தமிழ்ல என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு போட்டாலும் தேடு பொறியில நம்ம பதிவு வர மாட்டேங்குதேன்னு புலம்புறீங்களா? அப்போ இந்தப் பதிவ படிக்கலாம். மொதல்ல ப்லொக்கர் பார்ப்போம். ப்லொக்கர்ல தலைப்பை தமிழ்ல வெக்கும்போது அதனோட தலைப்பு உருவாகுறது எப்படின்னு பாருங்க.
ஒரு உதாரணம்: போன பதிவுக்கு நான் வெச்ச தலைப்பு பாருங்க : என்னையே எல்லாரும் பார்க்குறாங்க. அதுக்கு ப்லாக்கர் குடுத்த உரல் பாருங்க -http://vivasaayi.blogspot.com/2008/03/blog-post_31.html
மேலே இருக்கிற உரலில் என்ன குறிச்சொல் இருக்கு?அதாவது உங்க பதிவோட பேரு, வருஷம், மாசம், அப்புறம் உங்க இடுகையின் தலைப்பு அப்படின்னு வரனும். ஆனா தமிழ்ல தலைப்பு வெக்கும்போது ப்லாக்கர்ல நீங்க தர்ற தலைப்பு வரது இல்லே. இப்போதைக்கு இந்த வசதி இல்லே. அதனால blog post-தேதின்னு வந்துரும். தேடு பொறிகள் எல்லாமே இந்த உரலை மையமா வெச்சு தான் தேடுது. அதனால நம்ம இடுகைகள் ஆங்கிலத்துல பேர் குடுத்து தேடினா கிடைக்கிறது இல்லை. தமிழ்ல தேடுற மக்களும் ரொம்ப குறைச்சலாவும் இருக்கு. ஆங்கிலத்துல தலைப்பை வெச்சா மக்கள் தேடும் போது உங்க பதிவுகள் கவனிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அப்போ தமிழ்ல தேடினா கிடைக்காதேன்னு கேட்டா? அதை உங்க பதிவே தேடல்ல சிக்கிக்கும். அதனால மக்கள் ஆங்கிலத்துல தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க. ஒரு நிமிசத்துல பண்ற வேலை இது.
உதாரணத்துக்கு இந்தப் பதிவோட உரல் பாருங்க. http://vivasaayi.blogspot.com/2008/04/tamil-blogs-easy-search.html.
Tamil Blogs அப்படின்னு தேடினா http://binarywaves.blogspot.com/2007/04/tamil-blogs.html இந்தப் பதிவு முதல் பக்கத்துல வந்துரும். இதுக்கும் இது என்னோட ஆங்கிலப்பதிவு. நேத்துதான் இந்தப்பதிவையும் போட்டேன் அதுவும் 50க்குள்ள இருக்கு. சூட்சுமமே இதுதான்.
இந்த விஷயத்துல Wordpress கொஞ்சம் முன்னேறி இருக்கு. அதாவது தமிழ்ல தேடினா கிடைகிற வசதி ப்லாக்கரை விட wordpressல கொஞ்சம் அதிகம். அந்தக் காரணமாவே wordpressக்கு போற மக்கள் அதிகம். ப்லாக்கர்லயும் இந்த மாதிரி விளையாடினா நிறைய பேர் பார்க்குற வாய்ப்பு அதிகமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
Good Idea. :-)
ReplyDeleteஆங்கிலச் சொற்கள் தலைப்பில் இருந்தாலோ எண்கள் இருந்தாலோ அவை உரலில் வருவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் இப்படி செய்து பார்கக் வேண்டும் என்று தோன்றியதில்லை. இனி மேல் இப்படியே செய்ய வேண்டியது தான்.
வகைப்படுத்துதலிலும் (லேபில் இடுவதிலும்) ஆங்கிலச் சொற்களை இட்டால் அப்போதும் உரல் இப்படி வரும் என்று நினைக்கிறேன். சோதித்துப் பார்க்க வேண்டும்.
தலைப்பில் ஆங்கிலச் சொல் ஒன்றிருந்தால் போதுமே. எதற்கு இப்படி சுற்றி வளைத்து?
ReplyDeleteஇப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தலைப்பு தெரியுமா அல்லது தமிழ் தலைப்பா?
//இப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தலைப்பு தெரியுமா அல்லது தமிழ் தலைப்பா?//
ReplyDeleteஇந்த முறையில பண்ணினா எந்தத்திரட்டியும் ஒரே மாதிரிதான் திரட்டும்.
இளா,
ReplyDeleteதமிழ் பிலாக்களை தமிழில் தேடினாத்தான் காட்டும், ஆங்கிலத்தில் தேடுறவங்களுக்கு தமிழ் படிக்க தெரிந்தால் அவங்க தமிழில் தேடிக்க மாட்டாங்களா?
அதே போல லேபிள் படுத்தும் போதும் ஆங்கிலம் வைத்தால் எளிதாக தேடலில் வருகிறது.
vivasaayi என்று ஆங்கிலத்தில் தேடினால் உங்கள் பதிவு கூகிள் தேடலில் இரண்டாம் பக்கத்தில் காட்டுகிறது, முதல் பக்கத்தில் இன்னும் பல விவசாயிகளின் படைப்புகள் வருது.
தமிழில் விவசாயி என்று போட்டால் வரக்காணோம்.
மெட்டா டேக்கில் vivasaayi.blog.spot என்று இருப்பதால் எளிதாக வருகிறது.
நாமே டெம்பிளேட்டில் மெட்டா டேக்கில் நம் பதிவினைப்பற்றிக்கூடுதல் விவரங்கள் சேர்த்தால் இன்னும் சிறப்பாக தேடுப்பொறியில் காட்டும் என நினைக்கிறேன்.
தேடு பொறின்னா கூகுள் சர்ச்?
ReplyDeleteதுளசி கோபால்ன்னு போட்டாலும் சரி, இல்லே Tulsi Gopal ன்னு போட்டாலும் சரி நிறைய பதிவுகளையும் மத்த இடத்துலே இருக்குறதையும் தேடித் தருதே.
இப்ப என்ன சொல்றீங்கன்னு மெய்யாலும் புரியலை(-:
பதிவுத் தலைப்பைச் சொல்றிங்களா?
இப்படிக்கு,
ககைநா
சின்ன விசயம்தான்.
ReplyDeleteசிறப்பாகச் சொன்னதனால்
எல்லோரையும்
சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
இந்தப்பதிவு காண
துளசி டீச்சர் பதிவு வழியே வந்தேன்.
என்ன ஆச்சரியம்.
இங்கேயும் துளசி டீச்சர் ஆஜர் !!
இன்னொரு சின்ன (!) விசயம்.
துளசி டீச்சர்ன்னு போட்டால்
கூகுளில் கூ..கூன்னு சத்தம் போட்டுகிட்டு,
தமிழ் வலைப்பதிவு உலக
டைரக்டரியே வருது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com
குமரன்,
ReplyDelete//ஆங்கிலச் சொற்களை இட்டால் அப்போதும் உரல் இப்படி வரும் என்று நினைக்கிறேன்.//
குறிச்சொற்களை தேடுபொறிகள் தேடுவதை இரண்டாம் பட்சமாகவே வைத்திருக்கின்றன.
//தலைப்பில் ஆங்கிலச் சொல் ஒன்றிருந்தால் போதுமே. எதற்கு இப்படி சுற்றி வளைத்து?
ReplyDeleteஇப்படி மாற்றி வைத்தால் தமிழ்மணத்தில் ஆங்கிலத் தலைப்பு தெரியுமா அல்லது தமிழ் தலைப்பா?//
ஆங்கிலத்தில் தலைப்பு வெக்காம இருக்கனும்கிறதுதான் குறிக்கோள். அதே சமயம் சுத்த தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்துல தலைப்பு வெக்கிறது அவ்வளவு உசிதமில்லையே. நம்ம பதிவு தேடல்ல வரனும் அதே சமயம் தமிழ்லயும் வரனும்னா இதுவும் ஒரு வழியே
இந்தப் பதிவைத் தொடர்ந்து ரவிசங்கரின் பதிவையும் படித்துப் பாருங்கள்
ReplyDeletehttp://blog.ravidreams.net/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
// தலைப்பு வெச்சு எழுதிட்டு Publish பண்ணிடுங்க. பிற்பாடு தலைப்பை மாத்திருங்க.//
ReplyDeleteமாத்திடுவோம்.
j
ReplyDelete