ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசி வந்த எந்தம்பி மட்டும்
அழும் குரலோடு.
"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
விரட்டியது குண்டம்மா.
இந்த பொங்கல் நாளிலாவது
பசிக்கத் தெரியாமல்
இருந்திருக்கக் கூடாதா?
தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
100 அடி உசரத்துல ஒரு நடிகர்.

குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறாவது நனையட்டும்.
ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி,
உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசியோட திரும்பவும் தம்பி அழ,
கையேந்தி ஆரம்பிச்சேன்
"அம்மா தாயே.."
பட உதவி-நன்றி-தினமலர்
No comments:
Post a Comment