Monday, February 11, 2008

காஃபி வித் அனு

வார நாட்கள்ல சன் தொலைக்காட்சி பக்கமே போவ முடியாது. எங்கே, எப்போ பார்த்தாலும் ஒப்பாரியாத்தான் இருக்கும். அப்போதான் நமக்கு புடிச்ச லொள்ளு சபா மாதிரியான நிகழ்ச்சிகள் விஜய்ல கல்லா கட்ட ஆரம்பிச்சது. அதுல ஒன்னுதான் இந்த காபி வித் அனு. காந்த குரலுக்கு சொந்தக்காரின்னு சொன்னா அது சுச்சிதாங்க. அதாங்க ரேடியோ மிர்ச்சி புகழ் சுசித்ரா. (கொசுறு: காக்க காக்க படத்துல உயிரின் உயிரே பாட்டுக்கு முன்னாடி வருமே " ஒம்மாஹ சீய வாஹியாலா" அப்படின்னு பாடினதே சுச்சிதான்.

அலட்டல் இல்லாத பேச்சும், கனிவும்.. சக்கரை பதமா போட்ட காஃபி மாதிரியே ஒரு புதுமையா இருக்கும். நிகழ்ச்சி ஆரம்பிச்சு செம ஓட்டம் ஓடிச்சு. முதல்ல ஒருத்தரு வருவாங்க, அவுங்களுக்கு ஒரு அறிமுகம், அப்படியே ரெண்டாவதா ஒருத்தரை 5 நிமிஷம் கழிச்சு கூப்பிட்டு ரெண்டு பேரின் பொதுவா நடந்தது, அவுங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்க, Rapid Fire கேள்விங்க, கடேசியா கையெழுத்து போடுறதுன்னு பழைய மாவை நல்லா அரைச்சாங்க. அதுவும் அந்த title இசைக்காகவே ஒக்காந்து பார்ப்பேன். அந்த இசைய ரிங் டோனா எல்லாம் வெச்சு இருந்தது ஒரு காலம். அப்ப எல்லாம் வாரம் தவறாம பார்ப்பேன். அப்பதான் வெச்சாங்க சூன்யம்.


சுச்சி போயி அனு வந்தாங்க. மொத ரெண்டு வாரமுமே கடுப்பா ஒக்காந்து பார்த்தேன். அப்புறம் பழகியிருச்சு. மாத்தம் வேணுமின்னாலும் உடனடியா ஏத்துக்க முடியாதில்லயா. ரெண்டு மாசம் போன பின்னாடி சுச்சி இடத்தை சரியா புடிச்சு கிட்டாங்க, அனு. திரும்பவும் நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமா போச்சு. அப்பப்போ அறிவிப்புக்காக சுச்சி குரல் கேட்கும்போது மட்டும் கவலையா இருக்கும். அவ்ளோதான்.

முதல்ல நண்பர்கள், உறவினர்கள்னு கூட்டி வந்து கலக்குனாங்க. தினேஸ் கார்த்தி (தமிழே வராதா கார்த்தி?), பாலாஜி, பாலு , கங்கை அமரன் &sons, விவேக், பார்த்திபன் கலந்துகிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனசுல நிக்குது. சில நிகழ்ச்சிகள் மனச கல்லாக்கியிருக்கு, உஷா உதூப், பாலமுரளி கிருஷ்ணா மாதிரியான நிகழ்ச்சிகள். அதுலயும் விவேக்கு அனுவை ஓட்டு ஓட்டுன்னு ஒட்டின வாரம் செம கலாட்டா.

உடனே சன்னும் அனுவோட மருமவளை வெச்சி "அன்புடன்"னு கமலை பேட்டி காண்கிற மாதிரி அமர்களமா ஆரம்பிச்சி எப்போ நிறுத்தினாங்கன்னே தெரியல. பல நிகழ்ச்சிகளை காப்பி அடிச்சுகிட்டது சன். அதுல ராஜ்குமார் &coவை அப்படியே வெலை பேசி "கலக்கப்போவது யார்?" மொத்த யூனிட்டையும் தூக்கிட்டுப்போனாங்க. பேரைக்கூட "அசத்தப்போவது யாரு?" ன்னு அப்படியே MicroSoft மாதிரியே வெச்சு இன்னும் மதுரை முத்துதான் வராப்ல. ஹ்ம்ம் சரி, மறுபடியும் காப்பியே குடிப்போம் வாங்க...

இப்படி அனு ஆத்துன காப்பியும் போன தீவாளி வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறம் ஆரம்பிச்சாங்க மொக்கைய. படம் ரிலீஸ் ஆவுதா, கூப்புடு இயக்குனரு, நடிகரு, நடிகையன்னு. பழநி படம்- பரத், பேரரசு, காளை படம்- சிம்பு(ரிப்பீட்டு), தருண் கோபி, ஈக்கமாத்து குச்சி வேதிகான்னு நிகழ்ச்சு போவுது. சரி வர்றவங்க வேற ஏதாவது பேசுவாங்கன்னு பார்த்த படம் பத்தியும், அது குப்பையா இருந்தாலும் ஆஸ்கார் ரேஞ்சுக்கு பேசுறதும் செம கடுப்பு. அதுலையும் போன வாரம் சிம்பு "நமக்கு ஏன் இவ்வளவு எதிரிங்கன்னே தெரியல". அதுக்கு அனு "திறமை இருந்தாவே எதிரிங்க இருக்கிறது சகஜம்". அப்ப போட்டாரே சிம்பு "அதுல நமக்கு கொஞ்சம் ஜாஸ்தியா வேற இருக்கா.....". எப்பா திருந்து ராசா.. இப்படி எல்லாம் ஓடுது இந்த நிகழ்ச்சி. எப்படியோ சுச்சி போனாலும், அனு அந்த இடத்தை சரியாப் புடிச்சுட்டாங்க. ஆனா இப்படியே மொக்கையா போச்சுன்னா யாரும் காப்பி குடிக்காம யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி ஆயிரும்.

16 comments:

 1. ஹாஹாஹா.. செம்ம தமாஷு...

  நானும் யோசிச்சேன்.. இப்போல்லாம் புது படம் ரீலீசானா போதும். அந்த யூனிட்டை கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சி போட்டுடுறாங்க.. அந்த கனா காணும் காலங்கள் பசங்கள இண்டர்வியூ பண்ண நிகழ்ச்சி நல்லா இருந்துச்சு.. அதுக்கப்புறம் வந்தது ஒன்னும் உருப்புடுர மாதிரி இல்ல. :-(

  ReplyDelete
 2. //" ஒம்மாஹ சீய வாஹியாலா"//

  இதுக்கு என்னங்க அர்த்தம்?

  ReplyDelete
 3. //சிம்பு "அதுல நமக்கு கொஞ்சம் ஜாஸ்தியா வேற இருக்கா....."
  //

  ஆமா சிம்பு படத்தை காசு கொடுத்து பார்க்கற ஒவ்வொருத்தரும் கடுப்பாகி சிம்புவோட விரோதிகளாதான் மாறிட்டு இருக்காங்க. :)

  ReplyDelete
 4. சூப்பரு...காப்பியை நல்லா ஆத்தி ஆற வச்சிட்டிங்க.

  சூடுபண்ணுவாங்களா பார்ப்போம்.

  ReplyDelete
 5. \\\இப்படி எல்லாம் ஓடுது இந்த நிகழ்ச்சி. எப்படியோ சுச்சி போனாலும், அனு அந்த இடத்தை சரியாப் புடிச்சுட்டாங்க. ஆனா இப்படியே மொக்கையா போச்சுன்னா யாரும் காப்பி குடிக்காம யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி ஆயிரும்.\\

  அண்ணே...காஃபி வித் அனு திரைவிமர்சனம்னு போடலாம்...அந்த அளவுக்கு மொக்கை..

  ReplyDelete
 6. //அப்ப போட்டாரே சிம்பு "அதுல நமக்கு கொஞ்சம் ஜாஸ்தியா வேற இருக்கா.....".//


  ஆத்தி... இதெல்லாம் வேற கேட்டிங்களா???? :(

  ReplyDelete
 7. //" ஒம்மாஹ சீய வாஹியாலா"////
  ஓமம் போட்ட காப்பி ரெடினு அர்த்தம் துளசி:))

  இதெல்லாத்தையும் விட கஷ்டம் என்னன்ன்னா எவ்வளவு அருமையா இருந்திச்சு இல்லனு அவங்க கேக்கறதுதான்:))

  ReplyDelete
 8. மை ஃபிரண்ட்-->கனா காணும் காலங்கள் பார்க்கலைங்க, அதனால அத டீல்ல வுட்டுட்டேன்.
  -----------------------------------
  ////" ஒம்மாஹ சீய வாஹியாலா"//

  இதுக்கு என்னங்க அர்த்தம்?///

  டீச்சர்--> இதெல்லாம் நமக்கெதுக்கு. பாட்டு புரிஞ்சா மட்டும் சமுதாயம் திருந்தவா போவுது?

  ---------------------------------
  1/2 பிளேடு--> செம கலக்கல் மறுமொழி

  ReplyDelete
 9. Hai Ila,
  Vijay Tv la 'kana kaanum kaalangal' US pacific time la eppo telecast agumnu solla mudiyuma???

  [did watch vijay TV in Blogkut today....but timings therila, so thought of asking u]

  ReplyDelete
 10. அம்மு- கனா காணும் காலங்கள் EST-சாயங்காலம் 8 மணிக்கு வருது. கணக்கு போட்டுக்குங்க. அந்த நேரத்துல உக்காந்து பார்க்க போறீங்களா?

  ReplyDelete
 11. //ஆனா இப்படியே மொக்கையா போச்சுன்னா யாரும் காப்பி குடிக்காம யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி ஆயிரும்//

  ஆரம்பத்துலேருந்து கடைசி வரைக்கும் சுவாரசியமா இருந்துச்சு படிக்கிறதுக்கு...முடிச்ச விதம் டாப்பு :)))

  அனுக்கு முன்னாடி சுச்சி தான் இருந்தாங்கன்னு நீங்க சொல்லித் தான் தெரியும்.

  ReplyDelete
 12. விவா,

  இப்போ காப்பி கொஞ்சம் ஆறித்தான் போச்சு!
  சிம்புவெல்லாம் வந்தா அப்பிடித்தான் ஆவும்..நல்ல வேளை, நான் அதப் பாக்கல! அதே மாதிரி, ஜோடி நம்பர் ஒண்ணு காரங்கள வரிசையா விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டு கழுத்தருத்தாங்க (சமயல், ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, இன்ன பிற).
  சன்டிவி(வாணலி)க்குத் தப்பி, விஜய்டிவி(அடுப்பு)யில் விழுந்த கத மாதிரி ஆயிப் போச்சு நம்ம கத!!

  அம்மு,

  கனாக்காணும் காலங்கள் 6 மற்றும் 8 PM PDT - க்கு வரும். மத்தக் குப்பைகளுக்கு நடுவில், இது ஒரு ஆறுதலான தொடர். 'மதுர' கூட பரவாயில்ல! அந்த டைட்டில் பாட்டுக்காகப் பாக்கலாம் :)

  ReplyDelete
 13. காதலிக்க நேரமில்லையும் சூப்பரப்பு. அதிலும் டைட்டில் பாடல் காதலர்களின் தேசியகீதம் போலாயிற்று

  ReplyDelete
 14. //(கொசுறு: காக்க காக்க படத்துல உயிரின் உயிரே பாட்டுக்கு முன்னாடி வருமே " ஒம்மாஹ சீய வாஹியாலா" அப்படின்னு பாடினதே சுச்சிதான்.//

  ஹிஹி.. மெ மாட்தம் தொண்ணூத்டெட்டில் மேஜர் ஆனேனே..பாடினதும் இந்த ஃப்கர் தானுங்க. இவங்க கொரல கேக்கறதுக்காகவே எங்க வீட்டு பழய தூர்தர்ஷன் ஆண்டனாவை திரும்ப புதுபிச்சி அதுல இருக்கிற பூஸ்டர்ல கனெக்ஷன் எடுத்து அதை சென்னை பக்கம் திருப்பி விட்டு எஃப் எம் ரேடியோவில் அதை இணைச்சி காலங்காத்தால கேட்டிருக்கேன்.

  சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நாங்க ஏற்பாடு பண்ணி இருந்த டீலர்ஸ் சந்திப்புல அம்மணி தான் நிகழ்ச்சீயை தொகுத்து வழங்கினாங்க. அட அட.. என்னா கொரலு.. என்னா கொரலு.. ஆனா ஒரே கொறைதான்.. அநியாயத்துக்கு ஒட்டடை குச்சியாட்டம் கீதுபா :(

  ReplyDelete
 15. ஷூட்டிங் ப்ரேக்ல கொய்யாப்பழம் தின்னதக்கூட பத்து நிமிசம் பேசி கழுத்தறுக்கறாங்க. அதுவும் அவுங்கூட்ல வீடியோ கேம் விளையாண்டத பத்தி சொல்லி அதுக்கு கருத்தும் சொன்னானுங்க பாரு..
  ங்கொய்யால நேர்ல சிக்கிருந்தா வெளுத்துருக்கலாம்.

  எனக்கு தெரிஞ்சு எந்த ஊர்லயும் காளை ஒழுங்கா ஓடல. இவனுங்க எப்படி அதையும் பில்டப் கொடுத்தானுங்கன்னு புரில.

  அனும்மா... அனுச்செல்லம் சினிமா தவிர்த்தும் பெரிய ஆளுங்க இருக்காங்கன்னு எந்த நூற்றாண்டுலதான் உங்களுக்கு புரியபோகுதுன்னு தெரியல.

  ஒருவேளை சினிமா தவிர வேற யாருன்னா வந்தா கேள்வி கேக்கறதுல சிரமம் வந்துரும்னு பாக்கறீங்களா?

  வேணும்னா எங்ககிட்ட கேளுங்க நாங்க சொல்றோம்.

  ReplyDelete
 16. சூர்யா முருகதாஸ்,பிரகாஷ்ராஜ் இவங்களோட பகுதிலாம் நல்லாருந்தது அப்புறம் மெதுவா சலிக்க ஆரம்பிச்சிடுச்சி..எனக்கும் சுசி ரொம்ப பிடிக்கும்..சென்னைல வாழ்ந்த காலங்களில சுசி குரலோடுதான் விடியும்..தம்பி சொல்றா மாதிரி சினிமா தவிர்த்தும் ஒலகம் இருக்குன்னு யாராவது அனுக்கு சொன்னா நல்லாருக்கும்...

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)