Thursday, August 24, 2006

ஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்

போன பதிவில் சுஜாதாவைப்பற்றி பேசியதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டு வருடத்திற்கு முன் அவர் எழுதியது இன்றும் மனசில் இருக்கக் காரணம் அவர் கூறிய கருத்தேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அவர் கூறியது உண்மைதான் என்பது என் கருத்தும் கூட.

கண்டிப்பா அங்கீகாரம் இல்லாமல் யாரும் எழுத முன் வர மாட்டார்கள். நமக்கு அங்கீகாரம் என்பது பின்னூட்டம்தான். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்காக நமக்கு நாமே திட்டத்தில் நாமே அனானி மூலம் பின்னூட்டம் இட்டுக்கொள்வது ..... வேணாம் விட்டுருங்க இந்த நல்ல நாள்ல அதெல்லாம் எதுக்கு. அதே சமயம் என்னை நியாயப்படுத்தவும் அவசியம் இங்கே இல்லை. ஏன்னா எனக்கு என்ன ஒரு 200 பின்னூட்டம் விழுந்து இருக்காலாம் அதுல 20 நானே போட்டுகிட்டதா இருக்கும். சரி விடுங்க. இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன கிடைச்சு இருக்கு? பல நண்பர்கள். அதற்காகவே இன்னும் எழுதவேன் பின்னூட்டமே கிடைக்காமல் போனாலும்...

அதென்ன நல்ல நாள்? ஒரு வருடம் ஆச்சுங்க என் முதல் பதிவ போட்டு. அதாவது இந்த நாள் இரண்டாம் வருசத்துல அடியெடுத்த வைக்கிறேன்.
ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி!!!

14 comments:

 1. வாழ்த்து(க்)கள்.

  தொடர்ந்து எழுதுங்க.

  நாங்க இருக்கோம்:-)

  ReplyDelete
 2. வாழ்த்துகள் வாத்தியாரே!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் விவ்!
  இன்னும் பல நூறு ஆண்டுகள் நீங்க பதிவு எழுத வேண்டும்.
  வாழ்த்துவது என்று முடிவு பண்ணியாச்சு. அப்புறம் ஏதுக்கு கஞ்சதனம். அதான்.:)

  ReplyDelete
 4. பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு இந்த விவசாயி. இவர் தம் எழுத்துக்கள் இன்னும் தொடர மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  நண்பா வழக்கமாப் போடுற பின்னூட்டத்தை விட இந்த தடவை ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுறேன்.. ஆரம்பத்துல்ல உன் எழுத்துக்களில் இருந்த தீவிரம் இப்போது இல்லை எனபது எனக்கு எப்போதும் வருத்தமே.. உன் வரப்பு உன் எழுத்துக்களின் மறுபிறப்பு எனக் கூடச் சொல்லுவேன்.
  வரப்பினில் நெஞ்சை வருடும் உன் எழுத்துக்கள்.. விவசாயியாக ஒரு காலத்தில் ஆழ உழவும் செயதன.. ஏனோ இப்போது விவசாயியாக உன் எழுத்துக்களில் அந்த சீற்றம் சற்றே குறைந்து விட்டது போல் உன் வாசகனாய் எனக்கு ஒரு குறை...

  இதே குறை உன்னைத் தொடர்ந்துப் படிப்பவர்களுக்கும் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை..பொதுவுல்ல சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்.

  ReplyDelete
 5. முதலாம் ஆண்டுநிறைவிற்கு வாழ்த்துக்கள்!வலைப்பதிவுகள் ஆக்கங்களை பரிமாறும் இடமாக இல்லாதிருக்கலாம், ஆனால் ஏக்கங்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளும் தளமாகவே உள்ளது. அந்தவிதத்தில் உங்கள் எண்ணங்கள் உயர்ந்தவை, அவற்றின் காரம் குறைந்தாலும். தொடருங்கள் உங்கள் பயணத்தை.

  ReplyDelete
 6. //இந்த ஒரு வருசத்தில எனக்கு பதிவுலகம் மூலம் என்ன கிடைச்சு இருக்கு? பல நண்பர்கள். //

  அந்த வட்டத்தில் நானும் உண்டு என்பதில் எனக்குப் பெருமை!

  //அதற்காகவே இன்னும் எழுதவேன் பின்னூட்டமே கிடைக்காமல் போனாலும்...//

  நிச்சயமாக எழுதுங்கள் இளா!

  //இதே குறை உன்னைத் தொடர்ந்துப் படிப்பவர்களுக்கும் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை..//

  நான் வலைஉலகிற்க்கு வந்து 4 அல்லது 5 மாதங்கள் தான் ஆகின்றன.
  நண்பர் தேவு கூறிய பிறகு தான் நான் உங்களின் வரப்புகளில் நடந்து பார்த்தேன்.வரப்புகளில் இருந்த சீற்றம் விவசாயி-யிடம் குறைவாகவே இருப்பதாக எனக்கும் தேன்றுகிறது!தேவ்-வுடன் சேர்ந்து நானும் அழைக்கின்றேன் வாருங்கள்! சீறுங்கள்!

  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் (புலிப் பாண்டி சொன்னதுபோல் பல நூறு ஆண்டுகள்)
  வலைப்பதிவில் எழுத வாழ்த்துகிறேன்!


  அன்புடன்...
  சரவணன்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் இளா. இன்னும் நிறைய எழுதுங்க....

  ReplyDelete
 8. பின்னூட்டங்கள் ஊட்டச்சத்தே, சந்தேகம் இல்லை!

  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் வலைப்பதிவில் எழுத வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் இளா!

  தொடருங்கள உங்கள் களப்பணியை.

  ReplyDelete
 10. நண்பர்களே! வேலைப்பளு அதிகம் இருப்பதால் இன்று பதில் அளிக்க முடியாமைவில்லை. நாளை வந்து பின்னூட்டம் இடுகிறேன்.

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)