ஆனா கூட பதிவு போடுறவங்க உண்டு, குழந்தை பொறந்துட்டா பார்த்துக்க போயிருவாங்க, புதுசா வந்த நண்பர்கள் கிண்டல் அடிக்கறாங்கன்னு எழுதாம விட்டவங்களும். அவ்ளோதான். இது திரும்ப வராத கேசுங்க.
உதாரணம்- வெட்டிப் பயல்.
Special case:
போலி,புலி,காலி,டவுசர் கழட்டப்பட்டது, துண்ட உருவுனது, மூக்கச் சிந்தினது, கொட்டாயி உட்டது, உருண்டு பொரண்டது நிறைய இருக்கு, அதாவது பதிவுலகமே காரணம். இப்போதைக்கு ஒரு கோடு போட்டு உட்டுருவோம். வேணாம்.
Writer’s Block:
முன்னாடி ஒரு எழவுமே எழுதி இருக்கமாட்டாங்க, திடீர்னு ஒரு 6 மாசம் எழுதமாட்டாங்க. காரணம் ஏன்னு கேட்டா Writer’s Blockம்பாங்க. இதை எல்லாம் ஏத்துக்கவே முடியாது. எத்தனை தனிமடல் வருது அதை தமிழாக்கம் பண்ணினாவே ஒரு நாளைக்கு 2 பதிவு போட்டுறலாம். இதுவும் சோம்பேறிகளின் காரணம்.
வேற எதுனாச்சும் உங்களுக்குத் தோணினாலும் பின்னூட்டத்துல போட்டுருங்க.
Tuesday, September 8, 2009
நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு- Update
முந்தின பதிவை மீள் பதிவு போட்டது சரித்திரத்துல நாமதான் மொதல்னு வரலாறு, புவியியல், எல்லாம் சொல்லட்டும்.
வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM (காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்
அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.(இரண்டு முக்கிய அறிவிப்புகள் உண்டு)
சரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.
Thursday, September 3, 2009
நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு
வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM(காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்
எங்கே: எடிசன், இடம் இன்னும் முடிவாகலைங்க. சீதோஸ்ண நிலையப் பொறுத்து. ஆனா எடிசன் பொதுவான இடங்கிறதால, முடிவாகிருச்சு.
அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.
சரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.
எத்தனை பேர் வர்றீங்கன்னு ஒரு கணக்கு சொல்ல பின்னூட்டம் போடுங்க மக்களே
Tuesday, August 18, 2009
Vettaikaran - வேட்டைக்காரன்
Source: Yooutube நமக்கு ஒன்னுந்தெரியாது..
Thursday, July 23, 2009
Monday, July 13, 2009
அச்சமுண்டு அச்சமுண்டு
எல்லாம் ஒரு விளம்பரம்தான், நம்மள நாமளே தூக்கிவிடலைன்னா எப்படி? ஒரு அணில்குட்டியாட்டம்
Thursday, July 2, 2009
காசியும், ஞானும், பின்னே சந்தவையும்
சந்தவ சுடுறது பெரிய விசயம். ஏன்னா, இதச் சுட ரெண்டு பேரு வேணும். இட்லிக்கு சுடறாப்லதான் மாவு இருக்கும். என்னா, உளுந்து போட மாட்டாங்க. வெறும் அரிசிய ஊறவெச்சு, உப்பு போட்டு வெச்சுக்குவாங்க, புளிக்க வெக்கவெல்லாம் வேணாம். அப்படியே ஆட்டுக்கல்லுல இருந்து எடுத்து நேராவே இட்லி தட்டுல ஊத்திரலாம். ஆனா இட்லி மாதிரி பொசு பொசுன்னு உப்பாது இது. கல்லாட்டம் இருக்கும்.
இதுவரைக்கும் நமக்கு ஒன்னும் வேலை இருக்காது. சந்தவ மரம்(சந்தவ புளியரது), இது பெரிய வேலை பண்ணும். சந்தவ சுடறதுக்கு மொதோ நாளே எண்ணை போட்டி வெச்சுரனும். இல்லாட்டி திருவரவங்களுக்கு பாடு கஷ்டமாயிரும். சுட்ட இட்லி மாதிரி இருக்குறத எட்டுத்து உள்ளே போட்டு திருவனும். சந்தவ வருதோ இல்லீயோ, திருவரவங்களுக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். சந்தவ எடுத்ததுக்கு அப்புறம் கீழ கொஞ்சூண்டு ஒட்டி இருக்குறதுதான் திருவறவங்களுக்கு. சந்தவ, மூனு வெதமா திம்போம். ஒன்னு- சந்தவய போட்டு, அதுக்கு மேல பழம், சர்க்கரை போட்டுக்கனும். ரண்டு மூணு வாழப்பழத்தை போட்டு பெனஞ்சு, நெய்ய அதுக்குமேல ஊத்தி சாப்புடறது. ரண்டு- சந்தவைக்கு தேங்காப் பால் ஊத்துறது. மூணு- சந்தவய வருத்து திங்கறது.
காசி அண்ணாச்சியோட சேவை மேஜிக்ல கஷ்டப்படாம் சந்தவ வருது(Updated: This site may harm your computer-அப்படின்னு கூகிள் சொல்லுது). இத்தனை கஷ்டம் இல்லே. மாவு ஊத்தினா சந்தவை வருது. NS கிருஷ்ணன் சொன்னாபல் “சுச்சிய தட்டுனா, தட்டுல இட்லி” இந்தியாவுல மூணு வாங்கினேன். அதுல ஒன்னு இப்போ அமெரிக்காவுலதான் இருக்கு. காசி அண்ணாச்சிக்கிட்ட மொதல்ல கேட்டதே "இத வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போவ முடியுமா"ன்னுதான். வாங்கி வேஸ்ட்டாப்போச்சுன்னா? அண்ணாச்சி முயற்சி பண்ணச் சொன்னாரு. கொண்டுவரது கொஞ்சம் சுலுவாத்தான் இருந்துச்சு. இப்போ சந்தவை சுலுவா செய்ய முடியுது. என்ன மாவு மட்டும் கொஞ்சம் சரிப்பதமா இருக்கனும் இல்லாட்டி நல்லா வர மாட்டேங்குது. ஒரு தடவை பண்ணிப்பார்த்துட்டா அப்புறம் தெரிஞ்சிரும். ஒரு சிடி வேற இருக்கு, எப்படி செய்யறதுன்னும் சொல்லித்தர்றாங்க.நெறைய recipe தந்திருக்காங்க, ஆனா அதுல ஒன்னகூட நாஞ்செஞ்சி பார்க்கல. நமக்குத் தெரிஞ்ச மூணு அயிட்டத்தையுமே சாப்பிட்டா போதுமுன்னு வுட்டுட்டேன். அதாகப்பட்டது, சந்தவ சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம், எதிர்வூட்டு செட்டியாரு சொன்னாரு.
Tuesday, June 30, 2009
ஆணிவேர்
"அப்பா, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லையா?"
"இருக்காங்கப்பா, பங்காளி வழியில நெறைய சொந்தம் இருக்காங்க. ஒரு தலைமுறை போனவுடன் அவுங்க புள்ளைங்க எல்லாம் பழைய சொந்தங்களை தேடறதுமில்லே, பழகறதும் இல்லே. அவுங்க அவுங்க அவுங்களுக்கு வசதியான மக்களோட பழக ஆரம்பிச்சிறாங்க. ஏதாவது விசேசம்னா மட்டும் வந்து போயிட்டு இருந்தாங்க, அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வராம போக, தொடர்பில்லாமப் போச்சு. எதுக்கு கேக்குற?"
"இல்லே, எனக்கு நம்ம சொந்தங்களைப் பார்க்கனும் போல இருக்கு"
தூக்கி வாரிப்போட்டது அப்பாவுக்கு? ஏன், எபப்டின்னு கேட்காம, "சரி, உன் விருப்பம் போல செய்?"னாரு.
முதல்ல இருந்த சொந்தத்தை கேட்டேன், அப்பா சொன்ன யாருமே அந்தந்த முகவரியில இல்லே. முகவரியே மாறும்போது கூப்பிடறதுக்கு தொலைபேசி மட்டும் கிடைச்சுருமா என்ன? அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரே சொந்தம், கண்ணுப்பையன் சித்தப்பா மட்டும்தான். அப்பாதான் பேசினாரு. அவுங்க பையனும் புள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்களாம். அவுங்க நம்பரை மட்டும் வாங்கித்தந்தாங்க. என்ன பேசறதுன்னு தெரியாம அவுங்கள கூப்பிட்டேன்.
"நான் ராஜா, செல்லிக்காட்டு பெரியண்ணன் பேரன்..." அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன மொதல்ல அறிமுகம் பண்ணிக்கிட்டேன். சுரத்தில்லாம பதில் வந்துச்சு..சரி அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பேசி வெச்சுட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுசும் அழுது தீர்த்தேன். அவ்வளவுதானா சொந்தம்? இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா? எனக்கு என்ன கொறைச்சல்? இப்படி பல கேள்விங்களோட விடியற்காலையில் தூங்கிப்போனேன். காலையில அப்பா எழுப்பி சேலத்துல இருந்தே ரமேஷ் பேசுறதா சொன்னாரு.
"என்னப்பா,யாரு என்னான்னெ தெரியாம என்ன பேசறது?"
"நேத்து நீ கண்ணுப்பையன் பையனோட பேசுனியே அப்போ மட்டும் தெரிஞ்சுதா?"
சவுக்கடி மாதிரி இருந்துச்சு அப்பா கேட்டது.
ரமேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சேன். எங்கயோ ஒரு நுனி சொந்தம் அது. ரொம்ப்ப ரொம்ப தூரம்னு கூட சொல்ல தெரியாத ஒரு சொந்தம். நல்ல நிலைமையில இருக்கிறான் போல, என்ன விட மூணு வயசு பெரியவன். நிறைய பேசினோம், சம்பந்தமே இல்லாம. சினிமா, அரசியல், சிங்கப்பூர் வாழக்கை, என்னோட பள்ளி, புடிச்ச PS3, அவனுக்கு புடிச்ச சாப்பாடு, மணிக்கணக்குல பேசினோம். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து சொந்தத்தை தேடற நிலைக்கு வந்துட்டோம். அப்பாகிட்டே மூணு மாசம் இந்தியா போறேன்னு சொன்னேன். அப்பாவுக்கோ இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லே. ஆனா என்னோட விருப்பம் ஜெயிச்சது.
இந்தியா....
ரமேஷுக்கு அப்பா இல்லே, அம்மா மட்டும்தான்.மளிகை கடை நடத்துறாங்க. கொஞ்சம் வசதியான வீடு, அவுங்க அம்மா உழைப்பு தெரிஞ்சது. ரமேஷுக்கு காலேஜ் விட்டா கடை. அவன் உலகம் அவ்வளவுதான். கொண்டலாம்பட்டி பை-பாஸ்ல தம் போட்டுட்டு, ஏற்காட்டுல டீ சாப்புடறதுன்னு ஒரு புது வாழ்க்கை. எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.
ரமேஷ் செம கில்லாடி.அவன் மொதல்ல என்னை கூட்டிக்கொண்டு போனது குலதெயவம் கோயிலுக்கு. பண்டாரத்துக்கு தாத்தாவைத் நல்லா தெரிந்திருந்து வைத்திருந்தான்.
"தாத்தா, எங்க சொந்தக்காரவங்க யாராவது போன விசேசத்துக்கு காசு குடுத்தாங்களா?" ரமேஷ்.
"அட யார்ரா இவன் கூறுகெட்டவன். யாரு குடுக்காம போறாங்க? உங்க பெரிய மாமன் கூட, அதாண்டா நாமக்கல்ல லாரி பட்டறை வெச்சிருக்காருல்ல.. அவரு கூட மூணு லட்ச ரூவா குடுத்தாரு"
"அவுங்க போன் நம்பரு குடு தாத்தா. பேசோனும்'
"ஏன் உம்மாமன் உன்கிட்ட பேசறது இல்லையா"
"அதெல்லாம் உனக்கெதுக்கு நம்பர குடு நாம்பேசிக்கிறேன்"
இப்படி ஒவ்வொரு அடையாளத்தையும் பிடித்தோம்.
மொத்தம் 13 மாமா, 8 அத்தை, 7 சித்தப்பாக்கள், அவர்கள் வழி வந்த சொந்தங்கள் என 500 பேருக்குமேலேயே சொந்தங்களின் எண்ணிக்கை வந்தது. ஒருவருக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் என் தந்தை விட்டுவந்த தொலைவு. உறவுகள் தொலைய வெளிநாட்டிற்குச் செல்லும், சொல்லும் எல்லாம் காரணங்களும் எனக்கும் இருந்தது. எல்லார் வீட்டுக்கும் பேசினோம், சென்றோம்.
எடப்பாடி முருகேசன் மாமா, என்னை ரொம்பவே கவர்ந்தார். ஆட்டோ ஒட்டுகிறார், ஊரில் அவருக்குத் தெரியாத மனிதர்களும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. வசதி குறைந்தவரான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 45 வயசு மட்டுமே ஆகியிருந்தது.
"மாமா, நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன்"
"எந்த ஊருக்குடா? சிங்கப்பூருக்கா? பின்னே இங்கேவா இருக்கப்போறே?"
"இல்ல மாமா, கொழிஞ்சிக்காட்டூருக்கு"
ஐந்து நிமிடம் மாமா ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு "உனக்கு யாரத்தெரியும்னு அங்கேப் போற? நம்ம காட்டை எல்லாம் வித்தாச்சு, ஊருக்குள்ள சொந்தம்னு சொல்லிக்க ஒரு பய இல்லே. அப்புறம் என்ன வேலை. வந்தமா நம்ம கூட கொஞ்ச நாள் இருந்தோமான்னு இருப்பியா அத வுட்டுப்புட்டு"
என்னுடைய வழக்கமான இருக்கம், பிடிவாதம் அங்கேயும் வென்றது. மாமா, நான், ரமேஷ் மூவரும் ஒரு நாள் என் கிராமத்துக்கு போக நாள் குறித்தாயிற்று.
அந்த நாள்..
மாமா ஏற்பாடு செய்திருந்த காரில் சென்றோம்.
"ராஜா, எங்கேடா போறது? அங்கே போயி என்னத்த பார்ப்பே? "
"போவோம் மாமா, தாத்தா பாட்டி இருந்த இடத்தை பார்ப்போம்"
"பார்த்து?"
பதில் தெரியாத கேள்வி. பார்த்து என்ன செய்யப் போகிறேன்? நான் படித்த பழைய பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதும், பழைய புத்தகத்தினை பார்க்கும் போதும், என் சிறுவயது நணபனைப் பார்க்கும் போதும் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு வெறுமை வரும். அது என்னவென சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு. சோகமே மிகுதியாய் தோன்றும். அது போலவே இதுவும் இருக்கும்.
"என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற, சுடுகாட்ட பார்க்கவா அங்கே இருந்து வந்த?"
"மாமா, உங்களுக்கு எல்லாம் சொந்தம் பந்தம் கூட இருக்கன்னு ஆசை இல்லியா?"
"அடப்போடா, கல்யாணம் ஆகியிருந்தாலாவது பொண்டாட்டிங்கிற சொந்தம் வந்து இருக்கும். நமக்கு அதுவும் குடுப்பினை இல்லே"
"இல்லே மாமா, ஒரு விசேசம், எழவுன்னா கூட நம்ம சொந்தத்துக்கு தெரியாது. இதுக்கூட சொந்தம் இல்லாட்டா என்னாத்துக்கு?"
"ஏன் சொந்தக்காரன் வந்தாத்தான் பொணம் எரியுமா?" சத்தமாக சிரித்தார். "சொந்தமெல்லாம்ம்ம்... கூட இருந்தாத்தான். உனக்கும் எனக்கும் பொழப்புதான் முக்கியம். ஒரு ஜான் வயித்துக்குன்னு சொல்லிகிட்டு நாம தொலக்கிறது நெறைய அதுல மொதல்ல போறதே சொந்தந்தான்"
காசாங்காடு ஊராட்சி உங்களை வரவேற்கிறது. சிமெண்டினால் ஆனா அழுக்கேறிய பலகை. என் கிராமம். என் தாத்தன் பாட்டி, முப்பாட்டன் வாழ்ந்த இடம், முதன் முறையாய் பொதுவில் அழுதேன். காரணம் தெரியவில்லை.
"டே, இங்க பாரு? இந்த மயித்துக்குதான் வரவேணாம்னு சொன்னாரு மாமா. கேக்குறியா. என்னாத்துக்கு அழுவுற என்ன இருக்குன்னு சொல்லு?"
"என்னமோ தெரியலடா, சொந்தம் இல்லாம வளர்ந்த எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு"
டீ கடை ஒன்று இருந்தது. மாமாதான் போய் விசாரித்து விட்டு வந்தார்.
"சொந்த ஊருல என்ன மாமா விசாரிச்சிகிட்டு"
"இல்லடா, நானும் சின்ன வயசுல இங்கே இருந்துப்போயிட்டேனா. அதான். மொதல்ல ஒத்தயடிதான் இருந்திச்சு. இப்போ ரோடெல்லாம் போட்டிருக்காங்க. அதான் நம்ம காட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். ஊருல இப்போ 10 இல்லைன்னா 15 பேர்தான் இருக்காங்களாம். மீதி எல்லாம் பொழப்ப தேடி நம்மள மாதிரியே வெளியூருக்குப் போயிட்டாங்களாம்"
போற வழியில் ஊரைப் பார்த்தேன் பொட்டல் காடு. ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.
எப்படியோ உச்சி வெயில் நேரத்திற்கு தாத்தா இருந்த வீட்டிற்கு வந்தோம். இடிந்து சிதிலமாகி இருந்தது. கொஞ்சமாய் மண் திட்டு மட்டுமே இருந்தது. மீதி இருக்கும் என் பாரம்பரியம், என் பாரம்பரிய சொத்து, என் பூர்வீகம். மழை நீரிலும், வெய்யிலிலும் கவனிப்பாரற்று கிடந்த வீடு போல. மனதில் எதுவுமே தோன்றவில்லை. ஏதோ பொருட்காட்சிய பார்ப்பது போல் பார்த்துகொண்டிருந்தேன். ரமேஷ் யார் கூடவோ தூரமாய் இருந்த மேட்டின் மீது ஏறி தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். தாத்தாவையும் பாட்டியையும் புதைத்த இடத்தை தேடி அலைந்தோம். கடைசியாய் ஒரு பெரியவர் வழி சொன்னார். அவரும் ஒரு கேள்வி கேட்டார் "என்னாத்துக்கு தேடுறீங்க. ஏதாவது புதையல் கிதையலா?"
சிரித்தபடியே போனோம். புதைத்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளமாய் இருந்தது. ஐந்து நிமிடம் மெளனமாய் இருந்தேன். ரமேஷ் மட்டும் என் கூட இருந்தான். மாமா எங்கோ பார்த்தபடி சிகரெட் பிடித்தபடி இருந்தார். சரி, அவருக்கும் என் தாத்தாவுக்கும் தூரத்து சொந்தம்தானே. ஊரை விட்டு மெயின் ரோட்டிற்கு வரும்பொழுது இருட்டத்தொடங்கி இருந்தது.
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.
Monday, June 22, 2009
என்ன லாடு லபக்கா?
Friday, June 19, 2009
உச்சா- கலப்படம் இல்லாமல்
உச்சா: கல்லூரியில 3 மணிநேரம் பரிட்சை இருக்கும். அதுவும் கோயமுத்தூருல டிசம்பர் மாச குளுருக்கு 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு பரிட்சை எழுதறது எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா? பரிட்சைக்கு நடுவாலயும் எந்திருச்சு போவ முடியாது? பிட் எடுத்துட்டு வந்துருவோமாம்? இப்போ மட்டும் இல்லாமையா இருக்கோம்?. பரிட்சை முடிச்சுட்டு வெளியே வரும்போது "பரிட்சை எப்படிடா மாப்ளே?"ன்னு கேட்கிற பசங்களுக்கு பதில் கூட சொல்லாம ஒரே ஒட்டமா ஓடிப்போயி 'போவோம்'.
"மாப்ளே! இப்படி 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு, அப்புறம் போற சொகம், **க** அடிக்கிறத விட சுகம்டா" அப்படின்னு சொன்னது இன்னமும் ஞாபகத்துக்கு இருக்குங்க.
ஒரு தடவை ஒருத்தரு மூணு மணி நேரம் அடக்கிக்கிட்டு இருந்து 'போயி'ட்டு இருந்தாரு. இன்னொருத்தன் வந்தான், வந்தவன் சும்மா இல்லாம "மாப்ளே மாப்ளே, இங்கே பாருடா"ன்னு பொறத்திக்காண்ட தட்டி தட்டி ஒரே தொந்தரவு வேற. பார்த்தாரு 'அடிச்சுட்டு இருந்தவரு' நிறுத்தவும் முடியல, இவன் தொல்லையும் தாங்க முடியல. ஒரு கையால **அ புடிச்சுகிட்டு, இன்னொரு கையால மூச்சாவ புடிச்சு, பொறத்திக்காண்ட நோண்டுனவன் மூஞ்சியில சலீர்னு அடிச்சாரு. அப்புறம் அவன் ரொம்பநாள் அவன்கிட்ட பேசவே இல்லே.
ஒருத்தருக்கு வந்தாமட்டும் கூட இருக்கிற எல்லாருக்கும் வந்துருதே ஏன்?
சின்ன வயசில எலிமெண்டரி பள்ளிகூடத்துல விதவிதமா வாய்க்கா எல்லாம் போட்டு வுடுவாங்க. விவரம் தெரியாத வயசு.
போன வருசம் உச்சா போவையில இன்னொருத்தன் கூடவே வந்தான். அமெரிக்காவுலதான் தெரியுங்களே, உச்சா போறதுக்கும் ஆய் போறதுக்கு ஒரே ரூம்புதான், சின்னதா சின்னதா தடுப்பு மட்டும் உள்ளே இருக்கும். சோத்தாங்கை பக்கம் இருக்குறாப்ல. வந்தவன் சும்மா இல்லாம மேனஜரை மேல இருந்த கோவத்தை 'போயி'கிட்டே என்கிட்ட சொல்லிட்டு வந்தான். கெட்ட வார்த்தை எல்லாம் போட்டு திட்டு திட்டுன்னு திட்டிட்கிட்டே இருந்தான். ஒரு அஞ்சு நிமுசம் வுடாம திட்டிப்புட்டான். அப்புறம் நிறுத்திப்புட்டான். சாயங்காலம் ஒரு மீட்டிங் வெச்சாரு. நாசுக்கா சொன்னாரு மானேஜரு "ஒன்னுக்கு போனோம்னா.. போறதுக்கு மட்டும் போங்க.. கண்டமேனிக்கு பேசவேணாம்.. உள்ளுக்குள்ள உக்காந்து போயிட்டு.. இருப்பாங்க. அவுங்களுக்கும் கேட்கும்"னாரு. அப்போதான் அவனுக்கு வெளங்குச்சு, அவன் திட்டிகிட்டு இருக்கும் போது, அவரு உள்ளாரு ஒரு தடுப்புக்குள்ள உக்காந்தகிட்டு, போயிட்டு இருந்திருக்காரு. சாக்கிரதை மக்களே அப்புரைசல் நேரத்துல ஆப்பு வெச்சிரப் போறாங்க.
Tuesday, June 16, 2009
Stage Friends- Drama உலகம்
மூணு வாரத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல(இந்த ஊர்லன்னா 50 மைல் தள்ளி, நாக்குத் தள்ள... தள்ள கார் ஓட்டிட்டு போவனும்) Stage Friendsன்னு ஒரு குழு நாடகம் போட்டாங்க. இந்த ஊர்ல என்ன கூட்டம் வரப்போவுதுன்னு போனா திருவிழாவாட்டம் இருந்துச்சுங்க கூட்டம். இந்த நாடகம் போட்டவங்களைப் பத்தி எங்க சொந்தக்காரர் சொன்னது ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னாரு "தமிழுக்கு பாடுபடற சில மக்கள் இருக்காங்க. அவுங்க நாடகம் எல்லாம் போடுவாங்க"ன்னு சொன்னாரு.
கிரேஸி மோகனுடைய நாடகத்துல இவுங்க நடிச்சாங்க. Tenant Commandments. நாடகம் ஆரம்பமே அசத்தல். அதிலேயும் மோகன்னு ஒருத்தர் பின்னி பெடலெடுத்தாரு. அங்கே நிமிந்து உக்காந்தவங்க, பின்னாடி இருக்கவங்க குனிஞ்சு உக்காருடா பனைமரம்னு சொன்னப்புறம்தான் இறங்கினேன். வழக்கமான நாடகத்துல வர்ற இசை மட்டும் மிஸ்ஸிங்(BGM). மத்தபடி அருமை. நாடகத்தோட ஹைலைட்டே ஒரு வசனம் கூட தப்பில்லாம பிசிறு தட்டாம நடிச்சதுதான். யாரும் திரைக்குப் பின்னாடி திரும்பி பார்த்து வசனம் மறந்துருச்சுன்னு சொல்லல. அவ்ளோ ஒத்திகைப் பார்த்திருக்காங்கன்னு தெரியுது. ஒருத்தர் கூட ஒரு தப்பும் பண்ணாம நாடகம் நடிச்சது அவுங்களோட உழைப்பை காட்டுது. அதிலேயும் குரு, சாமியாரா நடிச்ச அம்மா, நாரதமுனி வேசத்துல நடிச்சவரு, வீட்டு முதலாளி(ஆர் எஸ் மனோகரை ஞாபகப் படுத்தாரு) சீனிவாசன், வாடகைக்கு வர்ற குடும்பத்தலைவரு ரமணி , கனீர் குரல்ல நடிச்ச வீடு புரோக்கர் எல்லாரும் பட்டைய கெளப்பிட்டாங்க. நாடகத்துக்காக மொட்டை போடுறவரோட தியாகத்தை என்னான்னு சொல்ல.. அவ்ளோ dedication.
மோஹன்கிறவரு ஒரு வசனம் பேசினது செம நச். அதுவும் கோவை நெல்லை slangல அடுத்தடுத்து பேசின வசனம் எந்தக்காலத்துக்கும் மறக்காது. கொஞ்சம் Current topic சேர்த்துட்டா செமையா இருக்கும். Intervalல பஜ்ஜி, போண்டா, புதினா சட்னின்னு பழக்கப்பட்ட நமக்கு 2 மணிநேரம் ஒரே இடத்துல உக்காந்து கொஞ்சம் கஷ்டம் கூட. ஒரு இடைவேளை தரலாம். பொடிப்பசங்க தொல்லைதான் கொஞ்சம் கஷ்டம். அவுங்கள பார்த்துக்கிறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணினா இன்னும் செளகரியமா இருக்கும்.
ஊரா ஊரா போயி நாடகம் போடுறாங்க. கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வர்ற கலைகள்ல நாடகமும் ஒன்னு (TV Serial எல்லாம் நாடகம்னா ..தா நாடகம் அழிஞ்சே போவலாம்டா). பிராமணர்களோட ராஜ்ஜியம் நாடகம்னு சொல்றது எல்லாம் சென்னை மக்களுக்குத்தான். எங்க ஊர்ல வருசா வருசா நாடகம் போடுவாங்க. இயக்குனர்க்கு 350ரூபாய் குடுப்பாங்க. 2 குயர் நோட்டுல வசனம் எழுத வேண்டியது அவரோட முதல் கடமை, கதை செம மொக்கையாத்தான் இருக்கும். ஆனா நேர்ல பார்கும்போது அது வேற மாதிரி போவும்.
எப்படியோ அமெரிக்காவோ, முனியப்பன் கோவிலோ அவுங்க அவுங்க ரேஞ்சுக்கு நாடகம் போட்டாத்தான் இந்தக் கலை தப்பிக்கும், அப்படி தப்பிக்க வெக்கிற Stage Friendsமக்களுக்கு என்னோட நன்றி. அமெரிக்காவுல நாடகம் போடுறது ரொம்ப சுலபம் இல்லே. 30 மைலாவது ஓட்டிட்டி போயி குளுரோ, வெயிலோ ஒரு இடத்துல சேர்ந்து ஒத்திகை பார்த்து.. விளம்பரம் பண்ணி.. டிக்கெட் வித்து..கூட்டம் வந்து... மேடையேறி ஒழுங்கா வசனம் மறக்காம நடிச்சு.. இத்தனை விசயத்தையும் சரியாப் பண்றாங்க இவுங்க, அதுவும் வெற்றிகரமா. நாடகம் மூலம் வர்ற பணத்தை இலங்கை வாழ் தமிழருக்கு தந்திருக்காங்க. இப்படி பல சேவைகள் இவுங்க செய்யறாங்க. ஒரு கலையா மட்டும் நினைச்சு இதை சிறப்பா செய்யறாங்கன்னு நினைக்கும் போதே இவுங்கள மாதிரி ஒன்னு இருந்தாவேப் போதும் நாடகம் செழிக்கும் நினைச்சுகிட்டேன்.
Tuesday, June 9, 2009
இங்க எவன்டா டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு
அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, நல்ல புருசன், கள்ளப்புருசன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,கொழுந்தியா, மூதாரு, பாட்டி, போட்டி, அக்காப்பொண்ணு, அத்தைப் பொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல,சம்பந்தி, முறை மாமன், முறைப் பொண்ணு, தலைச்சன் புள்ளை, இளைய புள்ளை,மூத்த தாரம், இளையதாரம், தொடுப்பு, ஒன்னு விட்டது, ரெண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்...
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு
சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெயிலியர், எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், பட படப்பு,பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுத்தல், பொறாமை, கிண்டலு, எளப்பம், எச்ச புத்தி, இறுமாப்பு, சகுனி வேலை, சதிச்செயல் ,கோல்மூட்டல், குறுக்குப்புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய், புளுகுமூட்டை, டகுல் வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து,கொள்ளிக்கண்ணு, குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊள உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜக்கடித்தல்,திருட்டுத்தனம், தில்லுமுல்லு, சண்டித்தனம்..
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு
குப்புசாமி, கோவிந்தசாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராசாமி, கண்ணுசாமி, கருப்பசாமி, மலைச்சாமி, பழனிசாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுசாமி, அழகுசாமி, அப்பாசாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவசாமி, சீனுசாமி, சடையசாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரைசாமி, பொன்னுசாமி, அய்யாசாமி, அண்ணசாமி, நல்ல சாமி..
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, கந்தசாமிதான் டாப்பு
[தலைப்புக்கு மன்னிக்கனுங்க,..தோரணை சமீபத்துலதான் பார்த்தேன். அந்த effectலதாங்க வெச்சுட்டேன்]
அப்புறம் கேட்கிறபோது தப்பு ஒன்னும் தெரியலீங்க. ஆனா, தட்டச்சும்போது தெரிஞ்சது. ஒன்னு மட்டும் ரிப்பீட்டு ஆவுது. அது ???? இது வேறையான்னு கேட்கறீங்களோ?
Thursday, June 4, 2009
Tamil Quiz Jun 03 09
இந்த முறை, நாம பலரும் தெனமும் இல்லாட்டி ஒரு முறையாவது சந்திக்க/ அனுபவிக்க/பேசப்படற சங்கதிதாங்க இந்த முறை குவிஜூல முதல் 3 கேள்விங்க, மீதியெல்லாம் வழக்கம்போலதாங்க. சரிங்க நேரா கேள்விகளை பார்ப்போமா?
1) SWITCH ன்னு கேள்விப்பட்டிருப்போம். ஆனா இது இந்திய IT துறைகள்ல ஒரு acronym இருக்கு. அது(?) என்ன?
Ans: Satyam, Wipro. Infosys, TCS, CTS, HCL
2) அப்பா ஒரு முஸ்லிம், அம்மா நாத்திகவாதி. பையன் கிறிஸ்துவன். யாருங்க அந்தப் பையன் அது?
Ans: Barack Obama
3) இவர் இசையமைச்சதை பல முறை கேட்டிருப்போம். அதுதாங்க சன் தொலைக்காட்சியில ஒரு மணிக்கு ஒருதபா போடுவாங்களே "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ்மாலை"ன்னு. சன் டிவியின் அறிமுக(Singature) இசையை கோர்த்தவர் யாரு?
Ans: 'நம்மவர்'Mahesh
4) இடது சாரி கொள்கைகளை கொண்டவர். மாணவரா இருந்தப்பவே புகழடைஞ்சாரு. இவரைத் தீவிரவாதின்னு சொன்னாங்க. கொல்லப்பட்டார். மாணவ்ர்களுக்காக ஒரு இயக்கம் கூட ஆரம்பிச்சாரு. இவரை அடித்தளமா வெச்சு இந்தி, தமிழ்னு திரைப்படம் கூட வந்திருக்கு. நடிச்சவங்க எல்லாம் பெரிய நடிகர்கள். அந்த மாணவன் யாரு?
Ans: George Reddy- http://en.wikipedia.org/wiki/George_Reddy
5) இவர் ஒரு நடிகர், ஒரு வருசத்துல அதிகமான படங்களை நடிச்சவர்னு பேரிருக்கு. ஈரோட்டுல, புரோட்டா கடையில வேலை பார்த்தவர். அம்மா, அப்பா இல்லாதவர். நமக்கு எல்லாம் தெரிஞ்ச அந்த நடிகர் யாரு?
Ans: விக்னேஷ்
Tuesday, June 2, 2009
மகசூல்- ஜூன் - 2
அவுஸ்திரேலியாவுல இந்தியர்களுக்கு எல்லாம் பிரச்சினையாம். அடிக்கிறாங்களாம். ஆமாம் தன் மாநிலத்தை தாண்டின எல்லாத் தமிழனுக்கு நடக்கிறதுதானே. 80 கிமீ தாண்டி இருக்குற பெங்களூருலயே சாத்து சாத்துன்னு சாத்துறாங்க. அங்கே நடக்குறது தெரிஞ்ச விசயம்தான், இன்னிக்கு தண்ணிக்கு வெளியே வந்திருக்கு. இங்கிலாந்துல சில்பாவுக்கு ஆனப் பொறவு தானே தெரிஞ்சது.
தனித்தன்மையை இழந்துவரும் தமிழ்மணம்
தமிழ்மணம்-இது ஒரு சுகந்தம் மாதிரி இருந்துச்சுங்க. அலுவலவத்துக்கு போனோமா தமிழ்மணத்தை திறந்தோமான்னு காலத்தைத் தள்ளிட்டு இருந்தோம். சாப்பாடு மறந்து தமிழ்மணம் பார்த்த காலம் எல்லாம் உண்டு. தமிழ்மணத்த ஒரு தொழில்நுட்பம் சார்ந்த இடமா இல்லாம உணர்வுபூர்வமாத்தான் இன்னிக்கும் பார்க்குறேன். காரணம், அதனால கிடைச்ச உறவுகள். தமிழிஸை பார்த்து சூடு போட்டுகிட்டே போறாங்க. வேணாங்க மக்களே, தமிழ்மணம் தமிழ்மணமாவே இருக்கட்டும்.
கந்தசாமி:
எனக்கு என்னமோ கந்தசாமி பாட்டு எல்லாம் புடிச்சது. 3 நாள் விடுமுறையில கந்தசாமி, முத்திரை, தோரணை பாட்டு மட்டுமே காருல கேட்கிட்டே போனோம், 1000 மைலுதூரம். என்ன ஸ்பானிஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கு. மெக்சிகோன்னு முடிவு பண்ணியாச்சி இல்லே.. ரஜினி மன்னன்ல பாடின மாதிரி இல்லாம கொஞ்சம் சுமார் ரகம், விக்ரம். இத்தோடு நிறுத்திக்குங்க சீயான் சார், வேணாம். அழுதுறுவோம். "கந்தசாமிதான் டாப்பு" பாட்டு செம டாப்பு. கட்டுடைத்தல்ன்னு சொல்ற ரகம். பல்லவி, சரணம்னு இல்லாம சும்மா கலக்கலா ஒரு பாட்டு.
Friday, May 22, 2009
Wednesday, May 20, 2009
vettaikaran song டேய் சொன்னா கோவம் வருதா.. அப்போ டோய் சொல்லுவேன்
ரஜினிய, ஆச்சியும் மன்சூர் அலிகானும் தேர்தல் சம்யத்துல காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுனாங்க. காத்திருந்தாரு ரஜினி. ஆச்சிக்கு அருணாசலத்துலயும், மன்சூருக்கு படையப்பாவுலயும் வேசம் குடுத்தாரு. எப்படி? திட்டின வாயாலயே பாராட்டுற மாதிரி.சந்தோசமா?
மேட்டர் இப்போ என்னான்னா? எம்ஜிஆரு, ரஜினி வரிசையில விஜய் இருக்காரு. அவரும் ஒருதடவை "டேய்ய்ய்ய்ய்ய்"ன்னு ஒரு வேகத்துல கத்திட்டாப்ல. சரி, நாமளும் இவரு சினிமாவுல மன்னாப்பு கேட்பாருன்னு பார்த்தா.. இருங்க..இருங்க..
இன்னொரு மேட்டரையும் இங்கே சொல்லிப்புடுறேன். வேட்டைக்காரன் பாட்டு ரெண்டு நெட்டுல வந்திருச்சு. கேட்காதவங்க கீழே படமா இருக்கு கேட்டுக்கங்க. ஒரு தடவை டேய்'னு சொன்னதுக்கு மக்கள் கொதிச்சீங்கன்னு.. ஒரு நூறு முறையாவது டேய்'னு டோய்'னு சொல்றாப்ல.அதுவுமில்லாம எல்லா வரிகளும் "டா"வுலதான் முடியுது. சரி, நாம தான் கமல் சொல்றாப்ல "டேய்.. டோய்" குடும்பமாச்சே..
எம்ஜிஆர், ரஜினிக்கு அப்புறம் இப்படி நம்மள பழிவாங்குறாரு விஜய். இந்தப் பாட்டக் கேட்டப்புறம் விஜய் ஆண்டனி மேல மரியாதையும் போயிருச்சுங்க. அட டோய்ன்னு சொல்றதுக்கு இல்லீங்க. பாட்டையே கேட்க முடியல. மகா மட்டமா இருக்கு பாட்டுங்க.
Tuesday, May 19, 2009
Monday, May 18, 2009
ஈழம்...இனி யார் தலைவன்?
எதிரிகள் ஆர்ப்பரித்தார்கள்,
கொண்டாடுகிறார்கள்,
இனி என்ன செய்யும் தமிழனம்?
உரிமை கேட்டதற்காக உயிரிழப்புகள்,
நாடு விட்டு நாடு சென்றும்,
அனாதைகளாக்கப்பட்டும்,
உணர்விழந்தவர்களாகவும், ஏன்
மொழியையும் இழந்தவர்களாகவும்.
இனி உயிர் இழப்பு இல்லை,
கொடுமை, சித்திரவதை எல்லாம் இல்லை,
சம்பாதித்த சொத்து, நகை நட்டு ஏதுமில்லை..
ஆனாலும் நம்பிக்கை உண்டு..
வை நண்பா- உன் மீது நம்பிக்கை வை.
உனக்காக போராட தலைவன் இல்லை,
அப்படியே இருந்தாலும் - இனி
இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,
நயவஞ்சக கூட்டம் அப்படி.
போராட்டத்தை மனதில் வை..
இது உழைப்பதற்கான நேரம்..
அடிமையாக்க ஒரு அரசும், இனமும் காத்திருக்கிறது,
உழை.. உழைத்துக்காட்டு. பழையதை மற..
புது வேகம் கொள், நீயே இனி தலைவன்..
மற்றவர்களை உன் சொல் கேட்க வை..
உன்னை வெல்ல யாருமில்லை..
ஒற்றுமை பழகு. இல்லாவிடின் -
துண்டாட நினைக்கும் அரக்கர்கள் உன்னை வெல்வார்கள்.
அடிமையாக்க ஓநாய் கும்பல் காத்திருக்கு
அடிமையாய் மட்டும் இராதே..
மேலே இருக்கிற கவிதை ஒரு உணர்வு வேகத்துல விழுந்ததுங்க. இனி என்ன செய்யலாம்?
- எந்தக் களவாணிகளையும் ஆபத்து நேரத்துல கூப்பிட வேண்டாம். ஒருத்தரும் வரப் போறதில்லை.
- மகிந்தா, அவருக்கு தேவையான உயிர்களை வாங்கிட்டாரு. இனி சம உரிமை தருவாருங்கிற நம்பிக்கை எனக்கில்லை. தந்தா சந்தோசம். இல்லாட்டா அடிமையாகும் தமிழனம்.
- இதுக்கு மறுபடியும் போராட்டம் வருமா? வராது. என் ஜென்மத்துல வராது. காரணம் அதற்கான கட்டமைப்பு இப்போ இல்லை. அதை அமைக்க இன்னும் இரண்டு தலைமுறையாவது ஆகும்.
- ரணம் பட்ட இனத்துக்கு இப்போ தேவை அடிப்படை வசதி. அதாவது உடுத்த உடை, இருக்க இடம், திங்க சோறு. இதுவே இந்த ஜென்மத்தைத் தாண்டிரும்.
- சிங்களவர்களுக்கு இனி இனவெறி அதிகமாகாம இருக்க அரசு பார்த்துக்கனும். ஏன்னா மக்கள் மட்டுமே மக்களை காப்பாத்த முடியும்.
- உலக அரங்குல இது ஒரு உதாரணம். தீவிரவாதம் அழிக்கப் படலாம், உரிமைக்குரல் நசுக்கப்படலாமா? உயிர்கள் இரு பக்கமும் போயிருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான். ஞாபகம் எல்லாருக்கும் இருக்கட்டும், மகிந்தா உங்களுக்கும்தான்.
- பிரபாகரனுக்கு ஏற்பட்ட வலி , ஒரு இயக்கம் உண்டாச்சு. அந்த வலி இப்போ பல்லாயிரம் மக்களுக்கு இருக்கு. ஆலமரம் பல விதைகளை போட்டிருக்கு. கத்தி பல இடங்களை இனி கூர்பார்க்கப்படும். அதை எல்லாம் நசுக்க முடியாது..
- இருந்த இடத்துல மக்கள் போய் மறுபடியும் வாழ் ஆரம்பித்தால் சுகம். உழைக்க தமிழினம் காத்திருக்கும். அவர்கள் இடத்துல சிங்களவர்கள் வந்தால்..கஷ்டம். தமிழினம் கத்தியத்தான் நம்ப வேண்டி இருக்கும்.
- நம்மினத்துக்கு தேவை நம்பிக்கை. அதைக்குடுங்க. தேத்துங்க, சாய்ஞ்சுக்க தோள் குடுங்க. முடிஞ்ச வரைக்கும் பொருளாதார உதவிகள்தான் மக்களுக்குத் தேவை. அதை செய்வோம்.
- வெளிநாட்டுல இருக்கிற மக்களே. சொந்த பந்தத்தைப் பார்க்க வாங்க. செலவு ஆகும்தான். இதுக்கு கூட செலவு செய்யாம வேறெதுக்கு செலவு செய்யப்போறீங்க?
- வாழ்வாதாரம் ஆட்டம் கண்டிருக்கு, மனதளவுல உடைஞ்ச மக்களுக்கு நல்லதா நாலு வார்த்தை தொலைபேசியிலாவது பேசுங்க.
- தமிழினத்துக்கு வாய்ப்பு, உரிமை இரண்டு மட்டும் இப்போதைக்கு இருந்தாப் போதும். தமிழினம் செழித்து வளரும். காரணம் தமிழர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்.. முன்னேறுவாங்க.
- வாய்ப்பு, உரிமை குடுங்க எசமான்.
Thursday, May 14, 2009
ஒபாமாவுக்கு மெயில் போடுறீங்களா?
உசுரு விட்டுட்டு இருக்கிற நம் சொந்தங்களுக்காக:
தனிமடல் அனுப்ப முகவரி: info@barackobama.com
http://www.whitehouse.gov/contact/.
Dear Mr. President,
We thank you for your speech on the White House lawn yesterday. It is important to acknowledge that bloodbath (as the U.N. calls it) is taking place.
The carnage in Sri Lanka goes on. The government forces continue to shell and bomb civilians in what the Sri Lankan government calls the “safe zone.” Hundreds (nobody knows yet just how many) were killed in the “Mother’s Day Massacre,” said the U.N., but medical sources in the “safe zone” say the number was in the thousands. A month ago the U.N. said that 6500 civilians had been killed by the government in the prior 90 days, with another 10,000 injured.
That this is just the latest phase of the Sri Lankan government’s sixty-one year campaign of ethnic cleansing of the Sri Lankan Tamils is obvious to us.
During your presidential campaign—when moderator Tom Brokaw asked during the debate, for instance--you seemed to promise that the only compelling reason for the U.S. to intervene militarily in a foreign conflict (with no security threat to the U.S.) was genocide. Tamils everywhere in the world heard you and believed you.
When you appointed Samantha Power and Susan Rice—both of them familiar with the modern problem of genocide—to positions of visibility and influence, our sprits soared.
Now, we Tamils are dismayed and disappointed that genocide is going on in Sri Lanka and ask why you are doing nothing about it.
Tamils have written to us here at Tamils for Obama not only asking the above question but also suggesting three ways that the U.S. can take effective steps that are short of American military actions. These are:
1. Use American diplomatic influence to isolate Sri Lanka internationally, cutting Sri Lanka off from its arms, trade, and financial support.
2. Persuade the U.N. or regional good actors to serve as peace keepers (or peace bringers), while the U.S. provides moral and logistical support.
3. Remove the “Terrorist” stigma that the U.S. glued to the Tamil Tigers. This was a policy of the Clinton and Bush administrations which gave the Sri Lankan government a moral legitimacy in carrying out the Sri Lankan campaign of genocide. We Tamils consider the Tigers a legitimate resistance group; armed resistance (i.e. the Tigers) did not arise until 1983, when the government’s ant-Tamil ethnic cleansing program was already 35 years old.
Ms. Rice “swore to myself that if I ever faced [mass killings] again, I would come down on the side of dramatic action, going down in flames if that was required,” as she was quoted in The Atlantic Monthly in 2001. We have to agree. Dramatic action is required, and the mass killing in Sri Lanka justifies it.
Thank you.
Sincerely,
உங்க பேரை இங்கே போட்டுக்குங்க.
இருக்கிற ஒன்னு ரெண்டு உசுரையாவது காப்பாத்தின பொருமை சேரட்டும்..
Thursday, April 23, 2009
அமெரிக்கா-1
பழைய சோத்த வெச்சே பல வருசம் வாழ்க்கைய ஓட்டி இருப்பாங்க. இங்க வந்தவுடனே, சில பேரு விடற பீட்டரு தாங்க முடியாதுங்க. இதுல அம்மணிங்க நம்மள விட சதவீதம் சாஸ்தியாய் இருப்பாங்க. அவுங்களும் அவுங்க உடையும் சீக்கிரமே
மாறிப்போயிரும். இதுல அவுங்களுக்குத்தான் கதவு, சன்னல் எல்லாம் வெச்சு துணி மணிங்க கெடைக்கும். நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.
அட, என்னத்தையோ சொல்ல வந்து எங்கே வந்து இருக்கு பாருங்க,. இங்கன எப்படி வார்றதுன்னு கேட்காதீங்க. சினிமாவுல பார்த்த இடத்தை எல்லாம் நேருல பார்க்கும்போது இருக்க பிரமிப்பு சொல்லி மாளாதுங்க. அது ஊட்டி 7 மைலாவாட்டும், விளக்கு புடிச்சுட்டு நிக்கிற சுதந்திர தேவி சிலையாவட்டும்.
இப்ப இங்க இருக்கிற நெலைமையில எல்லாமே பயமாத்தான் இருக்கு. எப்ப வேலை போவுமோன்னு தொடை நடுங்க வேண்டிகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. அலுவலகத்துக்கு உள்ளே போவும்போது தேய்க்கிற அட்டை மட்டும் வேலை செஞ்சுட்டாவே அன்னிக்கு தப்பிச்சேன்னு இருக்கு. இந்தியாவிலேயும் இதே நிலமைதான். பொட்டி தட்டுற மக்களுக்கு ஏழரை போல. வந்து இறங்கினப்புறம் திருப்பி அனுப்புறாங்க, H1bல இருக்கிறவங்களுக்கு வேலை தர்றது இல்லே, விசா நீட்டிக்கிறது இல்லே இப்படி பல சேதி தெனமும் கேட்டுக்கிட்டே இருக்கோம். கஷ்டம் எல்லா இடத்திலேயும்தாங்க.
சரிங்க, இப்படி பல முகம் கொண்ட அமெரிக்காவப் பத்திதாங்க எழுதலாம்னு இருக்கேன். அட இப்போ அமெரிக்கன்னாவே வட அமெரிக்காதானுங்களே. என்ன நமக்கு தெரிஞ்ச விசயத்தையும் கொஞ்சம் தேடியும்தான் தொடராக்கபோறேன். சின்னப்பையன்னு பெரியவங்க கோச்சுக்காம தப்பை சரியாச் சொல்லுங்க.
கொசுறு: போன வாரம் ஒரு காலை நேரத்துல ”பழைய சோறும், தொட்டுக்க கோங்குரா தொக்கும் சாப்பிட்டேன்“னு சொன்னேன், ரெண்டு பேரு நக்கலா, ”அங்கே எல்லாம் பழைய சோறு சாப்பிடுவாங்களா?”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க? இங்கே பழைய சோறு திங்கறது அவ்ளோ கஷ்டமா?
Wednesday, April 1, 2009
ஒரு வெளம்பரந்தான்
இதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா? இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா?
நன்றி பரசு:
இதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.
Monday, March 16, 2009
டேய்.... பேசிக்கிட்டிருகோம்ல
மேலே இருக்குற படம் செம காமெடியா இருக்குமே? இவரு Magic Manஆம். நல்லாத்தான் படம் பண்ணிட்டு இருந்தீங்க பிரபு.
வெவரமா பாக்கனுமா இங்கே போங்க
விஜய நல்ல பையன், அமைதியானப் பையன்னே நான் இது வரைக்கும் நினைச்சிட்டுகிட்டு இருந்தேங்க. இப்படி சில நெச முகம் வந்தாத்தான் தெரியுது... நேத்து வரைக்கும் விஜய் மேல வெச்சிருந்த மரியாதையே போயிருச்சுங்க. என்னமோ. சாரிங்க விஜய். விரக்தியோட எல்லையோ என்னமோ, பாத்து சூதானமா இருந்துக்கோங்க.. அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.. படம் போனா வரும் ஆனா இமேஜு?
Thursday, February 26, 2009
ஆஸ்கார் வாங்கினா மட்டும் என்ன?
பின்பு...
Red Carpet, Lime Light, SDM One of the Hero, US visit இருந்தாலும்.. வீடு இதுதானுங்களே. ஆட்டம் முடிஞ்சு போச்சு, வேலையப் பாருடா செல்லக்குட்டி.. :(
Azharuddin Ismail, who played young Salim in the Oscar-winning film “Slumdog Millionaire,” sat in his modest Mumbai home Thursday after returning from the U.S. (Arko Datta/Reuters)
நன்றி: WSJ, The Hindu(X)
Tuesday, February 17, 2009
குருவிகள்: 6 வார்த்தைகளில் கதை/கவிதை
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி லிங்கன் ஒரு மேட்டரைச் சொன்னாரு. அதாவது 6 வார்த்தைகளில் கதை எழுதனும். அது கவிதை/ஹைக்கூவா மாறிடுச்சுங்க. சுவாரஸியமா போகுது ட்விட்டர் இப்போ. வெட்டியா பொழுதப் போக்கினாலும்..6 வார்த்தை கவிதைகள்ல கலக்கிட்டாங்க. இப்ப், பதிவுகளை விட ட்விட்டர் செம ஜோராப்போவுதுங்க. 6 வரிகள்ல கவிதை எழுதலாம் 6 வார்த்தைகள்ல?
6 வார்த்தைல கவிதை/கதை/ஹைக்கூ
இளா: தெருவில் பிச்சைக்காரன், ஒரு ரூபாய் கூடவா இல்லை?
ajinomotto : பேரன் பேத்தி கண்ட உனக்கு சின்ன வயசு ஜோடியை மனசு தேடினால் நீ சூப்பர் ஸ்டார்...
gchandra : நீ இப்போ என்ன செய்யறே?, டிவிட்டரில் நான்.
ajinomotto : சினிமா வாய்ப்பு.சோப்பு.உழைப்பு.3 ஹிட்டு.பஞ்சு டயலாக்கு.நாளைய தமிழக முதல்வர்
பெனாத்தலார் : கடன்காரன் தொல்லை; கவலை இல்லை! மந்திரி பிள்ளை!
பெனாத்தலார் : தலால்தெருவின் பிச்சைக்காரன் காரை வெறிக்கிறான். நாளைக்கு நீ
இலவசக் கொத்தனர் : இணையம் இல்லை. விண்டோஸ் திறந்தேன். உலகம் அழகு!
பெனாத்தலார் : அவனைக் காப்பியடித்து கதை படைத்தேனாம். அவனுமா படித்தான் ஆங்கிலம்?...
இளா : பதவியேற்றபின் நடிக்க வேண்டியிருக்கு, நடிகனாவே இருந்திருக்கலாமே!...
பெனாத்தலார் : அட்டுபிகர். அழகாய்த் தெரிந்தாள். ரெண்டுநாள் ரயிலில் இலுப்பைப்பூ!...
இளா : இருட்டு, தெரியவில்லை அடுத்த வீட்டு ஃபிகர்.
இலவசக் கொத்தனர் : பாழாப்போன பத்மஸ்ரீ. பாவம் விவேக். சிரிக்கிறாரு வடிவேலு!...
இளா : தமிழில் கவிதை எழுதப் பழகனும், வரி இல்லாவிடினும்.
இலவசக் கொத்தனர் : தொலைபேசி, செல்பேசி, இணையம் இருந்தாலும் கம்யூனிகேஷன் கேப்!...
இலவசக் கொத்தனர் : பையனோடு நட்சத்திரம் பார்த்து நாளானது. நன்றி ஆற்காட்டார்!..
இளா : இப்போது டிவிட்டரிலும் குட்டிக் கதைகள்!
gchandra : யாருக்கும் வேலை இல்லை, டிவிட்டரில் குட்டி கதைகள்
இளா : பினாத்தல் இலவசம்- டிவிட்டரில்
பெனாத்தலார் : கும்மிருட்டு, புதிதாய்த் தெரியுது பக்கத்துவீடு. தாங்க்ஸ் ஆற்காட்டார்!..
இளா : மின்சாரம் இல்லா உலகம், பளிச்சென்று உறவுகள்
gchandra : குருவி பறந்துபோச்சு. வில்லு உடைஞ்சுபோச்சு. வேட்டைக்காரன் ஐயோ பாவம் !!...
இலவசக் கொத்தனர் : ஆறு வார்த்தைக் கதையா? காதலியின் கண்ணுக்குள் பாரு!
Wednesday, February 11, 2009
ராம சேனா செஞ்சாதான் தப்பா?
சூர்யா: கலெக்டர் சார், நீங்க ஒரு கோர்ட் வெச்சி, இது சரி, இது தப்பு, இது பண்ணாத அப்படின்னு சொன்னா சரி, நாங்க சொன்னா தப்பா? ஏன்னா உங்க கிட்ட அதிகாரம். நாங்க படிக்காதவங்க. (படம் தளபதி)
மக்களிடமிருந்து விசில் பறக்கிறது. இது சினிமா.
காட்சி-2(உண்மைச் சம்பவம்)
இடம் : மருதமலை மேல் ஒரு parking.
கல்லூரி பெண்கள்(போலிருக்கும் ஒரு 5/6 பேர்) ஜீப்பின் பின்னாடி கண்ணீருடன் அமர்ந்திருக்க, ஆண்கள் எல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
காரணம்- ”அவுங்க எல்லாம் எதுக்கு சார் மருதமலைக்கு வராங்க? மலையில இருக்கிற ம்ரத்துக்கு கீழ ஒதுங்கி......... க்காகதான். அவுங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாதான் திருந்துவாங்க. படிக்கிற வயசுல என்ன அ**ப்பு வேண்டிக்கிடக்கு?”
விசாரித்துக் கொண்டிருந்த நான் ”பாவம் சார், விட்டுருங்க தெரியாம செஞ்சிட்டாங்க” பரிதாபத்துடன் நான் வேண்டிகொண்டேன்
காட்சி-3
மெரினா கடற்கறை(ரை) சென்னை, மற்றும் பூங்காகளில் ‘சேரும்’ ஜோடிகளைப் பிரிக்க அரசு வாய்மொழி உத்தரவு.
காவல்துறை: ..........தா, இதுக்குதான் நாங்க போலீஸ் ஆனோமா?
மக்கள்: இப்படித்தான் செய்யனும், அங்கே என்ன லவ்வு வேண்டிக்கிடக்கு?
காட்சி -4
செய்தி: மங்களூரில் இராம சேனா பப்’ல் அடிதடி. ஆண் பெண் பாராமல் தாக்கினார்கள்.
மக்கள்: இவன் யாரு பபுக்குள்ள போயி அடிக்க?
என்ன கொடுமை இது சரவணண் - மறுபடியும் மொதோ காட்சிய படிச்சுப்பாருங்க.
Sunday, February 1, 2009
தலை குனிந்து கொள்ளுங்கள் தமிழர்களே
பார்த்து முடிச்சுட்டா தலைப்பை மாத்திப் படிங்க.
தலை குனிந்து கொள்ளுங்கள் ”தமிழகத்து“ தமிழர்களே. சனம், நட்பு, சொந்தம், பந்தம், குடும்பம் எல்லாத்தையும் விட்டு நம்மை நம்பி வர்றவஙக்ளுக்கு ஒரு வேலை கூட குடுக்க முடியாதா? அரசாங்கம்தான் செய்யாது, வேலை குடுத்துட்டு இருக்கிற முதலாளிங்களுமா?
Tuesday, January 13, 2009
துணுக்ஸ்
ஏன்?
நாம வேலை பார்குற மாதிரி ஏமாத்தினோம். அவுங்க லாபம் வந்த மாதிரி ஏமாத்திட்டாங்க. அது தப்பா?
உன்ன அமெரிக்க ஜனாதிபதின்னு சொன்னதுக்கு ஏண்டா அவனை அடிக்கிற?
என்ன செருப்பால அடிப்பேங்கிறததாண்டா அவன் அப்படிச் சொல்றான்..
என்னாது உங்க MD அறை ஒரு கோயில் மாதிரியா?
ஆமாண்டா, செருப்பால எவனும் அடிச்சிற கூடாதுன்னுதான் வெளியிலே ஹூவை கழட்டி வெச்சிட்டுதான் போவனும்.
இந்த விளம்பரமே தப்பு மச்சி..
ஏன்?
விஜய் 'நடிக்கும்' படம்னு இல்லே போட்டிருக்கு.
திருமங்கலத்துல டெபாசிட்டே போயிருச்சுங்களே, நம்ம தொண்டர்களை எப்படிச் சமாதானப் படுத்துவீங்க?
நமக்கு இலக்கு 2011தான், இது 2009ன்னு சமாளிச்சுடலாம்.
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...