Thursday, August 30, 2012

7/365 ஏமாற்றமளித்த சென்னை பதிவர் சந்திப்பு


பதிவர் வட்டம், பதிவுலகம் பற்றிய பதிவுகளை தவிர்த்தே வந்தேன். 1.அயர்ச்சி 2.என் பதிவால் சூழல் கெடுவது, என இரண்டே காரணங்கள்தான். ஏற்கனவே "அதைப்" பற்றிய பேச்சுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதாலே இந்தப் பதிவு.


ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்பது பெரிய காரியம், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய விழா குழுவினருக்கு வந்தனங்கள். விழாவில் அளிக்கப்பட்ட விருந்து பற்றி இதுவரையில் யாரும் குறை சொல்லாதவண்ணம் பார்த்துக்கொண்டது மிகப்பெரிய விசயம்.


இப்போ பதிவு...

தாமிரா மற்றும் அதிஷா : உங்களை அழைக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை, அவர்கள் எந்தப் பெயரையும் வைத்துக்கொள்ளலாம், அதுக்கான அங்கீகாரம் பெறப்படவேண்டிய ஆட்கள் நீங்கள் இல்லை, அதே போல அவர்களால் செய்து கொள்ளும் செலவிற்கு நீங்கள் கவலைப்படுவதன் அர்த்தமும் புரியவில்லை. இது போல இங்கே(அமெரிக்கா) வாரா வாரம் சந்திப்பு நடக்கிறது. உங்களை எல்லாம் அழைக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை, நீங்களாக வந்து கலந்துகொண்டால் வேண்டாமென நானும் சொல்லவில்லை. அமெரிக்கா, பெங்களூர், ஈரோட்டில்  நடைபெற்ற சந்திப்புக்கு எல்லாம் நான் உங்களை அழைத்ததில்லை.பரந்துப்பட்ட உலகில் அதுவும் சமூக வலைதளங்கள் தலைமுறையில்  ஆங்காங்கே குழுவாக இருப்பது சகஜம்தான். அவரவர்க்கு அவரவருடைய சுற்றமே உலகு.

பதிவே எழுதாத பதிவர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் அனுப்பவேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவேண்டும்? திண்ணை காலியாக்க வேண்டாமா?


2007 - பதிவர் பட்டறையின் போது அதனை ஒருங்கிணைத்த நண்பர்களின் பங்கு/அருமை, அனைவரையும் அரவணைத்துச் சென்ற பாங்கும், அதன் அருமையும் இப்போது புரிகிறது. விழாவை நடத்தும்  தலைமை மற்றும் செயலாற்றுபவர்களின் செயல்களிலிருந்தும் நடந்து கொள்ளும் விதத்திலேயும் அதன் வெற்றி இருக்கும். இந்தச் சத்திப்பும் அவ்வாறே அதனை பிரதிபலிக்கிறது.

ஒரு சந்திப்பை பலரும் கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்லும் உரிமை அதனை நடத்துபவர்களுக்கே உண்டு. சிலர் பதிலளிப்பார்கள், சிலர் மறுக்கலாம், அது அவரவர் உரிமையும்,  நேரமின்மையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அதனால் கேள்வி கேட்காதீர்கள், கேட்டு, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமிருந்து இப்படியானதொரு பதில் வந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.

Source- Thanks: http://pattikattaan.blogspot.com/2012/08/blog-post_29.html


பதிவுலகம் ஒரு கட்டுக்குள் அடங்காத காட்டுக் குதிரை, அதற்கு கடிவாளமிட்டு பெயரிட்டு, முதலாளியாக  ஆக விரும்புபவர்களுக்கு வெட்டிப்பயல் இட்ட பதிவே காலத்திற்கும் போதுமானது.

2006 வரைக்கும் தமிழ் பதிவுகளின் வீச்சு இந்தியை விட அதிகமாக இருந்தது. இப்பொழுது நாம் அனுபவிக்கும் இந்த வசதி இல்லாத காலத்தில் அதற்காக பாடுபட்ட உமர்தம்பி, காசி, மதிகந்தசாமி மற்றும் தமிழ்மண அன்பர்களை (பெயரை உபயோகப்படுத்துவதற்கு மன்னிக்கவும்) நாம் ஒவ்வொரு சின்ன சின்ன சந்திப்பிலும் நினைவு கூர்தல் தேவையானது இல்லை.


சென்னை பதிவர் சந்திப்பைப் பற்றிய என்னுடைய வருத்தம் இதுதான்:

சந்திப்பு நடந்து முடிந்து பலநாள் ஆகியும், நிகழ்ச்சி நடந்த விதம் பற்றிய ஒரு முழுமையான பதிவையும் இன்னும் நான் படிக்கவில்லை/என் கண்ணில் படவில்லை. சந்திப்பில், என்னைக் கிள்ளிட்டான், முடியை புடிச்சி இழுத்துட்டான் என்கிற பாங்கிலேயே அனைத்துப் பதிவுகளும் என் கண்ணில் படுகின்றன. ஏன் முழுமையான ஒரு பதிவும் இன்னும் வரவில்லை. சுரேகா ஆரம்பித்திருக்கிறார் என நினைகிறேன். பட்டிக்காட்டான் கணக்குக் காட்டிய பதிவை மட்டுமே ஒரு முழுமையான பதிவாக எண்ணுகிறேன். (பி.கு: மேலே இருக்கும் ஒரு படம் இந்தப் பதிவின் ஒரு மறுமொழியிலிருந்து எடுத்ததே).

இதனால் என்னைப் போல வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பதிவருக்கும், இந்த சந்திப்பில் என்ன நடந்தது என இதுவரையில் முழுமையாக அறிந்திராத வகையில், இந்தச் சந்திப்பு ஏமாற்றமே அளிக்கிறது



மற்றபடி நண்பர்கள் குழுமமாக ஒரு நிகழ்ச்சி நடத்தியதற்கு வாழ்த்துகள்!

29 comments:

  1. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது ஏனோ என் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  2. இளா,

    நல்லா சொன்னிங்க போங்க, ஆனாலும் அயர்ச்சி, பெர்யர்ச்சிலாம் பார்க்கலாமா? அப்படிலாம் நான் பார்த்தால் இங்கே பூந்து ஆட முடியுமா?

    ஆனால் எல்லாரும் அவங்க எதுவும் யார் பதிவிலும் சொல்ல மாட்டாங்க, பதிவா போட்டு என்ன வேண்டும்னா சொல்லிக்கிறாங்க கூடவே கமெண்ட் மாடரேஷன்,என்னைப்போல அடுத்தவங்க பதிவில அவங்க கண்ணு முன்னாடி பேசின ,ஜட்டிய மோந்து பார்க்கிறாங்க.

    இப்பவும் எல்லாம் தனித்தீவா தான் இருக்காங்க, இங்கே முன்ன நின்னவங்க பலரும் அடுத்தவங்க பதிவை படிக்கிறதே இல்லை, அவங்க பதிவுக்கு போய் தல சூப்பர்னு சொல்றவங்கள மட்டும் தான் தெரிஞ்சு வச்சு இருக்காங்க, ஒரு வேளை ஒரு நாள் யாருமே படிக்க வரலைனா எல்லாப்பதிவரும் செத்துட்டாங்கன்னு கூட நினைச்சுப்பாங்க, இவங்க தான் பிரப்லப்பதிவர்கள் :-))

    குழுமம் உருவாவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை இந்த ஈகோ பிடித்த ஆட்களை நினைத்தால் கிர்ராகுது :-))

    ReplyDelete

  3. தொடர்ச்சி,


    ஒருப்பதிவர் இத்தனைக்கும் அவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கார், 20 பேருக்கு மேல எனக்கு தெரியலை இத்தனைப்பதிவர்கள் எழுதுறாங்க என்பதே இப்போ தான் தெரியுது இனிமே படிக்கணும்னு சொல்லுறார், வந்தது 150 பேரு இருக்கும், இதான் பிரபலப்பதிவர்களின் பதிவுலக பங்களிப்பு.

    நாம் எதாவது மாற்றுக்கருத்து சொல்லிட்டால் அதுக்காகவே ஒரு ரகசிய கூட்டம் போடுறாங்க, அதை இன்னிக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன் ஒருத்தர் என்னைப்பத்தி அவர்க்கிட்டே சொல்லி இருக்கென் இவர் கிட்டே சொல்லி இருக்கேன்னு மிரட்டுறார் :-))

    நான் அதுக்கு எல்லாம் கவலைப்படும் ஆள் இல்லைனு இன்னமும் தெரியலை. இந்த காலத்திலயும் கிராமாத்தானை மிரட்டுறாப்போலவே மிரட்டி பார்க்கிறாங்க, என்ன கொடுமை சார் இது :-))

    நானே ஆறு மாசத்துக்கு ஒரு தடவை போய் போய் வரேன் ,இவனுங்க செய்ற கூத்தை பார்த்தால் திரும்ப வரவே வேண்டாம்னு தோனுது :-))

    forming a bloggers association is not a problem,few wrong guys at right place ,thats the problem!

    ஆனால் நிறைய ,நிதானமான ,அறிவுப்பூர்வமானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைத்தையும் சரி செய்துவிடுவார்கள் என நம்பிக்கை இருக்கு.
    -----

    இளா,

    கருத்துரிமைக்கு ஆதரவான
    உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. வவ்வால், விடுங்க பாஸ், இன்னும் 2 வருசத்துல பதிவுலகம் விட்டுட்டு பலரும் போய்டுவாங்க. புதுசா இன்னொரு குழு வரும்; :) முரளி சொன்னாப்ல இதுவும் ஒரு வட்டம். பாலபாரதி - மாதிரியா ஒரு ஆளுமை இருக்கனும். அவரும் ஆளுமைன்னு சொல்ல மாட்டாரு, அது குழுமம்னுதான் சொல்லுவாரு

    ReplyDelete
  5. இளா,

    // இன்னும் 2 வருசத்துல பதிவுலகம் விட்டுட்டு பலரும் போய்டுவாங்க. புதுசா இன்னொரு குழு வரும்; :) //

    ஹி..ஹி அதே, அதே ஆனால் அப்போ கூட நான் வேதாளம் போல உலாத்திக்கிட்டு இருப்பேன் :-))

    நத்தைப்போல பதிவு போடுறது நான் ஒருத்தன் தான் சமீபத்தில தான் 200 தாண்டி இருக்கேன்னு தெரிஞ்சுக்கிடேன், பின்னூட்டம் தான் சுலுவா எனக்கு வருது என்ன செய்ய :-))

    ஆமா நானும் அதே தான் சொன்னேன் வாழ்கை ஒரு வட்டம்னு :-))

    //பாலபாரதி - மாதிரியா ஒரு ஆளுமை இருக்கனும். அவரும் ஆளுமைன்னு சொல்ல மாட்டாரு, அது குழுமம்னுதான் சொல்லுவாரு//

    எனக்கு தெரிஞ்சு அவரு நான் ஒரு பிராபால்யப்பதிவர்னு நடந்துக்கிட்டதே இல்லை,படிச்சதை வைத்து சொல்கிறேன்.நான் அவருக்கு அதிகம் கமெண்ட் போட மாட்டேன் காரணம் அவர் அப்போ வேர்ட் பிரஸ் வைத்திருந்தார்.

    சும்மா அப்ளிகேஷன் ஃபில் செய்றாப்பொல ஒர்ஃபு கமெண்ட்டுக்கு வேலை செய்ய பிடிப்பதில்லை அவ்ளவு தான்.

    ReplyDelete
  6. இளா,

    2007 பத்தி ரொம்ப மெனக்கெட்டு தேடினேன், இப்படி பாஸ்டன் பாலா எல்லா சுட்டியும் ஒரே இடத்தில் வைத்திருக்கார்னு எனக்கும் சொல்லி இருக்கலாம்ல?

    உண்மையில் நல்ல தொகுப்பு. ஆனால் ஏற்கனவே படிச்சு நவத்துவாரத்திலும் காத்து போயிடுச்சு ,இவர் சுட்டில ஏகப்பட்டது இருக்கு படிச்சேன் நான் காலி :-))

    ReplyDelete
  7. //இதனால் என்னைப் போல வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பதிவருக்கும், இந்த சந்திப்பில் என்ன நடந்தது என இதுவரையில் முழுமையாக அறிந்திராத வகையில், இந்தச் சந்திப்பு ஏமாற்றமே அளிக்கிறது //

    எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது.

    ReplyDelete
  8. ஏங்க அதான் பதிவுலையே குடுத்திருக்கேனே. விக்கிப்பீடியாவுல ஏத்தி ஏத்தி சுட்டி குடுக்கிறதை ஒரு பொழப்பாவே ஆகிடுச்சு பாருங்களேன் :(

    ஐயா --> நன்றி!

    ReplyDelete
  9. Valid Points =>

    //ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்பது பெரிய காரியம்//

    //விழாவில் அளிக்கப்பட்ட விருந்து பற்றி இதுவரையில் யாரும் குறை சொல்லாதவண்ணம் பார்த்துக்கொண்டது மிகப்பெரிய விசயம்.
    //

    //உங்களை அழைக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை, அவர்கள் எந்தப் பெயரையும் வைத்துக்கொள்ளலாம், அதுக்கான அங்கீகாரம் பெறப்படவேண்டிய ஆட்கள் நீங்கள் இல்லை, அதே போல அவர்களால் செய்து கொள்ளும் செலவிற்கு நீங்கள் கவலைப்படுவதன் அர்த்தமும் புரியவில்லை//

    //ஒரு சந்திப்பை பலரும் கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்லும் உரிமை அதனை நடத்துபவர்களுக்கே உண்டு. சிலர் பதிலளிப்பார்கள், சிலர் மறுக்கலாம், அது அவரவர் உரிமையும், நேரமின்மையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
    //

    //மற்றபடி நண்பர்கள் குழுமமாக ஒரு நிகழ்ச்சி நடத்தியதற்கு வாழ்த்துகள்!//

    ReplyDelete
  10. இளா - ஒரு சென்னை பதிவராகவே என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு நடத்துகிற ஒரு மாபெரும் மாநாடு இது. இதில் என் பங்களிப்பாக என்னால் அவ்வளவு பெரிய தொகையை தரமுடியாது. என்னைப்போலவே எத்தனையோ பேர் இருக்கலாம். முன்பெல்லாம் நீங்கள் சொல்லுகிற அண்ணன் பாலபாரதி காலத்தில் மெரினாபீச்சில் எளிமையாகவே இந்த சந்திப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் மதிய சோத்துக்கு காசில்லாமல் கூட மகிழ்ச்சியோடு கலந்துகொண்டிருக்கிறேன்.

    அந்த கூட்டங்களில் காசிருப்பவன், காசில்லாதவன், பிரபலம், மூத்த என்கிற பாகுபாடு இருக்காது. அங்கே மேடைகள் இருக்காது. பதிவெழுதாத பிரபலங்கள் இருக்க மாட்டார்கள்.

    ஆனால் இன்று எல்லாமே மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் செய்ததை குறைசொல்லவேண்டும் என்பதோ அவர்களுடைய செயலை கேலி செய்ய வேண்டும் என்பதோ என்னுடைய நோக்கமல்ல..

    காசுபோட்டு செய்கிற இதுமாதிரி படோடோபங்கள் காசுகொடுக்க முடியாத சாதாரண பதிவர்களுக்கு எவ்வளவு தாழ்வுமனப்பான்மையை உண்டுபண்ணும் என்கிற எண்ணத்திலேயே பதிந்தேன். நான் அந்த வலியை உணர்ந்திருக்கிறேன்.

    ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கோ இல்லை என்னை விமர்சிக்கிற மோகன்குமாருக்கோ மணிஜிக்கோ பெரிய விஷயமாக இல்லாமலிருக்கலாம். எனக்கு அது இரண்டு நாள் கூலி. என் வீட்டு வாடகையில் நான்கில் ஒருபங்கு.

    ஒரு சென்னைப்பதிவராக மாற்றுகருத்துகளை கூட பகிர்ந்து கொள்ள முடியாத கேடுகெட்ட சூழலில் இருப்பதை விட கோவை பதிவராகவே என்னை நினைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். கோயம்புத்தூர்காரங்க மனசுல படத்த மறைக்காம சொல்றவங்க..

    பதிவுலக அங்கீகாரமோ அல்லது புதியவர்களின் எழுச்சியை கண்டு எழுந்த பொறாமையோ எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைக்கலாம். இஷ்டமிருந்தா கலந்துக்கோ இல்லாட்டி ஓதுங்கிக்கோ என்றும் கூறலாம் ஐ டோன்ட் மைன்ட். பட் என் கருத்தை சொல்லுகிற உரிமையை கட்டற்ற சுதந்திரத்தோடு வழங்கியிருக்கிற இடமாகவே இதுவரை பதிவுலகம் இருந்திருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    நன்றி வண்க்கம்

    ReplyDelete
  11. /காசுபோட்டு செய்கிற இதுமாதிரி படோடோபங்கள் காசுகொடுக்க முடியாத சாதாரண பதிவர்களுக்கு எவ்வளவு தாழ்வுமனப்பான்மையை உண்டுபண்ணும் என்கிற எண்ணத்திலேயே பதிந்தேன். நான் அந்த வலியை உணர்ந்திருக்கிறேன்.

    ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கோ இல்லை என்னை விமர்சிக்கிற மோகன்குமாருக்கோ மணிஜிக்கோ பெரிய விஷயமாக இல்லாமலிருக்கலாம். எனக்கு அது இரண்டு நாள் கூலி. என் வீட்டு வாடகையில் நான்கில் ஒருபங்கு. //

    அதிஷா உங்களோடு உடன்படுகிறேன். என்னாலும் இதற்காகவெல்லாம் பணம் செலவிடமுடியாது. பணம் இருக்கிறது இல்லை என்பதைத்தாண்டி, எனக்கு பிடிக்காத விசயங்களில் ஒன்று. அந்த ஆயிரத்தை நேரடியாக என்னால் ஒரு குழந்தையின் படிப்புக்கு செலவு செய்ய முடியும் என்று நம்பக்கூடியவள்.

    அதே சமயம் பணம் இருப்பவர்கள் இதையெல்லாம் செய்துட்டு போகட்டுமே நமக்கென்னவென இருப்பேன்.

    பணம் என்பது பிரச்சனையல்ல. அதற்கான தாழ்வு மனப்பான்மை வராமல் நம்மை நாம் சரிசெய்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்களை ஏன் இப்படியென கேட்டு என்ன பயன். அதற்கான பதிலோ பயனோ எப்போதும் உங்களுக்கு கிடைக்காது.

    ReplyDelete
  12. கவிதா இதுமாதிரி படோடோபத்துக்கு எல்லாரும் ஆயிரம் ரூபாய் கொடுக்குமிடத்தில் பத்தாயிரம் கொடுக்கிறவனக்கு ஸ்பெஷல் மரியாதை கொடுப்பார்கள் தெரியுங்களா? ;-)

    ReplyDelete
  13. //பத்தாயிரம் கொடுக்கிறவனக்கு ஸ்பெஷல் மரியாதை கொடுப்பார்கள் தெரியுங்களா? ;-) //

    :(( தெரியாதுங்க.. அரசியல் :((. அப்படி நடந்தால் அதற்காகவே நிறைய பணம் தர விரும்பிகள் இருப்பாங்களே.

    ReplyDelete
  14. அதிஷா,

    நீங்கள் சொல்வது போல பணம் சிலருக்கு முடியாது தான்,ஏன் தேவையும் இல்லை எனலாம்.

    ஆனால் விருப்பப்பட்டு கொடுப்பவர்களை கொடுக்க கூடாது என சொல்ல முடியாதே.

    மேலும் பதிவர்கள் அளித்த பணமோ,ஸ்பான்சர்களோ செலவில்லாமல் செய்யக்கூடியதை செலவில்லாமல் செய்து "காஸ்ட் எஃபெக்டிவாக" நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    இப்போது எவ்வளவு நிதி சேர்கிறதோ அதுக்கு ஏற்றார்ப்போல நடத்தலாம் என நடத்தியுள்ளது மட்டுமே எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.

    மண்டபம் வாடகைக்கு எடுத்திருக்க தேவையில்லை, ஞாயிறு விடுமுறை என்பதால் பள்ளி,கலூரி என ஏதேனும் ஒரு இடத்தில் அரங்கம் பெற்று நடத்தியிருக்கலாம்.


    செஸ் டோர்ணமென்ட் 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை எப்போ எனப்பார்த்து அதற்கு ஏற்ப நாள் முடிவு செய்து நடத்தியுள்ளோம்.

    இப்போதும் சென்னையில் பல செஸ் டோர்ணமெண்ட் அப்படித்தான் நடக்கும், ரெட் கிராஸ் சொசைட்டி, பள்ளி, கல்லூரி என ,அப்படியே மண்டபம் பிடித்து நடத்தினாலும் இலவசமாக பெறுவார்கள்,அது எந்த சங்கம் நடத்துகிறதோ அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு.

    மாநில,தேசியப்போட்டி எனில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இலவசமாக அரசு இடம் கொடுக்கும்.

    பதிவர்களுக்கு அரசு கொடுக்காது நாம் தான் பள்ளி,கல்லூரி என இடம் தேர்வு செய்யணும் எத்தனை பிரபலப்பதிவர்கள் இருக்காங்க முடியாதா என்ன?

    பிரபலப்பதிவர்கள் சுய முயற்சியில் மண்டபத்தினை சகாயமாக பெற்று இருப்பார்கள் என நினைத்தேன் இதுவரையில்.

    மற்றப்படி குழுமம் வேண்டுமா ,வேண்டாமா என்பது திரட்டி வேண்டுமா ,வேண்டாமா? என்பது போல பிடித்தால் ஒரு திரட்டியில் இணைக்கிறோம் எனவே பிடித்தால் குழுமத்தில் சேரலாம்.

    ReplyDelete
  15. அதிஷா நான் திருப்பூர்தான்,,,

    கோவை மண்ணைச் சார்ந்தவர் என்று நீங்கள் சொல்வதால் உரிமையோடு சொல்கிறேன்.,

    சிலநாட்களாகவே உங்கள் எழுத்தைக் கவனித்து இருக்கிறேன். பணம் இல்லை என்பது நிதர்சனம் ஆனாலும் புலம்பல் ஓவரா இருக்கு., இப்படி புலம்பல் ஓவரா இருந்தா பணம் வரக்கூடிய வாய்ப்புகள் உங்களை நெருங்கி வராது., முதல்ல மைண்ட சரி பண்ணுங்க...இத நீங்கள் எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி :))

    பணம் இல்லாததால உங்களுக்கு இந்த பதிவர் சந்திப்பின் செலவு தொகை அதிகமாத் தெரியுது,

    இந்த செலவு பணம் ஒவ்வொருவரும் தனக்கென., தன் மகிழ்ச்சிக்கென, தன் நண்பர்களின் மகிழ்ச்சிக்கென செலவு செய்ததாகத்தான் பார்க்கிறேன்.

    மற்றவர்களுக்கு உதவுவது என்பது சரிதான். இணையத்தில் அதுவும் பிரச்சினைதான்... யாருக்கு உதவினாலும் அதை யார் ஒருத்தர் முன்னெடுத்தாலும் அதிலும் பிரச்சினைகள் பல வரும்.

    உதவுவது என்று முடிவெடுத்தால் வாழ்நாள் முழுவதும் எப்படி வேண்டுமானாலும் உதவலாம்.

    ReplyDelete
  16. //
    ஒரு சென்னைப்பதிவராக மாற்றுகருத்துகளை கூட பகிர்ந்து கொள்ள முடியாத கேடுகெட்ட சூழலில் இருப்பதை விட
    //

    அதிஷாவின் இதே வார்த்தைக‌ள்தான் என் ம‌ன‌ ஓட்ட‌மும்..

    ReplyDelete
  17. அதிஷா,

    ////
    ஒரு சென்னைப்பதிவராக மாற்றுகருத்துகளை கூட பகிர்ந்து கொள்ள முடியாத கேடுகெட்ட சூழலில் இருப்பதை விட
    //

    மாற்றுக்கருத்து சொன்னால் கேட்க மாட்டாங்கன்னு நினைத்துக்கொண்டே இருப்பதற்கு பதில் சொல்லி இருக்கலாம்.

    இப்போ நான் யார் என்ன நினைப்பாங்க என பார்க்காமல் அவரவர்ப்பதிவில் போய் பேசவில்லையா.

    மாற்றுக்கருத்து ஆதரவாளர் என்ற வகையில் நானும் உங்க கட்சியே , சரி உங்க கிட்டேயோ ,யுவகிருஷணா (லக்கி) கிட்டேயோ மாற்றுக்கருத்து சொன்னால் நட்புடன் ஏற்பீர்களா?

    நமக்கான சுதந்திரம் என்பது அடுத்தவர் கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதில்லை, அப்படி எதிர்ப்பார்த்தால் நாமே நம்மை அடிமையாக்கி வைத்துள்ளோம் என்பதாகும்.

    கருத்து சுதந்திரம் இல்லை என்பதை ,கருத்தினை சொல்லி என்ன நடக்கிறது என்றுப்பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.எதுவும் சொல்லமுடியாத சூழல் என இணையத்தில் நிலவினால் ,அதற்கும் நாமே தான் காரணம்.

    கூகிள் காரன் கொடுத்த அனானி ஆப்ஷனை கூட முடக்கி வைக்க தானே ஆசைப்படுகிறோம், அப்போ நமக்கும் அடுத்தவனை அமுக்க ஆசை இருக்கு தானே :-))

    அனானிய பேசவிட்டால் கண்டபடி பேசுவான் எனப்பயம்? அதே போல பெயர் தெரிந்த ஒருத்தரை ஃப்ரியா பேசவிட்டாலும் கண்டப்படிப்பேசுவான் என சிலருக்கு பயமோ ,தயக்கமோ இருந்தால் என்ன செய்ய?

    நம்மை அடுத்தவன் மதிக்கவில்லைனு சொல்வோம்,நாம் அடுத்தவரை மதிக்கமாட்டோம் இது இந்திய மனோபாவம் :-))

    ஒன்னும் இல்லை உதாரணமாக ஒரு "X" பதிவர் ஆரம்பத்தில் அய்யா படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க என சொல்கிறார், கொஞ்ச நாள் கழித்து மாடரேஷன் வச்சிக்கிறார், அப்புறம் என் இஷ்டம் எந்த கமெண்ட் பிடிக்குதோ அதை வெளியிடுவேன் என்கிறார்,

    ஆரம்பத்தில் வரும் கமெண்ட்களுக்கு எல்லாம் பதில் சொல்கிறார் ,நன்றி என்கிறார், அப்புறம் பதில் சொல்வதை நிறுத்திக்கொள்கிறார், பிறர்ப்பதிவுகளை படிப்பதும் இல்லை, பின்னூட்டுவதும் இல்லை என மாறிவிடுகிறார்.

    சும்மா பதிவில் எழுதுவதற்கே இப்படிலாம் இருந்துவிட்டு , அப்புறம் எனக்கு உலகமே மரியாதை க்கொடுக்கணும் என எதிர்ப்பார்க்க சுதந்திரப்போராட்ட தியாகியா என கேட்கமாட்டார்களா?

    ஏற்றத்தாழ்வுகள் பணத்தில் மட்டும் அல்ல மனதிலும் இருக்காமல் இருந்தால் மட்டுமே அப்படி சமத்துவம் பற்றிக்கவலைப்படலாம்.

    ஹி..ஹி இக்கருத்து யார் மனதினையும் புண்படுத்த அல்ல, சராசரிப்பதிவர்களின் மனதில் ஓடும் எண்ணத்தினை பிரதிபலிக்கவே.

    ReplyDelete
  18. //
    ஒன்னும் இல்லை உதாரணமாக ஒரு "X" பதிவர் ஆரம்பத்தில் அய்யா படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க என சொல்கிறார், கொஞ்ச நாள் கழித்து மாடரேஷன் வச்சிக்கிறார், அப்புறம் என் இஷ்டம் எந்த கமெண்ட் பிடிக்குதோ அதை வெளியிடுவேன் என்கிறார், //

    இது காலாகாலமா நடப்பது தானே....

    ஊனா தானா அண்ணாச்சியத்தவிர யாரும் பதில் சொல்ற மாதிரி தெரியல...

    இதுல ஒருத்தர் ப்ரபல பதிவர் பதில் சொல்லனும்னு நெனக்கிறதுல என்ன நியாயம்ன்னு கேக்கறார்

    அட தேவுடா..... ப்ரபல பதிவராம்ல

    ReplyDelete
  19. கேரள தமிழ் சேட்டா,

    //ஊனா தானா அண்ணாச்சியத்தவிர யாரும் பதில் சொல்ற மாதிரி தெரியல...
    //

    ஏன் நான் இல்லையா ,அப்போ என்னை நீங்க பிராபல்யப்பதிவர்னு ஒத்துக்கம்மாட்டிங்க, என் மேல உங்களுக்கு பொறாமை, என்னை அழிக்க சதி, எனக்கு மன உளைச்சல் அளிக்கவே இப்படி கமெண்ட் போட்டு இருக்கிங்க நீங்க 1947 இல் இருந்து இப்படிக்கமெண்ட் போட்டு பலரைப்பதிவு எழுத விடாமதடுத்திட்டிங்க, நேத்து இந்திராகாந்தி HSD call செய்து சொன்னாங்க :-))


    எனவே நான் சி.ஐஏவில் உங்க மேல புகார் கொடுக்க போறேன் :-))

    இதான்யா பதிவுலகம் ,எதாவது சொன்னா மிரட்டுவாங்க தமிழ்சேட்டா,ஆனாலும் கண்டுக்கிறது இல்லை என்னப்பெரிய பயம் ...நான் எல்லாம் எமனுக்கே டாட்டா காட்டியவன் சொன்னா நம்பவா போறாங்க.(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்)

    "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்கள் தோறும் வேதனை இருக்கும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி , உள்ளதை எண்ணி நிம்மதி நாடு!"

    ச்சியர்ஸ்!

    ReplyDelete
  20. வவ்வால்


    என்னுடைய மொபைலில் உங்கள் தளம் ஓப்பன் ஆவதில்லை அதனால் உங்கள் தளத்தை இது வரை படிக்கவில்லை

    டெம்ப்ளேட் ப்ராப்ளம் ஆக இருக்கும்ன்னு நெனக்கறேன் :)

    ReplyDelete
  21. @அதிஷா
    நண்பா உங்கள் கருத்து எனக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது. நீங்கள் கோவை பதிவராக இருக்க விரும்புகிறேன் என்பது மகிழ்ச்சியே!

    நான் திருப்பூர் ஈரோடு பதிவர்சந்திப்பில் நான் புதிய பதிவர் என்பதால் ஒன்றிரண்டு நண்பர்களை தவிர யாரும் கண்டு கொள்ளவில்லை, எங்களுக்கான எந்த வாய்ப்பும் அறிமுகமும் இல்லை.அழையா விருந்தாளியாக திருமணத்திற்கு வந்த மனநிலையில் வேதனையுடன் திருப்பினோம்.

    ஆனால் அங்கு தனியாக நின்ற எங்களை அழைத்து விசாரித்து எங்களோடு நீண்ட நாட்கள் பழகிய நண்பர்களைப் போல் பழகியது சென்னை நண்பர்கள்தான் இது வரை மாமான்,மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நட்பு வளர்ந்திருக்கின்றது.

    நாங்கள் திருப்பூரில் இருந்தாலும் திருப்பூரில் இருக்கும் பதிவர்கள் ஒரு சிலரை தவிர யாரும் எங்களோடு நட்பு பாராட்டுவதில்லை,அது அவரவர் விருப்பம். அதனால் திருப்பூரைச் சார்ந்த நிறைய நண்பர்கள் கோவை குழுமத்தில் இணைந்துள்ளோம் ”அக்கரைக்கு இக்கரை பச்சை”

    அப்படி கண்டு கொள்ளாமல் விடப்பட்ட நாங்கள் ஆரம்பித்த கோவை பதிவர் குழுமம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கின்றது. இதில் எங்கள் சிலரின் பங்கு மிகக்குறைவுதான், உடல் உழைப்பு மட்டுமே! பொருள் ஒரு சிலரால் மட்டுமே தாராளமாக கிடைக்கின்றது ஆனால் எங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் நட்புகள் நடத்துகின்றார்கள், எல்லாம் மறந்து நட்புடன் இருப்போம் நன்றி!

    ReplyDelete
  22. அதிஷா///
    பதிவர் சந்திப்புக்கு பணம் யாரும் கேட்கலயே...விருப்பம் இருந்தா கொடுங்க அப்படின்னு தானே சொன்னாங்க.

    உங்களுக்கு ஆயிரம் ரூபாய் என்பது மிக பெரிய விஷயம் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.(நண்பர்களுடன் அரசு கடைக்கு செல்லும் போதோ இல்லை எங்காவது ஊர் சுற்ற செல்லும் போதோ உங்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது பெரிதாக தோணாதா ?)
    நம்மை படிக்கிற சக பதிவர்களை, நாம படிக்கிற சக பதிவர்களை சந்திப்பதில் எவ்ளோ மகிழ்ச்சி என்பது உங்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை.

    பின் ஏன் இந்த விதண்டாவாத பேச்சு...

    ReplyDelete
  23. இந்த பதிவை இன்று தான் வாசிக்கிறேன்

    இணையத்தில் பின்னூட்டத்தில் விவாதித்து எந்த புண்ணியமும் இல்லை என்பதை கடந்த ஒரு வாரத்தில் மண்டை உடைந்து புரிந்து கொண்டாலும், சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்

    பணம் தந்தால் தான் வரவேண்டும் என எங்கும் யாரிடமும் சொல்ல வில்லை. ஸ்பான்சர் போதிய அளவு கிடைக்காத போது, இருக்கிற நண்பர்கள் பணம் போட்டு தானே நடத்த வேண்டும்? அதற்காக ஆரம்பித்த ஒரு விஷயத்தை பாதியில் நிறுத்தி விட முடியுமா? விழாவுக்கு வந்தோரில் பணம் தந்தோர் நான்கில் ஒரு பங்கை விட குறைவே. இங்கு முக்கியம் பணம் அல்ல, அனைவரும் ஒன்றாய் சேரவேண்டும் என்ற மனம் தான் அது இருந்தோர் கலந்து கொண்டனர். சிலர் சில்லியான காரணம் காட்டி கலந்து கொள்ளவில்லை

    அடுத்து பணம் தந்தோருக்கு அதிக முக்கியத்துவம் என்பது. அனைவரும் சரி அளவு பணம் போட வேண்டும் என்பது முதலில் எடுத்த முடிவு. முடிந்த வரை பின்பற்றினோம். கடைசியில் தான் வேறு வழி இன்றி அப்துல்லாவை சிறு பணத்துக்கு அணுகினோம்.

    விழா குழுவினர்/ பணம் போட்டோர்/ போடாதவர் என்று எந்த வித்யாசமும் மேடையில் காட்ட வில்லை. பணம் தராத சென்னை பதிவர்கள் பலர் மேடையில் மிக முக்கிய பங்காற்றினார். அவர்கள் நன்கு பேசும் திறமை உள்ளவர்கள்- அந்த திறமை முழுதும் பயன்படும் படி உழைத்தனர். அவ்வளவு தான் ( இதையும் குத்தி காட்ட சொல்கிறான் என திரித்து பேசவும் கூடும்)

    மாற்று கருத்து கூடாது என்பதல்ல, முப்பது பேர் கூடி நடத்தும்போது எங்களுக்குள் மாற்று கருத்தே வராது என்றா நினைக்கிறீர்கள்? எத்தனையோ மாற்று கருத்து/ விவாதம்/ கருத்து மோதல் இருந்தது. ஆனால் அவற்றை விவாதித்து மெஜாரிட்டி கருத்து படி நடக்க வேண்டும் என்பதில் முதலிலேயே தெளிவாய் இருந்தோம் (குடி - மதம் சார்பாக விழாவுக்கு முன் நடந்த பொது வெளி சண்டைகள் நினைவிருக்கிறதா?)

    யுவகிருஷ்ணா/ அதிஷா வந்தால் அவர்களுக்கு முக்கிய இடம் தரவேண்டும் என்ற கருத்தை எடுத்து பேசியவன் நான். இது குறித்து நடந்த முன் ஆலோசனை கூட்டத்தில் யுவா/ அதிஷாவின் அருமை நண்பர் லதானந்த் இருந்தார். அப்போது நடந்த விரிவான விவாதம் மற்றும் எடுத்த முடிவுகள் பற்றி அவரிடம் கேட்க சொல்லுங்கள். முழுதாய் சொல்லுவார்.

    ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்று இருக்கும் இரட்டை நிலை தான் கோபம் ஏற்படுத்துகிறது. தனக்கு விருது தந்தால் ஆடம்பர செலவை ஏற்று கொள்ளலாம். தான் கலந்து கொள்ளா விடில் அத்தகைய விழாவை எதிர்க்க வேண்டும் என்பது தான் இவர்களின் நிலைப்பாடு என்று தான் அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு தனது பிளஸ்சில் " ஆமா அப்படித்தான் எனக்கு விருது தந்தார்களே ! அதான் அப்போது சும்மா இருந்தேன்" என தன்னை தானே கிண்டல் செய்தால் விஷயம் திசை மாறி போய் விடும் என நினைத்தால், என்ன செய்வது?

    எல்லா நண்பர்களும் வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் இது சாத்தியம் இல்லையோ என்கிற எண்ணம் இப்போது தான் வர துவங்கி உள்ளது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete
  24. விழா பற்றி முழுமையான பதிவே இல்லை என்றதால் சில இங்கு பகிர்கிறேன்

    சென்னை பதிவர் மாநாடு என்ன சாதித்தது?

    http://veeduthirumbal.blogspot.com/2012/09/blog-post_2.html

    பதிவர் மாநாடு கற்றதும் பெற்றதும்

    http://veeduthirumbal.blogspot.com/2012/09/blog-post.html

    பதிவர் சந்திப்பு குறித்து

    http://minnalvarigal.blogspot.com/2012/08/blog-post_27.html

    கீழே உள்ள பதிவு பதிவர் சந்திப்பு முழுதும் பேசா விடினும், ஒரு பெண்ணின் பார்வையில் உள்ளது

    இதுக்கு பேர் பதிவர் சந்திப்பா?

    http://www.kuttisuvarkkam.com/2012/09/blog-post.html

    ****

    ஒரு விழாவில் வந்த அனைவரையும் திருப்தி படுத்தும் படி நடத்துவதே கடினம். வந்த 200 பேரும் எந்த குறையும் சொல்ல வில்லை அதுவே பெரிய விஷயம். வராமல் விளக்கம் கேட்டு வருத்தபடுவோருக்கும் முடிந்த அளவு விளக்கம் கொடுத்தாயிற்று இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என தெரியலை !

    ReplyDelete
  25. லக்கி/ அதிஷா/ ஆதி/ கார்க்கி இவர்களும் கூட தங்கள் கேள்விகள்/ சந்தேகங்கள் இவற்றை தங்களுக்குள் வைத்துகொண்டிருந்தாலும் அன்று விழாவுக்கு வந்திருந்தால், அன்று அங்கு வந்திருந்த மற்றவர்களுக்கு என்ன உணர்வு கிடைத்ததோ அதே வகை உணர்வுகளை பெற்றிருப்பார்கள். இன்று இந்த வகை விவாதமே வந்திருக்காது. இதில் சந்தேகமே இல்லை !

    ReplyDelete
  26. காமெடிகளின் கூச்சல் அதிகம்.

    ReplyDelete
  27. நன்றி மோகன்.

    அனானி சொன்னாப்ல காமெடிகளின் கூச்சல் அதிகமா இருந்ததால நல்ல பதிவுகள் கண்ணுலையே படலை

    ReplyDelete
  28. He said to them, 'You are the ones who justify yourselves in the eyes of men, but God knows your hearts.'" - Luke 16:15 NIV

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)