Monday, August 27, 2012

4/365 1.2.3.4.5. முடிஞ்சிபோச்சேய் @vivaji

அண்ணாச்சி கடை படியில், கூமாச்சியாக்கி அரிசி அளந்து வாங்கிய சந்தோசம் இப்போதில்லை சூப்பர் மார்க்கெட்டில் கிலோ கணக்கில் வாங்கும்போது.


புல்ஸ்கேப் நோட்டை பெண்கள் மாரோட அணைச்சுட்டு வர்ற அந்த அழகை இனிமேல் பார்க்க முடியாது போலிருக்கே (Only iPad, Laptops)
Thanks vsocio.com

ஒன்னா SMS கட் பண்ணுங்க. இல்லாட்டா கரண்ட் கட் பண்ணுங்க. உங்களுக்கு "கட்" பண்றதைத் தவிர வேற வேலையே இல்லையா?

அமெரிக்க குடிமகன்களிடம் இந்திய குடிமகன்கள் பெருமையா சொல்லிக்கலாம் "பார்த்தியா? எங்காளுக எவ்ளோ அடிக்கிறாங்கன்னு?" #ஊழல்

லவ் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும் - இது பழைய மொழி. லைக் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும் - இது இணைய மொழி

நான்தான் எதுவும் செய்யவில்லை;நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள்?: கலைஞர் #உங்களைப் போலவே முத்துக்குமார் இறந்ததை வேடிக்கைப் பார்த்தோம்


"சே" பத்தி தெரியாம டீ-சர்ட் போடுறவங்களைப் பார்த்தால், சே அப்படின்னுதான் சொல்லத் தோணுது

பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக நாங்க இணையத்தில் பலரால் இகழப் படுகிறோமே- ஒரு பிராமிணர் சொன்னது

வார்த்தைய காப்பாத்துங்க.. வீட்ல காத்திருப்பாங்க. - என்ன வொரு விளம்பரம்..?
(போன வாரம்தான் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன், சட்டுன்னு மனசுல பதிஞ்சிருச்சு. அதானே விளம்பரத்தின் வெற்றி)

பழைய படத்துல வில்லன் சுடும்போது தோட்டாவை எண்ணும் கதாநாயகன் மாதிரியே எண்ண வேண்டியிருக்கு, SMSஐயும். #1.2.3.4.5. முடிஞ்சிபோச்சேய்

--------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க. இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்(?!)

4 comments:

 1. இளா,

  ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானா , 3 போட்டா பிராபல்யப்பதிவரா ஆகிடலாமம் ,முயற்சிக்கிறது :-))

  //சே" பத்தி தெரியாம டீ-சர்ட் போடுறவங்களைப் பார்த்தால், சே அப்படின்னுதான் சொல்லத் தோணுது //

  ஹி...ஹி என் பங்குக்கு சே பற்றி தெரியாதவர்கள் சோக்கு ஒன்னு,

  (புத்தகக்கண்காட்சி வாசலில்)

  சின்ன தலைவரய்யா:

  யோவ் யாருய்யா அது வாயில சுருட்டோடா போஸ்டர் போட்டு இருக்கிறது, சூப்பர் ஸ்டார் , இளைய தளபதி போஸ்டரே கிழிச்சி ,போட்டி தூக்கி இருக்கோம், முதல்ல அந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ஓடுது சொல்லுய்யா போய் கலாட்டா செய்யலாம்.

  அல்லக்கை: ஷ்ஷ் ஷ்ஹ் சத்தமா பேசாதிங்க யாரு காதுலயாவது விழுந்திட போகுது, அவரு நடிகரு இல்லை உலகப்புகழ்ப்பெற்ற போராளி சேகுவேரா, அவரு செத்து பலவருஷம் ஆகுது, நீங்க சொன்னது மட்டும் யாரு காதிலயாவது விழுந்துச்சு தொம்சம் பண்ணிடுவாங்க, அதுவும் சேகுவேரா படத்தை போட்டு பதிவு எழுதுறவங்க கேட்டாங்க ,கழுவி கழுவி ஊத்துவாங்க ,வாங்க வீட்டுக்கு போலாம்.

  சின்னத்தலைவரய்யா: ஓ இவரு தான் சேகுவேராவா ... நல்ல வேளை யாரு காதுலயும் விழலை ..அவ்வ்வ்!

  -------

  ரெண்டு வாரமாக காண்டானேன் சொன்னிங்க அது ஏன்னு சொல்லாம "இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்" போல தொங்கலில் விட்டீங்களே அது என்னனு சொல்லுறது?

  ReplyDelete
 2. ஓஹ், அதுவா? 2007 பதிவர் பட்டறை படங்கள் போட்டிருக்கீங்க. ஆனா நீங்க யாருன்னு தெரியல. நெய்வேலி புத்தக விழா(?!) பத்தின படங்கள் போட்டீங்க. அப்பவும் யாருன்னு கண்டுபுடிக்க முடியலை. அதான், கண்டுபுடிக்க முடியாம காண்டாகிட்டேன்னு சொன்னேன்

  ReplyDelete
 3. இப்படியான நிறைய சொல்லல்கள் நன்றாகவே இருக்கிறது ,வாழ்த்துக்கள்.

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)