Sunday, May 28, 2006

நானும்தான் விவரம் தருவேன்

வலைப்பதிவர் பெயர்:
இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்கி "இளா"ன்னு மாத்திபுட்டாங்க. எல்லாரும் செல்லமா கூப்பிடுற இன்னொரு பேர் ராஜா. ஊர்ல "வாத்தியார் வீட்டு ராஜா"ன்னும் ஒரு பேர் இருக்கு.இன்னும் சில பேர் "சின்ன வாத்தி"ன்னுதான் கூப்பிடறாங்க.

வலைப்பூ பெயர் :
விவசாயி

சுட்டி(url) :
http://vivasaayi.blogspot.com/
http://binarywaves.blogspot.com

ஊர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொன்னாலும், செங்கை-பவானி அருகில்

நாடு:
இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
அப்படியெல்லாம் யாரும் இல்லீங்க, 3 ராஜாக்கள் தான் தமிழ்ல பதிவு எழுத தூண்டினாங்க(கே.வி.ராஜா, நாமக்கல் ராஜா, ராசா). நாம ப்லாக் ஆரம்பிச்ச காலத்திலேயே இங்க்லீஷ்ல பீட்டு விட்டவங்க.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
24-Aug-2005-தமிழ்

இது எத்தனையாவது பதிவு:
55

இப்பதிவின் சுட்டி(url):
http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
வேலை வெட்டி இல்லாம இருக்கிறப்போ வேலை செய்ய

சந்தித்த அனுபவங்கள்:
வாழ்க்கை ஒரு நாடக மேடை, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.

பெற்ற நண்பர்கள்:
எல்லாருமே நண்பர்கள்ன்னு நினைக்கிற அப்பாவி இந்த விவசாயி

கற்றவை:
கைமண்தான் (விவசாயத்த பத்தி பேசலைங்க)

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
கொஞ்சம் கம்மிதான்

இனி செய்ய நினைப்பவை:
செய்வதை திருந்தச் செய்ன்னு எங்க அப்பாரு சொன்னதை தெளிவா செய்யபோறேன். (தந்தை சொல் தட்டாத பிள்ளை நாம)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
சாதாரண விவசாயி. அவ்வளவுதானுங்க. நமக்கு வெளம்பரமெல்லாம் வேணாமுங்க.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க.

13 comments:

  1. //இளமுருகு, யாருமே இப்படி கூப்புடறது இல்லை, சுருக்கி இளா'ன்னு //
    எது, நாங்க சுருக்கிட்டோம்?!! நீங்க தான் சுருக்கிட்டீங்கன்னு நான் நினைச்சேன் :)

    //வாழ்க்கை ஒரு நாடக மேடை, நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்.//
    தொட்டுட்டீங்களே!! அப்போ நான் யாரு? காமெடிய(ளா)னா??

    //தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க. //
    இல்லைன்னா?

    ReplyDelete
  2. தோட்டம் இல்லாதவங்களுக்கு கலைஞர் ஒண்ணோ ரெண்டோ ஏக்கர் நிலம் குடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்.(அரசியல் பேசப்படாது)

    ReplyDelete
  3. //நீங்க தான் சுருக்கிட்டீங்கன்னு நான் நினைச்சேன்//
    எல்லாரும் இளான்னே கூப்பிட அதுவே நிலைச்சு போச்சு.
    வெச்ச பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லைன்னும் தில்லு முல்லுல ரஜினி சொன்னதா ஞாபகம்.
    //தொட்டுட்டீங்களே!! அப்போ நான் யாரு? காமெடிய(ளா)னா??//
    நாமளே நம்மள பத்தி சொல்லிக்க படாது

    ReplyDelete
  4. //தோட்டம் இல்லாதவங்களுக்கு கலைஞர் ஒண்ணோ ரெண்டோ ஏக்கர் நிலம் குடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்//
    சும்மா தமாசு பண்ணாதீங்க இளா!

    //வெச்ச பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லைன்னும் //
    அய்யம்பேட்டை அறிவுடை நம்பி சந்திரன் சொன்னாரா??????

    ReplyDelete
  5. நாகை சிவா - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சொன்னதாக ரஜினி சொன்னது. சில விஷயங்களை சினிமாவுல இருந்துகூட பின்பற்றலாம். இது என் சொந்த கருத்துங்க

    ReplyDelete
  6. அச்ச சோ! கலிய பெருமாள விட்டுடேனா!

    ReplyDelete
  7. ஒரு சில விசயங்கள் சினிமாவில் இருந்து பின்பற்றுவது தவறு இல்லைங்க. நானும் உங்க கருத்து ஏற்று கொள்கிறேன். அது சும்மா தமாசுக்கு சொன்னது.

    ReplyDelete
  8. //அது சும்மா தமாசுக்கு சொன்னது//
    ;)

    ReplyDelete
  9. இளா
    பவானி பக்கம் செங்கைன்னு ஊர் எந்தப் பக்கம் இருக்கு? நான் நாலுவருஷம் மைலம்பாடியில் வேலை பார்த்தேன், இப்படி ஒரு ஊர் கேள்விப் படலையே

    ReplyDelete
  10. தாணு >> NH 47 ல - பவானி டு சங்ககிரி வழியில இருக்குங்க நம்ம ஊர். கிராமம்தான் ஆனாலும் கொஞ்சம் பெரிய ஊர் தானுங்கோ.

    ReplyDelete
  11. //தோட்டம் இருக்கிறவங்க எங்க வேல பார்த்தாலும் சனி ஞாயிறாவது விவசாயம் பாருங்க.//

    இந்த வட்டம் எந்த பயிரைப் போட்டா மகசூல் நல்லாரும்னு சொல்லுங்க. முயற்சி பண்ணி பாப்போம்.

    ReplyDelete
  12. கைப்புள்ள->>நல்லவங்க மனசு வெச்சு வெத்தச்சா நெல்லு கூட தங்கமா மாறுமாம், எம்.ஜி.ஆரு சொன்னது. அது உண்மைன்னா எனக்கு தெரிஞ்சு யாரும் நல்லவங்க இல்லீங்க. (இப்படியும் சமாளிக்கலாம்)

    ReplyDelete
  13. வணக்கம் இளமுருகு, உங்களின் விவசாயம் பதிவு புதுமையான பயனுள்ள ஒரு பதிவு. கிராமத்தானாக இருந்து இன்று கற்காரை (கான்க்ரீட்) காடுகளில் வாழ்க்கை நடத்தும் எங்களைப் போன்றவர்கள் விவசாயத்தைப் பற்றி இப்படிப் பேசத்தான் முடியும்....

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)