ஒடம்புக்கு சரியில்லாம ஒருத்தர் கூட வந்து இருக்கோம்னு கூட ஒரு தயவு தாட்சயண்மே இல்லாம தங்கமணி "மாமா, அங்கே பாருங்களேன். அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா நகத்தை வெச்சு(ஒட்டுதான்) இருக்கு?"ன்னு சொல்ல, கட்டாத கண்ணு அப்பத்தான் கட்டுச்சு. இனிமே நின்னா வேலைக்கு ஆவாதுன்னு மூலையில போட்டு இருந்த நாற்காலியில போயி உக்காந்துகிட்டேன்.
கொஞ்ச நேரம் தலை குனிஞ்சுகிட்டே ஆசுவாசப்படுத்திகிட்டேன். பணிவு எல்லாம் இல்லீங்க, நோவுதான். சித்த நேரம் கழிச்சு சுத்தி உக்காந்து

"பார்த்தியா, ஐயாவுக்கு என்னிக்குமே மவுசுதான்".
"உலகத்துல முட்டாள்னா அது நான் மட்டும்தான். வேற எல்லாம் இல்லே. இது வேற கதையா இருக்கும். ஆமா இந்த நேரத்துல கூட கிளுகிளுப்பு கேக்குதோ?".
இந்த பன்னு நமக்குத் தேவையா? இந்த ஊரு கலாச்சாரம் ஆச்சே.. அவுங்கள பார்த்து நானும் சிரிச்சேன். அந்த ஆம்பளையும் சரி, பொம்பளையும் சரி என்னை பார்த்துகிட்டே இருக்காங்களே தவிர ஒரு பதில் சிரிப்பும் இல்லே.
"சே, சிங்கத்த சேதாரம் பண்ணிட்டாங்களே"ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வெள்ளைக்காரியப் பார்த்தேன். அதுவும் என்னையே பார்க்குது, அதுவும் விடாம. எல்லாரும் என்னையே பார்க்குறாங்கன்னா ரெண்டு விஷயம் தான் இதுல இருக்கு. ஒன்னு நான் ரொம்ப அழகா இருக்கனும், இல்லாட்டி போடக்கூடியதை(இருபல் இணை) மறந்து போடாம இருந்து இருக்கனும். அப்படியே சுத்தி பார்க்குற மாதிரி கொஞ்சம் நேரம் ஜன்னலைப் பார்த்தேன், அப்படியே எதிர்த்தாப்புல இருக்கிற படத்தைப் பார்த்தேன், நைஸா குனிஞ்சு பார்த்ததுக்கப்புறம்தான் பெரு மூச்சு விட்டேன். போட வேண்டியதை எல்லாம் சரியாத்தான் போட்டு இருக்கேன்.
அப்புறம் என்ன? சரி ஒரு புத்திசாலிய எல்லாரும் அப்படித்தான் பார்ப்பாங்கன்னு மனச தேத்திகிட்டேன். எவ்வளவு நேரம்தான் உக்காந்தே இருக்கிறது, கொஞ்சம் உலாவலேம்னு எந்திருச்சு மக்களைப் பார்த்தேன். இப்பவும் எல்லாரும் என்னையத்தான் பார்க்கிறாங்க, ஆனா சலிப்பா, கோவமா. நாம அசந்து இருந்த நேரத்துல, நாம புத்திசாலி இல்லீங்கிறத அம்மணி சைகையாலே அவுங்களுக்கு சொல்லிருப்பாங்களோ? இருக்காது.
வேற என்னவா இருக்கும், இப்பவும் அந்த மக்களை பார்த்தேன், அதே கடுப்பு, கோவம்.
"என்னவா இருக்கும்?"
திரும்பி பார்த்தா சத்தமில்லாம ஒரு தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு. அடப் பாவிகளா இதைத்தான் இவ்வளவு நேரம் பார்த்துகிட்டு, சிரிச்சுகிட்டு இருந்தீங்களா?
"தலைக்கு மேல இவ்வளவு பெரிசா படம் ஓடிட்டு இருக்கு நமக்கு இது

இப்போ இருக்கிற நோவ விட இந்தக் கேவலம் கடுப்படிக்க மறுபடியும் நான் அவுங்கள பார்க்க ஆரம்பிச்சேன், அவுங்க என்னைய பார்க்க ஆரம்பிச்சாங்க.
:)
ReplyDeleteநல்ல அனுபவம்!
அதை போட்டா வேற புடிச்சீங்களா?
நல்ல வேளை! சிரிப்பு சீன் வந்ததால தப்பிச்சீங்க!
:-)))))))
ReplyDeleteநல்லா பாத்துகிட்டீங்கய்யா ... சரி, நோவு சரியாச்சா இல்லையா?
ReplyDeleteஅதுக்குத்தான், ஆராயாம அம்மணிகள்கிட்டே சவடால் விடக் கூடாது :)
அது சரி. ஆமாம், தலைக்கு மேல என்ன இருக்குன்னு கூட பார்க்கறது இல்லையா?
ReplyDelete//அது சரி. ஆமாம், தலைக்கு மேல என்ன இருக்குன்னு கூட பார்க்கறது இல்லையா?//
ReplyDeletePaathu irutharna pathivu pottu irukka maattarpa :) lol
தலைக்கு மேல் இருப்பதைப் பார்த்து சிரிச்சாங்களா... :P
ReplyDeleteஉள்ளே இருப்பதை நினைச்சு சிரிச்சாங்களா... :P
கொஞ்ச நேரம் பரபரப்பா இருந்திருக்கும், அப்படி என் கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன என்றுக் கேட்கத் தோணியிருக்கும்மே...கேட்டியிருந்தா...
பாவனாவிடம், ஸ்நேக் பாபு கேட்ட படக் காட்சிப் போலவே இருந்திருக்கும்.. :)))))))))))
/
ReplyDeleteபாவனாவிடம், ஸ்நேக் பாபு கேட்ட படக் காட்சிப் போலவே இருந்திருக்கும்.. //
அது என்ன?
//உள்ளே இருப்பதை நினைச்சு சிரிச்சாங்களா... :P//
ReplyDeleteஅதான் இருபல் இணை போட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கேனே..அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு..
இந்தப் படம் பாருங்க..
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Arya_(film)
அப்பறம் புரியும்..இல்லாட்டி..யூடுயுபில் தேடுங்க..
சுட்டிக் கிடைச்சா பிறகு நானும் தாரேன்
///
ILA(a)இளா said...
/
பாவனாவிடம், ஸ்நேக் பாபு கேட்ட படக் காட்சிப் போலவே இருந்திருக்கும்.. //
அது என்ன?
///
அண்ணே, மூளைக்கும்மா இனை...கொடுமையோ..கொடுமை.. :P
///
ILA(a)இளா said...
//உள்ளே இருப்பதை நினைச்சு சிரிச்சாங்களா... :P//
அதான் இருபல் இணை போட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கேனே..அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு..
///
ஒடம்பு இப்போ பரவாயில்லயா?
ReplyDeleteஅப்புறம் இதெல்லாம் அறிவாளிங்க லைப்ல்ல சகஜம்ய்யா :)))
நல்ல காமெடி, வாய் விட்டு சிரிச்சேன்
ReplyDeleteசரியாக 3 நிமிடம், 50 விநாடிகளில் இருந்து பார்க்கவும்...
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=m4DNzD2V5Pc
விவசாயி இளா = ச்னேக் பாபு என்று பதிவு போட இருந்தேன்.. :P
விவசாயி டிராக்டர் ஓட்டலாம்..
அதுக்காக நாம் அவரை ஓட்டலாமா என்று விட்டுவிட்டேன்.. :P
சங்கத்து சிங்கத்துக்கு இதெல்லாம் ஜகஜம். நாங்க இதுக்கெல்லாம் பயந்துட்டா பொழப்ப நடத்த முடியுமா..
ReplyDeleteஹி ஹி பல்பா.... :)
ReplyDeleteஒடம்பை பார்த்துக்கோங்க சாரே...
\தேவ் | Dev said...
ReplyDeleteஒடம்பு இப்போ பரவாயில்லயா?
அப்புறம் இதெல்லாம் அறிவாளிங்க லைப்ல்ல சகஜம்ய்யா :)))\\
ரீப்பிட்டே ;))