திருவிளையாடல் படத்துல பாவப்பட்ட முருகன் மயில புடிச்சு உலகத்தை சுத்திட்டு பொறுமையா வந்து பார்த்தா விநாயகர் சிவனையும், பார்வதியையும் சுத்தி உலகத்தை சுத்திட்டேன்னு சொல்லி ஒரு மாம்பழத்தை வாங்கிட்டு போயிருப்பாரு.(பெட்ரோல செலவில்லாம, பெட்ரோல போட்டு சுத்தறதா இருந்தா நாரதரை போய்யா வேலையா பார்த்துகிட்டுன்னு சொல்லியிருப்பார்). இப்போ போலீஸ் ஸ்டேசன்ல சும்மாங்காட்டியும் இன்ஸ்பெக்ட்டரு உலகத்தை சுத்தி சுத்தி பார்த்துகிட்டு இருப்பார். அவர் மனசுல என்ன இருக்குன்னு Vijay TV "GRAND MASTER" தான் சொல்லனும்.
ஷங்கரும் ஐஸ்வர்யாவையும், பிரசாந்தையும் வெச்சு ஒரு பாட்டு பண்ண உலகத்தை சுத்திட்டார்.
ஏழைப்பட்ட விவசாயி மக்கள் உலக அதிசயத்தையெல்லாம் பார்க்க யாருங்க காசு குடுப்பா?
அதான் கோயமுத்தூர்ல ரேஸ் கோர்ஸ்ல இந்த மாதிரி பண்ணி வெச்சு இருக்காங்க.
மேலும் விவரத்திற்கு
ஊம்....ம் உலக அதிசயத்தை பாத்துடீங்க. தனியாகவா, இல்ல ஐஸ் உடனா??
ReplyDeleteநீங்க காட்டுன படத்துல ஒன்னே தாங்க இதுவரைக்கும் பாத்து இருக்கேன். மற்றரது எல்லாம் என்று காண போகின்றேனூ?