எங்கேயோ எப்பயோ படிச்ச ஞாபகங்க. அதுக்கு அர்த்தமும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். இப்போ அதைச் சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். வ.வா. ச போட்டிக்குச் சரியான நேரத்துல கேட்டுட்டா ஒரு பரபரப்பு வருமே.
இந்த மாதிரி சரியா பின்பற்றினா வாழ்நாள் கூடும்னு சொல்லி இருக்காங்க சித்தர்கள்(?!)
இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க.
- தினம் இரண்டு
- வாரம் இரண்டு
- மாதம் இரண்டு
- வருடம் இரண்டு
இப்ப இந்த "இரண்டு"களுக்கு என்ன அர்த்தம்? பதில் சொல்லுங்க, பார்ப்போம்.
தினம் இரண்டு-----வேளை உணவு
ReplyDeleteவாரம் இரண்டு---- எண்ணெய்க் குளியல்
மாதம் இரண்டு----- அடல்ட்ஸ் ஒன்லி
வருடம் இரண்டு ---- ஊருக்குப் போய்வர்றது:-))))
டீச்சர்,
ReplyDeleteநீங்க சொல்றது சரியா கூட இருக்கலாம். நான் படிச்சது வேற மாதிரி இருந்துச்சே.. பார்ப்போம் மக்கள் என்ன சொல்றாங்கன்னு
குன்சா அடிக்கிறேன்..
ReplyDeleteதினமும் இரண்டு முறை - கக்கா போகனும்
வாரம் இரண்டு முறை - எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கனும்
மாதம் இரண்டு முறை - வயிற்றை கழுவனும்
வருடம் இரண்டு முறை - மொட்டை அடிச்சிக்கனும்..
தினம் இரண்டு - உணவு
ReplyDeleteவாரம் இரண்டு - ச்சீ.. கல்யாணம் ஆனவன்ங்க மேட்டர்
மாதம் இரண்டு - தீபாவளிக்கு மட்டுமல்ல எண்ணைக் குளியல்
வருடம் இரண்டு - ஊர்சுற்றுவதா ? சும்மா பூச் சுற்றாதிங்க !
TBCD- ஒன்னு சரின்னு நினைக்கிறேன்
ReplyDeleteகோவி- அதே ஒன்னுதாங்க.
என்னைய எல்லாரும் குழப்பறாங்களே :(
வ.வா.ச போட்டிக்கு ரைமிங்கா இருக்கட்டுமேன்னுதான் இரண்டுன்னு போட்டு இருக்கேன், உண்மையா
ReplyDelete"நாள் இருமுறை,
வாரம் இருமுறை,
மாதம் இருமுறை,
வருடம் இருமுறை "
என்பதே சரியான வாசகம்.
TBCD: //வருடம் இரண்டு முறை - மொட்டை அடிச்சிக்கனும்..//
ReplyDeleteஹிஹி யாருக்குன்னு சொல்லவே இல்லியே :))
நாள் இருமுறை, -to toilet
ReplyDeleteவாரம் இருமுறை - oil bathing
மாதம் இருமுறை - intercourse
வருடம் இருமுறை - fasting
sorry for the cut paste and english fonts.
நாள் இரண்டு - நாள் ஒன்றுக்கு
ReplyDeleteஇரண்டு முறை மலம் போக்க வேண்டும்! என்பதையும், வாரம்இரண்டு-வாரம் இரண்டு முறை
எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்! என்பதையும், மாதம் இரண்டு - மாதம்
இரண்டு முறை இல்லற இன்பம் துய்க்க வேண்டும்! என்பதையும், வருடம் இரண்டு -
வருடத்திற்கு இரண்டு முறை குடலைச் சுத்தஞ் செய்ய வேண்டும்! என்பதையும்
குறிப்பதாகும்.
VSK- நீங்களே சொன்னா அப்பீல் ஏதுண்ணே..
ReplyDeleteபெரிசு,- கடேசி மட்டும் ஒருதடவை பார்த்துக்குங்க.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
ReplyDelete....
....
....
இளா,
ReplyDeleteநாள் இரண்டு-மலம்
வாரம் இரண்டு-சவரம்
மாதம் இரண்டு-புணர்வு
வருடம் இரண்டு-பேதி மருந்து.
சீனா, நீங்க எழுதி இருக்கிற ஒன்று சரியே.
ReplyDeleteதினம் இரண்டு - ஆய் போகனும்
ReplyDeleteவாரம் இரண்டு - குறைந்த பட்சமா குளிக்கனும்
மாதம் இரண்டு - உடலுறவு
வருடம் இரண்டு - பேதி மாத்திரை சாப்பிடனும்
அறிவன் - வாரத்தைத் தவிர மீதி எல்லாம் சரியாச்சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteஅமரபாரதி - வாரத்தைத் தவிர மீதி எல்லாம் சரியாச்சொல்லி இருக்கீங்க.
நடுராத்திரி அரைத் தூக்கத்திலிருக்கும்போது ஞாபகம் வந்துச்சு.
ReplyDeleteகடைசி ரெண்டு அதான் வருசம் ரெண்டு, பேதி மருந்து.
thinam rendu- sami kumbadarathu
ReplyDeletevaram rendu- ennai kuzhiyal
madham rendu-padam pakurathu(escaped the adults only bit)
varudam rendu- pandigai -deepavali,pongal
enna sariya?