ஷங்கர் - விஜய் கூட்டணின்னு சொல்றதுதான் பொருந்தும். ஆனா விஜய் ரசிகர்களோ விஜய்-ஷங்கர் கூட்டணின்னு சொன்னாத்தான் ஒத்துக்குவாங்க.
3 Idiots- இந்தி சினிமா உலகையே புரட்டியெடுத்தப்படம். சேத்தன் பகத்தின் 5PointSomeOne என்ற நாவலைத் தழுவி எடுத்தார்கள். படம் தாறுமாறாய் ஓடியது.அதை அப்படியே தமிழில் பிரதி எடுத்திருக்கிறார்கள். ஷங்கருமா Remake செய்யறாரு என்று பட பூஜையன்றே நான் நினைத்தேன்.
3- Idiots கதை தெரியாதவங்க இங்கே படிச்சிக்குங்க. தமிழ்ல எந்த மாற்றமும் இல்லாம வந்திருக்கு.
கதை- உனக்கு எது பிடிக்குதோ அதைப் படி, அப்பா சொல்றாங்க ஆட்டுக்குட்டி சொல்றாங்கன்னும், வேலை நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் வற்புறுத்தலுக்காகவும் படிக்காதே, எல்லாம் நன்மைக்கே. இப்படி எல்லா ஒரே அறிவுரை சொல்ற படம். ஆனா கண்டிப்பா நம்ம கண்ணுக்கு முன்னாடி சொடக்கு போட்டோ, தொடை தட்டியோ சொல்றது இல்லீங்க.
கல்லூரி முடித்து பத்துவருடம் கழித்து, அமெரிக்காவில் வசதியாக வாழும் சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை அழைத்துக்கொண்டு விஜயை பார்க்க ஊட்டிக்குப் போகிறார். கல்லூரி காலத்தில் சத்யன் - விஜய் இடையே நடக்கும் சவால், இப்படித்தான் ஆரம்பிக்கிறது கதை, பிறகு Flashbackல் கல்லூரிக்காலம்.
நம்முடைய பாடத்திட்டம் தலை சுத்தி சாப்பிடுவதைப் போன்றது, அதை எளிமையாக சொல்லித்தர வேண்டும், மனப்பாடம் செய்யும் இந்தப் பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று நினைப்பவன், பெரிய கோடீஸ்வரனின் மகன், அப்பாவின் மாத வருமானம் 25 கோடி ரூபாய், இயந்திரங்களின் மீது தீராக்காதல் கொண்டவன்- இது பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்). மிகவும் ஏழ்மையான குடும்பம், ஒரு கை, கால் விளங்காத அப்பா, எப்போதும் காசு கணக்குப் பார்க்கும் அம்மா, கல்யாணமாகாத அக்கா, ஏக சாமி பக்தி, என ஒரு செளகார்ஜானகியின் குடும்பத்திலிருந்து வரும் - செந்தில் சேவற்கொடியான்(ஜீவா). பிறந்தமுதல் நிமிடமே தன் மகன் ஒரு இஞ்சிஜியர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்களுக்கு பிறந்த, ஒரு Wild Life Photographer ஆக வேண்டும் என்று ஆசை கொண்ட- வெங்கட ராமகிருஷ்ணன்(ஸ்ரீகாந்த்), கலிப்போர்னியாவில் பிறந்து, உருப்போட்டே படிச்சு முதல் இடம் வாங்கும், பெரிய வேலை மட்டுமே லட்சியம் என இந்தியாவிற்கு படிக்க வரும் ஸ்ரீவத்சன்(சத்யன்), கண்டிப்பும் கறாரும்,கல்லூரியை முதலிடத்திலேயே தக்க வைத்துக்கொள்ள போராடும் -விருமாண்டி சந்தனம்- வைரஸ்(சத்யராஜ்), மருத்துவம் படிக்கும் அவருடைய மகள் ரியா(இலியானா), அவருடைய அக்கா(அனுயா-சிவா மனசுல சக்தி கதாநாயகி), ஜோடி நம்பர் புகழ் ரின்செண்ட்(மில்லி மீட்டர்), சொல்ல மறந்துட்டா கோச்சுக்குவாங்க இராமசாமி, O4P புகஷ் வெங்கட் சுந்தர்.(குறும்பட Super Star ஆச்சே)
கல்லூரி விடுதியின் முதல் நாளிலேயே வன்பகடியில் (ragging) செய்யும் மூத்தவர்களுக்கு சூடு வைத்து பிரபலமாகிறார் விஜய் , அவர்களுடைய இரு அறைத்தோழர்கள்தான் ஜுவாவும், ஸ்ரீ காந்தும் நண்பர்களாகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே சத்யராஜுக்கும் இந்த மூவருக்கும் ஆகாமல் போகிறது. எளிமையாக பல இயந்திரங்களை உருவாக்குகிறார் விஜய், ஆனால் அதையெல்லாம் நிராகரித்துவிடுகிறார் சத்யராஜ் . இவர்கள் மூவரையும் பிரிக்க பலவாறு முயற்சி செய்கிறார் சத்யராஜ். முடியாமல் போகிறது, ஒரு நாள் இரவு குடித்துவிட்டு சத்யராஜ் வீட்டில் இந்த மூவரும் கலாட்டா செய்ய, ஆரம்பிக்கிறது கதை. ஜீவாவுக்கு Campus interviewல் வேலைகிடத்துவிட்டால் மீசை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விடுகிறார் சத்யராஜ். அதற்காக விஜயும், ஸ்ரீகாந்தும் கேள்வித்தாளை இலியானா உதவிகொண்டு திருட, சத்யராஜுக்குத் தெரிந்து அவர்களை கல்லூரி விடுதியிலிருந்து வெளியே அனுப்ப நினைக்கிறார். இந்த நேரத்தில் சத்யராஜின் மூத்த மகளுக்கு பிரசவ வலி வந்துவிடுகிறது. மருத்துவமனை கொண்டு செல்லாத இயலாத நிலையில் விஜய் கண்டுபிடித்த சாதனத்தின் உதவியோடும், Webcamல் இலியானாவின் அறிவுரைப்படியும் நண்பர்கள் அனைவருமே பிரசவம் பார்க்க சத்யராஜ் விஜயை தலை சிறந்த மாணவனாக ஒப்புக்கொள்கிறார்.
Flash back முடிந்தவுடந்தான் தெரிகிறது விஜய்யின் பெயரே பஞ்சவன் பாரிவேந்தன் இல்லையென்றும், SJ Suryaவின் பினாமியாகவே அவர் படித்திருக்கிறார் எனவும் தெரியவருகிறது, பிறகு இலியானாவும் விஜயும் எப்படி ஒன்று சேர்கிறார்கள், சத்யன் விஜய்யின் தோற்றாரா வெற்றி பெற்றாரா, விஜய் எப்படி புகழ் பெற்றவராக இருக்கிறார் எனபது இறுதிக்காட்சி.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ், ஏழாம் அறிவுல விட்டதை இங்கேப் புடிச்சுட்டாரு. Template பாடல்களை மாத்தினதும் இல்லாம படத்துக்கு சரியாப்பொருந்தி இசை அமைச்சிருக்காரு. இசை வந்துச்சா போச்சான்னு தெரியாதளவுக்கு பாந்தமாய் அமைச்சிருக்காரு. பாராட்டப்படவேண்டிய சில சமாச்சாராங்கள் நிறைய சின்னச் சின்னதாய் செஞ்சிருக்காரு.
மனோஜ் பரமஹம்சா: ஒளிப்பதிவு, ஈரம், VTVக்கு அப்புறமா ஷங்கர். தமிழ்சினிமாவுக்கு நல்லதொரு வரவு. எதை எப்படிக் கொடுத்தா சரியா காட்சியில உக்காரனும்னு தெளிவா செஞ்சிருக்காரு. குறிப்பிட்டு சொல்லனும்னா அஸ்கு லஸ்கா பாட்டைச் சொல்லலாம். ஷங்கர் சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்காரு.
வசனம்: மதன் கார்க்கி, "அரை மணியில ஃபீட்சா வந்துருது, ஆம்புலன்ஸ் வரமாட்டேங்குது", இப்படி ஒரு இந்திப்படத்தை ஒரு சரியான தமிழ்ப்படமா மாத்தினது இவரோட வசனங்கள்தான். சத்யனின் மேடைப்பேச்சுதான் இந்தியில் கலக்குச்சு, தமிழில் அதுக்குமேலே கலக்கல்.
திரையரங்கமே பத்து நிமிசமா அதிர அதிர சிரிச்சதுன்னா பார்த்துக்குங்களேன்ன். "காலொடிஞ்ச பின்னாடிதான் சார் எப்படி என் கால்ல நிக்கிறதுன்னே தெரிஞ்சது" இப்படி பல வசனங்கள் நச். படத்தை இன்னொரு படி மேலே கொண்டுபோக இவரோட வசனங்கள் உதவியிருக்கு.
இலியானா: கொஞ்சமா வராங்க. ஆடுறாங்க. பாடுறாங்க, சீன் காட்டுறாங்க, இடுப்பைக்காட்டுறாங்க, சரக்கடிக்கிறாங்க.
ஜீவா, கண்டிப்பாய், படம் முழுக்க நம்ம வியாபித்திருக்கிறவர் ஜீவாதான். சோகம், நகைச்சுவைன்னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்காரு, ஆச்சர்யப்படுத்தராரு. இந்தியில் ஷர்மான் ஜோஷி செய்ததைவிட சிறப்பா செஞ்சிருக்காரு. என்னைப் பொருத்தவரையில், ஜீவாதான் இந்தப் படத்துல One of the Best. அப்ப இன்னொருத்தர், அதுதாங்க சத்யன். கலக்கியிருக்காரு. இந்தப்படம் அவரோட சினிமா வாழ்க்கையின் மறுபிறப்புன்னே சொல்லலாம்- nice selection. ஸ்ரீகாந்த், குடுத்த கதாப்பாத்திரத்தை சரியா பண்ணியிருக்காரு, நக்கல் நையாண்டியாகட்டும், அப்பாகூட மன்றாடும்போதாகாட்டும், பட்டாசு கிளப்புறாரு.
ஷங்கர்: இந்தியிலிருந்து அப்படியே பிரதியெடுக்க ஷங்கர் வேணுமா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு, இதை ஷங்கரைத் தவிர வேற யார் எடுத்திருந்தாலும் சொதப்பியிருப்பாங்க. B & C க்காக இலியானா பாட்டு சேர்த்திருப்பது,வசங்களை மாற்றி அமைத்தது, தன்னுடைய பாடல்களையே Spoofஆக மாற்றி அஸ்க் லஸ்கா பாட்டில் கிண்டலடித்துக்கொள்வது, ரயிலுக்கு வண்ணமடிப்பது என ஷங்கர் டச் எல்லா இடத்திலேயும் உண்டு. தமிழில் குடுத்த படங்கள் எல்லாமே Block Buster (இந்தப் படம் உட்பட)என்பதைத் தவிர ஷங்கரிடம் சிறப்பாய் ஒன்றுமில்லை.
குறை: இலியானாப்பாட்டு. எதுக்குன்னே தெரியல, படமே ரொம்ப நீளம் இதுல இந்தப்பாட்டு வேற. கடுப்பா இருந்துச்சு. பின்னாடி வந்த காட்சிகளின் வசனம்தான் நம்மை மீட்டெடுக்குது.
விஜய்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, அனுயா இப்படி எல்லார்கிட்டேயும் ச்சும்மா சுத்தி சுத்தி அடிவாங்குறாரு. அடி மட்டுமா, மிதி மிதின்னு மிதிச்சாலும் வாங்கிக்கிறாரு. விஜய் மீண்டும் மென்மையாய், இளமையாய் இருப்பது இந்தப் படம்தான். கண்டிப்பாய் அமீர்கானுடன் ஒப்பிடுவது தப்புன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் குடுத்த கதாப்பாத்திரத்தை கச்சிதமாய் முடிச்சிக்கொடுத்துட்டாரு விஜய். இப்படி நடிச்சித் தொலைக்க வேண்டியதுதானே, கருமாந்திரம் எல்லாம் என்னாத்துக்குங்க விஜய் சார்? ஆனாலும் பாத்திரத்தை நிறைவாய் செய்துவிடுகிறார் விஜய். "பலே சார், நீங்களும் நடிப்பீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க, இனிமே பிக்காலிப்பசங்ககூட எல்லாம் சேராதீங்க." இப்படி அடக்கி வாசித்தது ஆச்சர்யமே ஆனாலும் அதுதான் படத்தோட வெற்றிக்கும் காரணம். விஜய் ரசிகர்களயும் தாண்டி கண்டிப்பாய் பலருக்கும் இந்தப்படம் புடிக்கும். சுருங்கச் சொன்னா, விஜய்க்கு 1996ல் விக்ரமின் பூவே உனக்காக கிடைச்சது, 2011 ஷங்கரின் நண்பன் கிடைச்சிருக்கு.
மொத்தத்துல அருமையான படம், கண்டிப்பாய் எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.
(My Rating: 4/5)
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
இளா.
ReplyDeleteஉள்ளதை உள்ளப்படியே எடுக்க கூட ரொம்ப திறமை வேண்டுமோ?
ரீமேக்கிலும் வித்தியாசம் காட்ட தெரிய வேண்டாமா? படம் பார்க்கும் தரத்தில் இருக்கா ,அப்போ தயாரிப்பாளர் தப்பிச்சார் :-))
// தமிழில் குடுத்த படங்கள் எல்லாமே Block Buster (இந்தப் படம் உட்பட)என்பதைத் தவிர ஷங்கரிடம் சிறப்பாய் ஒன்றுமில்லை.//
பாய்ஸ் பெரிய பிளாக் பஸ்டர்னு ஏ.எம் ரத்தினம் கூட சொன்னார் :-))
//உள்ளதை உள்ளப்படியே எடுக்க கூட ரொம்ப திறமை வேண்டுமோ? //
ReplyDeleteவரலாற்றைப்பாருங்க. விஜய் சொல்லுவாரு, தமிழ்ப்'படுத்தி'ன கஷ்டத்தை.
//பாய்ஸ் பெரிய பிளாக் பஸ்டர்னு ஏ.எம் ரத்தினம் கூட சொன்னார்//
அதையே வித்து தெலுங்குல காசு பார்த்துட்டாங்களே. இதுவரைக்கும் நஷ்டம்னு ஷங்கர் படத்துல வரவே இல்லீங்களே. அதுவே பெரிய சாதனைதானே? (நாயக்- தவிர)
அரை மணி பீட்ஸா, செருப்புக்கு ஏசி, காய்கறிக்கு ப்ளாட் பார்ம் எல்லாம் 4 வருசத்துக்கு முன்னாடியே வந்த குறுந்தகவல்ங்கோ
ReplyDelete//முன்னாடியே வந்த குறுந்தகவல்ங்கோ//
ReplyDeleteஅப்படியா? எனக்குத் தெரியாதுங்களே..
படம் அருமை தான்.
ReplyDeleteதொழில்நுட்பத்தில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார்கள் youtube, புதிய மாடல் கார்கள் அவ்வப்போது வந்தது, புதிய மாடல் டீ-ஷர்ட்ஸ். ஆனால் நடிப்பில் ஒவ்வொருவரின் பங்கும் அபாரம்.
//தொழில்நுட்பத்தில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார்கள்//
ReplyDeleteஅப்படிங்களா.. எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைங்களே. அதுவும் ஷங்கர் இந்த விசயத்துல கொஞ்சம் உசாரா இருப்பாரே
// *Nanban* Review// ??
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletethis is 2012 not 2011
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//*Nanban* Review//
ReplyDeleteI Dont Understand what is your question
////*Nanban* Review//
ReplyDeleteI Dont Understand what is your question//
ஏன் தங்கலீஷ் னு கேட்டேன்
iLa: It is best if you remove the anony's comment completely. You dont need to justify yourself to all these anonymous morons!
ReplyDelete***கவிதா | Kavitha said...
ReplyDelete// *Nanban* Review// ??
Thursday, January 12, 2012 10:45:00 PM EST***
அதன் தமிழாக்கம்தானே கேக்குறீங்க?
நண்பன் விமர்சனம்! :-)
4/5 கொஞ்சம் அதிக மதிப்பீடு இல்லையா?? :)))
ReplyDelete//தங்கலீஷ் னு கேட்டேன்//Its not thanglish, its English. SEO friendly
ReplyDeleteVarun, 3 idiots got more than 4 in all kind of media. Nanban cannot be rated less than for the reason of remake
ReplyDeleteவருண்
ReplyDelete//iLa: It is best if you remove the anony's comment completely. You dont need to justify yourself to all these anonymous morons!//
இதை தான் சொல்லனும்னு நினைச்சேன்.. நான் சொல்லி இருந்தா கேட்டு இருக்கமாட்டாங்க.. # வந்த வேல முடிஞ்சிச்சி..:)
//அதன் தமிழாக்கம்தானே கேக்குறீங்க?
நண்பன் விமர்சனம்! :-)//
எப்படிங்க இவ்ளோ ஷார்ப்பா இருக்கீங்க ? :)
////தங்கலீஷ் னு கேட்டேன்//Its not thanglish, its English. //
ReplyDeleteஓ Nanban ஆங்கிலமா? உங்க ஊர்லயா?
//SEO friendly//
அப்புறம் எதுக்கு லேபில்ஸ்..
For Kavitha
ReplyDeleteSEO - http://en.wikipedia.org/wiki/Search_engine_optimization
கவிதா--> உங்க பேரை ஆங்கிலத்தில எழுதச் சொன்னா Kavitha எழுதுவீங்களா இல்லை Poemனு எழுதுவீங்களா?
ReplyDelete-->ரெம்ப யோசிக்க வெக்கிறாங்கப்பா<--
இளா,
ReplyDelete//SEO - http://en.wikipedia.org/wiki/Search_engine_optimization//
ஆங்கில தலைப்பை பார்த்ததும் நினைச்சுக்கிட்டேன், இது தேடுப்பொறிக்கு போட்ட பொறியா இருக்கும்னு, கேட்கலாம்னு நினைச்சேன் , எல்லாதுக்கும் கேள்விக்கேட்கிறேன்னு ஏற்கனவே நல்லப்பெயர் எனக்கு :-)) அதான் கேட்கலை,ஆனா கவிதாக்கேட்டுடாங்க!!!
நானும் லேபில்ஸ் போதும்னு நினைச்சேன். ஹி..ஹி ஆனா நீங்க போட்ட விக்கி சுட்டில சட்டி காலியா இருக்கு. அந்த சுட்டிய படிச்சுட்டு தான் கொடுத்திங்களா?
SEO பற்றி தெரியும். இதே Nanban Review என்பதை லேபில்ஸ் ல போட்டால் தேடற லிஸ்ட் ல கிடைக்காதா? கிடைக்காதுன்னா லேபில்ஸ் னு ஒரு ஆப்ஷனை கூகுல் ஏன் கொடுத்து இருக்கனும்.
ReplyDelete===
கவிதா'ங்கறது பேரு.
"கவிதை" ன்னு எடுத்துக்கோங்க. கவிதை யை ஆங்கிலத்தில் poem னுதான் சொல்லனும் அதான் ஆங்கிலம், அதை விட்டு, kavithai னு சொன்னால் அது தங்கலீஷ்..
Ex. கவிதா கவிதை எழுதுகிறாள்.
1. Kavitha writes poem.
2. Kavitha kavithai ezuthukiraal.
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கில்லையா? :)
உங்க Nanban உம் (2) இப்படித்தான்.
பாவம் இளா, அடிக்கடி இப்படி மாட்டிக்கிறாரு! நாந்தான் வந்து மறுபடியும் அவரை காப்பாத்தனுமா? :)))
ReplyDelete***நீங்க போட்ட விக்கி சுட்டில சட்டி காலியா இருக்கு. அந்த சுட்டிய படிச்சுட்டு தான் கொடுத்திங்களா?***
ReplyDeleteஇல்லையே, that link worked for me! :)
//ஆனா கவிதாக்கேட்டுடாங்க!!!
ReplyDeleteஎல்லாதுக்கும் கேள்விக்கேட்கிறேன்னு ஏற்கனவே நல்லப்பெயர் எனக்கு :-)) //
சேர்த்துப்படிச்சி ப்பார்த்தேன்.. :))) இனிமே அந்த நல்லப்பேரு எனக்குதான்.
@ வருண் : பின்ன Nanban ஐ இங்லீஷ்தான்னு சொன்னா, ஆமான்னு சொல்லமுடியுமா சொல்லுங்க.. :)
அவரு ஏன் தலைப்பு ஆங்கிலத்தில் கொடுத்தாருனு எனக்கு இன்னும் புரியலை. அப்புறம் திரைப்படம், திரை விமர்சனம் லேபலையும் மறந்துட்டாரு. அதனால திரைமணத்துக்கு பதிலா தமிழ்மணத்தில் அந்த இடுகை வந்து நின்னு முழிச்சுட்டு இருக்கு!
ReplyDeleteஒருவேளை விமர்சனம் தமிழ்ல வக்கனையா ஏற்கனவே எழுதிவச்சு, கடைசியில் வேலையில் இருக்கும்போது (தமிழ் தட்டெழுத்து வசதி இல்லாததால்) "ஆங்கிலத்தில்" தலைப்பு மட்டும் கொடுத்து அவசர அவசரமா பதிவிட்டாரோ என்னவோ.
மன்னிச்சு விட்டுருங்க பாவம்! :)
//உங்க Nanban உம் (2) இப்படித்தான்.//
ReplyDeleteவிடாது கறுப்பு போல ... நண்பன் பட சுவரொட்டில கூட "Nanban " என பல வகையா ஆங்கிலத்தில போட்டு இருக்காங்க. இளா போட்டு இருக்க படம் பாருங்க. மூலமே அப்படினா இவர் இப்படி தான் :-))
ஹி ..ஹி இவர் " friend" அப்படினு போடனும்னு சொல்றிங்களா, யார் கண்டா அந்த பேருல வேற ஒரு படம் இருந்தாலும் இருக்கும். நண்பர்கள்னு எஸ்'ஏ'சி எடுத்தார் பின்னர் பிரண்ட்ஸ்னு விஜய் ஒரு படம் செய்தார். அதுவும் பத்தாதுனு தோஸ்த் னு இந்தி லஅ பேரு வச்சு தமிழ்ல எஸ்;ஏ;சி யெ படம் எடுத்தார் :-)) இன்னும் எத்தனை டிசைன்ல இந்த பேருல படம் வரப்போகுதோ.
அப்புறம் ஒரு படம் என்கிற பிராடக்ட் கு பெயர் வைக்கும் போது பெயர்ச்சொல் ஆகிடுது. எனவே எம்மொழியில் வேண்டுமானாலும் அப்படியே எழுதலாம்.
மயிலாடுதுறை என்ற ஊர் பெயரை ஆங்கிலத்தில்" peacock dancing tanksteps" என ஆங்கிலத்தில் எழுதாமல் " mayiladuthurai" என்றே ஆங்கிலத்திலும் எழுதுறாங்க விவரம் கெட்ட மக்கள். நீங்க தான் எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்கணும் :-))
------------
ஹெல்லோ வருண் , உங்களுக்கு கண் நல்லா தெரியுதா? ஏங்க அந்த சுட்டில எந்த கட்டுரையும் இல்லாம போய் மீண்டும் தேட சொல்லுது , அதை தான் சட்டி காலியா இருக்குனு சொன்னேன். சுட்டி வேலை செய்யலைனா சொன்னேன். சின்னப்புள்ளத்தனமா இருக்கே :-))
//மன்னிச்சு விட்டுருங்க பாவம்! :)//
ReplyDeleteயாரு அவரா பாவம்.. ? அவரோட பேசினா நாந்தான் பாவம். :)
//அவசர அவசரமா பதிவிட்டாரோ என்னவோ. // இருக்கலாம். ஆனா பதில் மட்டும் நல்லா தெளிவா பொறுமையாத்தான் சொல்றாரு.. :))
@ வவ்வால் : Nanban னு போட்டதை பத்தி இல்லைங்க.. அதை இங்லீஷ் னு சொல்றாரு.. :))))))) அதான் பேச்சு.
ReplyDeleteஅப்படி போட காரணம் தேட வசதி. அப்ப லேபில் எதுக்குங்கறது என்னோட சந்தேகம்.
//அப்புறம் ஒரு படம் என்கிற பிராடக்ட் கு பெயர் வைக்கும் போது பெயர்ச்சொல் ஆகிடுது. எனவே எம்மொழியில் வேண்டுமானாலும் அப்படியே எழுதலாம்.//
ReplyDeleteபெயர் சொல்லுன்னு எடுத்துக்கிட்டா சரி.. நண்பன் - Nanban ன்னு சொல்லலாம்.
//மயிலாடுதுறை என்ற ஊர் பெயரை ஆங்கிலத்தில்" peacock dancing tanksteps" என ஆங்கிலத்தில் எழுதாமல் " mayiladuthurai" என்றே ஆங்கிலத்திலும் எழுதுறாங்க விவரம் கெட்ட மக்கள். நீங்க தான் எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்கணும் :-))//
ஏங்க.. ஏன்ன்... ? :))
மொதல்ல கவிதாங்கிறதே தமிழ்ப் பெயர் கிடையாது. சரி அதை விடுவோம். SEOன்னு என்னான்னு எனக்குத் தெரிஞ்ச அறிவுல எப்படி வேலை செய்யும்னு சொல்றேன். Googleல யாரும் நண்பன் திரைவிமர்சனம்னு தேடுறது இல்லை. Nanban reviewன்னுதான் தேடுவாங்க். அதான் தலைப்பை அப்படி வெச்சேன். பதிவுலகுல இருக்கிற மூணேமுக்காப் பேருக்கு திரட்டி தெரியும், மத்தவங்களுக்கு? உங்களுக்கு எல்லாம் திருக்குறள் குடுத்தாப் பத்தாது, விளக்கவுரையும், கூடவே ரெண்டு வாத்தியாரையும் அனுப்பி வெக்கனும் போல
ReplyDeleteவருண்,
ReplyDeleteLet me share a Trick. தமிழ்மணம், List the posts based on the Tags/labels. So Publish the Post with தமிழ்மணம் with no tags and add the tags later as your wish, so will be in listed in தமிழ்மணம் Posts- not to திரைமணம்.
and I wish to reduce the tags in my blogs, since Google doesnt care about tags and Tags are for User's purpose nothing to do with SEO
வவ்வால்!
ReplyDeleteஆமாங்க அது அதாவே ரிடைரெக்ட் பண்ணி சரியான லின்க் கொடுத்துச்சு!
///Search engine optimization
From Wikipedia, the free encyclopedia
Page semi-protected
"SEO" redirects here. For other uses, see SEO (disambiguation).
Internet marketing
Search engine optimization (SEO) is the process of improving the visibility of a website or a web page in search engines via the "natural" or un-paid ("organic" or "algorithmic") search results. In general, the earlier (or higher ranked on the search results page), and more frequently a site appears in the search results list, the more visitors it will receive from the search engine's users. SEO may target different kinds of search, including image search, local search, video search, academic search,[1] news search and industry-specific vertical search engines.//
நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு புரியலை. சரி விடுங்க!
***ILA(@)இளா said...
ReplyDeleteவருண்,
Let me share a Trick. தமிழ்மணம், List the posts based on the Tags/labels. So Publish the Post with தமிழ்மணம் with no tags and add the tags later as your wish, so will be in listed in தமிழ்மணம் Posts- not to திரைமணம்.***
இந்த தந்திரம் எல்லாம் தெரியும்ங்க. நம்மளே இப்படியெல்லாம் செஞ்சா நல்லாயிருக்காதுனுதான் மரியாதையா திரைப்படம் லேபல் கொடுத்துடுறது. இல்லைனா தமிழ்மண நிர்வாகி வந்து நம்ம திரைப்படப் பதிவை தூக்கி திரைமணத்துக்கு தள்ளுவாங்க! :)
இளா,
ReplyDeleteகுயிஸ் பதிவுப்போட்டுட்டு கூட்டம் வரலையேனு ஃபீல் பண்ணிங்களே இப்போ பாருங்க எப்படி பின்னூட்டம் பின்னுதுனு. மக்கள் அதிகம் யோசிக்கமா படிக்க எதுனா கிடைக்குமா,அவங்க கேள்வி கேட்க வாய்ப்பு இருக்குமானே பார்க்கிறாங்க. நாம கேள்விக்கேட்டா அவ்ளோ தான் அடி ஆத்தாடி பதிவு காத்தாட ...நாமளே பாடிக்கனும்.
ஹி ..ஹி அது மீள்ப்பதிவா இருந்தாலும் , கேள்வில புதுசா டொக்டர் விசய் பேரையும் சேர்த்து நண்பன் நாயகன் படிக்காத கை நாட்டா னு தலைப்பு வச்சு இருந்தா பின்னி பெடல் எடுத்திருக்கும் :-))
இந்த தொழில் ரகசியம் எல்லாம் தெரியும் , ஆனால் அதெல்லாம் நமக்கு எதுக்குனு தான் ஓரம் கட்டி வேடிக்கைப்பார்ப்பதே எனது வாடிக்கை :-))
யாராவது ஒரு கை போட்டா அப்படியே 40 க்கு தள்ளிட்டுப்போய்டலாம்!!!
-------------
வருண்,
நீங்க அதிநவீன உலாவி வச்சு இருக்கிங்க போல ரி டைரக்க்ட் ஆகிடுச்சு எனக்கு ஆகலை அதான் மேட்டர். மேலும் எனக்கு தேடுப்பொறிக்காக தான் இளா அப்படி பெயர் போட்டு இருக்கார்னு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டதாலும் , கண்டுக்கவில்லை.
வவ்வால், உண்மைதான். ஆனா இது ஒரு Timing பதிவு. சினிமாப் பத்தி போட்டாலும் கேள்வி கேட்படாது பாருங்க. நீங்க சொன்ன விசயத்தை வெச்சே அடுத்த வாரம் கல்லா கட்ட முடிவு பண்ணியிருக்கேன்
ReplyDeleteஇளா,
ReplyDeleteஇம்புட்டு நேரம் ஆச்சே நான் வராம 40 க்கு போய்டுச்சோனு ஒரு கவலைலே எட்டிப்பார்த்தா இப்போ தான் உங்க பின் வந்து 37 ஆகி இருக்கு.
அது என்ன அடுத்த வாரம் இப்போவே ஸ்டார்ட் பண்ணுறது... நாங்கலாம் இருக்கோம்ல :-))
இளா,
ReplyDeleteஇப்போவே அடுத்த பதிவுக்கு ஸ்கூப் நியுஸ் தறேன்.. டொக்டர் விசய் லலோலா வில டிகிரி கம்ப்ளீட் செய்யவே இல்லை. அவர் கிட்டே கேட்டா விஸ்காம் சொல்வார் ,மனுசன் எக்ஸாம் கூட சரியா போனதில்லையாம். இது கல்லூரி வட்டாரத்தில இருந்தே சொன்னது.
இளா,
ReplyDeleteடொக்டர் விசய் குடும்பம் அடிக்கடி போற சர்ச் லயோலா சர்ச் தான். அம்மா,பாட்டி, மனைவி எல்லாம் அங்கே தான் வாக்கிங் போவாங்க. மாலை 5 மணிக்கு போனா பார்க்கலாம்.ஹி..ஹி 40 ஆச்சா!
41 :))
ReplyDeleteசங்கரிடம் இருந்த சொந்த சரக்கு தீர்ந்துவிட்டது போலிருக்கிறது. ரீமேக் என்று இறங்குகிறார்.
ReplyDeleteஎங்க தல ராமசாமி புகழ் மாக்கான் வெங்கட் பத்தி ஒரு வரிகூட எழுதாததுக்கு வெங்கட் ரசிகர்மன்ற சார்பா எதிர்ப்ப சொல்லிக்குறேன்
ReplyDeleteவக்காலத்து வாங்க வந்துட்டியே நீ படம் பாத்திட்டியான்னு கேக்கபுடாது
நம்மூர் சண்டிலால 150 ரூபா டிக்கட்டு..
அடுத்தவாரம் தான் பாக்கனும்...
BOSS..USUAL AH SANKAR FILM LA ORU CHINNA MISTAKE KOODA NAA KANDU PUDICHATHU ILLA.ANA INTHA PADATHULA ORU SCENE ILLIANA MARRIAGE SCENE LA SRI KANTH VARRA SHOTS A KONJAM CONCENTRATE PANNI KAVANINGA.THAADI(BEARD)VISAYATHULA SOTHAPITANGA..
ReplyDeleteBOSS..USUAL AH SANKAR FILM LA ORU CHINNA MISTAKE KOODA NAA KANDU PUDICHATHU ILLA.ANA INTHA PADATHULA ORU SCENE ILLIANA MARRIAGE SCENE LA SRI KANTH VARRA SHOTS A KONJAM CONCENTRATE PANNI KAVANINGA.THAADI(BEARD)VISAYATHULA SOTHAPITANGA..
ReplyDelete