
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு…ஓஹ்
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதைச் சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்..
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்..
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)
யாரோ? உன் காதலில் வாழ்வது யாரோ?
உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ?
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ?
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ?
என் தனிமையின் அவஸ்த்தைகள் தீராதோ?
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!
(என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு......)
For Download : Here
பாடலைப் பார்க்க
இந்தப் பாடல் தேன்கிண்ணம் குழு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
Luvly title song, thanks for posting it:))
ReplyDeleteநன்றி அண்ணாத்த :))
ReplyDeleteவந்தனம் பிரவீனா, கப்பி
ReplyDeletethalaivaa miga arumai . thangkaL kavithai matrum anaithu pathivuglum miga arumai
ReplyDeletei had heared this song before somewhere and i thought its from some movie .. oh its very nice ..
அருமையான பாடல். வரிகள் கொடுததற்கு நன்றி. இப்பொழுது இறக்கிக்கொண்டு இருக்கிறேன். நன்றி
ReplyDeleteநாடகம் பார்க்கும் பழக்கம் இல்லை.ஆனா இந்தப்பாட்ட மட்டும் பல தடவை சில பேர்த்தோட ரிங் டோனா கேட்டிருக்கிறேன்.எப்பவும் இந்த 123musiqல தான் DL செய்வேன் இதை மட்டும் பாக்காம விட்டுட்டேன்.
ReplyDeleteரொம்ப நன்னி தல.