Friday, August 24, 2012

1/365 பதிவுலகத்தில் எட்டு ஆண்டுகள்

இப்ப இந்த 365 பிரபலமாகிட்டு வருது. (இதையே ஒரு தனிப்பதிவா போடணும்). சொக்கன் அவர்கள்தான் ஆரம்பிச்சார்ன்னு நினைக்கிறேன்.

அதனால நானும் ஒன்னை ஆரம்பிக்கிறேன். அதாவது தொடர்ந்து 365நாளும் பதிவு எழுதுறது. முடியுமான்னு தெரியல. சும்மா முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். எதைப் பத்தி எழுதுவேனா? நிஜமாத் தெரியலங்க. என்னை சுத்தி நடக்கிறது, ஓடுறது, பறக்கிறது பத்திதான் எழுதப்போறேன். பதிவுலகம் பத்தி எழுதுவதை நிறுத்தி பல வருசம் ஆனதால, அதைப் பத்தியும் கூட வரலாம். ஒரு காணொளி போட்டுட்டு போறது மாதிரி மொக்கைகளை தவிர்த்துட்டு எழுதறதா எண்ணம். அதாவது சொந்த புலம்பல், பெருமைபீத்தல் இப்படி ஏதாவது ஒரு வருசத்துக்கு எழுதறது. அட இதுவே ஒரு தற்பெருமை பதிவுங்கிறதால, இதுல இருந்தே ஆரம்பிக்கிறேன். 1/365


--00--


பதிவுலகம் வந்து இன்றோடு 8 ஆண்டு காலம் ஆகிருச்சு. ஏற்கனவே பல முறை ஒத்த அலைவரிசை நண்பர்கள் கிடைச்சாங்க, நேரம் போவுது, எங்கே போனாலும் ஒரு நண்பன் அங்கே இருக்காங்க, பொதுவா எங்கேயாவது கூட்டத்துக்குப் போனா ஒருத்தர் வந்து "நீங்கதான் விவசாயியா" அப்படின்னு கேட்கிறாங்க, அப்படின்னு எழுதியாச்சு.
அதனால ஒரே ஒரு நன்றி மட்டும் சொல்லிட்டு அடுத்த வருசத்துக்குப் போயிடறேன்.

--00--

 என் காலத்திலிருந்தே எழுதும் பதிவர்கள் ரொம்ப கம்மியாகிட்டாங்க. கானா பிரபா, கோவி கண்ணன், லக்கி, பெனாத்தல் சுரேஷ், இட்லிவடை, துளசி டீச்சர் இப்படி வெகுசொற்பமே. இன்னும் கொஞ்சம் பேர் அங்கொன்றும் இங்கொன்றுமா பதிவு போடுறாங்க. அப்படித்தான் ஆகும் என்பது நியதி.

மெரிக்கா வந்தப்புறம் பதிவுலகம் தாண்டி அதிக நண்பர்கள் கிடைக்கலை என்பதே நிஜம். போனவாரம் கூட பதிவுலக நண்பர்களைச் சந்திச்சேன். இந்த வாரமும் ஒருவரை சந்திக்கப்போறேன். அப்படி பதிவுலக நண்பர்களே என் வாழ்க்கையில சுத்தி இருக்கிறா மாதிரி ஆகிருச்சுங்க.

இத்தனை நாள் கூடவே இருக்கும் நண்பர்களை [2010ல் ஒரு நண்பர்கள் வட்டம் போட்டேன்(உ.த - அண்ணாச்சி மறந்துட்டேன்) ] அதுக்கு அப்புறம் ஒரு பதிவர்கூட நண்பனா மாறவே இல்லை. இல்லை, பிரமிப்பூட்டும் எழுத்துக்கள் கண்ல படவே இல்லை. ரொம்ப வருத்தம். மூத்தப் பதிவர்கள் எல்லாம்(2009க்கு முன்) கூகிள் +, ட்விட்டர் அப்படின்னு ஒதுங்கிட்டாங்க.




பதிவுலகம் நீர்த்துப் போகலாம், ஆனா இந்தளவுக்கு என்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. சமூக வலைதளங்கள் வந்தபிறகு, பதிவுலகம் மொக்கைகளை தவிர்த்திடுச்சுன்னே சொல்லலாம். ஆனால் பதிவுகளுக்கே சொந்தமான "அனுபவ" கதைகள் ரொம்ப கம்மியாகிருச்சு. கதை, கவிதைகள் கம்மியாகிருச்சு. தொடர்கதைகள் ரொம்ப சொற்பம். சரி விடுங்க, காலம் மாறிட்டே இருக்குல்ல.(நானும் ஒன்னுத்தையும் எழுதலைங்கிறது வேற கதை)

ஆம், 8 ஆண்டுகள் இந்தப் பதிவுலகம், எனக்கு பல நன்மைகளைத் தந்திருக்கு, அதுக்கு நன்றி சொல்லிட்டு 9வது ஆண்டுல அடியெடுத்து வைக்கிறேன்.  நன்றி நண்பர்களே!

32 comments:

  1. Iam from 2003.As you said most bloggers have switched to Twitter and Facebook.
    Congrats.Keep going
    karthik[ponniyinselvan]+amma

    ReplyDelete
  2. //பதிவுலகம் மொக்கைகளை தவிர்த்திடுச்சுன்னே சொல்லலாம். ஆனால் பதிவுகளுக்கே சொந்தமான "அனுபவ" கதைகள் ரொம்ப கம்மியாகிருச்சு. கதை, கவிதைகள் கம்மியாகிருச்சு.//

    கன்னாபின்னான்னு ரிப்பிட்டிக்கிறேன் :))

    ReplyDelete
  3. டெய்லி எதாச்சும் எழுதுறதுக்கு ப்ளாக் கண்டுபுடிச்சாங்க பிறகு அதை சுருக்கிட டிவிட்டர் வந்துச்சு அந்த டிவிட்டர்லேர்ந்து திரும்ப #365 ல மறுபடியும் ப்ளாக்கு அந்த ப்ளாக்குல டிவிட்டர் அளவுக்கு மேட்டர்ஸ்
    #உலகம் ஒரு முட்டைதான்ங்கோ :)))

    ReplyDelete
  4. இளா,

    வாழ்த்துக்கள், டிராக்டர்ல டீசல் தீராம ஓட்டுங்க :-))

    உங்களுக்கு கொஞ்சம் பின்னாடி தான் நான் வந்தேன் , இன்னும் மொக்கைப்போட்டுக்கொண்டு இருப்பதை கவனிக்கலையோ?

    என்ன அப்போ அப்போ அந்தகாரத்தின் இருளில் தாரதம்மியங்களுடன் சேர்ந்திசை பாட ஒதுங்கிடுவேன் :-))

    ReplyDelete
  5. அடேங்கப்பா.. முதல்ல வாழ்த்துகள்.. தினம் ஒரு பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. முயற்சிக்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  6. Vaalththukkal ullame. Innum thodarndhu pala varudangal padhiveludha vaalththukkal. 1/365 plan super. Appadiye namma thalaththukkum konjam vaangalen? http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  7. //அதனால நானும் ஒன்னை ஆரம்பிக்கிறேன். அதாவது தொடர்ந்து 365நாளும் பதிவு எழுதுறது. முடியுமான்னு தெரியல.//

    நாங்கள்ளாம் பாவமில்லையா? :(

    ReplyDelete
  8. நன்றி @ராமலஷ்மி, வடுவூர் குமார்



    பொன்னியின் செல்வந்-> ஆச்சர்யமா இருக்குங்க. இதுவரைக்கும் உங்களைப் பத்தி கேள்விப்பட்டதே இல்லை. அறிமுகத்துக்கு நன்றி! எந்த சந்திப்புக்கும் வந்ததில்லீங்களா?

    ஆயில்ஸ் --> நன்றி!

    ReplyDelete
  9. வவ்வால் --> இந்த ரெண்டு வாரமும் உங்க மேல செம காண்டாவே இருக்கு. உங்களுக்கு இட்லிவடைக்கும் கண்டிப்பா ஏதோ ஒரு தொடர்பு இருக்கும்னு சந்தேகிக்கிறேன்.

    ReplyDelete
  10. நினைவு கூர்தலுக்கு நன்றி.

    8 ஆண்டுக்கு நல்வாழ்த்துகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  11. சுசி, சிகரம் பாரதி --> நன்றி!

    ReplyDelete
  12. அனானி, எவ்வளவோ பொறுத்துக்கிட்டீங்க.. இதையும் அப்படிய்யே...

    ReplyDelete
  13. இளா: லந்தாச் சொன்னா, உங்களை இளமையா இருக்கிற "பதிவுலக தாத்தா" னு சொல்லலாம் போல இருக்கு! நீங்க இன்னும் 100 ஆண்டுகள் பதிவுலகில் வாழனும். :-))

    ReplyDelete
  14. டெய்லி ஒரு ப‌திவா.. அவ்வ்வ்.. இளா, ஏன் இந்த‌ திடீர் முடிவு? :)

    ReplyDelete
  15. எட்டு வருசமா.... வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  16. இளா,

    //வவ்வால் --> இந்த ரெண்டு வாரமும் உங்க மேல செம காண்டாவே இருக்கு. உங்களுக்கு இட்லிவடைக்கும் கண்டிப்பா ஏதோ ஒரு தொடர்பு இருக்கும்னு சந்தேகிக்கிறேன்.//

    ரெண்டு வாரமா காண்டு ஆவுர அளவுக்கு நான் ஒன்னும் ஸ்பெஷல் பதிவே போடலிங்கண்ணா, அப்புறம் ஏனுங்கண்ணா?

    ஹி...ஹி என்னைப்போய் இட்லி வடைனு சொன்னிங்களே, இதெல்லாம் நாயமா? பிரசன்னமானவர் தான் இட்லி வடைனு ஊருக்கே தெரியுமே!!!

    நானெல்லாம் தயிர் சாதம் என்றாலும் தொட்டுக்க சுட்ட கறுவாடு தேடும் அக்மார்க் கிராமத்து பதிவனுங்க :-))

    நான் இன்னும் பிராபல்யம் ஆகலை அதுக்குள்ள இத்தனை அக்கப்போரா:-))

    ReplyDelete
  17. எட்டு ஆண்டுகளுக்கு வாழ்த்துகள்.

    தினம் ஒரு பதிவுக்கும் வாழ்த்துகள் (இது வாசிக்கிறவங்களுக்கு). :-))))

    ReplyDelete
  18. இளா,

    வாழ்த்துகள்!
    தமிழ்மணம் காசி காலத்திருந்து இன்றைய தமிழ்மீடியா காலம் வரை தொடர்ந்து எழுதுகிறீர்களே, அதுவே சாதனை!! தொடருங்கள்!

    //

    என் காலத்திலிருந்தே எழுதும் பதிவர்கள் ரொம்ப கம்மியாகிட்டாங்க. கானா பிரபா, கோவி கண்ணன், லக்கி, பெனாத்தல் சுரேஷ், இட்லிவடை, துளசி டீச்சர் இப்படி வெகுசொற்பமே. இன்னும் கொஞ்சம் பேர் அங்கொன்றும் இங்கொன்றுமா பதிவு போடுறாங்க. //

    ஆமாம், நானும் 7 வருடமா அங்கொன்றும், இங்கொன்றுமாதான் வலைப் பதிகிறேன்.. நிறைய எழுத ஆசைதான்.. சோம்பேறி தனம்தான் தடுக்கிறது!! :))

    ***

    365 நாட்கள் தொடர்ந்து பின்வர முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  19. வாழ்த்துகள் இளா.

    நான் பதிவுலக வாசகனாக இருந்த காலத்தில் உங்களது பதிவுகளையும், பெனாத்தல் பதிவுகளையுமே அதிகமாக படித்திருக்கிறேன்.

    உங்களுக்கு குழந்தை பிறந்த பதிவு மறக்க முடியாத ஒன்று

    ReplyDelete
  20. || ஹி...ஹி என்னைப்போய் இட்லி வடைனு சொன்னிங்களே, இதெல்லாம் நாயமா? பிரசன்னமானவர் தான் இட்லி வடைனு ஊருக்கே தெரியுமே!!! ||

    ஆனா எனக்குத் தெரியாது வவ்ஸ்..ரகசியமா கொஞ்சம் சொல்லுங்க..

    # டவுட்டு 1

    || நானெல்லாம் தயிர் சாதம் என்றாலும் தொட்டுக்க சுட்ட கறுவாடு தேடும் அக்மார்க் கிராமத்து பதிவனுங்க :-)) ||

    கருவாடு தேடுறவங்கதான் கிராமத்துப் பதிவர்'னு சொல்றது பதிவரசியல்ல வருமா ?
    # டவுட்டு 2

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் இளா,

    நான் வந்தும் 6 வருஷம் ஆகப்போகுது. அப்போ இருந்த பல நட்புக்கள் இப்ப எழுதறது இல்ல என்பது எனக்கும் வருத்தம்தான். அதனால உங்க பதிவுல பல இடங்கள் என் மனசிலேர்ந்து வார்த்தையேவே தெரியுது.

    தினம் தேடித்தேடி பதிவுகள் படிச்சு நிறைய்ய தெரிஞ்சுகிட்டது ஒருக்காலம்.

    எல்லோரும் இப்ப மைக்ரோ ப்ளாகிங்கில் பிசியாகிட்டாங்க.

    ReplyDelete
  22. அறிவன்,

    முதல் டவுட்டை விவசாயிக்கிட்டேவே கேளுங்க,அவர் தான் சூப்பர் சீனியர் ,சொன்னா சரியா இருக்கும், நான் சொன்னா யூகமா தான் ரிஉக்கும்.

    டவுட்டு-2 , என்ன சார் இது நான் என்ன சூப்பர் ஸ்டாரா எது சொன்னாலும் அரசியல் ஆக்குறிங்க ?

    உப்புக்கறுவாடு,ஊற வச்ச சோறு ... ஊட்டிவிட யார கூப்பிட ?

    கொஞ்சம் ரா ஆ இருப்போம்னு சொன்னேன்.

    ReplyDelete
  23. நன்றி வருண், வெண்பூ, ஹார் பார்ட்டர், ஹூஸைனம்மா, உதயகுமார்

    ReplyDelete
  24. கூகுள் ப்ளஸ் ல் பார்த்துருக்கேன். எட்டு வருசம் என்றவுடன் பிரமிப்பா இருக்கு. ஒன்பதாவது வருடத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். சொக்கன் சொன்னது மிகச் சரியே, கடமையாக வைத்துக் கொண்டு எழுதிப் பாருங்க. வருஷக் கடைசியில் ஒரு அழகான டைரி போல இருக்கும். நான் உணர்ந்துள்ளேன். குறிப்பாக குழந்தைகள் வளரும் விதங்களை எழுத்தாக்கும் விதத்தில்.

    ReplyDelete
  25. ”என் காலத்திலிருந்தே எழுதும் பதிவர்கள் ரொம்ப கம்மியாகிட்டாங்க...” பதிவுலகம் நீர்த்துப் போகலாம், ஆனா இந்தளவுக்கு என்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.”

    உங்கள் பதிவுலக எழுத்துப் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.


    -இவண்
    ஏஜண்ட் ஞான்ஸ்

    ReplyDelete
  26. மாம்ஸ்

    எட்டு ஆண்டுகளாகக் கூடவே பயணித்து வரும் உம்மைப் போன்ற நண்பர்களைக் கொடுத்த வலையுலகிற்கு நன்றி, இன்னும் விடாமல் இந்த வலைப்பதிவைக் கொண்டு செல்ல வேண்டுகிறேன், வாழ்த்து

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)