Monday, May 18, 2009

ஈழம்...இனி யார் தலைவன்?

வெற்றி!
எதிரிகள் ஆர்ப்பரித்தார்கள்,
கொண்டாடுகிறார்கள்,
இனி என்ன செய்யும் தமிழனம்?

உரிமை கேட்டதற்காக உயிரிழப்புகள்,
நாடு விட்டு நாடு சென்றும்,
அனாதைகளாக்கப்பட்டும்,
உணர்விழந்தவர்களாகவும், ஏன்
மொழியையும் இழந்தவர்களாகவும்.

இனி உயிர் இழப்பு இல்லை,
கொடுமை, சித்திரவதை எல்லாம் இல்லை,
சம்பாதித்த சொத்து, நகை நட்டு ஏதுமில்லை..
ஆனாலும் நம்பிக்கை உண்டு..
வை நண்பா- உன் மீது நம்பிக்கை வை.

உனக்காக போராட தலைவன் இல்லை,
அப்படியே இருந்தாலும் - இனி
இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,
நயவஞ்சக கூட்டம் அப்படி.
போராட்டத்தை மனதில் வை..

இது உழைப்பதற்கான நேரம்..
அடிமையாக்க ஒரு அரசும், இனமும் காத்திருக்கிறது,
உழை.. உழைத்துக்காட்டு. பழையதை மற..
புது வேகம் கொள், நீயே இனி தலைவன்..
மற்றவர்களை உன் சொல் கேட்க வை..
உன்னை வெல்ல யாருமில்லை..
ஒற்றுமை பழகு. இல்லாவிடின் -
துண்டாட நினைக்கும் அரக்கர்கள் உன்னை வெல்வார்கள்.

அடிமையாக்க ஓநாய் கும்பல் காத்திருக்கு
அடிமையாய் மட்டும் இராதே..

மேலே இருக்கிற கவிதை ஒரு உணர்வு வேகத்துல விழுந்ததுங்க. இனி என்ன செய்யலாம்?

 • எந்தக் களவாணிகளையும் ஆபத்து நேரத்துல கூப்பிட வேண்டாம். ஒருத்தரும் வரப் போறதில்லை.
 • மகிந்தா, அவருக்கு தேவையான உயிர்களை வாங்கிட்டாரு. இனி சம உரிமை தருவாருங்கிற நம்பிக்கை எனக்கில்லை. தந்தா சந்தோசம். இல்லாட்டா அடிமையாகும் தமிழனம்.
 • இதுக்கு மறுபடியும் போராட்டம் வருமா? வராது. என் ஜென்மத்துல வராது. காரணம் அதற்கான கட்டமைப்பு இப்போ இல்லை. அதை அமைக்க இன்னும் இரண்டு தலைமுறையாவது ஆகும்.
 • ரணம் பட்ட இனத்துக்கு இப்போ தேவை அடிப்படை வசதி. அதாவது உடுத்த உடை, இருக்க இடம், திங்க சோறு. இதுவே இந்த ஜென்மத்தைத் தாண்டிரும்.
 • சிங்களவர்களுக்கு இனி இனவெறி அதிகமாகாம இருக்க அரசு பார்த்துக்கனும். ஏன்னா மக்கள் மட்டுமே மக்களை காப்பாத்த முடியும்.
 • உலக அரங்குல இது ஒரு உதாரணம். தீவிரவாதம் அழிக்கப் படலாம், உரிமைக்குரல் நசுக்கப்படலாமா? உயிர்கள் இரு பக்கமும் போயிருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான். ஞாபகம் எல்லாருக்கும் இருக்கட்டும், மகிந்தா உங்களுக்கும்தான்.
 • பிரபாகரனுக்கு ஏற்பட்ட வலி , ஒரு இயக்கம் உண்டாச்சு. அந்த வலி இப்போ பல்லாயிரம் மக்களுக்கு இருக்கு. ஆலமரம் பல விதைகளை போட்டிருக்கு. கத்தி பல இடங்களை இனி கூர்பார்க்கப்படும். அதை எல்லாம் நசுக்க முடியாது..
 • இருந்த இடத்துல மக்கள் போய் மறுபடியும் வாழ் ஆரம்பித்தால் சுகம். உழைக்க தமிழினம் காத்திருக்கும். அவர்கள் இடத்துல சிங்களவர்கள் வந்தால்..கஷ்டம். தமிழினம் கத்தியத்தான் நம்ப வேண்டி இருக்கும்.
 • நம்மினத்துக்கு தேவை நம்பிக்கை. அதைக்குடுங்க. தேத்துங்க, சாய்ஞ்சுக்க தோள் குடுங்க. முடிஞ்ச வரைக்கும் பொருளாதார உதவிகள்தான் மக்களுக்குத் தேவை. அதை செய்வோம்.
 • வெளிநாட்டுல இருக்கிற மக்களே. சொந்த பந்தத்தைப் பார்க்க வாங்க. செலவு ஆகும்தான். இதுக்கு கூட செலவு செய்யாம வேறெதுக்கு செலவு செய்யப்போறீங்க?
 • வாழ்வாதாரம் ஆட்டம் கண்டிருக்கு, மனதளவுல உடைஞ்ச மக்களுக்கு நல்லதா நாலு வார்த்தை தொலைபேசியிலாவது பேசுங்க.
 • தமிழினத்துக்கு வாய்ப்பு, உரிமை இரண்டு மட்டும் இப்போதைக்கு இருந்தாப் போதும். தமிழினம் செழித்து வளரும். காரணம் தமிழர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்.. முன்னேறுவாங்க.
 • வாய்ப்பு, உரிமை குடுங்க எசமான்.

13 comments:

 1. இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன்
  தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான், என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான், தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம்.

  ReplyDelete
 2. தாமிரபரணி.. இது திட்டுவதறகான காலமில்லை. ஜப்பான் திட்டவில்லை, யூதர்கள் சபிக்கவில்லை. வாழ்ந்து காட்டினார்கள். யாருக்கு இல்லை கோபம்? ஏதாவது செய்ய முடிந்ததா? வெத்து பேச்சு இனி தேவையே இல்லை. உழைப்பதிலும், உதவி செய்வதிலும்தான் இருக்கு தமிழினம்.

  ReplyDelete
 3. உமிழ்நீர் கசக்கத்தான் செய்யும். விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

  ReplyDelete
 4. அவசர படாதே நண்பா...

  அந்த செய்தி நம்பும் படியாக இல்லை!!

  http://wethepeopleindia.blogspot.com/2009/05/blog-post_18.html

  ReplyDelete
 5. //உனக்காக போராட தலைவன் இல்லை,
  அப்படியே இருந்தாலும் - இனி
  இரண்டு தலைமுறைக்கு ஏதும் செய்ய இயலாது,//

  !!!!!!

  ReplyDelete
 6. // இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன் //

  சந்தோஷம். எதுக்கு சொல்லணும்? அப்படி சொல்ல சொல்லி யாராவது துப்பாக்கி முனையில மிரட்டுறாங்களா?

  // தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான் // அப்படியெல்லாம் இல்ல.. தமிழ்நாட்டு தமிழன் சக தமிழன்கிட்ட தான் அடிமைப்பட்டுள்ளான்.. அந்த ஆண்டான் தமிழன் வடநாட்டவன்கிட்ட அடிமைப்பட்ட மாதிரி தெரிவது ஒரு டகால்ட்டிதான்..

  ஈழத்தமிழனோ பாதிப்பேர் சிங்களவன்கிட்டயும், பாதிப்பேர் புலிகள்கிட்டயும் அடிமைப்பட்டுள்ளார்கள்...

  // என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான் // அப்ப கருணாந்தி தமிழன் இல்லியா?

  // தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம் // இது நல்லா இருக்கே கத.. தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ தனி நாடு மாதிரி பேசற? உனக்கு பிடிக்கலையின்னா நீ எங்கியாவது ”தமிழன்” ஆச்சி புரியும் நாடா பாத்து போ..

  ReplyDelete
 7. என் கையாலாகதனத்தை நினைச்சு எனக்கு வெக்கமா இருக்கு

  அருமையான வரிகள்..

  பறை போல அறையுது

  ReplyDelete
 8. முகமூடி--> இது ஈழத்து நண்பன் என்றால் கண்டிப்பாக இது உணர்வுகளின் குமுறல். தமிழன் என்றால் ஃப்ரியாவுட மாமே

  ReplyDelete
 9. Tamils should leave sri lanka and come to TamilNadu all together. This will solve all future issues and problems they are going to face(like ethnic cleansing)

  ReplyDelete
 10. Better rest of tamils in srilanka move to TamilNadu(their real homeland) than wait for ethnic cleansing to start.

  ReplyDelete
 11. //****// இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன் //

  சந்தோஷம். எதுக்கு சொல்லணும்? அப்படி சொல்ல சொல்லி யாராவது துப்பாக்கி முனையில மிரட்டுறாங்களா?
  ***//
  துப்பாக்கில இல்ல, பிளாக்கல வந்து மிரட்டுறாங்க
  இலங்கை தமிழர்கள் அங்கு கொத்து கொத்தாக செத்து மடிந்துகொண்டிருந்த வேளையில் அதை தடுத்து நிறுத்தாமல் மேலும் அவர்களை கொல்ல ஆயுத உதவி செய்தது இந்தியா,
  நம் மினவர்கள் வழி தவறி இலங்கை எல்லைக்கு பக்கதில் சென்றாலே துப்பாக்கி சூடு, தமிழகத்துக்கு தண்ணிர் தர மறுக்கின்றன பக்கத்து மாநிலங்கள். இப்ப நன் உன்னிடம் கேட்கிறேன் தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ நாங்க தனி நாடு மாதிரி எங்க உணர்வுகளை புரிஞ்சிக்காம இருந்தா என்ன அர்த்தம்?
  //***// என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான் // அப்ப கருணாந்தி தமிழன் இல்லியா?
  // தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான் // அப்படியெல்லாம் இல்ல..
  வடநாட்டவன்கிட்ட அடிமைப்பட்ட மாதிரி தெரிவது ஒரு டகால்ட்டிதான் *** //
  ஆமா கலைஞர் தமிழர்தான், பள்ளிகூடங்களில் தமிழை கட்டாய பாடமாக்க ஒரு அரசாங்கம் படும் திண்டாட்டம் தெரிகிறது அதற்கும் தில்லியிலிருந்து அனுமதி வேண்டும் தெரியுமா
  இங்கு தமிழகத்தில் கொண்டு வரபடும் அனைத்து திட்டத்திருக்கும்(>80%) தில்லியின் அனுமதி வேண்டும் சாதாரண தமிழ் படத்திற்கு சான்றிதல்கூட அவர்களிடம் தான் பெறவேண்டும், இதை ஆதிக்கம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது
  அவர்கள் கொண்டும் வரும் பல திட்டங்களுக்கும் தமிழக செயற்குளுவின் அனுமதி தேவைபடுகிறது என்றால் நிங்கள் சொல்லும் வாதம் சரியாக இருக்கும்,
  //***// தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம் // இது நல்லா இருக்கே கத.. தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ தனி நாடு மாதிரி பேசற? உனக்கு பிடிக்கலையின்னா நீ எங்கியாவது ”தமிழன்” ஆச்சி புரியும் நாடா பாத்து போ.. ***//
  கொஞ்சம் காட்டமாக எழுதியதிற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்
  முகமூடி அவர்களே இதனால் உங்கள் மனது காயபட்டிருந்தால் மன்னிக்கவும். நான் யாரையும் காயபடுத்துவதற்காக இதை எழுதவில்லை இது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று இப்படி நம் இனம் இன்னொறு இனத்தால் கட்டுன்டு கிடந்தால் வருங்கால தமிழ் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து குனி குறுகி வாழ நேரிடும், இந்தியா என்பது இப்ப வந்த உறவு ஆனால் தமிழ் பல ஆயிரவருடங்களாக நம்மிடம் இருந்து வருகிறது

  ReplyDelete
 12. //***தாமிரபரணி.. இது திட்டுவதறகான காலமில்லை. ஜப்பான் திட்டவில்லை, யூதர்கள் சபிக்கவில்லை. வாழ்ந்து காட்டினார்கள். யாருக்கு இல்லை கோபம்? ஏதாவது செய்ய முடிந்ததா? வெத்து பேச்சு இனி தேவையே இல்லை. உழைப்பதிலும், உதவி செய்வதிலும்தான் இருக்கு தமிழினம் ***//
  ஐயா திட்டுதலுக்கு மன்னிக்கனும், நான் பல முறை பண உதிவியை தமிழின மகளுக்கு செய்துள்ளேன் நான் மட்டும் அல்ல பல மக்களும் செய்துள்ளார்கள், அதையும் மிறி நாம் இதாவது செய்தாக வேண்டும் என்று மனம் துடிக்கிறது, திங்கள் - வெள்ளி அலுவலகம் அதை விடுத்து சனி, ஞாயிறு எதாவது செய்யாலம் என்றால் சரியான வழிகாட்டியில்லை, தமிழுக்கும் தமிழர்களுக்கும் உதவும் இயக்கங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)