Tuesday, January 16, 2007

101-மொய்- வெச்சாங்களே சங்கத்துக்காரங்க

"சங்கத்துல சேர்ந்து என்னாத்த சாதிக்கப்போறே? ஒரு குரூப்பா அலையிற மக்கள் விளங்கினதா சரித்திரமே இல்லை". வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல முதல் பதிவா நான் ரெடி பண்ண படம் வந்தபோது எனக்கு வந்த விமர்சனம்தான் இது .

இது பழசு. புதுசா பார்க்குறீங்களா? படத்தப் பாருங்க மொதல்ல.
இது நம்மோட 101வது பதிவுங்க. 100வது பதிவை விவேகானந்தர் கேட்ட அந்த 100 பேருக்கு சமர்பிச்சது மாதிரி இந்த 101வது பதிவ மொய் வெச்சாங்களே அந்த சங்கத்துக்காரங்க("!@#@) அவுங்களுக்கு சமர்ப்பிக்குறேங்க. 101ன்னாவே நமக்கு மொதல்ல ஞாபகம் வர்ரது மொய்தான். அதுதான் 101வது பதிவு மொய்க்கு சமர்ப்பிச்சாச்சு.

வாரிசுக்கு பொறந்தநாள் கொண்டாட எல்லாரையும் கூப்பிட்டப்ப சங்கத்துக்காரங்களுக்கு மட்டும் ஒரு மடல் போட்டேன். அவ்ளோதான் அவுங்க நான் அழைச்ச அழைப்பு. சூடான்ல இருந்து வந்துச்சு முதல் பரிசு. "மாமா குடுத்தேன்னு சொல்லுங்க இளா"ன்னு என்னை நெகிழ வெச்சவரு நம்ம புலி(நாகை சிவா). அப்புறமா பதிவு போட்டு பெருமை பண்ணினாங்க ராம்/தேவ்.

சாயங்காலம் 5 மணி இருக்கும். எல்லாரும் பார்ட்டி ஹாலுக்கு கிளம்பற நேரம், கதவை திறந்தா முகத்தை மறைச்சுகிட்டு பொக்கே வெச்சுகிட்டு நின்னாரு ஒரு ஆள். வாங்கிப்பார்த்தா, சங்கத்து சார்பா கைப்பு அனுப்பிவெச்ச பூக்களா சிரிச்சு இருந்த சங்கத்து மக்கள் மனசு அதுல இருந்துச்சு. கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க. பார்ட்டி ஹாலுல வரவேற்புல சிரிச்சபடியே எல்லாத்தையும் "வாங்க வாங்க" சொன்னது அந்த மனசுங்கதாங்க. (பார்க்க படம்)

கொஞ்ச நேரம் கழிச்சு "மாப்ளே வானவில் எஃப். எம்ல மருமவனுக்கு பொறந்த நாளுன்னு சொன்னாங்களே"ன்னு ஒரு அலைபேசி அழைப்பு. அதுவும் சங்கத்து மக்கள் ஏற்பாடாம்.

போங்கய்யா, சங்கத்துல சேர்ந்து எழுதி ஒன்னையும் சாதிக்க வேணாம், இது போதாதா? இன்னிக்கு காலையில் பாலபாரதி சொன்ன மாதிரி, "பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்" நானும் அந்த மாதிரி நண்பர்களை மட்டுமே சம்பாரிச்சு வெச்சு இருக்கேங்க. இது நூத்துக்கு நூறு உண்மைங்க. அதுக்காகவேனும் நான் பதிவுலகத்துல இருக்கனும்.

சங்கத்து மக்கள் எல்லாருக்கும், ஜி.ரா, சுதர்சனுக்கும், பின்னூட்டம் மூலமும் அலை பேசிவழியாவும் வாழ்த்துன அத்துன பேருக்கும் நன்றிங்க. என்னோட பொறந்த நாளுக்கு பதிவு போட்ட அந்த கச்சேரி மச்சானுக்கும் நன்றிங்க.

ராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்னை கொலைகாரனா ஆக்கிராதீங்க.

22 comments:

 1. வாழ்த்துக்கள் இளா.

  வலைப்பதிவுல நானும் நல்ல நண்பர்களையே சம்பாதித்துள்ளேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகிறேன்.

  :)

  ReplyDelete
 2. நல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்பக் கடினங்க...எதைக் கொடுத்தாவது அப்படிப் பட்ட நண்பர்களைக் கொள்ளனுமாம். வள்ளுவரு சொல்லீருக்காரு.

  நீங்க கூட அன்னைக்கு நானு, தாலு, பனீரு பட்டரு மசாலா, சாம்பாரு, ரசம், தயிருச்சோறு, ஐசுகிரீமு, கிரேப் சூசுன்னு பிரமாதப் படுத்தீட்டீகளே. கேக்கெல்லாம் குடுத்தீகளே. வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே.

  ReplyDelete
 3. // ராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்ன கொலைகாரனாக்கிராதீங்க. //

  அப்ப வலைப்பூ எழுதுனா கொலகாரனா மாறக்கூட வாய்ப்பிருக்கு.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் இளா.
  இன்னும் நூறு நூறாகப் பதிவுகள் வளர வேண்டுகிறேன்.
  குழந்தைக்கும் ஆசீர்வாதங்கள்.

  ReplyDelete
 5. //வாழ்த்துக்கள் இளா.//
  வாழ்த்துக்கு நன்றிங்க சிறில்

  ReplyDelete
 6. ஜி.ரா--> என்ன ஒரு ஞாபக சக்திங்க உங்களுக்கு. பட்டியல அப்படியே சொல்லிட்டீங்க. ஊறுகாய், சாலட் விட்டுபுட்டீங்களே.
  // வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே//
  விவசாயின்னு தெரிய வேணாமோ?
  இதெல்லாம் குடுத்தா உங்களை நண்பனா அடையனும்?
  "பொய்" படம் கூட்டிட்டு போனவங்களை என்ன பண்ணலாம்? எதிரியாக்கிறலாமா?

  ReplyDelete
 7. வலைப்பதிவுல நானும் நல்ல நண்பர்களையே சம்பாதித்துள்ளேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகிறேன்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் விவசாயி....

  உங்க உத்தம புத்திரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள சொல்லிடுங்கோ...

  ReplyDelete
 9. //வாழ்த்துகள் இளா.
  இன்னும் நூறு நூறாகப் பதிவுகள் வளர வேண்டுகிறேன்.
  குழந்தைக்கும் ஆசீர்வாதங்கள்//
  தலை வணங்கி உங்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறோம் வல்லி. நன்றி! நன்றி

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் இளா!

  உண்மையிலேயே நாமெல்லாம் சங்கத்து மூலம்தான் அறிமுகம் ஆனோம் இல்லையா?

  :))

  ReplyDelete
 11. உண்மை இளா வலையுலகம் பல நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தி ஆனந்தப்படுத்துகிறது. பார்ட்டிக்கு வர முடியாதவங்களுக்கு பார்சல் ஒன்னும் கிடையாதா?

  ReplyDelete
 12. நீங்க கொலைகாரன் ஆனாலும் பரவாயில்ல உங்க கண்ணுல பட்டுடனும்னு பார்க்கிறேன்.. ம்ம் முடியலையே.. :(

  ReplyDelete
 13. சிபி-->அட ஆமாங்க, பதிவுலகத்துலதான் அறிமுகம் ஆனோம். ஆனா குடும்ப நண்பர்களா ஆகியிருக்கோம்.

  அனு-பார்சல்ல என்னோட கோவமும் வரும் பரவாயில்லீங்களா?

  ReplyDelete
 14. இளா....என்ன இப்படி பீல் பண்ணிகிட்டு... மனசு கனத்துப் போச்சுய்யா.. உம்ம பதிவு மனசைக் கனக்க வ்ச்சிருச்சுன்னா.. நம்ம ஜி.ரா. கொடுத்த டீட்டெயில் மெனு வாயித்தைக் கனக்க வச்சிருக்கும் போலிருக்கே.. :)

  ReplyDelete
 15. நல்ல நண்பர்களைப் பெற பதிவுலகம் ஒரு ஊடகம்தான்

  ReplyDelete
 16. // ILA(a)இளா said...
  ஜி.ரா--> என்ன ஒரு ஞாபக சக்திங்க உங்களுக்கு. பட்டியல அப்படியே சொல்லிட்டீங்க. ஊறுகாய், சாலட் விட்டுபுட்டீங்களே. //

  ஆமாய்யா மன்னிச்சுக்கிருங்க. தெரியாம விட்டுப் போச்சு.

  //// வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே//
  விவசாயின்னு தெரிய வேணாமோ? //

  அது சரி. நடுவுல யாரோ கேதரின்னு போன் பண்ணுனப்போ விவசாயி formerஆ மாறி இங்கிலீஸ் பேசுனீங்களே? இந்திய இங்கிலாந்திய அமெரிக்க விவசாயக் கூட்டணி அமைக்கவா? இல்ல வெண்டைக்காயும் லெட்டூசும் கலந்து வெண்டூசுன்னு கலப்புக் காய்கறி கண்டுபிடிக்குற ஆராச்சியா?

  //// இதெல்லாம் குடுத்தா உங்களை நண்பனா அடையனும்?
  "பொய்" படம் கூட்டிட்டு போனவங்களை என்ன பண்ணலாம்? எதிரியாக்கிறலாமா? //

  அதென்னவோ நாயந்தானுங்க. நான் அந்தக் கொடுமைய மறக்கனும்னு நெனச்சாலும் மறக்க விட மாட்டீங்க போல. :-( அவங்கள மன்னிச்சி போக்கிரி, ஆழ்வாரு, தாமிரபரணீ, அடைக்கலம்னு வரிசையா கூட்டீட்டுப் போயிறலாங்க.

  ReplyDelete
 17. //இல்ல வெண்டைக்காயும் லெட்டூசும் கலந்து வெண்டூசுன்னு கலப்புக் காய்கறி கண்டுபிடிக்குற ஆராச்சியா?//
  கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.

  ReplyDelete
 18. இளா இப்படி பதிவு போட்டு பீல் பண்ண வெச்சிடியேப்பா.. எனக்கும் பாலா பாய் சொன்ன மாதிரி பதிவுகள் நிறைய நண்பர்களை கொடுத்து இருக்கு.
  //ஊறுகாய், சாலட் விட்டுபுட்டீங்களே//
  என்ன வெறும் ஊருகாய் தான் மெயின் டிஷ் எதுவும் இல்லையா? என்னப்பா சங்கத்து மக்களை இப்படி காய விட்டுடியே இது நியாயமா?

  ReplyDelete
 19. //ராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்னை கொலைகாரனா ஆக்கிராதீங்க. //


  ஹி ஹி விவசாயி ஏனிந்த கொலை வெறி.... :)

  நாந்தான் உங்ககிட்டே சொல்லிட்டுதானே ஊருக்கே போனேன். இந்த வீக்எண்ட் வீட்டுக்கு வாறேன், அன்னிக்கு விட்டுப்போன விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க :)

  ReplyDelete
 20. //நல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்பக் கடினங்க...எதைக் கொடுத்தாவது அப்படிப் பட்ட நண்பர்களைக் கொள்ளனுமாம். வள்ளுவரு சொல்லீருக்காரு//


  //அப்ப வலைப்பூ எழுதுனா கொலகாரனா மாறக்கூட வாய்ப்பிருக்கு.//

  எதைக் கொடுத்தாவது அப்படிப் பட்ட நண்பர்களைக் கொல்லனுமாம்

  ஜி.ரா. பின்னூட்டத்தை மாற்றி மறுக்கா ஒருமுறை எழுதவும்.


  என்னோட நண்பர்களை வலைப்பதிவுகள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

  வாழ்த்துக்கள் இளா

  சென்ஷி

  ReplyDelete
 21. //பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்//

  100 சதம் உண்மை. முகம் தெரியா நண்பர்கள் ஏராளம் கிடைக்கப்பெற்றது தமிழால்தான்.

  என்னுடைய வாழ்த்துக்களும்.

  அன்புடன்
  தம்பி

  ReplyDelete
 22. என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை வெளியிடாத விவசாயியே எதிர்த்து ஐ.நா.சபையில் குரல் கொடுக்க சொல்லி தகவல் அனுப்பியாச்சு.

  (P.S:- ஸ்மைலி போடலை... So இது சீரியஸ் பின்னூட்டம்)

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)