Friday, August 4, 2006

ஆடி 18

கூடுதுறை

நேத்து ஆடி 18, இன்னைக்கு வரலட்சுமி விரதம்/ஆடி வெள்ளி.
நம்ம ஊரு பக்கம் ஆடி 18 ரொம்ப விஷேசம்ங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்கன்னா பார்த்துக்குங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசமும், இந்த வருசமும் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்டு ஆடுச்சு, தண்ணியே இல்லே.

* பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம்,
* காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
* இஸ்கூலு விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
* புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்

சின்ன வயசுல அம்மா சொல்ற படியே தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.

இந்த வருசம் தண்ணி(காவேரி ஆத்துல தாங்க) நல்லா ஓடுதுங்க. கையைக்கடிக்காம இந்த வருசமும் மகசூல் ஆச்சுன்னா அடுத்த வருசமும் தலையில காசு வெச்சு முங்குவேன் சாமி..

படம்: பவானி கூடுதுறை

10 comments:

  1. பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர் இளா! நாங்க மோனூர் காவிரி ஆத்துகுப் போவோம் ஆடிப் பதினெட்டு அன்னிக்கு!

    சின்ன வயசுல மணியனூர்ல இருந்தப்பொ கொடுமுடி, இல்லாட்டி சொழசிராமணி.

    அப்புறம் ஆடிப் பதினெட்டு அன்னிக்கு, டிரக்குல, மாட்டு வண்டில கோமாளி வேஷம் போட்டுகிட்டு
    டண்டணக்கு, டகடுணக்குன்னு ஆடிகிட்டே போவாங்க! இப்பவும் அப்படி உண்டான்னு தெரியலை!

    ஒரு கையில சின்ன முகம் பார்க்குற கண்ணாடி, இன்னொரு கையில குச்சியும் வெச்சிருப்பாங்க! நான் சின்னப் புள்ளையா இருந்தப்பொ கோமாளி வந்துட்டாங்கன்னு சொன்னா பி.பி.ப.ஓடியே வீட்டுக்கு வந்துடுவேன். பிடிச்சிகிட்டு போயிட்டா என்ன பண்ணுறது?

    ReplyDelete
  2. //நான் சின்னப் புள்ளையா இருந்தப்பொ கோமாளி வந்துட்டாங்கன்னு சொன்னா பி.பி.ப.ஓடியே வீட்டுக்கு வந்துடுவேன். பிடிச்சிகிட்டு போயிட்டா என்ன பண்ணுறது? //


    பிடிச்சிகிட்டு போயிருந்தா கோமாளி வேஷம் போட்ட ஆளு இப்போ என்னா ஆகி இருப்பார்... பொழச்சாரு அந்த ஆளு...!

    ReplyDelete
  3. திருச்சி காவிரி ஆற்றில் இரயிலை நிறுத்தி (செயின் புள்) ஆற்றில் அந்த காலத்தில் குதிப்பது இளசுகளின் வழக்கம் தற்போது காவலர்கள்ஒரு பெட்டிக்கு ஒருவர் இருந்து தடுத்து விடுகின்றனர்.

    ReplyDelete
  4. ஆடி18க்கு எங்க ஊர்ல வீட்டுக்கு ரெண்டு தூரி கட்டி ஆடுவோம்.

    சில பய புள்ளைக பட்டம் எல்லாம் விட முயற்சி பண்ணுவாங்க.

    மில்லு,இஸ்கூலு,காலேசு எல்லாம் லீவு வுட்டுடுவாங்க.

    ஹூம்....

    இளா,ஆத்தில தண்ணீயோட்டம் பரவாயில்லையா?

    ReplyDelete
  5. ம்ம்ம்... நகரத்துல வளர்ந்த என்ன போல ஆளுங்க எல்லாம் உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு.

    -- ஸ்ரீதர்

    ReplyDelete
  6. படம் அருமையாயிருக்கு. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ம்ம்ம்.விவசாயி உங்க பங்குக்கு ஒரு கொசுவர்த்தி கொழுத்திட்டிங்க. :-)

    தொடரட்டும் பழைய நினைவுகள்.

    ReplyDelete
  8. ராம்-->//பிடிச்சிகிட்டு போயிருந்தா கோமாளி வேஷம் போட்ட ஆளு இப்போ என்னா ஆகி இருப்பார்... பொழச்சாரு அந்த ஆளு...!//
    இதுல யாரும் கைப்பு வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே.

    சுதர்சன் -->//இளா,ஆத்தில தண்ணீயோட்டம் பரவாயில்லையா? //
    இப்போ இருக்குற படம் போன வருஷம் மேட்டுர் அணை ரொம்பி வந்தபோது எடுத்ததுங்க. இந்த வருசம் ஒரு 2 அடி கம்மியா ஓடுது அவ்வளவுதான்ங்க சுதர். ஹ்ம்ம் நட்சத்திரமெல்லாம் வந்து பின்னூட்டம் போடுற அளவுக்கு நம்ம பதிவு பாப்புலர் ஆகிப்போயிடுச்சா?

    ReplyDelete
  9. ஸ்ரீ தர் -->// நகரத்துல வளர்ந்த என்ன போல ஆளுங்க எல்லாம் உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு.//
    அடடே, எங்க ஊர் பக்கம் முடிஞ்சா வாங்க ஸ்ரீதர், பொறாமையை காவேரி ஆத்துலயே கரைச்சிப்புடுவோம். தண்ணி இருக்கிற மாசமா வாங்க.


    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அனுசுயா.
    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)