Tuesday, January 10, 2012

சினிமா Quiz

சினிமாத்துறையில இருக்கிறவங்க எல்லாம் படிக்காதவங்கன்னு நமக்கு எல்லாம் இளக்காரம் இருக்கத்தான் செய்யுது. அதை பொய்யாக்கவே இந்த குயிஜு. முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லாட்டின்னா இருந்தே இருக்கு கூகிலாண்டவர். சிலதுக்கு விடை கிடைக்கலாம். ரெடி ஸ்டார்ட் மீஸிக்.


1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?

பதில்: அமீஷா படேல்



2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?

பதில்: Easha Deol [ஹேமாமாலினியின் மூத்த மகள்]

3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.

Ans: கன்னிகா(5 ஸ்டார் கதாநாயகி)

4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?

Ans: சித்தார்த்

5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?

Ans: மணிரத்னம்

6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.

Ans: வித்யா பாலன்(தந்தை ETC channelன் VP)

7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.

Ans: மாதவன்

8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?

Ans: சுஜாதா [எழுத்தாளர்]
9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?

Ans: அபிஷேக் பச்சன்
10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?

Ans: விவேக் ஓபராய்


11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?

Ans: சூப்பர் ஸ்டார்
12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?

Ans: வெங்கடேஷ்

13 comments:

  1. இளா,

    இது ரொம்ப பழைய மேட்டர் ஆச்சே? இதே செட் ஆப் கேள்விகள் முன்னரே பார்த்து இருக்கேன்.

    1)அமிஷா படேல்

    2)இஷா தியோல்

    3)கனிகா

    4)சித்தார்த்

    5)மணிரத்னம்(இவ்ர் சொந்தப்பேர் என்ன தெரியுமோ)

    6)--

    7)-(-மாதவன்?)

    கொஞ்சம் யோசிக்கனும்

    8)சுஜாதா என்கிற ரெங்கராஜன்.

    9)ஹிரித்திக் ரோஷன்?

    10)ஜீவன்

    11)சூப்பர் ஸ்டார் படத்த போட்டுட்டு இப்படிக்கேட்டா கூட சிரஞ்ஜீவியும் படிச்சார்னு சொல்லிக்கிறேன்.

    12) தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்? அ அரவிந்த் சுவாமி?

    //12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?//

    எம்.பி.ஏ என்பதே முது கலை தானே அப்புறம் என்ன தனியா முதுகலை எம்.பி.ஏ, அப்போ இளங்கலை எம்.பி.ஏ என்று ஒன்று இருக்கா :-))

    ReplyDelete
  2. வவ்வால்,

    உண்மைதான் இது, மீள்பதிவே. அந்தப் பதிவுக்கு நீங்கதான் கடைசியா பின்னூட்டம் போட்டிங்க. இந்தப் பதிவுல முதல் நீங்க. 4 வருசத்துக்கு முன்னாடி போட்ட பதிவை இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கீங்க?

    ReplyDelete
  3. இளா,

    ஹி..ஹி இளா 4 வருடம் முன்ன இந்த வேலையை செய்ததும் நீங்க தானா? நீங்க தான் போட்டிங்க என்பதை மறந்துட்டேன் பார்த்திங்களா?

    சரி அப்போவாது சரியா விடை சொன்னேனா? (இப்போ எத்தனை தேறும் நான் இன்னும் குகிளை தோன்டலை)

    ReplyDelete
  4. 4 ம் சரிங்க. மீதிக்கு?

    ReplyDelete
  5. 6)வித்யா பாலன்.

    9) அபிஷேக் பச்சன்

    10)விவேக் ஓபராய்

    12)வெங்கடேஷ் தெலுகு(ஏற்கனவே சொன்னது தான்)

    இளா,

    இப்போ எல்லாமே சரியா வந்திருக்கனுமே, நீங்க முன்னர் 4 தான் சரி சொன்னிங்க, தப்பா சொன்ன கேள்விகள் எது தேடிரலாம் :-))

    ReplyDelete
  6. பதில் போட்டாச்சுங்க

    ReplyDelete
  7. வவ்வால், முந்தினப் பதிவை Draftல போட்டு வெச்சிட்டுதான் இந்தப் பதிவை போட்டேன். சரியான வரவேற்பு இல்லை. Quiz பதிவுக்கெல்லாம் இனிமே சரியா வராதோன்னு தோணுது. காலம் மாறுது இல்லையா? கூகிள் இருக்க Quiz எதுக்கு?

    ReplyDelete
  8. இளா,

    //வவ்வால், முந்தினப் பதிவை Draftல போட்டு வெச்சிட்டுதான் இந்தப் பதிவை போட்டேன். சரியான வரவேற்பு இல்லை. Quiz பதிவுக்கெல்லாம் இனிமே சரியா வராதோன்னு தோணுது. காலம் மாறுது இல்லையா? கூகிள் இருக்க Quiz எதுக்கு?//


    ஒஹோ, நான் கூட 4 வருடம் முன்னர் போட்டது தான் சொன்னதும் போய் தேடிப்பார்த்தேன் அதான் கிடைக்கலையோ?

    நீங்க டேக் ல மீள்ப்பதிவுனு போட்டதை நான் பின்னர் தான் கவனித்தேன். மக்கள் ஒரு வேளை விவரமாகப்பார்த்துட்டு ரியாக்ட் செய்யலையோ என்னமோ?

    வரவேற்ப எதிர்ப்பாத்துட்டா வானம் பொழியுது, அதுவா பெய்யலையா? எழுதிறத எழுதி வைங்க படிக்கிறவங்க படிச்சு வைப்பாங்க.நான் எல்லாம் காலம் கடந்து வந்தாலும் படிச்சு வைப்பேன்.என்னப்போல படிக்க ஆள் இருக்காங்க உங்களை. நேத்து அப்படியே உங்க பழையப்பதிவுகளையும் போய்ப்பாத்தேன் 2005 முதல்ல் பதிவுக்கு 2 கமெண்ட்டும், அடுத்ததுக்கு கமெண்டே இல்லாமலும் இருந்துச்சு... ஹி..ஹி...எனக்கு அத பார்த்ததும் ஒரு அல்ப சந்தோஷம்னு கூட சொல்லலாம். :-))

    ஏன் எனில் எனக்கு கமெண்ட் இல்லாம நிறைய காத்தாடும் பதிவுகள். உங்களுக்கே அப்படி இருக்குதேனு தான்.அதை எல்லாம் கடந்து வந்து இத்தனைக்காலம் நீங்க நிற்கும் போது, வரவேற்பு இல்லையேன்னு எதுக்கு கவலை.



    நீங்க வேற இங்கே நிறையப்பேருக்கு கூகிளில் தேட கூட சோம்பேறித்தனம்/ தெரியாது.

    எனவே வந்தமா சூப்பர் மாப்பி, கலக்கிட்ட,அருமை இந்த அளவுக்கே பின்னூட்டம் போட விரும்புறாங்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    நான் விட்டுப்போன ரெண்டு மூனுக்கு தான் தேடிப்பார்த்தேன், அதுவும் சந்தேகப்ப்ட்ட பெயர்களைப்போட்டு.

    ReplyDelete
  9. பதிவுகளே இன்னும் 4/5 வருசத்துக்குள்ள காணாம போயிரும்கிறது என்னோட கணக்கு. போனவருச இறுதி ஒரு reportல சொன்னாங்க Tech and Medic blogs are outdatedன்னு.

    ReplyDelete
  10. வவ்வால், உங்களோட சில பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும். குறிப்பா அறிவியல் பதிவுகள். நண்பன் - after Effect

    ReplyDelete
  11. இளா.

    நம்ம நாட்டில எல்லாருக்கும் லேண்ட் லைன் போன் வருவதற்குள் , செல் போன் வருகை ஆச்சு, எல்லாருக்கும் 2ஜி போய் சேர்வதற்குள்,3ஜி, ஆண்ட்ராய்ட் டச்னு மாறிடுச்சு. இதுவே மத்த நாடுகளில் என்றால் ஒவ்வொரு தொழில்நுட்பமும் அதன் முழுச்சுற்றினை முடித்த பின்னரே அடுத்த கருவி வரவு இருக்கும்.

    இப்போ அமெரிக்காவில 2 ஜி போனே பார்க்க முடியாது,ஆனால் இந்தியாவில் 2ஜி போன் தான் முதல் செல் போன் ஆக இன்றும் அறிமுகம் ஆகும்.

    இது போல நம் நாட்டில் கொஞ்சம் மெதுவாக தான் மாற்றம் வரும்.ஆனால் தொழிற்நுட்பத்தின் முகப்பில் உள்ளவர்கள் உடனே புதிய ஒன்றுக்கு மாறிவிட்டு, மற்றது எல்லாம் பழசு என்று சொல்வார்கள். இன்னமும் வின்98 பயன்ப்படுத்துற கணினிகள் இங்கே இருக்கு.

    இங்கே எல்லாம் ஒவ்வொரு அடுக்காக ஒரு கால இடைவெளியில் போய் மாற்றம் செய்யும்.வெளிநாட்டைப்போல ஒரே வீச்சில் மாற்றம் செய்யாது.

    இந்தியாவில இணைய பயன்ப்பாடு மற்ற நுட்பம் பரவிய வேகத்தில் இல்லை, இன்று வரையில் சுமார் 2% மக்கள் தான் இணையம் வச்சு இருக்காங்க.இன்னும் முதல் முறை இணையம் வாங்காதவர்கள் எண்ணிக்கை மிக அதிகம், அவர்கள் வரும் வரையில் பதிவுகளும், திரட்டிகளும் இருந்தால் அவர்களுக்கு இது புதுசு என்பதால் ஆர்வமாக பங்கெடுப்பார்கள்.

    இப்போ ஏற்கனவே பதிவு இன்னப்பிற என அனுபவித்து விட்டவர்கள், புதுவரவுக்கு போய் விடுவார்கல், மைக்ரோ பிலாக், வீடியோ பிலாக், விர்ச்சுவல் ரியாலிட்டி பிலாக்னு மாறி வேண்டுமானால் இருக்கும்.

    //வவ்வால், உங்களோட சில பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும். குறிப்பா அறிவியல் பதிவுகள். நண்பன் - after Effect//

    நன்றிங்க, ஆனால் இதுல என்ன வச்சு காமெடி கீமெடி செய்யலையே அவ்வ்வ்!

    ReplyDelete
  12. //விர்ச்சுவல் ரியாலிட்டி பிலாக்னு //
    கிளு கிளுப்பாய் இருக்காது? vLog சரியா வரும்னு நினைக்கிறீங்க? நான் முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.(ஒன் மொகரைக் கட்டைக்கு இது ஒன்னுதான் கொறைச்சல்னு யாராவது சொல்லிட்டா?)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)