யாராவது சின்னப்பசங்க நம்மள பேரு சொல்லி கூப்பிடும்போது, வரும் பாருங்க ஒரு கோவம். அப்படியே ஆத்திரத்தோட திரும்பிப்பார்த்தா "பேர் வெச்சதே கூப்பிடறதுக்கு தானேன்னு" சொல்லி நமக்கே அல்வா குடுப்பாங்க. தமிழ்நாட்டுல ஆபிசுக்கு வெளியே சின்னவங்க நம்மள பேர் சொல்லி கூப்பிட்டா நமக்கு சுள்ளுன்னு கோவம் வரும். அதையே, ஆபிசுல சுள்ளான் எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. அப்போ ஒன்னுமே தோணாது. ஏன்னா அது கலாச்சாரம். சரி தெருவுன்னா ஒன்னு, அபிசுன்னா ஒன்னு ஆகிப்போச்சு நம்ம கலாச்சாரம். வெளங்கிரும்.
சரி விடுங்க நம்ம பிரச்சினைக்கு வருவோம் .
இந்த பேர் வெக்கிறதே சிரமமான விசயம். ஜாதி, மதம் இல்லாம, நியூமராலஜினு சொல்ற மக்கள் மனசு நோவாம நமக்கு புடிச்ச பேற வெக்கிறதுக்குள்ள உசுருபோயி உசுரு வந்துரும்ங்க. சரி, நாம் வெக்கிற பேருதானே முழுப்பேரு நெனச்சா அது தப்புங்க. மூணு விதமான் பேரு இருக்குங்க.
முதல் பேரு, நடு பேர், கடைசி பேரு.
ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஒருவரோட பேரு முனியாண்டி. அப்பா பேரு ஐய்யன், அம்மா பேரு அம்மா. அப்போ அவருக்கு அம்மா வெச்ச ரூல்ஸ் படி அவருக்கு பேர். A.A. Muniyaandi. அதாவது அப்பா, அம்மா பேர இனிஷியலா வெக்கனும்னு அம்மா போட்ட பகுத்தறிவான சட்டம். அம்மாங்கிறதுனால அம்மா பேர இனிஷியலா வெக்க சொன்னாங்க. நல்ல வேளை தாத்தா இப்ப ஒரு சட்டம் போட்டா தாத்தா பேரையும் வெக்க சொல்லி இருப்பார். நல்ல வேளை அவரு அதையெல்லாம் கண்டுக்கவே இல்ல. தேவையில்லாததுன்னு நினைச்சுருப்பார் போல. பொழச்சோம். வெளிநாட்டுல இந்தப்பேரோடா போனா எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா? Mr. Ammaன்னு கூப்பிடுவாங்க. இது அவுங்க வழக்கம். அதாவது Mr or Miss or Mrs. Last name. இது அவுங்க வழக்கம். Mr. Ammaன்னு கூப்பிட்டா கோவம் வரத்தானே செய்யும். என்ன பண்ண?
உலக நியதிப்படி கடைசிப்பேரு அவரோட குடும்பப்பேரா இருக்கனும். ஆனா தமிழ்நாட்டுல மட்டும் குடும்பப்பேரே இல்லையோ? ஐயங்கார், ஐயர், முதலியார், செட்டியார் அப்படின்னு பேருதான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா குடும்பப்பேர கேள்விப்பட்டதே இல்லை. இது நம்ம தலை விதி.
அப்போ உலக வழக்கம் வேற, தமிழ்நாட்டு வழக்கம் வேற. ஏற்கனவே தமிழ்நாட்டை எந்த வடக்கத்திக்காரனும் மொழியினால இந்தியாவா ஏத்துக்கிறது இல்லே. அதுக்கு என்ன வழி. நான் ஒன்னு யோசிச்சு முடிவு பண்ணி வெச்சு இருக்கேன். உங்களுக்கு தோணினா சொல்லுங்களேன்..
நம்ம மக்களுக்காக ஒரே கடைசி பேர். என்ன வெக்கிலாம்னு சொல்லுங்க். வாங்க, அடுத்த தலைமுறைக்கு ஒரு கடைசி பேர் வெப்போம்
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
வேளாண் தமிழா பேர் சொல்லுற மாதிரி ஒரு பதிவுப் போட்டு இருக்கீங்க...:)))
ReplyDeleteஇந்த பேர் கொடுமை வெளிநாடு போகும்போதும், பார்ம் பில் பண்ணும்போதும் செம காமெடியா இருக்கும்.
ReplyDeleteஎன் தோழி ஒருத்தி பேருக்கு முன்னாடி எப்டியோ அவங்க ஊர் பேர சேர்த்தி எழுதிட்டாங்க சின்ன வயசுல. அவங்க ஊர் பேரு அப்பநாயக்கன்பட்டி. அவளும் நானும் வெளிநாடு போனப்ப எல்லா ஏர்போர்ட்லயும் மிஸ் அப்பா, மிஸ் அப்பா அப்டீனு கூப்பிட்டு மானத்த வாங்கீட்டாங்க.
ஒருத்தர் கூட நம்ம பேர ஒழுங்கா கூப்பிட மாட்டேங்கிறாங்க. அந்தக் கொந்தளிப்புதான் இந்தப்பதிவு.
ReplyDeleteஒருவருடைய இயல்பை இழிவு படுத்துவதுதான் அவரை நம்பிக்கை இழக்கச் செய்து அடிமையாக வைத்திருப்பதற்கான முதல் படி. "அய்யே எப்படி சாப்பிடுகிறான். உள்ளங்கையில் படாமல் சாப்பிடுவதுதான் நாகரீகம்" என்று கல்லூரியில் கேட்ட போது அது வரை கேட்டு வந்த உருட்டிச் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்துக்கு அடி விழுந்தது.
ReplyDeleteஅரிசிச் சோறு சாப்பிடுவது அநாகரீகம் என்று அரிசிக்கு முத்திரை குத்தியாகி விட்டது.
முதலெழுத்துக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, எழுத்துக்களுக்கான விரிவைக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி வாங்கி கடவுச் சீட்டுக்களில் அதையே பெயராகப் போட்டு தென்இந்திய மாநிலங்களில் வாழும் இருபது கோடி மக்களின் பெயர்களை கொலை செய்கிறது இந்திய நிர்வாகம். கே ஸ்ரீகாந்த் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்று பெயர் பெற்று, தொலைக்காட்சி வர்ணனையாளர்களால் கிருஷ் என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகிறார்.
வெளிநாட்டுக்கு போக வேண்டிய வாய்ப்பு பெற்ற ஒவ்வொருவரும் தமது பெயரைச் சிதைக்க அனுமதித்துள்ளோம். வட இந்தியருக்கும், ஐரோப்பியருக்கும் முதல்பெயர் குடும்பப் பெயர் என்பது இயல்பாக இருக்கலாம். நமக்கு தந்தையின் முதலெழுத்தும், இட்டபெயரும்தான் இயற்கை. அதை மதித்து அனுமதிப்பது அரசின் கடமை.
மா சிவகுமார் - சிவகுமார் மாதேவன் ஆகி விட்டேன். அதற்கு முன்னால் நாமே போட்டுக் கொண்ட நுகத்தடி முதலெழுத்தை ஆங்கிலத்துக்கு மாற்றிக் கொண்டது.
வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி சிவா. இருப்பினும் தமிழகத்தில் தகப்பன் பெயரை கடைசி பெயராக கொண்டு வந்தது 1950-1970 களில் தான். முதலில் ஜாதியினை அடிப்படையாக கொண்டுதான் பெயர் இருந்தன. பிறகு ராஜாஜி(என்று நினைக்கிறேன்) அந்த வழக்கத்தை மாற்றி தகப்பனார் பெயரை இனிஷியலாக கொண்டு வந்தார்.ஆகவே வழக்கத்தை மாற்றியது 1950-2000 களில் தான். என் ஞாபகத்து வந்தது இவ்வளவே. தவறு இருந்தா சொல்லுங்க.
ReplyDeleteவிவ்,
ReplyDeleteஇதை பத்தி நிறைய பேசவேண்டியதா இருக்கு.
என்னோட கம்பெனி மெயில் ஐடியே எங்கப்பார் பேருதான் :)
அட போங்க இளா...நானே என் பெயரை எல்லாரும் கொலைப் பண்ணுறாங்க என்று கவலையோடு இருக்கின்றேன்...இதில் கடைசி பெயர் வேறு தேவையா?
ReplyDelete//இதை பத்தி நிறைய பேசவேண்டியதா இருக்கு//
ReplyDeleteபேசித்தீர்க்கதானே பதிவு போட்டு இருக்கோம். வந்து பேசுங்க, பேசுங்க , பேசிக்கிட்டே இருங்க
இளா, நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா, இல்ல இந்தியால இருந்துக்கிட்டே இத்தனை பேஜாரா? அமெரிக்கா வாழ் தமிழர்களில் பலபேருக்கு அப்பா பேரும் கணவர் பேருமே முதல் பேராயிடுச்சு. என் கல்லூரித் தோழி ஒருத்திக்கு ஊர் பேர் last name ஆயிடுச்சு. அவ அப்பாவுடைய முதலெழுத்து C, அது கோயம்புத்தூரைக் குறிக்குது, அது அவளுடைய முதலெழுத்தாவும் இருக்கவே, அவ last name கோயம்புத்தூராயிடுச்சு!! இப்படிப்பட்ட காமெடிகள் பல..!
ReplyDeleteடமில் நாட்ட தனி நாட்டாக்கிட்டா? ;))
ReplyDeleteநல்ல வேளை எனக்கு ஒரு பேருதான் இருந்தது. அதுனால அப்பா பேர லாஸ்ட் நேமா ஆட் பண்ணி.. இப்ப அதையே ஃபேமிலி நேமாக்கிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன். பாப்போம்.. வர்றவ என்ன சொல்லுவாளோ...
//இளா, நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா, இல்ல இந்தியால இருந்துக்கிட்டே இத்தனை பேஜாரா? //
ReplyDeleteஇந்தியாவுலதாங்க இருக்கேன். வெளிநாட்டு மக்களோட வேலை விஷயமா பேசும்போதுதாங்க இந்த பிரச்சினையே. ஏன் நம்ம மட்டும் உலக வழகத்துல இருந்து விலகி இருக்கும்??
அட இந்த கொடுமை கூட பரவா இல்லிஙக பொணடாடிய கூபபிடும போது திருமதி. அபபா (மாமனாற பெயா) சொலறாஙகபா
ReplyDeleteஎனக்கும் இந்த first name last name middle namஎ குழப்பம் தீர்ந்தபாடில்லை.
ReplyDeleteமுன்பு மும்பைல் பணி புரியும் போது எல்லோரும் உன் surnஅமெ என்னனு கேட்டு பாடா படுத்துவானுங்க, நமக்கு இருப்பதோ ஒரே பெயர் தான் C.Nagaraj, c initial இதை எப்படி சொன்னாலும் புரிஞ்சிக்கமாட்டானுங்க, ஒரு இளக்கார பார்வை தான். என்ன உனக்கு surnamஎ கிடையாதானு.
ஒரு முறை சென்னை US consulate library membership சேர foர்ம், கொடுத்தான், அதிலும் இதே கூத்து தான், firstname, middle name lastname, family name surname . எல்லாம் கேட்டான் என் பெயர் எங்கே எழுதுவதுனு தான் தெரியலை.
பெயர் loகிச் தெரிஞ்சவங்க யாராவது என் பெயரில் C. Nagaraj ( Intital C expansion fathers name Chellappaந்) எப்படி first name last name middle name suraname family name eஎன்று பிரித்து எழுதுவது என்று சொல்வீர்களா.
என்னோட கதை கொடுமை. என்னுடைய பெயர் சுப்பிரமணியம். பாஸ்போர்ட் எடுக்கும் போது அப்பா பெயர் என்னுமிடத்தில் ரேசன் கார்டில் உள்ளபடி எழுதியதால் ராமசாமி ***** (சாதி பெயர்) வந்து விட்டது. இங்கே வந்து பார்த்தால் லாஸ்ட் நேம் ராமசாமி ***** என்றாகிப் போனது. முதல் சம்பள செக் வரவில்லை. என்ன என்று பார்த்தால் என்னுடைய லாஸ்ட் நேம் 21 எழுத்துகள் அவர்கள் டேடா பேசில் அத்தனை எழுத்துக்களுக்கு இடமில்லை. பிறகு எனது பெய்ரை சுப்பிரமணியம் R ...... என்று மாற்றிக் கொள்ள வேண்டியாதாய்ற்று.
ReplyDeleteஇதில் வேடிக்கை என்னவென்றால் சாதியை எதிர்ப்பவன் நான் (வேறு சாதிப் - மாநில பெண்னை மணந்தவன் நான் ). பிறகு ஒரு மாதம் கழித்து என் நண்பனுக்குப் போன் செய்த போது எனது லாஸ்ட் நேம் அவனது காலர் அய்டியில் வர அவன் என்னை கேட்ட முதல் கேள்வி என்ன தலைவரே அமெரிக்கா வந்தவுடன் சாதிப் பற்று வந்து விட்டதா?
(நான் பார்தவரை ஊரில் உள்ள போது இல்லாத மதப் பற்று இங்கு வந்த பின் நம் ஆட்களுக்கு வந்து விடுகிறது )
குறிப்பு - சாதிப் பெயர் தவிர்க்கபட்டது.
இதுல இன்னொரு வேடிக்கை இருக்கே.. எங்க ஊர்ப் பக்கம் நிறைய குடுமபங்களில் அப்பா பேரும் மகன் பேரும் ஒரே பேரா இருக்கும். அதுக்குக் காரணம், அப்பா பேரும் தாத்தா பேரும் ஒரே பேரா இருந்திருக்கும், தாத்தா பேர் பேரனுக்கு வந்திருக்கும். இங்கே வந்து எல்லாருக்கும் பதில் சொல்லவே சரியா இருக்கும்.. எப்படி உன் first name, last name ரெண்டுமே ஒரே பேரா இருக்குன்னு கேட்டே ஒரு வழி பண்ணிடுவாங்க.
ReplyDeleteபிச்சு உதறவும்...
ReplyDelete//பிறகு ராஜாஜி(என்று நினைக்கிறேன்) அந்த வழக்கத்தை மாற்றி தகப்பனார் பெயரை இனிஷியலாக கொண்டு வந்தார்.//
ReplyDeleteஎன்னங்க... இது... சம்பந்தமில்லாம ராஜாஜி வர்றார் இங்க...
எனது தாத்தா சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த Imperial (தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி) வங்கியில் பணி புரிந்தவர். அவர் தந்தை பெயரைத்தான் இனிஷியலாக வைத்திருந்தார். ஜாதி பெயர் கிடையாது.
தமிழகத்திலேயே நகரத்தார் / சௌராஷ்டிரர் எல்லாம் பல எழுத்துகளை கொண்ட இனிஷியலை வைத்து கொண்டிருப்பர். TRS Suresh என்று ஒரு நண்பர் இருந்தார். சௌராஷ்டிரர். அவருடைய முழு பெயரை எழுத இரண்டு பாஸ்போர்ட் வேண்டும். :-)) தெலுங்கு பேசுபவர்கள் பெயரும் பல துணை பெயர்களை கொண்டிருக்கும்.
மற்றபடி முதல்பெயர், நடு பெயர், கடைசி பெயர் என்ற முறை ஆங்கில்லேயர் பின்பற்றுவது. அது பலருக்கும் வசதியாக இருப்பதால் அப்படியே பின்பற்றுகின்றனர்.
கேரளர்கள் கொஞ்சம் உஷாரான ஆட்கள். அவர்களுக்கு குடும்ப பெயராக 'வீட்டு' பெயர். ஆண்ட்ரு புன்னூஸ். இதில் புன்னூஸ் அவருடைய குடும்ப (மற்றும்) வீட்டின் பெயர். பல வீடுகளுக்கு இலக்கங்கள் கிடையாது. வீட்டுப் பெயர், தாலுக்கா பெயரிட்டால் தபால் போய் சேர்ந்து விடும். எப்படி 'unique key violation' இல்லாமல் பின்பற்றி வந்தார்களோ :-)
இனிவரும் தலைமுறைகளுக்காவது, நம் ஊரில் பெயர்களை, உலக வழக்குக்கு மாற்ற சட்டம் கொணர வேண்டும். வேறு தீர்வு பெரிதாக இல்லை! ஆனால் பிரச்சினை எது கடைசி (குடும்பப்) பெயராக வைப்பது என்பதில்தான் பெரிதாய் வரும்!
ReplyDeleteமுதல் பெயரில் எந்த குழப்பமும் வரக்கூடாது!
நடுப் பெயர் :- ஊர் அல்லது குடும்பப் பெயர் இருந்தால்
கடைசி/குடும்ப பெயர்:- தந்தை/தாய் பெயராகவோ
இது நடைமுறைக்கு கொணரவேண்டியது மிகவும் அவசியம்! இல்லாவிடில் வளர்ந்துவரும் தகவல் உலக சூழலில் நமது ஊரில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறையினர் பலரும் இதே பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
நான் இன்றுவரை சந்திக்கும் பிரச்சினை கொஞ்சம் மாறுபட்டது, எனது முதல்பெயர் 17 ஆங்கில எழுத்துக்கள், கடைசி பெயர் (தந்தை) 16 ஆங்கில எழுத்துக்கள், போகுமிடம் ஒவ்வொன்றிலும் வியப்பாய் பார்ப்பர், படிக்க முயன்று தடுமாறுவர், எனது கடன் அட்டைகள் ஒவ்வொன்றிலும் ஓவ்வொரு விதமாய்ப் பெயரை சுருக்கி வெவ்வேறு பெயர்களாய் காட்சியளிக்கின்றன!
By one way keeping father name as last name is good, instead of Caste name (For tamil people most caste name is family name).
ReplyDeleteவிவ், இந்த பதிவ நான் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன் (இல்லனா மட்டும் எல்லா பதிவுக்கும் வர்ர மாதிரினு எல்லாம் கேக்கபிடாது)....எனக்கும் இது எப்பவும் ரோசனையாவே இருக்கும்...ஆனா அத சூப்பரா எழுதி இருக்கீங்க...சீக்கிரம் தொடருங்க :-)
ReplyDelete