Wednesday, February 11, 2009

ராம சேனா செஞ்சாதான் தப்பா?

காட்சி-1
சூர்யா: கலெக்டர் சார், நீங்க ஒரு கோர்ட் வெச்சி, இது சரி, இது தப்பு, இது பண்ணாத அப்படின்னு சொன்னா சரி, நாங்க சொன்னா தப்பா? ஏன்னா உங்க கிட்ட அதிகாரம். நாங்க படிக்காதவங்க. (படம் தளபதி)

மக்களிடமிருந்து விசில் பறக்கிறது. இது சினிமா.

காட்சி-2(உண்மைச் சம்பவம்)

இடம் : மருதமலை மேல் ஒரு parking.

கல்லூரி பெண்கள்(போலிருக்கும் ஒரு 5/6 பேர்) ஜீப்பின் பின்னாடி கண்ணீருடன் அமர்ந்திருக்க, ஆண்கள் எல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
காரணம்- ”அவுங்க எல்லாம் எதுக்கு சார் மருதமலைக்கு வராங்க? மலையில இருக்கிற ம்ரத்துக்கு கீழ ஒதுங்கி......... க்காகதான். அவுங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாதான் திருந்துவாங்க. படிக்கிற வயசுல என்ன அ**ப்பு வேண்டிக்கிடக்கு?”

விசாரித்துக் கொண்டிருந்த நான் ”பாவம் சார், விட்டுருங்க தெரியாம செஞ்சிட்டாங்க” பரிதாபத்துடன் நான் வேண்டிகொண்டேன்

காட்சி-3
மெரினா கடற்கறை(ரை) சென்னை, மற்றும் பூங்காகளில் ‘சேரும்’ ஜோடிகளைப் பிரிக்க அரசு வாய்மொழி உத்தரவு.
காவல்துறை: ..........தா, இதுக்குதான் நாங்க போலீஸ் ஆனோமா?

மக்கள்: இப்படித்தான் செய்யனும், அங்கே என்ன லவ்வு வேண்டிக்கிடக்கு?

காட்சி -4

செய்தி: மங்களூரில் இராம சேனா பப்’ல் அடிதடி. ஆண் பெண் பாராமல் தாக்கினார்கள்.

மக்கள்: இவன் யாரு பபுக்குள்ள போயி அடிக்க?

என்ன கொடுமை இது சரவணண் - மறுபடியும் மொதோ காட்சிய படிச்சுப்பாருங்க.

28 comments:

 1. இளா, உங்களுக்காக

  http://maruthanayagam.blogspot.com/2009/01/pub.html

  இதையும் தளபதி மாதிரி ஏதோ சினிமா காட்சி என்று நீங்கள் கை தட்டி இரசித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல

  ReplyDelete
 2. http://www.parisalkaaran.com/2009/02/blog-post_11.html படித்தீர்களா

  ReplyDelete
 3. மருதமலை மாமுனியே முருகைய்யா!

  மருதமலைல மாட்டிகிட்ட ஆண்களா..

  ;-)

  ReplyDelete
 4. மருது,

  Page not found
  Sorry, the page you were looking for in the blog ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் does not exist.

  சரியாத்தான் இருக்கா?

  ReplyDelete
 5. மருது, மறுபடியும் சரியா தலைப்பைப் படிங்க. நான் கூட தாஜ்க்கு போயிருந்தா என்னையும்தான் போலீஸ் விசாரிச்சுருக்கும், அதுக்கு நான் குற்றவாளின்னு சொல்லிருவீங்களா? விசாரணை வேற முடிவு வேற.

  ReplyDelete
 6. //Blogger ILA said...

  மருது, மறுபடியும் சரியா தலைப்பைப் படிங்க. நான் கூட தாஜ்க்கு போயிருந்தா என்னையும்தான் போலீஸ் விசாரிச்சுருக்கும், அதுக்கு நான் குற்றவாளின்னு சொல்லிருவீங்களா? விசாரணை வேற முடிவு வேற.//

  அப்போ தாலிபான் செஞ்சா தான் தப்பா அப்படி கூட கேட்கலாம்

  ReplyDelete
 7. ஓஹ், தாலிபான் இப்படி மங்களூர்ல பண்ணி இருந்தா நீங்க சொல்ற மாதிரிதான் தலைப்பு வெச்சிருப்பேன். இதுல என்ன சந்தேகம். எனக்கு மதம் முக்கியமில்லீங்க. காரண/காரியம்தான் முக்கியம்

  ReplyDelete
 8. //ILA said...

  ஓஹ், தாலிபான் இப்படி மங்களூர்ல பண்ணி இருந்தா நீங்க சொல்ற மாதிரிதான் தலைப்பு வெச்சிருப்பேன். இதுல என்ன சந்தேகம். எனக்கு மதம் முக்கியமில்லீங்க. காரண/காரியம்தான் முக்கியம்//

  பப் கல்ச்சர் எவ்வளவு தவறோ அதே மாதிரி தான் இத்தகைய பொறுக்கித்தனங்களும். இதற்கெல்லாம் வக்காலத்து வேற

  ReplyDelete
 9. மருது, தப்பாப் புரிஞ்சிக்கிட்டு பேசுறீங்க. போலீஸ் தப்பு பண்ணினதை ஏன் கேட்கலைங்கிறதுதான் பதிவின் சாராம்சமே. அதிகாரம் இருக்கும் போது செஞ்சா மட்டும் மட்டும் சரியா? இப்போ ஏன் மதச்சாயம் பூசுறாங்கன்னுதான் கேள்வியே. அதிகாரம் இருந்தா செய்யலாமா? அப்போ ஏன் கேள்வி கேட்கலை? நீங்க ராமசேனா எதிர்க்கிறீங்க காரணத்துக்காக நான் ஆதரிக்கிறேன்னு நீங்க நெனச்சுக்கிட்டா .. ஹ்ஹாஹஹ்ஹ:))

  ReplyDelete
 10. இப்போ பொறுக்கித்தனம் பண்ணுபவர்கள் மத அடையாளத்தோடு தானே பண்ணுகிறார்கள், அது தான் அவர்களின் நோக்கமும்

  ReplyDelete
 11. மொதல்ல செய்திய நல்லா படிங்க இளா. ராம் சேனா என்பது என்னவோ மக்களுக்காக அரும்பாடுபடுகிற தொண்டு இயக்கம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் போல

  ReplyDelete
 12. மருது, கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்து என்ன சொல்ல வந்தேன்னு சொல்றேன். கொஞ்சம் பெருசா தட்டச்சனும். நீங்க சொல்ற கருத்தை கண்டிப்பா ஏத்துக்கிறேன். எதைச் சொல்றதுக்கும் இப்போ மதத்தை கருவியா பயன்படுத்திக்கிறாங்க. ஒன்னு ஜிகாத், இல்லாட்டி காவி

  ReplyDelete
 13. நீங்க நல்லவரா? கெட்டவரா?

  ReplyDelete
 14. //எதைச் சொல்றதுக்கும் இப்போ மதத்தை கருவியா பயன்படுத்திக்கிறாங்க. ஒன்னு ஜிகாத், இல்லாட்டி காவி//

  நீங்க இதை தாக்கி பதிவு போடு இருக்கலாம். உங்கள் பதிவு எதிர்மறையான விளைவை ஏற்படுத்டுத்துவது போல் தெரிகிறது. நானும் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வர்றேன். அப்புறமா சந்திக்கலாம்

  ReplyDelete
 15. காட்சி 2 மற்றும் 3 நடப்பது பொதுமக்கள்(குறிப்பாக குழந்தைகள்) நடமாடும் பகுதிகள். அந்த சம்பவங்கள் 4 சுவத்தினில் உள்ளேமட்டும் நடக்கவேண்டியது. எனவே பொதுமக்களும் காவலர்களும் செய்தது சரி. ஆனால் சம்பவம் 4 நடந்தது ஒரு 4 சுவத்துக்குள். அங்கே ஏன் இந்த வானரசேவைக்கு வேலை? அதுவும் பொண்களை மட்டும் தாக்குவது? அதெல்லாம் சரி நீங்க நல்லவரா? கெட்டவரா?

  ReplyDelete
 16. //நீங்க நல்லவரா? கெட்டவரா?//
  கண்டிப்பா ராம சேனைய சேர்ந்தவன் இல்லே

  ReplyDelete
 17. பத்த வச்சிட்டியே பரட்ட

  ReplyDelete
 18. என்ன சொல்ல வர்றீங்க இளா?

  போலிஸ்காரன் தான் தடி வெச்சுக்கணும்னு இல்ல.
  தனிப்பட்டவனும் வெச்சுக்கிட்டு தண்டல்காரனாவுன்னா?

  திரிக்கப்படும் நியாயங்களில் வெறுத்துவிடுகின்றன உணர்வுகள்

  ReplyDelete
 19. மாமியார் உடைத்தால் அது மண்கலம்;மருமகள் உடைத்தால் அது பொற்கலம்னு தெரியாமலா சொல்லி வைத்தார்கள் :))
  இருந்தாலும் விபசாரத்திற்கும் தோழமைக்கும் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம் :(

  ReplyDelete
 20. // செய்தி: மங்களூரில் இராம சேனா பப்’ல் அடிதடி. ஆண் பெண் பாராமல் தாக்கினார்கள். //

  தெய்வமே. இதை தான் தேடிகிட்டு இருந்தேன். அடிவாங்கினது ஆம்பளை பொம்பளை ரெண்டு பெரும் தான்.

  மீடியா அங்கே பொண்ணை அடிச்சாங்க அப்படின்னு சொன்னாங்க. ஆட்டு மனதை போல எல்லாரும் 'பொண்ணை அடிச்சான், பொண்ணை அடிச்சான்னு' கெளம்பிட்டாங்க.

  இதை அடிச்ச ராம் சேனாவும் ஒண்ணும் சொல்லலை. ஏன்னா அவுங்களுக்கும் விளம்பரம் முக்கியம்.

  ReplyDelete
 21. Bajrag Dal attacks Sri Ram Sena http://www.rediff.com/news/2009/jan/27inter-shri-ram-sena-is-confused-organisation.htm

  ReplyDelete
 22. ஐயா, எங்கய்யா நான் கடைசியா போட்ட பின்னூட்டம் வரவே இல்லை

  ReplyDelete
 23. Muthalik taken into preventive custody

  http://www.rediff.com/news/2009/feb/13muthalik-taken-into-preventive-custody.htm

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)