Thursday, June 8, 2006

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்

போலி போலி அப்படிங்கிறாங்களே அதை நேரில் சந்திச்சு இருக்கீங்களா? நான் இருக்கேன்.

ரிட்ட்சி தெரு, கம்ப்யூட்டர் தெரிந்த சென்னை மக்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ரொம்ப நாள் ஆச்சுங்க அந்த பக்கம் போயி. சென்னை வந்தே ரொம்ப நாள் அச்சுங்க போது அப்புறம் எங்கே அங்க போறது. எல்லா மிண்ணனுப் பொருட்களுமே அங்கே சலிசா கிடைக்கும். கூட்டாளிய கூட்டிகிட்டு ஒரு ரவுண்ட் வந்தேன். என்னா கூட்டம்ங்க அங்கே. ஒவ்வொருத்தனும் எவ்வளவு கமிஷன் பார்க்கலாம்னு கணக்கு போட்டு பேரம் பேசுறது, காதுல எப்பவுமே ஊக்கிய மாட்டிகிட்டு கைபோன்ல பேசறது எப்பா என்னவொரு ஆரவாரம். கடை வெச்சு இருகிறவங்க 75% வடக்கத்திய மக்கள். அப்படியும் அறைகுறை ஹிந்தியில பேசி மக்கள் வியாபாரம் பண்றது அதியசமா இருந்தது(நமக்குதான் ஹிந்தி சுத்தமா வராதே).

நின்னு ஒரு கடைய நோட்டம் விட்டேன். கம்பெனி டி.வி.டி வி.சி.டி பிளேயர் எல்லமே குறைஞ்ச விலைன்னு போர்டு போட்டு இருந்துச்சு. பிலிப்ஸ், எய்வா, சோனி எல்லாமே 2200/-, ஆத்தி இதெல்லாம் வாங்கி குமாரபாலையத்துல வித்தா செம லாபம்னு ஒரு 100 வாங்க பேரம் பேச போயிட்டேன்னே வெச்சுக்கலாம். கூட்டாளி காலை ஓங்கி மிதிச்சான். அப்படியே சைஸா திரும்பி என்னடான்னேன். மச்சான் எல்லாமே போலிடான்னான். எப்படிடான்னு கேட்டேன் அதோபாருடா SONY க்கு S0NY, AIWAக்கு AIMA, PHILIPSக்கு PHILLIPS.

இதுதான் போலிங்கிறதா. என்ன மாதிரி கிராமத்தானுங்க இப்படிதான் ஏமாந்து போறாங்களா? பார்த்து வாங்குகப்பா..

Wednesday, June 7, 2006

பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்

கைப்புவ, வீரபாகுன்னு உருவாக்கினவர், கவுண்டருக்கு ஒரு ரீ-என்ட்ரி தந்தவர், நகைச்சுவைக்கு பஞ்சமில்லாம படம் எடுத்தவர் சுந்தர்.சி. நம்ம கொங்கு நாட்ட சேர்ந்தவர் அப்படிங்கிற ஒரு பாசம் வேற. அவர் படம்னா லாஜிக் பார்க்காம மனச விட்டு சிரிச்சுட்டு போயிட்டே இருக்கனும். சரி அவரு நடிச்ச படம், மீண்டும் வடிவேலுவோட கூட்டணி அப்படிங்கிறதால லட்சுமி தியேட்டர் பக்கம் கூட்டாளிங்களோட போனோம். கதை இதுதான்
"கத்தி எடுத்தவன் கத்தியால சாவான், ரவுடி திருந்தினாலும் இந்த சமுதாயம் அவன திருந்தவிடாதுங்கிறது"தான் கதையே. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குங்களா?

அப்ப வடிவேலுக்கு என்ன வேலை? அவரும் ரவுடிதான். இங்கே சங்கத்துல என்னாத்த எழுதுறோமோ அததான் படத்திலேயும் பண்ணியிருக்கார். "ஏய், என்ன வெச்சு ஒண்ணும் காமெடி, கீமெடி பண்ணலையே, பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்" அப்படீங்கிற மாதிரி கொஞ்சமா காமெடி பண்ணியிருக்கார். ஐயா வடிவேலு, உங்ககிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். இப்படியே போனா விவேக் காமெடி மாதிரி போர் அடிக்க ஆரம்பிச்சுரும். "தொழிலதான் விட்டு இருக்கிறேன் தில்'ல இல்லை"ன்னு பஞ்ச் டயலாக் கூட இருக்குங்க.

படம் முடிஞ்சு வெளியே வரும்போது ஒண்ணு ஞாபகம் வந்துச்சு. விஜய் திருப்பாச்சில ஒரு வசனம் சொல்லுவார் "இது தலைநகரமாவா இருக்கு தறுதலை நகரமா இல்லை இருக்கு". சுந்தர்.சி, "ஏதோ நினைக்கிறேன்" பாட்டு தவிர வேற எதிர்பார்த்து போனா விஜய் சொன்னது மாதிரிதான் இருக்கு.

Tuesday, June 6, 2006

வருக வருக

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. குடும்ப அரசியலப்பத்தி பேசுற இந்த காலத்துல, இலக்கியம் பேசறேன்னு சொல்லிட்டு ஒருத்தர் தமிழ் பதிவு ஆரம்பிச்சு இருக்கார். இலக்கியன்னு பேர வெச்சு இருக்கிறார். அவுங்க பெரியப்பா ஒரு தமிழ் வாத்தியார், அதனால மட்டும் இந்த பேர வெக்கலைன்னு சொல்லி ஏதோ எழுத ஆரம்பிச்சு இருக்கிறார். தமிழ்ப்பதிவு உலகத்துக்கு வருக வருக

இதோ தொடுப்பு

Tuesday, May 30, 2006

மீசையில மண்...



"திராவிடன்" "வீரு" கொண்டு "யுவ"த்தை வெல்ல
அல்லவே எடுப்பார் "கைப்"பிள்ளை-"தோணி"யில்

ஏறியே மேற்கு பாரதம் என்"பதானை" தொட்டு
மூவர் "சுரேசாம்" "ரொமேசாம்" "அஜித்தாம்"-கவ்வியே

மண்ணை நாலும் கைவிட வருங்காலம் தரிசனம்
வேண்டி "சச்சி"தானந்னை "பஜனை" செய்தே

களம் வென்று கோப்பை கையிலேந்த
மகிழுமே உள்ளம் நமக்கெல்லாம்.

Monday, May 29, 2006

கோவை அதிசயங்கள்

திருவிளையாடல் படத்துல பாவப்பட்ட முருகன் மயில புடிச்சு உலகத்தை சுத்திட்டு பொறுமையா வந்து பார்த்தா விநாயகர் சிவனையும், பார்வதியையும் சுத்தி உலகத்தை சுத்திட்டேன்னு சொல்லி ஒரு மாம்பழத்தை வாங்கிட்டு போயிருப்பாரு.(பெட்ரோல செலவில்லாம, பெட்ரோல போட்டு சுத்தறதா இருந்தா நாரதரை போய்யா வேலையா பார்த்துகிட்டுன்னு சொல்லியிருப்பார்). இப்போ போலீஸ் ஸ்டேசன்ல சும்மாங்காட்டியும் இன்ஸ்பெக்ட்டரு உலகத்தை சுத்தி சுத்தி பார்த்துகிட்டு இருப்பார். அவர் மனசுல என்ன இருக்குன்னு Vijay TV "GRAND MASTER" தான் சொல்லனும்.
ஷங்கரும் ஐஸ்வர்யாவையும், பிரசாந்தையும் வெச்சு ஒரு பாட்டு பண்ண உலகத்தை சுத்திட்டார்.
ஏழைப்பட்ட விவசாயி மக்கள் உலக அதிசயத்தையெல்லாம் பார்க்க யாருங்க காசு குடுப்பா?
அதான் கோயமுத்தூர்ல ரேஸ் கோர்ஸ்ல இந்த மாதிரி பண்ணி வெச்சு இருக்காங்க.

மேலும் விவரத்திற்கு

Sunday, May 28, 2006

நானும்தான் விவரம் தருவேன்

வலைப்பதிவர் பெயர்:
இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்கி "இளா"ன்னு மாத்திபுட்டாங்க. எல்லாரும் செல்லமா கூப்பிடுற இன்னொரு பேர் ராஜா. ஊர்ல "வாத்தியார் வீட்டு ராஜா"ன்னும் ஒரு பேர் இருக்கு.இன்னும் சில பேர் "சின்ன வாத்தி"ன்னுதான் கூப்பிடறாங்க.

வலைப்பூ பெயர் :
விவசாயி

சுட்டி(url) :
http://vivasaayi.blogspot.com/
http://binarywaves.blogspot.com

ஊர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொன்னாலும், செங்கை-பவானி அருகில்

நாடு:
இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
அப்படியெல்லாம் யாரும் இல்லீங்க, 3 ராஜாக்கள் தான் தமிழ்ல பதிவு எழுத தூண்டினாங்க(கே.வி.ராஜா, நாமக்கல் ராஜா, ராசா). நாம ப்லாக் ஆரம்பிச்ச காலத்திலேயே இங்க்லீஷ்ல பீட்டு விட்டவங்க.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
24-Aug-2005-தமிழ்

இது எத்தனையாவது பதிவு:
55

இப்பதிவின் சுட்டி(url):
http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
வேலை வெட்டி இல்லாம இருக்கிறப்போ வேலை செய்ய

சந்தித்த அனுபவங்கள்:
வாழ்க்கை ஒரு நாடக மேடை, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.

பெற்ற நண்பர்கள்:
எல்லாருமே நண்பர்கள்ன்னு நினைக்கிற அப்பாவி இந்த விவசாயி

கற்றவை:
கைமண்தான் (விவசாயத்த பத்தி பேசலைங்க)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
கொஞ்சம் கம்மிதான்

இனி செய்ய நினைப்பவை:
செய்வதை திருந்தச் செய்ன்னு எங்க அப்பாரு சொன்னதை தெளிவா செய்யபோறேன். (தந்தை சொல் தட்டாத பிள்ளை நாம)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
சாதாரண விவசாயி. அவ்வளவுதானுங்க. நமக்கு வெளம்பரமெல்லாம் வேணாமுங்க.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க.

Saturday, May 27, 2006

தேர்தல் முடிவுகள்

ஒரு நாள் நிலவு நண்பனின் கவிதைய படிச்சுட்டு, அன்னிக்கு முழுசும் மனசு ஒரு மாதிரியாவே இருந்துச்சு. சரி நமக்குதான் இப்படி மத்தவங்க எப்படி நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்க வெச்சதுதான் இந்த தேர்தல். முடிவு நான் எதிர் பார்த்தமாதிரி இல்லைங்க. உங்களுக்கு எப்படின்னு நீங்கதான் சொல்லனும்.
முடிவுகள் இதோ, இல்லைன்னா இங்கே சொட்டுக்குங்க

வெளிநாட்டில் வாழும்பொழுது நாம் இழப்பது எதை?
பதிவான மொத்த ஓட்டுக்கள்-247

எதையுமில்லை:
மொத்த ஓட்டுக்கள்-206
சதவீதம் 83%

பாசம் என்பதை அறிய வைத்த தாய், தந்தையரை:
மொத்த ஓட்டுக்கள்-6
சதவீதம்-2%

கோலி, கபடி போன்ற விளையாட்டை டவுசர் போட்ட காலம் முதல் விளையாடி விமான நிலையத்தில் கண்ணீருடன் வழியனுப்பிய நட்பை:
மொத்த ஓட்டுக்கள்-3
சதவீதம்-1%

என்னை வளர்ந்த தெரு, ஊர் மற்றும் காலாச்சாரத்தை
மொத்த ஓட்டுக்கள்-2
சதவீதம்-1%

தலையணையில் அடிவாங்கி, அவள்(ன்) திருமணத்திற்காகவே வெளிநாடு வந்து அவளு(னு)டன் வாரம் இருமுறை தொலைபேசியில் பேசி, பேசி முடித்தபின் கண்ணீர் விட்டு அழும் உடன் பிறப்பை
மொத்த ஓட்டுக்கள்-1
சதவீதம்-0%

மேற்கூரிய எல்லாவற்றையும்:
மொத்த ஓட்டுக்கள்-29
சதவீதம்-12%

இந்த முடிவுக்கு யாராவது விவரம் தெரிஞ்சவங்க விளக்கம் தாங்களேன்....

Friday, May 26, 2006

ஆராய்ச்சி




சரியான பட்டிக்காடா இல்லாட்டாலும், NH 47 மேல இருக்குன்னு சுய தம்பட்டம் அடிச்சாலும் ஓரளவுக்கு நம்ம ஊரு பட்டிக்காடுதானுங்க. சோமாரக்கிழமை சந்தை நடக்குற கிராமம் நம்மது.
(பட உதவி விகடன்.காம்)

எப்படியோ பொழச்சு வீடு வந்தாச்சு. வீட்ட விட்டு வெளியே போலாம்ன்னா வூட்டுல ரொம்ப கெடுபுடியா இருக்கு. அத இத சொல்லி கடைத்தெருவுக்கு நடக்க ஆரம்பிச்சாச்சு. எங்க ஊர்ல காலையிலேயே டீ கடையில கூட்டம் ரொம்பி வழியும்.(ஆமா இருக்கிறதே 4 டீ கடை அப்புறம் என்னனெல்லாம் முணுமுணுக்கக்கூடாது). பால் ஊத்திட்டு அப்படியே ஒரு டீ அடிச்சுட்டு, ஒரு "தம்" கட்டிட்டு போறது தான் நம்ம ஊர் மக்கள் பழக்கமே.(நம்மள மாதிரி "தம்" கட்டாத பசங்களும் இருக்காங்க). ரொம்ப நாள் ஆச்சுங்க எங்க ஊர் டீக்கடையில டீ குடிச்சு. கடைக்கு போனா "தம்" கட்டுற பசங்க அப்படின்னு பேர் எகிறிரும் அப்படின்னு பயந்துகிட்டே போறதில்லைங்க.


நேத்து வேற வழியே இல்லாம டீக்கடைக்கு போகவேண்டியதாப் போச்சு. சரி 'டுமீல் டுமீல்" என்று சுட்டார் "குபுக் குபுக்" என்று ரத்தம் வந்தது அப்படின்னு படிக்கலாம்னு பேப்பர் எடுத்து பார்த்தா, அட தினகரன். 2 வது கடையிலும் தினகரன். சரி இன்னைக்கு எத்தன லட்சம் செலவு ஆனாலும் பரவாயில்ல தினத்தந்தி படிக்காம விடறதில்லைன்னு கூட்டாளிங்க தோள் மேல கையப்போட்டுகிட்டு அடுத்த கடைக்கு போனாலும் தினத்தந்தி இல்லை தினகரன் தான் இருக்கு. 4 கடையிலும் இதே கதை.

ஏன்? "எல்லாம் 1 ரூவாய்க்கு விக்கிறதுதான் காரணம். டவுசர் போட்ட காலத்திலிருந்து வந்த பழக்கம். 3 மாசத்திலேயே மாத்திபுட்டாங்கப்பா. என்னாத்த சொல்ல" அப்படின்னு கூட்டாளிங்க கிட்ட சொன்னா "நொண்டியடிச்சாலும் என்ன ஒரு கண்டுபுடிப்புன்னு" பாராட்டிட்டு போனவங்கதான் இன்னி வரைக்கும் காணோம்.

பசங்களா இனிமே ஆராய்ச்சியெல்லாம் பண்ண மாட்டேன்டா.கதையடிக்கவாவது வந்துத் தொலைங்கடா. பாழாப்போன சீரியலையெல்லாம் பார்க்க முடியல.

Tuesday, May 23, 2006

டமால்!


எங்கோ போற மாருதியாத்தா என் மேல வந்து ஏறாத்தா..

Friday, May 19, 2006

சினுக்கு சினுக்கு சின்


வருவியா?
வரமாட்டியா?
வரலைன்னா உன்பேச்சி கா....

Tuesday, May 9, 2006

எதை இழந்தோம் Ver 2.0?

நிலவு நண்பனின் கவிதை படித்த பாதிப்பே இந்த வாக்கெடுப்பு. வாக்குறுதி,

திட்டு, பொய், வசவு எல்லாத்தையும் மறந்து உங்க மனசுக்கு பிடிச்சதை சொல்ல ஒரு இடம்.
பின் குறிப்பு: இங்கே ஓட்டு போட்டால் கலர் டிவி, அரிசி, கோமாதா எல்லாம் இனாமா கிடைக்காது


வெளிநாட்டில் வாழும்பொழுது நாம் இழப்பது எதை?
கோலி, கபடி போன்ற விளையாட்டை டவுசர் போட்ட காலம் முதல் விளையாடி விமான நிலையத்தில் கண்ணீருடன் வழியனுப்பிய நட்பை
பாசம் என்பதை அறிய வைத்த தாய், தந்தையரை.
தலையணையில் அடிவாங்கி, அவள்(ன்) திருமணத்திற்காகவே வெளிநாடு வந்து அவளு(னு)டன் வாரம் இருமுறை தொலைபேசியில் பேசி, பேசி முடித்தபின் கண்ணீர் விட்டு அழும் உடன் பிறப்பை
என்னை வளர்ந்த தெரு, ஊர் மற்றும் காலாச்சாரத்தை
மேற்கூரிய எல்லாவற்றையும்
எதையுமில்லை


Send this poll to a friend!



தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)