Monday, October 13, 2008

* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்

"தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு

"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"

”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”

“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”

“ம்ம் சரி”

1997- டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிட நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்குப் போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.

ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சக்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டுப் போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுத்திட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியிலே).

இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது
ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டாப் போதும், வர போற ஒருத்தரையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது. இதுல நம்ம ஹீரோவுக்கு சைட் அடிக்கவும் தெரியாது. அப்படியொரு வஸ்து.

சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.

இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா? லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.

1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.

அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்கா கவனிங்க” அப்ப்டின்னு சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.

தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.

காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.

இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.

வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழே வந்துதான் நிப்பாடினாங்க.

கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.

அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.

”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”

“அப்புறமாத்தான் படிச்சாரு, 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”

“யாருமா அது?”சூர்யா.

“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு நட்சத்திர பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”

“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”

Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்

14 comments:

  1. அந்த நேரத்தில் நான் ராம் அகர் சரோஜினி தெருவில்தான் இருந்தேன். ரொம்பப் பக்கத்தில் இருந்தும் பார்க்காமப் போயிட்டோமே!

    ReplyDelete
  2. ராஜா, தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஈழப்போராட்டம், காஷ்மீர் போராட்டம்-னு ஏதாவதோன்னு நினைச்சேன்.. அருமையான ஃப்ளோ.. நல்லா எழுதியிருக்கே..

    பாராட்டுக்கள்.., இப்போ எங்கே? அமெரிக்காவா? இந்தியாவா?

    சந்திச்சி நாளாச்சு..

    ReplyDelete
  3. இளா

    நீங்க RRT பத்தி ஆரம்பத்துலே சொல்ல ஆரம்பிச்சவுடனே,
    பக்கத்துலே கஸ்தூரி பவன்லே சாப்பிட்டுகிட்டிருந்த
    வெங்காய தோசையை அப்படியே வெச்சுட்டு, அந்த வழியா
    வந்த CTC பஸ் எங்க போகுதுன்னு கூட பாக்காம ஓடிப்போயி
    ஏறினதுதான் மனசுக்குள்ள்அ வந்துச்சு.

    கூட இருந்த பிகரு இன்னிக்கி வரைக்கும் என்கிட்ட பேசரதில்ல.

    கடசிலே பாத்தா அந்த சிச்சுவேசனுக்குள்ள கொண்டு போயி விட்டிருக்கீங்க.

    ReplyDelete
  4. நட்சத்திரமா?

    பலே பலே பேஷ் பேஷ்.

    வாழ்த்து(க்)கள் இளா.

    பதிவை இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வருவேன் மறுபடியும்:-)

    ReplyDelete
  5. அண்ணே திரும்பவும் நட்சத்திரமா!!! வாழ்த்துக்கள்!!!

    போன முறை flash game எல்லாம் வெச்சிங்க, இந்த முறை அதுபோல ஏதும் உண்டா!

    ReplyDelete
  6. //friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழேதான் நிப்பாடினாங்க.
    //

    ROTFL :))) Good Flow Ila.

    //ரொம்பப் பக்கத்தில் இருந்தும் பார்க்காமப் போயிட்டோமே!
    //

    இளா, நல்ல வேளை, அவரை நீங்க பாக்கலை. :))

    ReplyDelete
  7. ஓ...நட்சத்திரமா?? வாழ்த்துக்கள். மூனு மாசத்துக்கு ஒரு தடவ தெய்வீகக் காதல்? நல்லா இருமய்யா :)

    ReplyDelete
  8. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் இயல்பான உடனடித் தாக்கத்தைப் பதிவில் பார்க்க முடிஞ்சுதுங்க!

    // நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு//

    நெசமாச் சொல்லுங்க, புஸ்தகப் பைய எடுத்தீங்க? :)

    ReplyDelete
  9. இளா நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்...

    உங்கள் அனுபவங்களை சொல்லிய விதம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் இளா.

    ஒரு பயங்கர நிகழ்ச்சியைச் சாதாரணமா அருமையாக் கொண்டு போய் விட்டீர்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா...

    ReplyDelete
  12. பதிவு அருமை......வாழ்த்துகள்
    என் பதிவிலும் உங்கள் மதிப்பான கருத்து தேவை...நன்றி....!

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)