
சரியான பட்டிக்காடா இல்லாட்டாலும், NH 47 மேல இருக்குன்னு சுய தம்பட்டம் அடிச்சாலும் ஓரளவுக்கு நம்ம ஊரு பட்டிக்காடுதானுங்க. சோமாரக்கிழமை சந்தை நடக்குற கிராமம் நம்மது.
(பட உதவி விகடன்.காம்)
எப்படியோ பொழச்சு வீடு வந்தாச்சு. வீட்ட விட்டு வெளியே போலாம்ன்னா வூட்டுல ரொம்ப கெடுபுடியா இருக்கு. அத இத சொல்லி கடைத்தெருவுக்கு நடக்க ஆரம்பிச்சாச்சு. எங்க ஊர்ல காலையிலேயே டீ கடையில கூட்டம் ரொம்பி வழியும்.(ஆமா இருக்கிறதே 4 டீ கடை அப்புறம் என்னனெல்லாம் முணுமுணுக்கக்கூடாது). பால் ஊத்திட்டு அப்படியே ஒரு டீ அடிச்சுட்டு, ஒரு "தம்" கட்டிட்டு போறது தான் நம்ம ஊர் மக்கள் பழக்கமே.(நம்மள மாதிரி "தம்" கட்டாத பசங்களும் இருக்காங்க). ரொம்ப நாள் ஆச்சுங்க எங்க ஊர் டீக்கடையில டீ குடிச்சு. கடைக்கு போனா "தம்" கட்டுற பசங்க அப்படின்னு பேர் எகிறிரும் அப்படின்னு பயந்துகிட்டே போறதில்லைங்க.
நேத்து வேற வழியே இல்லாம டீக்கடைக்கு போகவேண்டியதாப் போச்சு. சரி 'டுமீல் டுமீல்" என்று சுட்டார் "குபுக் குபுக்" என்று ரத்தம் வந்தது அப்படின்னு படிக்கலாம்னு பேப்பர் எடுத்து பார்த்தா, அட தினகரன். 2 வது கடையிலும் தினகரன். சரி இன்னைக்கு எத்தன லட்சம் செலவு ஆனாலும் பரவாயில்ல தினத்தந்தி படிக்காம விடறதில்லைன்னு கூட்டாளிங்க தோள் மேல கையப்போட்டுகிட்டு அடுத்த கடைக்கு போனாலும் தினத்தந்தி இல்லை தினகரன் தான் இருக்கு. 4 கடையிலும் இதே கதை.
ஏன்? "எல்லாம் 1 ரூவாய்க்கு விக்கிறதுதான் காரணம். டவுசர் போட்ட காலத்திலிருந்து வந்த பழக்கம். 3 மாசத்திலேயே மாத்திபுட்டாங்கப்பா. என்னாத்த சொல்ல" அப்படின்னு கூட்டாளிங்க கிட்ட சொன்னா "நொண்டியடிச்சாலும் என்ன ஒரு கண்டுபுடிப்புன்னு" பாராட்டிட்டு போனவங்கதான் இன்னி வரைக்கும் காணோம்.
பசங்களா இனிமே ஆராய்ச்சியெல்லாம் பண்ண மாட்டேன்டா.கதையடிக்கவாவது வந்துத் தொலைங்கடா. பாழாப்போன சீரியலையெல்லாம் பார்க்க முடியல.
இளா,
ReplyDeleteடீ ஆத்தினதும், பாலாப் போன சீரியல் பார்த்ததும் போதும், இப்போ தான் சங்கப் பலகையில் இடம் கொடுத்தாச்சே!! வந்து சங்கப் பணிய ஆத்துங்க!!!
என்னது பாலா(ழா?)ப் போன சீரியலா?
ReplyDelete