Monday, August 20, 2012

ஒரே வார்த்தையில் மனைவியைக் கட்டுப்படுத்த..@vivaji Updates Aug-21-2012

 • ''சத்யராஜ் சொன்னதால பணம் போட்டோம்!'' : ஈமு கோழியில் முதலீடு செய்தவர்கள் #சத்யராஜ், 

சாமி இல்லைன்னுகூடத்தான் சொன்னாரு, நம்புனீங்களா, என்ன, காசுன்னவுடனே ஆசைப்பட்டுட்டு, இப்ப சத்யராஜ்ஜுக்கிட்ட இருந்து பணத்தை எதிர்பார்க்கும் ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

--00--

 • சேகுவேரா பற்றி பேசும் போராட்டவாதிகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் மீது அவ்வளவு நாட்டமில்லை. அங்கேயும் வெளிநாட்டு மோகம்


--00--
 • சமைக்கிறதா?. ஹாஹஹ்ஹாஹ, நானா? ஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹாஹ் #பெண்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்


 • பிரபலம், பிரபலத்துக்கு முத்தம் குடுத்த புகைப்படம்தான் பிரபலமாகும் - உலக நியதி!

 • ஒரே புகைப்படத்தின் மூலம் டெசோவை சுக்கு நூறாக்கிய அனிருத் - ஆண்ட்ரியா. இப்ப தெரிஞ்சுக்குங்க நாட்டுக்கு எது அவசியம் என்று
--00--

 • இணைய விவாதங்களில் இறுதியாக எடுக்கப்படும் முடிவுகளின் கடைசி வரி, இப்படியாகத்தான் இருக்கும் ":)"

 • அழக்கூட கெளரவம் இடம் கிடைக்காமல் சோகத்தை மனதினுள் அடக்கும் ஆணின் கண்ணீர் பரிதாபத்துக்குரியதே!

--00--
 • இனி எப்போதும் கூட்டணி இல்லை: விஜயகாந்த் #இராமதாஸோடு கூட்டணி வெச்சி நம்மையெல்லாம் பார்த்து கேப்டன் சிரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை

--00--
 • என்னதான் பெரிய சண்டையாய் இருந்தாலும், என்னுடைய ஒரே வார்த்தைக்குக் கட்டுப்பட்டுவிடுவாள் என் மனைவி. #மன்னிப்பு

--00--
 • தருமத்துக்கு கலாய்க்கப்பட்டு வேற வழியே இல்லாம, சரண்டர் ஆக நினைக்கும்போது சொல்லும்வார்த்தைதான்

 "என்னைக் கலாய்சிட்டாராம்" 


---------------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் எழுதியது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கைகளை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

7 comments:

 1. இளா,

  சினிமாக்காரங்களை வச்சு விளம்பரம் செய்தால் சாணியைக்கூட விற்றுக்காசாக்கலாம்.

  ஈமு போல ஒன்று உருவாகி வருகிறது, கோக்கோ மரம் வளர்ப்பு திட்டம் ஏக்கருக்கு ஒரு லட்சம் கட்டி கோக்கோ வளர்த்தால் விதைகளை கம்பெனியே நேரா வந்து வாங்கிக்குமாம், மரம் வளர 4-5 ஆண்டுகள் ஆகும் , அப்போ வந்து வாங்குவாங்களா?, இப்போ சொல்லும் அளவு பணம் கொடுப்பாங்களா ?எதற்கும் உத்தரவாதம் இல்லை.

  மேலும் கேரளா,கர்நாடகாவில் கொட்டைகளை வாங்காமல் ஏமாற்றியும் இருக்கிறார்கள், இப்போ தமிழ்நாட்டு டர்ன் :-))

  நான் விரிவா ஒருப்பதிவும் போட்டு இருக்கேன்.

  --------

  //-00-- தருமத்துக்கு கலாய்க்கப்பட்டு வேற வழியே இல்லாம, சரண்டர் ஆக நினைக்கும்போது சொல்லும்வார்த்தைதான்
  "என்னைக் கலாய்சிட்டாராம்" //

  அடிக்கடி நீங்க சொல்வீங்களோ ;-))

  ReplyDelete
 2. மீசையில மண்ணே ஓட்டலைன்னு சொல்றதுக்கு முன்னாடி வரும்பாருங்க அதே வசனம்தான்.

  //அடிக்கடி நீங்க சொல்வீங்களோ//

  பதிவுலகத்துல இருந்துட்டு இதைச் சொல்லலைன்னா எப்படிங்க?

  ReplyDelete
 3. இளா,

  சேம் பிளட் தான் அப்போ ;-))

  -------

  பதிவுக்கு கீழே ,இதுவும் உங்களுக்கு பிடிக்கும்னு , சாராயம்-சர்தார்னு ஒருப்பதிவு பார்க்கவும் ஓடிப்போய்ப்பார்த்தேன் கடசியில 2009 இல் போட்ட பதிவாக இருக்கு, சரி படிச்சா கருத்து சொல்லாமல் போற பழக்கம் வேற இல்லையா(கத்தி எடுத்த கூர்க்கா போல) அதனால அங்கேயும் கருத்து சொல்லிவச்சிருக்கேன் ;-))

  முடிஞ்சாப்பாருங்க.

  ReplyDelete
 4. சத்ய ராஜ் , நாசர் போன்றவங்க நடிக்கும் வெளம்பரங்களப் பாத்தாலே எனக்கு ஒரு டவுட் வரும். அவுங்க முக ராசி அப்படி.

  அந்த விளம்பரங்களில் ஏதோ ஒரு பிராடு தனம் இருக்கும்.

  நம்ம மக்கள் சினிமாக் காரங்க சொன்னா வேத வாக்கால்ல எடுத்துக் கிட்டு செய்றவங்க ஆச்சே.

  போங்க சத்தியராஜ் என்னும் மகா நடிகன் குடுக்கறதை வாங்கிட்டு வாங்க.

  ReplyDelete
 5. அருமையான ட்விட்ஸ்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
 6. நன்றி ரங்குடு, தி.த, சுரேஸ்

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)