Thursday, June 8, 2006

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்

போலி போலி அப்படிங்கிறாங்களே அதை நேரில் சந்திச்சு இருக்கீங்களா? நான் இருக்கேன்.

ரிட்ட்சி தெரு, கம்ப்யூட்டர் தெரிந்த சென்னை மக்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ரொம்ப நாள் ஆச்சுங்க அந்த பக்கம் போயி. சென்னை வந்தே ரொம்ப நாள் அச்சுங்க போது அப்புறம் எங்கே அங்க போறது. எல்லா மிண்ணனுப் பொருட்களுமே அங்கே சலிசா கிடைக்கும். கூட்டாளிய கூட்டிகிட்டு ஒரு ரவுண்ட் வந்தேன். என்னா கூட்டம்ங்க அங்கே. ஒவ்வொருத்தனும் எவ்வளவு கமிஷன் பார்க்கலாம்னு கணக்கு போட்டு பேரம் பேசுறது, காதுல எப்பவுமே ஊக்கிய மாட்டிகிட்டு கைபோன்ல பேசறது எப்பா என்னவொரு ஆரவாரம். கடை வெச்சு இருகிறவங்க 75% வடக்கத்திய மக்கள். அப்படியும் அறைகுறை ஹிந்தியில பேசி மக்கள் வியாபாரம் பண்றது அதியசமா இருந்தது(நமக்குதான் ஹிந்தி சுத்தமா வராதே).

நின்னு ஒரு கடைய நோட்டம் விட்டேன். கம்பெனி டி.வி.டி வி.சி.டி பிளேயர் எல்லமே குறைஞ்ச விலைன்னு போர்டு போட்டு இருந்துச்சு. பிலிப்ஸ், எய்வா, சோனி எல்லாமே 2200/-, ஆத்தி இதெல்லாம் வாங்கி குமாரபாலையத்துல வித்தா செம லாபம்னு ஒரு 100 வாங்க பேரம் பேச போயிட்டேன்னே வெச்சுக்கலாம். கூட்டாளி காலை ஓங்கி மிதிச்சான். அப்படியே சைஸா திரும்பி என்னடான்னேன். மச்சான் எல்லாமே போலிடான்னான். எப்படிடான்னு கேட்டேன் அதோபாருடா SONY க்கு S0NY, AIWAக்கு AIMA, PHILIPSக்கு PHILLIPS.

இதுதான் போலிங்கிறதா. என்ன மாதிரி கிராமத்தானுங்க இப்படிதான் ஏமாந்து போறாங்களா? பார்த்து வாங்குகப்பா..

11 comments:

 1. //SONY க்கு S0NY, AIWAக்கு AIMA, PHILIPSக்கு PHILLIPS//

  SONY க்கு S0NI :) இதல்லாம் ஜுஜுபி சாரே. ஆனா நீங்க விஷயம் தெரிஞ்சவரா இருந்தா பல பொருட்களை சீப்பா ( வாழை சீப்பு இல்ல (Ila) :) ) வாங்கலாம்.

  அன்புடன்
  சிங்கை நாதன்.

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி சிங்கை நாதன்.
  கொஞ்சம் விவரம் தெரிய கொஞ்சம் ஏமாந்துதான் ஆகனும் போல இருக்கு, இல்லாட்டி கண்ணுல விளக்கெண்ணைய விட்டு பார்க்கனும்

  ReplyDelete
 3. அது மட்டுமா? Made As Japan அப்படின்னு கூட இருக்குமே? பார்த்தது இல்லையோ?

  நான் இருக்கும் ஊரிலேயே நிறைய கிடைக்கும் - குறைந்தது 1 லட்சம் ரூ. விலை கொண்ட RADO கைக்கடிகாரம் 200 ரூபாய்க்கு. வேண்டுமா உங்களுக்கும்?

  ReplyDelete
 4. உள்ளூரிலேயே ஏமார இருந்தேன், நீங்க இறக்குமதி வேற செய்ய சொல்லுறீங்களே துபாய்வாசி.

  ReplyDelete
 5. //யாருடைய தூண்டுதலும் எதிர்பார்ப்பை நம்மில் உண்டு பண்ணக் கூடாது என்பது இந்தப் பதிவின் நீதி!!
  //


  ஏஜெண்டு அவர்களின் நீதி இந்தப் பதிவிற்கும் அப்படியே பொருந்தும் என்பது என் தாழ்மையான கருத்து!

  ReplyDelete
 6. ஆ.. எச்சூஸ் மீ...

  சூடா சாப்டற போலி காரமா ஸ்வீட்டா?!

  :-)

  ReplyDelete
 7. எனக்கு "ஒப்புட்டு"ன்னு சொன்னாதாங்க தெரியும். BHOLIன்னெல்லாம் எங்க ஊர்ல சொல்றது இல்ல, அதுவும் எங்க ஊர்ல இனிப்பாதான் கிடைக்குது. காராமா கூட செய்யுறாங்களா?

  ReplyDelete
 8. //எனக்கு "ஒப்புட்டு"ன்னு சொன்னாதாங்க தெரியும். BHOLIன்னெல்லாம் எங்க ஊர்ல சொல்றது இல்ல, அதுவும் எங்க ஊர்ல இனிப்பாதான் கிடைக்குது.//

  நானும் சென்னை வந்தப்புறம்தான் போளின்னா ஒப்புட்டுதேன்னு தெரிஞ்சிகிட்டேன்.

  ReplyDelete
 9. இளா!
  ரிச்சி தெருல எதாச்சும் பொருள் வேண்டும் என்றால் நம்ம கிட்ட சொல்லுங்க. நமக்கு தெரிந்த கடை உள்ளது. அங்கு நல்ல பொருட்கள் கிடைக்கும்.
  "Branded Product வாங்குவது என்றால் அவர்களின் Company showroom வாங்குவது நல்லது."

  BTW - இந்த போலிகளுக்கு 1 வருடம் 2 வருடம் வாரண்டி வேற தரானுங்க. அது தான் அதுல ஆச்சரியபட வேண்டிய விசயம்.

  ReplyDelete
 10. உள்குத்தெல்லாம் பலமா இருக்கப்பு :))

  புரியவேண்டியவங்களுக்கு புரியுங்கறீங்க


  எல்லப்பன்

  ReplyDelete
 11. Sondha company networklaye..virus vara vitta aalu aachey neenga dhan.

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)