Monday, April 21, 2008

சித்தர்களும் இரண்டும், நீங்க சொல்ற பதிலும்

பொது அறிவு கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க. இந்த மாதிரி பொது அறிவு கேள்வி கேட்கிறது, 3 பேரு. அது நானும், ஓமப்பொடியாரும் கைப்புள்ளையும். ஏன்னா எங்களுக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத்தெரியும். :)

எங்கேயோ எப்பயோ படிச்ச ஞாபகங்க. அதுக்கு அர்த்தமும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ அதைச் சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். வ.வா. ச போட்டிக்குச் சரியான நேரத்துல கேட்டுட்டா ஒரு பரபரப்பு வருமே.

இந்த மாதிரி சரியா பின்பற்றினா வாழ்நாள் கூடும்னு சொல்லி இருக்காங்க சித்தர்கள்(?!)
இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க.
  • தினம் இரண்டு
  • வாரம் இரண்டு
  • மாதம் இரண்டு
  • வருடம் இரண்டு

இப்ப இந்த "இரண்டு"களுக்கு என்ன அர்த்தம்? பதில் சொல்லுங்க, பார்ப்போம்.

வ.வா.ச'வின் - இரண்டு போட்டிக்கு அல்ல..

Tuesday, April 1, 2008

தேடு பொறியும் குறிச் சொற்களும்

தமிழ்ல என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டாலும் தேடு பொறியில நம்ம பதிவு வர மாட்டேங்குதேன்னு புலம்புறீங்களா? அப்போ இந்தப் பதிவ படிக்கலாம். மொதல்ல ப்லொக்கர் பார்ப்போம். ப்லொக்கர்ல தலைப்பை தமிழ்ல வெக்கும்போது அதனோட தலைப்பு உருவாகுறது எப்படின்னு பாருங்க.

ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க : என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர் குடுத்த உரல் பாருங்க -http://vivasaayi.blogspot.com/2008/03/blog-post_31.html

மேலே இருக்கிற உரலில் என்ன குறிச்சொல் இருக்கு?அதாவது உங்க பதிவோட பேரு, வருஷம், மாசம், அப்புறம் உங்க இடுகையின் தலைப்பு அப்படின்னு வரனும். ஆனா தமிழ்ல தலைப்பு வெக்கும்போது ப்லாக்கர்ல நீங்க தர்ற தலைப்பு வரது இல்லே. இப்போதைக்கு இந்த வசதி இல்லே. அதனால blog post-தேதின்னு வந்துரும். தேடு பொறிகள் எல்லாமே இந்த உரலை மையமா வெச்சு தான் தேடுது. அதனால நம்ம இடுகைகள் ஆங்கிலத்துல பேர் குடுத்து தேடினா கிடைக்கிறது இல்லை. தமிழ்ல தேடுற மக்களும் ரொம்ப குறைச்சலாவும் இருக்கு. ஆங்கிலத்துல தலைப்பை வெச்சா மக்கள் தேடும் போது உங்க பதிவுகள் கவனிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அப்போ தமிழ்ல தேடினா கிடைக்காதேன்னு கேட்டா? அதை உங்க பதிவே தேடல்ல சிக்கிக்கும். அதனால மக்கள் ஆங்கிலத்துல தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க. ஒரு நிமிசத்துல பண்ற வேலை இது.

உதாரணத்துக்கு இந்தப் பதிவோட உரல் பாருங்க. http://vivasaayi.blogspot.com/2008/04/tamil-blogs-easy-search.html.

Tamil Blogs அப்படின்னு தேடினா http://binarywaves.blogspot.com/2007/04/tamil-blogs.html இந்தப் பதிவு முதல் பக்கத்துல வந்துரும். இதுக்கும் இது என்னோட ஆங்கிலப்பதிவு. நேத்துதான் இந்தப்பதிவையும் போட்டேன் அதுவும் 50க்குள்ள இருக்கு. சூட்சுமமே இதுதான்.
இந்த விஷயத்துல Wordpress கொஞ்சம் முன்னேறி இருக்கு. அதாவது தமிழ்ல தேடினா கிடைகிற வசதி ப்லாக்கரை விட wordpressல கொஞ்சம் அதிகம். அந்தக் காரணமாவே wordpressக்கு போற மக்கள் அதிகம். ப்லாக்கர்லயும் இந்த மாதிரி விளையாடினா நிறைய பேர் பார்க்குற வாய்ப்பு அதிகமாகும்.

Monday, March 31, 2008

என்னையே எல்லாரும் பார்க்குறாங்க

ஒடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்கு போனேன். ஒரு 10 நிமிசம் காத்திருங்கன்னு வழக்கம்போல சொல்லிச்சு வரவேற்பாளர்-அம்மணி(வெள்ளைக்காரி மாதிரி பகட்டு பண்ற ஒரு ஆசியப் பொண்ணு).
ஒடம்புக்கு சரியில்லாம ஒருத்தர் கூட வந்து இருக்கோம்னு கூட ஒரு தயவு தாட்சயண்மே இல்லாம தங்கமணி "மாமா, அங்கே பாருங்களேன். அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா நகத்தை வெச்சு(ஒட்டுதான்) இருக்கு?"ன்னு சொல்ல, கட்டாத கண்ணு அப்பத்தான் கட்டுச்சு. இனிமே நின்னா வேலைக்கு ஆவாதுன்னு மூலையில போட்டு இருந்த நாற்காலியில போயி உக்காந்துகிட்டேன்.

கொஞ்ச நேரம் தலை குனிஞ்சுகிட்டே ஆசுவாசப்படுத்திகிட்டேன். பணிவு எல்லாம் இல்லீங்க, நோவுதான். சித்த நேரம் கழிச்சு சுத்தி உக்காந்து இருக்கிறவங்கள பார்த்தேன். 2 இந்தியக் குடும்பங்க, 3 வெள்ளைக் குடும்பங்க,1 கருப்பு பொண்ணு மட்டும். இந்தியக் குடும்பத்துல இருந்தவங்க என்னையே பார்த்துட்டு இருந்தாங்க, லேஸா சிரிக்கவும் செஞ்சாங்க. அம்மணிகிட்ட திரும்பி
"பார்த்தியா, ஐயாவுக்கு என்னிக்குமே மவுசுதான்".


"உலகத்துல முட்டாள்னா அது நான் மட்டும்தான். வேற எல்லாம் இல்லே. இது வேற கதையா இருக்கும். ஆமா இந்த நேரத்துல கூட கிளுகிளுப்பு கேக்குதோ?".

இந்த பன்னு நமக்குத் தேவையா? இந்த ஊரு கலாச்சாரம் ஆச்சே.. அவுங்கள பார்த்து நானும் சிரிச்சேன். அந்த ஆம்பளையும் சரி, பொம்பளையும் சரி என்னை பார்த்துகிட்டே இருக்காங்களே தவிர ஒரு பதில் சிரிப்பும் இல்லே.
"சே, சிங்கத்த சேதாரம் பண்ணிட்டாங்களே"ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வெள்ளைக்காரியப் பார்த்தேன். அதுவும் என்னையே பார்க்குது, அதுவும் விடாம. எல்லாரும் என்னையே பார்க்குறாங்கன்னா ரெண்டு விஷயம் தான் இதுல இருக்கு. ஒன்னு நான் ரொம்ப அழகா இருக்கனும், இல்லாட்டி போடக்கூடியதை(இருபல் இணை) மறந்து போடாம இருந்து இருக்கனும். அப்படியே சுத்தி பார்க்குற மாதிரி கொஞ்சம் நேரம் ஜன்னலைப் பார்த்தேன், அப்படியே எதிர்த்தாப்புல இருக்கிற படத்தைப் பார்த்தேன், நைஸா குனிஞ்சு பார்த்ததுக்கப்புறம்தான் பெரு மூச்சு விட்டேன். போட வேண்டியதை எல்லாம் சரியாத்தான் போட்டு இருக்கேன்.

அப்புறம் என்ன? சரி ஒரு புத்திசாலிய எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாங்கன்னு மனச தேத்திகிட்டேன். எவ்வளவு நேரம்தான் உக்காந்தே இருக்கிறது, கொஞ்சம் உலாவலேம்னு எந்திருச்சு மக்களைப் பார்த்தேன். இப்பவும் எல்லாரும் என்னையத்தான் பார்க்கிறாங்க, ஆனா சலிப்பா, கோவமா. நாம அசந்து இருந்த நேரத்துல, நாம புத்திசாலி இல்லீங்கிறத அம்மணி சைகையாலே அவுங்களுக்கு சொல்லிருப்பாங்களோ? இருக்காது.

வேற என்னவா இருக்கும், இப்பவும் அந்த மக்களை பார்த்தேன், அதே கடுப்பு, கோவம்.

"என்னவா இருக்கும்?"

திரும்பி பார்த்தா சத்தமில்லாம ஒரு தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு. அடப் பாவிகளா இதைத்தான் இவ்வளவு நேரம் பார்த்துகிட்டு, சிரிச்சுகிட்டு இருந்தீங்களா?
"தலைக்கு மேல இவ்வளவு பெரிசா படம் ஓடிட்டு இருக்கு நமக்கு இது தெரியாம போச்சே. என்னமோ என்னையதான் பார்த்துகிட்டு இருந்தீங்கன்னு இல்லே அம்மணிகிட்ட சவடால் விட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேலையுமா ஒரு கேவலம் வேணும்?"

இப்போ இருக்கிற நோவ விட இந்தக் கேவலம் கடுப்படிக்க மறுபடியும் நான் அவுங்கள பார்க்க ஆரம்பிச்சேன், அவுங்க என்னைய பார்க்க ஆரம்பிச்சாங்க.

Saturday, March 29, 2008

நீ என்னான்ற... ஏய் இப்போ என்னான்ற

செம தாக்கு.. ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பாட்டு கேட்டு. இதுக்கு யாரு இசை அமைச்சாங்க? பின் புலம் சொல்லுங்களேன். MP3 உரல் கிடைக்குமா?

RC New Boys and Girls - இவுங்க யாரு? எந்த ஊர்ல இருக்காங்க?

Saturday, March 1, 2008

KADHALIKKA NERAMILLAI - Title Song

ஒரு மூணு வாரமா மனசுல இந்தப்பாட்டத் தவிர எதுவுமே ஓட மாட்டேங்குதுங்க. நாடகம் பார்க்கிற பழக்கம் இல்லைன்னாலும் இந்த தலைப்பு பாடல்கள் கலக்கோ கலக்குன்னு கலக்குதுங்க. மெட்டி ஒலி, கங்கா யமுனா சரஸ்வதி, ரயில் ஸ்நேகம் இப்படி நெறைய சொல்லிகிட்டே போவலாம். இப்போ விஜய் ஆண்டனி பாட்டு சின்னத்திரையில கலக்கிட்டு இருக்கிற நேரத்துல அவரை பாராட்டியே ஆவனும். ஏற்கனவே "கனா காணும் காலங்கள்" பாட்டு கலக்கிட்டு இருக்க இப்போ இது கலக்கிட்டு இருக்கு. கூகிள்ல இந்தப்பாட்டை நாந்தான் மொதல்ல தேடுறேனு நினைச்சா 10 ஆயிரம் பேரு அதுக்கு முன்னாடியே தேடி இருக்காங்க. அதான் பதிவுல மக்களுக்கும் இந்தப் பாட்டை குடுக்கலாம்னு ஒரு எண்ணம். பாடல் வரிகள் கூட பாட்டும் இருக்கு. பிரஜன் உனக்கு எங்கேயோ மச்சம்யா...

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)

யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)


For Download : Here

பாடலைப் பார்க்க




இந்தப் பாடல் தேன்கிண்ணம் குழு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Thursday, February 28, 2008

எனக்கு இந்தப் பரிசு வேண்டாம்- யாருக்காவது வேணுமா?

Claim Ref. Number: 34V/27N/30H 03NL
Batch Number: EZ90 556 MB-NL 88
SERIAL NO: 289567-09

Sir/Madam,
This email is to notify you that your
Email
Address attached to a Ticket Number(00106912000.00) has won an
Award Sum of Euro 1,000.000.00(One Milliom EURO)In an Email Sweepstakes
program held on the 26th of Febuary 2008. Please contact the claim
officer through the below given contact information for the Claim
CASINO LOTTERY CLAIM AGENCY.
casinoclaim@gmail.com

WINNING
INFORMATIONS
Ref Number (34V/27N/30H 03NL)
Serial Number 78097
lucky
Numbers 4426765
Batch Number: EZ90 556 MB-NL 88
Serial No: 289567-09
Please forward the above stated winning information with your name and
telephone to the Euro Claim Agent.
........................................................................................................................
Congratulations!!!

Mrs Precious Walker.
Reply email: casinoclaim@gmail.
com

Monday, February 11, 2008

காஃபி வித் அனு

வார நாட்கள்ல சன் தொலைக்காட்சி பக்கமே போவ முடியாது. எங்கே, எப்போ பார்த்தாலும் ஒப்பாரியாத்தான் இருக்கும். அப்போதான் நமக்கு புடிச்ச லொள்ளு சபா மாதிரியான நிகழ்ச்சிகள் விஜய்ல கல்லா கட்ட ஆரம்பிச்சது. அதுல ஒன்னுதான் இந்த காபி வித் அனு. காந்த குரலுக்கு சொந்தக்காரின்னு சொன்னா அது சுச்சிதாங்க. அதாங்க ரேடியோ மிர்ச்சி புகழ் சுசித்ரா. (கொசுறு: காக்க காக்க படத்துல உயிரின் உயிரே பாட்டுக்கு முன்னாடி வருமே " ஒம்மாஹ சீய வாஹியாலா" அப்படின்னு பாடினதே சுச்சிதான்.

அலட்டல் இல்லாத பேச்சும், கனிவும்.. சக்கரை பதமா போட்ட காஃபி மாதிரியே ஒரு புதுமையா இருக்கும். நிகழ்ச்சி ஆரம்பிச்சு செம ஓட்டம் ஓடிச்சு. முதல்ல ஒருத்தரு வருவாங்க, அவுங்களுக்கு ஒரு அறிமுகம், அப்படியே ரெண்டாவதா ஒருத்தரை 5 நிமிஷம் கழிச்சு கூப்பிட்டு ரெண்டு பேரின் பொதுவா நடந்தது, அவுங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்க, Rapid Fire கேள்விங்க, கடேசியா கையெழுத்து போடுறதுன்னு பழைய மாவை நல்லா அரைச்சாங்க. அதுவும் அந்த title இசைக்காகவே ஒக்காந்து பார்ப்பேன். அந்த இசைய ரிங் டோனா எல்லாம் வெச்சு இருந்தது ஒரு காலம். அப்ப எல்லாம் வாரம் தவறாம பார்ப்பேன். அப்பதான் வெச்சாங்க சூன்யம்.


சுச்சி போயி அனு வந்தாங்க. மொத ரெண்டு வாரமுமே கடுப்பா ஒக்காந்து பார்த்தேன். அப்புறம் பழகியிருச்சு. மாத்தம் வேணுமின்னாலும் உடனடியா ஏத்துக்க முடியாதில்லயா. ரெண்டு மாசம் போன பின்னாடி சுச்சி இடத்தை சரியா புடிச்சு கிட்டாங்க, அனு. திரும்பவும் நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமா போச்சு. அப்பப்போ அறிவிப்புக்காக சுச்சி குரல் கேட்கும்போது மட்டும் கவலையா இருக்கும். அவ்ளோதான்.

முதல்ல நண்பர்கள், உறவினர்கள்னு கூட்டி வந்து கலக்குனாங்க. தினேஸ் கார்த்தி (தமிழே வராதா கார்த்தி?), பாலாஜி, பாலு , கங்கை அமரன் &sons, விவேக், பார்த்திபன் கலந்துகிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனசுல நிக்குது. சில நிகழ்ச்சிகள் மனச கல்லாக்கியிருக்கு, உஷா உதூப், பாலமுரளி கிருஷ்ணா மாதிரியான நிகழ்ச்சிகள். அதுலயும் விவேக்கு அனுவை ஓட்டு ஓட்டுன்னு ஒட்டின வாரம் செம கலாட்டா.

உடனே சன்னும் அனுவோட மருமவளை வெச்சி "அன்புடன்"னு கமலை பேட்டி காண்கிற மாதிரி அமர்களமா ஆரம்பிச்சி எப்போ நிறுத்தினாங்கன்னே தெரியல. பல நிகழ்ச்சிகளை காப்பி அடிச்சுகிட்டது சன். அதுல ராஜ்குமார் &coவை அப்படியே வெலை பேசி "கலக்கப்போவது யார்?" மொத்த யூனிட்டையும் தூக்கிட்டுப்போனாங்க. பேரைக்கூட "அசத்தப்போவது யாரு?" ன்னு அப்படியே MicroSoft மாதிரியே வெச்சு இன்னும் மதுரை முத்துதான் வராப்ல. ஹ்ம்ம் சரி, மறுபடியும் காப்பியே குடிப்போம் வாங்க...

இப்படி அனு ஆத்துன காப்பியும் போன தீவாளி வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் ஆரம்பிச்சாங்க மொக்கைய. படம் ரிலீஸ் ஆவுதா, கூப்புடு இயக்குனரு, நடிகரு, நடிகையன்னு. பழநி படம்- பரத், பேரரசு, காளை படம்- சிம்பு(ரிப்பீட்டு), தருண் கோபி, ஈக்கமாத்து குச்சி வேதிகான்னு நிகழ்ச்சு போவுது. சரி வர்றவங்க வேற ஏதாவது பேசுவாங்கன்னு பார்த்த படம் பத்தியும், அது குப்பையா இருந்தாலும் ஆஸ்கார் ரேஞ்சுக்கு பேசுறதும் செம கடுப்பு. அதுலையும் போன வாரம் சிம்பு "நமக்கு ஏன் இவ்வளவு எதிரிங்கன்னே தெரியல". அதுக்கு அனு "திறமை இருந்தாவே எதிரிங்க இருக்கிறது சகஜம்". அப்ப போட்டாரே சிம்பு "அதுல நமக்கு கொஞ்சம் ஜாஸ்தியா வேற இருக்கா.....". எப்பா திருந்து ராசா.. இப்படி எல்லாம் ஓடுது இந்த நிகழ்ச்சி. எப்படியோ சுச்சி போனாலும், அனு அந்த இடத்தை சரியாப் புடிச்சுட்டாங்க. ஆனா இப்படியே மொக்கையா போச்சுன்னா யாரும் காப்பி குடிக்காம யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி ஆயிரும்.

Thursday, January 31, 2008

சில மேற்'குறி'யீடுகள்

வலைப்பூவில் இன்று படித்தது...கவிஞர் நாதாரி யின் ஒரு கவிதை..

ILA(a)இளா said...
சார், இந்த மாதிரி மலம், கழிவுன்னு இல்லாம கவிதை போட முடியாதுங்களா? நல்ல வார்த்தய போட்டு கவிதை எழுதினா நல்ல கவிதை வராதுங்களா? எனக்கு இந்த கவிதையின் கரு பிடிச்சு இருந்தாலும், கையாளப்பட்ட வார்த்தைகள் பிடிக்கலைங்க. இந்த மாதிரி கவிதைகள் பெரும்பான்மை மக்கள் விரும்புறது இல்லீங்க. இது உங்க பதிவு நீங்க கவிதை போடலாம், எடுக்கலாம். உங்க உரிமை,ஏன்னா உங்க பதிவு இது. நாளைக்கே நாங்களும் பதிவை படிக்க வரனும், செல்லான்னா இப்படித்தான் கவிதை போடுவார்ன்னு நினைக்க வெக்காதீங்க.
July 17, 2007 6:42 PM
OSAI Chella said...
இளா, எதிர் அழகியல் பற்றிய உங்கள் புரிதல் போதவில்லை என்று நினைக்கிறேன். சுகுணா திவாகரின் பதிவுகளில் தேடினால் கிடைக்கும். மற்றபடி அக்கவிதை அவரின் இயல்புநடையிலேயே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அவர் ஒன்றும் தென்றல் வீசும் மாளிகை மாடத்தை பற்றி இங்கு எழுதவேயில்லை இளா. அப்படி இருந்தால் உங்கள் அழகியல் வெளிப்படிருக்கும்! அது சரி இம்மதிரிக்கருத்துக்கள் கொண்ட ஒரு அழகான கவிதையை வைரமுத்துவிடமோ வாலியிடமோ இருந்து காண்பியுங்களேன் பார்க்கலாம். அவர்களின் அ'ல'கை!!
July 17, 2007 7:31 PM ILA(a)இளா said...
எனக்கு புரிதல் எல்லாம் தெரியாதுங்க, படிச்சா நல்லா இருக்கான்னு மட்டும்தான் சொல்லத்தெரியும், இதுக்கு எதுக்கு வாலியையோ, வைரமுத்தையோ இழுக்கனும்? ஒத்துக்கிறேங்க, உங்க அளவுக்கு கவிதை அறிவு எனக்கு இல்லே. ஆனா எனக்கு இந்த கவிதை அருவருப்பாதான் இருந்துச்சு, இன்னும் இருக்கு. இதுக்காக என்னை கவிதை அறிவில்லாதவன்னு சொல்லிக்குங்க, வழக்கம் போல ஹிஹின்னு போட்டுட்டு போறேன், அருவருப்போட..


//எதிர் அழகியல் பற்றிய உங்கள் புரிதல் போதவில்லை என்று நினைக்கிறேன்//இப்படி மலம் கழிவுன்னுதான் எழுதினாதான் எதிர் அழகியல் புரிய வெச்சதுக்கு நன்றிங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லீங்க.----------------------------------------------------------------------------------

நான் : .... எதிர் அழகியல் பற்றியும் சொல்லி இருக்கலாம். தமிழ்ப்பதிவர்களுக்கு ரொம்பவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்குங்க, என்னையும் சேர்த்து.


அய்ஸ்:
இளா

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை சிறிது கடினம்தான்..பழக்கப்பட்ட அல்லது தான் நம்பும் ஒன்றை சிதைக்க இயலாத குறுகிய மனங்களே கவிதையில் ஆபாசம் என ஓ வென்று கத்துகிறார்கள்.புரியவில்லை என புலம்புகிறார்கள்..

-----------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் ஒரு கத்தி மாதிரிங்க. அதை சரியான விதத்தில் வெளிப்படுத்தனும். ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம்தான். வாந்தி எடுக்கிற மாதிரி கவிதை எழுதிட்டு எதிரழகியல்னு சொன்னா.. ஹிஹி எனக்கு அறிவு அவ்வளவுதான்னு ஒதுக்கிக்கலாம். எந்த அழகா இருந்தா என்ன? பெத்தவங்ககிட்ட வாசிச்சு காட்டுற மாதிரி இருக்கனுங்க. அதனால சொல்றது என்னான்னா "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று". கட்டற்ற சுதந்திரம் இருக்கு. அதை நல்ல முறையில பயன்படுத்திக்க வேணாம்.
பதிவுலக எதிரழகியலும் பொடலங்காயும்.. தூத்தெறி

Wednesday, January 16, 2008

இந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?

  1. மாண்டாட்டு- -பலூன்
  2. தம்பூச்சி- அம்மாயி-அம்மாவின் அம்மா
  3. பெளபெள- டைனோசர்
  4. அப்பா ஒய்- அப்போய்
  5. டாப்டாப்- மடிக்கணினி
  6. மானா-வேண்டாம்
  7. பாச்சு- பாஸ்(சிவாஜி)
  8. பியூவ்ன்- போ
  9. பூவ்-போ
  10. ச்சுச்சு-சிறுநீர்
  11. ஆயி-லாரி/ஆயி
  12. கூக்கு-கோக்
  13. காயி-கோழிக்கறி
  14. பூனு-பேசி
  15. கவுஸ் -கையுறை
  16. பீனு-1-ஒபன்
  17. பீனு-2-பேனா
  18. ஊய்யா-சூர்யா
  19. ஐயா-இளா
  20. மிம்மீ-மம்மீ
  21. டாட்லி-டாடி
  22. பீயா-பீட்சா
  23. ட்டாலர்-ஸ்ட்ராலர்
  24. கோஸு-க்ளோஸ்
  25. சாக்கு-சாக்ஸ்
  26. கீய-கீழே
  27. யாக்-உவாக்
  28. சூப்ப-சூப்பர்
  29. ட்ரெக்கு-ஷ்ரெக்
  30. போயிசு-போலீஸ்
  31. உன்னிஉன்னி-ஆம்புலன்ஸ்லிருந்து வரும் சத்தம்
  32. அக்கு -கடி
  33. ஈபா-ஐ பாட்
  34. பாட்டா-பாட்டு
  35. ஈமோ-ரிமோட்
  36. பீப்ப-பேப்பர்
  37. புர்ஸூ-பெரிசு
  38. உய்யி-ஆகாய விமானம்

இன்னும் நிறைய இருக்குங்க, இவ்ளோதான் இப்போ ஞாபகத்துக்கு வருது. பின்னூட்டத்துல சொல்லிடறேன் இல்லைன்னா இதுலையே சேர்த்துடறேன்.

இந்த வார்த்தைக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியும், உங்களுக்கு தெரியலைன்னா ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளரை பாருங்க.

மேலே இருக்கிற அத்தனை வார்த்தைகளும் எங்க வீட்டு வாரிசு சொல்லுற வார்த்தைங்கதாங்க. ஒவ்வொரு வீட்லையும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் பொதுவா ஒரு மொழி இருக்கும், இது அடுத்த வீட்டு மக்களுக்கு தெரியறது ரொம்ப கஷ்டம். மக்கள் யாராவது எங்க வீட்டுக்கு வந்தா ஏதோ வேற மொழி பேசுற ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வந்துரும். இதுவும் ஒரு மொழி திணிப்பு தாங்க, ஆனா சுகமான திணிப்பு. என்ன பண்ண எல்லாம் ஒரு வட்டம்தான். போக போக அந்தக்குழந்தையே பல மொழி கத்துக்கிட்டு நம்மகிட்டயே படம் காட்டுவாங்க. அப்போ அந்த பெரிசான குழந்தைக்கே இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆனா அப்பா, அம்மாவுக்கு மட்டும் காலம் முழுசா இந்த வார்த்தைகள் காதுல கேட்டுகிட்டே இருக்கும். நாம் எடுத்து கொஞ்சுறபோது இருக்கிற ஒரு பாசம் பெரிசானா கம்மியாயிடலாம். அப்போ இந்த வார்த்தைகளும், நெஞ்சில் வாங்கிய மிதிகளும், கையில் துடைத்தெடுத்த எச்சிலும்தாங்க சுகம்..

"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவர்'' (குறள்-66)"

Sunday, January 13, 2008

சில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு


(1) அகாடியா-மைனேவுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணம் சென்ற பொழுது எடுத்த படம்.
நேரம்-தமிழில் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், நடுநிசியைத்தாண்டி..




(2) இதுவும் அதே இடத்தில் விடியற்காலை எடுத்த படம். அப்போதும் தமிழில்தான் சிந்திப்பதைப்பற்றி சிந்தித்திக் கொண்டிருந்தோம்.


(3)கார்னிங்- கண்ணாடி மாளிகையில் எடுத்த படம். கண்ணாடியிலேயே ஒரு அலங்காரம்..


(4) கார்னிங்- கண்ணாடி மாளிகை.

நிர்மூலம் உடையின் நிர்வாண

மென்றால்

நிர்வாணமும் ஒரு வகையில்

நீர்மூலமே.


(5) என் வீட்டில் ஒளி கொடுக்கும் இன்னொரு சில்லு. சுச்சியப் போட்டா வெளிச்சம்வரும் சில்லு.

(6)என் வீட்டு குளியறையில் இருக்கும் காலி குடுவை.
குளியறையிலே இருந்தாலும்
வெளிச்சத்தில் மட்டுமே
நிதமும் குளிக்கிறது..
காலியாய் இருப்பதால்
தினமும் நிரப்புகிறேன்
நீராவியால்...

Thursday, December 20, 2007

சங்கமம்-ஏன் இத்தனை சச்சரவு?

நான் ஆங்கில பதிவுதாங்க மொதல்ல எழுதினேன். அப்போ இருந்த ஒரு கூட்டம் (CAT prep) பண்ணிட்டு இருந்தோம். IIMல சேரனும்னு வெறி. அப்போ தான் பதிவுகள் எங்களுக்கு பழக்கம் ஆச்சு(2003 கடைசியில). எங்களுக்கு நாங்களே படிச்சுக்குவோம். பின்னூட்டம் எல்லாம் அப்போ கிடையாது. HaloScan வந்தப்புறம் பின்னூட்டம் போட வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும் எங்களுக்கு சரியான பதிவர் வட்டம் இல்லே. CATக்கு படிச்சுட்டு இருந்த ஒரு 100 பேரு படிப்போம். அப்புறம் தமிழ்மணம் பார்த்து தமிழ் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் எவனும் படிக்கிறது இல்லே அப்புறம் எதுக்குன்னு ஆங்கிலத்துல எழுதறத விட்டுட்டேன்.


இந்த வருசம் வரைக்கு ஆங்கில பதிவை சீண்டல. இந்த வருசம் ஆகஸ்டு மாசம், சும்மாத்தானே ஆன்சைட்ல இருக்கோம், blogdesam த்தை வாங்கலாமே வாங்கி, தமிழ்மணம் மாதிரியே ஆங்கில பதிவுகளுக்கும் ஒரு இடம் குடுப்போம்னு, காசி அண்ணாக்கு ஒரு மடல் தட்டினேன். அண்ணன் சொன்னாரு "இல்லே இளா, TMIக்கு தமிழ்மணத்தை குடுக்கும் போதே குடுத்துட்டேன், வாக்கு தவற கூடாதுல்ல" அப்படின்னாரு. அண்ணனையும் அவுங்ககிட்ட கேட்டுச் சொல்லுங்கன்னு கேட்டு வற்புறுத்தவும் மனசு இடம் குடுக்கலை. சரி, தமிழ்மணத்தை கேட்கலாம்னா யாருன்னே தெரியல. சரி நாமே ஒன்னு பண்ணிரலாம்னு முடிவு செஞ்சு, ஒத்த ஆளா போராடினேன். இதுல இன்னொரு காமெடி என்னான்னா? System Adminஆ இருக்கிற நான எப்படி ஒரு website பண்ணப்போறேன்னு ஆரம்பிச்சது. சரி படிப்போம்னு, அங்கங்கே இருக்கிற உதவி பக்கத்தையெல்லாம் தேடிப்பிடிச்சு படிச்சு, அங்கங்கே இருக்கிற தானியங்கி இற்றைப்படுத்திற கருவியெல்லாம் ஒன்னு சேத்தி, ஒரு முழு வடிவமா கொண்டு வர 2 மாசம் ஆகிருச்சு. அப்படியே ஓட்ட ஆரம்பிச்சேன்.(Mid of October). அதுபாட்டுக்கு ஓடிட்டு இருந்துச்சு. நவம்பர் கடைசி வரைக்கும் யாருக்கிட்டேயுமே ஒன்னும் சொல்லலை. மக்களா வந்தாங்க, சேர்ந்தாங்க, படிச்சாங்க. அவ்ளோதான். பெரிய எதிர்ப்பார்ப்பும் அதுல எனக்கே அங்கே இல்லே. எங்க மக்களுக்காக ஆரம்பிச்சத்துதானே, விட்டுட்டேன். அப்புறம் தமிழில் இருக்கும் கதை கவிதைகளை ஒரு இடத்துல கொண்டு வரனும் உருவாக்கினதுதான் இப்போ இருக்கிற சங்கமம் பதிவு.

உமர் தம்பி போன்றவங்களுக்கு தமிழ்ப் பதிவுலகத்துல ஒரு இடம் இருக்கு, அதை அங்கீகாரம் பண்ணித் தரணும் அப்படிங்கிறதுதான் என் அடிமனசுல இருந்த எண்ணம். உமர் தம்பி உட்பட 3 பேருக்கு பதிவர்கள் சார்பா பட்டமும், பதிவர்களுக்கு விருதும் தராலாமேனு யோசிச்சேன். ஒரு பதிவரா இதைச் செய்யுறதுல ஏதும் தப்பில்லைன்னு நான் நினனச்சேன். இதையே மையமா வெச்சு NRIக்கள் எல்லாம் சேர்த்து ஒரு துறையில நலிந்த கலைஞருக்கு பொருளுதவி பண்ணலாம்னும் ஒரு யோசனை. அப்போதான் தஞ்சாவூரான் இந்த விஷயத்துக்காக என்னை ஊக்குவிச்சாரு. பதிவர் விருதுக்காக முதல்ல கட்டமா நடுவர் குழுவை சேர்க்க ஆரம்பிச்சேன். இது என்னளவிலும், பிறகு நடுவர் குழுக்களாலேயே மொத்த குழுவாவும் உருவாச்சு. இது நவம்பர் மாசம் கடைசியில நடந்தது. இதுவரைக்கும் தனியாளா இருந்த நான் நடுவர் குழு வந்ததுக்கப்புறம் ஒரு குழுவா ஆகிட்டேன். சரி விருது நடத்த இடம்?

இருக்கவே இருக்கு Blogkut, விருதுக்காக ஒரு இடம் போடுவோம்னு ஒரு தனி Sub-D0main தயார் பண்ணினேன். சில சட்டம் திட்டம் எல்லாம் நடுவர் குழுவுல இருந்து பேசி முடிவுக்கு வந்தோம். ஒத்த வரியில விருதுக்கான முதல்ல அறிவிப்பும் செஞ்சேன். இந்த விருது சச்சரவு வர வரைக்கும் பேரெல்லாம் வெக்கலை. அடுத்த 12 மணிநேரத்துல தமிழ்மணத்துல இருந்து தமிழ்மணம் விருதுகள்னு அறிவிப்பு. சரி, ஆட்டத்தை கலைச்சரலாம்னா நடுவர்குழுவுக்கு என்ன பதில் சொல்றது. சரி நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தச் சமயத்துல ஒரு லோகோவோ, ஒரு பேரோ கூட சங்கமத்துக்கு இல்லே.

பேரில்லாத அந்த So called திரட்டி அப்போ ரெண்டே ரெண்டு பதிவைத்தான் திரட்டிக்கிட்டு இருந்துச்சு. இன்னும் பின்னூட்டம் திரட்டல்ல அந்த ரெண்டு பதிவுதான் இருக்கு. அடுத்த நாள் மக்களே அந்தப் பதிவை வெச்சே திரட்டிக்கு பின்னூட்டமாவும், பதிவாவும் பேர் வெக்க வேற வழியில்லாம சங்கமம்னே Logo போட்டுவிட்டு விதிமுறைகளை வெளியிட்டேன். அங்கே ஆரம்பிச்சதுய்யா ஆட்டம். இருவருமே விருதுகள் அறிவித்து ஏன் பதிவர்களை குழப்பனும்னு தமிழ்மணத்துக்கு ஒரு மடலையும் போட்டுட்டு சூடாகிற பதிவை எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டேன். தமிழ்ல அசைக்க முடியாத இடத்துல இருக்கிற தமிழ்மணத்து மேலையும், காசி அண்ணா மேலையும் எனக்கு மதிப்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு.

அவ்ளோதாங்க நடந்த விஷயம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதிட்டேன். மீதி எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)